• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Thumpalayan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,470
 • Joined

 • Last visited

 • Days Won

  25

Thumpalayan last won the day on January 12

Thumpalayan had the most liked content!

Community Reputation

728 பிரகாசம்

About Thumpalayan

 • Rank
  Advanced Member

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Location
  Australia

Recent Profile Visitors

2,780 profile views
 1. அறிவுக் கொழுந்துகளே, பத்து வரிய நியூஸ் சார். வாசிக்க பஞ்சியோ, இங்கிலீஸ் மட்டு மட்டோ பாராளுமன்றத்திலே இதை கடாசி குப்பைக்குள் போட்டு கனகாலம்.
 2. தேர்தலுக்கு போயிருந்தா, லண்டனில இருந்து வந்த மயூரனையும் கண்டிருப்பியள். நடக்கக் கூடிய விசயமா கதையுங்கோ. தலைவர் பிரபாகரனால முடியாதது வேறு எவராலும் முடியும் என நினைக்கவில்லை. த‌மிழீழ‌த்தில் குண்டு ச‌த்த‌ம் மீண்டும் கேக்காம‌ த‌மிழீழ‌ம் பிற‌க்க‌ போர‌து இல்லை / உத ஊரில மட்டும் போய் சொல்லிப் போடாதேயுங்கோ.
 3. இதே விக்கி ஐயா தான் மகிந்தருக்கு முன்னாள் சத்தியப்பிரமாணம் செய்த போது இதே யாழிலே கழுவிக் கழுவி ஊத்தினார்களே!!! மருமக்கள் இருவரும் சிங்களவர்களாக இருப்பதாலும் வாசுதேவ இவரின் சம்பந்தி என்பதாலும் விக்கி ஐயா ஒரு நிகழ்ச்சி நிரலுடனேயே முதலமைச்சராகிறார் என்று கூறியவர்கள் பலர். உண்ணான குறை நினைக்கப்படாது, மாகாண சபையால் நடந்த ஏதாவது ஒரு விடயத்தை யாராவது கூற முடியுமா? மூன்று வருடங்களில் என்ன செய்திருக்கிறார்கள்?
 4. சோழியன் அண்ணாவின் மறைவை மறுக்கிறது மனது. பழக இனிமையானவர். எனது யாழ் பயணத் திரியின் பின்னர் எப்படியோ எனது முகப் புத்தகத்தை மோப்பம் பிடித்து நண்பராக இணைத்திருந்தார். எனது முகப்புத்தகம் கடும் கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் அந்த நட்பு அழைப்பை அப்படியே விட்டுவிட்டேன். அண்ணா, உங்கள் ஆன்மா சாந்தி அடைவதாக, அத்துடன் அவரின் மனைவி, பிள்ளைகள் நண்பர்களின் துயரில் நானும் பங்கு கொள்ளுகிறேன்.
 5. வணக்கம் உடையார் அண்ணை, எனக்கும் இப்படியானதொரு சம்பவம் 2010 இலே நடந்தது. கண்டி கீல்சிலே நிற்கும் போது ஒருத்தன் வந்து தள்ளினார். "தமுசெட்ட மொனவாத ஒனெய்" என்று எல்லாருக்கும் கேக்கக் கூடியமாதிரிக் கேட்டேன். "சமாவேண்ட ஓனே மாத்தயா" என்றுவிட்டு நழுவி விட்டார். இலங்கையில் சில இடங்களில் நானும் ரவுடிதான் எண்டுற மாதிரி நடந்து கொள்ள வேண்டும். அவுஸில் இருக்கும் பவ்வியம் விட்டுக்கொடுக்கும் தன்மையை உடனடியாக இலங்கையில் எதிர்பார்க்க முடியாது தானே. புலம் பெயர்ந்த பின் நான்கு தடவை போய் வந்துவிட்டேன், ஒவ்வொரு முறையும் சிறிது முன்னேற்றத்தைக் காண முடிகிறது. இலங்கையில் கார் ஓடும்போதும் அதே மாதிரித்தான். கவனமாக இருக்க வேண்டும் அதேநேரம் aggressive ஆகவும் இருக்க வேண்டும். எனக்கு சரிவரும் போல இருக்கு ஆனால் அது எல்லாருக்கும் சரிவரும் என்று கூற முடியாது தானே. நீங்கள் குறிப்பிடும் சுதந்திரம் ஊரில் இல்லை என்றே சொல்லலாம் ஆனால் கொழும்பில் நிச்சயமாக உண்டு. நல்ல வேலை, வீடு, கார் என்று இருந்தால் நிச்சயமாக நீங்கள் நினைச்ச எதையும் செய்ய முடியும். கொஞ்சம் சிங்களம் தெரிஞ்சால் அது மேலதிக போனஸ். நிறைய female independent professional கள் இருக்கிறார்கள். ஒரு சிங்கள பெண்ணை தெரியும், ஒரு 45 வயசு. தொழில் ரீதியாக வக்கீல். யோகா, ஜீம், meditation எண்டு சீவிப்பவர். யோகா போன இடத்திலே ஒரு ஜேர்மனுடன் சிநேகம் பிடித்துவிட்டார். ஜேர்மன் வருசத்தில ஆறுமாசம் ஜெர்மனியில, லோயர் தனியாத்தான் இருக்கிறார், மிகவும் சுதந்திரமாக.
