Jump to content

vanangaamudi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2106
  • Joined

  • Last visited

Posts posted by vanangaamudi

  1. இறந்த சிறுவனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.  

    இஸ்லாமிய ஆண்களின் முக்கிய சடங்கான சுன்னத் என்பதை அறுவை சிகிச்சை என அழைப்பது சரியா பிழையா என்பது கேள்விக்கிடமானது. சுன்னத் என்பதை ஆங்கிலத்தில் Circumcision என்று தான் அழைப்பார்கள். இதற்கு தமிழில் சரியான மொழிபெயர்ப்பு "விருத்தசேதனம்" என சொல்கிறது கூகிள்.

     

  2. ஒரு நாட்டின் இராணுவம் (military) என்பது தரைப்படை மட்டுமா. அல்லது தரை, ஆகாய, கடல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதா?. இலங்கை நாட்டின் ஆயுதப்படை சுமார் 3.5 இலட்சம் பேராக இருக்கையில் 1.5 இலட்சம் பேரைக்கொண்ட தரைப்படையின் எண்ணிக்கையை மட்டும் குறைக்கும்படியா IMF  கேட்டது? குளறுபடியான தமிழாக்கத்தில்  செய்தியின் முக்கியத்துவம் வேண்டுமென்றே குறைக்கப்பட்டுள்ளது.

  3. 8 hours ago, ஈழப்பிரியன் said:

    அடுத்த தேர்தலில் மறக்காமல் வந்து வாக்குப் போட்டுவிட்டு போங்கோ.

    பாஸ்போர்ட் பெறுபவர் பெயர் வாக்களர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் வாக்குகளை இலங்கை அரசே ஆள்வைத்து போட்டுகொள்வார்கள். மக்கள் அங்கு போய்தான் அதை போடவேண்டும் என்பதில்லை.

    40 வருடங்கள் என்பது ஒருவரின் வாழ்க்கையில் நீண்ட காலம். இத்தனை ஆண்டுகளுக்கு பின் அகதிகளைஇலங்கைக்கு திருப்பி அழைத்து அவர்களுக்கு அவர்களின் பழைய வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்பி மறுவாழ்வு கொடுப்பதே சிறந்தது.  இன்னிலையில் இலங்கை அரசு அவர்களுக்கு புதிய கடவுச்சீட்டுகளை வழங்குவது அந்த மக்களின் இருப்பை இருதலைக் கொள்ளி எறும்பு நிலைக்கு தள்ளி விடுவது மட்டுமன்றி அவர்களின் இஸ்திரமற்ற அகதி வாழ்க்கையை மேலும் நீடிக்கவே வழிவகுக்கும்.

    சொந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்கே சுதந்திரமே உறுதிசெயப்படாமல் இருக்கும்போது அடுத்த நாட்டில் தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்குவேன் என்பது நகைப்புக்குரியது.

     செந்தில் தொண்டைமானுக்கு இதில் என்ன அக்கறை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    நீண்ட காலமாக தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளை உள்ளீர்க்கும் பல திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளதாக அண்மையில் செய்திவந்ததும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

    12 hours ago, தமிழ் சிறி said:

    உலகில் வேறெங்கிலும் இதற்குமுன்னர் இலங்கை அரசால் இவ்வாறானதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.

    இந்தியாவில் மட்டுமே இது போன்ற முட்டாள் தனமான காரியம் சாத்தியம். ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் இதை அனுமதிக்குமா என்பது கேள்விக்குறி.

     

  4. பிந்திக்கிடைத்த செய்திகளின்படி பாக்கிஸ்தான் இன்று வியாழன் காலை இரானின் எல்லைப் பகுதியில் உள்ள சரவான் நகர்பகுதியை ஏவுகணை கொண்டு  தாக்கி  பதிலடி வழங்கியுள்ளது.

    பலுசிஸ்தான் விடுதலை முன்னணி, பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் ஆகிய ஆயுதக் குழுக்களுக்கு எதிராக தான் தாக்குதல் தொடுத்ததாகவும் அறிவித்துள்ளது.

    இவ்விரண்டு ஆயுதக் குழுக்களும் இரானை தளமாக பயன்படுத்தி பாக்கிஸ்தானின் தென்பகுதில் உள்ள மாநிலமான பலுசிஸ்தானின் விடுதலைக்காக போராடுகின்றன.

