-
Posts
1946 -
Joined
-
Last visited
vanangaamudi's Achievements
-
மாநகர சபை ஒரு ஜனநாயக விழுமியம். ஆரிய குளத்தைப் பயன்படுத்த அனுமதி மறுத்தால் மாநகரசபையைக் கலைப்பேன் என்று சபையின் நிர்வாகத்துக்கு சவால் விடுவது முற்றுமுழுதான ஜனநாயக விரோத செயல், அதுவும் இதுபோன்ற மிரட்டல்கள் ஒரு ஆளுநரிடம் இருந்து வருகிறது என்றால் அவருக்கு ஜனநாயக மொழி புரியாது என்பதுதான் பொருள். இவருடன் வேறுவழியில் பேசினால் தான் அவருக்கு புரியும்.
-
எதிர்வரும் காலங்களில், குறைந்தபட்சம் நாட்டின் பொருளாதார நெருக்கடி தீரும் வரையாவது மேற்கு நாடுகளின் பாரிய பொருளாதார உதவியில் இலங்கை தங்கியிருக்கபோவது உறுதி. இந்த உதவிகளை சர்வதேசம் வழங்கும் சமகாலத்தில் நாட்டை அரசியல் பொருளாதார இஸ்திரத்தன்மைக்கு இட்டுச் செல்லும் சில உத்தரவாதங்களை பெறுவது மட்டுமன்றி பொருளாதார நெருக்கடியிலிருந்து சீக்கிரம் மீள்வதற்கான புதிய அரசியல் பாதையொன்றையும் இலங்கைக்கு முன்மொழிந்து அந்த முன்மொழிவில் இலங்கை விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் இனப்பிரச்சனைக்குரிய நிரந்தர தீர்வுகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளடக்கப்படும். ரணிலை பிரதமராகியதன் மூலம் மேற்குலகத்தை நோக்கிய கதவை கோத்தா திறந்துவிட்டிரூக்கிறார். தமிழர் இனப்பிரச்சினைக்குரிய தீர்வு (அல்லது அப்படி ஒரு மாயை) தனது கையில் தான் உள்ளது என்று இந்தியா இன்றுவரை நம்பிக்கொண்டிருக்க, கிணறு வெட்ட புறப்பட அங்கிருந்து பூதம் கிளம்பிவிடுமோ என்ற பயமும் இப்போது இந்தியாவை பற்றிகொண்டுவிட்டது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதைபோல இலங்கையின் இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக் கோரிக்கை அல்லது நிர்ப்பந்தங்கள் எதுவும் மேற்குலகிலிருந்து வரவிருக்கும் பொருளாதார உதவிகளுடன் சேர்ந்தே வந்துவிடாமல் தடுக்க வேண்டுமாயின் புலிகள் மீள்கட்டமைப்பு, பயங்கரவாத தாக்குதல் போன்ற புரளிகளை கையிலெடுத்து கிலி பரப்ப வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் நிச்சயம் தேவை. இந்த திட்டங்களை செயற்படுத்த 2019 ஆண்டில் நடத்தப்பட்டது போன்ற தொடர் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு அவற்றைப் புலிகளின் தலையில் போடும் வாய்ப்புகளும் உள்ளது.
-
கொதிநிலையில் இருக்கும் மக்களின் எழுச்சியையும் அவர்களின் போராட்டத்தையும் நீர்த்துப்போகவைக்கும் மாற்றுத் திட்டம் ஒன்றை ஜனாதிபதி போடுவதாக தெரிகிறது. புதிய அரசாங்கம் அமைத்தவுடன் நாட்டில் பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிடுமா? அல்லது மக்களின் அன்றாட கஷ்டங்கள் தான் உடனடியாக தீர்ந்துவிடுமா? ஜனாதிபதி முறையை ஒழிப்பதுடன் நின்றுவிடாமல் இனி வரும் காலங்களில் குடும்ப வாரிசுகளை மையப்படுத்திய ஆட்சி அதிகார முறை, அரசியலில் பௌத்த சங்கங்களின் தலையீடு, நாட்டின் இனங்களுக்குள் பாகுபாட்டை வளர்த்து அரசியல் இலாபம் தேடுவது, சிறுபான்மை மக்களின் பாரம்பரிய வாழ்நிலங்களை திட்டமிட்டு சூறையாடுதல் இதுபோன்ற இன்னும் பல ஜனநாயக விரோத நடைமுறைகளையும் மாற்றியமைத்தல் வேண்டும்.
