M.P

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  147
 • Joined

 • Last visited

Community Reputation

20 Neutral

About M.P

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Interests
  செய்தி மற்றும் ஊர் புதினம்

Recent Profile Visitors

855 profile views
 1. முதலில் கல்யாணம் கட்ட இந்த தமிழ் பிள்ளை ஒத்துக்கொண்டதுக்கு பெருமைப்படவேண்டும். இரண்டாவது எங்கள் தமிழ் கலாசாரத்தில் செய்ய முன் வந்ததிற்கு வாழ்த்தவேனும். பார்க்க பெருமையாகவும் இருக்கு. ஏன் இந்த தூற்றல்?
 2. ஊரில் உள்ளவன் வாழ்வாதாரத்துக்கு விவசாயம் செய்ய காணி வேண்ட முடியாமல் திண்டாடும் போது எப்படி அந்த காணிகள் மற்ற இனத்துக்கு போகும். அதுதான் நான் சொல்லுறன் எல்லை புற காணிகளை வேண்டி விட்டால் பாதுகாக்கப்படலாம் நல்லவர்களும் எங்கள் புலம் பெயர் சமுதாயத்தில் இருக்கிறார்கள் என்பதை ஏற்கிறேன்
 3. புலம் பெயர் கள்ள தமிழா! நீ எப்படியும் உழை. சந்தோசமாக இரு. கூத்தடி. ஆனால் சாதாரண வியர்வை சிந்தும் நேர்மையான தமிழனின் வாழ்வில் பாதிப்பில்லாமல் இரு.
 4. இது தான் யதார்த்தம். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். இது எனக்கும் உமக்கும் விலக்கல்ல. என்ன உப்பிடியான ஊத்தவாளிகள் எங்களின் எழுத்தை வாசித்து திருந்தட்டும். அவங்களுக்கும் மனசாட்சி உறுத்தட்டும். நீர் சொன்னது உண்மைதான். அதன் லண்டன் பெற்றோல் கடைக்காரன் வடமராட்சியில் தன் வயது போன பெற்றோர்கள் பெயரில் பெரிய அளவில் காணி வேண்டி குவித்து இருக்கான்.
 5. உள்ளூரிலேயே பலர் வாங்க இருக்கினம். வாங்கி அதை பயன்படுத்தி தாங்களும் கொஞ்சம் பயன் பெற்று மற்றவர்களுக்கும் வேலை கொடுத்து வாழ வைக்க விரும்பினம். கள்ள காட் போட்டு காசு எடுத்த தமிழன் காசை என்ன செய்வது என்று தெரியாமல் வேண்டி விடுவதால் என்ன பயன். அதுகும் வேர்வை சிந்தி உழைத்தால் காசின் அருமை தெரியும். நியாய விலைக்கு வாங்க முயற்சிப்பான். சும்மா வந்த காசுதானே. விற்பவன் கேட்கும் விலையை அள்ளி கொடுத்தால் காணி விலை கூரையை பிய்த்து கொண்டு போகாமல் என்ன செய்யும் லண்டனில் கடை வைத்து இருப்பவன் 50% வீதம் கூட நல்லவன் இல்லை
 6. வட கிழக்கில் புலம்பெயர் தமிழர்கள் காணிகளை வேண்டுவதனால் உண்டான பாதக விளைவுகளால் என் நண்பன் மிகவும் மன வேதனை கொண்டு என்னுடன் பகிர்ந்த விடயங்களை இங்கு எழுத விரும்புகிறேன். நானும் அவனும் ஒரே ஊர் தான். இராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக இப்பதான் விடுறாங்கள். விட்ட உடன் காணிக்காரன் வெளிநாட்டில் இருந்து வந்து திருத்தி போட்டு இன்னொரு வெளிநாட்டு காரனுக்கு நல்ல விலைக்கு வித்து போட்டு போறான். என் நண்பன் ஒரு ஆசிரியர். மேலதிக வருமானத்துக்கு வெங்காயம் மிளகாய் செய்யுறான். ஆனால் அவனிடம் போதிய காணி இல்லை. என்னிடம் கேட்டான் காணி வேண்டி குத்தகைக்கு தர