Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  6,863
 • Joined

 • Last visited

 • Days Won

  51

Everything posted by ரஞ்சித்

 1. இல்லையண்ணை, இதுதான் நாங்கள் எல்லாரும் விடுற பிழை. பீரீஸ் போன்றவர்களே சிங்கள இனவாதத்தை நடத்திச் செல்லும் கல்விமான்கள். கோத்தாவோ, மகிந்தவோ முன்னால் காட்டப்படும் அட்டைகள்தான். ஆனால், சிங்களப் பேரினவாதத்தின் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டு அதனை முன்னோக்கி இழுத்துச் செல்பவர்கள் இந்த படித்த அறிவுள்ள சிங்கலவர்களே. இந்த THINK TANKS எந்த அரசு பதவிக்கு வந்தாலும், அவ்வரசுகளால் இரு கரம் கொடுத்து வரவேற்கப்படுவார்கள். ஆட்சிகள் மாறலாம், ஆனால் இனவாதம் தொடர்ந்து அதே கதியில் முன்னெடுக்கப்பட பீரீஸ் போன்றவர்கள் தேவை.
 2. அதுதான் தெளிவாச் சொல்லிப்போட்டாரே அண்ணை, "மதவாச்சியில ஏறின சிங்களவன் " எண்டு?
 3. சரி, இங்கும் வந்து உங்கள் கைவரிசையினைக் காட்டுவதாக முடிவெடுத்துவிட்டீர்கள் போலத் தெரிகிரது. அமெரிக்கா என்றாலே அனைத்துச் சர்வதேச நாடுகளும், செய்தி நிறுவனங்களும் அடங்கிவிடும் என்று நீங்கள் நினைத்தால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. அமெரிக்கா இவ்வாறு செயற்பட்டதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன என்று கட்டுரையாளர் நிமால் குறிப்பிட்டிருந்ததை நீங்கள் படிக்கவில்லை போலும். உங்களின் நோக்கம் இதனை ஒரு விவாதக் களமாக மாற்றுவதுதான் என்றால், நான் தொடர்ந்து உங்களுக்குப் பதில் எழுதுவது அதனை ஊக்குவிக்கவே செய்யும். தொடர்ந்து எழுதுங்கள். யாராவது படிப்பார்கள்.
 4. நான் புலிகளுக்கு வெள்ளையடிப்பதற்காக இத்தொடரை எழுதவில்லை என்பது உங்களுக்குப் புரியாமல்ப் போனது வியப்புத்தான். கருணாவின் துரோகம் பற்றியே எனது தொடர் பேசுகிறது. அதற்காகக் புலிகள் மக்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடவில்லையென்று நான் ஒருபோதும் நம்பவில்லை, அப்படி நம்பினால் நான் ஒரு முட்டாளாகத்தான் இருக்கமுடியும். ஏனென்றால், 81 இலிருந்து வடக்குக் கிழக்கிலும், 90 இலிருந்து கொழும்பிலும் வாழ்ந்தவன் என்கிற அடிப்படையில் புலிகளால் ராணுவ இலக்குகள் தவிர்ந்த ஏனைய இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நான் பார்த்திருக்கிறேன். 1995 மத்தியவங்கிக் குண்டுவெடிப்பில் மயிரிழையில் தப்பியவன் நான். ஆகவே, புலிகளுக்கு வெள்ளையடிக்கும் நோக்கம் எனக்கு நிச்சயமாகக் கிடையாது. ஆனால், அவர்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையினை நான் முழுமனதோடு ஆதரிக்கிறேன். 2009 இற்கு முந்தையை ஜஸ்டினின் நிலைப்பாடு குறித்து நான் ஏங்கவேண்டிய தேவை எனக்குச் சிறிதும் இல்லை. நான் சுட்டிக்காட்டியது உங்களின் நிலைப்பாடு 2009 இற்குப் பின்னர் உங்களின் நண்பனின் அனுபவத்தினால் மாறியது என்பதைத்தான். புலிகளின் வன்முறைகளுக்காகவே உங்களின் நிலைப்பாடு மாற்றம்பெற்றிருந்தால், நீங்கள் 2009 வரை காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால், புலிகள் அதற்கு முன்னரும் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தார்கள். உங்களின் கருத்துக்களுடன் நான் உடன்படாத நிலையில், உங்களின் நிலைமாற்றம்பற்றி நான் ஏங்கவேண்டிய தேவை எனக்கு ஏன் வருகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ தெரியவில்லை. இதற்குமேல் இத்தொடரில் நான் உங்களுக்கு எழுத எதுவுமில்லை. நான் எழுதுவதை முற்றாக வாசித்துவிட்டு பதில் எழுதுங்கள். புலிகள் ஒரு குறிப்பிட்ட தாக்குதலைச் செய்யவில்லையென்று நான் எழுதும்போது, புலிகள் ஒருபோதுமே மக்களைத் தாக்கவில்லை என்று நான் சொல்வதாக நீங்கள் கருதினால், தவறு என்னுடையது அல்ல.
 5. கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்றி இக்கட்டுரை அலசவில்லை. அதற்காக அவை நடைபெறவில்லையென்று நான் வாதிடுவதாக அர்த்தமில்லை. இத்தாக்குதலினை அரசு எவ்வாறு தனக்குச் சார்பாகப் பாவித்தது என்பதைப்பற்றியே இக்கட்டுரை அலசுகிறது. சிலவேளை முழுவதுமாக வாசித்தால் நீங்கள் ஆச்சரியப்படமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு இன்றிருக்கும் புலிகள் மீதான வெறுப்பும் விமர்சனமும் 2009 இற்கு முன்னர் எப்படி இல்லாமல் இருந்தது என்பது ஆச்சரியம்தான். ஏனென்றால், புலிகளின் படுகொலைகளை விமர்சிப்பதே உங்கள் நோக்கம் என்றால், 2009 வரை நீங்கள் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. வன்னியில் உங்களின் நண்பரோ உறவினரோ சொல்லும்வரை புலிகள் சிவிலியன்கள் மீது தாக்குதல்களை அதற்கு முன்னர் நடத்தவில்லை என்று நம்பியிருக்கிறீர்கள் போலத் தெரிகிறது, அதனாலேயே கேட்டேன்.
 6. கருணா துணை ராணுவக் குழுவின் பங்கு இத்தாக்குதல் அரசுக்குத் தெரியாமல் கருணாவின் துணை ராணுவக்குழுவினரால் செய்யப்பட்டு, புலிகளின் மீது பழியினைச் சுமத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் சிலர் கருதுவது தெரிகிறது. ஆனால், இத்தாக்குதலினை நடத்தியவர்கள் புலிகளே என்று உடனடியாகவே குற்றஞ்சாட்டிய அரசு, வன்னிமீது பலமான விமானத் தாக்குதலை ஆரம்பித்து விட்டது. இத்தாக்குதலினை கருணா செய்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்று கூட சிந்தித்துப் பார்க்க விரும்பாத அரசாங்கம், உடனடியாக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதன் மூலம், இத்தாக்குதலினைச் செய்தவர்கள் பற்றி தமக்கு அக்கறையில்லை என்பதையும் காட்டிக்கொண்டது. ஆனால், இதிலும் அரசுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. கருணா குழுவினரை தமது ராணுவமே வழிநடத்திவரும் நிலையில், அரசுக்குத் தெரியாமல் கருணா இதனைச் செய்வது சாத்தியாமா என்பது முதலாவது கேள்வி. அடுத்ததாக, கருணாவே இதனை தன்னிச்சையாகச் செய்திருந்தால், அவரைத் தண்டிப்பது புலிகளுக்கெதிரான போருக்குப் பாதகமாகிவிடும் என்பது இரண்டாவது. கருணாவே இத்தாக்குதலினை நடத்தியதாக அரசு ஒப்புக்கொள்ளுமிடத்து, அது சிங்களவரிடையே அரசுக்கெதிரான பலமான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடுவதுடன், சர்வதேசத்திலும் கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆகவே, கருணாவே இத்தாக்குதலினைச் செய்ததாக அரசு ஒருபோதுமே வெளிப்படையாகக் கூறப்போவதில்லை அக, எப்படிப் பார்த்தாலும், இத்தாக்குதலினை கருணா அரசின் துணையுடன் அல்லது ஆசீர்வாதத்துடனேயே செய்திருக்கவே வாய்ப்பிருக்கிறது. சிங்களவர் மீதான தாக்குதலுக்கு உடனடியாகப் பழிவாங்கும் தாக்குதலினை மேற்கொண்ட அரசு, இதுவரை தமிழர் மீதான தாக்குதல்களுக்கு ஏன் பழிவாங்கும் தாக்குதலினை நடத்தவில்லை? தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து வடக்குக் கிழக்கில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் சிறார்களும் புலிகளாலேயே கொல்லப்பட்டு, அக்கொலைகள் அரசின் மீதும், அரசின் செல்லப்பிள்ளையான கருணா