Thumpalayan

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    1,430
  • Joined

  • Last visited

  • Days Won

    23

Everything posted by Thumpalayan

  1. தேர்தலுக்கு போயிருந்தா, லண்டனில இருந்து வந்த மயூரனையும் கண்டிருப்பியள். நடக்கக் கூடிய விசயமா கதையுங்கோ. தலைவர் பிரபாகரனால முடியாதது வேறு எவராலும் முடியும் என நினைக்கவில்லை. த‌மிழீழ‌த்தில் குண்டு ச‌த்த‌ம் மீண்டும் கேக்காம‌ த‌மிழீழ‌ம் பிற‌க்க‌ போர‌து இல்லை / உத ஊரில மட்டும் போய் சொல்லிப் போடாதேயுங்கோ.
  2. தாயகத்தில் இருப்பவர்களே தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். அவர்களை கோழைகள் என்று கூறும் உரிமை யாருக்குமே இல்லை. மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் தேர்தல் காலத்தில் நடப்பவை விக்கி அய்யாவின் பேச்சு என்பவற்றை இன்னுமா சனம் நம்பிக்கொண்டிருக்குது?
  3. வணக்கம் சாந்தியக்கா, பலகாலமாக கருத்தெழுத நேரமில்லாமல் வந்து பாத்திட்டு போனாலும், உங்கள் திரியில் பதில் எழுதவேணும் என்று தோன்றியது. அதற்கு முக்கியமான காரணம் நீங்கள் விட்டதாக நான் கருதும் தவறுகளை வேறு யாருமே விட்டு விடக்கூடாது. 2007 முதல் பிரிந்து வாழ்வதாக கூறியிருந்தீர்கள் அத்துடன் உங்கள் முன்னாள் கணவர் குடும்ப வன்முறையில் ஈடுபடுபவராகவும் மதுவிற்கு அடிமையானவர் எனவும் கூறியிருந்தீர்கள். ஜெர்மனியின் குடும்ப சட்டம் பற்றி தெரியாது ஆனால் அவுஸ் போல இருக்கும் என நம்புகிறேன். அவுஸ் சட்டப்படி குடும்ப வன்முறையில் (Demestic Violence) ஈடுபட்டால் வலு இலகுவாக விவாகரத்து எடுக்க முடியும். அதுவும் சிறு பிள்ளைகள் இருக்கும் இடத்தில் இன்னமும் இலகு. பொருளாதார ரீதியிலும் உங்களுக்கே வீட்டின் பெரும்பகுதி வந்திருக்கும். இந்த சூழ்நிலையில் தவறு உங்கள் மீது தான் என வருத்தத்த்துடன் கூறிக்கொள்ளுவேன். வன்முறையில் ஈடுபடும், மதுவிற்கு அடிமையான, பல பெண் நண்பர்களை வைத்திருக்கும் ஒருவர் திருத்துவார் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம். அநியாயமாக உங்கள் வாழ்க்கையில் பத்து வருடங்களை இழந்து விட்டீர்கள். ஊருக்காகவோ, மற்றவர்களுக்காகவோ, உறவினர்களுக்காகவோ ஏன் பிள்ளைகளுக்காகவோ உங்கள் முடிவுகளை மாற்ற முடியாது. காவல் நிலையம் முன்னால் இருந்தும் எத்தனையோ வீர பெண்களை தெரிந்திருந்தும் உங்கள் காத்திருப்பிற்கான காரணம் பிள்ளைகள் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. ஒருவேளை இந்த முடிவை நீங்கள் பத்துவருடங்களுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தியிருந்தால் உங்களதும், உங்கள் பிள்ளைகளினதும் வாழ்க்கை வேறு திசையில் பயணித்திருக்கலாம். வீட்டினுள் ஒரு வாழ்க்கை, வெளியாலே இன்னொரு வாழ்க்கை வாழும் எம்மவர்கள் பலரின் நிலையை உங்களின் சம்பவம் படம் பிடித்துக்காட்டுகிறது இனிவரும் நாட்கள் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் மகிழ்வாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
  4. மாசம் இரண்டு முடியப்போகுது, மனிசன் எழுதி முடிச்சிருக்கும் எண்டு வந்து பார்த்தா போட்டது போட்டபடியே கிடக்குது. இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா
  5. இதே விக்கி ஐயா தான் மகிந்தருக்கு முன்னாள் சத்தியப்பிரமாணம் செய்த போது இதே யாழிலே கழுவிக் கழுவி ஊத்தினார்களே!!! மருமக்கள் இருவரும் சிங்களவர்களாக இருப்பதாலும் வாசுதேவ இவரின் சம்பந்தி என்பதாலும் விக்கி ஐயா ஒரு நிகழ்ச்சி நிரலுடனேயே முதலமைச்சராகிறார் என்று கூறியவர்கள் பலர். உண்ணான குறை நினைக்கப்படாது, மாகாண சபையால் நடந்த ஏதாவது ஒரு விடயத்தை யாராவது கூற முடியுமா? மூன்று வருடங்களில் என்ன செய்திருக்கிறார்கள்?
