Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

vanangaamudi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1,909
  • Joined

  • Last visited

Posts posted by vanangaamudi

  1. மீன் அறுத்தல், கோழி அறுத்தல், ஆடு அறுத்தல், மாடு அறுத்தல் இப்படியே இந்த பட்டியல் நீளும். இஸ்லாமியர்களின் புரியாத  தமிழாக்கம். !!

    • Haha 1
  2. On 7/10/2021 at 04:14, புரட்சிகர தமிழ்தேசியன் said:

    அப்படி ஒன்று இருந்தால் கிந்தியன் "சைடு போர்" போட்டு உருவி இருப்பான் என்பது அமைச்சருக்கு தெரியாதா.? 😊

    ஆமால்ல, இதுபோலதான் 1990 ஆண்டு ஈராக் குவைத் பார்டெர்லையும் நடந்துச்சு.

     

  3. கம்சி என அழைக்கப்படும் கம்சாயினி நோர்வே நாட்டில் தமிழ் பின்புலமுள்ள ஒரு அரசியல்வாதி மட்டுமே. மற்ற அரசியல்வாதிகளைப்போலவே இவரும் தேர்தலில் வென்று தெரிவு செய்யப்பட்டுள்ளார் இவரை நோர்வே தமிழர்தான் தெரிவு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தார்கள் என்றோ தமிழர்களை மட்டுமே இவர் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றோ  கூறமுடியாது. நாடாளுமன்ற பிரதிநிதியாக அவருக்கு என ஒரு அரசியல் பாதை இருக்கும் அது இலங்கையின் இன பிரச்சனையை கரிசனையில் எடுக்காமலும்  இருக்கலாம். கொஞ்சம் பொறுத்திருந்தால் காலம் பதில் சொல்லும்.

    தொழில்கட்சி சார்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றுக்கு முதல்தரமாக சென்றுள்ள இவரை எழுந்தமானமாக அனந்தி விமர்சிப்பது எனக்கு புத்திசாலித்தனமாக படவில்லை. கம்சி நாடாளுமன்றத்தில் பதவி பிரமாணம் எடுத்திருப்பாரோ தெரியவில்லை. கம்சியின் வெற்றி இலங்கை தமிழ் இனத்துக்கும் அதற்கும் மேலாக தமிழ் தேசியம் பேசும் இலங்கை தமிழ் அரசியவாதிகளுக்கும் நோர்வே நாடாளுமன்றத்தில் பின்புற கதவை திறந்துவிடும் என எண்ணுவதும் ஜதார்தமாகது.
     
    கம்சி ஒரு அரசியல்வாதி, அவர் தனது கட்சியின் சார்பில் அவர் புலம்பெயர்ந்து வாழும் நாட்டுக்கும் சேவையாற்றவே அங்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் தனது கட்சி சொன்ன பாதையில் தான் பயணிக்கவேண்டும். தனது கட்சியுடன் முரண்பட்டுவிட்டு பின் ஓடிபோய் தனிக்கட்சி ஆரம்பிப்பதும் அந்த நாட்டில் வழக்கமில்லை. அவர் சரியாக செயல்படவில்லை என்றால் மக்களே அவரை அடுத்த தேர்தலில் நிராகரித்துவிட்டுபோவார்கள். உங்களுக்கு என்ன வந்தது.

    இலங்கையில் நடைமுறை வேறு. அங்கு உள்கட்சி பூசல், ஊழல், சுயநலம், உறவினருக்கு முன்னுரிமை, பதவி மோகம், குடும்ப அரசியல் இப்படி நடைமுறையிலிருக்கும் ஜனநாயக விரோத அரசியல் கலாச்சாரங்களை வரிசையாக அடிக்கிக்கொண்டே போகலாம். அப்படி பார்த்தல் அனந்திக்கு உள்நாட்டுக்குள்ளேயே நிறைய வேலையிருக்கும் என்பதையும் அவர் எண்ணிப் பார்க்கவேண்டும்.
     
    அனந்தியின் இதுபோன்ற காட்டமான விமர்சனங்களுக்கு இலங்கை நோர்வே ஆகிய இரண்டு நாடுகளுக்கிடையிலான வேறுபட்ட அரசியல் கலாச்சார பார்வைதான் காரணமாக இருக்கமுடியும். நோர்வே அரசாங்கம் இலங்கை தமிழர் பிரச்சினையை எப்படி கையாளும் என்பதை கம்சி தீர்மானிக்க முடியாது. இவை எல்லாவற்றிகும் மேலாக நோர்வேயின் வெளிநாட்டு கொள்கை அந்நாட்டு அரசில்வாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்.
     