உட்பட பல துணைராணுவக் குழுக்களின் மீது சுமத்தப்பட்டதாக அரசு தொடர்ச்சியாகக் கூறிவந்திருக்கிறது. அப்படியானால், இத்தாக்குதல்களுக்குப் பழிவாங்க ஏன் இதுவரையில் புலிகள் மீது தாக்குதலினை அரசு மேற்கொள்லவில்லை? வடக்குக் கிழக்கில் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த தமிழர்களைப் புலிகள் கொன்றதற்கும், அதேபோல கெப்பிட்டிக்கொல்லாவையில் புலிகள் சிங்களப் பொதுமக்களைக் கொன்றதற்கும் இடையே இருக்கும் வேறுபாடு என்ன? அண்மைக்காலத்தில் பல தடைவைகளில் அரசு மீது உண்மை, நம்பகத்தன்மை, பொறுப்புக்கூறல் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டு . சிலர் அரசினை எதற்காக விமர்சிக்கிறீர்கள் என்று கேட்கலாம். ஆனால், அவ்வரசுதானே தான் சமாதானத்தில் நாட்டம் கொண்டுள்ளதாகவும், எவ்விலை கொடுத்தாவது சமாதானத்தை அடைந்தே தீருவேன் என்றும் சர்வதேசத்தில் கூறி தனக்குச் சார்பான அலையொன்றினை ஏற்படுத்தி வைத்திருக்கிறது? அப்பாவிகளை தனது அரசிய லாபத்திற்காகக் கொன்றுகொண்டு, வெறும் உதட்டளவில் சமாதானம் பேசும் இந்த அரசு உண்மையாகவே இந்நாட்டிற்குச் சமாதானத்தைக் மகொண்டுவரும் என்பதை எப்படி நம்புவது? அரசும், கருணா துனைராணுவக் குழுவும் நடத்திவரும் படுகொலைகளை வெறுமனே புலிகள் மீது சுமத்துவதால் எதுவித நண்மையும் எவருக்கும் கிடைக்கப்போவதில்லை, அரசையும் கருணாவையும் தவிர. புலிகளை தமது நிபந்தனைகளுக்கும், சர்வதேச சட்டங்களுக்கு உடன்பட்டு ஒழுகுமாறு கேட்கும் சர்வதேசம் மகிந்த அரசுக்கோ கருணாவுக்கு அச்சட்டங்கள் பற்றிப் பாடம் எடுப்பதில்லை. https://sangam.org/taraki/articles/2006/06-28_Dirty_Tricks.php?print=sangam
 7. இத்தாக்குதலினை புலிகளே செய்தார்கள் என்று சில காரணங்களை முன்வைத்து அரசு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், இக்காரணங்களுக்கு வெளியே, இன்னும் ஏதாவது அறியப்படாத, ஆனால் புலிகளுக்குச் சாதகமான காரணங்கள் இருக்கின்றனவா? சரி, ஒரு பேச்சிற்கு இத்தாக்குதலினை புலிகளே நடத்தியதாக வைத்துக்கொள்வ்வோம். இத்தாக்குதலினை நடத்தி, அதற்கான பொறுப்பினை அரசு மீதோ அல்லது கருணா மீதோ சுமத்தி, அதன்மூலம் சர்வதேசத்திலிருந்து அனுதாபத்தினையும், இவ்வாறான முன்னைய பல அரச தாக்குதல்களினை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவுமே புலிகள் முயன்றார்கள் என்று ஒரு பேச்சிற்கு எடுத்துக்கொண்டாலும், இது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறது. முதலில் புலிகளின் பிரச்சாரத்தினை சர்வதேசமோ அல்லது மூன்றாம் தரப்புக்களோ ஏற்றுக்கொள்ளவேண்டுமே? இத்தாக்குதல் குறித்து அரசு வெளியிட்ட புலிகளே குற்றவாளிகள் எனும் திரியினை சில சர்வதேச செய்திச் சேவைகள் காவ விரும்பவில்லை. அவை, புலிகளின் கண்டன அறிக்கையினையும் , விளக்கத்தினையும் வெளியிட்டே இருந்தன, ஆனல் அவ்வறிக்கையினை தாம் ஏற்பதாக அவர்கள் தெரிவிக்கவில்லை. ஆகவே, புலிகளால் இத்தாக்குதலினைச் செய்துவிட்டு, அரசு மீது சுமத்துவதென்பது இலகுவில் முடியாத ஒரு காரியம். மேலும், "பயங்கரவாதிகள்" என்று சர்வதேசத்தில் முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான தாக்குதல் ஒன்றினைச் செய்து தமது பெயரினை இன்னும் கெடுத்துக்கொள்ள புலிகள் விரும்பியிருப்பார்கள் என்பதையும் நம்புவது கடிணமானது. ஆகவே, புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு, அரசு மீது பழிசேர்க்கும் பிரச்சார யுக்தி என்பது புலிகளைப்பொறுத்தவரை மிகப்பெரிய விஷப்பரீட்சையாக இருந்திருக்கும். ஏனென்றால், இன்றுவரை இத்தாக்குதலின் மூலம் அரசே அதீத வெற்றியினை ஈட்டிவருகிறது. தமக்கு பாரிய பிரச்சாரத் தோல்வியினையும், சர்வதேசத்தின் மிகப்பெரிய பின்னடைவினையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு தாக்குதலினை புலிகள் ஏன் செய்யவேண்டும்? தமது பிரச்சார யுக்திகளுக்காக இன்னும் கோரங்களைப் புலிகள் தேடவேண்டிய அவசியம் என்ன? அல்லைப்பிட்டிப் படுகொலைகள், வங்காலைப் படுகொலைகள், பேசாலை படுகொலைகள், கருணா குழுவினரால் நடத்தப்பட்டுவரும் கடத்தல்கள், காணாமற்போதல்காள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், பரராஜசிங்கம், ரவிராஜ் உள்ளிட பல தமிழ் அரசியல்வாதிகளின் படுகொலைகள், தமிழர் புணர்வாழ்வுக்கழக பணியாளர்களின் கூட்டுப் பாலியல் வன்புணர்வும் மற்றும் படுகொலைகளும் என்று அரசாலும், கருணா குழுவினராலும் ஏற்கனவே பல அகோரங்கள் நிகழ்த்தப்பட்டு, தமிழர்களுக்கு சார்பான நிலைப்பாடும், புலிகளுக்கு பிரச்சா சாதகமும் ஏற்பட்டுவரும் நிலையில், இன்னொரு படுகொலையினை புலிகளே நடத்தி தமக்கு ஏற்பட்டுவரும் பிரச்சார வெற்றியினை எதற்காகக் குலைக்க வேண்டும்?
 8. இதுவரை காலமும் தமிழர்களை சகட்டுமேனிக்குக் கொன்றுகுவித்த இலங்கை அரசும் அதன் துணைராணுவக் குழுக்களும், தற்போது அரசியல் காரணங்களுக்காக சிங்கள மக்களையும் கொல்ல ஆரம்பித்திருக்கின்றன என்பதே புலிகளின் நிலைப்பாடு. சிங்களப் பொதுமக்களை ஏற்றிச்சென்ற இப்பேரூந்து எதற்காக அரச ராணுவத்தாலும், அவர்களால் இயக்கப்படும் கருணா குழுவினராலும் இலக்குவைத்துத் தாக்கப்பட்டது என்பதற்கான புலிகளின் காரணங்களைப் பார்க்கலாம். 1. சர்வதேசத்தின் அனுதாபத்தினையும் அதனூடாக ராணுவ ரீதியிலான உதவிகளையும் சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே அரசும், கருணா குழுவும் இப்பேரூந்துமீதான தாக்குதலினை திட்டமிட்டு நடத்தி, தமது அரச பிரச்சார இயந்திரத்தின் துணையுடன் இப்படுகொலையினை புலிகள் மீது சுமத்தியிருக்கின்றன. 2. இத்தாக்குதலினை நடத்திய கையோடு, புலிகளே இதனைச் செய்தார்கள் என்று கடுமையான பிரச்சாரத்தினை (மகிந்த கொல்லப்பட்டவர்களின் மரணச்சடங்கில் கலந்துகொண்டது உட்பட) முடுக்கிவிட்டு, உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் இப்பிரச்சாரத்தினை திருப்பத் திருப்பக் கூறியிருப்பதன்மூலம், புலிகளே இதனைச் செய்தார்கள் என்று பலரையும் நம்பவைத்திருக்கின்றனர். புலிகள் கூறுவதையே பின்னர் இடம்பெற்ற சம்பவங்களும் உறுதிப்படுத்துகின்றன. அரச பிரச்சார இயந்திரத்தின் மூலங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க செய்தி நிறுவனங்களும், இணைய வழி செய்திச்சேவைகளும் உட்பட சர்வதேச செய்திச் சேவைகள் தொடர்ச்சியாக இத்தாக்குதலினை புலிகளே நடத்தியதாக செய்தி வெளியிட்டு வருகின்றன. இத்தாக்குதலினால் ஏற்பட்ட விளைவுகளைப் பார்க்கும்போது அரசே முற்றிலுமான வெற்றியினைப் பெற்றிருக்கிறது. இவ்வெற்றி அரசாலே திட்டமிட்டு, நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் மூலம் ஈட்டப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலின் மூலம் புலிகள் அடைந்தது முற்றிலுமான இழப்புக்களே அன்றி வேறில்லை. ஆகவே இத்தாக்குதலின் மூலம் லாபமடைந்தவர்கள் யாரென்று பார்த்தால், இத்தாக்குதலினை நடத்தியது யாரென்று அறிந்துகொள்வது கடிணமானது அல்ல.