  6. நிதர்சனமான உண்மை. கணவன் மனைவி உறவுகூட மின்காந்த அலைகளிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் ஏன் காக்கி நிறத்தில் பாவாடை எனத்தலைப்பு வைத்தாரோ என யோசிக்கிறேன். அழகியின் சந்திப்பை காதல் தடுத்துவிட்டதாகக் கூறினாலும், அவரது மனது அழகியின் சந்திப்பைத் தவிர்த்ததை இறந்த பெண்ணின் திறக்கப்பட்ட உடலைப் பார்த்த பின்னர் சமரசம் செய்ய முயல்வதாகத் தோன்றுகிறது. அதாவது அழகியின் புறம் ஆரம்பத்தில் வர்ணிக்கப்பட்டது போலவே இறந்தவரின் அகம் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. "வெளியால எல்லாம் வித்தியாசம் எண்டாலும் உள்ளுக்கு எல்லாம் ஒன்றுதான்" - எழுத்தாளரின் மனவோசை இதுவாகத் இருந்திருக்கும். எனது 19ஆவது வயதில், எனது நண்பனின் தந்தையாரின் உடலை என்பார்ம் செய்ய அருகிலிருந்து உதவினேன். என்பார்ம் செய்தவருக்கு வெறி. நான் குடிக்கவில்லை. பலநாட்களுக்கு அந்த சம்பவம் என்னுள் உறைத்துக் கொண்டிருந்தது.
  7. http://www.theage.com.au/victoria/guard-jailed-for-kissing-asylum-seeker-at-detention-centre-20170528-gwerg9.html May 28 2017 Guard jailed for kissing asylum seeker at detention centre Jane Lee A former security guard is serving a one-month jail sentence for kissing an asylum seeker at a Melbourne immigration detention centre. Theivigan Panchalingham, 37, was previously a Serco guard at the Melbourne Immigration Transit Accommodation Centre in Broadmeadows. The guard was jailed for sexual assault for kissing an inmate at Melbourne's Immigration Transit Accommodation Centre Panchalingham, a refugee, is understood to have called the asylum seeker into his office at the detention centre between July and August, 2015. The woman complied and closed the door as she entered. He offered her some food and tapped his thigh, in what she believed to be a gesture to sit on his lap. She asked if she could leave the room. He helped her to open the door and kissed her on the cheek as she left. Magistrate Meaghan Keogh earlier this month found the man guilty of one count of sexual assault for the kiss. Ms Keogh said that while the assault was not the "most extreme", the woman was not free to leave detention or complain, making her "the most vulnerable type of victim". "Because those people rely on you to ensure their safety it does make this offending behaviour a breach of trust of the most serious type," she said. She also questioned Serco's failure to intervene after the guard sexually assaulted a fellow guard a year earlier, which she said could have prevented the more recent assault. The asylum seeker told the court in a victim impact statement that she became afraid of most of the guards after the assault. She stayed in her room most of the time, sleeping only two to three hours each night. "It has made me feel very unsafe and that rules and laws in Australia can't protect me. I feel I have no power, I have nothing to support myself, no one can make me feel safer," she said. The woman, who has been living in the community since December, said she still had nightmares and was afraid of anyone who resembled Panchalingham. Ms Keogh also said that Serco guards sent a clear message to detainees about what was acceptable in Australia through their actions, and he had undermined the woman's respect for the law. She told Panchalingham that detainees were "fleeing all sorts of situations in their home