Jump to content

uthayakumar

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  512
 • Joined

 • Last visited

Everything posted by uthayakumar

 1. இந்து சமுத்திரத்தின் முத்து இருக்குதிப்போ பசியாய்-பா.உதயன் சகல இன மக்களும் சமத்துவ உரிமையோடு வாழ விடாமல் இனவாதமே முதலாகக் கொண்டு நாடு, மக்கள், சரியான பொருளாதார பாதை பற்றியோ சிந்திக்காத தனியவே பதவியை மட்டும் இலக்காக கொண்டு லஞ்சமும் ஊழலும் கொண்ட ஆட்சியாளர்களால் இந்த நாடு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. எந்த வித தூர நோக்கும் இல்லாமல் அடிப்படை மாற்றங்கள் எதுவும் இன்றி சிந்திக்காமல் இனவாதிகளை பதவிக்கு அமர்த்தி இன்று இந்த நிலைமைக்கு வர இந்த நாட்டு மக்களும் பெளத்தமத பேரினவாத மத துறவிகளும் இந்த நாட்டை அழித்து இன்று பெரும் அரசியல் பொருளாதார பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் நிலைமைக்கு காரணமாக இருக்கிறார்கள். எல்லா இன மக்களுமே என்ன செய்வதென்று தெரியாமல் நாளும் பொழுதுமாக நடு வீதியில் நின்று போராடுகின்றனர். இலங்கையின் நிலைமை இது தான். ————————————————————————————————————— -இந்து சமுத்திரத்தின் முத்து இப்போ இருளுக்குள் கிடக்கு பா.உதயன் இந்து சமுத்திரத்தின் முத்து இப்போ இருளுக்குள் கிடக்கு எல்லா சனமும் இங்கு பசியோடு இருக்கு அரிசி மாவு இல்லாம அட பசியாய் சனம் கிடக்கு அடக முடியா கோபத்தோட நாடு இருக்கு எங்க பணத்தை எல்லாம் திருடிப் போட்டு கொழுத்து திரியிறாங்கள் நாம தின்ன குடிக்க வழி இல்லாம தெருவில தான் தஞ்சம் குடிக்கக் கூட பால் இல்லாம குழந்தை குட்டி இருக்கு குளிக்கக் கூட சோப் இல்லாம நாடு நாறிக் கிடக்கு கையை எல்லாம் நீட்டி கடனை எல்லாம் வேண்டி கொடுக்க வளி இல்லாம அட சொல்லக் கூடி வெட்கம் எங்க நாடு படும் பாடு யுத்தம் என்று சொல்லி பணத்தை எல்லாம் கொட்டி ஆயுதங்கள் வேண்டி அழிச்சு போட்டு எம்மை குந்தி இருக்க கூட விடமாட்டோம் என்று தமிழ் இனத்தை அடித்து அவன் நிலத்தை பறித்தான் புத்தர் சிலைகள் எல்லாம் புதுசு புதுசாய் முளைத்து தமிழர் நிலம் எல்லாம் இப்போ புத்தர் நிலம் ஆச்சு எங்கள் வேதனையில் நீங்கள் வெற்றி விழா என்று வீதி எல்லாம் பாடி இப்போ வேதனையில் நீங்கள் பாடி அழுகிறீர்கள் தூர நோக்கு இல்லை தெளிந்த பாதை இல்லை பங்கு போட்டு நாட்டை ஏலம் போட்டு விற்றார் அபிவிருத்தி என்று ஆயிரம் கதைகள் எல்லாம் சொல்லி வடக்கு கிழக்கு எல்லாம் வசந்தம் வரும் என்று திருகு தாளம் பண்ணி திருடி போட்டான் பணத்தை ஆளுக்கு ஒரு பங்காய் அரசியல் வாதி எல்லாம் அமத்தி போட்டான் பணத்தை திருடிய பணத்தை எல்லாம் திரும்ப தாரும் என்று மக்கள் கேட்கிறார்கள் எந்தப் பதிலும் இல்லை காலி முகத் திடலில் கன நாளாய் சனங்கள் கோத்தா போ வீடு என்று கொதிச்சு போய் கிடக்கு கத்திப் போட்டு சனங்கள் கலைந்து போவார் என்று விட மாட்டேன் என்று விடாப் பிடியாய் நின்று கொடாப் பிடியாய் கோத்தா இனி தமக்கு எதிர் காலமே இல்லை என்று பலர் இப்போ இருக்கும் வரை இருந்து பறித்து மக்கள் பணத்தை சுருட்டி பதவியில் உட்கார தவிப்பு பாராளுமன்றம் இப்போ பாய்ந்து தாவித் திரிபவர் போலும் பைத்தியக்கார வைத்தியசாலை போல ஆளுக்கு ஆள் திட்டி குரைத்தபடி கிடக்கு அங்க ஏதும் தெளிவாய் கதைத்தபடி காணோம் ஒரு சிலர் மட்டும் ஒழுங்கா ஏதும் கதைப்பார் நாளுக்கு ஒரு அமைச்சர் மூன்றி இரண்டு பலம் இல்லாத முதல் அமைச்சர் கேலிக் கூத்தாய் போச்சு மக்கள் எல்லாம் ஏதோ மடையர் என்று நினைப்பு புதிய மொந்தையில் பழைய கள்ளு போல் ஆடையை மாற்றிய அதே திருடர்கள் அமைச்சர்கள் ஆனார்கள் உழைத்தவன் பணத்தை எல்லாம் உறுஞ்சிக் குடித்து கோட்டை கட்டி ஆண்ட மன்னர் எல்லாம் ஒருநாள் மக்கள் புரட்சி வந்தால் இவர்கள் கதை முடிச்சு போகும் வரலாறு எமக்கு கற்றுத் தந்த பாடம் காலம் மீண்டும் சுழலும் மாற்றம் மட்டும் ஒன்றே மாறாது இருக்கும். பா.உதயன்