 9. கெப்பிட்டிக்கொல்லாவை பேரூந்து மீதான தாக்குதல் குறித்த புலிகளின் அறிக்கை முதலில் இக்கொடூரமான தாக்குதல் குறித்து புலிகள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். இத்தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்று மறுக்காவிட்டாலும், இத்தாக்குதல் "மன்னிக்கமுடியாத, கடுமையான கண்டனத்திற்கு உள்ளாக்கப்படவேண்டிய படுகொலைகள்" என்று கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல், தாக்குபவர்களின் உண்மையான குறிக்கோள் எந்தளவு நியாயத்தன்மையினைக் கொண்டிருப்பினும், நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது நியாயப்படுத்தப்படவோ முடியாதது என்றும் கூறியிருக்கிறார்கள். புலிகளின் அறிக்கை வருமாறு, " அப்பாவிகள் பேரூந்துமீதான இத்தாக்குதலினை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கெப்பிட்டிக்கொல்லாவையில்,அப்பாவிகளை இலக்குவைத்துத் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதல் எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதது. அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான படுகொலை அரசியல் காரணங்களுக்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஜெனீவாவில் முடித்துக்கொண்டு புலிகளின் பேச்சுவார்த்தைக்குழு நாடு திரும்பியிருக்கும் தருணத்துடன் ஒன்றாக்கி நடத்தப்பட்டிருக்கும் இந்த அப்பாவிகளின் படுகொலை, இப்பழியினை புலிகள் மீது சுமத்தும் ஒற்றை நோக்கத்திற்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கை அரசினாலோ அல்லது அவர்களால் வழிநடத்தப்படும் துணைராணுவக் குழு ஒன்றினாலோ நடத்தப்பட்டிருக்கும் இந்த படுகொலையினைக் காரணமாகக் காட்டி இலங்கை அரசு வன்னிமீது தனது கொடூரமான வான் தாக்குதல்களையும் ஆரம்பித்திருக்கிறது. ஆனால், துரதிஷ்ட்டவசமாக, அரசின் இந்த நயவஞ்சகப் பிரச்சாரத்திற்குள் அகப்பட்டிருக்கும் சர்வதேச செய்திநிறுவனங்களும், அமைப்புக்களும் புலிகள் மீது அநியாயமாக இத்தாக்குதலுக்கான பொறுப்பினைச் சுமத்துவது தெரிகிறது. தற்போது நடந்துவரும் வன்முறைகள் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் பொறுப்பாகவும், நிதானத்துடனும் செய்தி வெளியிடவேண்டும் என்று நாம் வேண்டுகிறோம். யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களாக புலிகள் இயக்கத்தினால் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே நடத்தப்பட்ட தாக்குதல்களை அரசு குற்றச்சாட்டுக்களாக முன்வைத்து வந்தது. ஆனால், இப்போது சிங்கள மக்கள் மீது குறைந்தது 3 தாக்குதல்களையாவது புலிகள் செய்திருப்பதாகக்குற்றஞ்சாட்டுகிறது. இன்றுவரை சிங்கள அரசாலும், அதன் துணைராணுவக் குழுக்களாலும் தமிழ் மக்களும், சிறார்களும் ஆயிரக்கணக்கில் கொன்றுகுவிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். இத்தாக்குதல் ஒன்றின்போது கூட அரசோ அல்லது அதன் துணை ராணுவக் குழுக்களோ தமிழ் மக்கள் மீது தயவு தாட்சண்ணியம்பார்க்காமல், மிகவும் கொடூரமாகவே நடந்திருக்கின்றன. ஆகவே, இத்தாக்குதலிலும் கூட அரசும் அவர்களது துணைராணுவக் குழுவுமே பின்னால் இருப்பதாக நாம் நம்புகிறோம். இந்த நெருக்கடியான நேரத்தில் சிங்கள மக்கள் மீது புலிகள்பெயரால் படுகொலையொன்றினை நிகழ்த்துவதன் மூலம், சர்வதேசத்தில் புலிகளுக்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தவும், அவர்களைத் தனிமைப்படுத்தவுமே அரசு முயன்றிருக்கிறது" என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
 10. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், கருணாவின் நெருங்கிய அரசியல் ஆலோசகராகவும் இருக்கும் வீ ஆனந்தசங்கரி இத்தாக்குதல் குறித்துப் பேசும்போது, இது நிச்சயமாகப் புலிகளால் மமேற்கொள்ளப்பட்ட தாக்குதல்தான் என்று தான் உறுதியாகக் கூறியிருந்தார். அத்துடன், அரசும் ராணுவமும் கூறுவதுபோல, இது தமிழ் மக்கள் மீது சிங்களவர்களைக் கோபம் கொண்டு இனரீதியிலான வன்முறைகளைத் தூண்டிவிட்டு, சர்வதேச அனுதாபத்தினை உருவாக்கி தமது தனிநாட்டுக் கனவை நிறைவாக்க புலிகள் முயல்வதாகக் கடுமையாகச் சாடியிருந்தார். மேலும், 1983 ஆம் ஆண்டு தமிழர் மீது அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையினையும், இப்பேரூந்து மீதான தாக்குதலையும் ஒன்றாகக் கணிப்பிட்டு, 83' கலவரத்திற்கும் புலிகளே காரணம் என்றும், சர்வதேச அனுதாபத்தினைப் பெறுவதற்கே அப்பாவிச் சிங்கள ராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள் என்றும் கூறியிருந்தார். ஆகவே, 83 ஆம் ஆண்டு, ஜே ஆர் ஜெயவர்த்தனாவினாலும், அவரது அமைச்சர்களாலும் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட தமிழர் மீதான படுகொலைகளை புலிகளே ஆரம்பித்துவைத்தார்கள் என்று கூறும் எவருக்கும், நாட்டில் நடக்கும் எந்த இனரீதியிலான வன்முறைக்கும் புலிகளே காரணம் என்று கூறுவது அவ்வளவு கடிணமாக இருக்கப்போவதில்லை. இன்று ஆனந்தசங்கரி செய்வதும் அதைத்தான். ஆகவே, இங்கு ஒரு இனரீதியிலான பழிவாங்கும் வன்முறைகளை நடக்கின்றனவோ இல்லையோ, இலங்கை அரசாங்கமே இந்த சம்பவத்தின்மூலம் பாரிய நலன்களைச் சம்பாதித்திருக்கிறது. ஏனென்றால், இவர்கள் கூறுவது போல தமிழர் மீதான இனரீதியிலான வன்முறைகள் நிகழ்ந்திருந்தால், அதற்குப் புலிகளே முழு பொறுப்பாக இருக்கவேண்டும். அப்படி வன்முறைகள் நடக்கவில்லையென்றால்க்கூட, அதனைத் தடுத்து சமாதானத்தினை நிலைநாட்டிய பெருமை அரசுக்கே சேரும். அதுமட்டுமல்லாமல், புலிகளின் வெறுப்பேற்றும் பேரூந்து மீதான தாக்குதலின்பின்னரும் கூட, நாட்டில் அமைதியினை நிலைநாட்டிய அரசு மீது சர்வதேசத்தில் நம்பிக்கை ஏற்படுவதோடு, அப்படியான அரசின் கீழ் தமிழர்கள் அமைதியாகவும், பிரிவினை கோராமலும் வாழ முடியும் என்னும் நிலைப்பாட்டிற்கு சர்வதேசம் வரும் சந்தர்ப்பமும் இருக்கிறது. சரி, இலங்கை அரசோ, தெற்கின் இனவாதிகளோ, அமெரிக்கர்களோ அல்லது தமிழர் விரோதப் போக்கினைக் கொண்ட ஆனந்த சங்கரி போன்றவர்களோ கூறுவதுபோல இத்தாக்குதல் புலிகளால் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாகவும், இதன்மூலம் சிங்களவர்களைக் கோபப்படுத்தி தமிழர் மீதான வன்முறைகளை ஏவிவிடும் நோக்கிலும் இருந்திருக்குமானால், நிச்சயமாக அவர்களின் நோக்கம் ஈடேறப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல் இவை அனைத்திலுமே அரசுதான் பாரிய நண்மைகளை அடைந்திருக்கிறது. அப்படியானால், புலிகள் இத்தாக்குதலைச் செய்யவேண்டிய தேவை என்ன? அரசால் புலிகளை இத்தாக்குதலுடன் தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்ட ஐந்து காரணங்களையும் தொகுத்துப் பார்க்கும்போது, இத்தாக்குதலின் மூலம் புலிகள் பாரிய தோல்வியினையும், அரசு பாரிய பிரச்சார வெற்றியினையும், அனுதாபத்தினையும் பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது. சிலவேளை, புலிகளின் உண்மையான நோக்கம் என்னவென்பது பற்றி அரசுக்கு தெளிவான புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். அரசு புலிகளே இதனைச் செய்தார்கள் என்று கூறும் காரணங்களைக் காட்டிலும் இன்னும் வேறு காரணங்களும் இத்தாக்குதலின் பின்னால் இருக்கலாம், அக்காரணங்கள் உண்மையாக புலிகளுக்குச் சாதகமாகவும், அரசுக்குப் பாரிய நெருக்கடியினையும் ஏற்படுத்துவதாக இருக்கலாம், அல்லது அரசு இந்தக் காரணங்கள் பற்றி பேச விரும்பாமல்க் கூட இருக்கலாம் !
