Jump to content

uthayakumar

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    593
  • Joined

  • Last visited

Everything posted by uthayakumar

  1. உறவுகள் தமிழ் தேசியனுக்கும் சுவேக்கும் தங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் !
  2. எங்க நாடு கிடக்கிற பாடு எப்படிச் சொல்லுவம் நாங்க பாணுக்கும் பாலுக்கும் நாம படுகிற துன்பத்தைப் பாரும் சோத்துக்கும் கஞ்சிக்கும் நாங்க தூங்கிறம் றோட்டில பாரும் எண்ணைக்கும் காஸ்சுக்குமாக எத்தனை சண்டைகள் இங்கு ஊழலும் லஞ்சமுமாக பாழ்பட்டுக் கிடக்குது நாடு ஆளுக்கு ஒரு பங்காய் அரசியல் வாதிகள் எல்லாம் அறுத்து தின்றனர் நாட்டை அந்த பெரிய பெரிச்சாளிகள் போல எங்கள் உழைப்பெல்லாம் சுரண்டி அந்த பூசுவா கூட்டங்கள் போலே பொல்லாத திருடர்கள் இவர்கள் சிலர் போலி சோஷலிசக்காரர் இனவாதம் எல்லாம் பேசி இருந்ததை எல்லாம் குழப்பி இனத்துக்க குரோதத்தை வளர்த்து இப்போ இருக்குது நாடு கவுண்டு வீழ்த்தினோம் தமிழனை என்றும் வெற்றி விழாக்களோட எல்லாம் தேனும் பாலும் ஓடும் என்று தெரிந்து விட்டோம் எம் பி மாரை தெரியாமல் போச்சுது இவர்கள் திருடர்கள் தான் என்று அப்போ இன்னும் திருந்துவாரா திருடர் என்று எமக்குள்ளே சந்தேகம் இன்னும் அமைச்சர்மார் எல்லாம் இங்கு அரண்மனை போல வீடுகள் கட்டி கொள்ளை அடித்து நாட்டை கொழுத்து இப்போ திரியிறாங்கள் நாங்கள் குடிசையில் கிடக்கிறம் இன்னும் ஒரு வேளை உணவோட நாளும் எத்தனை குடும்பங்கள் காணும் படுகிற துன்பங்கள் போதும் பஞ்சத்தில் கிடக்கிறம் நாமும் எத்தனை காலமாய் கை ஏந்தி இரந்து உண்ணுவம் நாங்கள் இந்தியக் கடனும் முடிந்தால் என்னதான் தீர்வு சொல்லும் ஐ ம் எப் காரன் கூட சும்மாவா தருவான் கடனை வச்சான் ஆப்பு என்ற போலே வந்தான் ரணில் ஐயா நைசா நரித் தந்திர வேலை எல்லாம் நடிப்பதில் திறமை சாலி கதைப்பதில் மட்டும் விண்ணன் காரியம் நடக்குமா பார்ப்போம் இனங்களின் பிரச்சினை தீர்த்து எப்பவும் நாட்டுக்காய் நல்ல திட்டங்கள் தீட்டி எதிர் காலம் நல்லதாய் இருக்க நீங்க இனி மேலும் சிந்திக்கா விட்டால் இலங்கைக்கு விமோசனம் இல்லை இதை இனியும் உணர்வாரா இங்கு இல்லை ஏறுமா வேதாளம் மீண்டும். பா.உதயன் ✍️ Learn From Your Mistakes!
