• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  7,558
 • Joined

 • Last visited

 • Days Won

  9

Posts posted by பெருமாள்


 1. 5 hours ago, இணையவன் said:

  எனது மகளைத் தமிழ் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி வீட்டில் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கக் காரணம் திக்கித் திக்கித் தமிழ் பயின்றவளைத் திருக்குறள் பாடமாக்க வைத்ததுதான்.

  நம்மட கதையும் அதுவே இப்படித்தான் இரட்டை கிழவிகள் பற்றி அறியாத ஒன்று பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க அன்றே நிப்பாட்டி பிரைவேட்டா சோதனை எழுதவைக்க அதிவிசேட சித்தியுடன் பாஸ் பண்ணியுள்ளார்கள் என்னை பொறுத்தவரை தமிழ் பள்ளிகள் என்பது பலரின் தன்மான பிரச்சனைகளின் வடிகால் அங்கு செல்லும் பிள்ளைகளை கேட்டு பாருங்கள் தமிழை விட கஷ்ட்டமான மொழி ஸ்பெயினும் பிரான்சும் படிக்க விருப்ப படுங்கள் தமிழ் வேண்டாம் என்று அழுது கொள்ளுங்கள் காரணம் எப்படி இலகுவாக தமிழ் படிப்பிப்பது என்பது தெரியாமல் போனது துரதிர்ஷ்டவசமாக அமைந்த ஒன்று .

  தமிழ் சொல்லிகொடுப்பதும் ஒரு கலை 

  ஊரில் ஒவ்வொரு பாட வாத்தியும் மாணவர்களின் மனதில் தங்களின் பாடம் நிக்கணும் என்பதுக்காக விதம் விதமாய் யோசித்து பாடம் நடத்துவார்கள் .

  இங்கு தமிழ் படிக்க விரும்பாத பிள்ளையை ஏன் என காரணம் கேட்டபோது அது சொல்கிறது தமிழில் மாத்திரம் தண்டனைகள் கடுமையாக உள்ளது அதனால் விளங்கி கொள்வது கஷ்ட்டமாக உள்ளது . தமிழ் பாடம் எடுக்கும் முன் மாணவர்களை விளங்கி கொள்ளனும் ஆசிரியர்கள் .

  • Like 2

 2. இலங்கையில் தான் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வருவதாக வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

  சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

  பௌத்தம் குறித்து பேசும் போது சிங்களவர்கள் பௌத்த சமயம் அவர்களுடையது என நினைப்பதே பிரதான பிரச்சினையாகும்.

  புத்தர் சிங்களவர் அல்ல எனக் கூறினால் மாரடைப்பு ஏற்படக் கூடியவர்கள் இருக்கின்றனர். விஜயன் சிங்களவர் அல்ல எனக் கூறினால், எங்களுடன் சண்டைக்கு வருபவர்களும் இருக்கின்றனர்.

  பௌத்தத்தை சிங்களவர்களின் சொத்தாக மாற்றிக்கொள்ளாமல், பௌத்தம் என்பது வடக்கு, தெற்கு கிழக்கு, மேற்கு என அனைவருக்கும் சொந்தமான உலக தர்மம், வாழ்க்கை முறை என மாற்ற சிங்களவர்கள் தலையிடும் நாளில் இதனை விட சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

  கடந்த ராஜபக்ச அரசாங்கம் வடக்கில் அபிவிருத்திகளை செய்தாலும் அரசியல் நெருக்கடியை தீர்க்க காட்டிய அசமந்த போக்கு பாரதூரமான குறைப்பாடு.

  வடக்கு மக்கள் ராஜபக்ச ஆட்சி நிராகரிப்பதற்கு தெளிவான காரணம் இருக்கின்றது. ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வடக்கில் வீதிகள் நிர்மாணிக்கப்பட்டன.

  இலங்கையில் ஏனைய இடங்களைவிட அபிவிருத்திகள் நடந்தன. எனினும் முன்னர் இருந்த புண்ணுக்கு தீர்வு கிடைக்கவில்லை. தமிழ் மக்களின் அரசியல் சிந்தனையில் இருக்கும் காயம் அப்படியே இருக்கின்றது.

  உண்மையில் அபிவிருத்தியை செய்யும் அதேவேளையில் அரசியல் தீர்வை வழங்கியிருக்க வேண்டும். எனினும் அது நடக்கவில்லை.

