Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

vanangaamudi

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1,909
 • Joined

 • Last visited

Everything posted by vanangaamudi

 1. அண்மையில் இலங்கையில் சுவிஷ் தூதரக பணியாளர் கோத்தாவின் புலனாய்வாளர்களால் கடத்தப்படவில்லையெனில் இப்படியான ஒரு தீர்ப்பு கிடைதிருக்குமோ தெரியாது. சர்வதேச அரங்கில் இது போன்ற தீர்ப்புகளால் மட்டுமே சிறிலங்கா அரசின் இனவாத ஒடுக்குமுறை அராஜகம் முடிவுக்கு கொண்டுவரப்படலாம். இதை தமிழ் மக்களுக்கு சார்பான நகர்வாக மாற்றுவது எமது அரசியல் வாதிகளின் காய் நகர்த்தலில் தங்கியுள்ளது
 2. பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனம் வழங்கி வைக்கும் நிகழ்வில் ஒரு அரசியல்வாதி வரவேண்டிய தேவை இல்லை அங்கு அரசியல் பேச வேண்டிய அவசியமும் இல்லை. அரசியல்வாதிகள் பாடசாலைகலையும் அங்கு கல்விகற்கும் மாணவர்களையும் தமது அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்க தவறாக பயன்படுத்துகிறார்கள். இனப்பற்றுள்ள ஒரு அரசியல்வாதியாக இருந்தால் ஏமாற்றப்படமுன்னதாகவே அதுபற்றி உசாராகி செயற்பட்டிருப்பீர்கள். கட்சியில் உள்ள அரசியல்வாதிகள் எவருக்குமே இதை ஊகிக்கமுடியவில்லை என்றால் நீங்கள் ஏன் கட்சி நடத்துகிறீர்கள். ஏமற்றப்பட்டது இதுதான் முதல் முறை என்பது போல இவரின் பேச்சு உள்ளது.
 3. இந்த பிரச்சனைக்கெல்லாம் உடனடி தீர்வு அமெரிக்கன் கையிலை இருக்கு. இதுவரை கிடப்பில் போடப்பட்டிருந்த கோத்தாவின் பிரஜாவுரிமை விலகல் விண்ணப்பத்தை பரிசீலிக்க தொடங்கியிருக்கிறோம் என்று அமெரிக்க குடிவரவு குடியகல்வு அமைச்சு ஒரு அறிக்கை விட்டாலே போதும் கோத்தாவின் கதை கந்தலாகிவிடும்.
 4. இந்த வரிக்குறைப்புகளும் வரி விலக்கல்களும் வேண்டுமானால் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகிந்தவின் வாக்கு வங்கியை நிரப்ப தேவைப்படலாம் ஆனால் கஜானா காலியாக நாடு வங்குறோத்து ஆவது நிச்சயம்.
 5. பயணிகளுக்கு ஏற்பட்ட சேதவிபரம் எதுவும் ஏன் செய்தியில் குறிப்பிடப்படவில்லை. சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று மட்டும் சொல்லப்பட்டுள்ளது.
 6. பல போராளி இயக்கங்களின் இடையே தமிழரின் இராணுவ பலம் சிதறிக்கிடந்ததும் ஆயுதப்போரில் நாங்கள் தோல்வியடைய காரணமானது. அது போலவே இன்று எமது வாக்குப் பலமும் பல்வேறு தமிழ் கட்சிகளுக்குள் பிரிந்து அந்த கட்சிகளின் விருப்பின்படி அவை அனைத்தும் இனவாதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் சிங்கள தலைவர்களையே சென்றடையப்போகிறது. சிவாஜிலிங்கம் அதிபர் தேர்தலில் களமிறங்கி நிற்பதை நாம் பல்வேறு கோணங்களில் நோக்கமுடியும். அரசியல் காழ்ப்புணர்வுகளுக்கும் அப்பால் சென்று சிவாஜி சொல்வதில் என்ன உண்மையை இருக்கிறது அவ்வாறாயின் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதையும் நாங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும். எதிர்வரும் அதிபர் தேர்தலை முற்று முழுதாக பகிஸ்கரியுங்கள் என்று அரசியல் நாகரிகமுள்ள எந்த ஒரு தமிழ் கட்சியும் மக்களுக்கு அறிவுறுத்தப்போவதில்லை. சரி ஒட்டு மொத்த தமிழரும் தேர்தலை புறக்கணித்து பகிஷ்கரிப்பார்கள் என்றே வைத்துகொண்டலும் அப்போதும் கூட தமிழ் மக்களுக்கு என்ன நன்மையா நடக்கும்? தமிழரின் வாக்குகள் கிடைத்தால் என்ன விட்டால் என்ன ஒரு வேட்பாளர், இந்த முறையும் தனது இனத்தின் அபிலாசைகளை மட்டுமே மதிக்கும் ஒரு சிங்களவர்தான் வெல்லப் போகிறார். அவரிடமும் எமது அரசியல்வாதிகளை அனுப்பி பழைய குருடி கதவை திறவடி என்று பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்று காலத்தை கடத்தத்தான் போகிறோம். எதிர்காலத்தில் பேச்சு வார்த்தைகளில் நாங்கள் பங்கெடுக்கும் போது