 2. எல்லா மனிதனுக்கும் உரிமைகள் வேண்டும்-பா.உதயன் மக்களின் பணத்தை திருடிய கள்ளர் மானம் இழந்தே போவார்கள் உண்ணக் குடிக்க வளி இல்லை என்றால் மக்கள் தெருவில் இறங்கி எரிப்பார்கள் ஊழல் லஞ்சம் செய்தவன் கூட்டதை இனி ஆளும் கதையை முடிப்பார்கள் உத்தமர் போலே நடித்தவர் வாழ்வை உடைத்தெறியாமல் போகார்கள் மக்களும் இனி மேல் மாறிட வேண்டும் தப்பு செய்தவன் தலைமையில் இருந்தால் எப்பவும் கேள்விகள் கேட்டிட வேண்டும் எதிர் காலம் பற்றி சிந்திக்க வேண்டும் தப்பு செய்தவனை தண்டிக்க வேண்டும் நல்ல தலைமையை மக்கள் தெரியவும் வேண்டும் இனவாதிகள் இனிமேல் இருக்கவும் கூடாது இன மத பேதம் கடந்து போகுதல் வேண்டும் இன்னொரு இனத்தை அழித்தவர் வாழ்வு இறுதி வரைக்கும் நிலைக்காது இவர்கள் விதைத்து எல்லாம் அறுபடை செய்யும் காலம் இப்போ நடக்கிறது உழைக்கும் கரங்கள் உயரவும் வேண்டும் உலகம் முழுவதும் சமத்துவம் வேண்டும் எல்லா மனிதனுக்கும் உரிமைகள் வேண்டும் நாம் எழுதவும் பேசவும் சுதந்திரம் வேண்டும். பா.உதயன்
 3. நாங்கள் பசியோடு இருக்கிறோம்- என்று தணியும் இந்த இன்னல் வாழ்வு சொல்ல முடியாத துன்ப வாழ்வு. இலங்கைத் தீவின் 22 மில்லியன் மக்களின் வாழ்வு பெரும் பொருளாதார அரசியல் பிரச்சினைக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. இலங்கையின் சுதந்திரம் அடைந்த காலத்தின் பின் இதுவே முதற் தடவையாக இப்படியோர் பாரிய பிரச்சினையை இலங்கை மக்கள் எதிர் நோக்குகின்றனர். எரிக்க எண்ணெய் இல்லாமல் உண்ண உணவில்லாமல் வாழ வழி இல்லாமல் அன்று சொல்ல முடியாத துன்பத்தில் சோமாலியா இருந்தது போல் இன்று இலங்கை இருக்கிறது. நாங்கள் பசியோடு இருக்கிறோம் என்கிறார்கள் இலங்கை மக்கள். எல்லோரும் அதிகார ஆசை மதவாத அரசியல் இனவாத பேச்சு இப்படி எத்தினையாய் மதம் என்றும் இனம் என்றும் வெறுப்போடும் மனிதம் தொலைந்து சரியான கொள்கை இல்லாதவர்களின் திமிரான போக்கால் இன்று குனிந்து எங்கும் கடன் வேண்டும் நிலையாகி இந்து சமுத்திர முத்தென்று இருந்தின்று இலங்கை நிலைமாறிப் போச்சு. தமிழ் பயங்கரவாதிகளிடம் இருந்தும் பிரிவினை வாதிகளிடம் இருந்தும் இலங்கை மக்களையும் நாட்டையும் விடுதலை அடைய வைத்தோம் என்று கூறி வெற்றி விழா கொண்டாடிய இனவாத தலைவர்களால் இன்று அவர்கள் விடுதலை செய்த நாட்டில் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாதவர்களாக முடங்கிப் போய் இருக்கிறார்கள். எல்லாத் தாக்கற்திற்கும் மறு தாக்கம் இருப்பது போல் எதை விதைத்தார்களோ அதையே அறுபடை செய்து கொண்டிருக்கி றார்கள். "முடவன் மிக வேகமாக ஓடுவதை ஒரு குருடன் பார்த்ததாக காது கேளாதவன் கூறுகிறான்" - என்று பழைய யூத பழமொழி கூறுவது போல் தம்மை தெரிவு செய்து அனுப்பிய மக்களின் அடிப்படை தேவைகளை மறந்து இன்றும் மூழ்கிக்கொண்டிருக்கும் அரசோடு ஒட்டிக் கொண்டு தோல்வி அடைந்த ஒரு அரசுக்கு ஆதரவாக இருந்து கொண்டு அது சரியான பாதையில் பயணிப்பதாக பொய் கூறிக்கொண்டு இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருப்பது வெட்கக்கேடே. நாங்கள் தான் அனுப்பி வைத்தோம் நமக்காக பேசுங்கள் என்று நம்ம பிரதிநிதிகளை ஆனால் அவர்கள் இன்று பணத்திற்காகவும் பதவிக்காகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் இனவாதமும் வெறுப்புமாக முழு இலங்கையையும் சீரழித்து இன்று நாடு பெரும் அரசியல் பொருளாதாரா சிக்கலுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிரு க்கிறது. இவர்களோடு முண்டு கொடுத்து நின்ற எல்லா கட்சிகளும் இடது சாரிகள் என்று தம்மை தாமே அழைத்தவர்களும் இந்த மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். சிஸ்ரம் சரி இல்லை என்று சொல்கின்றனர் மக்கள் சிஸ்ரம் சரி இல்லாமல் ஆட்சி நடாத்துபவர்களால் சரியான ஆட்சியை நடத்த முடியுமா. மாறுவார்களோ மாற்றுவார்களோ இது பெரும் கேள்விக்குறியே. விடாப் பிடியாகவும் கொடாப் பிடியாகவும் தமது பதவியை விடாமல் தக்க வைக்க விரும்புவோரால் இலங்கை தாளுமா நிமிருமா இருந்து தான் பார்ப்போம். மக்கள் போராட்டம் இன்றுடன் 30 நாளைக் கடந்தும் இன்னும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டோ அல்லது மக்கள் போராட்டம் ரீதியாகவே அரச தலைவரையும் பிரதம மந்திரியையும் பதவி விலக்குவது குறித்து இன்னும் ஒரு தீர்வு எட்டப் படவில்லை. இவர்களை பதவி நீக்கியதன் பின் எப்படி மாற்றம் ஏற்படப் போகிறது என்பது எல்லாம் ஒரு இடியப்ப சிக்கல் போல் தான் நிலைமை காணப்படுகின்றது. தனித்தே தான் சிங்கள மக்களின் பெரும் பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட திமிரினாலும் தமிழரை தான் வெற்றி கொண்ட நவீன துட்டகைமுனுவாக தன்னை இனம் காட்டிக்கொண்டதனால் அரசு தலைவர் அன்று அனுபவவும் அறிவும் படிப்பும் கொண்ட பொருளாதார ஆலோசகர்கள் சொன்ன அறிவுரைகள் எதையும் கேட்கவில்லை. அனைத்து மக்களும் சமத்துவதோடு வாழவும் சரியான பொருளாத கொள்கைகளை வகுக்கவும் இல்லை. ஈழத் தமிழர் பிரச்சினைக்கு கூட இன்று வரை ஒரு தீர்வு எட்டப்பட வில்லை. இன்று மக்களால் நிராகரிக்கப் பட்ட நிலையில் இந்த அரசு சட்டபூர்வமான ஆளும் தன்மையை legitimacy இழந்துள்ளது. இனி இவர்களால் தொடர்ந்து ஆட்சி நடத்துவது கஸ்ரமே. எந்த அரசும் எப்போது தமது மக்களின் ஆதரவை இழக்கிறது அப்போதே அது தோல்வியடைந்த( Fail state) அரசாக மாறி விடுகிறது. புதிய மொந்தையில் பழைய 'கள்'..! ‘Old wine in a new bottle’ போலவே ஆளையும் மாற்றி அமைச்சரவையும் மாற்றினால் அவர்களில் காசுமரம் தானாய் முளைக்குமோ தேனும் பாலும் இனி தெருவெல்லாம் ஓடுமோ தலையணை மாற்றினால் தலையிடி தீருமோ அலாவுதீனும் அற்புத விளக்கும் இனி மந்திரத்தால் மாங்கனி பறிக்குமோ இல்லை ஜனநாயகமும் மக்கள் குரலும் வெல்லுமா இலங்கையில் இனி வரும் காலங்களின் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது பொறுத்திருந்து பார்ப்போம். பா.உதயன்
 4. மனிதனாக எவரும் இங்கு வாழவில்லையே தனியுடமை இன்னும் இங்கு போகவில்லையே பொதுவுடைமை எங்கும் இங்கு வரவுமில்லையே பொல்லாத உலகம் இது மாறவில்லையே எல்லோர்க்கும் எல்லாமே கிடைக்கவில்லையே உழைப்பவன் கை இன்னும் உயரவில்லையே உனக்கும் எனக்கும் சமத்துவம் எதுகுமில்லையே சமூக நீதி வந்ததாக தெரியவில்லையே மாற்றம் இன்னும் இங்கு மாறவில்லையே அது வரும் என்ற நம்பிக்கைதான் கையில் இருக்குது. பா.உதயன்
 5. புரட்ச்சிகர தமிழ் தேசியன் உங்கள் கருத்துக்கு நன்றிகள்!
