யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

uthayakumar

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  34
 • Joined

 • Last visited

Community Reputation

38 Neutral

About uthayakumar

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  Norway
 • Interests
  Poetry,politics and literature

Recent Profile Visitors

610 profile views
 1. உங்கள் கருத்துக்கு நன்றி நிலாமதி . நன்றி சுவி ,என்றோ ஒரு நாள் கனவுகள் உயிர்க்கும் .
 2. முதுமையும் மறதியும் நினைவு நினைவு மறந்து விட்டது நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை . அம்மாவின் மறதி என் பிறந்த தினத்தில் எப்பவும் மறக்காமல் வந்து வாழ்த்து சொல்லும் அம்மா இன்று எப்படி மறந்தாளோ . முதுமை வயது திண்டு கொண்டு இருக்கிறது என்னை மறந்து போகிறேன் என்னை என்ன செய்ய . கனவுகள் என் கனவுகளை சட்டமாக்கி கொள்ள அரசிடம் அப்பீல் கொடுத்து இருக்கிறேன் . மறதி மறதி மட்டும் மறக்காமல் இருக்கிறது மற்ரவை எல்லாம் மறந்து விட்டது . மறந்து போகிலேன் எல்லா என் நினைவுகளும் மறந்தே போகிலும் உந்தன் நினைவை மட்டும் மறக்காது இருக்கச் செய்வாய் தாயே . வெள்ளை மயிர் வெள்ளை மயிர் ஒன்று காட்டிக்கொடுக்கிறது காலவதியாகும் திகதியை . பா .உதயகுமார்
 3. நல்லதோர் வாழ்வு இருந்தது நல்லதோர் வாழ்வு ஒன்று இருந்தது ஒரு காலம் நாலு பேர் வந்து போயினர் நமக்காய் ஒரு வாழ்வு இருந்தது ஒற்றுமை ஒன்று இருந்தது ஒரு காலம் உறவுகள் வந்து போயினர் பிரியாமல் முற்றத்தில் வந்து இருந்தது முழுநிலவு பக்கத்தார் வந்து பேசினர் பல நேரம் ஆயிரம் சனம் இருந்தனர் அருகோடு அமைதியாய் கூடி வாழ்ந்தனர் குலையாமல் அங்கு ஓர் பிரிவும் இல்லை அனாதை என்ற ஓர் சொல்லும் இல்லை அழகான பனை இருந்தது அருகில் ஒரு வேம்பு நின்றது அதன் கிளையில் ஒரு குயில் இருந்தது கூவிப் பல பாடல் கேட்டது காடு இருந்தது காடு நிறையப் பூ இருந்தது பூவோடு கனவு இருந்தது கனவு மெய்ப்படக் காத்து இருந்தது பாட்டும் கேட்டது கூத்தும் கேட்டது பகல் எல்லாம் குழந்தை சிரித்தும் கேட்டது பறவைகள் வந்தனர் அருகில் இருந்தனர் பாடிப் பல பாடல்கள் கேட்டன மாடு இருந்தது மடி நிறையப் பால் இருந்தது மனிதர்க்கு இதில் அன்பு இருந்தது தாயைப் போல் பாலும் தந்தது தமிழர்க்கு இது அடையாளமானது மார்கழி மாதம் மழையுடன் பூத்த மல்லிகை போல் பல பெண்கள் இருந்தனர் ஆலய மணியின் ஓசைகள் கேக்க அள்ளிக் கூந்தலை கட்டிய பெண்கள் துள்ளி திரிந்ததோர் காலம் ஒன்று இருந்தது கடல் இருந்தது கார்த்திகை பூ இருந்தது கல்லறை எங்கும் தீபங்கள் எரிந்தது கனவுகள் கண்ட