சிங்கள தலைமைகளும் உலக நாடுகளும் தமிழ் தரப்பை மதித்து உண்மையான ஈடுபாட்டுடன் நடந்து கொள்ளவேண்டுமாயின் தமிழரின் அரசியல் பலம் என்ன என்பது அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் மட்டுமே முடியும். அதை எப்படி நிரூபிப்பது? அனைத்து தமிழ் மக்களும் தங்கள் வாக்குகளை வீணடிக்காமல் சிவாஜிக்கே போடவேண்டும். இப்படி செய்வது அவரை அதிபர் தேர்தலில் வெற்றியடைய செய்வதற்காக அல்ல. அது முடியக்கூடிய காரியமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படியானால் வேறு எதற்காக? தமிழரின் ஒட்டுமொத்த வாக்கு பலம் என்ன என்பதை காட்ட! உரிமை போராட்டத்தில் தமிழர்கள் ஒற்றுமையுடன் இணைந்திருக்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்து சொல்ல! ஓன்று திரண்ட இந்த வாக்குப் பலம் தான் ஈழத்தமிழரின் அதி உச்ச அரசியல் சக்தி. இதுதான் ஈழத்தமிழனின் பேரம்பேசும் அரசியல் பண்டம். இதன் பின்னணியில் தான் எதிர்காலத்தில் எந்த தீர்வுத்திட்டமும் வரையறை செய்யப்படும். இது நாடு முழுவதற்குமான தேர்தல் இதில் தான் எமது பலத்தை ஒன்றிணைந்து காட்ட முடியும். இந்த அதிபர் தேர்தலை நாங்கள் எமது அரசியல் பலத்தை நிரூபிக்கும் ஒரு களமாக மாற்ற தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி அணிதிரளவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் அதிபர் தேர்தலில் மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் எமது சொல் உள்வாங்கப்படும். இன்று எமது அரசியல் பலம் என்ன என்பது எவருக்குமே தெரியாது. தமிழர்கள் அனைவரும் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறார்களா என்பதும் தெரியாது. வெளியில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்பதில்லை. எமது இனத்துக்குள்ளும் பொது மட்டங்களில் ஜனங்களுக்கு வேண்டிய புரிதல் இல்லை. கடந்த காலங்களில் சிங்கள ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் எமது மக்களை ஒரு வித அரசியல் விரக்தி நிலைக்கு செல்ல தூண்டிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். சிங்களவன் தந்தாலும் சரி தராமல் போனாலும் சரி உள்ளதை வைத்துகொண்டு வாழ்ந்திட்டு போவோம் என்ற எண்ணம் பாமர மக்களின் கருத்தாக வெளிப்பட தொடங்கிவிட்டது. இது ஒருவித விரக்தியின் வெளிப்பாடு. தமிழ் அரசியல் தலைவர்கள் இந்த அதிபர் தேர்தலில் செய்யப்போகும் மந்திர மஜா ஜாலம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
 7. யாழ்ப்பாணத்துக்கு எப்ப பிளேன் விடுவாங்கள் என்று யாராவது கேட்டு சொன்னால் நல்லது. அவசர அவசரமாக திறப்புவிழா செய்துபோட்டு எயெர்போட்டை மூடி வைத்திருக்கிறாங்கள். எயர் இந்தியாவோ அல்லது எயர் லங்காவோ யாழ்ப்பாணத்துக்கு விமான சீட்டு பதியும் இணைய செயலியை இன்னும் தயார்படுத்தவில்லை. யாழ்ப்பாண விமான நிலைய குறியீடு JAF என்பதை எவருமே இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. சிங்கள அரசின் தேர்தல் கால செப்படி வித்தைக்கு தமிழர்கள் மீண்டும் குறிவைக்கப்பட்டார்களா என எண்ணத் தோன்றுகிறது.
 8. கோட்டா அதிபராகி வந்தால் எங்கட ஏர்போட்டை மாட்டு தொளுவமா மாத்திட்டு தான் முதல் வேலை பாப்பாரு. அப்படி இல்லை தொடர்ந்து அதை இயங்க விட்டாலும் 100 % தென்னிலங்கை அலுவலர்களை வேலைக்கு அமர்த்தி போக்குவரத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்திய இலங்கை விமான சேவைகளில் இணையவழி பயண சீட்டு பதிவுகளுக்காக யாழ் விமான நிலையம் இன்னும் பட்டியலிடப்படவில்லை. தொடர்ச்சியான சேவைகளை கண்டபின் தான் எதுவும் நிச்சயம். எதற்கும் அதிபர் தேர்தல் நடந்து முடிய வேண்டும்.
 9. வாக்காளர்களின் மனங்களை மாற்றும் ஒரு தந்திரோபாய உத்தி தான். சில படங்களில் கூரை தற்காலிகமாக அமைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. குறுக்கும் நெடுக்குமாக கம்பிகள் தெரிகின்றன.
