Jump to content

uthayakumar

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  476
 • Joined

 • Last visited

Everything posted by uthayakumar

 1. வெளி நாட்டு சரக்கு தம்பி எங்க விருப்பமான தண்ணி தம்பி மில்லி கொஞ்சம் உள்ள போனால் விட்டமீனு தானே தம்பி வீரம் எல்லாம் ஏறும் தம்பி வீட்டிலையும் பேச்சு தம்பி வொட்கா விஸ்கி விறண்டி என்று இந்த வில்லங்கத்தை போட்டு போனா பாட்டு எல்லாம் தானா வரும் பல கூத்து எல்லாம் கூட வரும் அடிச்சுப் போட்டு இருந்தா தம்பி ஆயிரம் தத்துவத்தோட அடுக்கு மொழியில் கவிதை வரும் அரசியலும் பேச வரும் நேற்று வரை நல்ல பிள்ளை இன்று போத்தலோட போச்சுதெல்லாம் பேச்சும் மாறிப் போச்சு தம்பி பார்ட்டி ஓட வாழ்க்கை தம்பி பிறக்கும் போது இருந்த குணம் இப்போ இல்லையே புதுசா எல்லாம் தலையில் இப்போ மாறிப் போச்சுது வெளி நாட்டு வாழ்கை எல்லோ நாம வெள்ளைக்காரன் ஆகிப் போனோம் வேட்டி சால்வை மறந்து போனோம் இப்போ கோட்டும் சூட்டும் தானே தம்பி அவசர வேலை என்று ஆத்துக்காறிக்கு டூப்பு விட்டு அண்ணா போத்திலோட போய் இருந்து அங்க கூத்தும் பாட்டும் வேற என்ன சோசல் என்று சொல்லிப் போட்டு சோக்கா தண்ணி போட்டு ஆடிப் போட்டு காலம் எல்லாம் போச்சு தம்பி கன வருத்தங்களும் ஆச்சு தம்பி டாக்டர் இப்போ சொல்லிப்போட்டேர் இனி தண்ணி போட்டா முடிஞ்சாயென்று இப்போ கூத்தும் போச்சு பாட்டும் போச்சு அலைஞ்சு திரியும் நாளாய் ஆச்சு ஆசுப்பத்திரி வாழ்வா போச்சு அப்பவெல்லாம் என் ஆத்துக்காறி அளவோட இருங்கோ என்று அறிவுரைகள் சொல்லேக்க ஆரு இவோ எனக்குச் சொல்லவென்று அதட்டிப் போட்டு போயிடுவன் என்னத்தை கேட்டன் நான் எல்லை மீறிப் போச்சு தம்பி இப்ப நினச்சு என்ன செய்வேன் இனி இறைவன் நினைச்ச வழி தம்பி தப்பு பண்ணி போட்டன் தம்பி தண்ணியோட வாழ்வு போச்சே தம்பிமாரே சொல்லிப் போட்டன் தண்ணி மட்டும் வாழ்வு இல்லை. பா.உதயன்
 2. கொரோனா அரசியலும் மனிதமும்-பா.உதயன் இந்த உலகின் எல்லா தேவைகளையும் அரசியலும், பணமும் ,சுய நலன்களுமே தீர்மானிக்கின்றன.மனித உரிமைகளும் மனிதாபிமானமும் இதற்கு இப்போ பெறுமதி இல்லை. இன்று உலகை பொருள்முதவாதமும்(materialism)தனிநலனுமே உலகை ஆள்கிறது.