 6. எனது துறை கணனித் துறை அல்ல, கணக்கியல் துறை. Coding நானாக கற்க முயற்சித்துக்கொண்டிருக்கும் ஒன்று. அதற்கான காரணம் games development மீதிருக்கும் எனது ஈடுபாடு. ஒரு நாள் நேரம் கிடைக்கும்போது முறைப்படி கற்க விருப்பம் இருக்கிறது. சிறந்த Graphic Designers ற்கு இருக்கும் தட்டுப்பாட்டை விட இலங்கையில் Game Development இற்கான சூழ்நிலைகள் எப்படி இருக்கின்றன? எனது தொழில் சார்ந்து பார்த்தால் அதிகம் developers உடன் வேலை செய்ய வேண்டி வருகிறது. project life cycle போன்றவற்றிற்கும் developers உடன் இலகுவாகக் கதைக்கவும் மென்பொருள் துறைபற்றிய அறிவு இருந்தால் தேவலை என யோசித்தேன். அதனாலேயே சில methodologies பற்றி அறிந்து வைத்திருக்கிறேன். ஆனால் அதிக developing network security, cyber security, secure communications சார்ந்து இருக்கின்றது. நீங்கள் ex Virtusan என்பதால் தர்சன்/தனெஞ்செயன்/சூட்டி அண்ணா/சிறிகரன்/மீரா இதில யாரையாவது தெரிந்திருக்கும். Virtu Hotel Trans Asia (Now Cinnamon Lake Side) வில் இருந்தபோது ACBT இற்கு வரும்போது பார்த்திருக்கிறேன். முந்தி buffet lunch எல்லாம் குடுப்பார்கள். Calcey technologies பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? I mean inside information. இந்த நிறுவனத்தின் Co founder, ex Apple.
 7. சசி அண்ணா, 99x எனது நிறுவனமல்ல, அந்தளவுக்கு நான் பெரியவனும் அல்ல. எனக்கு வயது வெறும் 30 தான். மனோவை தனிப்படத் தெரியாது ஆனால் கொள்ளுபிட்டியில் இருக்கும் அவர்களது அலுவலகத்திற்கு நண்பர் ஒருவரை சந்திக்கப் போய் இருக்கிறேன். இலங்கையில் இருக்கும் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யும் பாக்கியம் கிடைதோர் பேறுபெற்றோர். அக்கினியும் coding தான், மேலதிக தகவல்கள் சொல்லுவார் என நினைக்கிறேன். தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறையில இலங்கையினுள்ளே காசுபார்க்கவே ஏராளமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. உதாரணமாக Paywave /Paypass (NFC) அவுசிலே அறிமுகப்படித்தி சில வருடங்களிலேயே நன்கு பிரபலமாகிவிட்டது. குறிப்பிட்ட தொகைக்கு குறைந்த தொகைக்கு contactless cash அதைவிட cardless cash உம் பிரபலமானது. இலங்கையில் தற்போது இந்த வசதிகள் இல்லை. இவற்றை அறிமுகப்படுத்தினால் அனைத்து credit card terminals களுக்கும் NFC வசதி வழங்க வேண்டும். இலங்கையிலே அநேகமான பெரிய கடைகளில் இப்போது credit card வசதி இருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் வங்கிகள் ஊடாக NFC upgrade செய்ய வெளிகிட்டால் எவ்வளவு காசு பார்க்கலாம். இதற்காக ஒரு proposal தயாரிக்கப்பட்டு இன்னமும் WIP. Cloud based solutions , App development என்று பல வாய்ப்புக்கள் இருக்கின்றன.