  3. இந்து சமுத்திரத்தின் முத்து இருக்குதிப்போ பசியாய்-பா.உதயன் சகல இன மக்களும் சமத்துவ உரிமையோடு வாழ விடாமல் இனவாதமே முதலாகக் கொண்டு நாடு, மக்கள், சரியான பொருளாதார பாதை பற்றியோ சிந்திக்காத தனியவே பதவியை மட்டும் இலக்காக கொண்டு லஞ்சமும் ஊழலும் கொண்ட ஆட்சியாளர்களால் இந்த நாடு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. எந்த வித தூர நோக்கும் இல்லாமல் அடிப்படை மாற்றங்கள் எதுவும் இன்றி சிந்திக்காமல் இனவாதிகளை பதவிக்கு அமர்த்தி இன்று இந்த நிலைமைக்கு வர இந்த நாட்டு மக்களும் பெளத்தமத பேரினவாத மத துறவிகளும் இந்த நாட்டை அழித்து இன்று பெரும் அரசியல் பொருளாதார பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் நிலைமைக்கு காரணமாக இருக்கிறார்கள். எல்லா இன மக்களுமே என்ன செய்வதென்று தெரியாமல் நாளும் பொழுதுமாக நடு வீதியில் நின்று போராடுகின்றனர். இலங்கையின் நிலைமை இது தான். ————————————————————————————————————— -இந்து சமுத்திரத்தின் முத்து இப்போ இருளுக்குள் கிடக்கு பா.உதயன் இந்து சமுத்திரத்தின் முத்து இப்போ இருளுக்குள் கிடக்கு எல்லா சனமும் இங்கு பசியோடு இருக்கு அரிசி மாவு இல்லாம அட பசியாய் சனம் கிடக்கு அடக முடியா கோபத்தோட நாடு இருக்கு எங்க பணத்தை எல்லாம் திருடிப் போட்டு கொழுத்து திரியிறாங்கள் நாம தின்ன குடிக்க வழி இல்லாம தெருவில தான் தஞ்சம் குடிக்கக் கூட பால் இல்லாம குழந்தை குட்டி இருக்கு குளிக்கக் கூட சோப் இல்லாம நாடு நாறிக் கிடக்கு கையை எல்லாம் நீட்டி கடனை எல்லாம் வேண்டி கொடுக்க வளி இல்லாம அட சொல்லக் கூடி வெட்கம் எங்க நாடு படும் பாடு யுத்தம் என்று சொல்லி பணத்தை எல்லாம் கொட்டி ஆயுதங்கள் வேண்டி அழிச்சு போட்டு எம்மை குந்தி இருக்க கூட விடமாட்டோம் என்று தமிழ் இனத்தை அடித்து அவன் நிலத்தை பறித்தான் புத்தர் சிலைகள் எல்லாம் புதுசு புதுசாய் முளைத்து தமிழர் நிலம் எல்லாம் இப்போ புத்தர் நிலம் ஆச்சு எங்கள் வேதனையில் நீங்கள் வெற்றி விழா என்று வீதி எல்லாம் பாடி இப்போ வேதனையில் நீங்கள் பாடி அழுகிறீர்கள் தூர நோக்கு இல்லை தெளிந்த பாதை இல்லை பங்கு போட்டு நாட்டை ஏலம் போட்டு விற்றார் அபிவிருத்தி என்று ஆயிரம் கதைகள் எல்லாம் சொல்லி வடக்கு கிழக்கு எல்லாம் வசந்தம் வரும் என்று திருகு தாளம் பண்ணி திருடி போட்டான் பணத்தை ஆளுக்கு ஒரு பங்காய் அரசியல் வாதி எல்லாம் அமத்தி போட்டான் பணத்தை திருடிய பணத்தை எல்லாம் திரும்ப தாரும் என்று மக்கள் கேட்கிறார்கள் எந்தப் பதிலும் இல்லை காலி முகத் திடலில் கன நாளாய் சனங்கள் கோத்தா போ வீடு என்று கொதிச்சு போய் கிடக்கு கத்திப் போட்டு சனங்கள் கலைந்து போவார் என்று விட மாட்டேன் என்று விடாப் பிடியாய் நின்று கொடாப் பிடியாய் கோத்தா இனி தமக்கு