தனிநபர்களுக்கிடையில் அன்போ கருணையே அமைதியான வாழ்வோ இருக்காது. சரி, தவறு, நீதி, அநீதி போன்ற கருத்துக்களுக்கு இடமில்லை என்கிறார் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேய தத்துவஞானி தாமஸ் ஹோப்ஸ் Thomas Hobbes “இயற்கையின் நிலை ”the state of nature ‘ இதுவே என்று அழைப்பதை இந்த உலகத்தின் விதியோடு ஒப்பிட்டு சமூக ஒப்பந்த கோட்பாட்டோடு தனது புத்தகமான லெவியத்தனில் (leviathan ) விளக்குகிறார் இயற்கையின் நிலையை ஒரு சட்டம் அல்லது தார்மீக நெறிமுறைகள் இல்லாத ஒரு சமூகத்திற்குள் எல்லோரும் எதிரியாக இருக்கும் ஒரு போர் என்று விவரிக்கிறார். மற்றவர்கள் தங்கள் சுயநல நலன்களை லாபத்தை பூர்த்தி அடைவதற்காக தொடர்ந்து யுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள். 17 ம் நூற்றாண்டில் இந்த ஆங்கிலேய அரசியல் தத்துவவியலாளர் சொன்ன வார்த்தை நாம் வாழும் நாகரிகம் கொண்ட உலகில் கூட பொருந்துவதாகவே அமைகின்றது. ஆதி மனிதனைப் போலவே ஒவ்வொரு மனிதருக்கு மனிதர் இடையே போட்டியும் பொறாமையும் அடி பிடியும் போல் நாடுகளுக்கு இடையே போட்டியும் யுத்தமுமாக எந்த தார்மீக நெறிமுறையும் இல்லாத சமூகமாக இந்த உலகம் சுழர்வதை பார்க்கிறோம்.எம் சமூகத்தில் கூட எத்தனை பிளவுகள் எந்த தேடல்களோ தெளிவோ இல்லாமல் நமக்குள்ளேயே நாம் எல்லாம் தெரிந்தவர் போல் ஒருவரை ஒருவர் எதிரிகளாக ஒற்றுமை தொலைந்து இருக்கிறோம். இன்று உலகு என்றும் இல்லாதவாறு கொடிய நோய் வாய் பட்டு கிடக்கிறது.உலக பொருளாதாரம் சரிந்து கிடக்கிறது.இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்குமோ தெரியவில்லை இவை எல்லாவற்றிலும் இருந்து நாம் மீண்டு வர.இந்த கொடிய நோயிலும் மனித இழப்புகளிலும் இன்று கூட பொருளாதார நலனும் அரசியலுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.கொரோனவுக்கான தடுப்பு மருந்து கூட மனிதாபிமானம் இன்றி அரசியலே தீர்மானிக்கும் ஒரு கொரோனா ராஐதந்திர (corona vaccine diplomacy) நகர்வாகி விட்டது.தோமஸ் ஹோப்ஸ் கூறியது போல் நாம் இன்னும் ஆதிகால மனிதன் போலவே எதிரிகள் உலகமாகி இரண்டு அரசியல் சக்திகளாகிவிட்டன.இன்று உலகம் பொருளாதார சுய நலன் சார்ந்ததேயன்றி மனித உரிமை மனிதாபிமானம் அற நெறிகளோடு இல்லை. பா.உதயன்
 3. புங்கையூரான்,குமாரசாமி,தமிழ் சிறி,சுவே உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.