 8. நான் செய்யும் தொழில் யாழ் மாவட்டத்தில் நிச்சயமாக ஒருவரும் செய்யமாட்டார்கள். இலங்கயிலே இருப்பவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம்.அடையாளத்தை யாழில் மறைக்குமளவுக்கு தேவை இதுவரை இல்லை. பாட்டாவும் சாரமும் இப்பவும் பருத்தித் துறையில் அநேகரும் அணிவது தான். வை நோட் ? நிச்சயமாக. நீங்கள் தகவல் தொழில் நுட்பம்/மென்பொருள் துறை என்பது தெரியும். software development methodologies, Agile method போன்றவற்றிலே கொஞ்சம் projects செய்யுங்கள். முடிஞ்சால் சில பிரிடிஸ் கிளையண்ட்ஸ் பிடித்து விடுங்கள். நீங்கள் தான் எனது PM/PSO. 99X technologies என்ற ஒரு நிறுவனம் இருக்கிறது. மென்பொருள் துறையில் Vertusa , IFS, MIT இற்கு நிகராக வளர்ந்து வருகிறார்கள். Co-founder தமிழர் தான், மனோ சேகரம்.யாழ்ப்பாணத்திலும் கிளையை இரண்டு வருடங்களின் முன்னர் ஆரம்பித்து யாழ் பல்கலைக் கழகத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களைச் செய்கிறார்கள். யாழ் மாவட்டத்திற்கு SLT optical fiber இனைய இணைப்பு வழங்கியதன் பின்னர் மென்பொருள் துறை சார்ந்த நிறுவனங்கள் யாழ்ப்பாணத்திற்கு வர விரும்புகிறார்கள். சர்வதேச மென்பொருள் ஜாம்பவான் விப்ரோ யாழுக்கு வருவதாக கேள்விப்பட்டேன், உறுதியாகத் தெரியாது. அதைவிட Yarl IT HUB என்ற பெயரிலே பேராதனை, மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மென்பொருள் அபிவிருத்தி சம்பந்தமாக சில வேலைத்திட்டங்களை செய்கிறார்கள் (நியூசிலாந்தில் இருக்கும் யாழ் உறவு உதயனிட்கு இதுபற்றி தெரிந்திருக்கும்) இதைவிட இன்னொரு யாழ் உறுப்பினரான சர்மாவும் யாழ்ப்பாணத்திலே, அமெரிக்க மென்பொருள் சந்தைக்காக வெற்றிகரமாக ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்துவதோடு பலருக்கும் வேலை வாய்ப்பை கொடுத்திருந்தார். "Everything Looks impossible for the people who never try"
 9. இதுபற்றி பலதடவைகள் கருத்தாடி விட்டோம். முன்பு கூறியது போல இலங்கையில் சென்று வாழ்வது என்ற கொள்கையில் மாற்றம் இல்லை. அதைப் படிப்படியாக ஊரில் சென்று வாழ்வதாக மாற்றுவதே எனது நோக்கம். அதை அடிப்படையாக வைத்தே படிப்படியாக நகர்வுகளை மேற்கொண்டு வருகிறேன். http://workinsrilanka.lk/ இது ஒரு அருமையான இணையத்தளம். ஏற்றகனவே வெளிநாடுகளில் பலவருடங்கள் இருந்துவிட்டு இப்போது இலங்கையில் போய் இருப்பவர்கள் பற்றியது. இந்த தளத்திற்கு பங்களிப்பு செய்தவர்கள் பெரும்பான்மையாக சிங்களவர்கள். டொலரில் உழைப்பதற்கும் ரூபாயில் உழைப்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ஆனால் பணத்தினால் அளவிடப்பட முடியாத பல அனுபவங்கள் அந்த டொலர் - ரூபாய் வித்தியாசத்தை ஈடு செய்ய உதவும். சிறந்த திட்டமிடல், முகாமைத்துவம் இன்றி போவோர்கள் தான் போன வேகத்திலேயே திரும்ப வருகிறார்கள். அவர்கள் புலத்திற்கு வந்து எப்படி படிப்படியாக முன்னேறினார்களோ அதே போல இலங்கையிலும் படிப்படியாகத்தான் முன்னேற்றம் வரும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் வெட்டி வெளிநாட்டுப் பந்தா,அநியாய செலவுகள் அங்குள்ளவர்களை கடுபெற்றவே செய்கின்றன. இது ஒருவகை வர்க்க வித்தியாசத்தாலும் எரிச்சலாலுமே வருகின்றது. நான் 2013 போன போது பாட்டா செருப்பு, சாரம்/பழைய டெனிம் இலங்கை அடையாள