Jump to content

vanangaamudi

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1992
 • Joined

 • Last visited

Everything posted by vanangaamudi

 1. என்ன மாதிரியான செய்தித்தலைப்பு இது? இந்த செய்தியாளர் தான் எழுதியதையே வாசிக்க தெரியாத மனிதரா?இனப்படுகொலையை எந்த நாட்டில் அங்கீகரிப்பார்கள்? சி*க்கக்கூட லாயக்கில்லாத மனிதர்கள் எல்லாம் இன்று பத்திரிக்கையாளர்கள் ஆகிவிட்டார்கள்.
 2. தமிழர் பிரதேசங்களின் இயற்கை வளங்கள் கொள்ளையிடப்படுகின்றன. எதிர் காலத்தில் தமிழர் பிரதேசங்களில் இதனால் ஏற்படபோகும் இயற்கை அனர்த்தங்கள் என்ன என்பதற்கும் ஏற்படபோகும் ஆபத்துகள் என்ன என்பதுபற்றிய ஆய்வுகள் எதுவும் இல்லை. புல்மோட்டை கொக்கிளாய் ஆகிய பிரதேசங்கள் கடல் நீரில் ஆழ்ந்துபோவதுடன் கடல் தொழிலுக்கான இயற்கை ஆதாரங்கள் அழிவுறும் ஆபத்து அதிகரிக்கும்.
 3. எயர்போர்ட்லை பிக்கப் பண்ண வெறும் வானாக யாழில் இருந்து போகும் போது யாராவது கொழும்பில் இறக்கிவிடுங்கோ.
 4. எரிசக்தியை எப்படி புதுப்பிக்க முடியும்? எரிசக்தியின் தீமைகளில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள இந்த உலகம் புதுப்பிக்கதக்க சக்தியை (renewable energy) பயன்படுத்த வேண்டும் என்கிறது. மக்களுக்கு ஆரம்பத்திலிருந்தே சரியான புரிதலை உண்டாக்க இதுபோன்ற செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் ஏற்ற சொற்பதங்களை பயன்படுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பது முற்றிலும் முரணானது. "புதுப்பிக்கத்தக்க சக்தி" என்பதுதான் சரி.
 5. எதற்கு ஏன் இவ்வளவு சிரமம், "கடவுளே நாட்டைக் காப்பாற்றுங்கள்" என்று தேசிய கீதத்தை ஒரு முறை மாற்றிவிட்டால் போதுமே பிறகு என்றைக்கும் மாற்றவேண்டிய அவசியம் வராது. இதை தேசிய கீதம் (National anthem) என்பதிலும் அரச கீதம் (Royal anthem) என்பது தான் பொருத்தம். God save our gracious King! Long live our noble King! God save the King! Send him victorious, Happy and glorious, Long to reign over us: God save the King! O Lord our God arise, Scatter his enemies, And make them fall: Confound their politics, Frustrate their knavish tricks, On Thee our hopes we fix: God save us all. Thy choicest gifts in store, On him be pleased to pour; Long may he reign: May he defend our laws, And ever give us cause, With heart and voice to sing, God save the King!
