Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

nige

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  828
 • Joined

 • Last visited

Posts posted by nige

 1. On 6/6/2021 at 02:26, தமிழ் சிறி said:

  ஓம் பாலைப்பழம். மிகவும் சுவையாக இருக்கும். 
  நீங்கள் குறிப்பிட்ட...  வீரைப்பழம் , சூரைப்பழம்  போன்றவற்ரை  சாப்பிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

   

  இதில் குறிப்பிட்ட எல்லா பழமும் நான் சாப்பிட்டுள்ளேன். அந்த சுவைகளிற்கு இங்குள்ள எந்த பழமும் ஈடாகாது.

 2. 5 hours ago, சுவைப்பிரியன் said:

  நன்றாக உள்ளது.மனதுக்கு மகிழ்ச்சியான விடையம்.

  உண்மைதான் சுவைபிரியன்.நன்றி 

 3. 1 hour ago, ஈழப்பிரியன் said:

  எமது வீட்டிலும் பெரிய இடமிருக்கிறது.ஆனாலும் செய்ய நேரமில்லை.

  சின்னதாய் கொஞ்சம் செய்தால் பார்க்க சந்தோசமாய் இருக்கும். என் பெற்றோரின் சந்தோசத்திற்காகத்தான் நாங்களும் இதை செய்கிறோம்

  1 hour ago, நிலாமதி said:

  சின்ன இடத்திலும்  நன்றாக ஒழுங்கு செய்து இருக்கிறீர்கள் . வீட்டில்  சின்ன தோடடம் இருந்தால் நன்றாக பொழுது போகும்.  அறுவடையின் போது யாழ் உறவுகளுக்கும்  விநியோகம்  இருக்கா ?😃

  பக்கத்தில் இருந்தால் கண்டிப்பாய் கொடுத்திருப்பேன். தீயா ஊரில இருக்கிற முயலுக்கெல்லாம் சாப்பாடு போட்டு வளர்க்கிறார். எங்கட தோட்டமும் முயலும் பெரிய போராட்டமாயே இருக்கிறது.அறுவடை வருமா என்பதை பொறுத்திருந்தைதான் பார்க்க வேண்டும். நன்றி  அக்கா 

 4. நான் இந்த ஊசியை எடுப்பதே இல்லை என உறுதியாக இருந்தேன். எங்கள் வீட்டில் அம்மா அப்பா கணவர் என எல்லோரும் போட்டுக் கொண்டார்கள். இரண்டாவது ஊசிக்கு மட்டும் லேசான உடல்வலி இருந்தது. எல்லோரும் பைசர் ஊசிதான் போட்டார்கள். எனக்கு Flu shots எடுத்தாலே நான்கு நாட்களிற்கு உடல்வலி காய்ச்சல் இருக்கும். அதனால் இதை எடுப்பதை தவிர்த்து வந்தேன்.ஆனால் எல்லோரும் வீட்டில் போட்டுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதால் இரண்டு மாதங்களிற்கு முன் இரண்டு ஊசியும் போட்டு முடித்துவிட்டேன்.அதிசயமாக எனக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. காய்ச்சலும் வரவில்லை. உடம்பு வலியும் இல்லை. ஆனால் நான் வைத்தியர் சொன்ன அறிவுரையை அப்படியே கடைப்பிடித்தேன். அதாவது ஊசிபோடுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன் 16 ounce தண்ணி குடிக்கும்படி கூறினார்கள். அதேபோல் ஊசி போட்டபின்னும் அதிகளவான தண்ணி உணவுகளை எடுத்துக் கொள்ளும்படி கூறினார்கள். கூடவே எட்டு மணித்தியாலத்திற்கு பின் ஊசி போட்ட கையை நன்றாக அசைக்கும்படி கூறினார்கள். நான் இவை எல்லாவற்றையும் முறையாக கடைப்பிடித்தேன். மூன்று நாட்கள் என்னால் முடிந்த அளவு தண்ணீர் குடித்தேன்.அதனாலோ என்னவோ எனக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. கடவுளிற்கு நன்றி. யாருக்காவது இது பயன்படும் என்பதால் இதை பகிர்ந்திருக்கின்றேன்.