உயிர்களின் பாடல் காத்தினில் கேக்கும் காலம் ஒன்று இருந்தது எம்மோடு மண் இருந்தது மண்ணில் பல மரம் இருந்தது மரத்தில் பல கூடு இருந்தது கூடிப் பல குஞ்சுகள் வாழ்ந்தது நிலம் ஒன்று இருந்தது நின்மதி இருந்தது கடல் இருந்தது வயல் இருந்தது வயிறு நிறைய சோறு போட்டது காவலுக்கு ஒரு படை இருந்தது அது வரை துணிவு இருந்தது நிமிர்வும் இருந்தது அன்று ஒரு நாள் யுத்தம் வந்தது அழகிய எம் வாழ்வை தின்று தீர்த்தது அழகிய நிலவு ஒன்று கடலில் வீழ்ந்தது அத்தனை கனவும் கரைந்தே போனது இருப்பது மட்டும் தொலைந்தவன் கண்ணீர் இனி ஒரு காலம் இது போல் வருமோ .
 4. உறவுகள் உறவுகள் இருந்தனர் ஒரு காலம் ஒற்றுமை இருந்தது பலகாலம் கூடியே வாழ்ந்தனர் ஒரு கூட்டில் குலைந்து இப்போ போயினர் சில காலம் அன்புடன் இருந்தனர் ஒரு காலம் அப்பன் அம்மை சொல் படி நடந்தனர் ஆயிரம் சண்டைகள் பிடித்தனர் ஒரு காலம் அடுத்த நாள் மறந்தே சிரித்தனர் இரவின் நிலவில் கதை பேசி கதையில் கனவுகள் கண்டு வந்தோம் இருப்பதை பகிர்ந்து உண்டு வந்தோம் இல்லாது இருந்தும் சிரித்து இருந்தோம் கருப்பையில் விதைத்தது விஷம் இல்லை நாம் உண்டது ஒன்றும் நஞ்சு இல்லை இரத்தத்தில் இருப்பது ஒரு வேர் தான் இது தான் விதி என அறியாயோ வாழ்வுகள் இருப்பது சில காலம் வருவதும் போவதும் ஒரு காலம் உறவுகள் என்பது தொடர் காலம் இதை நீ உணர்வாய் ஒரு காலம் . பா .உதயகுமார்
 5. அருள்மொழிவர்மனுக்கும் அம்பானைகும் உங்கள் கருத்துக்கு நன்றிகள் உலகத்தின் இன்று சமத்துவம் இன்மையும் ஏற்றதாழ்வுகளும் அதி தீவிர வலது சாரி போக்கு உடையவர்களின் செல்வக்குமாக ஒரு உலக ஒழுங்கை நேக்கி நகர்வது மனித இருப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன . அருள்மொழிவர்மனுக்கும் அம்பானைகும் உங்கள் கருத்துக்கு நன்றிகள் உலகத்தின் இன்று சமத்துவம் இன்மையும் ஏற்றதாழ்வுகளும் அதி தீவிர வலது சாரி போக்கு உடையவர்களின் செல்வக்குமாக ஒரு உலக ஒழுங்கை நேக்கி நகர்வது மனித இருப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன .
 6. மதமும் மனிதர்களும் _____________________ உங்கள் நலன்களுக்கு அப்பால் எப்பொழுது மானிடம் பற்றி நீங்கள் சிந்திக்கிறீர்களோ அப்பொழுது தான் இந்த இரத்த களரியை இல்லாமல் ஆக்க முடியும் மதத்தின் பெயராலும் சொந்த நலத்தின் பெயராலும் உலகம் பிளவுபட்டு கிடக்கும் வரை மிஞ்சி இருக்கப்போவது இரத்தமும் சாம்பலும் தான் மத அடிப்படைவாதிகளினாலும் சொந்த நல பொருளாதார சுரண்டல் காரர்களினாலும் சிரியாவும் ஈராக்கும் இன்று மனிதம் புதைந்த ஒரு சாம்பல் மேடுகளாக மாறி இருக்கிறது . இன முரண்பாடுகளும் மத முரண்பாடுகளும் மீண்டும் மீண்டும் தொடருவதற்கு அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் அதிதீவிர மதவாதிகளுமே காரணமாகிறார்கள் .