 6. பசி பட்டினி பொருளாதாரத் தடை பெரும் போர் இழப்பு இதுவெல்லாம் புதிதல்ல ஈழத் தமிழருக்கு அதுவெல்லாம் கடந்து தான் நடந்து வந்தான் ஆனால் இவை எல்லாம் உங்களுக்கு புதிது தான் அன்று ஒரு நாள் அருகில் ஒரு தமிழ்க் குழந்தை பசி எடுத்து அழுத குரலும் கேட்கவில்லை பிள்ளைகளை தொலைத்து விட்டு பெரும் குரலாய் காடதிரக் கத்திய தாயின் கண்ணீரில் எழுதிய கதை ஒன்றும் உங்கள் காதுகளில் கேட்கவில்லை எதுகுமே கேட்கவில்லை ஈரமனம் எவருக்குமாய் இருந்ததாய் தெரியவில்லை அன்பும் அறமும் தர்மமும் கொண்ட அந்த தம்மபத புத்தனின் சிந்தனையும் உங்களுக்கு புரிந்ததாய் தெரியவில்லை கோபமும் கொலையுமாய் நல்லறிவை தொலைத்து விட்டு ஏதேதோ சூழ்ச்சி பண்ணி எங்களை வீழ்த்தி விட்டு துட்டகைமுனு கொண்டு வந்த யுத்தவெற்றி ஒன்று தான் நித்தம் உங்கள் தெருக்களிலே நீங்கள் பாடியது நினைவிருக்கா இனி ஒரு விதி செய்வோம் எல்லா இனமும் சமம் என்போம் இருளை கடந்து செல்வோம் தனி ஒருவனுக்கு உணவும் உரிமையும் இல்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம். பா.உதயன்
 7. இனி ஏது பிரிவென்று இரவு இன்று விடிய இசையோடு மொழி சேர்ந்து இனி காதல் கொள்க அழகான கனவொன்று நியமாகுமா அன்பென்ற மொழி ஒன்று இனி வாழுமா. இயற்கை அழிவுகளினாலும்,பெரும் தொற்று நோய்களினால், யுத்த அழிவுகளினாலும், போரும் மனித அவலங்களும் மரணங்களுமாக உலகம் இன்று அமைதி இழந்து ஒரு இருள் சூள்தபடி சுழல்கிறது. ஆக்கிரமிப்பும், அதிகாரமும், சுயநலன்களும் நாடுகளுடன் நாடுகளும் மனிதனுக்கு மனிதன் எதிரியாகவும் இருக்கிறான். மனிதனை மனிதன் கொல்லாமல், நாடுகளை நாடுகள் அடிமைப் படுத்தி சுய நலன் கருதி சுரண்டாமல் மனிதன் வாழ கற்றுக் கொள்வானா. ஆதிகாலத்தில் மனிதனுக்கு மனிதன் சண்டை போட்டது போல் இன்று நாடுகள் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. அன்பு, அறம், கருணை, சமாதானம், மனிதம் எல்லாம் இன்று தொலைந்த மனிதனாக வெறுப்பும் வேதனையுமாக மனித அவலங்களாக உலகம் இருப்பது பெரும் அவலம். உலக வளங்கள் எல்லாம் பணக்கார வர்க்கத்திடம் இருப்பதும் எத்தனையோ ஏழை நாடுகள் எவ்வித வளர்ச்சியும் இன்றி அந்த நாட்டில் வாழும் மக்கள் ஒரு வேளை உணவுக்கே வழி இன்றி திண்றாடுகின்றனர். உலக சமத்துவமின்மையால் எல்லோருக்கும் எல்லாமே கிடைப்பதில்லை. மானிட வரலாறுகள் எல்லாம் சரிகளோடும் பிழைகளோடுமே நகர்த்திருக்கிறது. மதங்களின் பெயரிலும், காலனித்துவ அதிகார சுரண்டலின் பெயரிலும், வல்லரசுகளின் அரசியல் பொருளாதார நலன் சார்ந்தும் உலகம் எத்தனையோ அழிவுகளை சந்தித்தது. யுத்த வடுக்கள் சுமந்து சென்ற வலிகள் எண்ணில் அடங்காதவை. சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், இலங்கை