எதிர் காலமே இல்லை என்று பலர் இப்போ இருக்கும் வரை இருந்து பறித்து மக்கள் பணத்தை சுருட்டி பதவியில் உட்கார தவிப்பு பாராளுமன்றம் இப்போ பாய்ந்து தாவித் திரிபவர் போலும் பைத்தியக்கார வைத்தியசாலை போல ஆளுக்கு ஆள் திட்டி குரைத்தபடி கிடக்கு அங்க ஏதும் தெளிவாய் கதைத்தபடி காணோம் ஒரு சிலர் மட்டும் ஒழுங்கா ஏதும் கதைப்பார் நாளுக்கு ஒரு அமைச்சர் மூன்றி இரண்டு பலம் இல்லாத முதல் அமைச்சர் கேலிக் கூத்தாய் போச்சு மக்கள் எல்லாம் ஏதோ மடையர் என்று நினைப்பு புதிய மொந்தையில் பழைய கள்ளு போல் ஆடையை மாற்றிய அதே திருடர்கள் அமைச்சர்கள் ஆனார்கள் உழைத்தவன் பணத்தை எல்லாம் உறுஞ்சிக் குடித்து கோட்டை கட்டி ஆண்ட மன்னர் எல்லாம் ஒருநாள் மக்கள் புரட்சி வந்தால் இவர்கள் கதை முடிச்சு போகும் வரலாறு எமக்கு கற்றுத் தந்த பாடம் காலம் மீண்டும் சுழலும் மாற்றம் மட்டும் ஒன்றே மாறாது இருக்கும். பா.உதயன் ✍️
  4. எல்லா மனிதனுக்கும் உரிமைகள் வேண்டும்-பா.உதயன் மக்களின் பணத்தை திருடிய கள்ளர் மானம் இழந்தே போவார்கள் உண்ணக் குடிக்க வளி இல்லை என்றால் மக்கள் தெருவில் இறங்கி எரிப்பார்கள் ஊழல் லஞ்சம் செய்தவன் கூட்டதை இனி ஆளும் கதையை முடிப்பார்கள் உத்தமர் போலே நடித்தவர் வாழ்வை உடைத்தெறியாமல் போகார்கள் மக்களும் இனி மேல் மாறிட வேண்டும் தப்பு செய்தவன் தலைமையில் இருந்தால் எப்பவும் கேள்விகள் கேட்டிட வேண்டும் எதிர் காலம் பற்றி சிந்திக்க வேண்டும் தப்பு செய்தவனை தண்டிக்க வேண்டும் நல்ல தலைமையை மக்கள் தெரியவும் வேண்டும் இனவாதிகள் இனிமேல் இருக்கவும் கூடாது இன மத பேதம் கடந்து போகுதல் வேண்டும் இன்னொரு இனத்தை அழித்தவர் வாழ்வு இறுதி வரைக்கும் நிலைக்காது இவர்கள் விதைத்து எல்லாம் அறுபடை செய்யும் காலம் இப்போ நடக்கிறது உழைக்கும் கரங்கள் உயரவும் வேண்டும் உலகம் முழுவதும் சமத்துவம் வேண்டும் எல்லா மனிதனுக்கும் உரிமைகள் வேண்டும் நாம் எழுதவும் பேசவும் சுதந்திரம் வேண்டும். பா.உதயன் ✍️
  5. நாங்கள் பசியோடு இருக்கிறோம்- என்று தணியும் இந்த இன்னல் வாழ்வு சொல்ல முடியாத துன்ப வாழ்வு. இலங்கைத் தீவின் 22 மில்லியன் மக்களின் வாழ்வு பெரும் பொருளாதார அரசியல் பிரச்சினைக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. இலங்கையின் சுதந்திரம் அடைந்த காலத்தின் பின் இதுவே முதற் தடவையாக இப்படியோர் பாரிய பிரச்சினையை இலங்கை மக்கள் எதிர் நோக்குகின்றனர். எரிக்க எண்ணெய் இல்லாமல் உண்ண உணவில்லாமல் வாழ வழி இல்லாமல் அன்று சொல்ல முடியாத துன்பத்தில் சோமாலியா இருந்தது போல் இன்று இலங்கை இருக்கிறது. நாங்கள் பசியோடு இருக்கிறோம் என்கிறார்கள் இலங்கை மக்கள். எல்லோரும் அதிகார ஆசை மதவாத அரசியல் இனவாத பேச்சு இப்படி எத்தினையாய் மதம் என்றும் இனம் என்றும் வெறுப்போடும் மனிதம் தொலைந்து