     

    https://edition.cnn.com/2024/01/18/middleeast/pakistan-targets-locations-iran-intl-hnk/index.html

     

  5. ஈழப்போரில் சரித்திரமாகிவிட்ட பல போராளிகள் சம்பந்தப்பட்ட  உண்மை நிகழ்வுகளை போ.நி.க.கு  பாதிக்கு பாதி தான் பதிந்து வைத்திருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் தான் எனது கருத்தை இந்த திரியில் எழுதினேன். மற்றும்படி திரியை திசை திருப்பவதோ அல்லது  கேள்விக்குட்படுத்துவதோ எனது எண்ணமில்லை.

    நீங்கள் குறிப்பிட்டபடி திகதிகளை சரி பார்த்தேன். போ.நி.க.குவை தடுத்து வைத்த சம்பவம் (ஜூன் 2002) நிகழ்ந்தது வேறு திகதிதான். இரு சம்பவங்களையும் இணைத்து கருத்து பதிவிட்ட  தவறுக்கு வருந்துகிறேன்.  இவ்விரு சம்பவங்களும் பத்திரிகை, தொலைகாட்சி செய்தியாக்கப்பட்டு முக்கிய பேசுபொருளாகவும் அந்த காலகட்டத்தில் இருந்தது. 

    நீங்கள் இங்கு பதிவிட்டுகொண்டிருக்கும் கடற்கரும்புலிகள் பற்றிய  இந்த   திரி  தொடரட்டும். 

  6. போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் இறுதி அறிக்கையில் இந்த நிகழ்வு வேறுவிதமாக உள்ளது. விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் இருந்த ஒரு மீன்பிடிப்படகை தாங்கள் சோதனைகுட்படுத்தியபோது அதில் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையில் 23 மிமி சுடுகலம் ஒன்று இருந்ததை தாங்கள் கண்டறிந்ததாகவும் புலிகள் இரண்டு கண்காணிப்பு  உத்தியோகத்தர்களையும் அவர்களின் சொந்த விருப்பத்துக்கு மாறாக படகில் நீண்ட நேரம் தடுத்து வைத்து இறுதியில் புலி வீரர்கள் தாங்களும் தற்கொலை செய்து படகையும் அழித்த தருணத்தில்  தமது உயிரை காப்பற்ற  கடலில் குதித்து  கடற்படையினரின் படகில் ஏறி கரை சேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

    large.LTTEfishingboat.png.92b59088afe39296fea3ae83a4b3b0de.png

    Suicide Ship: While inspecting a LTTE fishing boat, weapons were uncovered; minutes later the
    SLMM monitors had to jump ship to save their lives, before the LTTE cadres blew up the boat,
    committing suicide.

    நன்றி:

     

    The SLMM report 2002–2008
    Compiled by
    the Sri Lanka Monitoring Mission (SLMM)
    as the final report from the Head of Mission (HOM) to the Royal Norwegian government
    as Facilitator, and for public distribution.
    Copenhagen Helsinki Oslo Reykjavik Stockholm 2008–2009
    Published by the Ministry of Foreign Affairs (MFA), Oslo, October 2010

  7. On 5/1/2024 at 07:48, புரட்சிகர தமிழ்தேசியன் said:

    சென்னை தியாகராய நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் இப்படி எல்லாம் பேசலாம் என்றால் அதுதான் கர்வம்.

  8. தமிழ் தரப்பினர் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதைப்பற்றி பரிசீலித்தல் மிக மிக அவசியம். அதே வேளை தேர்தலுக்கு முந்திய சிங்களக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் அதை ஒரு தந்திரோபாய ஆயுதமாகவும் பயன்படுத்தலாம்.  சிங்கள கட்சிகளுடன் திருப்திகரமான உடன்பாடு எதுவும் எட்டமுடியாவிடின் தமிழ் தரப்பினர் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தழினத்தின் அரசியல் அபிலாசைகள் வெளிப்படுத்தப்பட்டு அவர் தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளை பெற்றுக்கொள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் களமிறங்கி செயல்படுதல்வேண்டும்.

  9. நாகபட்டினம் / காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவைக்கு என்ன நடந்தது.
    இப்போது சரக்கு கப்பல் வரும் என்றால் மக்களும் அதில்தான் பயணிக்கவேண்டுமா?

