• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  8,435
 • Joined

 • Last visited

 • Days Won

  9

Everything posted by பெருமாள்

 1. இந்த படத்தில் சுமத்திரன் வெள்ளைக்காரன் போல் இருக்கிறார் (நெடுகிலும் கும்மி எடுக்க சுமத்திரன் தம்பிகளுக்கு ரெத்த கொதிப்பு வரக்கூடாது பாருங்க )
 2. ஏன் யாழ்கள கருத்தாளர்களை உங்கடை சுயநல அரசியலுக்கு இழுக்கிறீர்கள் ? முட்டையில் மயிர் இருக்கெண்டு இதுவரைக்கும் எனக்கு தெரியாது உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும் அது உங்கடை வேலை எண்ணுவது எங்கடையது அல்ல கோபிக்க கூடாது . நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என்பது எனக்கு விளங்குது உங்களை மறந்து சொன்ன தகவலுக்கு நன்றி
 3. ஒன்றுமே இல்லை என்று எப்படி சொல்லலாம் இதே தமிழரசு கூட்டத்தில் மாவையின் மகன் குழற தான் கொண்டுவந்தனான் என்று ஒப்புதல் வாக்கு மூலம் சுமத்திரன் கொடுத்து உள்ளாரே ?
 4. Tholar Balan 38 mins · •சுமந்திரன் உருவப் பொம்மையை எரித்தால் இலங்கை அரசு ஏன் எரிச்சல் அடைகிறது? கடந்த மே மாதம் 14ம் திகதி இயக்குனர் களஞ்சியம் அவர்கள் தமிழ்நாட்டில் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்படி வழங்கி எரித்தார். உடனே இலங்கைப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் களஞ்சியம் அவர்களை போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர் என அறிய வருகிறது. “எமக்கு தமிழ்நாட்டில் 200 பேர் இருக்கிறார்கள். கருணா அம்மானுக்கு 300 பேர் இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து உன்னை தூக்குவோம்” என்று களஞ்சியம் அவர்களை கொச்சைத் தமிழில் மிரட்டியுள்ளனராம். இதைவிட தமிழக கியு பிரிவு பொலிஸ் “தேவையானால் மோடியின்ரை உருவப் பொம்மையை கொளுத்துங்க. ஆனால் சுமந்திரன் உருவப் பொம்மையை மட்டும் கொளுத்தாதீங்க” என்று கேட்கிறார்களாம். சுமந்திரன் உருவப் பொம்மை எரித்தமைக்கு நேரடியாக வழக்கு போட முடியாததால் கொரோனோவில் வீட்டை விட்டு வெளியேறியது குற்றம் என்று வழக்கு போடுகிறார்களாம். இப்போது எமது கேள்வி என்னவெனில் சுமந்திரன் தமிழர் தலைவர் என்றால் அவரது உருவப் பொம்மை எரிக்கப்பட்டமைக்கு தமிழ் மக்கள்தானே எரிச்சல்பட வேண்டும். ஏன் இலங்கை இந்திய அரசுகள் எரிச்சல் அடைகின்றன? இலங்கை இந்திய அரசுகள் தாம் நேரடியாக செய்ய முடியாததை சுமந்திரன் மூலம் சாதிக்க முனைகின்றன என்பதே இதன் அர்த்தம் ஆகும். எனவேதான் சுமந்திரன் தோல்வியுற்றால் மீண்டும் தமிழ் தேசிய உணர்வு மேலோங்கிவிடும் என இவ் அரசுகளின் புலனாய்வு அமைப்புகள் அச்சமடைகின்றன. குறிப்பு- இயக்கனர் களஞ்சியம் அவர்கள் நான் எழதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலை பெற்றுக்கொண்டபோது எடுத்த படம். இந்த படத்தை பார்த்ததும் இதற்காக இன்னொருமுறை களஞ்சியத்தை கியூ பிரிவினர் விசாரிக்கப் போகிறார்கள்? பாவம் மனுசன்.