சரியான கொள்கை இல்லாதவர்களின் திமிரான போக்கால் இன்று குனிந்து எங்கும் கடன் வேண்டும் நிலையாகி இந்து சமுத்திர முத்தென்று இருந்தின்று இலங்கை நிலைமாறிப் போச்சு. தமிழ் பயங்கரவாதிகளிடம் இருந்தும் பிரிவினை வாதிகளிடம் இருந்தும் இலங்கை மக்களையும் நாட்டையும் விடுதலை அடைய வைத்தோம் என்று கூறி வெற்றி விழா கொண்டாடிய இனவாத தலைவர்களால் இன்று அவர்கள் விடுதலை செய்த நாட்டில் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாதவர்களாக முடங்கிப் போய் இருக்கிறார்கள். எல்லாத் தாக்கற்திற்கும் மறு தாக்கம் இருப்பது போல் எதை விதைத்தார்களோ அதையே அறுபடை செய்து கொண்டிருக்கி றார்கள். "முடவன் மிக வேகமாக ஓடுவதை ஒரு குருடன் பார்த்ததாக காது கேளாதவன் கூறுகிறான்" - என்று பழைய யூத பழமொழி கூறுவது போல் தம்மை தெரிவு செய்து அனுப்பிய மக்களின் அடிப்படை தேவைகளை மறந்து இன்றும் மூழ்கிக்கொண்டிருக்கும் அரசோடு ஒட்டிக் கொண்டு தோல்வி அடைந்த ஒரு அரசுக்கு ஆதரவாக இருந்து கொண்டு அது சரியான பாதையில் பயணிப்பதாக பொய் கூறிக்கொண்டு இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருப்பது வெட்கக்கேடே. நாங்கள் தான் அனுப்பி வைத்தோம் நமக்காக பேசுங்கள் என்று நம்ம பிரதிநிதிகளை ஆனால் அவர்கள் இன்று பணத்திற்காகவும் பதவிக்காகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் இனவாதமும் வெறுப்புமாக முழு இலங்கையையும் சீரழித்து இன்று நாடு பெரும் அரசியல் பொருளாதாரா சிக்கலுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிரு க்கிறது. இவர்களோடு முண்டு கொடுத்து நின்ற எல்லா கட்சிகளும் இடது சாரிகள் என்று தம்மை தாமே அழைத்தவர்களும் இந்த மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். சிஸ்ரம் சரி இல்லை என்று சொல்கின்றனர் மக்கள் சிஸ்ரம் சரி இல்லாமல் ஆட்சி நடாத்துபவர்களால் சரியான ஆட்சியை நடத்த முடியுமா. மாறுவார்களோ மாற்றுவார்களோ இது பெரும் கேள்விக்குறியே. விடாப் பிடியாகவும் கொடாப் பிடியாகவும் தமது பதவியை விடாமல் தக்க வைக்க விரும்புவோரால் இலங்கை தாளுமா நிமிருமா இருந்து தான் பார்ப்போம். மக்கள் போராட்டம் இன்றுடன் 30 நாளைக் கடந்தும் இன்னும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டோ அல்லது மக்கள் போராட்டம் ரீதியாகவே அரச தலைவரையும் பிரதம மந்திரியையும் பதவி விலக்குவது குறித்து இன்னும் ஒரு தீர்வு எட்டப் படவில்லை. இவர்களை பதவி நீக்கியதன் பின் எப்படி மாற்றம் ஏற்படப் போகிறது என்பது எல்லாம் ஒரு இடியப்ப சிக்கல் போல் தான் நிலைமை காணப்படுகின்றது. தனித்தே தான் சிங்கள மக்களின் பெரும் பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட திமிரினாலும் தமிழரை தான் வெற்றி கொண்ட நவீன