முடியுமா என்று? எனக்கு அதில் உடன்பாடு இல்லை. காணி வேண்டும் புலம் பெயர் ஆட்கள் யார் என்று பார்த்தால் புலத்தில் உருட்டு மாட்டு விளையாட்டுகள் செய்து காசு சேர்த்து போட்டு அதை என்ன செய்வது என்று தெரியாமல் தாய் தந்தை உறவுகள் பெயரில் காணி வீடு வேண்டி விருதுகள். இதனால் வட கிழக்கில் உள்ள சாதாரண குடிமகன் பாதிக்க படுகிறான் என்பதை புரியும் பக்குவம் இருக்குமா தெரியவில்லை. வட கிழக்கின் எல்லை புற கனிகளை வேண்டி விடடால் பரவாயில்லை. சிங்கள குடியேற்றங்களை தடுக்க வாவது உதவும்.
 7. பல்லாயிரக்கணக்கான கள்ள தமிழர்களில் பாவம் ஒருவன் மாட்டுப்பாட்டுடடான். யாழில் உள்ள உயர் பதவியில் உள்ள / உயர்வான ஆசிரியர்களின் பிள்ளைகள் லண்டனில் காட் அடிப்பதில் புலிகள்.
 8. ஒன்றுமே தரமாட்டாங்கள். வாங்கோ. பிறைவேற் மெடிக்கல் நீங்களே எடுங்கோ. அவுஸ்திரேலியா காரனுக்கு உளைப்பு கூட்டுற வழி.
 9. மேற்கத்தைய நாட்டில் ஆங்கிலத்தில் படிக்கும் ஒரு பிள்ளையை என்ன வயதில் இலங்கை பாடத்திட்டத்துக்கு மாற்றலாம். இலங்கை பாடத்திட்டத்தில் தேவையில்லாத பல பாடங்கள் உண்டு என நினைக்கிறீங்களா? உதாரணம் வரலாறு, சமயம்?
 10. சினிமா எத்தனை சாமானிய மக்களுக்கு சாப்பாடு போடுது என்று உங்களுக்கு தெரியாது போல்.
 11. எத்தனை தமிழ்நாட்டு தமிழர்கள் ஈழ தமிழர்களுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்து இருக்கிறார்கள்? தீக்குளிப்புகள், ஏன போராடி வீரமரணமானார்கள
 12. சேரன் உண்மையை தானே சொல்கிறார். எங்கட இலங்கை தமிழர்தான் வெளிநாடுகளில் திருட்டு கொப்பி எடுத்து இணையத்த்தில் போடுபவர்கள். படம் வந்து அடுத்த நாள் நல்ல கொப்பி இணையத்தில் வருது. படம் ஓடும். அதனால் பட தயாரிப்பாளர்களுக்கு இழப்புதானே. அதில் உள்ள நியாயத்தை ஏற்க விரும்பாமல் அவரை தூற்றுவது தப்பு. ஒரு படம் எடுப்பது எத்தனை பேரின் உழைப்பு. அதை மதிக்க தெரியாது. எங்க ஈழ தமிழன் வெளிநாட்டில் இருப்பவர்கள் முக்கால்வாசி பேர் காசுக்காக வெளிநாட்டுக்கு வந்தார்கள். தன் இனம் ஈழத்தில் சாவதை தன் பொருளாதார நலனுக்கு பாவிக்கும் இழிய இனம்.
 13. அவுஸ்திரேலியாவில் சனத்தொகை கணக்கெடுப்பு நாளை நடைபெற இருக்கின்றது. அதில் பிறந்த இடம் தமிழீழம் என செருக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எததனை பேர் தமிழீழத்தை தெரிவு செய்வார்கள் என்பதுதான் கேள்வி குறி. http://www.abs.gov.au/AUSSTATS/abs@.nsf/Previousproducts/901CD35F30262921CA25744B001539F4?opendocument#Tadjikistan
 14. வெளிநாட்டில் வெள்ளைக்காரன் மொழி படிக்கும் போது எங்களுக்கு ஏற்படாத கூச்சம் அவமானம் ஏன் சிங்களம் படிக்கும் சிங்களம் போது வருகுது. சிங்களத்துக்கு எங்கள் தமிழுக்கும் பல ஒற்றுமை உண்டு. இலகுவாக படிக்கலாம். என்ன மெல்லினமே இல்லாத மொழி என்பதால் தமிழ் போல் ஒரு இனிமை இல்லை. சிங்கள பாட்டு கேடடால் புரியும்.