Jump to content

nige

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  844
 • Joined

 • Last visited

Everything posted by nige

 1. பல புதிய தகவல்கள் நன்றி ஈழப்பிரியன். எத்தனை தகவல்கள் .உண்மைதான் பல மருத்துவ குணங்கள் உள்ள ஒரு காய்கறி முள்ளங்கி ஆனால் அதன் மணம் பலருக்கு பிடிக்காது. நன்றி sir அனைத்து பயனுள்ள தகவல்களிற்கும்
 2. வணக்கம் தமிழ்சிறி..நீங்கள் நலமாக இருக்கின்றீர்களா? நீங்கள் நலமாக வீடு திரும்ப நானும் பிரார்த்திக்கின்றேன். மிக்க நன்றி சுவி மிக்க நன்றி உங்கள் எல்லோரையும் மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி
 3. மிக்க நன்றி ஈழப்பிரியன்.உங்கள் எல்லோருடனும் மீண்டும் கருத்துக்கள் வழியாக இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.உறவினர்களை திரும்ப பார்த்த சந்தோசம். உங்கள் அன்பிற்கும் அறிவுரைக்கும் நன்றி. முடிந்தவரை video போட முயற்சி செய்கிறேன். இந்த தொதல் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.சுவை நன்றாகவே இருக்கும்.நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு எல்லாம் சமைத்து video போடுகிறேன். நன்றி சுவி
 4. உண்மைதான் ஈழப்பிரியன்.அப்படி ஒரு video இதற்கு முதல் போட்டுள்ளேன். நன்றி
 5. தமிழனாக பிறந்ததால் நமக்கு கிடைத்த பரிசு இதுமட்டும்தான்.எல்லா இடங்களிலும் புறக்கணிப்பு
 6. திருமணநாள் நல்வாழ்த்துகள்
 7. மன்னிக்க வேண்டும் தமிழ்சிறி. புதிதாக சில பொறுப்பக்கள் சேர்ந்து கொண்டதால் வரமுடியவில்லை.ஆனாலும் திரும்பி வரும்போது இணைத்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. நன்றி தமிழ்சிறி
 8. வணக்கம் sir அடிக்கடி காணாமல் போவது எனக்கு வழக்கமாகி விட்டது போலஉங்கள் எல்லோரையும் மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி
 9. கிராமிய மணம் வீச அற்புதமான கிராமிய மொழிநடையில் எழுதப்பட்ட கதை அருமை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல படைப்பை பார்த்த திருப்தி. வாழ்த்துகள் தோழி
 10. தமிழசிறி நீங்கள் இப்படி சிந்திக்கிற ஆள் இல்லையே தவறு நடக்கும்போது பெண்கள்தான் தப்பு செய்திருப்பார்கள் என்று எண்ணுவதுதான் எம் சமூகத்தின் சிந்தனையாக இருக்கிறது்
 11. இதில் குறிப்பிட்ட எல்லா பழமும் நான் சாப்பிட்டுள்ளேன். அந்த சுவைகளிற்கு இங்குள்ள எந்த பழமும் ஈடாகாது.
 12. சின்னதாய் கொஞ்சம் செய்தால் பார்க்க சந்தோசமாய் இருக்கும். என் பெற்றோரின் சந்தோசத்திற்காகத்தான் நாங்களும் இதை செய்கிறோம் பக்கத்தில் இருந்தால் கண்டிப்பாய் கொடுத்திருப்பேன். தீயா ஊரில இருக்கிற முயலுக்கெல்லாம் சாப்பாடு போட்டு வளர்க்கிறார். எங்கட தோட்டமும் முயலும் பெரிய போராட்டமாயே இருக்கிறது.அறுவடை வருமா என்பதை பொறுத்திருந்தைதான் பார்க்க வேண்டும். நன்றி அக்கா
 13. நான் இந்த ஊசியை எடுப்பதே இல்லை என உறுதியாக இருந்தேன். எங்கள் வீட்டில் அம்மா அப்பா கணவர் என எல்லோரும் போட்டுக் கொண்டார்கள். இரண்டாவது ஊசிக்கு மட்டும் லேசான உடல்வலி இருந்தது. எல்லோரும் பைசர் ஊசிதான் போட்டார்கள். எனக்கு Flu shots எடுத்தாலே நான்கு நாட்களிற்கு உடல்வலி காய்ச்சல் இருக்கும். அதனால் இதை எடுப்பதை தவிர்த்து வந்தேன்.ஆனால் எல்லோரும் வீட்டில் போட்டுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதால் இரண்டு மாதங்களிற்கு முன் இரண்டு ஊசியும் போட்டு முடித்துவிட்டேன்.அதிசயமாக எனக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. காய்ச்சலும் வரவில்லை. உடம்பு வலியும் இல்லை. ஆனால் நான் வைத்தியர் சொன்ன அறிவுரையை அப்படியே கடைப்பிடித்தேன். அதாவது ஊசிபோடுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன் 16 ounce தண்ணி குடிக்கும்படி கூறினார்கள். அதேபோல் ஊசி போட்டபின்னும் அதிகளவான தண்ணி உணவுகளை எடுத்துக் கொள்ளும்படி கூறினார்கள். கூடவே எட்டு மணித்தியாலத்திற்கு பின் ஊசி போட்ட கையை நன்றாக அசைக்கும்படி கூறினார்கள். நான் இவை எல்லாவற்றையும் முறையாக கடைப்பிடித்தேன். மூன்று நாட்கள் என்னால் முடிந்த அளவு தண்ணீர் குடித்தேன்.அதனாலோ என்னவோ எனக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. கடவுளிற்கு நன்றி. யாருக்காவது இது பயன்படும் என்பதால் இதை பகிர்ந்திருக்கின்றேன்.
 14. நன்றி தமிழ் சிறி. முதல் முறையாக என் YouTube. channel இலும் உங்கள் கருத்தை பதிவிட்டிருந்தீர்கள். மிக்க நன்றி . செய்யும்போது கொஞ்சமாய் முதல் செய்யுங்கோ
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.