துட்டகைமுனுவாக தன்னை இனம் காட்டிக்கொண்டதனால் அரசு தலைவர் அன்று அனுபவவும் அறிவும் படிப்பும் கொண்ட பொருளாதார ஆலோசகர்கள் சொன்ன அறிவுரைகள் எதையும் கேட்கவில்லை. அனைத்து மக்களும் சமத்துவதோடு வாழவும் சரியான பொருளாத கொள்கைகளை வகுக்கவும் இல்லை. ஈழத் தமிழர் பிரச்சினைக்கு கூட இன்று வரை ஒரு தீர்வு எட்டப்பட வில்லை. இன்று மக்களால் நிராகரிக்கப் பட்ட நிலையில் இந்த அரசு சட்டபூர்வமான ஆளும் தன்மையை legitimacy இழந்துள்ளது. இனி இவர்களால் தொடர்ந்து ஆட்சி நடத்துவது கஸ்ரமே. எந்த அரசும் எப்போது தமது மக்களின் ஆதரவை இழக்கிறது அப்போதே அது தோல்வியடைந்த( Fail state) அரசாக மாறி விடுகிறது. புதிய மொந்தையில் பழைய 'கள்'..! ‘Old wine in a new bottle’ போலவே ஆளையும் மாற்றி அமைச்சரவையும் மாற்றினால் அவர்களில் காசுமரம் தானாய் முளைக்குமோ தேனும் பாலும் இனி தெருவெல்லாம் ஓடுமோ தலையணை மாற்றினால் தலையிடி தீருமோ அலாவுதீனும் அற்புத விளக்கும் இனி மந்திரத்தால் மாங்கனி பறிக்குமோ இல்லை ஜனநாயகமும் மக்கள் குரலும் வெல்லுமா இலங்கையில் இனி வரும் காலங்களின் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது பொறுத்திருந்து பார்ப்போம். பா.உதயன் ✍️
  6. மனிதனாக எவரும் இங்கு வாழவில்லையே தனியுடமை இன்னும் இங்கு போகவில்லையே பொதுவுடைமை எங்கும் இங்கு வரவுமில்லையே பொல்லாத உலகம் இது மாறவில்லையே எல்லோர்க்கும் எல்லாமே கிடைக்கவில்லையே உழைப்பவன் கை இன்னும் உயரவில்லையே உனக்கும் எனக்கும் சமத்துவம் எதுகுமில்லையே சமூக நீதி வந்ததாக தெரியவில்லையே மாற்றம் இன்னும் இங்கு மாறவில்லையே அது வரும் என்ற நம்பிக்கைதான் கையில் இருக்குது. பா.உதயன் ✍️
  7. புரட்ச்சிகர தமிழ் தேசியன் உங்கள் கருத்துக்கு நன்றிகள்!
  8. பசி பட்டினி பொருளாதாரத் தடை பெரும் போர் இழப்பு இதுவெல்லாம் புதிதல்ல ஈழத் தமிழருக்கு அதுவெல்லாம் கடந்து தான் நடந்து வந்தான் ஆனால் இவை எல்லாம் உங்களுக்கு புதிது தான் அன்று ஒரு நாள் அருகில் ஒரு தமிழ்க் குழந்தை பசி எடுத்து அழுத குரலும் கேட்கவில்லை பிள்ளைகளை தொலைத்து விட்டு பெரும் குரலாய் காடதிரக் கத்திய தாயின் கண்ணீரில் எழுதிய கதை ஒன்றும் உங்கள் காதுகளில் கேட்கவில்லை எதுகுமே கேட்கவில்லை ஈரமனம் எவருக்குமாய் இருந்ததாய் தெரியவில்லை அன்பும் அறமும் தர்மமும் கொண்ட அந்த தம்மபத புத்தனின் சிந்தனையும் உங்களுக்கு புரிந்ததாய் தெரியவில்லை கோபமும் கொலையுமாய் நல்லறிவை தொலைத்து விட்டு ஏதேதோ சூழ்ச்சி பண்ணி எங்களை வீழ்த்தி விட்டு துட்டகைமுனு கொண்டு வந்த யுத்தவெற்றி ஒன்று தான் நித்தம் உங்கள் தெருக்களிலே நீங்கள் பாடியது நினைவிருக்கா இனி ஒரு விதி செய்வோம் எல்லா இனமும் சமம் என்போம் இருளை கடந்து செல்வோம் தனி ஒருவனுக்கு உணவும் உரிமையும் இல்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம். பா.உதயன் ✍️