இப்படி எத்தனையோ ஆதிக்க வல்லரசுகளில் நலன் சார்ந்த யுத்தங்களினால் இந்த யுத்தங்களினால் ஏற்பட்ட மனித இழப்புக்கள் எத்தனை. இந்த யுத்தங்களுக்காக செலவிடும் எத்தனையோ பில்லியன் பணத்தை கொண்டு எத்தனையோ வறிய நாடுகளை முன்னேற்ற உதவி இருக்கலாம். பசியோடும் இருக்கும் எத்தனையோ குழந்தைகளுக்கு பசியையும் போக்கி கல்வியை கொடுத்து உதவி இருக்கலாம். யுத்தம் தொடர்ந்தபடி தான் இருக்கிறது. இன்று ரஷ்யா உக்ரைன் யுத்தத்தினால் உலகம் அமைதியை இழந்திருக்கிறது. யுத்தங்கள் கொடியவை இவைகள் தவிற்கப்பட வேண்டும். மனிதத் துயர்கள் இல்லாதிருக்க வேண்டும். எதிர்கால குழந்தைகள் பயமின்றி நடந்து செல்லும் அமைதிப் பூங்காவாக உலகமே மாறும் நம்பிக்கையோடு இன்று உலகை சூழ்ந்துள்ள இருள் விலகி இதுகும் கடந்து போகட்டும். இவை எல்லாம் கடந்து போய் யுத்தம் இன்றி சமாதானமாக மனிதனை மனிதன் நேசிக்கும் மானிடமும் அறமும் கொண்ட சுதந்திரம், ஜனநாயகம், சகோதரத்துவம் கொண்டு அன்பு என்ற மொழி பேசட்டும் அழகான பூ பூக்கட்டும் உலகம் அமைதியாய் துயில் கொள்ளட்டும். பா.உதயன்
 8. பல தமிழ் பெற்றோருக்கு மருத்துவம் மட்டுமே படிப்பாக தெரிகிறது அதுக்கென்ன படிப்பது நல்லதுதான் என்ன தான் இருந்தாலும் சும்மாவா மருத்துவ படிப்பும் ஆழமா அறிவோட படித்தால் தானே அங்கும் நுழைய முடியும் எத்தனை தமிழன் மருத்துவர் என்று எங்களுக்கு பெருமை தானே ஆனால் மருத்துவம் மட்டும் படித்தால் போதுமா கழுவவும் துடைக்கவும் தேடவும் தெரியவும் ஆடவும் பாடவும் அறிவோடு எழுதவும் அரசியல் பொருளியல் உளவியல் உயிரியல் சட்டம் சமூகவியல் சர்வதேச அரசியல் தத்துவம் என்றும் இலக்கியம் கலை கவிஞன் என்று எழுதவும் பேசவும் உந்தன் உரிமையை வெல்லவும் புவியியல் அரசியல் பூகோளத்திற்காய் என்றும் எத்தனை பேர் தேவை ஆதலால் இந்தப் படிப்புகளும் சும்மாவா புலம் பெயர்ந்து வந்தாலும் பிள்ளையின் படிப்புக்காகவும் உறவுகளின் பசிக்காகவும் உரிமைக் குரலுக்காகவும் விடிய விடிய வியர்வை சிந்தி குளிரிலும் பனியிலும் கொடுத்தானே வாழ்வை அவன் கூட சும்மாவா வந்தாலும் வந்தான் அகதியாய் வந்தாலும் ஆழமாய் புதைத்தாலும் அந்த விதை போலவே சட்டென்று முளைத்து பட்டென்று நிமிர டக்கென்று தெரியுதே என்று ஐயோ ஐரோப்பியருக்கும் அதிசயம் தானம் ஆதலால் அனைத்தையும் படிபோம் ஆயுதம் செய்வோம் அறிவைத் தேடுவோம். பா.உதயன்
 9. பெற்றோர்களுக்கான ஆக்கபூர்வமான கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.. அறிவியல் சார்ந்து தெரிவதற்கும் கற்பதற்கான உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் அனைவருக்கும்நன்றிகள்.கள உறவுகளின் கருத்துக்களில் இருந்து கற்பதற்கு நிறையவே உண்டு. நன்றிகள் பல.