  இது மிகவும் பாரதூரமான தவறுதல் என்றே நான் காண்கின்றேன். எவ்வாறாயினும் மைத்திரிபால சிறிசேன வடக்கிற்கு விசேடமாக வடக்கு மக்களுக்கு பாரிய சேவைகளை செய்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  https://www.tamilwin.com/politics/01/238050?ref=home-imp-parsely


 3. 2 minutes ago, Dash said:

  முதலாவது எந்த ஒரு நாடும் தனியாக போகப் போவதில்லை, அதே போல் பிரித்தானியச் 650 மில்லியன் பேர் உள்ள சந்தையை இழந்து விட்டது ஆனால் ஜரோப்பிய நாடுகள் இழக்க போவது வெறும் 60 மில்லியன் பேர் கொண்ட சந்தையை மட்டும் தான்.

  மொத்தத்தில் எந்த நன்மையும் இல்லை,தீமை மட்டுமே பிரித்தானியாவுக்கு.

   

  பொறுத்திருந்து பார்ப்பம் .


 4. 5 hours ago, கிருபன் said:

  தமிழ்ச் சமூகத்தினரிடையே இந்தப் புற்றுநோய் பெருமளவில் பரவிக்காணப்படுகின்றது. இன்று எம்மவர்களிடையே இதனைப் பற்றிய விழிப்புணர்வுகளும் இது தொடர்பான கருத்தரங்குகளும் இன்றியமையாத தேவையாக உள்ளன.

  முக்கியமான ஒன்று பூனைக்கு மணி கட்டுவது போல் காலம் பிந்தி யோசிக்கினம்  நெடுக்கரின் ராடான் வாய்வு சம்பந்தப்பட்ட ஆக்கத்தை யாழில் தேடவேண்டி உள்ளது .


 5. 3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

  இதனால் ஏற்படும் நன்மையென்ன அம்மக்களுக்கு ?

   

  நாங்க uk ஐரோப்பாவில்  எவ்வளவுகாலம் வாழ்ந்தாலும் வெள்ளையர்  ஆகி விடப்போவதில்லை ஆனால் நாங்கள் ஐரோப்பியரை கணித்த விதம் பிழையானதா சரியானதா என்பது இந்த உடைவுக்கு பின்அடுத்த  தனித்து போகும் நாடு எதுவென்பதில் உள்ளது.

  இதுவரை இந்த பிரிவால் இங்கிலாந்து பெறும்  தீமைகளை பற்றியே கதைத்தவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கிடைக்கப்போகும் பாதிப்புகளை பற்றி யாருமே சிந்திக்கவில்லை வருடா வருடம் இலட்ஷக்கணக்கான குடியேறிகள் வரும் இடமான லண்டன் நகரத்தையும் அதன் பாரிய சந்தையையும் இலகுவாக மறந்து விட்டார்கள் அதுவே மறு வளமாக பார்த்தால் நன்மைதானே .

  • Thanks 1

 6. 1 hour ago, ரதி said:

  முடியல்ல!...இனி மேல் யார் ,யார் எல்லாம் எங்களுக்கு பாதை காட்ட வருவீனமோ தெரியாது

  ஏனிந்த வெறுப்பு ?

  இந்த இளவயதில் பொறுப்பாளராக இருந்து தன்னால் முடிந்த தாயக  பயணத்தில் பங்காற்றியவர் மேல் .....................எனிவே தங்கை திக்சிவாகுக்கு கண்ணீர் அஞ்சலிகள் .

   

  • Like 1

 7. 11 hours ago, ampanai said:

  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
  கால அவகாசம் எங்களுக்கு எவரும் கொடுத்தது கிடையாது ஊடகங்களுக்கும் மூன்று நான்கு வருடங்களாக விளங்கப்படுத்தியும் அதனை விளங்கமாட்டோம் என்று தலைகீழாக நிற்கின்றார்கள்.

  விழுந்து விழுந்து சிரிக்க வேண்டி உள்ளது காலமை  ஒரு அறிக்கை பின்னேரம் ஒரு அறிக்கை எண்டால் எவனுக்கு விளங்கும் ?


 8. 7 hours ago, நிழலி said:

  பிடித்துக் கொடுத்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் என் ஒன்றுவிட்ட தம்பி என் (அம்மாவின் தங்கையின் மகன் ) மற்றவர் அவர் வேலை செய்யும் மொபைல் போன் திருத்தும் கடையின் உரிமையாளர்.