 6. அமெரிக்கரான டாக்டர் Green இலங்கை வருவதற்கு முன்பாக(1819) Dr. John Scudder என்ற இன்னுமொரு அமெரிக்க வைத்தியர் வடபகுதிக்குச் சென்று பண்டத்தரிப்பு கிராமத்தில் சிறிய டிஸ்பென்சரி ஒன்றை அமைத்து உள்ளூர் வாசிகளுக்கு வைத்தியம் செய்தும் மருந்துகளை வினியோகித்தும் வந்ததாக அறியக்கிடக்கிறது. இவர்கள் வைத்தியர்களாக தொண்டு செய்த அதேவேளை கிறித்தவ மிசனரிகளாகளாகவும் இருந்தார்கள். இந்த மிசனரிகள் கல்வி மற்றும் வைத்திய சேவை என்பவற்றை தமிழர் தாயகத்தில் வழங்கியதன்மூலம் பெருமளவு உள்ளூர்வாசிகளை மதமாற்றம் செய்யவும் இது காரணமாக அமைந்தது. வடக்கின் முதலாவது வைத்திய பட்டதாரிகள். ஆதாரம்: Royal College of Physicians, London
 7. இதுபோலவே 1848 இல் அமெரிக்க வைத்தியர் டாக்டர் Samuel Fisk Green அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மானிப்பாய் வைத்தியசாலையும் (பின்னாளில் Dr. Green நினைவு வைத்தியசாலை என அழைக்கப்பட்டது) நினைவுகூரத்தக்கது. மேலை தேச மருத்துவத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியதுடன் இந்த வைத்தியசாலையில் அமைக்கப்பட்டிருந்த தாதியர் பயிற்சி நிலையமும் வைத்தியர் பாடசாலையும் இலங்கையின் முதன் முதலாக வைத்திய சேவைக்கான உயர்நிலை கல்வித் தராதரங்களை உள்ளுர் மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழங்கி சேவையாற்றியது.
 8. சிறிலங்கா இராணுவத்திற்கு இந்த சட்டம் செல்லுபடியாகாமல் பார்த்துக்கொள்ளவும். தவறினால் ஏறத்தாள அரைவாசி இராணுவம் மரணதண்டனையில் கொல்லப்படுவார்கள்.
 9. புதைபொருள் ஆராச்சியில் "கச்ச விகார" என்ற ஒரு புராதன விகாரையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படும். தனது காதலர்களுடன் சங்கமித்த இந்த தீவுக்கு அடிக்கடி வந்து மீன்கறி சமைத்த அடையாளங்களும் கிடைக்கும். அதற்கு நிலத்தை தோண்டணும் நல்லா தோண்டணும்.
 10. 14000 கடல் மைல் ஊடுருவும் என்றால் இந்த கப்பல்லை ஏறி மாலை தீவு, சிங்கப்பூர், தைலாந்து நாடுகளுக்கு தங்கு தடையின்றி போகலாம் என்று சொல்லுறியள். குடுங்கோ குடுங்கோ ரணிலுக்கும் எதிர்காலத்திலை ஒரு பக்க பலமா இருக்கும் அதுமட்டுமே தப்பி ஓடும்போது இனி "ஓவெர் வெயிட்" என்றும் கவலைபடவும் தேவையில்லை, கப்பல் தானை வேண்டியதை அள்ளிப் போட்டுக்கொண்டு தப்பிடலாம். ஏன் கோட்டா இருக்கும் போதும் இதை கொடுத்திருக்கலாம் தானே.
 11. உயர்ந்த நிலமட்டம் காரணமாக பல மலையக பிரதேசங்களில் காற்றின் வேகம் கடற்கரைப்பிரதேசங்களுக்கு ஈடானதாகவே காணப்படுகிறது. அப்படியிருந்தும் காற்றாலை திட்டத்திற்கு மன்னாரை முழுமூச்சாக தெரிவு செய்வதன் அரசியல் பின்னணியில் சரியான வெளிப்படைத்தன்மை காணப்படவில்லை. இலங்கை மின்சார சபை வேறு எந்த பிரதேசங்களை மாற்றுத் தீர்வாக தெரிவுசெய்துள்ளது என்பதும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. காற்றாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய மின் வலையமைப்புடன் இணைக்கப்பட்டபின்னரே பயனாளர்களுக்கு பிரித்தளிக்கப்படும் என்பதால் இந்த கற்றாலைகள் மன்னாரில் தான் அமைக்கப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது. பெரிய எண்ணிகையில் காற்றலை நிறுவப்படும் பட்சத்தில் அந்தப் பிரதேசத்தில் இயற்கையின் காற்று வழித்தடங்களில் உள்ள சமநிலை பாதிப்புக்குள்ளாகும். நீண்ட கால இடைவெளியில் இம்மாற்றங்கள் தொடரும் பட்சத்தில் மழைவீழ்ச்சி, நிலத்தின் தன்மை, வளரும் தாவரங்கள், செடி, கொடி அனைத்தையும் பாதிக்கும். காற்றாலைகளில் இருந்து வெளியேறும் இரைச்சல் சத்தங்களின் ஒலி அலைகளின் அதிர்வெண் மாற்றம் சூழல் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கு உதவாது. இரைச்சல் சத்தங்களில் அதிர்வெண் குறைப்பால் அதன் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்பது ஆய்வுரீதியாக நிறுவப்பட வேண்டும். இப்படி ஒரு பொறிமுறை உண்டா என்பதையும் அது நடைமுறைக்கு சாத்தியமானதா என்பதையும் விஞ்ஞானரீதியாக ஆராயவேண்டும்.