 11. தமிழரின் மீது வன்முறைகளை நடத்துவதன் மூலம், அவர்களின் தாயகத்தை கபளீகரம் செய்யவோ அல்லது தமிழர் தாயகத்தின் எல்லைகளை மாற்றியமைக்கவோ முடியுமானால், சாதாரண சிங்களவர்கள் அதனைச் செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், இனரீதியிலான பழிவாங்கும் வன்முறைகளை அவர்கள் இயல்பாகவே செய்யக்கூடியவர்கள் என்று பொதுப்படையாகக் கூறுவது கடிணமானது. மேலும், தமிழர் மீதான வன்முறைகளை நினைத்த மாத்திரத்தில் அவர்களால் செய்யமுடியாது. இதுவரை வரலாற்றில் செய்யப்பட்ட தமிழர்மீதான வன்முறைகள் நன்கு திட்டமிட்டே, அரச ஆதரவுடன் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆகவே, தமிழர் மீதான இனரீதியிலான பழிவாங்கும் வன்முறைகள் என்று அரசு தற்போது கூறுவது தனது அரசியல் ஆதாயத்திற்காகவே அன்றி வேறில்லை. அத்துடன் இன்றுள்ள நிலையில், தமிழர் மீது 83' பாணியிலான ஒருங்கமைக்கப்பட்ட பாரிய வன்முறைகளைத் தெற்கில் உள்ளவர்கள் செய்வதென்பது சற்றுக்கடிணமானது, மேலும் இந்த வன்முறைகள் சர்வதேச அளவில் சாதகமாகப் பார்க்கப்படப் போவதில்லையென்பதும் தெளிவு. ஆகவே இவ்வாறான இனரீதியிலான வன்முறைகளை நாம் நடக்க அனுமதிக்கமாட்டோம், நாம் சமாதானத்தில் அக்கறைகொண்டவர்கள் என்று காண்பிப்பதற்காகவே மகிந்தவின் அரசு தொடர்ச்சியாக இந்த "பழிவாங்கும் வன்முறைகள்" பற்றிப் பூச்சாண்டி காட்டி வருகிறது. சரி, தமிழர்கள் மீதான சிங்களவரின் இனரீதியிலான் பழிவாங்கும் வன்முறைகளால் புலிகளுக்கு என்ன லாபமிருக்கிறது? முதலில், இப்படியான வன்முறைகளைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சர்வதேசத்திலோ, உள்ளூரிலோ எந்த அனுதாபமும் கிடைக்கப்போவதில்லை. கொல்லப்படும் அல்லது பாதிக்கப்படும் மக்களுக்கான அனுதாபம் கிடைக்குமேயன்றி, வன்முறைகளைத் தூண்டிவிட்டவர்கள் மீதான கண்டனங்களும், வெறுப்பும் மட்டுமே அதிகரிக்கும். 1983 ஆம் ஆண்டின் வன்முறைகள் இத்தாக்குதலிலிருந்து முற்றாக வேறுபட்டவை. அன்று புலிகள் தாக்குதல் நடத்தியது இலங்கை அரச படைகள் மீதேயன்றி, சாதாரண சிங்களப் பொதுமக்கள் மீது அல்ல. ஆகவே, அன்று தமிழர்கள் மீது உடனடியாக நடத்தப்பட்ட அரச ஆதரவிலான வன்முறைகளையடுத்து தமிழ்மக்கள் மீது சர்வதேச அனுதாபமும் கவனமும் திரும்பியதுடன், புலிகள் தமது மக்கள் மீதான ஆக்கிரமிப்பையும், அரச அடக்குமுறையினையும் எதிர்த்துப் போராடும் விடுதலைப் போராளிகள் எனும் சர்வதேச தகுதியினையும் பெற்றுக்கொண்டார்கள். ஆகவே, 1983 ஆம் ஆண்டு இன வன்முறைகள் தமிழர்கள் மீது மட்டுமல்லாமல், புலிகள் மீதும் அனுதாபத்தினைப் பெற்றுக்கொடுத்திருந்தது. ஆனால், பேரூந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் முற்றிலும் வேறானது. சாதாரண பொதுமக்களும் சிறுவர்களும் வேண்டுமென்றே இலக்குவைத்துத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, இதனைச் செய்தவர்கள் யாராக இருப்பினும், அவர்களது குறிக்கோள்கள் எதுவாக இருப்பினும் அவர்கள் மீது எவரும் அனுதாபம் கொள்ளப்போவதில்லை. ஆகவே, இத்தாக்குதலைப் புலிகள் நடத்தியிருந்தால், இதன்மூலம் அவர்கள் எதையுமே அடையப்போவதில்லை, சர்வதேச கண்டனங்களையும், வெறுப்பையும் அன்றி. மேலும், சர்வதேசத்தினால் தனிமைப்படுத்தப்படுதலும், வெறுப்பும், தூற்றுதல்களையுமே புலிகள் பெற்றுக்கொள்ளவேண்டியிருந்திருக்கும், அவர்களின் நியாயமான கோரிக்கை தமிழர்களுக்கான விடுதலையாகவும் அவர்களுக்கான தனிநாடாகவும் இருந்தாலும் கூட.
 12. நான் கேள்விப்பட்டது இவர்களது ஹெலி இயந்திரக்கோளாறு காரணமாக காட்டிற்குள் தரையிறங்கியபோது பொதுமகன் ஒருவரால் பாதுகாப்பாக அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு இவர்கள் அழைத்துச்செல்லப்பட்டுக் காப்பாற்றப்பட்டார்கள் என்றுதான். புலிகள் அந்தவிடத்திற்கு வருமுன்னரே அவர்கள் தப்பிவிட்டார்கள்.
 13. தமிழர் மீது சிங்களவர்கள் இனவன்முறையினை நடத்துவதே புலிகளின் இந்தத் தாக்குதலின் நோக்கம் எனும் மாயை பேரூந்து மீதான தாக்குதலை புலிகள் நடத்தியமைக்கான முதன்மையான காரணம் சிங்களவர்களைக் கோபப்படுத்தி தமிழர் மீது இனரீதியிலான தாக்குதல்களை நடத்துவதே என்பது அரசின் நிலைப்பாடு . தமிழ் மக்கள் மீதான சிங்களவரின் தாக்குதல்களைப் பிரச்சாரமாக முன்வைத்து தமக்கான தாயகத்தை புலிகள் சர்வதேசத்தின் அனுதாபத்தின்மூலம் அடைய நினைக்கிறார்கள் என்று அரசு கூறுகிறது. உண்மைதான், தமிழர் மீதான தாக்குதல்கள் மூலம் சர்வதேசத்தில் ஏற்படப்போகும் அனுதாபம் தமிழ்மக்களுக்கான தாயகத்தினை உருவாக்கவே வழிவக்கும் என்பதுடன் , அந்த அனுதாபம் புலிகளுக்கான தாயகத்தினை ஒருபோதும் ஏற்படுத்தப்போவதில்லை என்பது அரசிற்குப் புரியாமல்ப் போய்விட்டது. ஆனால், இப்பேரூந்து மீதான தாக்குதலை அடுத்து தமிழர் மீது சிங்களவர்கள் பதில் தாக்குதல்களை நடத்தவில்லை. இத்தாக்குதல் மட்டுமல்லாமல், சரித்திரத்தில் அனைத்துத் தாக்குதல்களிலும் சாதாரண சிங்கள மக்கள் தமிழர் மீது பழிவாங்கும் இனரீதியிலான தாக்குதல்களை நடத்தவில்லை. மாறாக தமிழர் மீது இதுவரை நடத்தப்பட்ட அனைத்துத் தாக்குதல்களும் பதவியில் அமர்ந்திருந்த சிங்கள இனவாத அரசுகளின் திட்டமிடலின் மூலம், அரச ராணுவத்தின் ஏவுதலின்மூலமுமே நடத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இருந்து இன்றுவரை நடத்தப்பட்டிருக்கும் தமிழர் மீதான சிங்களவர்களின் பழிவாங்கும் தாக்குதல்களில் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட, பல நூற்றுக்கணக்கான அரச ஆதரவுபெற்ற குற்றக் கும்பல்கள், சிறைக் கைதிகள், சிவில் உடையணிந்த ராணுவத்தினர் மற்றும் பொலீஸார் ஆகியோர் சாரை சாரைய பாரவூர்திகளில் தமிழரின் வீடுகளுக்கு அண்மையில் தேர்தல் வாக்காளர் பட்டியல்களுடன் இறக்கிவிடப்பட்டு படுகொலைகளில் ஈடுபட்டனர் என்பதே வரலாறு. அத்துடன், தமது பெயரில் சிங்கள அரசுகள் நடத்தும் அக்கிரமங்களைத் தெரியாமலும், தமிழரின் பிரச்சினைகளைப் புரியாமலும், தமது அரசுகள் கூறிவரும் பொய்களை அப்படியே நம்பிக்கொண்டு ஏமாளிகளாக இருக்கும் சிங்களச் சமூகம், இயல்பாகவே தமிழர்களை அழிக்க விரும்பும் ஒரு மக்கள் கூட்டம் என்று சொல்லமுடியாது. 1983 இனக்கலவரத்தின்போது, பல சிங்களவர்கள் பல ஆபத்துக்களுக்கு மத்தியிலும் தமது தமிழ் நண்பர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். சுனாமிப் பேரலை அநர்த்தத்தின்போது தமிழர்கள் சிங்களவர்களுக்கும், சிங்களவர்கள் தமிழர்களுக்கும் பரஸ்பரம் உதவி நல்கியிருக்கிறார்கள்.