  இப்ப ஏண்டா பிடிச்சுக் கொடுத்தனீ, கோர்ட் கீட் எல்லாம் அலைய வேண்டி இருக்கும் என்று நாங்கள் எல்லாரும் திட்டிக் கொண்டு இருக்கின்றோம்.

  உங்களிடத்தில் நான் இருந்தால் கதை வேறு தம்பி மாலை போடாத குறையாக மிடுக்குடன் இருந்திருப்பார்  எனினும் உங்கள் தம்பிக்கும் அவரின் நண்பருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 


 9. முதலில் இந்த யுடியூப் போன்றவற்றில் தமிழ் ஆக்கம்கள் வந்த போது பெருமையாக இருந்தது பின்பு அதுவே கட்டுக்கதைகளை வரலாற்றையும் குழப்பும் வண்ணம் அதிக பார்வையாளர்கள் வரவேண்டும் என்பதுக்காக  தமிழில் பொய்யும் புரட்டும் போட  இப்போதெல்லாம் டிஸ்லைக் கூட போடுவதில்லை நேரே ரிப்போர்ட் தான் நிர்வாகத்துக்கு . 


 10. Is Beijing suppressing the true scale of infections? Nurse treating coronavirus sufferers in China claims 90,000 people have already been infected


 11. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட தேசிய புலனாய்வு சட்டத்தை (National Intelligence Act) உருவாக்கும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டிருக்கிறது.

  அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதன்மூலம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தை வரைவதற்கான ஆணையை அரசாங்கம், சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அனுப்ப முடியும்.

  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கியமானதும் முதன்மையானதுமான இலக்கு. நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது தான். புலனாய்வுக் கட்டமைப்பை பலப்படுத்துவதையே அந்த இலக்கை அடைவதற்கான பிரதான மூலோபாயமாக அரசாங்கம் கையாளுகிறது.

  போர்த்தளபாட மற்றும் ஆளணிப் பலத்தை கொண்டு இலங்கையின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்திய காலம் முடிந்து விட்டது என்றே கூறலாம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெரும் எண்ணிக்கையான ஆளணியும் அதிகளவு போர்த் தளபாடங்ளும் அரச படைகளுக்குத் தேவைப்பட்டன.

  ஆனால் தற்போது விடுதலைப் புலிகளின் நேரடியான அச்சுறுத்தல்கள் இல்லை. பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வெளிப்படையாக இயங்கக்கூடிய சக்திகள் எதுவும் நாட்டில் இல்லை. சில மறைமுக அச்சுறுத்தல்களை கையாளும் சிக்கல்கள் மட்டுமே அரச படைகளுக்கு உள்ளன.

  இவ்வாறான மறைமுக அச்சுறுத்தல்களை கையாள்வதற்கு அதிகளவு படைகளோ போர்த் தளபாடங்களோ தேவையில்லை. மாறாக புலனாய்வுத் தகவல் சேகரிப்புகளின் மூலமும் நவீன புலனாய்வு தொழிநுட்பங்களின் மூலமும் இவ்வாறான அச்சுறுத்தல்களை இல்லாமல் செய்து விட முடியும்.

  போர்க்காலத்திலேயே இலங்கையில் புலனாய்வுக் கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதில், புலனாய்வுக் கட்டமைப்புகளுக்கு கணிசமான பங்கு இருந்தது.

  அதுவும், போர் முடிவுக்கு வந்த பின்னர் எதிர்பார்க்கப்பட்ட சிறியளவிலான எதிர்ப்பு நடவடிக்கைகள் தாக்குதல்கள் கூட நடக்கமால் பார்த்துக் கொண்டதில் புலனாய்வுப் பிரிவுகளின் பங்கு முக்கியமானது.

  தேசிய புலனாய்வுப் பணியகம், அரச புலனாய்வுப் பிரிவு, கடற்படை, விமானப்படை, விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகள் என பல்வேறு புலனாய்வு அலகுகள் இலங்கையில் செயற்படுகின்றன.

  எனினும், 21/4 குண்டுத் தாக்குதல்களை இந்த புலனாய்வு அமைப்புகளால் தடுக்க முடியவில்லை. அதிலும் இந்தியாவிடம் இருந்து கிடைத்த புலனாய்வுத் தகவல்களைப் பயன்படுத்தியாவது தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

  இந்தியாவிலிருந்து அரச புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் ஏனைய புலனாய்வுப் பிரிவுகளுக்குப் பகிரப்படவும் இல்லை.