அட்டை/சாரதிப் பத்திரத்துடன் தான் மோட்டார் சைக்கிளில் யாழ் குடா முழுவதும் சுற்றினேன். ரோமுக்குப் போனால் ரோமனாய் இரு என்பதே எனது கொள்கை. இலங்கையில் போய் கடை திறக்கும்/வியாபாரம் வைக்கும் எண்ணம் இல்லை. சில பெரிய நிறுவன நிர்வாகிகளின் தொடர்புகள் இருப்பதால் இலங்கையில் தற்போது பிரபலமாக இல்லாத ஆனால் அவசியமான சில பதவிகளில் அந்த நிர்வாகிகளுக்கு ஆர்வம் இருக்கின்றது. eg . Project Management. காலப்போக்கில் எனது சொந்த consulting நிறுவனத்தை ஆரம்பிப்பதே எனது நோக்கம். இந்தியாவுடனான ETCA ஒப்பந்தம் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு பல கதவுகளை திறந்து கொடுக்கும். இந்தியாவில் மேல்பொருள் துறை எப்படி அந்நியச் செலாவணியை அள்ளிக் கொடுத்ததோ அதேபோல இலங்கையிலும் இப்போது அன்னியச் செலாவணிக்கு பெரும் பங்களிக்கிறது. சிங்கப்பூரிலும் லண்டனிலும் இருந்து போன இரண்டு பொறியியலாளர்களை தெரியும். முன்னர் ஒருமாதம், பின்னர் ஆறுமாதம், தொடர்ந்து சூழ்நிலைகளைப் பொறுத்து.
 10. நல்ல விசயம் சந்தோசம். அந்தரத்தில போற சாமான், சென்னை விமான நிலையம் போல கழன்று விழாட்டிக்கு இன்னும் நல்லது, கையோட தமிழக அரசு சென்னை விமான நிலையத்தில உருப்படியான மலசல கூடங்களையும் அமைத்து பராமரிக்க வேண்டும். யார் யார் எத்தினை கோடியை சுட்டு சுவிஸ் பாங்கில போட்டாங்களோ .....
 11. புட்டுக் களி எண்டும் ஒரு அயிட்டம் ஊரில இருக்கு. அனேகமாக இதை சில்லுக் களி என்றுதான் கூப்பிடுவார்கள். புட்டு மாதிரி குரக்கன் மாவில் அவித்து, கொதிக்கும் தேங்காய்ப்பால் + சீனி கலவையில் போட்டு எடுப்பது.
 12. நானும் ஒரு புட்டுப் பிரியன் ஆனால் உடம்பு வைக்கும் என்பதால் இரவில் சாப்பிட கொஞ்சம் தயக்கம். மனிசி அந்த மாதிரி புட்டவிக்கும். கூடுதலாக ஸ்டீமர் தான் பாவிப்பது. அலுமினிய குழலும் இடைக்கிடை பாவிப்பாள். ஒருமுறை விருந்தினர்களுக்கு புட்டு நைட் வைத்தோம். புட்டு, கோழிக்கறி, டெவில்ட் சிக்கின், முட்டை ஒம்லட், உருளைக்கிழங்கு சொதி எண்டு அந்த மாதிரி இருந்திச்சு. புட்டுடன் பாலும் சீனியும் எனக்கு பிடிக்கும். அதிலும் ஊரிலே அரிசிமாப் புட்டுடன் பாலாடையுடன் சேர்ந்த பாலை கொஞ்சம் சீனி சேர்த்து சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். புட்டுடன் தேங்காய்ப் பாலும் சேர்த்து சாப்பிடலாம். நீங்கள் யாராவது தேங்காய்ப் பாலுடன் சாப்பிட்டிருக்கிறீர்களா?
 13. நல்ல கதை சாத்திரி அண்ணா. சொந்த அனுபவம் இல்லை ஆனால் சுவிசில் இருக்கும் எனது உயிர் நண்பனின் தமயனின் கதையின் சாயல் இருக்கிறது. அவர் அப்போது கலியாணம் கட்டவில்லை. 50,000 பிராங் கடைசி அடியில் பிளேன்/கெலி வாங்க கொடுத்திருந்தார். லண்டனில் இருக்கும் எனது மிக நெருங்கிய உறவினர் ஒருவரும் காசு சேர்க்கப் போனவர். தண்ட கையாலையும் கனக்க வாரி வாரி இறைத்தார். இப்போது வீடும் இல்லை, மனைவி முந்தியே விவாகரத்து, வேலையும் இல்லை, மனிசனுக்கு ஊருபட்ட வருத்தங்கள் வேற. ஆனால் அவர் 2002/2003 காலத்திலேயே சில முரண்பாடுகளால் விலத்தி விட்டார். இதற்கு முக்கிய காரணம் அவரது சொந்த வீட்டிலே ஒரு மாவீரர் குடும்பத்தை இருத்தியிருந்ததால் (இலவசமாக) வீட்டைப் பராமரிப்பதில் அவர்களுடன் ஏற்றப்பட்ட மனக் கசப்பு. ஓர் கட்டத்தில் அவருக்கு கொலை அச்சுறுத்தலும் விடப்பட்டது.