சிறு பான்மை இனத்தின் இருப்புகள் அதன் உரிமைகள் அடையாளங்கள் எல்லாம் வன்முறை மூலம் அளிக்கப்பட்ட வரலாறுகளே தொடர்கின்றன .ஒரு கையில் ஜனநாயக்கதோடும் மறு கையில் ஆயுதங்களாக வியாபார உலகமாக இருக்கும் போது மனிதம் வாழுவதற்கு இடமேது . ஒரு வன்முறைக்கு இன்னும் ஒரு வன்முறை தீர்வாகாது ஒரு பிழைக்குஇன்னும்ஒருபிழையைசுட்டிக்காட்டுவது குழந்தைத்தனமானது .மனித குலத்துக்கு எதிரான எல்லாவன்முறைகளுமேகண்டிக்கத்தக்கவை . முதலாளித்துவத்தின் சுரண்டல்காரர்களின் பெயரால் மதத்தின் பெயரால் நடாத்தப்படுகின்ற எல்லா வன்முறைகளும் மனித மானிட தர்மங்களுக்கு எதிரானவையே . மதம் என்பது ஒரு மனிதனை வன்முறை இல்லாதவனாக ஒழுக்கமான ஒரு சமூகத்தை உருவாக்க முனையும் ஒரு சமூக காரணியாகும்.(social fact). ஆதி கால மனிதன் வன்முறையும் கொலையுமாக சமூக அரசியல் பொருளாதார எந்த கட்டமைப்பும் இன்றி தமக்குள் மோதி இறந்தனர் .பல பரிணாமம் கடந்து மக்கள் அரசனோடு ஒரு ஒப்பந்தம் செய்து அவனிடம் அனைத்து அதிகாரங்களையும் ஒப்படைத்து ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்கினான் .பின்பு மறுமலர்ச்சி (Renaissance period)காலங்களோடு சமுக அரசியல் ஜனநாயக பண்புகள் உடன் படி படியாக உலக நாகரீகம் வளர்ச்சி கண்டது . அரசியல் சமூக கலாச்சார பொருளாதார ஸ்தாபனங்கள் வளர்ச்சி கண்டு சமூக இயக்கத்துக்கு காரணமாக அமைந்தன .மதம் என்பதும் இதன் அடிப்படையில் ஆனதே .சமூகவியலாளர் கார்ல் மார்க்ஸ் கூடி மதத்தை எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை ,மதம் என்பது அவின் போன்றது என்று மதமும் பொருளாதாரமும் என்ற தனது ஆய்வுகளில் குறிப்பிட்டு இருந்தார் . முதலாளித்துவ சுரண்டலுக்கு மதம் முக்கியமானது இதனால் மதம் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் வேறு வேறு பாத்திரங்களில் தோவையாக இருந்தது .முதலாளித்துவ சுரண்டலாலும் தொழிலாளர் தனிமை(alienation) அடைவதால் மதத்தை தொழிலாளி நாடி போக வேண்டி இருந்ததாக கார்ல் மார்க்ஸ்சின் சோஷலிச தத்துவம் விபரிக்கின்றது ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் துன்பங்களின் நிமித்தம் மதத்தை நாடுவதும் ஆண்டவனை வேண்டுவதுக்கும் அடிப்படையாக அமைந்தது முதலாளித்துவ வர்க்க சுரண்டலாகும் .அதே வேளை குடும்பங்களை பிரிந்து இயந்திர வாழ்வோடு மனிதன் இருப்பதால் அமைதி வேண்டி ஆண்டவனை நாடுவது அவர்களுக்கு ஒரு மன அமைதியை தருவதாகவே தொழிலாளர் கருதினர் .