Jump to content

Kavallur Kanmani

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  1046
 • Joined

 • Last visited

 • Days Won

  8

Posts posted by Kavallur Kanmani

 1. நேற்றைய தினம் இத் துயரச் செய்தியை அறிந்ததிலிருந்து மனம் மிகவும் வேதனையாக உள்ளது. என்ன சொல்லி குடும்ப உறப்பினர்களைத் தேற்றுவது  வாழ்நாள் முழுவதும் வலியுடன் வாழ்வதே விதியாகிப் போனபின் இறைவன்தான் அவர்களுக்கு ஆறுதலைக் கொடுக்க வேண்டும். இன்றைய நாட்களில் வாலிபப் பிள்ளைகள் (எனது பிள்ளைகள் உட்பட) வாகனம் ஓட்டும் பொழுது கவனச் சிதறலுடன்தான் ஓட்டுகிறார்கள். நான் வாகனத்துள் இருந்தால் பலமுறை எச்சரித்தபடிதான் இருப்பேன். இளம் கன்று பயமறியாது. இந்த விபத்தில் பாரவூர்தி ஓட்டினரின் பிழைதான். என்றாலும் பிள்ளைகள் ஒருகணம் இருபுறமும் கவனித்து எடுத்திருந்தால் என்று என் மனம் ஏக்கத்துடன் நினைக்கிறது. இனி என்ன சொல்லி என்ன? அந்த இளம் குருத்துக்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

  • Like 1
 2. ஒரே மூச்சில் படித்து முடித்தேன். மீண்டும் பள்ளிக்குப் போன உணர்வு. மிகவும் அழகான எழுத்து நடை. அனுபவப் பதிவை மிகவும் அழகாக விவரித்து எழுதிய விதம் ரசித்து வாசிக்கக்கூடியதாய் உள்ளது. ஆசிரியர்கள் எமது வாழ்க்கையில் எம்மால் மறக்க முடியாதவர்கள். அதிலும் சில ஆசிரியர்கள் எம் மனதில் நிலையான இடத்தினை பிடித்திருப்பார்கள். இப்பதிவை வாசிக்கும்போது இளமைக்கால நினைவுகள் மனதில் நிழலாடியது. நீண்ட நாட்களின்பின் நல்லதொரு ஆக்கத்தினை படிக்கக் கிடைத்தது.தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்

  • Thanks 1
 3. விசுகுவிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்கள். ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்

 4. இதுவும் கடந்து போகும்…..

   