  9. பல தமிழ் பெற்றோருக்கு மருத்துவம் மட்டுமே படிப்பாக தெரிகிறது அதுக்கென்ன படிப்பது நல்லதுதான் என்ன தான் இருந்தாலும் சும்மாவா மருத்துவ படிப்பும் ஆழமா அறிவோட படித்தால் தானே அங்கும் நுழைய முடியும் எத்தனை தமிழன் மருத்துவர் என்று எங்களுக்கு பெருமை தானே ஆனால் மருத்துவம் மட்டும் படித்தால் போதுமா கழுவவும் துடைக்கவும் தேடவும் தெரியவும் ஆடவும் பாடவும் அறிவோடு எழுதவும் அரசியல் பொருளியல் உளவியல் உயிரியல் சட்டம் சமூகவியல் சர்வதேச அரசியல் தத்துவம் என்றும் இலக்கியம் கலை கவிஞன் என்று எழுதவும் பேசவும் உந்தன் உரிமையை வெல்லவும் புவியியல் அரசியல் பூகோளத்திற்காய் என்றும் எத்தனை பேர் தேவை ஆதலால் இந்தப் படிப்புகளும் சும்மாவா புலம் பெயர்ந்து வந்தாலும் பிள்ளையின் படிப்புக்காகவும் உறவுகளின் பசிக்காகவும் உரிமைக் குரலுக்காகவும் விடிய விடிய வியர்வை சிந்தி குளிரிலும் பனியிலும் கொடுத்தானே வாழ்வை அவன் கூட சும்மாவா வந்தாலும் வந்தான் அகதியாய் வந்தாலும் ஆழமாய் புதைத்தாலும் அந்த விதை போலவே சட்டென்று முளைத்து பட்டென்று நிமிர டக்கென்று தெரியுதே என்று ஐயோ ஐரோப்பியருக்கும் அதிசயம் தானம் ஆதலால் அனைத்தையும் படிபோம் ஆயுதம் செய்வோம் அறிவைத் தேடுவோம். பா.உதயன் ✍️
  10. எனக்கு நீ ஏதாவது செய்ய நினைத்தால் என் கல்லறையில் எழுதிவை எப்பவுமே உன்னை நான் நேசித்து இருந்தேன் என்று அதன் அருகில் ஒரு பூச் செடியை நட்டு வை அவ்வப்போது வந்து பார் அந்தப் பூவிற்குள் என் முகம் தெரியும்.🙏
  11. அற்புத ஈழத்து கலைஞன் வர்ணாராமேஸ்வரனுக்கு அஞ்சலிகள். தாயகக் கனவோடு சாவினை தழுவிய சங்கீத சுரமே ஒரு தரம் உனது விழியினைக் காட்டியே மறுபடி உறங்காயே உயிர்விடும் வேளையில் உன்னது வாயது உரைத்ததோ சங்கீதம் இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா.
  12. அந்த காவலூர்காரன் நானும் அந்த காற்றோடும் மண்ணோடும் என் கனவும் பேசியது நினைவிருக்கு.என் கண் முன்னே என் ஊரை கண்டது போல் கவிதை சொல்லியது.மகிழ்ச்சி வாழ்த்துகள்.
  13. வாதவூரன் வல்வை சகாரா யாவர்க்கும் நன்றிகள்.ஐயோ நான் சனியன் என்பது சங்கடம் தரும் கொரோனாவை தான்.இனி எள்ளு எண்ணெய் எரித்து கொல்லாமல் விடமாட்டான்.தப்பா நினைக்காதேங்கோ கொரோனாக்களை தான் சொல்லுகிறேன்.😂
  14. எல்லாமே மாறும் உலகில் அம்மாவின் அன்பு ஒன்று தான் மாற முடியாது.அருமை தொடருங்கள்.
  15. ஈழப்பிரியன்,மல்லிகை வாசம்,குமாரசாமி ,கிருபன்,காவலூர் கண்மணி,சுவே,தமிழ் சிறி உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் .
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழ் சிறி 💐
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.