யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Newsbot

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  8,236
 • Joined

Community Reputation

1 Neutral

1 Follower

About Newsbot

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

2,374 profile views
 1. வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் என்னுடைய ஆதரவு இல்லை. எனது பெயரை, கட்சிக் கொடியை, புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது’ என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, ரசிகர்களின் முன்னிலையில், ‘நான் அரசியலுக்கு வருகிறேன்’ என்று அறிவித்தார் ரஜினி. மேலும் ‘பாராளுமன்றத் தேர்தலில் நிற்கப்போவதில்லை. சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் நிற்கப் போகிறேன்’ என்றும் அப்போது அறிவித்தார். நடுநடுவே, சில விஷயங்கள் குறித்து, அறிக்கைகள் வெளியிட்டார். இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தன்னுடைய ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினார் ரஜினி. இதையடுத்து இன்று 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினி. அந்த அறிக்கையில் ரஜினி தெரிவித்திருப்பதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்றத் தேர்தலே எங்களின் இலக்கு. அப்போது தேர்தலைச் சந்திப்பது என முடிவு செய்துள்ளோம். இந்தப் பாராளுமன்றத் தேர்தலில், என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை. தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான திட்டங்களை யார் வகுத்துச் செயல்படுவார்கள் என நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். மேலும் இந்தத் தேர்தலில், என்னுடைய பெயரையோ, என்னுடைய புகைப்படத்தையோ, எங்களின் கொடியையோ யாரும் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு ரஜினி, தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். https://tamil.thehindu.com/tamilnadu/article26295806.ece
 2. வவுனியா பட்டகாடு பகுதியில் நேற்று பட்டப்பகலில் வீட்டின் முன் கதவினையுடைத்து நகைகள், பணம் என்பவற்றை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பட்டகாடு பகுதியில் வசித்து வந்த குடும்பத்தினர் தமது தேவை நிமித்தம் குடும்பமாக நேற்று காலை 8 மணிக்கு வெளியே சென்றிருந்த சமயத்தில் அவ் வீட்டின் முன் கதவினையுடைத்து 5 பவுண் தாலிக்கொடி, நகை, இருபதினாயிரம் ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளது. தமது தேவைகளை முடித்த பின்னர் குடும்பமாக மாலை 3மணியளவில் வீடு திரும்பிய சமயத்தில் கதவுடைத்து திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். அதனையடுத்து வீட்டார் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றினை மேற்கொண்டனர். முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். எனினும் இச் சம்பவம் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/50157
 3. மும்பையில், மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் உள்ள பிந்தி பஜார் பகுதியில், இன்று காலை மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை எட்டுப் பேரை மீட்டுள்ளதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. http://www.vikatan.com/news/india/100865-mumbai-building-collapse-4-killed.html
