Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Newsbot

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  8,239
 • Joined

 • Last visited

Everything posted by Newsbot

 1. படத்தின் காப்புரிமைC.UMAPATHI Image captionதேனீர் தயாரிக்கிறார் சுப்ரமணியன். அடுப்பில் கொதிக்கும் பாலில் ஆவி பறக்கிறது. காற்றில் தேனீரின் மனம் கமழ்கிறது. சிறு நகர தேனீர்க் கடைகளுக்கே உரிய முறையில் முந்தைய நாள் தூக்கத்தை முகத்தில் மிச்சம் வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. விழுப்புரம் மந்தக்கரையில் இருக்கிறது அந்த தேனீர்க் கடை. மக்கள் கூடுகிற பழைய நகரின் பிரபலமான திடல் அது. தாள லயத்துக்கு ஆடுகிற நடனக் கலைஞரைப் போல தேனீரை ஆற்றிக்கொண்டிருக்கிறார் பெரியவர் சுப்ரமணியன். ராவணன் தேனீர்க் கடைக்கு இதோ புதிதாக ஒரு வாடிக்கையாளர் வருகிறார். "ஐயா உங்களுக்க
 2. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசித்தரிப்புக்காக கோப்பு படம் தாய்லாந்தில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆறு யானைகள் உயிரிழந்துள்ளன. ஒன்றோடு ஒன்றைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்ததில் அந்த யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்துவிட்டன. தாய்லாந்தின் மத்திய பகுதியில் உள்ள கா யே தேசிய பூங்காவில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்ததையடுத்தே இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். பாறையின் ஓரத்தில் தடுமாறிக் கொண்டிருந்த இரு யானைகள் தற்போது அதிகாரிகளால் மீட்கப்பட்டுவிட்டன. ஹா நரோக் (நரக வீழ்ச்சி) என்று பெயரிடப்பட்ட நீர்
 3. பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் தனுஷும் இணைந்திருக்கும் நான்காவது படம். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் திரைவடிவம்தான் அசுரன். 1960களில் நடக்கிறது கதை. தன் அண்ணனைக் கொலை செய்த வடக்கூரானை (ஆடுகளம் நரேன்) கொலை செய்கிறான் 15 வயதுச் சிறுவனான சிதம்பரம் (கென் கருணாஸ்). வடக்கூரானின் ஆட்களும் காவல்துறையும் தேட ஆரம்பிக்க, சிதம்பரமும் அவனது தந்தை சிவசாமியும் (தனுஷ்) காட்டுக்குள் தப்பிச் செல்கிறார்கள். மிகவும் பயந்தவராகவே தன் தந்தையை அறிந்திருந்த சிதம்பரத்திற்கு காட்டுக்குள் பதுங்கியிருக்கும்போதுதான் அவரது மறுபக்கம் தெரிகிறது. இந்தக் கொலை வழக்கில
 4. வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் என்னுடைய ஆதரவு இல்லை. எனது பெயரை, கட்சிக் கொடியை, புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது’ என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, ரசிகர்களின் முன்னிலையில், ‘நான் அரசியலுக்கு வருகிறேன்’ என்று அறிவித்தார் ரஜினி. மேலும் ‘பாராளுமன்றத் தேர்தலில் நிற்கப்போவதில்லை. சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் நிற்கப் போகிறேன்’ என்றும் அப்போது அறிவித்தார். நடுநடுவே, சில விஷயங்கள் குறித்து, அறிக்கைகள் வெளியிட்டார். இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந
 5. வவுனியா பட்டகாடு பகுதியில் நேற்று பட்டப்பகலில் வீட்டின் முன் கதவினையுடைத்து நகைகள், பணம் என்பவற்றை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பட்டகாடு பகுதியில் வசித்து வந்த குடும்பத்தினர் தமது தேவை நிமித்தம் குடும்பமாக நேற்று காலை 8 மணிக்கு வெளியே சென்றிருந்த சமயத்தில் அவ் வீட்டின் முன் கதவினையுடைத்து 5 பவுண் தாலிக்கொடி, நகை, இருபதினாயிரம் ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளது. தமது தேவைகளை முடித்த பின்னர் குடும்பமாக மாலை 3மணியளவில் வீடு திரும்பிய சமயத்தில் கதவுடைத்து திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். அதனையடுத்து வீட்டார் வவு
 6. இது ஒரு பரீட்சார்த்தம்
 7. கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரம் செங்கோட்டை, பண்பொழி, வடகரை ஆகிய ஊர்களில் மே பதினேழு இயக்கத்தினரால் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழீழ விடுதலைப்போரில் இனப்படுகொலைப் படங்களை பார்த்த பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அவ்விடயத்தைப் பற்றி தாங்கள் ஒன்றும் அறிந்திருக்கவில்லையெனவும் தெரிவித்தனர். மேலும் விலைவாசி உயர்வு, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், 2ஜி அலைகற்றை ஊழல், ஆதர்சு வீடு வழங்குவதில் நடைப்பெற்ற ஊழல், சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் மீது நடைப்பெறும் அடக்குமுறைகள், காசுமீர் மற்றும் வடகிழக்கு மாநில
 8. தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஈழத்தமிழரின் பிரச்சனையில் திமுக மற்றும் அதிமுகவின் உண்மையான நிலைப்பாடு என்ன? அனலை நிதிஸ் ச. குமாரன் தமிழக சட்டசபை தேர்தல் இடம்பெற இன்னும் இரண்டு வாரங்களுக்குக் குறைவாகவே இருக்கிறது. இரு பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் தேர்தல் பிரச்சாரங்களை முடக்கிவிட்டுள்ளார்கள். ஒருவரையொருவர் குற்றம் சொல்வதிலிருந்து, திரைப்படத்துறையினரின் நகைச்சுவையான கருத்துக்களும் முன் எப்பொழுதும் இல்லாதவாறு இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளது. தேர்தல் களத்தில் நிற்கும் ஒருவரிடத்திலிருந்தும் ஈழத்தமிழரைப் பற்றி ஒரு வார்த்தையேனும் வெளிவரவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெறும் ச
 9. ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராசா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டமைக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.