  நீல வானம் நிர்மலமான இரவு ஒளி சிந்தும் நிலவு

  மின்மினியாய் நட்சத்திரங்கள் ஓயாத அலையோசை

  தேவன் ஆலய மணியோசை இத்தனையும் சிந்தையில் இனித்திருக்க

  எம் சொந்தங்கள் மட்டும் தொட்டுவிட முடியாத துரரத்தில்…

  எங்கோ தொலைவில் உங்கள் ஆன்ம கீதங்கள் எம் காதுகளில் ரீங்காரமிட்டபடி

  பிரிவு என்பது தீராத வலி வலியுடன் வாழ்வதே எமது விதி

  வீட்டின் மூலை முடுக்கெல்லாம் உங்கள் வாசமும்

  கதவிடுக்குகளைக் கடந்து உங்கள் சுவாசமும் எம் மூச்சை முட்டுகிறது

  உங்கள் கலகலக்கும் சிரிப்பும் அன்பான உபசரிப்பும்

  எம் நினைவுகளில் உரசி நித்தமும் மனம் உருகுகிறது

  நீங்கள் எம்முடன் இல்லை என்பது பொய்

  என்றும் எம்முடன் இணைந்தே வாழ்கிறீர்கள் என்பது மெய்

  இன்று நிஜம் நிழலாகிப் போனது

  நிரப்ப முடியாத இடைவெளியுடன் இமைகளில் ஈரமுடன் நெஞ்சினில் பாரமுடன்

  இனிவரும் காலங்கள் இதுவும் கடந்திடும் என்றொரு

  முத்தான தத்துவத்தின் நினைப்புடன்

  என்றென்றும் பொய்யான புன்னகையின் முகத்துடன்

  ஓற்றுமையின் பலத்துடன் பாசத்தின் பரிவுடன்

  வாழும் காலம் வரை வாழ்த்திட்டால் அது போதும்

  காலம் வரும் போது கையசைத்து விடைபெறுவோம்

  • Like 1
  • Sad 6
 5. மேதகு என்ற பெயரே அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. நாட்டுப்புறக் கலைகளுக்கு முன்னுரிமை  கொடுத்து படம் முழுவதும் வரலாற்றை காட்சிப்படுத்திய விதம் அருமை. நடிகர்கள் மிக அருமையாக பாத்திரப் படைப்புக்கேற்ற விதத்தில் தெரிவுசெய்யப்பட்டிருப்பது மிகச் சிறப்பு. பாடல் காட்சிகள் மிக அருமையாக காட்சிப்படுத்தி உள்ளனர். படக் குழுவினருக்கு பாராட்டுக்கள். நாம் கொடுக்கும் ஒரு சிறுதுளி பெரு வெள்ளமாக தொடர்ந்தும் வரலாற்றை ஆவணமாக்க உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் செயற்படுவோம். தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடலும் காட்சிகளும் மனதை விட்டு அகலவில்லை. 

  • Like 2
 6. உங்கள் சமையல் குறிப்பு பார்த்து மீன்பணிஸ் செய்தேன். மிகவும் சுவையாகவும் அழகாகவும் நன்றாக வந்தது. செய்முறையை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் நிகெ. 

 7. 4 hours ago, suvy said:

  மிகவும் சிறப்பான மண்மணம் வீசும் கவிதை......நான் nrtb யில் வேலை செய்த காலத்தில் காரைநகர் ஜெற்றியில்தான் டிப்போ இருந்தது.அப்போது புது டிப்போ கட்டப்படவில்லை. சிலதடவை அந்த கடற்கோட்டைக்கு சென்றிருக்கின்றேன். அந்நாட்கள் மறக்க முடியாதவை.கரம்பொன்னிலும் நிறைய உறவினர்கள் உள்ளார்கள். பாராட்டுக்கள் சகோதரி.......!   👍

  நன்றிகள் சுவி. முன்பெல்லாம் பல தடவைகள் சென்று பார்க்கக்கூடியதாக கடல் கோட்டை இருந்தது. பின்பு கடற்படையின் கட்டுக்காவல்களை மீறி நாம் எமது கடற்கரைக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள்

 8. ஆகா அற்புதமான கவிதை. நீண்ட நாட்களின்பின்  இன்றைய காலநிலையை அனுபவித்து வெளியே சென்ற நடைப்பயிற்சி செய்து வந்தேன். இந்த இளவேனிலுடன் எம் இன்னல்கள் மறைந்து இலைதுளிர்காலம்போல் எம் வாழ்வும் துளிர்க்க உங்கள் கவிதை இளவேனிலை வரவேறகிறது. நிழலியின் கவிதை அருமை.

 9. 10 hours ago, சுப.சோமசுந்தரம் said:

  நேரத்துக்கேற்ற கதை நேர்த்தியாய் சொல்லப்பட்டுள்ளது. குற்றத்தின் அளவைக் காட்டிலும் தண்டனை மிகுதியாய்ப் போனது இரக்க உணர்வு மேலிடச் செய்கிறது. சில நேரங்களில் யாருக்கும் இத்தகைய சூழல் ஏற்படுவதுண்டு.