 4. தேம்ஸ் நதிக் கரையோரம்- - - - - - ———————————- அன்று ஒரு நாள் மனிதம் வலி சுமந்து தேடியபோது உலகம் இறந்து கிடந்தது. தேம்ஸ் நதிக் கரையோரம் தீபம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது வலி சுமந்த ஈழத் தமிழனுக்காய். அன்று ஒரு நாள் அந்த ஐரிஷ் போராளி பொபி சாண்ட் (Bobby Sands) தன் இனத்துக்காய் தண்ணி அருந்தாமல் போனதையும் பார்த்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியமா எம் இனத்துக்காய் பேசும். இரும்பு மனிதர்களையும் அசைத்து பார்க்கும் உங்கள் வலி புரிகிறது. அவனது இரத்தத்தை... அவளது கண்ணீரை... பார்க்க கண்கள் இல்லை... துடைக்க கைகள் இல்லை... பேச வாயில்லை... நினைக்க இதயமும் இல்லை... இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே என்று எம் உறவுக் கவிஞன் ஒருவன் எழுதியது போல் அன்று ஒரு நாள் மனிதம் வலி சுமந்து அழுதபோது உலகம் இறந்து கிடந்ததல்லவா. தர்மத்தின் அச்சில் உலகம் சுற்றுவதில்லை. பொருளாதார நலனில் மட்டும் சுற்றிக்கொண்டிருக்கும் மனிதம் இல்லா உலகம் எல்லா இது. இழப்பதற்கு எதுகும் இல்லாத ஈழத் தமிழனிடம் இன்னும் ஒரு தாயை நாம் ஏன் இழக்க வேண்டும். சர்வதேசத்தை வெல்லும் காலம் வரும் வரை நாம் உழைக்க வேண்டும். நீதி வழங்காத எந்த நல்லிணக்கமும் சமாதானமும் சாத்தியம் இல்லை. Without justice there can be no peace or reconciliation. நாம் கடக்க வேண்டிய பாதை கடினமானது. சுதந்திரம் என்பது பூக்களின் மேல் நடப்பது போல் இல்லை. வேதனைகளையும் சோதனைகளையும் கடந்து தான் விடிவு தேட வேண்டும். அர்பணிப்புகளும் தியாகங்களும் ஒரு போதும் வீண்போகாது. கல்வியும் அறிவும் ஆற்றலும் கொண்ட ஈழத் தமிழ் பிள்ளைகள் இன்று உலகப் பந்தில் முளைத்திருக்கிறார்கள். சிந்தனையும், தெளிவும், ஐக்கியமுமாய் நகர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எல்லாமே இன்று இருப்பது போல் நாளை இருப்பதில்லை மாற்றம் நிச்சயம் வந்தே ஆகும். நாம் போக வேண்டிய தூரம் நீண்டதாகவே இருக்கிறது இருந்த போதிலும் இருள் ஒரு நாள் விலகி ஒளி தெரியும் காலம் வரும். பா.உதயன்
 5. எங்க நாடு ஏழை நாடு மல்லி எப்ப வரும் மருந்து எமக்கு தம்பி-பா.உதயன் ———————————————————————————————————— wealthy nations have purchased enough doses to vaccinate their entire populations.in the meantime poor countries are suffering to get their corona vaccine.Rich countries just 14% of the world population have bought 54% of the corona vaccines.they have enough vaccines for all.Rich countries have a moral obligation to help poor countries to get enough vaccines.If rich countries shares there will be enough vaccines for all world population.Pls save the poor people to. நாலு காசு கையில் இல்லை தம்பி நம்மை கொரோனா விட்டு போகுதில்லை தம்பி எங்க நாடு ஏழை நாடு மல்லி எப்ப வரும் பைசர் என்று சொல்லி இப்ப பைத்தியமே பிடிக்குது இந்த பைசர் மருந்தை நம்பி