countries and they're coming to another country where they hope they'll be allowed to live freely and with the protection of the law and that is something that you yourself have experienced," she said. In the earlier 2014 incident, he kissed a colleague who was his junior on the mouth when they were en route to a Melbourne hospital for work, the Broadmeadows Magistrates Court heard. His colleague yelled at him and later told her manager what happened but asked him not to make an official report, thinking that her yelling at the guard would prevent future attacks. Ms Keogh said that Serco may have lost an opportunity to deal with the man's behaviour early on. He pleaded guilty to one count of indecent assault in relation to this incident, for which Ms Keogh sentenced him to an 18-month community corrections order. The order, which is to be served after his prison term, includes 200 hours' community service and participation in a sex offender program. Defence counsel Shaun Pascoe told the court that the Tamil man was previously a journalist for a number of Tamil newspapers in Sri Lanka during the country's civil war, where he witnessed a bombing and other violence. He said he came to Australia to study business administration at La Trobe University and later obtained a humanitarian visa to stay in Australia because he feared that his anti-government stance would put his safety at risk if he returned to Sri Lanka. Mr Pascoe said his client had already lost his job at Serco and significant standing in the local Tamil community as a result of the allegations. He unsuccessfully argued that he should receive a community corrections order without conviction for both his crimes. தெய்வீகன் பஞ்சலிங்கம் serco பணியாளர். இவருக்கும் DIBP யிற்கும் சம்பந்தம் இல்லை. இதைவிட மோசமான சம்பவங்கள் மனுசிலும், நவுருவிலும் நடந்திருக்கின்றன. இது பழைய கேஸ், இப்போதுதான் தீர்ப்பு வழங்கியதால் வெளிக் கிளம்பியிருக்கு. தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும் சலுகைகளுக்காக பெண்கள் தமது உடலைப் பாவிப்பதும் ஏதும் பிழைச்சால் பிளேட்டை மாற்றிப்போடுவதும் பல சமயங்களில் நடப்பது தான். Law enforcement கத்தி மேலே நடப்பது போன்றது.
  8. தமது குற்ற மனசாட்ச்சியை மறைக்கவும், சமூகத்திலே தாமும் இருக்கிறோம் எனக்காட்டவும் பதவி ஆசைகளுக்காகவும் அண்ணா. புலம்பெயர்ந்தவர்களது பிள்ளைகள் எல்லாரும் நல்ல யூனிகளில் படிப்பு, சிறந்த நிறுவனங்களில் வேலை, ஆனால் ஊரிலிருப்பவர்களின் பிள்ளைகள் இவர்களின் கனவுகளுக்காக போராட வேண்டும். எப்படி ஐயா இது நியாயமாக இருக்க முடியும்? அதனை விடப் போராடித் தோற்ற பலர் வாழக்கையை கொண்டு நடாத்த, பிள்ளைகளைப் படிப்பிக்க படும் பாட்டை நேரடியாகக் கண்டால் மக்களின் சிந்தனை ஏன் மாறிவிட்டது எனப் புரியும். புலத்திலிருந்து போராட்டத்திற்கு கொடுத்த காசிற்கும் அவர்கள் நேரடியாக அனுபவித்த கஷ்டங்களுக்கும் இடைவெளி மிக அதிகம். போரினால் அவர்கள் இழந்ததும் அதிகம். சில முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் சந்தர்ப்பம் 2011 போயிருந்தபோது ஏற்றப்பட்டது. அவர்களுடன் பேசி அவர்களின் மனா நிலையை அறிந்திருக்கிறேன். நான் இதை யாழில் முன்பு குறிப்பிட்டதும் இல்லை இப்போதும் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் உண்மைமுகம் பலருக்கு தெரியாது என்பதால் குறிப்பிடவேண்டி வந்துவிட்டது. அவர்கள் தங்கள் காலில் நிற்கிறார்கள், கவுரவமாக வாழ்கிறார்கள் என்ற மன நிறைவு இருக்கிறது. இதைவிட மேலதிகமாகக் குறிப்பிடவும் விரும்பவில்லை.