 10. மனித இனத்தின் விஞ்ஞான அறிவு வளர்ச்சி பாராட்டுக்குரியது அதேவேளை அனைவரும் விளங்கிக்கொள்வதற்காக செய்தி சரியான முறையில் பிரசுரிக்கப்பட வேண்டும். கருந்துளையில் புவியீர்ப்பு (பூமியின் ஈர்ப்பு) சக்தி இருப்பதற்கான வாய்ப்பில்லை. இங்கு புவியீர்ப்பு சக்தி என்பது ஈர்ப்பு சக்தி மட்டும்தான். அத்துடன் சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் என்பது நீளத்தின் அளவீடாக பூமிக்கும் கருந்துளைக்கும் இடையிலான தூரத்தைக் குறிக்கிறது. இது 5.2 கோடி (52000000 ) ஆண்டுகளில் ஒளி பயணம்செய்யும் தூரத்திற்கு சமனான தூரம். ஒளி (வெளிச்சம்) ஒரு ஆண்டில் சுமார் 9460000000000 கி.மீ பயணம் செய்யும். அதாவது இந்த கருந்துளை பூமியில் இருந்து 491920000000000000000 கி.மீ தூரத்தில் உள்ளது. வேறுவிதமாக சொல்வதாயின் இந்த கருந்துளையை பூமியிலிருந்து படம்பிடித்த கருவியில் பதிவாகிய ஒளி இந்த கருந்துளையை விட்டு சுமார் 5.2 கோடி வருடங்களுக்கு முன்னர் (பூமியை நோக்கி) புறப்பட்டிருக்கவேண்டும். இது மிக நீண்ட காலம் என்பதால் இந்த கருந்துளை இப்போதும் உள்ளதா அல்லது அதற்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது. கருந்துளைகளின் ஈர்ப்பு சக்தி ஒளியையும் கவர்ந்திழுக்கும் அளவுக்கு அதிகமாக இருப்பதால் அதிலிருந்து ஒளிச்சக்தி வெளியேறாது. அதனால் அவை இருட்டாக இருப்பதனால் கரும்துளைகள் என அழைக்கப்படும்.
 11. சிவாஜி அணிந்திருக்கும் கோட்டின் கையில் காணப்படும் வெள்ளைப்பட்டி இடையில் (4 நிமிடம் 24 செக்கன்) காணப்படவில்லை.
 12. போரையும் விடுதலை போராட்டத்தையும் காரணம் காட்டி நம்மாளு புலம்பெயர தொடங்கியதிலிருந்து தமிழனின் விடுதலை உணர்வுக்கு ரொம்ப பேரு சங்கு ஊதிட்டாங்க. இயக்கம் எதிரியுடன் ஆயுதம் கொண்டு போராடிய அதே வேளையில் விடுதலையில் பற்றுறுதியற்று தடுமாறும் தமிழ்மக்களின் மனோநிலையுடன் ஒரு தார்மீகப் போராட்டைத்தையும் நடாத்திக்கொண்டிருந்தனர் என்பதே உண்மை.
 13. http://www.youtube.com/watch?v=ONjG4I-r7e4 பாடல்: ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் ... படம்: சாரதா வெளியீடு: 1962 குரல்: P. சுசீலா - PB. ஸ்ரீநிவாஸ் வரிகள்: கவியரசு கண்ணதாசன் இசை: KV. மகாதேவன் அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன? அவன்: காதல் அவள்: அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த உரிமைக்குப் பெயர் என்ன? அவன்: குடும்பம் அவள்: நினைத்தவன் அவளை மறந்துவிட்டால் அந்த நிலமையின் முடிவென்ன? அவன்: துயரம் அவள்: பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால் அங்கு பெண்மையின் நிலையென்ன? அவன்: மௌனம் அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன? அவன்: காதல் அவள்: இரவும் பகலும் உன் உருவம் அதில் இங்கும் அங்கும் உன் உருவம் அவன்: அடக்கம் என்பது பெண் உருவம் அதை அறிந்தால் மறையும் என் உருவம் அவள்: மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை அவன்: நினைக்கும் நிலையிலும் நான் இல்லை உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன? அவன்: காதல் அவள்: கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னைக் கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை அவன்: வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை அவள்: கண்டேன் கண்டது நல்ல வழி அது காதலனுடனே செல்லும் வழி அவன்: சொன்னேன் பலமுறை யாசிக்கிறாய் நீ சொன்னதை நானும்.. யோசிக்கிறேன் அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன? அவன்: காதல்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.