  • Like 2
  • Thanks 1
 5. On 6/6/2021 at 02:54, தமிழ் சிறி said:
  பார்க்க மிகவும் அழகாக உள்ளது. 
  இலங்கையில்.... சாப்பிட்டுள்ளேன். ஒரு முறை செய்து பார்க்க வேண்டும். 
   
   

  நன்றி தமிழ் சிறி. முதல் முறையாக என் YouTube.  channel இலும் உங்கள் கருத்தை பதிவிட்டிருந்தீர்கள். மிக்க நன்றி . செய்யும்போது கொஞ்சமாய் முதல் செய்யுங்கோ😀

 6. 3 hours ago, ஈழப்பிரியன் said:

  செய்முறைக்கு பாராட்டுக்கள்.

  மீன் பொரியல் வயது வித்தியாசமில்லாமல் சுவைத்து சாப்பிடலாம்.

  உண்மைதான் ஈழப்பிரியன்

  2 hours ago, suvy said:

  செய்முறைக்கு நன்றி சகோதரி.......கருவேப்பிலையை வறைக்கு அரிவதுபோல் அரிந்து போட்டது வித்தியாசமாக இருந்தது.......!  👍

  கறிவேப்பிலை சேர்ப்பது மிக சுவையாய் இருக்கும்.நன்றி சுவி 

 7. 37 minutes ago, உடையார் said:

  எனக்கு மிகவும் பிடித்த மீன் பொரியல், நன்றி நிகே பகிர்வுக்கு, அடுத்த முறை உங்கள் செய்முறையில் செய்து பார்க்க வேண்டும்

  சொதி செய்முறையையும் இணைத்துவிடுங்கள் விரைவில்

  நன்றி உடையார் . நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. என் அடுத்த இணைப்பில் சொதியை இணைக்கின்றேன்.

  27 minutes ago, குமாரசாமி said:

  நானும் செய்து பாக்கத்தான் இருக்கு...

  சந்தோசம் உங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

 8. 18 hours ago, நிலாமதி said:

  நன்றாக வந்திருக்கிறது . இன்று தான் கேள்விபட்டேன்/ முல்லங்கி  அதிகம் தவிர்க்கும் மரக்கறி ..இப்படி செய்தால்  உண்ணலாம். 

  மிக சுவையாக இருக்கும். முயன்று பாருங்கள்.நன்றி அக்கா 

 9. 13 hours ago, தமிழ் சிறி said:

  நிகே.... நீங்கள், இதுவரை செய்த  சமையல் குறிப்புகள் எல்லாம் நிறமானது. 👍
  ஆனால்...  முள்ளங்கியில் பகோடா என்பதை, 
  "புலி பசித்தாலும், புல்லை தின்ன மாட்டுது" என்பது போல்..
  அந்தப் பகோடாவை, செய்து பார்க்கிற, ஐடியா இல்லை. :)

  பிற் குறிப்பு: சென்ற கிழமை... இரண்டு கிலோ கடலைப் பருப்பில்,
  உறைப்பான, மொறு மொறுப்பான... பகோடா செய்து,  வைத்திருக்கின்றோம்.   :grin:

  சந்தோசம்.அதை செய்ய எவ்வளவு நேரம் தேவைப்பட்டிருக்கும் என எண்ணும்போது பயமாய் இருக்கிறது.இந்த பகோடா அந்த பகோடா மாதிரி மொறுமொறுப்பு அதிக நேரம் இருக்காது.ஆனால் சுவை அதைவிட சூப்பராக இருக்கும்.நன்றி தமிழ் சிறி..உங்கள் கருத்தை நேரம் கிடைத்தால் எப்பவாவது என் channel இலும் எழுதிவிடுங்கோ. நன்றி

 10. 13 minutes ago, ஈழப்பிரியன் said:

  செய்முறைக்கு பாராட்டுக்கள்.

  இதுதான் முதல்முறை முள்ளங்கியில் பகோடா செய்வதைப் பார்க்கிறேன்.
  உடம்புக்கு ஆரோக்கியம் என்று வீட்டில் பால்கறி செய்வார்கள்.மிகவும் மணமாக இருக்கும்.மூக்கைப் பிடித்துக் கொண்டு சாப்பிட்டு முடிக்க வேண்டியது தான்.