 5. அவர்கள் செய்வார்கள் காரணம் எமது அரசியல்வாதிகளின் முதுகெலும்பில்லா நடவடிக்கைகள் ஐந்து நாளில் 80 கூட்டம்களுக்கு சென்ற சுமத்திரனால் நவாலி படுகொலை நிகழ்வுக்கு இரங்கல் தெரிவிக்க போக முடியவில்லையாம் நம்புங்கள் மக்களே இவர்தான் ஜனநாயகவழியில் போராடி தீர்வு பெற்றுத்தர போகிறாராம் அப்ப கடந்த பத்து வருடமாய் என்ன செய்தவர் என்று கேட்க்க கூடாது கேட்டால் செம்புத்தவளைகளுக்கு கோபம் வந்துவிடும் ஒருவேளை 2010 தொடக்கம் 2020 வரை வன்னி காட்டில் இருந்து இலங்கை ராணுவத்துக்கு எதிராக போராடிக்கொண்டு இருந்தவரோ ?
 6. அங்குள்ள இளைய தலைமுறையினரை தன்னம்பிக்கை அற்றவர்களாக மாற்றி வேறு வைத்திருக்கிறார்கள் மூன்று மொழிகளிலும் புலமையாளர்களை கார்டலியில் படித்த நபர்களை சுமத்திரன் தன்னுடைய செம்பாக மாற்றி வைத்துள்ள கொடுமையும் நடக்குது..
 7. சரிப்படுத்த முடியாத அளவுக்கு பதவி வெறியும் குத்துப்பாடும் கொள்ளுப்பாடும் நிறைந்த அரசியல் சாக்கடையாகி விட்டது . புதியவர்கள் நிறைந்த சிரமத்தை எதிர்நோக்குவார்கள் அங்கிருப்பவர்கள் யார் என்றாலும் புலம்பெயர் என்றால் பணத்தை மாத்திரம் அனுப்புங்கள் அத்துடன் உங்கள் வேலை முடிந்து விட்டது என்ற வகையில்தான் கதைபேச்சு .
 8. அமோக வெற்றி என்பதெல்லாம் நம்புவதுக்கு ஒரு காலம் இருந்தது இம்முறை யார் வந்தாலும் தமிழனுக்கு விடிவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் கூத்தமைப்புக்குள் ஒருத்தரை ஒருத்தர் இழுத்து விழுத்தும் நிலைதான் தொடர்கிறது இந்த நிலையில் சுமத்திரன் அமோக வெற்றி என்பது பகல் கனவே அந்த படு தோல்விக்கு பின் உண்ணிகள் கழண்டு ஓடுவதை போல் செம்புகள் வாயை மூடிவிடுவினம் அதன் பின் சுமத்திரன் ஐயா தனக்கு பிடித்த சிங்களவர்களுடன் அமைதியாக கொழும்பில் வாழலாம் .
 9. Tholar Balan 6 ம · அரசு ஆயுதம் கொண்டு வன்முறையை பாவிக்கும்போது அதற்கு ஆயுதரீதியாக பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதுவே ஆயுதப் போராட்டத்தின் பின்னால் உள்ள அரசியல். இதுவே எளிமையாக “ அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல . அது தற்காப்பு” என்று கூறப்படுகிறது. இது சுமந்திரனுக்கு புரியவில்லை அல்லது புரிந்தும் வேண்டுமென்றே “ ஆயுதப் போராட்டம் வன்முறை என்றும் நான் அகிம்சை வழியில் தீர்வு பெற்று தருவேன்” என்று கூறுகிறார். சரி அப்படியென்றால் கடந்த 11 வருடங்களாக சுமந்திரன் செய்த அகிம்சைப் போராட்டம் என்ன? அதன்மூலம் பெற்ற தீர்வு என்ன? என்று கேட்டால் அதற்குரிய பதிலை தரவேண்டும். ஆனால் மாறாக “நீங்கள் என்ன செய்தீர்கள?;” என்று திருப்பி கேட்கிறார்கள் சுமந்திரன் தம்பிகள். கேள்வி கேட்டால் முதலில் அதற்குரிய பதிலை அளிக்க வேண்டும். அதைவிடுத்து திருப்பி கேள்வி கேட்பது உரிய பதில் இல்லை என்பதை சுமந்திரன் தம்பிகள் முதலில் உணர வேண்டும். இதுவரையில் பதவியில் இருந்தது சுமந்திரன்தான். இப்போது வந்து மீண்டும் பதவி தாருங்கள் என்று கேட்பதும் சுமந்திரன்தான். எனவே சுமந்திரனிடம் கேள்வி கேட்பதற்கு ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமையும் தகுதியும் உண்டு என்பதையும் சுமந்திரன் தம்பிகள் உணர வேண்டும். மாறாக ஒருவர் ஏதாவது சாதித்த பின்புதான் வந்து சுமந்திரனிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கருதுவது ஆக்கபூர்வமான உரையாடலுக்கு வழி சமைக்காது என்பதை சுமந்திரன் தம்பிகள் உணர வேண்டும். எப்படித்தான் சுட்டிக்காட்டினாலும் சில தம்பிகள் புரிந்து கொள்ளப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் அற்ப சுயநல சலுகைகளுக்காக சுமந்திரனை ஆதரிக்கிறார்கள். சுமந்திரன் தோல்வியுற்றதும் செத்த மாட்டில் இருந்து உண்ணிகள் கழருவதுபோல் இவர்கள் கழன்று சென்று விடுவார்கள். இது சுமந்திரனுக்கும் நன்கு தெரியும்.