    கட்சியின் கொள்கையை முன்வைத்து விட்டுகொடுப்புகளுடன்  ஜனநாயக கோட்பாடுகளை மதித்து ஒன்றுகூடி நாட்டின் பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என விடைதேடுவது அங்குள்ள அரசியல் கலாச்சராம். சுயநலத்தை முன்னிறுத்தி நாட்டையும் தான் சார்ந்த மக்களையும் மறந்து விட்டுகொடுப்பு எதுவுமின்றி பிரச்சினைக்கு தான் சொன்ன தீர்வே சரி என்று  வாதாடுவது இலங்கை போன்ற நாடுகளின் அரசியல் கலாச்சாரம்.
     
    கம்சாயினிக்கு அரசியலில் பாடம் எடுக்க நினைப்பது அனந்தியின் அரசியல் அறியாமையின் உச்சம். உண்மையில் அனந்தி இப்படி ஒரு அறிக்கையை விட்டாரா அல்லது இது ஊடகங்களின் சிண்டு முடியும் குல்மாலா என்பதும் தெரியவேண்டும்.
    • Like 4
  4. ஊரில் சிறு வயதில் தமிழ் ஆசிரியர் பாட நேரத்தில் சொன்ன ஒரு விடயம் நினைவுக்கு வந்தது அதனால் கேட்டேன்.
    இந்திய தமிழ் அறிஞர் வேதாசலம் என்று பேற்றோர் இட்ட தனது இயற்பெயரை மறைமலை (வேதம்=மறை, அசலம் = மலை)என மாற்றி வைத்துக்கொண்டார்.
    பிற்காலத்தில் மறைமலை அடிகளார் என அறியப்பட்ட இவர் வடமொழியும் ஆங்கிலமும் நன்கு கற்றவர். தமிழை வேற்று மொழிக்கலப்பின்றி எழுதவும் கற்கவும் மக்களை ஊக்கிவித்தவர். இவரும் நல்லூர் ஞானபிரகாச அடிகளாரும் சமகாலத்தினரே.

    • Like 2
  5. 4 hours ago, கிருபன் said:

    இதற்கான ஆயுதத்தை உங்களிடம் கொடுத்திருக்கின்றோம்.

    இந்த வசனத்தை வாசித்து டக்கியர் வேறுவிதமா புரிந்துகொள்ளபோறார். எதுக்கும் கவனமாய் இருங்கோ அப்பன்.

    • Haha 1
  6. கடற்தொழில் அமைச்சருக்கும் பல்கலைகழக கலாச்சார கற்கை நெறிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று தெரியவில்லை. தனிப்பட்ட அரசியல்வாதிகளின் அரசியல் தலையீடு இல்லாமல் எதையும் செய்யமுடியாது என்ற நிலைதான் இப்போது இலங்கையில். அரசியல் இலாபம் அடைவதற்கு சிக்கல்களை வேண்டுமென்றே உருவாக்கி அதை தீர்த்து வைத்து தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்புவது இவர் நோக்கமா? 

  7. 6 hours ago, பிழம்பு said:

    280 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வளங்களை வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கிருக்கின்றோம் என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.

    இப்பவே தடுமாறுதே, கையில் எண்ணை விற்ற பணம் வந்தால் எப்படி இருக்கும்?

  8. விண்வெளி விஞ்ஞானத்தில் Cluster என்ற பதம் பல விரிவான அர்த்தங்களில் வரக்கூடும்.
    உதாரணமாக கோள்கள், நட்சத்திரங்கள், நட்சத்திர கூட்டங்கள், நட்சத்திர கூட்டங்களின் கூட்டங்கள் இப்படி எது ஆயினும் அவை  தொகையாக சேர்ந்து ஒரே ஈர்ப்பு விசை மண்டலத்துள் இருந்து இயங்கும்போது cluster என அழைக்கப்படும்.

    Warm hole என்பதை பட்டியலில் சேர்த்தது போலவே Black hole யும் உங்கள் பட்டியலில் சேர்த்திருக்கலாம்.