 4. சென்னை: தமிழகத்தில் சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலத்தில் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அரசுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன் வைத்தார். ஆட்சிக்கு எதிராக 40 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஆனாலும் கொல்லைப்புறமாக திமுக ஆட்சி அமைக்காது. மக்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைப்போம். திமுகவிடம் 89 எம்.எல்.ஏக்கள் எனும் பந்து இருக்கிறது. திமுகவிடம் இருக்கும் பந்தை என்ன செய்யப் போகிறோம் என்பது சஸ்பென்ஸ். ஜனநாயக முறையில் மக்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைப்போம். திமுக கூட்டணியின் 98 எம்.எல்.ஏக்கள் என்பது 117 ஆகாதா? 200 ஆகவும் மாறும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆட்சி மாற்றம் வரும் என்று கூறும் ஸ்டாலின் அதை எப்படி ஏற்படுத்துவோம் என்று கூறாமல் சஸ்பென்ஸ் ஆக வைத்து விட்டு சென்றுவிட்டார். http://tamil.oneindia.com/news/tamilnadu/assembly-poll-tamil-nadu-soon-mk-stalin-294453.html
 5. இலங்கை அணி கடந்த போட்டிகளில் அடைந்த தோல்­விகள் குறித்தும் அப் போட்டிகளில் தலைமையேற்ற தலை­வர்கள் குறித்தும் எந்த சிந்­த­னையும் இல்லை. நடை­பெ­ற­வுள்ள இன்­றைய போட்­டி­கு­றித்தே அனைத்துக் கவ­னமும் இருக்­கி­றது என்று இலங்கை அணியின் புதிய தலைவர் லசித் மாலிங்க தெரி­வித்துள்ளார். இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–0 என்ற கணக்கில் ஏற்­க­னவே இந்­தியா கைப்­பற்­றி­யுள்ள நிலையில் இன்று நான்­கா­வது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் பக­லி­ரவு போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது. இந்­திய அணியின் வெற்றி இந்த ஆட்­டத்­திலும் நீடிக்­குமா? அல்லது மாலிங்க தலைமையிலான இளம் இலங்கை அணி வெற்றி பெற்று தமக்கு விருந்தளிக்குமாவென இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஏங்குகின்றனர். இலங்கை அணியின் தொடர் தோல்விகளில் வெறுப்படைந்துள்ள இலங்கை ரசிகர்கள் தம்புள்ளையில் இடம்பெற்ற போட்டியிலும் கண்டி பல்லேகலயில் இடம்பெற்ற போட்டியிலும் தமது வெறுப்பை காண்பித்திருந்தனர். இந்நிலையில் இன்றைய போட்டி இலங்கை ரசிகர்களின் ஏக்கங்களின் மத்தியிலும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலும் கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்­டி­யிலும் இந்திய அணி வென்று 4-0 என்ற கணக்கில் முன்­னிலை பெறும் ஆர்­வத்­துடன் இந்­திய அணி உள்­ளது. ஆனாலும் லசித் மாலிங்க தலை­மை­யி­லான இலங்கை அணி எஞ்­சி­யுள்ள இரண்டு போட்­டி­க­ளிலும் வெற்­றி­பெற்று 2019 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்­ணத்­திற்கு நேர­டி­யாக தகு­தி­பெற வேண்டும் என்ற முடிவில் இருக்­கி­றது. இந்­திய அணி தொடரை வென்று விட்­டதால் விளை­யா­டாத வீரர்­க­ளுக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்­கப்­படும் என்று இந்­திய அணித் தலைவர் கோலி ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்தார். அந்­த­வ­கையில் இந்திய அணியில் இன்­றைய போட்­ டியில் புதுமுக வீரர்கள் கள­மி­றங்க வாய்ப்­புள்­ளது. உபுல் தரங்கவிற்கு ஐ.சி.சி. விதித்த தடையினால் தலைவர் பொறுப்பை ஏற்ற சாமர கபுகெதரவும் காயத்திற்குள்ளான நிலையில் தலைவர் பதவி மலிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே­வேளை சாமர கபு­கெ­தர, குண­தி­லக்க, சந்­திமால் ஆகியோர் காயம் கார­ண­மாக வில­கி­யுள்­ளனர். அதி­ரடி வீரர் டில்ஷான் முன­வீர அணிக்கு அழைக்­கப்­பட்­டுள்ளார். இன்றைய களநிலையை ஆராய்ந்தே ஆடும் பதினொருவர் கொண்ட இலங்கை அணி தெரிவு செய்யப்படவுள்ளது. அநேகமாக திரிமான்னவும் டில்ஷான் முனவீரவும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்க வாய்ப்புள்ளது. இன்றையய போட்டியை பொறுத்திருந்து பார்ப்போம் லசித் மாலிங்க தனது அனுபவத்தை பயன்படுத்திய இளம் வீரர்களை வழிப்படுத்தி, தொடர் தோல்வியால் வெறுப்படைந்துள்ள இலங்கை ரசிகர்களுக்கு விருந்தளிப்பாராவென ? http://www.virakesari.lk/article/23801