 10. இங்கு ஒரு வயதானவர் கேட்டு தெரிந்தவர்கள் மூலம் எடுத்து குடுக்க எனக்கும் ஒரு கொஞ்சம் தந்து அனுப்ப மனுசிக்கு பிலிம் காட்டப்போய் குசினிக்குள் நானே குத்து மதிப்பில் சமையல் போட கடைசியில் வாயெல்லாம் கடியுடன் cetirizinee hydro எடுத்துத்தான் நிண்டது வாழ்க்கையில் இனி இந்த விளையாட்டு வேண்டாம். .
 11. என்ன பாடுபட்டாவது சுமத்திரனை பதவிக்கு கொண்டுவரனும் என்பதில் தீவிரமாக உள்ளனர் இனவாத சிங்களவர்கள் சிறிதரன் கள்ளவோட்டு சம்பந்தமாக உளறி அதுக்கும் ஆப்பு குடுத்துவிட்டார் இந்த முறை கொரனோ பிரச்சனையில் சமூக ஊடகங்களில் மற்றவர்கள் போல் தானும் வெளிக்கிட்டார் போதாக்குறைக்கு தன் தம்பிமாரையும் அங்கு கொண்டுவர நடந்த சமூக ஊடக கலவரத்தில் அவரின் முடிவு அவருக்கே தெரிந்துவிட்டது படுதோல்வி என்று உடனே ஐந்து நாட்களில் 80 க்கு மேட்பட்ட கூட்டங்களுக்கு ஒழுங்கு செய்து கடைசியாக நெல்லியடி கூட்டத்தில் காய்ச்சல் பிடித்த முகத்துடன் தனக்கு ஓட்டு போடவேண்டாம் என்று முனகுவதை பார்க்க எனக்கு மேலேயுள்ள மாவீரர்கள் சிரிப்பது போல் இருந்தது .தமிழ் தேசியத்தை சிதைக்க முட்படும் எவருமே நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை .
 12. யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல் தவறாகவே இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதைத் தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும்" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் 1995ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தியிருந்தனர். 147 பேர் வரையில் உயிரிழந்திருந்தனர். யாழ். குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் அப்போதைய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து ஆலயத்தில் தங்கியிருந்த மக்கள் விமானப் படைக் குண்டு வீச்சில் சாவடைந்திருந்தனர். அவர்களை நினைவுகூர்ந்து நினைவேந்தலை கடைப்பிடிப்பதற்குத் தடை விதிக்குமாறு கோரி மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்தனர். இது தொடர்பில் சந்திரிகாவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் தவறுதலாகவே குண்டு வீச்சு நடத்தினர். விமானப் படையினரின் இலக்காக தேவாலயம் இருக்கவில்லை. அந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கேள்விப்பட்டதுமே விமானப் படையினரைக் கண்டித்தேன். உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது அடிப்படை உரிமை. அதை யாரும் தடுக்கக் கூடாது" எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.tamilwin.com/politics/01/250551?ref=home-top-trending
 13. ஊரில் எதோ நோய் பரவி இந்த மரமெல்லாம் அழிந்துவிட்டனவாம் என்று இங்குதான் முதல் யாரோ எழுதினவையல் .
 14. Tholar Balan 8 நிமிடங்கள் · •பிரான்சும் இந்தியாவும்! பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்று சேர்ஜியா மகேந்திரன் துணை முதல்வராக நியமனம் பெற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள். பிரான்ஸ்க்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர்களான செல்லப்பா மகேந்திரன் தேவி தம்பதிகளின் புதல்வியான சேர்ஜியா சட்டம் படித்து இன்று துணை முதல்வராக வந்துள்ளார். ஆனால் இந்தியாவில் 1983ம் அண்டு முதல் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர் குடியுரிமை பெறவும் முடியவில்லை. உயர் கல்வி பெறவும் முடியவில்லை. மாறாக இந்த கொரோனோ காலத்திலும் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கும் அவலநிலை. இந்த லட்சணத்தில் இந்திய பிரதமர் மோடி தனக்கு பின்னால் இருப்பதாக சம்பந்தா ஐயா பெருமையாக கூறுகிறார். என்னே கேவலம் இது!