    நீங்கள் Dawrf என எழுதியிருப்பது குள்ளம் என பொருள்படும் Dwarf என்று நினைக்கிறேன். இதையும் சரிபார்த்து கொள்ளவும்.

    பாதை மாறிய ஒரு meteoroid பூமியின் ஈர்ப்பு மண்டலத்தால் கவரப்பட்டு  புவியை நோக்கி மிகை ஒலி வேகத்தில் வரும்போது வளிமண்டலத்தின் உராய்வு காரணமாக மித வெப்பமாகி ஆகாயத்தில் (பூமியின் மேற்பரப்பிலிருந்து 125 கிலோமீட்டருக்கும் குறைவான உயரத்திலேயே) எரிந்துபோவது meteor எனப்படும்.

    Meteor shower என்பதையும் பட்டியலில் சேர்க்கலாம் என நினைக்கிறேன்.

    இணையத்தில் பல இடங்களில் Rover என்பதற்கு திரிசாரணன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    • Thanks 1
  9. சூரிய வெளிச்சத்தில் இருந்து தாவரங்களுக்கு தேவையான ஒளியின் பகுதி மனித கண்ணுக்கு தெரியும் ஒளியின் பகுதிக்குள் தான் அடங்குகிறது. ஆனால் பல தாவரங்களுக்கு சூரிய வெளிச்சத்தில் உள்ள பச்சை நிறம் மட்டும்  தேவையில்லை என்பதால் அதை வந்தவழியே(?) விட்டு விடுகிறது. அதனால்தான் தாவரங்கள் பார்வைக்கு பச்சையாக தெரிகின்றன.

    கண்ணாடி வீட்டுக்குள் செல்லும்போது அதிக வெளிச்சத்தினால் கண்கள் கூசினால் குளுகுளு கண்ணாடி அணிந்து கொள்ளவும். வீட்டு பாவனைக்கு தயாரிக்கப்பட்ட LED lights பயன்படுத்துவதால் மனிதருக்கு தாக்கமில்லை. கண்ணுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு புற ஊதாக்கதிர்களை வெளிப்படுத்தும் மின்விளக்குகளை வீட்டு பாவனைக்கு என விற்பனை செய்யப்படுவதில்லை.

    தாவரங்கள் வளர்ப்பதற்கு மின் விளக்குகள் வாங்கும்போது சூரியவெளிச்சத்துக்கு ஒப்பானதான வெளிச்சம் அதிலிருந்து வருமா என்பதை நிச்சயப்படுத்திகொள்ளவும். பொதுவாக நிற வெப்பநிலை 6500K (கெல்வின்) கொண்ட குழாய் விளக்குகளை (tube lights) பயன்படுத்தி மரங்களை வளர்ந்த பின் அவை பூக்கும் பருவத்தில் 2000 K - 3000 K வெளிச்சம் தரும் வேறு குழாய் விளக்குகளுக்கு மாற்றிவிடலாம்.

    கண்ணாடி வீட்டின் நிலப்பரப்பில் ஒவ்வொரு  சதுர மீற்றருக்கும் ஒரு விளக்கு என்ற எண்ணிக்கையில் 36W வலுவுள்ள 6500 K  குழாய் விளக்குகளை பயன்படுத்தவும். உதவிக்கு வேண்டுமானால் grow lights (LED tube lights) பயன்படுத்தவும். இவை தாவரங்களுக்கு முக்கிய தேவையான சிவப்பு (அலைநீளம் 650-670 nanometer ) மற்றும் நீலம் (அலைநீளம் 430-450 nanometer ) ஆகிய இரு நிறங்களை மட்டும் வெளிப்படுத்தும்.

    பொதுவாக தோட்டத் தாவரங்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகளில் ஆலோசனையும் உதவியும்  பெற்றுக் கொள்ள முடியும்.

  10. ஒரு நபருக்கு நாளொன்றுக்கு  80 லீட்டர் (24000x1000/300000) குடிநீர் என்பது மிக அதிகம். இதில் வேறு தேவைகளுக்கான தண்ணீரும் அடங்கும் என்றால் வீண் செலவும் சக்தி விரயமும் ஏற்படும். இந்த குடிநீரை மக்களுக்கு விநியோகிப்பதற்கு அரசு பயன்படுத்தும் வழிகள் என்ன?