 6. வடக்கு மாகாண சபை கல்வி பண்­பாட்­ட­லு­வல்கள் விளை­யாட்­டுத்­துறை மற்றும் இளைஞர் விவ­கார அமைச்சின் அனு­ச­ர­ணை­யுடன் ஆரி­ய­தி­ரா­விட பாஷா­பி­வி­ருத்திச் சங்­கத்­தினர் தமிழ் மொழியின் தேர்ச்­சிக்­காக ஆசி­ரி­யர்­க­ளுக்கு 100 மணித்­தி­யா­லங்கள் கொண்ட "புல­மைசார் பட்­டயக் கற்கை நெறி"க்கு விண்­ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது. இக்­கற்கை நெறி ஆசி­ரி­யர்­களை மைய­மாகக் கொண்டு புல­மைசார் பட்­டயக் கல்­விக்­கான பாட­வி­தா­னங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது. மேல­திக விப­ரங்­களை 021 7900540 இலக்க தொலை­பேசி மூலம் பெற்றுக் கொள்­-ளும்­ப­டியும் விண்­ணப்­பங்­களை தலை-வர், ஆரி­ய­தி­ரா­விட பாஷா­பி­வி­ருத்திச் சங்கம், மாகாணக் கல்விப் பணிப்­பாளர், வடக்கு மாகாணம், மரு­த­னார்­மடம், சுன்­னாகம் என்ற முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கும்­ப­டியும் ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கத்தின் செயலாளர் பண்டிதர் ம.ந. கடம்-பேசு-வரன் அறிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/23798
 7. உல­கி­லேயே இலங்­கை­யா­னது அதி­கூ­டிய வலிந்து காணாமல் ஆக்­க­பட்­டோரை கொண்­டி­ருக்கும் நாடாகும். 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் காணாமல் போனோர் அலு­வ­லகம் அமைப்­ப­தற்கு ஒரு மசோ­தாவை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­றி­யது. எனினும், இந்த நாள்­வ­ரைக்கும் அது நிறு­வப்­ப­ட­வில்லை. வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் வழக்­கு­களை விசா­ரிக்க பணிக்கப்பட்ட எல்லா வகை­யி­லு­மான ஆணைக்­கு­ழுக்கள் இது­வ­ரைக்கும் எந்­த­வொரு வழக்­கு­க­ளையும் விசா­ரணை செய்து தீர்க்­க­வில்லை. அனைத்து விடயங்களிலும் தோல்வியே காணப்பட்டுள்ளது என சுவிட்ஸர்­லாந்தில் இயங்­கி­வரும் மனித உரிமை அமைப்பின் இலங்­கைக்­கான பிர­சார முகா­மை­யாளர் யுவேஸ் போவி தெரி­வித்­துள்ளார். மேலும் அவர் அந்த அறிக்­கையில் தெரி­வித்­துள்­ள­தா­வது ஆரம்ப காலத்தில் இருந்தே, இலங்­கையின் வடக்­கிலும் கிழக்­கிலும் உள்ள தெருக்­களில் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோருக்­காக இலங்­கையில் தமிழ் பெண்­களால் முன்­னெ­டுக்கப்படு­கின்ற எதிர்ப்பு போராட்­ட­மா­னது வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோருக்கு என்ன நடந்­தது மற்றும் எங்கே இந்த வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் இருக்­கின்­றனர், அவர்­களின் தலை­விதி என்ன என்­ப­ன­வற்றை முன்­வைத்து எடுக்­கப்­ப­டு­வது ஒன்­றாகும். ஆகஸ்ட் 30 ஆம் திக­தியை, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் சர்­வ­தேச தினம் என பிர­க­டனம் செய்து, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பி­லான உண்­மைகள், அவர்­க­ளுக்­கான நீதி மற்றும் அவர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட இழப்­புக்­கான நல்­ல­தொரு பதி­லை­பெ­றுதல் ஆகி­ய­வற்­றினை இந்த எதிர்ப்­பு­போ­ராட்­டத்தின் கோரிக்­கை­யாக கொண்டு கிட்­டத்­தட்ட 200 நாட்­க­ளுக்கு தொடர தீர்­மா­னித்­துள்ளோம். இந்த பொன்­னான நாளில், அச்­சு­றுத்­த­ப்பட்­டுள்ள மக்­க­ளுக்­கான சங்கம் இலங்கை தமிழ் பெண்­களின் எதிர்ப்பு போராட்­டத்தை ஆத­ரித்தும் மற்றும் தமிழ் பெண்­க­ளோடு ஒன்­றிணைந்து பெர்­ஸி­லுள்ள காசினோ பிளாட்ஸ் நகரில் ஒரு மாபெரும் எதிர்ப்பு போராட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்­ளது. பல மாதங்­க­ளாக, இலங்­கையின் வடக்­கிலும் கிழக்­கிலும் உள்ள ஐந்து கிரா­மங்­களில் நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் பெண்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோருக்­காக