 10. பல தமிழ் பெற்றோருக்கு மருத்துவம் மட்டுமே படிப்பாக தெரிகிறது அதுக்கென்ன படிப்பது நல்லதுதான் என்ன தான் இருந்தாலும் சும்மாவா மருத்துவ படிப்பும் ஆழமா அறிவோட படித்தால் தானே அங்கும் நுழைய முடியும் எத்தனை தமிழன் மருத்துவர் என்று எங்களுக்கு பெருமை தானே ஆனால் மருத்துவம் மட்டும் படித்தால் போதுமா கழுவவும் துடைக்கவும் தேடவும் தெரியவும் ஆடவும் பாடவும் அறிவோடு எழுதவும் அரசியல் பொருளியல் உளவியல் உயிரியல் சட்டம் சமூகவியல் சர்வதேச அரசியல் தத்துவம் என்றும் இலக்கியம் கலை கவிஞன் என்று எழுதவும் பேசவும் உந்தன் உரிமையை வெல்லவும் புவியியல் அரசியல் பூகோளத்திற்காய் என்றும் எத்தனை பேர் தேவை ஆதலால் இந்தப் படிப்புகளும் சும்மாவா புலம் பெயர்ந்து வந்தாலும் பிள்ளையின் படிப்புக்காகவும் உறவுகளின் பசிக்காகவும் உரிமைக் குரலுக்காகவும் விடிய விடிய வியர்வை சிந்தி குளிரிலும் பனியிலும் கொடுத்தானே வாழ்வை அவன் கூட சும்மாவா வந்தாலும் வந்தான் அகதியாய் வந்தாலும் ஆழமாய் புதைத்தாலும் அந்த விதை போலவே சட்டென்று முளைத்து பட்டென்று நிமிர டக்கென்று தெரியுதே என்று ஐயோ ஐரோப்பியருக்கும் அதிசயம் தானம் ஆதலால் அனைத்தையும் படிபோம் ஆயுதம் செய்வோம் அறிவைத் தேடுவோம். பா.உதயன்
 11. பெரும்பான்மை சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட சிங்கள தலைமையை சிங்கள மக்களே நிராகரிக்கும் பொழுது தமிழர்கள் தூக்கி நிறுத்த முடியுமா.தாண்டு கொண்டிருக்கும் கப்பலில் ஏறி தாமும் தாண்டு தம் இனத்தையும் தாள வைப்பதில் எல்லாம் தெரிந்த எம் இனத்தவர் வல்லவர்.தமிழருக்கு தீர்வை கொடு என்ற நிபந்தனையின் அடிப்படையிலாவது இவர்கள் முன் வந்திருக்கலாம்.தம் அதிகாரத்தை தக்க வைக்க ஆளும் தரப்பின் சூழ்சிக்குள் விழுவது தானே தமிழன் இராஜதந்திரம்.
 12. இருளுக்குள் மூழ்கிய தேசம்-பா.உதயன் இலங்கையின் தலைவர்கள் உண்மையான புத்தமத தலைவர்களாக இருந்திருந்தால் நாம் ஆயுதம் ஏந்தி போராடி இருக்க மாட்டோம் என்று தமிழர் விடிவுக்காய் போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் கூறி இருந்தார். One time the LTTE leader said to the media if the leader of the country is a real buddist he would not take arm struggle against government. அதேபோல் இந்த நாட்டின் பௌத்த பிக்குகளும் தலைவர்களும் உண்மையும் நீதியும் நேர்மையும் கொண்டவர்களாக இருந்து அனைத்து இன மக்களும் பெரும் பான்மை சிங்கள மக்கள் போலவே சமத்துவத்துடனும் சம உரிமையுடனும் வாழ வழி சமைத்திருந்தால் இன்று இந்த நாடு இவ்வளவு பெரிய பாரிய பிரச்சினையை எதிர் நோக்கி இருக்காது. சோசலிசம் கொம்யூனிசம் என்று சொல்லிக்கொண்டிருந்த ஒரு ஒரு சில சோஷலிச வாதிகளை தவிர அனைத்து போலி சோஷலிசவாதிகளும் கூட இதற்கு துணையாக இன்று இந்த நாடு இருளை நோக்கி சென்றடைவதற்கு காரணமாக இருந்தவர்கள் இவர்கள் எல்லோரும் தான். பௌத்த பேரினவாதம் என்கிற பெரும் பூதத்தை வளர்த்ததோடு மாத்திரம் இன்றி நாடு சுதந்திர பெற்ற காலத்தில் இருந்து சரியான சமூக அரசியல் பொருளா தாரத்தை கட்டி வளர்க்காமல் இலஞ்சம் ஊழல் என்ற நாட்டு மக்கள் பணத்தை சுரண்டி கல்வி அறிவோ அனுபவமோ இல்லாததவர் கைகளில் நாட்டை ஆளும் பொறுப்பை ஒப்படைத்ததனால் அதன் பலனை மக்கள் இன்று அறுபடை செய்து கொண்டிருக்கிறார்கள். சிறந்த பொருளாதாரக் கட்டமைப்பும் அரசியல் ஸ்திரத்ததன்மையும் இல்லாமல் எந்த அவிவிருத்தியும் வெளிநாட்டு முதலீடும் சாத்தியமாகாது என்பதை