  11. எங்கடை அப்புகாத்துமரும் இராஜதந்திரிகளும் வெளியில் வந்து எப்போது அறிக்கைவெளியிடுவினம்?

    முள்ளை முள்ளாலைதான் எடுக்கவேணும் என்பதிலை எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது.

  12. ஸ்ரீலங்கா தேசிய கொடிகளை கையில் பிடித்தபடி இனப் பிரச்சினை பற்றிய கோஷங்களுடன் எந்த பதாதைகளையும் ஏந்தாமல் ஆர்பாட்டம் செய்பவர்கள் வேறு யாராயிருக்கும். இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழர்கள் இனப்பிரச்சினை பற்றிய கோஷங்களுடன் அணிதிரளாமல் தடுப்பதற்கும் முக்கிய வேறு பிரச்சனைகளிலிருந்து  கவனத்தை திசை திருப்பவும் கோத்தா அரசின் எடுபிடிகாளால் நிகழ்த்தப்படும்  ஒரு திட்டமிட்ட ஏற்பாடு.

    எங்கள் பக்கம் இருந்து எவரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லைபோல் தெரிகிறது.

    • Like 2
  13. இந்த உலகத் தமிழர் பேரவை (GTF) என்ற அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை  வர்த்தமானியில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதா அல்லது இவர்களும் கோத்தாவின் பினாமிகளா? 

  14. இலங்கையில் ஊடகங்கள் அங்கு நிகழும் குற்றச்செயல்களைப்பற்றி செய்தி வெளியிடும்போது  தலையை விட்டு வாலை பிடிப்பதுதான் வழக்கம். வெளியே மண் அகழ்வு சட்டரீதியாகத்தான் நடக்கிறது கூலித்தொழிலாளர்கள் தமது வேலையை சரியாகத்தான் செய்கிறார்கள். ஆனால் மண் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம்தான் சட்டத்துக்கு மாறாக வழங்கப்படுகிறது. இங்கே விசாரிக்க்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டியவர்கள் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும்தான். விசாரணையை ஜனாதிபதியிடமும் அமைச்சுகளிலும் நாடாளுமன்றத்திலும் ஆரம்பித்து குற்றவாளிகளை தேடுங்கள்.

  15. சீனா உலகின் கேடு கெட்ட நாடுகளையும் இனப்பிரச்சனைக்கு முகம்கொடுத்து ஓட்டாண்டியான வறிய தேசங்களையும் தன்வசப்படுத்தி வருகிறது. இதற்கு ஏற்ப தன்னிடம் உள்ள பொருளாதார வளங்களையும் தாராளமாக பயன்படுத்திவருகிறது. வெவ்வேறு கால கட்டங்களில் ஆப்கானிஸ்தானில் மூக்கை நுழைத்து பாடம் கற்றுக்கொண்ட ரசியாவும் அமெரிக்காவும் இராணுவத்தை வாபஸ் பெற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளபோது  சீனாவோ புதிய அத்தியாயத்தை அங்கே தொடங்க முனைகிறது.

    சீனாவின் இந்த புதிய அணுகுமுறை இப்போது தனது படைகளை வாபஸ் பெற்றுக்கொண்டு வெற்றிடத்தை உருவாக்கிகொடுக்கும் அமெரிக்காவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் பேரதிர்ச்சியாகவும் இருக்கலாம். இனிமேலாவது  ஆப்கானிஸ்தான் மக்கள் சுபீட்சமாக வாழ்வார்களா என்பதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    • Like 1
  16. இராஜதந்திரி என்ற அளவுகோலில் பார்க்கும்போது இந்த அம்மா அந்த சும்மிலும் ரொம்ப உசத்தியாக்கும். அம்மா ஜாகையை இந்தப்பக்கமா மாத்தி நம்ம கிட்ட வந்தான்ன பயபுள்ளக்கு சரியான போட்டியாயிருக்கும்.

  17. பிள்ளையான், கருணா ஏன் டக்கிளசும் தமது மாற்றுக்கருத்தாளர்களையும், அரசியல் எதிராளிகளையும் சிண்டுமுடிந்து தங்கள் காலத்தை ஓட்டுபவர்கள். அந்தக் கோணத்தில் பார்க்கும்போது இங்கு ஒரு சொல் தொக்கி நிற்பதாகவே எனக்குப் படுகிறது.