எதிர்ப்பு போராட்­டங்­களில் ஈடு­பட்டு தங்­க­ளது உற­வு­க­ளுக்­காக குரல் கொடுக்­கின்­றனர். இவர்­களின் இந்த குரல் ஒலி­யா­னது சுடும் சூரியன் எதிர்த்து நின்­றாலும், பாதை ஓரத்தின் அழுக்கு மற்றும் தூசு சிர­மமாய் மாறி­னாலும் இரவின் இருட்டு இடராய் இருந்­தாலும் இலங்­கையின் பாதை ஓரங்­களில் உற­வு­க­ளுக்காய் முழக்­கம்­மி­டு­கின்­றனர். அவர்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வுகள் எங்கு மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர் என்பது பற்­றிய பதில்­களைப் பெறு­வதை தங்­களின் கோரி­க்கை­யாக முன்­வைத்­துள்­ளனர். உல­கி­லேயே இலங்­கை­யா­னது அதி­கூ­டிய வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரை கொண்­டி­ருக்கும் நாடாகும். யுத்தம் முடி­வ­டைந்­ததில் இருந்து அப்­பாவி மக்­களின் மர­ணத்­துக்கும் மற்றும் இழப்­பிற்கும் எந்­த­வொரு முடிவும் இன்னும் கிடைக்­க­வில்லை. இலங்கை அர­சாங்­க­மா­னது இன்­று­வரை வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் பிரச்­சனை தொடர்பில் தீர்­வு­காண எடுத்த எந்­த­வொரு முயற்சி­யிலும் தோல்­வி­யி­னையே கண்­டுள்­ளது. பொறுப்­பான அமைப்­புக்கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்: 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் காணாமல் போனோர் அலு­வ­லகம் அமைப்­ப­தற்கு ஒரு மசோ­தாவை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­றி­யது. எனினும், இந்த நாள்­வ­ரைக்கும் அது நிறு­வப்­ப­ட­வில்லை. வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் வழக்­கு­களை விசா­ரிக்க பணிக்க பட்ட எல்லா வகை­யி­லு­மான ஆணைக்­கு­ழுக்கள் இது­வ­ரைக்கும் எந்­த­வொரு வழக்­கு­க­ளையும் விசா­ரணை செய்து தீர்க்­க­வில்லை. நாட்டின் செய­லற்ற தன்மை கார­ண­மாக நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் பெண்கள் தெருக்­களில் ஆர்ப்­பாட்டம் நடத்­தினர். 2017ஆம் ஆண்டு, ஜூன்­மாதம் 26ஆம் திகதி, ஜனாதிபதி சிறிசேன, வலிந்து காணாமல் ஆக்­க­பட்டோர் தொடர்­பாக நீதி­கோரி எதிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களை சந்­தித்தார். அதன்­போது இந்த எதிர்ப்பு போரா­டத்தில் ஈடு­ப­டுவோர் சிலர், அவர்­களின் கோரிக்­கைகள் அடங்­கிய விண்­ணப்­பத்தை இலங்கை அதி­பரின் கைகளில் ஒப்­ப­டைத்­தார்கள். இந்த சந்­திப்பின் முடிவில், கால அளவில் வலிந்து காணாமல் ஆக்­க­ப்பட்டோர் தொடர்­பான மூன்று பட்­டி­யல்­களை பத்­தி­ரி­கை­களில் வெளியீடு செய்­வ­தற்கு இணக்கம் தெரி­வித்தார். இவற்றுள் முத­லா­வது பட்­டி­ய­லா­னது இறுதி யுத்­தத்தின் முடிவில் யாரெல்லாம் சர­ண­டைந்­தார்­களோ மாற்றும் யாரெல்லாம் தடுப்­பு­கா­வலில் அடைத்து வைக்­க­பட்டு உள்­ளார்கள் என்­பதை பற்­றிய பெயர் பட்­டி­ய­லாகும், இரண்­டா­வது பெயர் பட்­டி­ய­லா­னது யாரெல்லாம் இர­க­சிய தடுப்­பு­காவல் நிலை­யங்­களில் தடுத்து வைக்­க­பட்­டி­ருப்­ப­வர்கள் பற்­றி­யது, மற்றும் மூன்­றா­வது பெயர்­பட்­டி­ய­லா­னது யாரெல்லாம் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின்கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்டு இருக்­கின்­ற­னரோ அவர்­களின் பெயர்­பட்­டியல். ஆனால் இன்­று­வ­ரையும் இலங்கை அதிபர் தன்னை சந்­தித்து கோரிக்­கை­களை சமர்­ப்பித்த, இந்த வலிந்து காணாமல் ஆக்­க­ப்பட்டோர் தொடர்­பாக நீதி­கோரி எதிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு, தான் கொடுத்த வக்­கு­று­தியை நிறை­வேற்­று­வதில் தோல்­வி­யி­னையே கண்­டுள்ளார். "அர­சாங்­க­மா­னது இப்­போது வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோர்­காக எதிர்ப்பு போராட்­டங்­களில் ஈடு­ப­டு­வோரின் கோரிக்­கை­களை செயற்­ப­டுத்த வேண்டும், இதன் ஊடாக இலங்­கையில் இன, மத, மற்றும் மொழி என்­ப­வற்றால் வேறு­பட்­டி­ருக்கும் மக்­களுக்கிடையே நல்­லி­ணக்­கத்தை கொண்டுவரமுடியும்" எனத் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/23799