 14. ஆனால், புலிகளே பேரூந்துமீது தாக்குதலை நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிக்கொண்டு, இது ஒரு வலிந்து போருக்கு இழுக்கும் புலிகளின் உத்தியென்றும் கூறிக்கொண்டு, இந்த வம்பிற்கிழுக்கும் புலிகளின் செயலுக்குப் பதிலடியாக வன்னிமீது கடுமையான வான் தாக்குதலக்களை நடத்தத் தொடங்கியிருப்பதோடு, இது ஒரு போர் நடவடிக்கை இல்லையென்றும், புலிகளின் உசுப்பேற்றலுக்கான பதிலடியே இதுவென்றும், இந்த வான் தாக்குதல்களால் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கோ, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கோ எவ்வித தடங்கலும் ஏற்படாது என்று இலங்கை அரசாங்கம் கூறியிருக்கிறது. சிலவேளை, வானிலிருந்து குண்டுகளை வீசுவதன் மூலம் சமாதானத்தை அடைந்துவிடலாம் என்று அரசு கருதுவதுபோலத் தெரிகிறது. அல்லது, வானிலிருந்து மலர் தூவுவதற்காகக் எடுத்துச் சென்ற பொதிகளில் எவரோ விசமத்தனத்திற்கு குண்டுகளை மாற்றி வைத்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. புலிகளின் பகுதிகள் மீது உயரப் பறந்து குண்டு வீச்சில் ஈடுபடுவதன் மூலம் தமிழர் தாயகத்திற்கு வெளியே, தொலைவில் புலிகளால் நடத்தப்படுவதாக அரசு கூறும் கண்ணிவெடித் தாக்குதல்களை நிருத்துவது சாத்தியமா? யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை அப்பட்டமாக மீறிக்கொண்டு, வன்னிமீது வான் தாக்குதல்களை தொடுத்து , தமது நடவடிக்கை யுத்த நிறுத்தத்தைப் பாதிக்காதென்றும், சமாதான முயற்சிகளில் தமது அரசாங்கம் தொடர்ந்தும் இதயசுத்தியுடன் செயற்பட்டுவருவதாகவும் கூறும் மகிந்த, வன்னி மீதான தாக்குதல்கள் வெறும் பதிலடி நடவடிக்கைகள் மட்டுமே என்றும் கூறியிருக்கிறார். மகிந்தவின் கூற்றினை வழிமொழிந்த பாதுகாப்புச் சபைப் பேச்சாளர் கெகெலிய ரம்புக்வல்ல , " யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மிகவும் உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறோம், தேவைப்பட்டால் அதனை இன்னமும் மெருகூட்டும் நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபடத் தயாராக இருக்கிறது" என்று தனது அரசாங்கத்தின் சமாதானத்தின் மீதான பற்றுதலை குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். நடைமுறையிலிருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மேம்படுத்தப்போவதாக ரம்புக்வல்ல கூறுவது உண்மையென்றால், இனிவரும் காலங்களில் "புலிகளின் தாக்குதல்கள்" என்று அரசால் குற்றஞ்சாட்டப்படும் அனைத்துத் தாக்குதல்களுக்கும் பதிலடியாக தமிழர் தாயகம் மீது அரசு தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்திக்கொண்டு அவை புலிகளுக்கான வெறும் "பதிலடிகள்" மாத்திரமே என்றும், இதனால் சமாதான ஒப்பந்தம் பாதிப்படையாது என்றும் கூறப்போகிறது. எது எவ்வாறு இருந்தாலும், கெப்பிட்டிக்கொல்லாவைப் பேரூந்து மீதான தாக்குதலை புலிகள் மீதான வான் தாக்குதல்களை ஆரம்பிக்கவும், தொடரவும் ஒரு சந்தர்ப்பமாக பாவித்திருக்கும் அரசாங்கம், சர்வதேசத்தின் சில நாடுகளின் அனுமதியுடன் தமிழர் தாயகம் மீது "பதிலடி" எனும் பெயரில் தனது முற்றான யுத்தத்தினை ஏவிவிடும் நோக்கத்திலும் வெற்றிகண்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
 15. புலிகளால் சிங்களவர்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்படுகிறார்கள் எனும் மாயை அரசு இங்கே குறிப்பிடும் சிங்களவர்கள் மீதான புலிகளின் இனச்சுத்திகரிப்புச் சம்பவம் இடம்பெற்ற கெப்பிட்டிக்கொல்லாவைப் பகுதியென்பது தமிழரின் தாயகம் என்று அவர்கள் கோரும் பகுதிக்கு வெளியிலேயே அமைந்துள்ளது. ஆகவே, பேரூந்து மீதான தாக்குதல் சம்பவம் இனச்சுத்திகரிப்பின் அடிப்படையிலானது எனும் புனைவு அர்த்தமற்றதாகிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், புலிகள் தமது போராட்டம் சிங்களவர்களுக்கு எதிரானது அல்ல என்று தொடர்ச்சியாகக் கூறிவருவதுடன் தமிழர் தாயகத்தின் எல்லைகளுக்குள் அவர்களுக்கான சுயநிர்ணயத்திற்கான போராட்டமே அதுவென்றும் கூறிவருகிறார்கள். இத்தாக்குதல் மூலம் அரசை புலிகள் பணியவைக்க முனைகிறார்கள் எனும் புனைவு இத்தாக்குதலின்பின்னர் பல நடுநிலையாளர்கள் வெளியிட்ட கருத்துக்களில் புலிகள் இத்தாக்குதலினைச் செய்திருக்க வாய்ப்பில்லையென்பது தெரிகிறது. அதாவது, இவ்வகையான அப்பாவிகள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலின் மூலம் தமக்கு ஏற்படப்போகும் களங்கம் தொடர்பாக புலிகள் நன்கு தெரிந்தே வைத்திருப்பதால், இவ்வாறான தாக்குதல் ஒன்றினை அவர்கள் செய்திருக்க வாய்ப்பில்லையென்று இவர்கள் கூறுகிறார்கள். புலிகள் இத்தாக்குதலினை நடத்தியிருந்தால், அவர்கள் மீது சர்வதேசத்தின் முழுக் கண்டனங்களும் வந்து குவிவதோடு, இத்தனை காலமும் அவர்கள் சம்பாதித்து வைத்த நற்பெயரையும் அது வெகுவாகப் பாதித்துவிடும் என்பதும் அவர்கள் அறியாதது அல்ல. அரசை நிர்ப்பந்திகவே புலிகள் சிங்கள அப்பாவிகளைக் கொன்றார்கள் என்றால், சர்வதேசமோ அல்லது சிங்கள மக்களோ தொடுக்கும் விமர்சனங்களை விட, தமிழர்களே புலிகளைக் கடுமையாக விமர்சிக்கும் சாத்தியமும் இருக்கின்றது. அரசை நிர்ப்பந்தித்து பணியவைக்கவே புலிகள் இத்தாக்குதலை நடத்தியிருந்தால், இதனால் அவர்கள் எதனையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லையென்பதோடு, இருக்கும் அனைத்து நன்முயற்சிகளையும் இழப்பார்கள் என்பது உண்மை. ஆகவே இந்த பணியவைக்கும் நிர்ப்பந்த புனைவும் பொய்யென்றாகிவிடுகிறது. அப்படியானால், சமாதானப் பணியகத்தின் ஜெஹான் பெரேராவோ அல்லது அவர்போன்ற சிங்கள இனவாதிகளோ செய்வது இச்சந்தர்ப்பத்தையும் புலிகளை கொடூரமான பயங்கரவாதிகள் என்று பிரச்சாரப்படுத்தத்தான் என்பது தெளிவு. அத்துடன், இத்தாக்குதலுக்குப் பின் வன்னிமீது தொடர்ச்சியாக வாந்தாக்குதலை நடத்திவரும் அரசு, புலிகளின் நிர்ப்பந்தத்திற்கு தாம் அடிபணியப்போவதில்லை என்று தெளிவாகக் கூறியபின்னர் "அரசை நிர்ப்பந்திக்கவே புலிகள் தாக்குதலை நடத்தினார்கள்" என்பது பொருளற்றுப் போய்விடுகிறது. ஆகவே, எதற்கும் பிரியோசனப்படாத, கடுமையான சர்வதேச கண்டனங்களை மட்டுமே கொண்டுவரக்கூடிய இத்தாக்குதலை புலிகள் செய்யவேண்டிய தேவை என்ன? ஆனால், இத்தாக்குதல் மூலம் அரசு தனக்குத் தேவையான அனைத்தையுமே சாதித்துக் கொண்டது. அதாவது தாக்குதல் நடந்தவுடனேயே அது புலிகளால்த்தான் நடத்தப்பட்டதாக அடித்துக் கூறிய அரசு, தனது பிரச்சார வண்டியில் சர்வதேசத்தின் சில நாடுகளையும், புலியெதிர்ப்பாளர்களையும் ஏற்றிக்கொண்டது. முடிவாக, இத்தாக்குதல் மூலம் நண்மை அடைந்த ஒரு தரப்பு இருக்குமென்றால் அது நிச்சயமாக இலங்கை அரசே ஒழிய வேறு எவரும் இல்லை என்பது தெளிவு. அரசை வலிந்து போருக்குள் இழுக்கும் உத்தியே இத்தாக்குதல் எனும் புனைவு இத்தாக்குதல் அரசை போர் ஒன்றிற்குள் வலிந்து இழுக்கும் ஒரு முயற்சியே என்று கூறிவரும் அரசதரப்பு