  10. இதேபோன்ற அலங்காரங்களுடன் ஒரு மிதவை இரண்டுவருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் கரையொதுங்கியதாக தகவல் உண்டு. அடிப்பாகத்தில் அடுக்கி  வைக்கப்பட்டுள்ள காற்றடைக்கப்பட்ட சுமார் 12 உலோகத்திலான பீப்பாய்கள் (barrels) இந்த மிதவையை  நீண்ட கடற்பயணத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

  11. 7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

    விஷயம் தெரியாமல் உங்கடை ஏரியாவைப் போட்டிட்😀டனோ ??

    அப்படி இல்லை அக்கா நான் லண்டனில் (யூகே யில்) வசிப்பவன் அல்ல. நீங்கள் பதிவிட்ட வீடு இருக்கும் இடத்துக்கு  நான் ஒருபோதும் வந்ததுமில்லை. மேலும் சொல்லப்போனால் அங்கு எனக்கு தெரிந்தவர்கள்கூட கிடையாது. உண்மையில் உங்கள் கதை மிகவும் சுவாரஸ்யமா இருந்தது எனினும் நீங்கள் எடுத்துக்காட்டாக பதிவிட்ட வீட்டின் படத்தை பல கள உறவுகள்  கமெண்ட் பண்ணவும் தவறவில்லை. அந்த வகையில் நீங்கள் பதிவிட்ட படத்தை ஆராய்ந்து சில தகவல்களை கண்டறிந்தேன் அவ்வளவுதான். இதுபோன்ற தரவுகள் தீய சக்திகளிடம் சிக்காமல் இருக்க நாங்கள் தான் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை மட்டும் தான் நான் சொல்லவந்தேன்.

  12. 7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

    அதுவேறு இது வேறு 😀

    அதுதானே பார்த்தேன்,
    நீங்க காட்டின(சுட்ட) வீட்டின் இலக்கத்துடன் ஒப்பிடும்போது எதிர்பக்கத்தில  47 ஆம் நம்பர் மட்டுமல்ல வேறு எந்த வீடும் வர்றத்துக்கு சான்ஸே இல்ல என்பதால் தான் அக்கா நான் அப்படி எழுதினேன்.
     

  13. 6 hours ago, கிருபன் said:

    எதிர்ப்பக்கம் 47 நம்பரில் எங்கள் நண்பர்கள் வாடகைக்கு இருந்தவீடுதான் எங்கள் வார இறுதிக் கொட்டகை!

    நான் ஒத்துக்க மாட்டேன் பாஸ். நீங்க இடம் மாறி சொல்வதாக தெரிகிறது.
    அக்கா வந்துதான் இதை கிளியர் பண்ணணும்.

  14. இது உங்க வீடாக்கா, அல்லது இந்த படம் எங்காவது சுட்டதா.
    காலம் கெட்டு கிடக்கு நீங்கவேற. சொந்த வீட்டு படத்தை இணையத்தில இணைக்கிறது உங்க விலாசத்தை  கொடுக்கிறதுக்கு சமனானது. நான் உங்க இடத்தை சேர்ந்தவன் கிடையாது ஆனாலும் இந்த படத்தை வைச்சு நீங்க இருக்கிற இடத்தை என்னால் சொல்ல முடியும். இனிமேல் பாத்து பண்ணுங்கக்கா.

    • Like 1
    • Haha 2
  15. On 14/12/2023 at 18:02, ஈழப்பிரியன் said:

    உயிரை வெறுத்து ஆயுதம் தூக்கியவர்கள் .......

    மண்ணிற்காக போராடிய எங்கள் மைந்தர்கள் தம் விலைமதிப்பற்ற  உயிரை நேசித்தே  களமாடியவர்கள். அவ்ர்கள் நேசித்த ஒன்றை எமக்கு கொடையாக தந்தார்கள்.
    வெறுத்த உயிரைத்தான் அவர்கள் ஈகம் செய்தார்கள் என்பது மாவீரர்களின் தியாகங்களுக்கு  பெருமைசேர்க்காது..

    • Like 1
  16. தமது இறுதிக்காலத்தில் தனிமையில் வாழப்போகிறோம் என்று தெரிந்தால் அல்லது நோய்வாய்ப்பட்ட காலத்தில்  அருகில் இருந்து உதவ பொறுப்பான எவரும் இல்லாமல் போகலாம் என்று கவலையடைந்தால் இறுதிகாலத்தில் தமக்கு எப்படியான மருத்துவ சிகிச்சை தரப்பட வேண்டும் என்பதை தாம் சுய சிந்தனையுடன் இருக்கும் காலத்திலேயே தமது மருத்துவருடன் ஆலோசித்து எழுத்துருவில் அதை ஆவணப்படுத்தி வைக்கும் (Living will) நடைமுறை அமெரிக்கா உட்பட  சில நாடுகளில் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன்.