  சில சமயங்களில் சட்டத்திற்கு அமைந்து நடக்காவிட்டால் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டு விடுகிறது. அதிலும் இந்த காலக்கட்டத்தில் சமூகஅக்கறையுடன் நாம் செயற்படுவது அவசியம். படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் சு.ப. சோமசுந்தரம்

 10. 22 hours ago, உடையார் said:

  நல்ல கவிதையக்கா, ஊர் நினைவுகளை மீட்டிவிட்டது, ஊர் நினைவுகள் தினம் வந்து போகும், இறக்கும் வரை பசுமையாக இருக்கும்

  கருத்துக்கு நன்றிகள் உடையார். பசுமைநிறைந்த நினைவுகளை மீட்டியாவது மனத்திருப்தியடைவோம்.நனறிகள்

  19 hours ago, putthan said:

  அருமையான கவிதை ....50 வருடங்களுக்கு முதல் போன பொழுது இருந்த  நயினாதீவுக்கும் இரண்டு வருடங்களுக்கு முதல் போன நயினாதீவுக்கும் ....பல மாற்றங்கள்   ...எல்லோரும் கூறுவது போன்று பலவிடயங்களை இழந்து கொண்டு வருகிறோம்.... 

   

  நாம் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை. அந்த அமைதியான அழகான இயற்கையுடன் கூடிய இயல்பான வாழ்வை மட்டுமல்ல நாம் அனுபவித்த அத்தனை இன்பங்களையும் இழந்தவர்களாய் ....கருத்துக்கு நன்றிகள் புத்தன்.

  நாம் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை. அந்த அமைதியான அழகான இயற்கையுடன் கூடிய இயல்பான வாழ்வை மட்டுமல்ல நாம் அனுபவித்த அத்தனை இன்பங்களையும் இழந்தவர்களாய் ....கருத்துக்கு நன்றிகள் புத்தன்.

 11. அன்னையாக அரவணைத்து
  மனைவியாக  உடன் பயணித்து
  சகோதரியாக அன்பு செய்து
  மகளாக மடி தவழ்ந்து 
  தோழியாக தோள் கொடுத்து
  வாழும் பெண்மையை போற்றுவோம்
  பகிர்வுக்கு நன்றிகள் நிலாமதி

  • Like 2
 12. இந்த கைத்தொலைபேசி இல்லாத காலத்திலும் நாம் வாழ்ந்தோம் என்று நினைக்க எனக்கே வியப்பாயுள்ளது. எப்படி ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டோம்? எப்படி பயணங்களை மேற்கொண்டோம்? எப்படி காரில் றைவிங் செய்தோம்? என்ன விடயத்தை எடுத்தாலும் எம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த தொல்லைபேசி எம்முடன் ஒன்றித்து விட்டது. ஆனாலும் அன்று ஊரில் கிணற்றடி குழாயடி இவற்றில் பரப்பப்படும் செய்கிகளை மறக்காமல் கவி வடித்த பசுவூர் கோபியின் கவிதை அருமை. 
  நோயும் இதுதான் நோய்க்கு மருந்தும் இதுதான் என்பதுபோல் ஆகிவிட்டது இத்தொலைபேசி.

  • Like 1
 13. விரிவான விளக்கத்திற்கு நன்றிகள் . இங்கும் கொரோனா காலமென்றபடியால் வைத்தியரிடம் செல்ல முடியாத நிலையில்தான் உள்ளோம். ஏதாவது பிரச்சினை என்றால் போனில்தான் கதைக்கிறார்கள். பாவிக்கும் மருந்துகளையும் பாமசியில் போய் எடுக்கும்படி போனில் அழைத்து சொல்கிறார்கள். நாம் இந்த நேரத்தில் எமது உணவுகளின் மூலம்தான் எமது நோய் எதிர்ப்புசக்தியை கூட்ட வேண்டி உள்ளது. முருங்கை இலை விற்றமின் டீ   காய்கறிகள் நட்ஸ் உடல்பயிற்சி முதலியன எம் உடலுக்கு நன்மை பயக்கும் என நினைக்கிறேன். 
  இது தவிர எமது குடும்ப வரலாறுகளும் எமது உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக இரத்த அழுத்தம் மாரடைப்பு புற்றுநோய் முதலியவை சிலருக்கு பரம்பரையாக வர வாய்ப்பு உள்ளதாக அறிகிறோம்.
  உங்கள் பகிர்வுக்கு நன்றிகள். அம்மா இறையடியில் அமைதியில் இளைப்பாறட்டும்.