 8. வானொலிப் பெட்டியொன்று வெடித்ததில், சிறுவனொருவன் படுகாயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. மாலபே, பிட்டுகல பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வானொலிப் பெட்டியை வீட்டுக்கு எடுத்துச்சென்று, குறித்த வானொலிப் பெட்டிக்கு மின்சாரத்தை கொடுப்பதற்கு முயன்றபோதே, இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த 13 வயதுடைய சிறுவன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று, கூறப்படுகிறது. பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும், குறித்த சிறுவன், பாடசாலை விடுமுறையைக் கழிப்பதற்காக, மாலபேயிலுள்ள தன்னுடைய பாட்டியின் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில், பிட்டுகல பிரதேசத்தில் உள்ள காற்றுச் சீரமைப்பிகள் பழுதுபார்க்கும் நிறுவனத்துக்கு முன்பாக, மிகவும் அழகாகப் பொதியிடப்பட்ட வானொலிப் பெட்டி கிடந்துள்ளது. அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்ற சிறுவன் குறித்த வானொலிப் பெட்டியை இயக்குவதற்காக, அதற்கு மின்சாரத்தை கொடுத்துள்ளார். இதன்போதே அப்பெட்டி வெடித்துச் சிதறியுள்ளது என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில், சிறுவனின் இரண்டு கைகள், நெஞ்சுப்பகுதி மற்றும் பாதங்களில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை, வெடித்து சிதறிய அந்த வீட்டின் அறையில், மேசை உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கும், அறையின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் சுவர்களுக்கும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ள என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இரும்பு தகடுகளைக் கொண்டு, வானொலிப் பெட்டியை போலவே, இந்த மர்மப் பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று சந்தேகம் கொள்வதாக தெரிவித்த பொலிஸார், இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் சிறப்புப் பகுப்பாய்வாளர்களைக் கொண்டு பரிசோதனைகள் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். http://newuthayan.com/story/24268.html
 9. ஜார்கண்ட் மாநிலத்தின் சாராகிலா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் நடுவீதியில் குழந்தையைப் பெற்றுள்ளார். அரவணைக்க யாரும் அற்ற இந்தப் பெண் நடுவீதியில் குழந்தையைப் பெற்றெடுத்தார். ப்ரியா என்ற பெண் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண ராம் என்பவரும் காதலித்து பழக்கம் நெருக்கமாகவே பிரியா கற்பமாகியுள்ளார். இதை அறிந்த அவரது காதலர் இந்தப் பெண்ணைச் சந்திப்பதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார். இந்தப் பெண் கற்பமாக இருப்பதை அறிந்த அவரது பெற்றோரும் அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். தங்க வீடு இன்றி இந்தப் பெண் தெருவிலும் சாலையிலும் வசித்துள்ளார். பின்னர் நிறைமாதக் கர்ப்பிணியான இந்தப் பெண் அருகில் இருக்கும் சுகாதார மையத்திற்கு பிரசவத்திற்காக சென்ற போது அங்கு பணியாற்றிய ஊழியர்கள் சுகாதார நிலையத்தில் சேர்க்க மறுத்துள்ளனர். தங்க இடமின்றித் தவித்த பெண் தெருவிலேயே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அந்தப்பகுதியில் இருந்த யாரும் இந்தப் பெண்ணிற்கு உதவ முன்வரவில்லை. இந்தச் சம்பவத்தைக் பார்த்த அந்த வழியாக சென்ற ஒருவர் தாயையும் குழந்தையையும் அருகில் இருந்த வைத்தியசாலையில் சேர்த்துள்ளார். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தாயும் சேயும் நலமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுதெருவில் வலியால் துடித்துக் கொண்டிருந்த இந்தப் பெண்ணுக்கு உதவ யாரும் முன்வராத மனிதநேயம் அற்ற தன்மை குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. http://newuthayan.com/story/24266.html