  21/4 குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்றத் தெரிவுக்குழு புலனாய்வு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்புச் சபை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதற்குப் பொறுப்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தமது அறிக்கையில் பரிந்துரைத்திருந்தது.

  தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புச் சபையை உருவாக்குவதற்கு முன்னதாக தேசிய புலனாய்வு சட்டத்தை கொண்டு வந்து புலனாய்வுப் பிரிவுகளை ஒழுங்கமைத்து ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

  தேசிய புலனாய்வு சட்டத்தின் மூலம் எல்லா புலனாய்வு அமைப்புக்களும் ஒழுங்கமைக்கப்பட்டு, மீளமைக்கப்படும். எல்லா புலனாய்வு அமைப்புகளினது தகவல்களும், ஒரே இடத்தில் மையப்படுத்தப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்படும். அதற்கான ஒரு அலகு அல்லது கட்டமைப்பு உருவாக்கப்படும்.

  புலனாய்வுத் தகவல்கள் பகிரப்பட்டு, மேலதிக தகவல்களைத் திரட்டவும் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இது போன்ற ஒருங்கிணைப்புக் கட்டமைப்புகள் இருக்கின்றன. சில விதிவிலக்கான புலனாய்வு செயற்பாடுகள் இந்த நாடுகளில் முன்னெடுக்கப்படுவதும் உண்டு.

  குறிப்பாக இந்தியாவின் றோ மற்றும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ போன்றனவற்றின் இரகசிய புலனாய்வு செயற்பாடுகள் இவ்வாறான மையப்படுத்தப்பட்ட புலனாய்வு கட்டமைப்புக்குள் வருவதில்லை. ஆனால் பொதுவான தேசிய பாதுகாப்பு தகவல்களை இந்த அமைப்புகள் பகிர்ந்து கொள்ளத் தவறுவதில்லை.

  தேசிய புலனாய்வு சட்டத்தை வரைவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதும், அதன் உள்ளடக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது தெரிய வந்த பின்னர் தான் இந்தப் புலனாய்வு ஒருங்கிணைப்புக் கட்டமைப்பு எந்தளவிற்கு வலுவானதாக இருக்கும் என்று தெரியவரும்.

  எனினும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான இலக்கு தேசிய பாதுகாப்பு தான். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பிரதான மூலோபாயமாக இருப்பது புலனாய்வுப் பிரிவுகளை வலுப்படுத்துவதாகவே உள்ளது.

  புலனாய்வுத் தகவல்களை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்வதன் மூலம் எத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் சமாளித்து விட முடியும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு.

  புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனேயே புலனாய்வுப் பிரிவுகளை மறுசீரமைக்கும் வேலைகளைத் தான் தொடங்கியது. குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நம்பிக்கைக்கு பாத்திரமான அதிகாரிகள் பொறுப்பாக நியமிக்கப்பட்டு கடந்த அரசாங்கத்திலிருந்து ஓட்டைகளை அடைக்கும் பயணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  தனியே புலனாய்வுப் பிரிவுகளை வலுப்படுத்திக் கொள்வதுடன் நிற்காமல் புலனாய்வுத் தகவல்களை ஏனைய நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான வழிகளையும் அரசாங்கம் தேடிக் கொண்டிருக்கிறது.

  குறிப்பாக இந்தியாவுடன் இராணுவப் புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு இணக்கப்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்தியப் பயணத்தின் போது புலனாய்வுத் தகவல்ளைப் பகிர்ந்து கொள்வது குறித்து முக்கியமாக பேசப்பட்டிருந்தது.

  புலனாய்வுப் பிரிவை வலுப்படுத்தவும் மறுசீரமைக்கவும் தொழிநுட்ப கருவிகளை கொள்வனவு செய்வதற்கும் 50 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணங்கியிருந்தார்.

  இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போதும் புலனாய்வுப் பிரிவை பலப்படுத்துவதற்கு 50 மில்லியன் டொலர் நிதியை உதவியாக வழங்குவதாக உறுதிப்படுத்தினார்.

  இலங்கையுடன் புலனாய்வுத் தகவல்கள் பகிந்து கொள்வதற்கு இந்தியா விரும்புகின்ற அதேவேளை இலங்கையிடமிருந்து அவ்வாறான தகவல் பகிர்வை இந்தியா எதிர்பார்க்கிறது.