 15. சுமந்திரன் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளாரே தவிர அவர்களை விடுவிக்கவில்லை என யாழில் இளைஞர்கள் சுமந்திரன் மீது தமது ஆத்திரத்தை கொட்டித்தீர்த்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கஜதீபன் தலைமையில் யாழில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே இளைஞர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதன் போது சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பில் குறித்த இளைஞர்கள் தெரிவிக்கையில் , பொதுவான அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நீங்கள் முயற்சிக்கவில்லை. மாறாக சுமந்திரன் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார். சுமந்திரனால் மேலும் 16 அரசியல் கைதிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவ்விடயத்தில் நீங்கள் எதிர்கட்சியாக இருந்து செய்தது என்ன? தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென சுமந்திரன் கூறியிருந்ததை தமிழரசுக் கட்சி அது அவரது தனிப்பட்ட கருத்து என கூறியிருந்தது. இலங்கை அரசியலில் முக்கியமான வகிபாகம் வகிக்கும் பிரதான கட்சியொன்றின் ஊடக பேச்சாளர் இவ்வாறு கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லக்கூடியவரின் கருத்தை தனிப்பட்ட கருத்தாக கருதினால் அவரை நம்பி எப்படி மக்களின் பிரதிநிதியாக தெரிவு செய்ய முடியும்? மேலும் இலங்கை தமிழரசு கட்சியின் பதிவு செய்யப்பட்ட சட்டபூர்வ தலைவர் இரா.சம்பந்தன் தானா? என்பது தொடர்பில் தெளிவுபடுத்துங்கள் என்று கூறி தமிழரசு கட்சி மற்றும் சுமந்திரன் தொடர்பிலான பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர். https://www.tamilwin.com/politics/01/250474?ref=imp-news
 16. அவர் முக்கியம் காட்டவேணும் ஏனென்றால் கனடிய பணவிடயம் பின்னுக்கு பெரிதாகும் என்று அவருக்கு தெரியும் கைகளை கழுவி வைத்திருக்கிறாரம் சுத்தமாய் நம்புங்க மக்கள் .
 17. சுமத்திரன் இந்த பணவிடயத்தில் அடக்கி வாசிக்கிறார் அதாவது கடந்த ஐந்து நாட்களில் 80 மேற்பட்ட சந்திப்புகளை நடத்தி உள்ளார் அதில் ஒரு கூட்டத்தில் கூட இந்த பணம் சம்பந்தமாக சிங்கன் வாயை திறக்கவே இல்லை ஏன் ? அவர் திறக்க மாட்டார் காரணம் சுமத்திரன் கனடா மணி லோன்றிங் money laundering நடந்து இருக்கு அங்கிருப்பவர்களுக்கு money laundering தாக்கம் பெரிதாக தெரியவாய்ப்பில்லை அடிக்கடி சுமத்திரன் கனடா பறந்து போவதன் காரணமும் அதுதான் . ஆனால் கனடா இங்கிலாந்து போன்ற உளவுதுறைகளுக்கு சிறு பொறி தட்டினாலும் காணும் money laundering விடயத்தில் எந்த சமரசமும் செய்ய இடமளிக்க மாட்டார்கள் .
 18. உங்களுக்கே அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுபவர் என்று தெரிகிறது
 19. மரநாயின் வேலை அதுகளுக்கு வெறி பிடிப்பது ஆக்கும் தமது உணவுதேவைக்கு அதிகமாக கோழி புறா ஆடுகளை கொல்லும் மற்றைய மிருகங்கள் வரைமுறையுடன் நிக்கும் வீடியோவில் அதிகாரிகள் தான் சொன்னவை சருகு புலி என்று சொல்கிறார் . நாங்கள் இருக்கும் காலத்தில் கோழிபண்ணைக்குள் இறங்கி ஒரு இரவில் 400 கோழிக்கு மேல் போட்டு தள்ளி விட்டுதுகள் இதே போல் முழுமையாக உண்ணாமல் விட்டிருக்கும் வீடியோவில் உள்ளது போல் .