 10. அணு ஆயுதச் சோதனை சட்­டப்­பூர்­வ­மா­கத் தடை செய்­யப்­பட வேண்­டும் என்று ஐ.நா. பொதுச்­செ­ய­லா­ளர் அந்­தோ­னியோ குத்­தே­ரஸ் குறிப்­பிட்­டார். ஆண்­டு­தோ­றும் ஓகஸ்ட் 29ஆம் திகதி ஆணு­வா­யுத சோதனை எதிர்ப்புத் தின­மாக கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. இந்­தத் தினத்தை முன்­னிட்டு நேற்­று­முன்­தி­னம் வெளி­யிட்ட அறிக்­கை­யி­லேயே குத்­தே­ரஸ் இவ்­வாறு குறிப்­பிட்­டார். ‘‘கடந்த 70 ஆண்­டு­க­ளில் உல­கம் முழு­வ­தும் இரண்­டா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட அணு ஆயுத சோத­னை­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இதன் கார­ண­மாக அணு ஆயுத சோதனை நடத்­தப்­பட்ட பகு­தி­க­ளில் வாழும் மக்­க­ளுக்­கும் சுற்­றுச்­சூ­ழ­லுக்­கும் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. அணு­வா­யுதச் சோத­னை­களை முழு­மை­யா­கத் தடை­செய்ய அனைத்­து­ நா­டு­க­ளும் ஒன்­றி­ணைய வேண்­டும்’’ எனக் குத்­தே­ர­ஸின் அறிக்­கை­யில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/24313.html
 11. பாகிஸ்­தான், தீவி­ர­வா­தி­ க­ளின் புக­லி­ட­மாக உள்­ளது என்று ட்ரம்ப் கருத்­துத் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில் அமெ­ரிக்­கா­வு­ட­னான உறவை தற்­கா­லி­க­மாக முறித்­துக் கொள்­வ­தாக பாகிஸ்­தான் அறி­வித்­தது. அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் ஆசி­யா­வுக்­கான புதிய கொள்­கையை அண்­மை­யில் வெளி­யிட்­டார். தெற்­கா­சியா தொடர்­பில் அவர் கருத்­துத் தெரி­விக்­கை­யில், ஆப்­கா­னிஸ்­தா­னில் தாக்­கு­தல்­களை நடத்­தி­வ­ரும் தலி­பான், ஹக்­கானி உள்­ளிட்ட பெரு­வா­ரி­யான தீவி­ர­வாத அமைப்­புக்­க­ளுக்கு பாகிஸ்­தான் துணை போகி­றது என்று குற்­றம்­சாட்­டி­னார். தீவி­ர­வா­தி­க­ளின் புக­லி­ட­மாக பாகிஸ்­தான் திகழ்­கி­றது. தேவைப்­பட்­டால் பாகிஸ்­தா­னில் புகுந்து வான்­வ­ழித் தாக்­கு­தல்­களை நடத்­து­வோம் என­வும் தெரி­வித்­தி­ருந்­தார் இந்­தக் கருத்­துக்­க­ளுக்கு பாகிஸ்­தான் கடும் கண்­ட­னம் தெரி­வித்­தது. பாகிஸ்­தா­னுக்கு ஆத­ர­வாக சீனா கருத்­துப் பகிர்ந்­தது. இந்­தப் பின்­ன­ணி­யில் அமெ­ரிக்­கா­வு­ட­னான உறவை தற்­கா­லி­க­மாக முறித்­துக் கொள்ள பாகிஸ்­தான் முடி­வெ­டத்­துள்­ளது என்று பன்­னாட்டு ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன. http://newuthayan.com/story/24310.html
 12. உள்நாட்டுப் போரின் போதான செயற்பாடுகள் தொடர்பில் தனக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றேன் என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டின் இலங்கைத் தூதுவராக பணியாற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக அங்குள்ள மனித உரிமைகள் அமைப்புக்களால் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு இடையிலான 30 வருட கால போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றது என்று கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு அனுமதியளித்தேன் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்று அவர் தெரிவித்தார். அதேவேளை, போரின் இறுதிக் கட்டத்தில் வைத்தியசாலைகளை தாக்குதல், பொது மக்களை கொலை செய்தல், கடத்திச் செல்லுதல் மற்றும் சித்திரவதை செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு ஜெனரல் ஜகத் ஜயசூரிய கட்டளையிட்டுள்ளார் என்று அந்த மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. http://newuthayan.com/story/24321.html