நம்ம நாட்டு வைத்தியத்தை தானே நாம இப்போ நம்பி இருக்கோம் தம்பி நாலு காசு கையில் இல்லை தம்பி நம்ம அரசு என்ன செய்யும் மல்லி புஞ்சி பண்டா தந்திருக்கார் மல்லி ஏதோ புதுசாய் போத்தலில மருந்தாம் எங்க அமைச்சர் கூட வேண்டி குடிச்சு பார்த்தா அவோக்கு கூட கொரோனா இப்போ மல்லி எல்லா சனமும் வேண்டி குடிச்சு பாத்தும் அந்த கொரோனா சிரிச்சு போட்டு போகுது எம்மை பார்த்து மல்லி இந்த கொரோனா விட்டுத் தொலையவில்லை இன்னும் ஐரோப்பா தந்த மருந்து தம்பி அதுகும் இப்போ பத்தாது மல்லி இந்தியாவும் தந்திருக்கு தம்பி ஏதோ புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி ஏதேன் பாத்து கீத்து செய்ய சொல்லும் தம்பி கொரோனாவை கொல்லுதென்று சொல்லி கொத்தமல்லியும் விலையாய் போச்சு மல்லி உள்ளி இஞ்சி மல்லி என்று சொல்லி ஊர் முழுக்கு குடிக்கிறாங்கோ மல்லி பணக்காரர் எல்லாம் இப்போ தம்பி பைசர் மருந்து கொடுத்திட்டான்கள் தம்பி என்ன செய்யும் ஏழைச் சனம் தம்பி எத்தனையோ ஏழை நாடு எல்லாம் ஏங்கி திரியுது இந்த மருந்துக்காக தம்பி எங்க நாடும் வங்குரோத்தில் எல்லோ இருக்கும் காசைக் கூட சுனாமி போல சுரட்டிப் போட்டான் மல்லி இந்த கொத்த மல்லி நம்பி தானே தம்பி எங்க குடும்பம் எல்லாம் வாழுதிப்போ மல்லி கொரோனா மட்டும் கொல்லவில்லை இங்கு கொடிய ஆட்சி கூட நடக்குது இங்கு தம்பி இறந்து போகும் மனிதருக்கு கூட புதைக்க கூட உரிமை இல்லை தம்பி இனத்துக்குள்ள ஐக்கியமும் இல்லை இனவாதம் கூடிப் போச்சு தம்பி இலங்கை ஆட்சியாளர் செய்த வினை தம்பி படிச்சவங்க எல்லாம் இப்போ தம்பி பணத்துக்காக பதவிக்காக கதைக்கிறான்கள் தம்பி இனி இதைப் பேசி என்ன பலன் இவர்கள் எங்க திருந்த போறான் தம்பி எத்தனையோ மருந்து எல்லாம் வந்தும் காசுக்காரன் வேண்டிப் போட்டான் மல்லி ஐரோப்பா அமெரிக்க லண்டன் கனடா என்று அவர்கள் எல்லாம் பதுக்கிப் போட்டான் மருந்தை எல்லாம் மல்லி ஏழைச் சனம் என்ன செய்யும் சொல்லும் இன்று வந்த செய்தியிலும் பார்த்தோம் லட்ஷம் லட்ஷமாய் மருந்தை எல்லாம் வேண்டி பணக்காரர் தாங்க மட்டும் போடுறாங்கள் தம்பி இவங்கள் மட்டும் தப்ப நினைக்கிறாங்கோ இந்த கொரோனா விட்டுத் தொலையும் என்று சொல்லி எல்லா நாடும் சேர்ந்து ஒழிக்க வேண்டும் ஏதேன் எங்களுக்கும் தந்து உதவ சொல்லும் எங்க மக்கள் என்ன செய்வர் தம்பி இப்படியே எத்தனையோ ஏழை நாடு தம்பி பாவம் இந்த சனங்கள் எல்லாம் மல்லி பார்க்க கூட ஆட்கள் இல்லை தம்பி சமத்துவமே இல்லாத உலகம் இது தம்பி சரி வருமா இனியும் என்று தெரியவில்லை தம்பி . இன்றைய நீதி சமத்துவம் இல்லா உலகு இது தான். பா.உதயன்
 6. நாங்கள் எல்லாம் அறைக்குள் இருந்து கொண்டு அந்த வழி இந்த வழி என்று எழுதிக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிறோம் அரசியல் தத்துவவியளாளர் போலவே ஆனால் கூட்டிக்கொண்டு போகத் தான் தெரியவில்லை.
 7. அந்த காவலூர்காரன் நானும் அந்த காற்றோடும் மண்ணோடும் என் கனவும் பேசியது நினைவிருக்கு.என் கண் முன்னே என் ஊரை கண்டது போல் கவிதை சொல்லியது.மகிழ்ச்சி வாழ்த்துகள்.