  9. சரி, இதே கள்ளனுக்கு இதே அடியை போலீஸ் அல்லது ஆமி குடுத்திருந்தா இங்கு அடிச்சது சரி எண்டு கருத்து எழுதின எத்தின பேர் அவர்கள் அடிச்சது சரி என்று சொல்லுவார்கள்?
  10. மயூரன் முதல் முறை போதைப் பொருளை கடத்தியபோது பிடிபடவில்லை. முதலாவது முறை வெற்றிகரமாக கொண்டுவந்து சேர்த்தார்கள், இரண்டாவது முறை பிடபடப்போகிறோம் எனத் தெரிந்து கைவிட்டு விட்டு தப்பி வந்தார்கள். மூன்றாவது முறை விமானம் ஓடுபாதையில் தயாராக இருந்த போது பிடித்தார்கள். இந்தோனேசிய, சிங்கப்பூர்,மலேசிய விமான நிலையங்களில் எழுத்துக்களில் போட்டிருக்கும் "Death Penalty for Those Who Carry Drugs" எனப் போட்டிருப்பதை வாசிக்கவே உடம்பு ஒருமுறை நடுங்குமே. பிடிபடாவிட்டால் மயூரன் இப்பவும் தூள் கடத்துவார். போதைப்பொருள் கடத்துவது இந்தோனேசியாவில் மரணத்திற்குரிய குற்றம், அவுசில் ஆயுள் தண்டனை.இப்போது அவுசிகள் யாராவது தூள் கடத்துகிறார்கள் எனது தெரிந்தாலும் அவுசினுள் வருமட்டும் வேற்று நாடுகளுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளுவது இல்லை. கள்வன் களவெடுத்தது சரி அல்ல, ஆனால் அதற்கு தண்டனை கொடுக்க அனுமதியில்லை.
  11. இனி ஒரு போதும் இந்த சொகுசு பஸ்ஸில ஏறாதேயுங்கோ. நானும் ஒருபோதும் ஏறியதில்லை. சொந்த வாகனத்தில் பயணிப்பதால் பொதுப் போக்குவரத்து ஒரே ஒருமுறை தேவைப்பட்டது. போகும் போது கொழும்பு - பருத்தித்துறை - CTB. வரும்போது அப்போது கிளிநொச்சி வரைக்கும் புகையிரதம் ஓடியதால் பருத்தித்துறை - கிளிநொச்சி - சொந்த வாகனம் கிளிநொச்சி - கொழும்பு - புகையிரதம். என்னைக் கேட்டால், புகையிரதம் தான் பாதுகாப்பானதும் சொகுசானதும், ஆனால் இடங்கள் பார்ப்பது கடினம். இடம் பார்க்க வேண்டுமாயின் CTB பஸ் தான். VW - Beatle எனக்கு பிடித்த கார். தொடர்ந்து வாசிக்கும் ஆவல்.
  12. களவெடுத்தது பிழையான விடயம். மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது அதைவிடப் பிழையானது. கள்வனுக்கும் சில உரிமைகள் இருக்கின்றன, உரிமைகளை மதிப்பதுதான் காட்டு மிராண்டிகளுக்கும் நாகரீகமடைந்த சமூகத்திற்கும் இடையிலான வேறுபாடு. கையை தலையை வெட்டும் மத்திய கிழக்கு காட்டுமிராண்டி குழுமத்தினுள்ளேயே வருகின்றனர். நாம் வாழும் மேலைத்தேய நாடுகளில் கொலை செய்தவர்களை அடிக்கவோ துன்புறுத்தவோ அரசாங்கத்திற்கு கூட உரிமையில்லயே. வழக்கு நடத்தி சிறையில் அடைக்க முடியும். அங்கும் அவர்களுக்கு கணணிவசதி, நூல்நிலையம், ஜிம், என்று சகலவசதிகளும் இருக்கின்றதே. இது நடந்தது 2005/6 காலப் பகுதியில். எனது வீட்டிற்கு அண்மையில் இருக்கும் எனது நண்பனின் வீட்டினுள்ளே ஒரு திருடன் பட்டப்பகலில் வந்துவிட்டான். அவனை அவனின் அப்பர் ஒருமாதிரி மடக்கிப் பிடித்துவிட்டார். ஊர் மக்கள் திரண்டுவந்து அந்த திருடனுக்கு மொட்டையடித்து நாயடி அடித்தார்கள். பின்னர் அவனை சித்திரவதை செய்கிறோம் என்று அவனுக்கு மின்சாரத்தை செலுத்தியதில் அவன் இறந்து விட்டான். சந்தியிலே போடப்பட்ட அவனது பிரேதத்தை மடியில் வைத்து தாய் மனிசி கதறிய கதறல் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.