 13. கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னைய்யா மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோருக்கிடையே நேற்று சந்திப்பு நடந்துள்ளது. விமானப்படை தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. விமான படையின் கொழும்பு முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் வருனு குணவர்தன மூலம் சம்பிரதாய முறைப்படி கடற்படை தளபதி வரவேற்கப்பட்டார். சந்திப்பின் இறுதியில் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. http://newuthayan.com/story/24325.html
 14. ‘‘பொறுப்­புக்­கூ­ற­லில் இருந்து அரசு பின்­வாங்­க­வில்லை. அதற்­கு­ரிய ஏற்­பா­டு­கள் இலங்­கைக்கே உரிய பாணி­யில் மெது­வாக நிறை­வேற்­றப்­ப­டும்.” இவ்­வாறு சாவ­கா­ச­மா­கத் தெரி­வித்­தார். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. அரச தலை­வர் மாளி­கை­யில் நேற்­றுக் காலை நடை­பெற்ற பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­கள், ஊட­கப் பிர­தா­னி­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். போர்க்­குற்­றங்­கள் மற்­றும் மனித உரிமை மீறல்­கள் தொடர்­பில் தனது பொறுப்­புக்­கூ­றலை நிறை­வேற்ற இலங்கை அரசு பின்­வாங்­கு­கின்­றது என்று பன்­னாட்டு மட்­டத்­தில் விமர்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றதே? என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு அவர் பதி­ல­ளித்­தார். ‘‘பொறுப்­புக்­ கூ­ற­லுக்­கு­ரிய நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அர­சி­யல் சூழ்­நிலை – இலங்­கை­யின் சுயா­தீ­னம் ஆகி­ய­வற்­றைக் கருத்­திற்­கொண்டு இலங்­கைக்­குப் பொருத்­த­மான முறை­யி­லேயே விசா­ரணை இடம்­பெ­றும் என்று பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­டம் தெளி­வாக எடுத்­து­ரைத்­துள்­ளோம். இது விட­யத்­தில் அவ­ச­ரப்­ப­ட­மு­டி­யாது. கலக்­க­ம­டை­ய­வும்­கூ­டாது. வேக­மான பய­ணத்­தின் முடி­வில் தீர்வு இருக்­காது. இந்த அர­சின் பய­ணம் மெது­வா­கவே இருக்­கின்­றது. இது­போன்ற பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு நாளிலோ அல்­லது ஒரு மாதத்­திலோ தீர்­வைக் கண்­டு­விட முடி­யாது. எப்­ப­டி­யி­ருந்த போதி­லும் தீர்வை நோக்கி நகர்­வோம்”’’ என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால பதி­ல­ளித்­தார். அவ­ரு­ட­னான கேள்வி பதில் இங்கே. இலங்­கை­யின் முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும் பிரே­சி­லுக்­கான தூது­வ­ரு­மான மேஜர் ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக பிரே­சில் நீதி­மன்­றத்­தில் மனித உரிமை அமைப்­பு­க­ளால் வழக்­குத் தொடுக்­கப்­பட்­டுள்­ளதே? இது பற்றி எனக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை. பத்­தி­ரி­கை­க­ளி­லேயே நான் பார்­வை­யிட்­டேன். இது குறித்து தேடிப் பார்ப்­போம்’ – என்று அவர் பதி­ல­ளித்­தார். 2020வரை கூட்டு அரசு தொட­ரும் கூட்டு அரசை அமைப்­ப­தற்­காக ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் இடையே செய்து கொள்­ளப்­பட்ட புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை டிசெம்­பர் மாதத்­து­டன் முடி­வ­டை­கின்­றது. கூட்டு அர­சி­லி­ருந்து வெளி­யே­று­வார்­கள் என்று சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் சிலர் தெரி­விக்­கின்­ற­னர். உடன்­ப­டிக்கை நீடிக்­கப்­ப­டுமா அல்­லது அர­சி­லி­ருந்து சுதந்­தி­ரக் கட்சி வெளி­யே­றுமா? இரு­த­ரப்­பி­ன­ருமே இவ்­வா­றான கருத்­தைத் தெரி­வித்து வரு­கின்­ற­னர். தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கு­ரிய பெரும்­பான்மை எந்­த­வொரு கட்­சிக்­கும் இல்லை. பிரிவு ஏற்­பட்­டால் மறு­ப­டி­யும் கூட்­டணி அல்­லது இணக்க அர­சையே உரு­வாக்­க­வேண்­டும். 