    அதுபோலவே ஆங்கிலத்தில் DNR என சுருக்கமாக அழைக்கப்படும் "Do not resuscitate" என்ற  ஆவணத்தையும் சிலர் தம்முடன் எப்போதும் வைத்துகொள்வதாக  அமெரிக்காவில் வசிக்கும் எனது உறவினர்  மூலம் அறிந்தேன். ஒருவர் தனது வாழ்க்கையின் இறுதி நேரத்தை நெருங்கும் வேளையில்  சுயநினைவை இழக்க நேரிட்டால் அல்லது பேச்சு மூச்சு நின்றுபோனால் தனக்கு   முதலுதவி எதுவும் தராமல் என்னை இயற்கையாகவே சாக விடுங்கள் என அவசர  முதலுதவி சிகிச்சை வழங்குவோரை அல்லது மருத்துவ உத்தியோகஸ்த்தர்களை கேட்கும் ஒரு விண்ணப்பமாக இந்த  DNR ஆவணம் எழுதப்பட்டிருக்கும். குறித்த ஆவணம்  ஒரு நபரின் இதயம் சம்பந்தமானது என்றால் அதற்கு DNACPR அதாவது "Do Not Attempt Cardiopulmonary Resuscitation" என்ற குறியீட்டுடன் அழைக்கப்படும். 

    • Like 3
  17. myheritage.com, 23andme.com, ancestry.com, geni.com, familysearch.com இப்படி பல இணையத்தளங்களின்   உதவியோடு எவரும் தங்கள் உறவு விருட்சத்தை  உலகளாவிய ரீதியில் தேட முடியும்.  

    நான் myheritage.com இல் எனது உறவு விருட்சத்தை எனக்கு தெரிந்தவரையில் பதிந்து வைத்துள்ளேன். அதன் செயலி தானாகவே உறவுகளை அவற்றின்  தரவுகளின் அடிப்படையில் அவதானித்து உறவுமுறைகளில் ஒற்றுமைகள் இருந்தால் அவற்றைக் கண்டுபிடித்து அறிவிக்கும்.  சுயவிருப்பத்தின்படி பெறப்படும் DNA தரவு   மூலம் இந்த உறவுமுறைகள்  சரிபார்க்கப்பட்டு உறுதிசெய்யப்படும்.

    myheritage.com இல் சந்தாதாரராக சேர்ந்தவர்களுக்கு அதிகளவு பயன்பாடுகள் கிடைக்கும். இலவச பயனாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மட்டுமே.

    • Like 1
  18. 19 hours ago, nedukkalapoovan said:

    பிள்ளையாரின் கால் ஆக்கிமிடிக்ஸ் தத்துவத்துக்கு உட்பட்டது. கால் கிடையாக இருக்கும் போது கூடிய கடலுடனான தொடுபரப்பு.. மேலுதைப்பு நிறையை விட அதிகமாவதால்.. மிதக்கவும்.. கால் நிலைகுத்தாகவோ.. சரிவாகவோ ஆனால்.. தொடுபரப்பு குறைந்து.. மேலுதைப்பு...நிறையை விட குறைவதால்..மூழ்கவும் செய்கிறது.

    இன்று காலை இந்த விளக்கம் எனக்கு புரியவில்லை என்பதை வெளிப்படுத்த ஒரு எமோஜி மூலம் பதிவிட்டிருந்தேன். யாரோ அதை தூக்கிவிட்டார்கள்.
    https://courses.lumenlearning.com/suny-osuniversityphysics/chapter/14-4-archimedes-principle-and-buoyancy/

     

  19. இந்தச் செய்தியின் தலையங்கத்தில் குறிப்பிட்டபடி இலங்கையில்  சட்டங்களை அமுல்படுத்தவே அடுத்தவன் பணம் கொடுக்கவேண்டியுள்ளதாக தெரிகிறது. முதலில் இந்த 300 டொலர் பணத்துக்கு என்ன உத்தரவாதம் என்று ஐ.நா அரசாங்கத்தை கேட்கணும். இலங்கையை பொறுத்தவரை இது ஒரு பெரிய தொகை ஆகவே இலஞ்சம் கொடுத்துதான் ஊழலை  ஒழிக்கணும் என்பதை ஐ.நா வே ஏற்றுக்கொள்கிறதோ?

