-
Content Count
977 -
Joined
-
Last visited
-
Days Won
8
Kavallur Kanmani last won the day on May 16 2018
Kavallur Kanmani had the most liked content!
Community Reputation
715 பிரகாசம்About Kavallur Kanmani
-
Rank
உறுப்பினர்
Recent Profile Visitors
5,185 profile views
-
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து
Kavallur Kanmani replied to nunavilan's topic in வாழிய வாழியவே
உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். -
யாழ்கள உறவுகள் அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்கள்.
-
குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால் குழப்பம் கலக்கம் ஏதுமில்லை ஆனால் நாம் வளர்ந்ததோடு ஆசைகளையுமல்லவா வளர்த்துக்கொண்டோம் அதுதான் பிரச்சனைகளுக்கே காரணம். நல்லதொரு கவிதை பாராட்டுக்கள் பசுவூர்க் கோபி.
-
வாழும் மண்ணின் குளிரையும் வாழ்ந்த மண்ணின் நினைவையும் குழைத்து அருமையான குளிர்க் கவிதை. பாராட்டுக்கள் நிழலி.
-
நாம் நம் பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடிய ஒரே அழியாச் சொத்து கல்வி மட்டுமே. அதிலும் பெண்கல்வி மிகவும் முக்கியம். இக்கதையில் தம் மகளையே கிணற்றில் தள்ளி கொல்லத் துணிந்த பெற்றவர்களின் சாதிய வெறி மிகவும் கேவலமானது. நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் அபராஜிதன்.
-
சுமே நீங்கள் பயந்தது போல் இல்லாமல் பூரண சுகமடைந்து யாழிற்கு வந்து உங்கள் அனுபவங்களைப் பதிர்ந்து உள்ளீர்களென நம்புகின்றேன். நலம் வாழ வாழ்த்துக்கள். இறைவனுக்கு நன்றி
-
நான் சிறுமியாக இருந்த காலத்தில் எனது அப்பாச்சியால் (அப்பாவின் சிறியதாயார்) பண்டிகை நாட்களில் இந்த பலகாரம் செய்து தருவார்கள் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் வெளிப்பக்க மா கோதுமை மாவில் செய்ததாக ஞாபகம் இல்லை. அதை அரிசி மாவில்தான் செய்தார்களென்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. மிகவும் சுவையாக இருக்கும். நீண்ட நாட்களின் பின் நினைவுபடுத்தி இருக்கிறீர்கள். விரைவில் செய்து பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றிகள்
-
அனுபவங்களை எழுத்தில் வடிக்கும்போது வார்த்தைகள் அழகாக கோர்வையாக நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டுவனவாக கதை அமைந்து விடும். நல்லதொரு ஆக்கம் பாராட்டுக்கள்
-
நில்மினி உங்கள் வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் இங்கு யாழ் உறவுகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சளைக்காமல் பதில் கொடுப்பதோடு அனைவரின் மனஅழுத்தத்திற்கு மருந்தாகவும் செயற்படுகிறீர்கள். உங்கள் அன்பிற்கும் ஆதரவான வார்த்தைகளுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்
-
வலி மிகுந்த வரிகளை சுமந்து நிற்கும் கனதியான கவிதை. உங்கள் அனுபவங்களையும் தொடருங்கள் திரு. மாவீரச் செல்வங்களின் தியாகங்கள் மறக்கக் கூடியவையா?
- 13 replies
-
- தமிழீழம்
- ஈழப் படைப்புகள்
-
(and 1 more)
Tagged with:
-
மிகச் சிறப்பான கதை. இதை யாவும் கற்பனை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் எனது குடும்பத்திலும் எனது தந்தை ஆசிரியர். நானும் ஒரு சில வருடங்கள் ஆசிரியையாகக் கடமையாற்றினேன். அன்றைய நாட்களில் விஞ்ஞானம் படிப்பது ஏதோ கெளரவம் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் கலை வகுப்பில் படித்து பெரிய பதவிகளில் வந்தோர் ஏராளம். விஞ்ஞானம் படிக்கப்போய் பல்கலைக்கழகம் போக முடியாமல் கல்வியை தொடர முடியாமல் அவதிப்பட்ட பலரை கண்டிருக்கிறோம். ஆசிரியர் நன்றாக அமைந்து விட்டால் மாணவரது வாழ்க்கையே சரியான பாதையில் அமைந்து விடும். நான் அடிக்கடி எனது ஆசிரியர்களை நினைத்து மகிழ்வேன் . நல்லதொரு கதை . நன்றாக எழுதியுள்ளீர
-
அருமையான கதை. சிறந்த எழுத்து நடை. போராட்ட கால எதிர்பார்ப்புகள் ஏக்கங்கள் மனித மனங்களின் சலனங்கள் தியாகங்கள் அனைத்தையும் சிறப்பாக எடுத்து சொல்கிறது கதை. தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். பாராட்டுக்கள்