பரதன்

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    189
  • Joined

  • Last visited

Community Reputation

4 Neutral

About பரதன்

  • Rank
    உறுப்பினர்
  1. என்னுடைய கருத்து படங்கள் போடவேண்டுமென்றோ முகவரி போடவேண்டுமென்றோ அல்ல. ஒவ்வொருவரும் தங்களது சொந்தப் பெயரிலோ அல்லது அறியப்பட்ட புனை பெயரிலோ வரவேண்டும் என்பதே. இது எங்களுக்குள் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும். நான் இதனை ஒரு ஆலோசனையாக முன்மொழிந்ததற்கே பலரும் உணர்ச்சிவசப்பட்டு என்மீது பாய்கின்றார்கள். இவர்கள் தங்களது சொந்த அடையாளங்களுடன் வந்தால் இப்படிப் பாய மாட்டார்கள். ஒரு உதாரணம் 'தயா' அவர்களின் கருத்துகளில் மிகப் பலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. அவருடைய தமிழ் தேசியம் பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய கருத்துகளில் பலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. தமிழ் தேசியம் பற்றி அல்லது புலிகள் பற்றி யாராவது வசைபாடினால் கொதித்தெழும் அவரது அவரை நான் மிக மதிக்கின்றேன். நானும் அவ்வாறுதான் கொதித்தெழுவேன். ஆனால் 'உண்மை முகம் தேவையா?' என்பதற்கு அவர்... ஏன் இவ்வாறு கொதித்தெழவேண்டும்? எனக்கு உண்மையில் மிக கவலையாக இருந்தது.
  2. மச்சான் கூல் கூல்... நான் அப்படிச் சொல்லவில்லையே!
  3. நண்பர்களின் கருத்துகளுக்கு முதலில் எனது நன்றிகள். ஒரு சிறு உதாரணம். இந்த திரி. இதற்கான பதில்கள் அல்லது கருத்துக்களிலிருந்து... 1. 2. 3. 4. 5. 6. 7. இப்படியே....... இந்தத் திரியில் ரகுநாதன் தன் கேள்வியுற்ற ஒரு விடயத்தை மற்றவர்களுடன் பகிர விரும்புகின்றார். ஆனால் மற்றும் பலர் அதற்கு பலவித வியாக்கியானங்களையும் பொழிப்புரைகளையும் கொடுத்து திரியில் சொல்லவந்த விடயம் திசைமாறிப் போகின்றது. நல்லது! நாங்கள் எல்லோரும் எங்கள் எங்கடை ஊரிலை இருந்துதான் இங்கே வந்திருக்கின்றோம். எங்கடை ஊரிலை மதவடியிலையோ அல்லது கோயிலடியிலையோ அல்லது வாசிகசாலையிலையோ நடக்கிற விவாதங்களிலை அல்லது வாதங்களிலை நாங்கள் இப்பிடி கதைச்சிருப்பமோ? என்ரை மச்சான் அல்லது ஒண்டுவிட்ட அண்ணன் அல்லது அயலவன் என்னதான் எனது கருத்துக்கு எதிராகச் சொன்னாலும்..... இவ்வளவு காட்டமாய் நாங்கள் கதைக்கமாட்டோம்...... ஏன்? முகம்! எனக்கு ஒரு முகம் இருக்கு அவனுக்கு ஒரு முகம் இருக்கு. முகம் இருந்ததால்தான் நாங்கள் மனிதர்களாக இருந்தோம். எமக்கு முகம் வேண்டாம் என்றால்.... நாங்கள் அனாமதேயங்களாகவே இருப்போமென்றால்..... நாங்கள் மனிதர்களாக இருக்கமுடியாது!
  4. has not set their status

  5. மதிப்புக்குரிய யாழ் கள நிர்வாகி அவர்களுக்கும், மற்றும் மதிப்பக்குரிய உறுப்பினர்களுக்கும்! யாழ் களத்தில் அண்மைக்காலமாக பல வாதப்பிரதிவாதங்களும், சொற்போர்களும் நடந்துவருகின்றன. இவை எல்லாம் அனாமதேயப் பெயர்களிலேயே நடைபெறுகின்றன. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் (இயக்கங்களிலிருந்தவர்களுக்கு இயக்கப் பெயர்... எழுத்தாளர்களுக்கு புனைபெயர்...) இருக்கின்றது. இவற்றை விட்டு அனாமதேயப் பெயர்களில் அடிதடிகளில் இறங்குவதும் சவடால் கதைகள் கதைப்பதும் எவ்விதத்திலும் நன்மை பயக்காது என நான் நம்புகின்றேன். எனவே இதனை ஒரு பிரேரணையாக உங்கள் முன் வைக்கின்றேன். "சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் அதாவது சொந்த முகம் உள்ளவர்ளுக்கு மட்டுமே யாழ் களத்தில் கருத்துப் பதியும் அருகதை உள்ளது" என்பதை மதிப்பிற்குரிய நிர்வாகி அவர்களும் மதிப்பிற்குரிய உறுப்பினர்களும் வலியுறுத்தவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். என்றும் அன்புடன் இ.பரதன்
  6. நாங்கள் இப்பிடித்தான் பரம்பரை பரம்பரையாய் கதை சொல்லிக்கொண்டிருக்கிறம். (சிலவேளைகளிலை பேய்கதையளும்) உதுகளை விட்டிட்டு செயற்படவேண்டிய காலம் வந்திட்டுது.
  7. இவ்வாறான சில முயற்சிகள் ஏற்கனவே நடைபெற்றுவருவதாக அறிந்தேன். ஆயினும் இவை மேலும் வேகமாக செயற்பட நாம் அனைவரும் ஒத்துளைப்பு வழங்குவோம்.
  8. உங்கள் வரவேற்பிற்கு மிக்க நன்றி நண்பர்களே! நான் எனது பங்களிப்புகளை எவ்விதம் எங்கெங்கு வழங்கமுடியும் என்று மூத்த உறுப்பினர்கள் எனக்கு வழிகாட்டினால் பெரிதும் உதவியாக இருக்கும். வாழ்த்துகளுடன், பாரத்
  9. எல்லோருக்கும் வணக்கம். நான் பாரத். லண்டனில் வசிக்கின்றேன். பலகாலமாக யாழ் களத்தை பார்வையிட்டு வருகின்றேன். யாழ் களத்தில் என்னாலியன்ற வகையில் பங்களிக்க ஆர்வமாயுள்ளேன். மிக்க நன்றியுடன் பாரத்