இதயம் இல்லாத உலகில் இதயம் போன்றதே மதம் என்று மார்க்ஸ் கூறினார் . ஆகவே மதம் என்பது அமைதியை தேடுவதற்கும் மனிதனை நல்வழிபடுத்தி வன்முறை இல்லாத ஒரு சமுதாயமாக இருபதற்கு ஆன ஒரு மார்க்கமே அன்றி வன்முறைக்கும் மனித அழிவுகளுக்கும் மதம் காரணமாக இருப்பது நாகரிகமான விஞ்ஞான பூர்வமான சிந்தனைக்கு அப்பால் ஆனது .class of civilisation நாகரீகங்களுக்கு இடையிலான யுத்தம் என்ற தனது நூலிலே சாமுவேல் ஹன்டிண்டன் என்ற அமரிக்கா அரசியல் அறிஞர் மிகவும் தொளிவாக விபரிக்கின்றார் அதாவது யூதர்கள் தங்கள் நாகரிகமும் மதமுமே முதன்மையானதென்றும் தமது கடவுளை விட வேறு கடவுள் இல்லை என்றும் இதே போலவே இஸ்லாமியர்கள் தமது நாகரிகத்தையும் கடவுளையும் விட வேறு கடவுள் இல்லை எனவும் இதே போலவே ஏனைய மதத்தவர்களும் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் பிளவு பட்டு நாகரீகங்களுக்கு இடையிலான மோதல்களாகவே உலகம் ஒரு வன்முறை கலாச்சாரத்தை நேக்கி நகரும் என்றார் . மனிதனின் பாதுகாப்பு நிச்சயா தன்மை இல்லாது இருப்பின் அந்த மனிதர்களின் கலாச்சாரமும் நாகரிகமும் முன்னேற்ரமான பாதையை நோக்கி நகர முடியாது. Civilization and culture cannot make progress where human life is unsafe And insecure.ஆகவே மனிதர்கள் பாதுகாப்புடன் வாழவேண்டிய அனைத்து பாதுகாப்பையும் உறுதி படுத்துவது அந்த நாட்டின் நல் ஆட்சியின் கடமையாகும் .ஒரு மனிதன் மத நம்பிக்கையுடனோ அல்லது மத நம்பிக்கை இல்லாது இருப்பதும் அவனது உரிமை சார்ந்ததாகும்.எந்த மதத்தையும் அவர் அவர் நம்பிக்கையுடன் பின் பற்ற யாரும் தடை போட முடியாது .இருப்பினும் மனித வாழ்வுக்கு எதிராக மதத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் நிறுத்த படவேண்டும். முற்போக்கு சிந்தனை உடைய மனிதர்கள்,கல்விஅறிவுடைய சமூகத்தினர் இணைந்து மதங்களின் பெயரால் கட்டு அவிழ்த்து விடப்படும் வன்முறைகளை நிறுத்தி புதியதொரு நாகரீக சமுதாயம் ஒன்றை நோக்கி நகர இவர்கள் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.மனிதர்கள் பாதுகாப்புடன் வாழக்கூடிய புதியதோர் உலக ஒழுங்கை உலக தலைவர்களும் மதகுருமார்களும் இணைந்து முன் நோக்கி நகர்த்துவார்களா . B.Uthayakumar/Oslo
 7. History Repeats Itself வரலாறுகள் சுழண்டு கொண்டு தான் இருகின்றன அன்று ஒரு நாள் ஈழத்து கிழவன் ஒருவன் சமஸ்டி கேட்டான் இதே காவி உடை கண்டியில் இருந்து வந்த ஊர்வலத்தால் கடைசி வரை துன்பம் தொடர்ந்தது இன்று ஒரு நாள் இன்னும் ஒரு கண்டி ஊர்வலம் இது முஸ்லிமுக்கு மட்டுமல்ல ஈழ தமிழனுக்கும் இது ஒரு எச்சரிக்கை இந்துவும் முஸ்லிமும் இனி இணைந்தால் ஒழிய இலங்கை பெரும் தேசியம் எப்பவும் அடங்காது இரண்டு மாநிலமும் இணைந்த தீர்வு ஒன்று தான் இந்துவுக்கு முஸ்லிமுக்கும் பாதுகாப்பாகும் .