    அதாவது பிள்ளையான் சொல்வது "திட்டம் இல்லாமல்.....தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மற்றையவர்கள்போல் மேற்கொள்ளவில்லை" என்பதாகவும் இருக்கக்கூடும்.

  18. சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பது முதுமொழி. இந்த அம்மா மட்டுமல்ல இன்னும் பல ஈழத்தமிழர்களும்  பதவியில் இருந்தபோது இனப்பிரச்சினை பற்றி எங்கும் பிரஸ்தாபிக்கவுமில்லை உதவிக்கு ஓடிவரவுமில்லை. அம்மா போன்ற கல்விமான்களையும்  அனுபவசாலிகளையும் உள்வாங்கி  தகுந்த வழிநடத்தலுடன் தமிழ் தரப்பின் துறை சார் நிபுணர்களாக அல்லது இராஜதந்திரிகளாக சர்வதேச தொடர்புகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது எனது அபிப்பிராயம். அதற்கு எம்மிடம் உறுதியான தலைமைத்துவமும் தூரநோக்குள்ள செயற் திட்டங்களும் இருக்க வேண்டும். மாறாக  நாடாளுமன்றத்திற்கு அல்லது மாகாணசபைக்கு மக்கள் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டால்  இவர்கள் அங்கு எதையும் சாதித்துவிட முடியாது.

  19. அடுத்தமுறை ஊருக்கு போய் பஸ் பயணம் போக ஏறும்போது உள்ளே சீனாக்காரர் யாராவது இருக்கிறாங்களா என்று பார்த்துபயணம் செய்யுங்கப்பா. இதுபோல இலங்கையில் நடக்க இன்னும் அதிகம் நாளில்ல.

     

    • Thanks 1
  20. என்னப்பா இந்த ஜட்ஜ் தீர்ப்ப சொல்லிபுட்டு பேசுற டியலாக்கும் படத்தில வர்ற ஒரிஜினல் டியலாக்கு மாதிரியே இருக்கே.
     

    • Like 1
  21. ஜனாதிபதி சட்டதரணி முறைமை பற்றிய சரியான புரிதல் இல்லையெனில் இந்த செய்தியை பலர் தவறாக விளங்கிகொள்ள வாய்ப்புள்ளது. ஜனாதிபதி சட்டதரணி என்பவர் ஜனாதிபதிக்காகவோ அல்லது அவரின் காரியாலத்திற்காகவோ வேலைசெய்யும் ஒரு சட்டதரணி என்பது நேரடியான பொருள் அல்ல. சேவை நிமித்தம் தெரிவுசெய்யப்பட்ட சட்டதரணிகளுக்கு இலங்கை குடியரசு ஆவதற்கு முன்னர் (1972) இருந்த Q.C(Queen´s Counsel / மகாராணி சட்டதரணி) என்ற கெளரவ பட்டம் வழங்கும் முறை இலங்கையில் ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்டபின் (1984) மாற்றியமக்கப்பட்டு P.C (President´s Counsel / ஜனாதிபதி சட்டதரணி) என்ற கெளரவ பட்டம் வழங்கும் முறை கொண்டுவரப்பட்டது. செய்தியில் "நியமிக்கப்பட்டார்கள்" என்பது "பட்டமளித்து கெளரவிக்கப்பட்டனர்" என்று இருந்திருக்க வேண்டும். 

  22.  

    2 hours ago, தமிழ் சிறி said:

    சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது.

    பொறுப்பற்ற எகத்தாளமான பதில். நீயென்ன கேட்கிறது நனென்ன சொல்கிறது என்பதுபோன்ற தொனி தெரிகிறது.
    சிங்களவன் கேட்டதென்ன சீனன் சொன்னதென்ன!!!
    ராஜபகச சகோதரர்களின் சீனவிசுவாசத்திற்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

    2 hours ago, தமிழ் சிறி said:

    எனினும் அந்த சீருடை, சீனாவின் ஒரு நிறுவனத்துக்கு உரியது என்றும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

    அந்த நிறுவனத்தின் பணிபுரியும் இவர்கள் தனியார் இராணுவசேவையை சேர்ந்தவர்களோ. இலங்கை அரசாங்கத்துக்கே  தெரியாது இலங்கையில் சீனாசார்பில் எந்த கம்பனிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று.

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.