 12. ச்சே பிறப்பால் ஆர்ஜண்டீனாவை சேர்ந்தவர். தன் 39 ஆவது வயதில் பொலிவியாவில் சுட்டுக்கொல்லப்பட்டு இறந்தார். கியூபாவில் புதைக்கப்பட்டிருக்கிறார். இறக்கும்போது ஆர்ஜண்டீனா மற்றும் கியூபா ஆகிய இரண்டு நாடுகளின் பிரஜாவுரிமையை கொண்டிருந்தார்.
 13. உலகத்துக்கு காட்ட நல்ல புள்ள வேஷம். இவரு குழந்தைகள் தாய்மார் முதியவர்கள் என்று பாராமல் அப்பாவி மக்களை குண்டுபோட்டு துடிக்க துடிக்க கொலை செய்வாரு ஆனால் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேத்த கையொப்பம் போடமாட்டாரு.
 14. மாநகரசபை பணத்தை திறைசேரியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு. மாநகரசபையின் செயல்பாடுகளுக்கு அரசாங்கம் தடை போடுகிறது எனவே ஜப்பான் அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி செய்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்பதை விளக்கி அவர்களின் பணத்தை இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் கையளித்திருக்கலாம். இறுதியில் பணத்தை திறைசேரியில் சேர்த்தமைக்கு எவரிடமும் உரிய அத்தாட்சி இல்லையென்றால் மாநகரசபையில் அங்கத்தவர்களுக்கிடையில் புடுங்குபாடுதான்.
 15. மின்சார வாகனங்களைத்தான் ஜனாதிபதி இலத்திரனியல் வாகனமென்று சொல்கிறாரோ !!! ஜனாதிபதி, பிரதமர் உட்பட இலங்கையின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக 60 வயதைக் கடந்தவர்கள் எத்தனைபேர். இவர்களுக்கும் நிரந்தர ஓய்வு வழங்கப்பட்டு அவர்களையும் வீட்டுக்கு அனுப்பணுமா? இல்லையா? மற்றைய சந்தர்ப்பங்களில் இனவாதத்தை கையில் எடுத்து சிங்களவர் அல்லாதவர்களின் உரிமைகள் ஒடுக்கப்படும் பூர்வீக நிலங்கள் சுவீகரிக்கப்படும். இப்படியான ஒரு நிலைமை வரக் காரணமானவர்களை தண்டிக்கவும் நாட்டின் திறைசேரியை கொள்ளையடித்தவர்களை இனங்காட்டி களவாடப்பட்ட நிதியை மீட்டுக்கொண்டுவர என்ன திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஜனாதிபதி மக்களுக்கு அறிவிக்கவேண்டும். ஆட்சியாளர்களின் பிழைகள் தட்டிக் கேட்கப்படவேண்டும். இல்லாவிடின் அது மீண்டும் நிகழ சந்தர்ப்பம் ஏற்படும்.