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மையச் செயற்­குழு எடுத்த முடி­வின் பிர­கா­ரமே கூட்டு அர­சில் 2017ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் வரை இருப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. டிசெம்­பர் மாதம் முடி­வ­டைந்­த­தும் தொடர்ந்­தும் இருப்­பதா? இல்­லையா? என்­பதை கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுவே முடி­வெ­டுக்­கும். சுதந்­தி­ரக் கட்­சி­யின் நாடா­ளு­மன்­றக்­கு­ழு­தான் கூட்டு அர­சில் அங்­கம் வகிக்­கின்­றது. நான் அரச தலை­வர். எனவே, யார் வந்­தா­லும், போனா­லும் ஆட்­சியை நடத்­வேண்­டிய பொறுப்பு எனக்கு இருக்­கின்­றது” என்­றார் அரச தலை­வர். கூட்டு அரசு 2020ஆம் ஆண்டு வரை தொட­ரும் என்ற நம்­பிக்கை உங்­க­ளுக்கு இருக்­கின்­றதா? ஆம் மீண்­டும் போட்­டி­யி­ட­மாட்­டேன் பத­விக்­கு­வ­ரும்­போது இரண்­டா­வது தடவை அரச தலை­வர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­க­மாட்­டீர்­கள் என்று உறுதி வழங்­கி­விட்டே வந்­தீர்­கள். ஆனால் நீங்­கள் இரண்­டா­வது முறை­யா­க­வும் போட்­டி­யி­ட­வுள்­ளீர்­கள் என்று சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் சிலர் தெரி­விக்­கின்­ற­னர். முன்­னைய நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக இருக்­கின்­றீர்­களா? இல்லை நிலைப்­பாடு மாறி­யுள்­ளதா? சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி அவ்­வாறு (இரண்­டா­வது தட­வை­யா­கப் போட்­டி­யி­டு­வதா) கூற­வில்லை. நானும் சொல்­லவில்லை. மிரட்­டிய மகிந்த சாதா­ரண மக்­க­ளுக்கு துரி­த­மா­கச் செயற்­ப­டும் சட்­டம், அர­சி­யல்­வா­தி­க­ளின் விவ­கா­ரத்­தின்­போது மந்­த­க­தி­யில் ஏன் செயற்­ப­டு­கின்­றது? சட்­டம் என்­பது அனை­வ­ருக்­கும் சமம். அதில் துளி­ய­ள­வே­ணும் பாகு­பாடு இருக்­கக்­கூ­டாது. கடந்த காலத்­தில் இருந்­த­வர்­கள் திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­யில் நன்கு மூளை­யைப் பாவித்தே சில விட­யங்­க­ளைச் செய்­துள்­ள­னர். தாம­தித்­தே­னும் உண்­மை­கள் வெளி­வ­ரும். அன்­றும் இன்­றும் என்­றும் நான் ஊழல், மோச­டி­க­ளுக்கு எதி­ரா­ன­வன். 2012ஆம் ஆண்டு பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சின் மீளாய்­வுக் கூட்­டத்­தின்­போது, வீதி அபி­வி­ருத்­தி­யின்­போது மோசடி இடம்­பெ­று­வ­தா­கப் பல­ரும் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர் எனத் தெரி­வித்து அது பற்­றிக் கேள்வி எழுப்­பி­னேன். மறு­நாள் காலை அழைப்பு வரு­கின்­றது. உட­ன­டி­யாக அல­ரி­மா­ளிகை வரு­மாறு பணிக்­கப்­பட்­டேன். அல­ரி­மா­ளிகை வந்­த­தும் முன்­னாள் அரச தலை­வ­ரின் (மகிந்­த­வின்) முகம் கோப­மாக காட்­சி­ய­ளித்­தது. வழ­மை­யான வர­வேற்பு இருக்­க­வில்லை. ‘‘என்ன! ஊழல் பற்­றிக் கேள்வி எழுப்­பி­யுள்­ளீர்­க­ளாமே? அர­சில் இருந்­து­கொண்டு, கட்­சிச் செய­லா­ளர் பத­வியை வகித்­துக்­கொண்டு எப்­படி ஊழல் பற்­றிக் கேட்ட முடி­யும்?’’ என்று கடுந்­தொ­னி­யில் அவர் (மகிந்த) திட்­டி­னார். ‘‘வேறொரு அர­சி­யல் பய­ணத்தை ஆரம்­பிக்­கப்­போ­கின்­றீரா?’’ என்­றும் என்­னி­டம் கேட்­கப்­பட்­டது. அன்று நிலமை அப்­ப­டித்­தான் இருந்­தது. இப்­ப­டித் தெரி­வித்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. http://newuthayan.com/story/24217.html
 15. இது ஒரு பரீட்சார்த்தம்