  13. 1999 ஆ ரொம்ப பழைய கதை பாஸ் கிட்டடியில போனனீங்களோ? போத்தல் கேட்டது கஸ்டம்ஸ் காரனோ? இமிகிரேசனோ? கஸ்டம்ஸ் காரன் முன்பொரு முறை எனது சிவாஸை ஆட்டையைப் போட வெளிக்கிட்ட கதை சொன்னனான் தானே. போற வாரவனிட்ட போத்தல் பிச்சை எடுக்கிறதே அவங்களிண்ட வேலை.
  14. இல்லையே, நெடுக்ஸ் ஒரு தவறும் செய்யாத போதும் இலங்கை இமிகிரேசன் காரனுக்கு வெருண்டு லஞ்சம் கொடுக்கவில்லை என்று யாருமே கூறவில்லை. அவர் ஒருவருக்கு மட்டும் தான் நான் அறிய இப்பிடி நடந்திருக்கு என்று சொல்லுறன். அண்மைய செய்தியில் பிராங்க் பேர்ட் விமான நிலையத்தில் இந்தியப் பெண்ணின் ஆடைகளை களையச் சொல்லிப் பிரச்சனை சுஸ்மா வரைக்கும் போட்டுது. ஒருநாளைக்கு எத்தனை இந்தியர் போய்வாற இடத்தில இன்னொரு இந்தியருக்கு இது நடப்பதற்கான நிகழ்தகவு என்ன? அல்லது உந்தச் சம்பவத்தையும் நிழலி அண்ணாவிற்கு ஏற்பட்ட அனுபவத்தையும் வச்சுக்கொண்டு பிராங் போர்ட் விமான நிலையத்தினை கூடுமானவரை தவிருங்கோ என்று கூற முடியுமா?
  15. உங்களுக்கு இந்தச் சம்பவம் யாருமே கூறவில்லை. நானறிய யாழ்களத்தில் இருந்து பின்வருவோர் போய் வந்திருக்கிறார்கள். சொல்லாமல் கொள்ளாமல் போய்வந்தவர்களும் இருப்பார்கள். ஆனால் உங்களுக்கு மட்டுமே இந்த துன்பியல் சம்பவம் நடந்தது துரதிஷ்டமான விடயம் தான். சுவைப்பிரியன் ஜீவன் சிவா நுணாவிலான் நிழலி கிருபன் ரதி புங்ஸ் புத்ஸ் தும்ஸ் மீரா நெடுக்ஸ் கலைஞன் மோகன் ஓ உங்களுக்கு புரியவில்லை - வாழிக்கக்கூஸ் வீட்டினுள் இருப்பது, அங்கு நடப்பது நான்கு சுவற்றினுள்.
  16. உண்மை, 20 வருடங்களுக்கு முன்னர். பருத்தித்துறையில் மட்டுமல்ல, யாழ் குடாவின் பல இடங்களிலும் "வாழிக்கக்கூஸ்" பாவனையில் இருந்தது, அந்த தொழில் செய்தவர்களுக்கு அரசாங்கம் சம்பளமும் ஓய்வூதியமும் கொடுத்தது. யாழ்குடாநாட்டு "வீதிகளிலும்", "குச்சொழுங்கைகளிலும்", "மின்மாற்றிகளின் பின்னாலும்" யாரும் இயற்கை கடன்களை கழிக்கவில்லை - புரியும் என நம்புகிறேன்.