 16. இது யாருக்கு ஆப்பு வைக்கும் ரணிலின் நடவடிக்கை என்பது தெரியவில்லை. கோத்தா உட்பட ஒட்டுமொத்த ராஜபக்ச குடும்பத்தையும் வெள்ளையடித்து அவர்களுக்கு நன்றிக்கடனை செலுத்துவதற்காகவா அல்லது அவர்களுக்கு குறிசுட்டு அவர்களை நிரந்தரமாகவே ஓரங்கட்டவா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இருக்கும்போது இந்த அவசர நடவடிக்கை சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இது சுயாதீன விசாரணையாக இருக்குமா, இந்த விசாரணைக்கு ஆகும் செலவுகளை யார் பொறுப்பேற்பது? நாட்டில் நடந்த பெரிய அளவிலான ஊளல்கள் பணமோசடிகள் அத்துடன் ராஜபக்சக்களில் சுமத்தப்பட்டுள்ள அன்னிய செலாவணி மோசடி என்பவற்றிற்கான விசாரணைகள் அல்லது நாட்டிலிருந்து திருடப்பட்ட டாலர் கையிருப்பு எங்கே பதுக்கிவைக்கப்பட்டுள்ளது அல்லது முதலீடு செய்யப்பட்டுள்ளது?. இதுபோன்ற விடயங்களையும் சுயாதீனமாக ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸாரை அழைத்து விசாரணை செய்யவேண்டும் என்பது ரணிலுக்கு தோன்றவில்லையா?
 17. யாழில் புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாக கொண்ட தர்ஜினி ஒரு சிறந்த சாதனையாளர். அத்துடன் கிழக்கு பல்கலைகழக பட்டதாரி. வயது 43 உயரம் 210 செ.மீ. அவரின் சாதனைகள் தொடர வாழ்த்துவோம்.
 18. பலருக்கு ஜனநாயகம் என்பது ஒரு நாளில் நடந்து முடியும் தேர்தல் மட்டும் தான். தேர்தல் முடிந்த பிறகு ஆட்சியாளர் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாக நாட்டை ஆட்சி செய்கிறார்களா என்பதும் அதை மீறினால் மக்களுக்கு அவர் பொறுப்பு கூற வேண்டும் என்பதும் மிக மிக முக்கியம் தான் என்பதை உணரத் தவறிவிடுகிறார்கள். தேர்தல் நடைமுறைகளை சமகாலத்தில் கண்காணிப்பது போல அரசாங்கங்களையும் சமகாலத்தில் ஒரு மூன்றாம் தரப்பின் அல்லது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மக்கள் ஆயம் ஒன்றின் உதவியுடன் நிரந்தர கண்காணிப்புக்கு உட்படுத்தல் வேண்டும். ஜனநாயக விழுமியங்கள் மீறப்படும் தருணங்களில் உடனடியாகவே அவற்றை சரிசெய்வது அதன் மூலம் சாத்தியமாகும்.
 19. அதுவாயிருக்குமோ அல்லது இதுவாயிருக்குமோ என்று மூக்குச் சாத்திரம் பார்ப்பதை விட்டு உடனடியாக வாவியின் நீர் மாதிரிகளைச் சேகரித்து அவற்றை ஒழுங்குமுறையான இராசாயன பகுப்பாய்வுக்குட்படுத்தி வாவியில் இந்த மாறுதல் ஏற்பட்டதன் உண்மையான காரணம் கண்டறியப்படுதல் வேண்டும். தீமையான காரணங்கள் கண்டறியப்படின் வாவியில் குளித்தல், மீன்பிடித்தல், நீரைக் குடித்தல், உணவுக்கு பயன்படுத்தல் என்பனவற்றை தற்காலிகமாயேனும் தடைசெய்தல் அல்லது மட்டுப்படுத்தல் துறைசார் நிபுணர்களின் கடமை.