  ஏனென்றால் 21/4 குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான குழுவினர் இந்தியாவிலும் வலுவான தொடர்புகளை வைத்திருந்தனர். அவர்களை கண்டறிந்து வேரறுக்கும் முயற்சிகளில் என்.ஐ.ஏ எனப்படும், இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகம் ஈடுபட்டுள்ளது.

  அதற்கு தேவையான தகவல்கள் இலங்கையிடமிருந்து பெறப்படுகின்றன. இந்த ஒத்துழைப்பையும் தாண்டி இந்தியப் பெருங்கடல் குறித்த பாதுகாப்பு புலனாய்வுத் தகவல் பகிர்வையே இந்தியா எதிர்பார்க்கிறது.

  இந்தியா ஏற்கனவே சீஷெல்ஷ், மொரீசியஸ், மாலைதீவு போன்ற நாடுகளுடன் இந்தியப் பெருங்கடல் தொடர்பான புலனாய்வுப் பகிர்வுத் திட்டத்தை செயற்படுத்த ஆரம்பித்திருக்கிறது. அதனை மேலும் வலுப்படுத்த இலங்கையுடன் கைகோர்க்க விரும்புகிறது.

  இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தளவுக்கு இந்தியாவிற்கு நேர்மையாக செயற்படும் என்ற கேள்வி இருக்கிறது. ஏனென்றால் அவ்வாறான தகவல்களை இந்தியாவிற்கு வழங்கப்படுவதை இலங்கையின் மற்றொரு நெருங்கிய பங்காளியான சீனா விரும்பாது.

  அதுவும் அம்பாந்தோட்டையில் தனக்கான ஒரு துறைமுகத்தைக் கொண்டிருக்கும் சீனாவிற்கும் இது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். அதேவேளை மேற்குலக நாடுகளுடனும் புலனாய்வுத் தகவல் பகிர்வுக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை விரும்புகிறது.

  பிரித்தானிய தூதுவர் சாரா ஹோட்டன் அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்துப் பேசியிருந்தார்.

  இதன்போது தீவிரவாத முறியடிப்புக்குத் தேவையான இராணுவப் புலனாய்வுத் தகவல்களையும் தொழிநுட்ப மற்றும் நிபுணத்துவ உதவிகளையும் இலங்கையுடன் பிரித்தானியா பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரியிருந்தார். அதற்கு பிரித்தானிய தூதுவர் சரியான பதிலைக் கொடுக்கவில்லை.

  பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சு விழிப்புடன் இருக்கிறது. அவர்களால் இலங்கயைின் இறைமைக்கு ஆபத்து வரும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் கருத்து.

  எனவே பிரித்தானியாவுடன் இராணுவப் புலனாய்வுத் தகவல் பகிர்வு கட்டமைப்பை ஏற்படுத்த இலங்கை விரும்புகிறது. ஆனால் பிரித்தானியா அதனை இன்னமும் உயர்மட்டக் கலந்துரையாடலுக்குக் கொண்டு செல்லவில்லை.

  அதேவேளை பிரித்தானியத் தூதுவர் சாரா ஹோட்டன், பிராந்திய புலனாய்வுப் பகிர்வு குறிப்பாக இந்தியப் பெருங்கடல் விவகாரங்கள் குறித்த புலனாய்வுப் பகிர்வு அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

  இந்தியப் பெருங்கடல் விவகாரங்கள் குறித்த புலனாய்வுப் பகிர்வை இந்தியா எவ்வாறு எதிர்பார்க்கிறதோ அதேபோன்று தான் பிரித்தானியாவும் எதிர்பார்க்கிறது.

  இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த புலனாய்வுப் பகிர்வுக்கு இலங்கை தயாராக இருந்தால் மாத்திரமே இராணுவப் புலனாய்வுப் பகிர்வுக்கு பிரித்தானியா போன்ற நாடுகளும் தயாராக இருக்கும் என்று தெரிகிறது. இலங்கையின் புலனாய்வுக் கட்டமைப்பை வலுப்படுத்த பல்வேறு நாடுகளும் விரும்புகின்றன.

  இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதற்காக மாத்திரமன்றி இலங்கையிடமிருந்து தமது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குத் தேவையான தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்கும் தான். கிட்டத்தட்ட இருதரப்பு வணிகம் போலத்தான் இது. அந்த இருதரப்பு வணிகத்தை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறதா?

  https://www.tamilwin.com/articles/01/237081?ref=imp-news


 12.  