முக்கியஸ்த்தர்கள் அல்லது சிங்கள இனவாதிகளின் கூற்றின் பின்னாலிருக்கும் சூட்சுமத்தை நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம். அதாவது போரை ஆரம்பித்தலுக்கும், போரிற்குள் உள்வாங்கப்படுவதற்கும் இடையே பாரிய வேறுபாடு இருக்கிறது. போரினை ஆரம்பிக்கும் ஒரு தரப்பினை சர்வதேச சமூகமும், அமைப்புக்களும் குற்றவாளிகளாகப் பார்க்கும்போது, தம்மை போர் ஒன்றிற்குள் வலிந்து இழுத்துவிட்டார்கள் என்று கூறிக்கொண்டு, பழிவாங்கும் நடவடிக்கைகளாக எதிரிகளின் பகுதி மீது கொடூரமான வான்வழித் தாக்குதல்களை நடத்துவதை சர்வதேசம் நியாயமாகப் பார்ப்பதுமட்டுமல்லாமல், அது ஒரு போர்நடவடிக்கை என்று கருதப்போவதில்லை. சிங்கள அரசு செய்வது இதைத்தான். அதாவது இத்தாக்குதல் மூலம், புலிகள் தம்மைப் போருக்கு அழைத்துவிட்டார்கள் என்று கூறிக்கொண்டே புலிகள் மீதான நேரடியான தாக்குதல்களை அது இன்று நடத்தத் தொடங்கியிருக்கிறது. அரசைப் பொறுத்தவரை இந்த வான் தாக்குதல்களோ அல்லது புலிகள் மீதான வேறு எந்தத் தாக்குதல்களோ வேறு வழிகள் இல்லாமையினால் நடத்தப்படுகின்றனவே அன்றி, தாம் போரினை ஆரம்பிக்கவில்லை என்று சர்வதேசத்திற்குக் காட்டிவருகிறது. இன்னொரு வகையில் சொல்லப்போனால், இத்தாக்குதல் மூலம் புலிகளே போரினை ஆரம்பித்திருப்பதாக அரசு கூறத்தொடங்கியிருக்கிறது. இங்கு அரசின் சமாதானச் செயலகத்தின் தலைவர் பாலித கொஹோண கூறியதையும் நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம்." புலிகள் எம்மை யுத்தம் ஒன்றிற்குள் இழுத்துவிடுவதற்கான எவ்வாறான முயற்சிகளை எடுத்தாலும்கூட, போரினை முதலில் ஆரம்பிப்பது நாமாக இருக்கப்போவதில்லை". ஆக, இவர் சொல்வதுகூட, போரினை ஆரம்பிப்பதற்கும், போரிற்குள் இழுத்துவிடப்பட்டு பின்னர் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்துவதற்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. அரசு இங்கே செய்வது இத்தாக்குதலினைப் பாவித்து போரினை ஆரம்பிப்பதுதான். ஆனால், தாமே ஆரம்பித்த போரினை, புலிகளின் தூண்டுதலினாலேயே அது ஆரம்பிக்கப்பட்டதென்றும், தாம் செய்வது போர் அல்ல , மாறாக புலிகளுக்கான தண்டனையே என்றும் காரணம் கூறுகிறது. இதில் வேடிக்க என்னவென்றால், போரினை ஆரம்பிக்கும் நோக்கம் புலிகளுக்கிருந்தால், அதனை நிச்சயம் அவர்கள் நேராக செய்திருப்பார்கள், 64 அப்பாவிகளைக் கொன்று சர்வதேச கண்டனங்களை சுமந்துகொண்டு ஆரம்பிக்கவேண்டிய தேவை அவர்களுக்கில்லை. அரச ராணுவம் மீது நேரடியாகவே தாக்குதல் நடத்தும் வல்லமை புலிகளுக்கு இருக்கிறது என்பது தெரியாத விடயமல்ல. ஆகவே, அரசின் இந்த "வலிந்த போருக்கு அழைத்தல்" எனும் புனைவும் அர்த்தமற்றதாகிவிடுகிறது.
 16. சர்வதேசத்திற்கும் அரசு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறது. அதாவது, சிங்கள மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதன் மூலம், சிங்களவர்களைக் கோபப்படுத்தி, தமிழர்கள் மீது இனரீதியான பழிவாங்கல் தாக்குதல்களை நடத்தி, தமது தனிநாட்டிற்கான கோரிக்கைக்கு வலுச்சேர்ப்பதே புலிகளின் நோக்கம். ஆனால், சிங்களவர்களைச் சாந்தப்படுத்தி, அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாவண்ணம் அவர்களை அமைதிப்படுத்தி, சமாதானத்தின் மகானான மகிந்தவும் அவரது அரசும் இப்பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்று நிரந்தர சமாதானம் இந்நாட்டில் மலர அயராது உழைக்கிறார்கள் என்பதுதான். அதேவேளை அமெரிக்க ராஜாங்கச் செயலகத்தின் பேச்சாளரான ஷோன் மக்கோர்மக் இத்தாக்குதல் பற்றிப் பேசும்போது, "இது நிச்சயமாக புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்தான். புலிகளின் மிலேச்சத்தனமான தாக்குதல் உத்திகள் எல்லாமே இந்தத் தாக்குதலின்போது பாவிக்கப்பட்டிருக்கின்றன. தாம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் என்று கூறிக்கொண்டே புலிகள் இத்தாக்குதலினை நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தைகளைக் கடுமையாகப் பாதிக்கப்போகும் இத்தாக்குதல்கள் உடனடியாக அவர்களால் நிறுத்தப்பட்டு, உடனடியாக தமது வன்முறைகளை அவர்கள் கைவிட்டு, இலங்கை அரசுடன் நேரடியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் " என்று கூறியிருந்தார். அதுசரி, இத்தாக்குதலினைப் புலிகள்தான் நடத்தியதாக இவர் எப்படி இவ்வளவு உறுதியாகக் கூறுகிறார்? இத்தாக்குதலினைப் புலிகளே நடத்தினார்கள் என்பதை இலங்கை அரசாங்கத்தைத் தவிர இவருக்கு வேறு யார் சொல்லியிருக்கக் கூடும்? ஆகவே, அரசின் அறிக்கையினை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன், மகிந்தவின் சமாதானத்திற்கான முயற்சிகளை முழு மனதோடு வரவேற்பதாகவும் கூறியிருக்கும் அமெரிக்கா, வன்னி மீதான அரச விமானப்படையின் கொடூரமான குண்டுவீச்சுக்கள் பேச்சுவார்த்தையினைப் பாதிக்காதெனும் நிலைப்பாட்டினையும் எடுத்திருப்பதுபோலத் தெரிகிறது. ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய் செய்தி என்னவென்றால், இலங்கையில் அமெரிக்காவின் பாதுகாப்புத் தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் அக்கறைகள், தமது நலன் தொடர்பான செயற்பாடுகள், தமது திட்டங்கள் ஆகியனவும் மகிந்த தலைமையிலான சிங்களவர்களின் அக்கறைகளும், நலன்களும் ஒன்றில் ஒத்துப்போகலாம் அல்லது வேறுபடலாம், அல்லது தமிழர்களைப் பாவித்து தனது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள அது முயலலாம். ஆனால், அண்மைக்காலமாக தமிழரின் பிரச்சினைகள், அவலங்கள் பற்றி அமெரிக்கா நடுநிலையான நிலைப்பாட்டினை எடுத்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. அது மட்டுமல்லாமல், தமிழர்கள் தம்மைத்தாமே ஆளும் உரிமையினைக் கொண்டிருக்கிறார்கள் என்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான செயலாளர் ரிச்சார்ட் பெளச்சர் அண்மையில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனால், தனது நலன்கள் என்று வரும்போது அமெரிக்கா சந்தர்ப்பத்திற்கேற்றவாறு காய்நகர்த்தி வருகின்றது என்பதுதான் இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்ளக் கூடியது. இத்தாக்குதலின் பின்னர் கருத்து வெளியிட்ட கொழும்பு மாவட்ட முன்னாள் கத்தோலிக்க ஆயர் துலீப் டி சிகேராவும் மகிந்தவின் பிரச்சார வண்டிமீது தாவி ஏறி பின்வருமாறு கூறுகிறார், " அப்பாவிச் சிங்கள மக்கள் மீது கெப்பிட்டிக்கொல்லாவைப்பகுதியில் புலிகளால் வேண்டுமென்று நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினை அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து கண்டிக்க முன்வரவேண்டும். தமது நாளாந்த அலுவல்களைப் பார்க்கப் பயணித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் உட்பட அப்பாவிப்பொதுமக்கள் 64 பேரின் படுகொலைகள் மனித நேயத்திற்கு எதிரான குற்றமாகும்" என்று கூறுகிறார். தனது இக்கூற்று இனங்களுக்கிடையே பகைமையினை