 14. 10 hours ago, Sasi_varnam said:

  தக  தகிட... தக  தகிட...

  இதே  தாள நடையோடு உங்கள் கவிதையை வாசித்து பூரித்துப் போனேன் அக்கா. :)

  அழகுமலர் ஆட அபிநயங்கள் சூட இந்த பாடலின் தாளம், காலப் பிரமாணம் உங்கள் கவி வரிகளோடு ஒத்து வருகிறதே..👌

  தமிழ் வார்த்தைகள் மிகவும் அருமை...
  தொடர்ந்தும் எழுதுங்கள்.

  இசை அமைப்பாளர் சசி வரிணன் என் கவிதையை ரசித்த விதம் கண்டு பூரித்துப் போனேன். உங்கள் அனைவரது ஊக்கமும் உற்சாகமும்தான் என்னை எழுத வைக்கிறது நன்றிகள் சசி.

  4 minutes ago, Kavallur Kanmani said:
  5 hours ago, Paanch said:

  தினமும் காலையில் எழும்போது என் வீட்டிலேயே நான் காணும் இனிதான காட்சிகள்... கடல்கடந்து வந்ததால் நினைவில்மட்டும் உறங்கிய நிலையில், என்னை உலுக்கி எழுப்பி எனது ஊருக்கே கொண்டுசென்று மீண்டும் அதனைக் காணவைத்தது உங்கள் காவலூர்க் கனவுக் கவிதை. தொடர்ந்தும் நாங்கள் கவலை மறந்து மகிழ உங்கள் அழகிய கனவுகள் தொடரட்டும். 🙌     

   

  இத்தனை ஆண்டுகள் எங்கெங்கோ வாழ்ந்தாலும் இரவில் கனவில் வருவது எம் ஊரும் அதன் நினைவுகளும்தானே. அந்த இயற்கை அழகும் எம் இளமை நினைவும் என்றும் தொடரும். கருத்துக்கு நன்றிகள் பாஞ்ச்.

 15. On 5/3/2021 at 15:29, தமிழ் சிறி said:

  கண்ணைக் கவரும், அழகிய படமும்..
  அருமையான கவிதையும்....
  ரசித்தேன்... கண்மணி அக்கா.

  உங்கள் பதிவுக்கு கருத்தெழுத தவறி விட்டேன். மன்னிக்கவும். எங்கள் ஊருக்கே அழகு தருவது ஒல்லாந்தர் கட்டிய கடல்கோட்டை. சரித்திர சின்னங்களில் ஒன்றான இக் கடற்கோட்டை  பல ஆண்டுகள் இராணுவத்தளமாக மாறியது. இப்பொழுது உல்லாச விடுதியாக மாற்றியுள்ளனர். நன்றிகள் தமிழ்சிறி.

 16. On 6/3/2021 at 06:31, வாதவூரான் said:

  சொந்த ஊர் வாசம் என்பது இறக்கும் வரை மறக்காது

  எத்தனை வசதிவாய்ப்புக்களுடன் வாழ்ந்தாலும் நாம் பிறந்து வளர்ந்த அந்த மண்வாசனை எம்மை விட்டு அகலாது. படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் வாதவூரான்.
  கவிதையை படித்து பச்சைப் புள்ளிகள் இட்ட மல்லிகை வாசம் கிருபன் மோகன் புலவர் அனைவருக்கும் நன்றிகள்

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.