Jump to content

uthayakumar

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    476
  • Joined

  • Last visited

Everything posted by uthayakumar

  1. அலைந்து உலையும் வாழ்வை அழகாய் பாடும் பொயட்.அழகான கவிதை பல தடவை முன்பும் வாசித்திருக்கிறேன்.
  2. Gowin ,poet,Kumarasamy , Nulavilan உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.பொயட் உங்கள் கம்பீரமான மீசை முறுக்கு தோற்ரத்தோடு அடுத்த படம் எப்போ ரிலீஸ்.
  3. நீதியின் அச்சில் இந்த உலகம் சுற்றவில்லை ,அநீதி ,அக்கிரமம், சமத்துவமின்மை ,சுரண்டல், யுத்தம் ,இவை அனைத்தோடும் போராடும் காலம் இப்போ .சமூக ஒப்பந்த கோட்ப்பாடுகளை எல்லாம் மனிதன் மறந்து ஆதி கால மனித வாழ்வுக்கு திரும்பி விடுவான் போல் தான் தெரிகிறது.நல்ல கவிதை உங்கள் கோபத்தின் வெளிப்பாடு புரிகிறது.
  4. காலை புலர்ந்தது காலை புலர்ந்தது காலைச் சேவல் கூவிச் சொன்னது கனவுகள் உயிர்த்தது கதிரவன் எழுந்தான் பொழுது புலர்ந்தது பூக்கள் மலர்ந்தது உழவனுக்கு என்றே உலகம் செய்து உன்னையும் என்னையும் உயிரோடாக்கி மண்ணையும் தந்து மகிழ்வித்த ஈசனை எண்ணுக மனமே எண்ணுக காலை புலர்ந்தது காலை புலர்ந்தது எழுக தமிழா எழுக தமிழா இன்றைய காலை உனக்காய் விடிந்தது பொங்குக மனமே பொங்குக வயல் வெளி எங்கும் தீபங்கள் எரிய வானத்து தேவனை விருந்துக்கு அழைத்து வாசல்கள் எங்கும் பூக்கட்டும் வாழ்வு வண்ணமாய் வசந்தம் வீசட்டும் எங்கும் ஆலய மணிகள் கோவிலில் ஒலிக்க அழகிய குயில்கள் கூவி பாடின காலையில் மல்லிகை கோலம் போட்டாள் கதிரவன் வாசலை திறந்து இங்கு வந்தான் அன்பு நெஞ்சங்களுக்கு தமிழன் திருநாளாம் தை பொங்கல் வாழ்த்துக்கள் பா .உதயகுமார்
  5. நன்றிகள், உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  6. வானத்தில் வண்ணமாக பூக்கள் பூக்குது வாசலை திறந்து வந்து காலை புலருது காலை புலர்ந்ததென்று யார் சொன்னது காற்றினில் கீதம் ஒன்று கனவில் சொன்னது மீட்டிடும் கைகளினால் வீணை பாடுது விடியதோர் காலம் என்று கீதம் கேக்குது ஆலய மணி ஓசை காதில் கேக்குது அன்பே சிவம் என்று சொல்லி கேக்குது ஆனந்த யாழினிலே ராகம் கேக்குது ஆயிரம் மழை துளியாய் வானம் சிந்துது எந்தன் மன அறைக்குள் இருந்து ஒரு ஓசை கேக்குது மௌனமாக கனவு வந்து கவிதை பாடுது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் உதயன்
  7. அந்த நிலாவை போலவே எல்லாமே அழகான கீதங்கள் .நன்றி nunavilan.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.