-
ஆவா போன்ற தலைமறைவுக் குழு ஒன்று பொதுமக்களை பயமுறுத்தும் இது போன்ற துண்டுப்பிரசுரங்களை வெளிவிடுவது தவறு. குற்றம் எதுவாகினும் சட்டத்தை தனியார் தங்கள் கையிலெடுத்து மற்றவர்களுக்கு தண்டனை கொடுப்பது மிகப்பெரிய தவறு. மாறாக சமூக சீர்திருத்தங்களையும் விழிப்புணர்வையும் கொண்டுவர வேறு அமைதி வழிகளில் முயற்சி செய்ய வேண்டும். சமூக மேம்பாட்டில் உண்மையான பற்றுள்ள எவரும் சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்து அவர்களை நல்வழிப்படுத்தலாம் அல்லது இளையோரின் பெற்றோர்கள், அவரின் பாதுகாவலர், பாடசாலை நிர்வாகம் அல்லது பொறுப்பான பெரியவர்களை அணுகி இதுபற்றி உரையாடலாம். தவறு செய்பவர்கள் திருந்தி வாழவேண்டும் என்பதைத்தான் நோக்கமாக கொள்ளவேண்டும். சமுதாய சீர்கேடுகளை தட்டிக் கேட்பதற்குமுன் அதன் காரணிகள் இனங்காணப்படுதல் வேண்டும். போதைப்பொருளை பயன்படுத்துவோரிலும் பார்க்க அதை விற்பனை செய்வோரைத் தான் முதற் குற்றவாளிகளாக கொள்ளவேண்டும். போதைப்பொருட்களை சமூகத்தில் பரப்புவோரையும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வோர்களையும் பொழுதுபோக்கிற்காக காதல் செய்து இலாபம் தேடுவோரையும் பொலீசாரிடம் காட்டிக்கொடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட இளையோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒன்றுகூடல்கள், தெருக்கூத்து, கற்கைநெறிகள், பெற்றோர்களின் அறிவூட்டல்கள், பாதிக்கப்பட்டோருகான மன நலம் பேணுதற்கான பராமரிப்பு என்பனவற்றை ஏற்பாடு செய்ய உதவுதல் சாலச் சிறந்தது.
-
அனைத்து பதவிகளில் இருந்தும்... சுரேன் ராகவன், நீக்கம் !!
vanangaamudi replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அட ஆமால்ல, இப்ப நம்ப நாட்டில எங்கை டொலர் இருக்கு. இருந்த கொஞ்சத்தையும் அண்ணன் தம்பிமார் அள்ளிகொண்டு போயிட்டானுங்க. இனி "டொலர்" எண்டு வெற்றுபேப்பரிலை எழுதிதான் கொடுக்கணும். -
உகாண்டா சர்ச்சை - ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விளக்கம்
vanangaamudi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இரண்டு வசனங்களும் குளறுபடியான செய்தியையே சொல்கின்றன. விமானத்தின் சொந்தகாரர் யார், அதை குத்தகைக்கு எடுத்தவர் யார்? செய்தியை எழுதியவருக்கும் புரியவில்லை அதை வாசிப்பவருக்கும் புரியவில்லை. -
இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் முறைமையை மாற்றியமைக்கும் நடவடிக்கையென்பது அவ்வளவு சுலபமானது அல்ல. அரச தலைவரை முதலில் தெரிவு செய்துவிட்டால் அவர் இவ்வாறான மாற்றத்தை அவரது ஆட்சிக் காலத்தில் கொண்டுவர ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் நம்பமுடியாது. அனைத்துக்கும் மேலாக தேர்தல் நடந்து ஆட்சி அமைத்தபின்னர் இந்த மாற்றத்தை கொண்டுவரத் தேவையான பெரும்பான்மை வாக்குப்பலம் நாடாளுமன்றத்தில் தேவை. அடுத்த தேர்தலில் இதில் அனைத்தும் சேர்ந்து வருவது இனிமேல் சாத்தியமாகுமா என்பதும் நிச்சயம் இல்லை. ஜனாதிபதியுயோ அரசாங்கமோ இந்த மாற்றத்தை கொண்டுவருவதற்கு எந்தவித தலையீடும் செய்யமுடியாதபடி மக்கள் விருப்பறியும் நாடளாவிய வாக்கெடுப்பு(referendum) ஒன்றை நடத்தி அதன் முடிவை அறிந்தபின்னர் அதற்கிணங்க புதிய ஜனாதிபதிக்கான தேர்தலை நடத்தவேண்டும்.