  17. ஈழத்திலே கக்கூசும் நல்ல தண்ணியும் 99% வீடுகளிலும் இருப்பதால் வளர்ச்சி + நிம்மதி
  18. ஆழ்ந்த அனுதாபங்கள். இவர் ஒரு ஹாட்டலிக் கல்லூரி பழைய மாணவர்.
  19. சிறந்த முறையில் திட்டமிட்டு எழுதியிருக்கிறியள், வாழ்த்துக்கள். ரசித்து வாசித்தேன். பெட்டைக்குயிலனுக்கு அடி விழும் என நான் நினைத்திருக்கவில்லை, வேறு பலரும் அதைத்தான் கூறியிருக்கிறார்கள். பெரும் திட்டமிடலுடன் நடந்த தாக்குதல் பிசுபிசுத்துப் போகும் என்ற வாசகனின் எதிர்பார்ப்புக்கு நேர்மறையான முடிவை தந்தது உங்களின் கதையின் உச்சப்புள்ளி.வாசிக்கும் எமக்கும் தாக்குதலில் ஈடுபட்ட உங்கள் நண்பர்களின் பார்வையிலும் தாக்குதல் வெற்றி, அவரவர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை சரியாக முடித்திருந்தார்கள் ஆனால் உங்களது பார்வையில் திட்டம் தோல்வி. "சாப்பாடு தேடுவது" - கனகாலத்தின் பின்னர் வாயினுள் புகுந்து புன்னகையாக வெளியேறிய சொல். வடமராட்டிசியில் பரவலாக பாவிக்கப்பட்டாலும் ஏனைய யாழ்குடாவின் பகுதிகளில் பாவிக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை.
  20. மன்னிக்க வேண்டும் ஐயா, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. பிரபாகரன் போன்ற ஒரு ஆளுமை மிக்க தலைமையின் கீழ் சாத்தியமாகாத ஈழம் இனி எப்போவாவது சாத்தியப்படும் எனக் கருதுகிறீர்களா? உங்கள் பார்வையில், அங்கிருப்பவர்கள் என்ன செய்யலாம் எனக் கருதுகிறீர்கள்? உரிய முறையில் பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்!
  21. நன்றாக இருக்கு அண்ணா ஆனால் கடைசிப் பகுதியை அவசரத்தில் எழுதி முடிச்ச ஒரு பிரமை. இப்ப சொல்லுங்கோ சோமண்ணையை நாங்கள் எப்பிடியுங்கோ உள்ளுக்க விடுறது. பிறகு மனிசன் அவுஸ் பாங்கயெல்லாம் நாஸ்த்தி பண்ணிப்போடுமே!
  22. எனக்கும் இவர்களில் ஆண்களையும் பெண்களையும் கஞ்சத்தனமாகவே பிரம்மன் படைத்துவிட்டான் என்றொரு கோவம் ஆதலால் "யெல்லோ வீவர்" இல்லை ஆனால் ஜப்பானுக்கு விதிவிலக்கு குடுக்கவேண்டியதாப் போச்சு. "கம குக்குல" வேணுமெண்டால் தக்குண பத்த தான் போக வேண்டும். தாமரை இலையில சூதுரு சம்பா சோறு, ஆத்து மீன் அம்புல் தியால், கொட்டுக் கொல சம்பல், பொலொஸ் கறியுடன் தென்னங் கள்ளு. அனுபவிச்சாத் தான் தெரியும்.
  23. ஐயோ அங்க மட்டும் கேட்டிச்சா. நல்ல சைனீஸ், கொரியன் அயிட்டங்கள் வச்சிருப்பாங்களே (சாப்பாட்டை சொன்னனப்பா). மற்றது மூண்டு பிரண்டிப் போத்தலோட போனதால பாறுக்குப் போயிருக்க மாட்டியள் - சரியான குட்டி பார், விலையும் யானை விலை. அந்த எயர் கொஸ்டசிண்ட வெளிர் வயிறையும் திமிரும் மார்பயும் வாசிச்சுப்போட்டு பயபுள்ளைங்க மார்க்கமா அலையிறாங்க பாஸ். இன்னொரு இடைச்செருகல் போட்டால் குறைஞ்சே போவியள்?