 8. உங்கள் வீட்டுப் பெண்களுக்கு மார்புகள் வெட்டப்படவில்லை உங்கள் பிள்ளைகள் எவரும் தொலைந்து போகவில்லை உங்கள் பிள்ளைகளை எவரும் வல்லுறவு செய்யவில்லை உங்கள் சொத்து சுகங்கள் எதையும் நீங்கள் இழக்கவில்லை பசி பட்டினியால் நீங்கள் எவரும் இறக்கவில்லை இழந்தது எல்லாம் நாங்கள் மட்டுமே ஒரு பொல் பொட்டையோ ஒரு ஹிட்லரையே ஒரு ஸ்டாலினையோ ஒரு முசோலினியையோ அந்த மக்களை மறக்கச் சொல்லுங்கள் நாமும் மறந்து விடுகிறோம். பா.உதயன்
 9. வாதவூரன் வல்வை சகாரா யாவர்க்கும் நன்றிகள்.ஐயோ நான் சனியன் என்பது சங்கடம் தரும் கொரோனாவை தான்.இனி எள்ளு எண்ணெய் எரித்து கொல்லாமல் விடமாட்டான்.தப்பா நினைக்காதேங்கோ கொரோனாக்களை தான் சொல்லுகிறேன்.
 10. எல்லாமே மாறும் உலகில் அம்மாவின் அன்பு ஒன்று தான் மாற முடியாது.அருமை தொடருங்கள்.
 11. ஈழப்பிரியன்,மல்லிகை வாசம்,குமாரசாமி ,கிருபன்,காவலூர் கண்மணி,சுவே,தமிழ் சிறி உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் .
 12. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழ் சிறி
 13. இலக்கியம் நடனம் கொள்கிறது உங்கள் கவிதையில் அருமை தொடருங்கள் சுவி
 14. ஐயா விரைவில் சுகம் பொறுங்கள்,நீண்ட ஆயுளோடு நீங்கள் வாழ வேண்டும் என பிராத்திக்கிறோம்
 15. பிரபா சிதம்பரநாதன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.
 16. குமாரசுவாமி,நிலாமதி அக்கா,மல்லிகை வாசம்,யாயினி,புங்கையூரான் உங்கள் அனைவரினது கருத்துக்கு மிக்க நன்றிகள்.தனிமை என்பது மிகப் பெரியதொரு துன்பவியல் வாழ்வு.இளமைக்கால நினைவுகளை தனிமையில் இருந்து நினைக்கும் பொழுது அதை விடக் கொடுமை ஒன்றும் இல்லை.எனது வேலை அனுபவங்களினுடாக இதை நான் நன்றாக உணந்திருக்கிறேன் கதைத்திருக்கிறேன்.இவைகள் தான் என்னை இப்படி சில கவிதைகளை எழுத வைத்தது.நான் கண்ட பேசிய அனுபவங்களினுடாக என் உணர்வுகளை பகிர்ந்திருக்கிறேன்.யாயினி உங்கள் கதை எனது குரல்வளையும் இறுக்கி விட்டது.
 17. அருமையான பதிவு உடையார் ஈழத்து கவிஞர்களுக்கும் ஒரு திரியை திறந்து எரிய விடுங்கோ.நன்றி
 18. பலம் கொடடா பாரதி அன்று காந்தியும் விடுதலை வீரரும் இந்தியத் தாய்க்காய் சத்திய வேள்வி செய்தனர் இன்று ஈழத் தாய்க்காய் இவளது புதல்வர்கள் இன்னும் ஓரு வேள்வி ஈழத்தின் வீதியிலே நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ பலம் கொடடா பாரதி உன் பாடலை ஒலித்து அங்கு. பா.உதயன்
 19. உடையார்,சுவே,புரட்சிகர தமிழ் தேசிகன் உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.