-
காணி அபகரிப்புக்கள் தொடர்பில் இராணுவத்தளபதி - சுமந்திரன் பேச்சு
vanangaamudi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இராணுவத்திற்கு எதிராக ஜனாதிபதியிடம் நேரடியாக முறையிடப்பட்ட ஒரு விடயத்தை ராணுவ தளபதி சுமந்திரனுடன் பேசித்தீர்க்க முயற்சிப்பதென்பது பிரச்சினையை திசைதிருப்பும் அல்லது இழுத்தடிக்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படவேண்டும். காணி அபகரிப்பை ஆதாரப்படுத்தும் முழுமையான ஆதாரங்களும் தரவுகளும் தமிழ்த்தரப்பிடம் இருந்தால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இராணுவத்தரப்பு என்ற அடிப்படையில் உரிய ஆவணங்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்பதுதான் முறை. நடந்து முடிந்த சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி இராணுவத்தின் காணி அபகரிப்பு பற்றி எதுவும் அறியாதவராக தன்னைக் காட்டிக்கொண்டு கேள்வி கேட்டபோதே தமிழ் தரப்பு சிந்தித்து செயலாற்றத் தவறிவிட்டது. கைவசமுள்ள ஆதரங்களை உரிய விரைவில் ஜனாதிபதியிடம் கையளிப்பதாக பதிலளித்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருக்கவேண்டும். அதை விடுத்து இராணுவதளபதி தொடர்புகொள்ளும்வரை தாமதப்படுத்தியிருக்கக்கூடாது. தமிழர் பூமியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து கையகப்படுத்திவரும் நிலங்களை வெறுமனே காணி அபகரிப்பு என்று நாங்கள் அழைப்பது இந்த இடத்தில் பிழையானதாகவும் இருக்கலாம். அதனால் தானோ என்னவோ ஜனாதிபதிக்கும் இராணுவதளபதிக்கும் இந்த விடயத்தின் தார்ப்பரியம் சரியாக புரியவில்லை. எங்கள் அப்புகாத்துமார் அதையும் ஒருமுறை சரிபார்ப்பது நல்லது. -
டொலர் தட்டுப்பாடு – வெளிநாட்டில் உள்ள மூன்று தூதரகங்கள் மூடல் !!
vanangaamudi replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
இலங்கையின் பொருளாதர நிலைமை கட்டுப்பாடின்றி மோசமாகிக்கொண்டு செல்லும் இந்த வேளையில் நாட்டில் திடீரென அரசியல் கொந்தளிப்பு, ஆட்சி மாற்றம், இராணுவ புரட்சி எது வேண்டுமானாலும் நிகழலாம். இந்த நெருக்கடியில் சிக்கப்போகும் தமிழினத்தை முடிந்தளவு பஞ்சம், பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என்பவற்றிலிருந்து காப்பாற்றவும் இத்தருணத்தை எமக்கு சாதகமாக்க என்னென்ன உத்திகளை கையாளமுடியும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு செயலாற்ற வேண்டியதும் அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளின் கடமையாகும். -
உங்களுக்கு பிடித்த தலைப்பிட்டு படித்து செல்லலாம்.
vanangaamudi replied to யாயினி's topic in இனிய பொழுது
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே என்று சொல்லி (தனது) தலையில் 5 முறை குட்டி இந்த கணபதி தோத்திரத்தை நிறைவு செய்யணும். -
1962 இல் அமெரிக்காவாலும் அன்றைய சோவியத் வல்லரசாலும் அரங்கேற்றப்பட்ட கியூபா ஏவுகணை நெருக்கடியும் அதன் பிண்ணணியில் இவ்விரண்டு வல்லரசுகளும் தெருச்சண்டியர்கள் போல எதிரும் புதிருமாக நின்று ஒரு அணுஆயுத மோதலின் விளிம்புக்கே சென்று உலக சமாதானத்தை சீரழிக்க முயன்ற கதையையும் இத்தருணத்தில் நாம் எண்ணிப் பார்ப்பது நல்லது. அமெரிக்கா தனது அண்டை நாடான கியூபாவை சோவியத் ரஷ்யா தனது இராணுவதளமாக பயன்படுத்துவதை தடுத்த அந்த நடவடிக்கை(முற்றுகை, படையெடுப்பு, இராஜதந்திர நெருக்கடி) நியாயமென்றால் இன்று ரஷ்யா உக்கிரேன் நாட்டை படயெடுத்து அழிப்பதும் அதுபோலத்தான். (அமெரிக்கர்களின் கியூபா படையெடுப்பு தோல்வியில் முடிந்தது வேறு கதை).
- 1 reply
-
- 2
-
-
இப்படியான அதிரடி மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது இலங்கை நாட்டின் ஜனநாயகபாதையில் பயணத்தின் ஆரோக்கியமான சமிக்ஜைகளாக தெரியவில்லை. தேர்தல் நடைமுறைகளில் புதிய மாற்றங்களை அமுலுக்கு கொண்டுவரும்முன்னர் நாடாளுமன்றில் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் விவாதிக்கப்பட்டு நன்மை தீமை பற்றி ஆலோசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானமா அல்லது ஒரேநாளில் முடிவெடுக்கப்பட்டு வர்த்தமானியில் அறிவித்தல் விடப்பட்டதா என்பதையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ் அரசியல்வாதிகளும் இந்த விடயத்தை கரிசனையில் எடுத்து அதில் உள்ள நன்மை தீமை பற்றி ஆலோசித்ததாக தெரியவில்லை. வர்த்தமானி அறிவித்தலில் இருந்துதான் செய்தி அவர்களுக்கும் தெரியவந்திருக்கவும் வாய்ப்புண்டு.