உருவாக்கும் என்று தெரிந்தும், தமிழர்மீதான பகையுணர்வுடன் கருத்திட்ட அவர், "இத்தாக்குதலின்போது பாவிக்கப்பட்ட தொழிநுட்பமும், இத்தாக்குதலின் துல்லியமும் நிச்சயமாக இதனைப் புலிகள் தான் செய்திருப்பதாகத் தெரிகிறது" என்றும் அவர் கூறினார். இத்தாக்குதல் தொடர்பாக எந்தவிதமான விசாரணைகளையும் நடத்த விரும்பாத அரசு உடனடியாகவே புலிகள் மீது பழியைச் சுமத்தியதைப் போன்றே முன்னாள் ஆயரும் உடனடியாகவே இத்தாக்குதலினைப் புலிகளே நடத்தியதாகக் கூறியதுடன், போகிற போக்கில், "சிங்களவர்கள் எவரும் பதில் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றும் இறுதியாகக் கூறியிருந்தார். ஆகவே, மகிந்த, ரம்புக்வெல்ல, சிறிபால டி சில்வா, அமெரிக்க பேச்சாளர் ஆகியோர் வரிசையில் முன்னாள் ஆயரும் புலிகள் எதற்காக இத்தாக்குதலினை நடத்தினார்கள் என்பதனை மிகத் தெளிவாகவே தெரிந்திருந்ததாகத் தெரிகிறது. அதாவது, சிங்களவர்களைக் கோபப்படுத்தி தமிழர்கள் மீது இனச்சுத்திகரிப்பொன்றினை நடத்தி, அதன்மூலம் புலிகளுக்கான தாயகத்தை அடைவதே புலிகளின் இத்தாக்குதலின் பின்னாலிருந்த நோக்கம் என்று அனைவருமே சொல்லிவைத்தாற்போல் புரிந்துகொண்டிருப்பது வியப்புத்தான். இதிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம் யாதெனில், முன்னாள் ஆயரின் அறிக்கைக்குப் பின்னர் அவரை மேற்கோள்காட்டி பேசிய பலரும், அவரைப் போன்றே அரசை உறுதியாக ஆதரித்ததுடன், இத்தாக்குதலுக்குப் பழிவாங்கலாக சிங்களவர்கள் சார்பில் அவர்களின் அரசு வன்னிமீது கட்டவிழ்த்து விட்டிருந்த கொடூரமான வான்வழித் தாக்குதல்களைனை சரியான நடவடிக்கைதான் என்றும், சமாதானதிற்குப் புலிகளை இழுத்துவரும் ஒரு முயற்சியென்றும் கூறியிருந்தனர். இன்னொரு வகையில் சொல்லப்போனால், புலிகளால் கொல்லப்பட்டதாக அரசு கூறும் 64 சிங்களப் பொதுமக்களுக்கு மேலதிகமாக அரசின் பழிவாங்கல்த் தாக்குதல்களில் இன்னும் பல நூற்றுக்கணக்கான தமிழர்களும் கொல்லப்படுவதை இவர்கள் சரியென்று ஏற்றுக்கொண்டிருப்பதும் தெளிவாகிறது. "ஆயரே சொல்லிவிட்டார், ஆகவே இத்தாக்குதலைச் செய்தது புலிகள்தான், ஆகவே வன்னிமீது விமானத் தாக்குதல் நடத்துவது நியாயமானதுதான்" என்று சாதாரண சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இலங்கையில் அரசியற்களம் ஒன்றி மிகவும் திட்டமிட்ட ரீதியில் உருவாக்கப்பட்டு வருவது கண்கூடு. ஆக, இதுஅவரை அரசினாலும் அதன் ஆதரவாளர்களாலும் இத்தாக்குதலினை புலிகள் ஏன் நடத்தினார்கள் என்பதற்கான காரணங்களாக பின்வருபவை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பலவிடங்களிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. - பேரூந்தில் பயணிப்பது அப்பாவிச் சிறார்களும், பொதுமக்களும்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே புலிகள் இத்தாக்குதலினை நடத்தினார்கள் - இத்தாக்குதலின்மூலம் சிங்களவர்களைக் கோபப்பட வைத்து தமிழர் மீது இனரீதியான பழிவாங்கும் வன்முறைகளை அவர்கள் நடத்த ஊக்குவிப்பது. - இலங்கையரசை வலிந்து ஒரு போருக்குள் இழுப்பது - அப்பாவிகளைக் கொல்வதன்மூலம், தமது நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்வது. - சிங்களவர் மீது இனச்சுத்திகரிப்பொன்றை நடத்துவது. ஆனால், எழுந்தமானமாக, எதுவித விசாரணைகளோ அல்லது சாட்சியங்களோ இல்லாமல் அரசாலும், பரந்த சிங்களச் சமூகத்தின் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுவரும் ஆதாரமற்ற இக்குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஏதுநிலைகள் இலங்கையில் இன்று காணப்படுகின்றனவா?
 17. மகிந்த மேலும் கூறும்போது, தமிழ் மக்கள் மீது சிங்கள மக்களால் வன்முறைகள் நடைபெறுவதைத் தூண்டும் விதமாகவே புலிகள் இத்தாக்குதலினை நடத்தியதாகவும், இதன்மூலம் தமிழருக்கெதிரான வன்முறைகள் சர்வதேச நாடுகளால் விமர்சிக்கப்பட்டு, புலிகளின் இலட்சியமான தனிநாட்டிற்குச் சாதகமான நிலைப்பாடு அச்சர்வதேச நாடுகளால் எடுக்கப்படலாம் என்று புலிகள் கருதுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மகிந்தவின் கூற்றுப்படி சர்வதேசமோ பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணை வழங்கும் இணைத்தலைமை நாடுகளும் இத்தாக்குதலை மிகவும் வன்மையாகக் கண்டித்ததாகவும், புலிகளே இத்தாக்குதலுக்குப் பொறுப்பென்று கூறியதாகவும் , பெரும்பான்மையினமான சிங்களவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலினை அவர்கள் கண்டிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடோ அல்லது அமைப்போ இத்தாக்குதலினை புலிகள் மீது சுமத்த முன்வரவில்லை என்பதுகுறிப்பிடத் தக்கது. மேலும், தமிழர்களின் தாயகத்திற்கான புலிகளின் விடுதலைப் போராட்டம் என்று கூறுவதைத் தவிர்த்து புலிகளின் தாயகத்திற்கான விடுதலைப்போராட்டம் என்றே இந்நாட்களில் அரசு பேசி வந்தது. அதாவது, தமிழர்கள் தாயகம் கேட்கவில்லையென்றும், புலிகளே பிரிவினைவாதம் கோரிப் போராடுவதாகவும் அது சர்வதேசத்தில் காட்ட முயற்சித்துவந்தது. புலிகளையும் தமிழர்களையும் தனித்தனியே தாம் பிரித்து நோக்குவதாகக் கூறிய அரசாங்கம், கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதலின் பின்னர் பாரிய குண்டுவிச்சூத் தாக்குதல்களை வன்னி மீது, அதி உயரத்தில் பறக்கும் மிகையொலி விமானங்களைக் கொண்டு நடத்தத் தொடங்கியிருக்கிறது. தமது அரசியலுக்காக புலிகளையும் தமிழர்களையும் பிரித்து பேசும் அரசு, தனது வான்படையின் அதியுயர் குண்டுவீச்சுக்களின்போது புலிகளையும் தமிழர்களையும் எவ்வாறு பிரித்தறிந்து தாக்குதல்களை நடத்துகிறது என்பது புரியாத புதிர்தான். மகிந்தவின் கூற்றையே அரசின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளாரான கெகெலியே ரம்புக்வல்லவும் பிரதிபலித்திருந்தார். "இது ஒரு மிக கொடூரமான தாக்குதல். இத்தாகுதலின்மூலம் சிங்களவர்களைக் கோபப்படுத்தித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவே புலிகள் முயன்றிருக்கிறார்கள்" என்று அவரும் தன் பங்கிற்கு கூறியிருந்தார். அவ்வாறே அரசின் சமாதானத் தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் கொல்லப்பட்டவர்களின் மரணச் சடங்கில் கலந்துகொண்டு பேசும்போது, "இத்தாகுதலினால் சிங்களவர்கள் கோபப்பட்டு தமிழர்கள் மீது இனரீதியான வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், உங்களைக் கோபப்படுத்தி இனச்சுத்திகரிப்பொன்றை தமிழர் மீது நிகத்தவே புலிகள் முயல்கிறார்கள். ஆகவே நீங்கள் அமைதியாக இருக்கவேண்டும்" என்றும் கூறியிருந்தார். ஆகவே, அரசின் கூற்றுப்படி, புலிகளின் தாக்குதல்களுக்காக தமிழர் மீது பதில்த் தாக்குதல்களை சிங்களவர்கள் நடத்தத் தேவையில்லை, ஆனால் புலிகளை முற்றாக அழிக்கும் அரசின் முயற்சிகளுக்கு சிங்களச் சமூகம் முழுமையான ஆதரவினை நல்கினாலே போதுமானது என்பதுதான் அன்று சிங்களவர்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி.
