Jump to content

nige

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    846
  • Joined

  • Last visited

Everything posted by nige

  1. என்ன யாயினி நீங்களே இப்படி சொன்னால்🥲பிரச்சனைகளை கையாள்வதில் ஆண்களைவிட பெண்களே அனுபசாலிகள். காரணம் பிரச்சனைகளை சாமாளிக்கும் பக்குவம் தெரிந்தவர்கள்.ஆண்களிடம் பிரச்சனையை கையாள்வதில் அவசரம் இருக்கும் ஆனால் பெண்களிடம் நிதானம் இருக்கும்.நீங்கள் அப்படியே மாத்தி சொல்கிறீர்கள்.இதற்காகவாவது யாயினியை தூக்கி நிர்வாகத்தில் போடுங்கோ
  2. என்ன கஸ்ரப்பட்டாலும் கடைசியில முறுக்கு நன்றாகவே வந்திருக்கு. நல்ல காலம் என்ர தலை தப்பீற்று
  3. எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு நோவே வந்திட்டு தமிழ் சிறி.. நான் ஒரு சுண்டு மாவில சுடத்தான் பத்து நிமிடம் என்று சொன்னேன். நீங்கள் 20 சுண்டு மாவை குழைத்துவிட்டு பத்து நிமிடத்தில முறுக்கு சுடோணும் எண்டால் எப்படி முடியும்... சரியான கேள்வி யாயினி. வருசத்திற்கு யாழில் இருக்கும் எல்லோருக்கும் தமிழ் சிறி முறுக்கு சுட்டு தருவார்...😍😍😀😀
  4. அவருக்கு காய்ச்சல் இருந்தது ஆனால் வேறு எந்த மாற்றமும் தெரியவில்லை. வைத்திய ஆலோசனை பெற்றிருந்தார்கள் ஆனால் மூச்சுவிடுவதில் சிக்கல் இல்லாததால் அவர் வைத்தியசாலைக்கு செல்லவில்லை கூடவே வைத்தியசாலைக்கு சென்றால் தனக்கு ஏதாவது நடந்துவிடும் என்ற பயம் ஒருகாரணம். சிலருக்கு COVID mild ஆக வந்தால் இலகுவாக அதில் இருந்து மீண்டு விடுவார்கள். ஆனால் இன்னும் சிலர் சாவின் விளிம்பிற்கு போய்வருகிறார்கள். என் உறவினர் சிலருக்கும் இது வந்தது. இரண்டு நாட்கள் மெல்லிய காய்சல் அதோடு மாறிவிட்டது.
  5. பிறந்தநாள் வாழ்த்துகள்..❤️❤️❤️❤️❤️
  6. வணக்கத்திற்குரியவர். உங்கள் வரிகள் அதை அழகாக்கியுள்ளது..
  7. என் நண்பியின் கணவருக்கு மூன்று வாரங்களிற்கு முதல் கொறோனா தொற்று ஏற்பட்டது. கடுமையான காய்சல் 10 நாட்களாக தொடர்ந்தது.ஆனாலும் அவர் பயத்தில் வைத்தியசாலைக்கு செல்லவில்லை.ஆவி பிடிப்பது, ரசம் குடிப்பது என பல தமிழ் வைத்திய முறைகளை விடாமல் செய்து கொண்டிருந்தார்.ஆனால் அவருக்கு மூச்சு விடிவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. அவர்களிற்கு 1 வயதில் ஒரு குழந்தை இருக்கின்றது அந்த குழந்தையை பரிசோதிப்பதற்காக வந்த nurse தற்செயலாக நண்பியின் கணவரின் நாடித் துடிப்பை பரிசீலித்துள்ளார்.அப்போது அவரின் நாடித்துடிப்பு மிக குறைவாக இருந்ததால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது அவரது ஙரையீரல் 90% பாதிக்கப்பட்டிருந்தது.மிக கடுமையான நிலையில் அவர் உடல்நிலை காணப்பட்டது.தப்புவது கடினம் என வைத்தியர்களால் கூறப்பட்டது.எனினும் வைத்தியர்களின் கடுமையான ஒரு கிழமை போராட்டத்தில் அவர் இப்போது அபாய கட்டத்தை இப்போது தாண்டிவிட்டார். அவர் வைத்தியசாலை செல்லாமல் இருந்திருந்தால் இப்போது அவரை பார்த்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஒவ்வொரு உடலுக்கேற்ப இந்த கொறோனா தன் இயல்பை மாற்றிக்கொள்கிறது.யாராக இருந்தாலும் ஒரு வைத்தியரின் ஆலோசனையை பெறுவது பாதுகாப்பானது..
  8. யதார்த்தத்தை சொல்லும் கவிதை... வலிசுமந்த வரிகள். பகிர்வுக்கு நன்றி
  9. கருத்து பகிர்வுக்கு நன்றி சுமே.. நீங்கள் எல்லோரும் நலமாக இருப்தில் மிக சந்தோசம். உங்கள் எல்லோருக்கும் உடம்பில் எதிர்ப்பு சக்தியும் மனதில் தைரியமும் இருப்பதால்தான் இது சாத்தியமானது. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமானதா என்பது கேள்விக்குறிதான்.வைத்தியசாலை சென்றதால் கடைசி நேரத்தில் தப்பி பிழைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.அதானால் வீட்டில் இருந்தால் கொறோனா மாறிவிடும் என்பதுதான் சிறு உறுத்தல். ஆனால் உங்கள் அனுபவத்தில் அது சாத்தியமானதில் சந்தோசம்.
  10. உண்மைதான்... நானும் இதை எண்ணுவதுண்டு. பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் யாயினி
  11. நன்றாக இருக்கின்றது. சில விடயங்கள் நெருடலாக இருந்தாலும் கதையை நகர்த்தும் விதம் வாசிக்கத் தூண்டுகிறது...பாராட்டுக்கள்
  12. வலி சுமந்த வரிகள்.அம்மா என்ற உறவு மட்டுமல்ல அந்த சொல்கூட வலிமை மிக்கதுதான்.
  13. சரியான சந்தேகம்தான் அக்கா
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சிறி. வாழ்க பல்லாண்டு
  15. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யமுனா, அருண்..
  16. ஏன் அப்படி சொல்கிறீர்கள். கவனமாய் இருங்கள். இதுவும் கடந்து போகும்.. நல்லதே நடக்கும் என்று நம்புவோமாக
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.