அரசும் அங்கு முதலீடு செய்யவிருக்கும் நாடுகளும் புலம்பெயர் தமிழர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். அபிவிரித்தி என்று சொல்லி அந்த அரசின் மாயைக்கும் இருந்தவர்களுக் இன்றைய இலங்கை நிலைமை நல்ல உதாரணமாகும். தனியவே தங்கள் சுய லாபம் மட்டும் கருத்தில் கொண்டு இதற்காகவே இலங்கைக்கு பெரும் வட்டியுடன் கடனும் வழங்கி இலங்கையை மேலும் மேலும் கடனாளியாக்கி இருக்கின்றன கடன் வழங்கும் நாடுகள். அன்று பண்டா-செல்வ ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தி தந்தை செல்வா கேட்ட சமஸ்ட்டியை கொடுத்திருந்தால் பௌத்த பிக்குமாரும் சிங்களத் தலைவர்களுக்கு இதற்கு எதிராக ஊர்வலம் போகாமல் இருந்திருந்தால் இவ்வளவும் மனிதப் போரழிவுகளும் பொருளாதார அழிவும் இல்லாமல் இன்று இலங்கை இன்னும் ஒரு சிங்கப்பூராய் இருந்திருக்கும். இன்று இலங்கையின் சொத்துக்களையும் சீனாவுக்கும் இந்தியாவுக்கு தாரை வார்க்காமல் நாம் எமது காலில் நின்றிருப்போம். கை நீட்டி கடனுக்காய் பிச்சை எடுக்கும் நிலையும் இல்லாமல் இனம் மதம் மொழி கடந்து எல்லோரும் இன் நாட்டு சமத்துவ குடி மக்களாக வாழ்த்திரிப்போம். இந்த நாட்டை உண்மையாகா நேசிக்கும் தலைவர்களாக இவர்கள் இருந்திருந்தால் இன்று இருளும் துன்பமும் துயரமுமாக இலங்கை இருந்திருக்காது. இன்னும் உணருவர்களா இந்த நாட்டின் பௌத்த மத குருமாரும் அரசியல் தலைவர்களும். எங்கு நிற்கிறது சிங்கள தலைவர்களினது இராஜதந்திரம். மாற்றங்கள் மட்டுமே மாறாது என்பதை வரலாறு பல தடவை நிரூபித்திருக்கிறது. யுத்த வெற்றியை கொண்டாடியவர்கள் எல்லாம் இன்று வெறுமனே தோல்வியில் சென்று கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்கிறீர்கள். பா.உதயன்
 13. கொரோனா இப்போ கொஞ்சம் குறைஞ்சா போல கொல்லாது என்ற துணிவு வந்தா போல சோசல் மூமென்ட் என்று சும்மா ஒரு கதை விட்டிட்டு திரும்பவும் இப்போ தொடங்கியாச்சு ஆட்டமும் கூட்டமும் நாளும் பொழுதும் நல்லா நடக்குது வொட்க்கா அடி வெள்ளி சனி வந்தால் காணும் விடியவே கரிச்சு பொரிச்சு கடிக்க இரண்டு ரேஸ்ருக்கு என்று காரமாய் இறைச்சி பிரட்டி மனுசி கமலம் கூட கண்டிராம காலை விடிய இரண்டு போத்தல் எடுத்து காட்டாமல் ஒளிச்சு வச்சு விடிய விடிய நடக்குது கூத்து இன்னும் சிலர் தனிய இருந்து அடிச்சுப் போட்டு தண்ணி கொஞ்சம் தலைக்கு ஏற டெலிபோன எடுத்து வச்சு கதை வேற விடுவான்கள் ஆயிரம் புலி சிங்கத்தை அடக்கி ஆண்ட வீரன் போல இது வேற வெளி நாட்டில நாங்கள் எல்லாம் வெள்ளைக்காரன் போல இப்போ வெள்ளைக்காரன் கூட இப்போ எம்மைப் போல அடிக்க மாட்டினம் அன்றைக்கு ஒரு அண்ண சொன்னார் ஒரு போத்தல் வெட்காவையும் ஒரு முறடில அடிப்பாராம் ஆறுமுகத்தாருக்கு அப்படியொரு பெருமை காணவில்லை கனகாலமாய் அம்மானை கட்டிலில படுத்திப் போட்டுதாம் ஓடித் திரிஞ்ச மனிசன் ஒருத்தற்ற சொல்லும் கேளாமல் பாவம் இப்போ படுத்திப்போட்டுது காலம் செய்த கோலம் என்றார் கடைசியாக கண்ட போது நினைச்சு பார்த்து நடக்க வேண்டும் வருத்தம் கிருத்தம் வந்தா பிறகு எழும்ப கிழும்ப முடியாது என்ன கொஞ்ச நேர குஷிக்காக வாழ்வை ஏன் தொலைக்க வேண்டும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அளவோட இருந்தால் அது தான் வாழ்வு. “நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்”, யாரும் குறையாக எண்ண வேண்டாம் நாம் எல்லாம் ஆரோக்கியமாக ஆண்டுகள் பல்லாண்டு வாழவேண்டும் என்று அதனால் தான் எழுதினேன். பா.உதயன்