    புதிதாக நியமிக்கப்பட்ட ஐ.நா வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி இலங்கை அரசு ஊழல் தடுப்பு சட்டத்தை அமுல்படுத்தியதற்கும் நாடாளுமன்ற பட்ஜட் அலுவலகத்தை நிறுவியதற்கும் தனது வாழ்த்துக்களை இலங்கை அரசின் பிரதி நிதிகளுக்குத் தெரிவித்துக்கொண்டாரேயன்றி  ஊழல் ஒழிப்புக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக  குறிப்பிடவில்லை.

    அடுத்த 5 ஆண்டில்  சட்ட அமுலாக்கம், தேர்தல்முறைகளை மேம்படுத்தல்,  அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்புதல் ஆகிய இன்னோரன்ன விடயங்களுக்காகவே இந்த நிதி வழங்கப்படுகிறது.

    http://www.colombopage.com/archive_23B/Sep04_1693840515CH.php

  20. இலங்கையின் அரசியலமைப்புக்கும் ஜனநாயக கோட்பாடுகளுக்கும் அப்பால் நாட்டை வெகு சீக்கிரமாகவே  100 சத வீதம்  ஒரு சிங்கள பெளத்த நாடாக மாற்றிவிடும் மறைமுக திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருவதன்  ஒரு அங்கமாகவே இந்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன.  வடக்கு கிழக்கு உள்ளடங்கலாக அனைத்து  பூர்வீக தமிழர் பிரதேசத்திலும்  நாடுபூராகவும் சிங்களமக்களின் இனப்பரம்பலையும் அவர்களின் குடியேற்றத்தையும் உறுதிசெய்ய சிங்கள தலைவர்கள் கங்கணம் கட்டிவிட்டார்கள்.

    அவர்களின் அரசியல் யுத்திகளால்  தமிழ் அரசியல்வாதிகள் சிந்தனைக் குருடர்களாக்கப்பட்டு தமிழினத்துக்குள் கட்சி பிளவு,  பிரிவினைவாதம், பிரதேசவாதம் அனைத்தும் தலைதூக்கி நிற்கிறது. எமது இளைஞர்கள், சிறியோர் போதைப்பொருளுக்கு அடிமையாக்கப்பட்டு விட்டார்கள். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது போய் இப்போது விகாரை இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லும்படி ஆகிவிட்டது.

  21. அண்மையில் நாட்டின் ஜனாதிபதி  யாரோ ஒரு பிக்கனை சந்தித்து ஆசீர்வாதம் பெறச்சென்றபோது தான் எப்போதும் பெளத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்குவேன் என்று உறுதிமொழி கொடுத்தே அந்த பிக்கனின் ஆசீர்வதம் பெற்றதாக செய்திகளில் வந்தது.

    பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டின் ஜனாதிபதி ஒரு மதத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி ஏனைய மதங்களை புறந்தள்ளு நோக்கத்துடன்  இப்படியான ஒரு வார்த்தைப்பிரயோகத்தை வெளிப்படையாகவே செய்யக்கூடுமென்றால் அந்த நாட்டில் உண்மையான நீதி எங்கே இருக்கப்போகிறது. அப்படி பார்த்தால் புறந்தள்ளப்பட்ட அந்த மக்களை ஆட்சி செய்வதற்கு அந்த ஜனாதிபதிக்கு எந்தவிதத்திலும் உரிமையும் கிடையாது. 

    சிறிலங்காவில் காவாலி பிக்கன்மார் வரிஞ்சு கட்டிகொண்டு வந்து நாட்டின் அரசிலில் தலையிடுவதினால் ஏற்படப்போகும் தாக்கத்தை அடுத்த தலைமுறை உணரும் காலம்  வெகுதூரத்தில் இல்லை.

  22. கையோடு நல்ல தமிழ் பெயருடன் புதிய பெயர்பலகை ஒன்றையும் பொருத்திவிடுங்கள்.

    இதுபோன்ற ஒரு இடத்தை பூர்வீக நூதனசாலை என்று அழைப்பது எந்தளவில் பொருந்தும் என்பது தெரியவில்லை. பொருட்காட்சி, அருங்காட்சியகம் அல்லது அருங்காட்சி நிலையம் என்று அழைப்பதுதான் சிறப்பாக பொருந்தும்.

    இலங்கை இஸ்லாமிய வரலாற்று அருங்காட்சியகம், காத்தான்குடி

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.