 20. புலிகளுடனான பேச்சுவார்த்தையின்போது நாட்டு நிலவரங்கள் ஓரளவு சுமுகமான நிலைக்கு திரும்பியபோது புலிகளின் இயக்கத்தின் பலமட்டங்களில் சிங்கள நாசகார சக்திகள் ஊடுருவியதுடன் கருணா உட்பட ஒரு சில போராளிகள் எதிரிகள் பக்கம் தாவினார்கள். அதுபோன்ற ஒன்றை ரணிலின் நரிப்புத்தி வியூகம் இந்த புலம்பெயர் அலுவலகம் என்ற போர்வையில் புலம்பெயர் தமிழர் மட்டத்திலும் செய்யப் பயன்படலாம். முதற்கட்டமாக வெளிநாடுகளில் வசிக்கும் உயர்மட்ட தமிழ் செயற்பாட்டாளர்கள் இந்த பொறிக்குள் விழுத்தப்படும் அபாயம் உள்ளது.
 21. இதுபோன்ற நிகழ்வுகள் ஜனாதிபதியின் வேண்டுதலுக்கு அமைவான புலம்பெயர்ந்த தமிழர்கள் தாய் நாட்டில் போடும் முதலீடு, அன்னிய செலாவணியை நாட்டுக்குள் கொண்டுவர எமது மக்களின் பங்களிப்பு. தென்னிலங்கை தொழிலார்களுக்கு வடக்கில் வேலை வாய்ப்பு போன்ற திட்டங்களை நிறைவேற்றத்தான் உதவும். இருந்தாலும் கூட நாங்கள் புலம்பெயர் தேசத்திற்கு வந்து கஷ்டப்பட்டு உழைத்து நீண்ட காலம் வாழ்ந்தபின்னர் தான் எமது மக்கள் இன்று தாய் நாட்டில் வாழும் விதத்தை பார்த்து குறைசொல்லும் நிலைக்கு வந்திருக்கிறோம். நாங்களும் இன்று அங்கிருந்தால் இப்படிதான் வாழ்ந்துகொண்டிருப்போமோ தெரியாது. இதை தட்டிகேட்ட உத்தமர்கள் கூட மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் அல்லது மெளனித்து விட்டார்கள். மறுபுறம் பார்த்தால் இதுபோன்ற உதவாக்கரை செயல்களை இணையத்தில் பதிவிட்டு விவாதித்து நாங்கள் அவர்களுக்கு இலவச விளம்பரம் தேடிக் கொடுக்கிறோம். திருமண வீட்டு நிகழ்வுகளில் ஊர்வலம் போவார்கள் ஆனால் இது போன்ற சடங்குகளிலுமா யானை, தேர், இசை, நடனம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போவார்கள். ஒன்றும் அறியாத குழந்தை பெற்றோர்களே அதை பிரச்சனைகளில் இழுத்துவிடுகிறார்கள். அறிவுபூர்வமாக சிந்திக்க முடியாத சமுதாயமாக மாறிக்கொண்டிருக்கும் எமது இனம். சரி செய்தது தான் செய்தார் எமது பாரம்பரிய நடனத்துக்கும் நாதஸ்வரம் தவில் இசைக்கும் என்ன குறை?
 22. அதானே இந்தியன்ர திட்டமே. இலங்கை கடல் எல்லைக்குள்ள சீனாக்காரன்ர கப்பல் நிக்கும்போது அதுக்கும் மேலாலை நாம பறந்து உளவு பாப்பமெல்ல. விமானத்தில் பெறப்படும் வேவுத் தரவுகளை இந்தியாவிலுள்ள புலனாய்வு மையத்தில் வைத்து de-code பண்ணாம இலங்கை அதை(data) வச்சு ரணிலுக்கு நாக்குதான் வழிக்கலாம். இந்த வேவு விமானத்தை இந்திய விமானிகளுக்கு பதிலாக இலங்கை விமானிகள் ஒட்டுவார்கள் அதுதான் வித்தியாசம்.
 23. இருக்கவே இருக்கிறது சீனா கொத்தாவுக்கு உதவ. அங்கு புகலிடம் கேட்கலாம்தானே !!
 24. இங்கே சாணக்கியன் எங்கே வருகிறார், அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் புரியவில்லை !!!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.