 18. கொலைகாரப் புலிகளா அல்லது துணைராணுவக் குழுக்களை இயக்கும் அரசா? கெப்பிட்டிக்கொல்லாவைப் பகுதியில் 2006 ஆம் ஆண்டு ஆனி மாதம் சிவிலியன்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னாலிருக்கும் உண்மையான சூத்திரதாரிகள் யாராக இருக்கலாம் என்பதுபற்றி ஆய்வாளர் நிமால், இலங்கைத் தமிழ்ச் சங்கம் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினைத் தன்னிச்சையாக முறித்துக்கொண்டு, தமிழ்ப் பகுதிகள் மீது வானிலிருந்து கடுமையான குண்டுவீச்சினை ஆரம்பித்திருக்கும் அரசு, தனது தாக்குதல்களை ஒரு யுத்த நிறுத்த மீறலாகவோ அல்லது வலிந்து போரிற்குள் புலிகளை இழுத்துவிடும் கைங்கரியமாகவோ பார்க்காமல், கெப்பிட்டிக்கொல்லாவைப் பகுதியில் சிவிலியன் பேரூந்து மீது இனம் தெரியாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று நிறுவியவாறு, இத்தாக்குதலுக்கான வெறும் பழிவாங்கும் தாக்குதலே தனது வான்வழிக் குண்டுவிச்சு என்று கூறத் தொடங்கியிருக்கிறது. சமாதானத்திற்கு தாம் எப்போதும் முன்னுரிமை கொடுத்துவருவதாகக் கூறிக்கொள்ளும் அதேநேரம், பேரூந்து மீதான தாக்குதலினை காரணமாக வைத்து, தமிழர் மீது பழிவாங்கும் தாக்குதலாக வான்குண்டுவீச்சினை மேற்கொண்டுவரும் அரசு, உண்மையிலேயே செய்துவருவது யாதெனில் தன்னிச்சையாக யுத்தத்தினை ஆரம்பித்திருப்பதுதான். கெப்பிட்டிக்கொல்லாவைப் பேரூந்து மீது இலக்குவைத்து வேண்டுமென்றே நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பெருமளவு சிறுவர்கள் உட்பட குறைந்தது 60 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். எதிர்பார்க்கப்பட்டதுபோலவே இத்தாக்குதல் கடுமையான சர்வதேச கண்டனங்களை எதிர்கொண்டதுடன், மிகவும் ஈவு இரக்கமற்ற மிருகத்தனாமன தாக்குதல் என்றும் விமர்சிக்கப்பட்டது. பல நாடுகள் இத்தாக்குதலினைக் கண்டித்ததுடன், இதுதொடர்பான அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொண்ட போதும், அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகள் இன்னொரு படி மேலே சென்று உடனடியாகவே இத்தாக்குதல்களுக்கான பொறுப்பினை தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தின. அதுமட்டுமல்லாமல் பல இணையவழி பத்திரிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள் ஒன்றில் இத்தாக்குதலுக்குப் பின்னால் இருப்பது புலிகள் என்றோ அல்லது, அல்லது அவர்களே பிரதான சந்தேகநபர்களாக இருக்கவேண்டும் என்றோ கட்டியம் கூறியிருந்தன. இத்தாக்குதல் தொடர்பான அரசின் நிலைப்பாடு அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே அரசும், அதன் ஆதரவாளர்களும் தாக்குதல் பற்றிய செய்திகள் வந்தவுடனேயே இதற்குப் புலிகள்தான் பொறுப்பு என்று உடனடியாகவே கூறத் தொடங்கிவிட்டன. தேசிய சமாதானப் பேரவையின் பிரதான திட்டமிடல் அதிகாரியான ஜெகான் பெரேரா இதுபற்றிக் கூறுகையில் "இத்தாக்குதல் மூலம் புலிகள் கூறும் செய்தி என்னவென்றால், தாம் ஒருபோதுமே தமது வன்முறைகளை நிறுத்தப்போவதில்லை என்பதைத்தான். தமது நிபந்தனைகள் ஏற்கப்படாதவிடத்து தாம் அப்பாவிப் பொதுமக்களைக் கூடக் கொல்லத் தயங்கப்போவதில்லை என்பதைத்தான் இதன்மூலம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சிலவேளை அரசாங்கத்தினை வலிந்து போர் ஒன்றிற்குள் இழுக்கவே அவர்கள் இத்தாக்குதல் மூலம் முயன்றிருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார். அவ்வாறே இத்தாக்குதல் பற்றி மிகவும் ஆக்ரோஷமாக, எதிர்பார்த்தபடியே வெளியே வந்து பேசிய இலங்கை ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பின்வருமாறு முழங்குகிறார், "இந்தக் கொடூரமான தாக்குதல் நடந்த இடத்திற்கு நான் சென்று பார்வையிட்டேன். என்னைப் பொறுத்தவரை புலிகள் அமைப்பு அண்மைக்காலங்களில் மேற்கொண்ட மிகக்கொடூரமான படுகொலைகளில் இது மிகவும் கொடூமையானது". "கெப்பிட்டிக்கொல்லாவை, கனுகஹ மற்றும் இப்பகுதிகளைச் சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயணித்த இப்பேரூந்து மீது புலிகள் கிளேமோர் தாக்குதலினை நடத்தியதாக நான் கேள்விப்பட்டபோது மிகுந்த வேதனையடைந்தேன்". "தமது குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், உயர்கல்விப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும், புலிகளின் முன்னைய தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட ஊர்காவல்ப் படைவீரர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்துகொள்ளச் சென்றவர்களும் புலிகளினால் இலக்குவைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இக்கொடுமையான தாக்குதலினை நானும், இந்நாட்டு மக்களும், சர்வதேசமும் மிகவும் கடுமையாகக் கண்டனம் செய்கிறோம்". "தனது சொந்த மக்களுக்கான விடுதலையினை நோக்கிப் போராடுவதாகக் கூறிவரும் புலிகளின் கடந்த 20 வருடகால சரித்திரத்தினைப் பார்க்கும்போது, கண்மூடித்தனமான படுகொலைகளையும், வன்முறைகளையும் மட்டுமே அது கொண்டிருப்பதையும், அதன்மூலம் லட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதையும், இன்னும் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதையும் தவிர வேறு எதனையுமே அவர்களின் போராட்டம் கொண்டுவரவில்லை என்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்". "மக்களின் விடுதலைக்காகப் போராடுபவர்கள் இவ்வாறான வன்முறைகளில் ஒருபோதுமே ஈடுபடப்போவதில்லை". "இந்நாட்டில் வாழும் அனைவரும் கெளரவத்துடனும், தன்மானத்துடனும் வாழும் வகையில் நிரந்தரமான அமைதியினை சமூக - பொருளாதார - ஜனநாயக வழியில் கொண்டுவரப்படும் நடைமுறையின்மூலம் ஒரு நிரந்தரமான சமாதானத் தீர்வொன்றினைக் கொண்டுவர நாம் முழுமனதுடன் முயற்சியெடுத்து வருகிறோம்". "புலிகள் எவ்வளவுதான் காட்டுமிராண்டித்தனமான , மிலேச்சத்தனமான படுகொலைகளில் ஈடுபட்டாலும் கூட, நாம் எமது சமாதானத்தை அடையும் முயற்சிகளிலிருந்து ஒருபோதுமே விலகிடப்போவதில்லை. மக்கள் அனைவரும் சமாதானமாக, அச்சமின்றியும், ஒருவரில் ஒருவர் நம்பிக்கை கொண்டு வாழும் நிலையினையும் உருவாக்குவோம்". என்று கூறுகிறார் ஆகவே, மகிந்தவைப் பொறுத்தவரை விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் புலிகளே நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் காரனமானவர்கள் என்பதுடன், சமாதானத்துக்கான மகான் ஆன தானும், தனது அரசாங்கமும் தொடர்ந்தும் சமாதானத்திற்காகப் பாடுபடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார். உண்மைதான். சமாதானத்திற்கான மகானோ அல்லது அவரது அரசோ நிச்சயமாக அப்பாவிகள் மீது வானிலிருந்து குண்டுகளைப் பொழிவது எங்கணம்? அல்லது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகுவது எங்கணம்? சமாதானத்திற்கான மகானான மகிந்த புலிகளை வரலாற்று ரீதியான வன்முறையாளர்கள் என்று கூறினாலும், அவர் அரியணை ஏறியதன் பின்னரே வடக்கிலும் கிழக்கில் வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றது என்பதையோ அல்லது அப்பாவிகள் வேண்டுமென்றே இலக்குவைத்துக் கொல்லப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதோ சாத்தியமானதா?
 19. சின்னக் கொள்ளைக்காரான் பெரிய கொள்ளைக்காரர்களுக்குப் பாடம் எடுக்கப்போகிறான் என்று சொல்லுங்கள்
 20. அதுமட்டுமல்லாமல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சிங்கள பெளத்தர்களின் தமிழர் மீதான் இறுதி வெற்றியாகவும், மகிந்த என்னும் ஒப்பற்ற சிங்கள மன்னனின் தலைமையில் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்றும் பிரச்சாரப்படுத்தப்படும்.
 21. இலங்கையில் ஹிந்தி திணிக்கப்படவில்லை தனி. சிலர் இந்தியப் படங்களைப்பார்த்து தமது விருப்பப்படி கற்றுக்கொள்கிறார்கள் அப்பன். ஆனால், தமிழ்ப் பிரதேசத்தில் “ஏன் நீ இன்னும் சிங்களம் தெரியாமல் இருக்கிறாய்?” சிங்கள அதிகாரியொருவர் கேட்பது விருப்பத்தின்பேரில் இல்லையென்பதும், அது ஒரு ஏளனத்துடன் கூடிய கட்டாயப்படுத்தல் தான் என்பது உங்களுக்குப் புதியாதது அல்லவே?
 22. நிச்சயமாக. காலம் தானாக எம்மிடம் ஒரு வழியைத் தரும். அதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.