 14. ஆறு அறிவுகளை மனிதன் கொண்டிருந்தாலும் மனிதனுக்கும் விலங்குக்குக்கும் இடையில் பல ஒருமித்த எதிர் குணாதிசயங்கள் பல உண்டு. மனிதர்களை போன்றே உண்ணும் போதும் உறங்கும் போதும் தம் பாதுகாப்பு கருதியே செயல்ப்படுகின்றன. பூனைகள் கண்ணை மூடி பால் குடிப்பது அதன் கண்கள் மிக அருகில் இருப்பதால் கண்ணில் பால் தெறிக்காமல் இருப்பதற்கு என்றும் விஞ்ஞான ரீதியான விளக்கம் கூறுவதாகவும் சொல்வார்கள்.அதேபோல் தாம் செய்யும் சில செயல்களை தவறாக இருந்தும் அது அடுத்தவருக்கு தெரியாது என்ற நினைப்புடனேயோ அதனை செய்கிறார்கள் என்ற ஒரு கருத்துடன் மனிதனுடன் இணைத்து பேசப் படுகின்றன. சில மிருக்கங்களினது ஆற்றல் மிகுந்த செய்கைகளைக் கொண்டும் அதன் செயற்பாடுகளைக் கொண்டும் பூனை மாத்திரம் இல்லை இன்னும் பல விலங்குகளை மனிதக் குணங்களுடன் ஒப்பிடுவார்கள். நீங்கள் எழுதிய உதாரணம் போலவே மியோ, வியட்நாம் போரில் உயிர் பிழைத்தவர், அச்சமற்ற மகிழ்ச்சிக்கான அசைக்க முடியாத திறன் கொண்டவர்; குரங்கு மனம் கொண்டானே மனிதா என்றும் , நரித்தந்திர காரன் என்றும் , பச்சோந்தி மனிதன் என்றும் , எறும்பு போல் ஒற்றுமையை பார் என்றும் , தேனீ போல் உழைக்கப் பார் என்றும், யானை போல் பலம் என்றும், ஆந்தை போலும் என்றும், விலங்குகளைப் போலவே இன்னும் பல இயற்கையோடு மனிதனை ஒப்பிட்டு போசுவதும் பாடுவதும் மனித வாழ்வியலிலிலும் இது பொருந்தக்கூடியதாகவே அமைகிறது. சில ஊர்வன பறப்பன தெய்வங்களாகவே மனிதரால் வணங்கப்படுகின்றன. இலக்கியமும், இதிகாசங்களும், புராணங்களும் இதை ஒப்பிட்டே பாடுகின்றன பேசுகின்றன. ஆமாம் மிருகங்களின் இயல்பை ஆராந்து மனிதன் கற்றுக் கொள்வதற்கு நிறையவே உதாரணங்கள் உண்டு அனைவரின் கருத்துக்கும் நன்றிகள்.
 15. அனைவருக்கும் மிக்க நன்றிகள்!
 16. எல்லா வீட்டு வேலியும் பாய்ந்து சட்டியை உருட்டும் பூனைகள் போலே எம்மிலும் பல கள்ளர் இருப்பது தெருஞ்சுக்கடா இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா வெள்ளாடை வேட்டி கட்டி வேதங்கள் பல சொல்லி எல்லோர்க்கும் உதவுவதாய் எல்லாமே தெரிந்தவராய் நல்லாக நடிப்பாரடா சிலர் நல்ல பெயர் வேண்ட அலைவாரடா இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா நட்பு என்றும் உறவு என்றும் நல்ல பல கதைகள் பேசி சமூகம் சேவை என்றும் கோவில் பள்ளி படிப்பு என்றும் கொக்கரித்து திரிவாரடா பின்பு கட்டியதை உடைப்பாரட கண்டபடி கதைப்பாரடா ஒற்றுமையை தொலைத்து விட்டு ஆளுக்கு ஆள் கல் எறிந்து பகைப்பாரடா கள்ளம் பல செய்வாரடா கண்ணை மூடிப் பால் குடிக்கும் கள்ளப் பூனை போல் தானடா பின்பு வல்லவர் தான் என்பாரடா வெறும் வாய்ப் புளுகில் வல்லோரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா பேருக்கும் புகளுக்குமாய் பொய்யான கதை பேசி பெரும் தத்துவங்கள் சொல்வாரடா தம்மை தாமே புகழ்வாரடா தம் உயரம் அறியாரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா ஞானம் கொண்ட புத்தனைப்போல் தாமும் என்று சொல்வாரடா தங்கள் பிழை அறியாரடா தாங்கள் மாற நினைக்காரடா நல்ல மனம் இல்லாமல் நாளும் பொழுதும் தொழுதாலும் என்ன தான் கடவுள் செய்வார் கள்ள மனம் கொண்டோரை பொய்யான முகங்களுடன் மெய்யான மனிதர் போலே அங்கீகாரம் தேடி அலைந்தே அதற்காய் தன்னைத் தானே விற்பாரடா அந்த கள்ளப் பூனை போல் தானடா அவர்கள் கள்ள நெஞ்சம் கொண்டோரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா. பா.உதயன்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.