  இதை ஒருக்கா செய்து பார்க்க வேண்டும் போல உள்ளது.ஆனாலும் எண்ணெயில் போட்டு எடுப்பதால் தவிர்க்க வேண்டி உள்ளது.

  எதைச் செய்தாலும் அதற்கான நேரத்தையும் போடுங்கள்.
  இல்லாட்டி ஒராள் தொடங்கி போட்டு உங்களைத் தான் பேசிக் கொண்டிருப்பார்.

  நான் ஒவ்வொரு முறையும் நேரத்தை போட நினைப்பேன். ஆனால் தமிழ்சிறியின் அனுபவத்தை நினைத்ததும் பயத்தில் விட்டுவிடுவேன்.இதை செய்ய அரைமணி நேரமே அதுகம்தான்.எண்ணை அதிகம் குடிக்காது.உறைப்பு கூடுதலாய் தேவை என்றால் அதிகமாய் சேர்க்கலாம். மிக மிக சுவையாக இருக்கும்.முள்ளங்கியில் சட்ணி செய்தாலும் சுவையாய் இருக்கும். பகோடாவில் முள்ளங்கியின் மணம் இருக்காது. நன்றி ஈழப்பிரியன்...

  • Haha 1
 11. 4 hours ago, suvy said:

  பகிர்வுக்கு நன்றி சகோதரி......செய்ததும் சூட்டுடன் சாப்பிட நல்லா இருக்கும்.....மற்ற சாதாரண பகோடா போல ஒரு வாரத்துக்கு மேல் வைத்திருக்க முடியாது என நினைக்கிறேன். இளவாளித்து விடும் இல்லையா.....!  👍

  உண்மைதான் உடனே சாப்பிட்டால் மொறு மொறு என்று இருக்கும். பின் மென்மையாக இருக்கும். ஆனாலும் சுவை அட்டகாசமாய் இருக்கும்...நன்றி சுவி 

 12. On 15/5/2021 at 13:52, ஈழப்பிரியன் said:

  தலைப்பு தமிழ் சிறிக்காகவே வைத்த மாதிரி இருக்கிறதே?

  செய்முறைக்கு பாராட்டுக்கள்.

  உண்மைதான்ஈழப்பிரியன். Ha ha 😀😀நன்றி 

  13 hours ago, தமிழ் சிறி said:

  பூரி... வடிவாக பொங்கி வந்துள்ளது 👍. ஒரு முறை செய்து பார்க்க வேண்டும்.
  மசாலா கறிக்கு... நாங்கள், மிளகாய்த் தூள் போட்டு, செய்யிற "பிளான்" இருக்கு. :)

  ஈழப்பிரியன்,  நாளைக்கு... இதனால்,  சட்டச்சிக்கல் வந்து விடக் கூடாது, என்பதற்காக... 
  நிகே... சட்ட வல்லுனர்களுடன், கலந்து ஆலோசித்து... 
  தலைப்பை போட்டிருக்கிறா, என நினைக்கின்றேன்.  :grin:

  இந்த video க்கு 15 நமிடத்தில் செய்யலாம் என்று போட நினைத்தேன் அப்போது நீங்கள் முறுக்கு சுட்டதுதான் ஞாபகத்திற்கு வந்தது தமிழ் சிறி. அதுதான்  போடேல்ல . சுட்டு சாப்பிட்டுட்டு சொல்லுங்கோ.. நன்றி 

  3 hours ago, ஈழப்பிரியன் said:

  எப்ப தான் செய்யப் போறீங்க.

  சம்பந்தர் ஐயா சொன்ன மாதிரி தீபாவளி என்று சொல்லாமல் எந்த வருடம் என்றும் சொல்ல வேண்டும்.

  தமிழ் சிறி சுட்டால் அது ஊருக்கே சுடுறமாதிரி . அதுதான் அவருக்கு கொஞ்சம் நேரம் அதிகமாக தேவை .😀😀

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.