 8. சட்டமும் ஒழுங்கும் சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள் பின்பு ஏன் பிக்குமாரை பின் கதவால் திறந்து விடுகிறார்கள் . நீதியும் அரசியலும் என்ன தீர்ப்பை இலங்கை நீதியரசர்கள் எழுத வேண்டும் என்று ஏற்கனவே எழுதி இருப்பர் இலங்கை அரசியல் வாதிகள் . நீதி எ .வி .டைசியின் சட்ட புத்தகம் இலங்கையில் செல்லுபடியாகாது இங்கு நீதி என்று எங்கும் இல்லை . அரசியல் கைதிகள் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை அவர்கள் தமிழர்கள் என்பதால் அப்படித்தான் அந்த அரசியல் அமைப்பு எழுதி இருக்கிறது . பா .உதயகுமார் .
 9. ஈழத்து சிறுமியின் டயறி மே 18ம் நாள் மே 18 ம் நாள் காலை பொழுது ஒன்றில் கையில் இரத்தங்களுடன் கடந்து போகின்றன பேரிரைச்சலோடு இராணுவ வண்டிகள் சாம்பல் மேடுகளை தாண்டியபடி அந்த ஊழியின் கடைசி தினம் அன்று பாதி பாண் துண்டை என் தம்பியின் கையில் கொடுத்து விட்டு நானும் தம்பியுமாக அம்மாவை பார்த்தபடி அந்த பதுங்கு குழியில் என்று தொடங்கும் அவளது டயரி குறிப்பு அன்று ஒரு நாள் அந்த நாசி படைகளுக்கு அஞ்சியபடி அந்த அவுஸ்வைஸ் சிறையில் இருந்து எழுதிய சிறுமி அன்னா பிராங்கின் யுத்த கால டயரி குறிப்புகள் போலவே இருந்தன .
 10. சரித்திரம் மீண்டும் சுழர்கிறது உலக வரை படத்தில் ஒரு சிறு துளி போல் இலங்கை என்று ஒரு தீவு ஓடிக்கொண்டே இருக்கிறது இரத்தம் சிங்கள பெரும் தேசியமும் மதவாதமும் இனவாதவும் வளர்ந்து விட்ட சிறு தீவில் சரித்திரம் மீண்டும் மீண்டும் சுழல்கிறது யாருக்குமே அமைதி இல்லாத தேசமாகிப்போனது விஷம் விதைத்தவர்கள் எல்லாம் வினையை அறுபடை செய்துகொண்டு இருக்கிறார்கள் அமைதியாகவே இருக்கிறார் புத்தர் மட்டும் அந்த ஆலமரத்தடியில் யாரும் அவர் வழியை பின்பற்ரவில்லை என்ற கவலையோடு . B.Uthayakumar
 11. உயிர்த்த தினம் அன்று சிலுவையில் சிதறி கிடந்த சிவப்பு இரத்தத்தில் எதுகுமே தெரியவில்லை எவன் முஸ்லீம் எவன் கிறிஸ்தவன் எவன் இந்து எவன் கறுப்பு எவன் வெள்ளை என்று எல்லாமே ஒரே நிறமாக இருந்தது . பா .உதயகுமார் .
 12. போலி ஜனநாயகவாதிகள் மத தீவிரவாதமும் ஏகாதிபத்திய நல சுரண்டல்களும் இன படுகொலைகளும் இருக்கும் வரைக்கும் இரத்தக்களரியை எந்த ஒர் தனி அரசாலும் நிறுத்தமுடியாது அணு குண்டோடும் ஆயுத விற்பனையோடும் மனிதர்கள் இருப்பதால் யாருக்கு தான் இருக்கப்போகிறது அன்பும் கருணையும் போலி ஜனநாயகத்தின் பெயரால் வந்து ஒரு பூவை வைத்து விட்டு போங்கள் எங்கள் இரத்தத்தின் நடுவில் . பா .உதயகுமார்