  இக்கேள்விக்குத் தாமதமாகப் பதில் எழுதுவது வருத்தமாக இருந்தாலும், இன்றாவது எழுத வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்கிறேன்! இன்றுதான் இக்கேள்வியைக் கண்டேன்!

  இன்னும் சிறப்பாக, 'மற்ற இந்திய மொழிகளையெல்லாம் விட்டுவிட்டு, சீனர்கள் ஏன் தமிழ் கற்கிறார்கள்?' என்று கேட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்!

  main-qimg-1576bc2e4ba318723cc9b90df72d013c

  ஏனென்றால், ஏனைய இந்திய மொழிகளில் இல்லாத, தமிழ் மட்டுமே கொண்டிருக்கும் ஒரு உயிர்ப்பண்பே, சீனர்கள் தமிழ் மொழியைக் கற்க விரும்பும் சிறப்புக் காரணம்!

  தமிழ்மொழி மட்டுமே தூய உயர்தனிச் செம்மொழி! வேதமொழி, சமஸ்கிருதம் உள்ளிட்ட, ஏனைய இந்திய மொழிகள்அனைத்தும் கலப்பு மொழிகள்!

  எழுத்துமுறை(Orthography), ஒலியமைப்பு(Phonetics) போன்றவற்றில் அவை தமிழ்மொழியைப் போல் கொண்டிருந்தாலும், தத்தம் மொழிகளின் சொல்வளம் பெருக்க, உலகவழக்கில் இல்லாத சமஸ்கிருதமொழிச் சொற்களையே பெருமளவு கடன் வாங்கியவை!

  உருது, இந்துஸ்தானி, சமஸ்கிருதம் என்ற கூட்டுக்கலவை மொழியான இந்தி, வட இந்திய பிராகிருதமொழிகள் பலவற்றையும் அழித்துவிட்டு, ஏனைய இந்திய மொழிகளையும் அழிக்கத் திட்டமிட்டு, இந்திய ஒற்றுமையையும், அமைதியையும் அழித்து வருகிறது!

  சமஸ்கிருதச் சொற்கள் என்பவை, இறந்துபோன வேதமொழிச் சொற்களையும் உள்ளடக்கியது என்பதை நினைவில் கொள்க!

  1. வழக்கிறந்துபோன செம்மொழியான சமஸ்கிருதச் சொற்களைக் கலப்பதாலேயே இந்திய மொழிகள் வளம் நாடுகின்றன. மேன்மேலும், சமஸ்கிருதத்தைக் கலப்பதாலேயே அவை வளர்ச்சியும் பெறுவதாக நினைக்கின்றன.
  2. வழக்கிறந்துபோன செம்மொழிகளான இலத்தீன், கிரேக்க மொழிகளிலிருந்து சொற்களைக் கலந்து, மொழியை வளப்படுத்துதல் என்ற உத்தியையே மேலை ஆரிய ஐரோப்பிய மொழிகளும் கடைப்பிடிக்கின்றன.
  3. இதேபோல், வழக்கிறந்துபோன செம்மொழிகளான Persian, Arabic மொழிச் சொற்களைக் கலப்பதாலேயே இஸ்லாமிய மொழிகள் வளம் நாடுகின்றன.

  உலகின் மொழிகளின் வளர்ச்சி என்பது மேலே குறிப்பிட்ட மூன்று கலப்புமொழி வகைகளில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும்!

  எல்லா மொழிகளும் உயர்மொழியாக ஏற்றுக்கொள்ளும் இறந்துபோன பொதுமொழியே, அம்மொழிகளின் ஒற்றுமைக்குக் காலனாக மாறிவிடுகிறது!

  இவ்வுலகில், இன்றும் உயிருடன் செழிப்போடு உயிர்வாழும் இரண்டே செம்மொழிகள் தமிழ்மொழியும், சீனமொழியும் மட்டுமே!

  தமிழும், சீனமும், பன்னாட்டுச் செம்மொழிகள்!

  இவ்விரண்டு மொழிகளும் பிறமொழிச் சொற்களைக் கடன்பெறாமல், தாய்மொழிச் சொற்களை வைத்துக்கொண்டே புதிய புதிய கருத்துக்களைத் தெரிவித்து வந்தன.

  தொடர்வண்டி, மின்னாற்றல், வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, இன்றியமையாதது போன்ற சொற்களைத் தமிழ் உருவாக்கியதுபோலவே, சீனமொழியும் உருவாக்கிக்கொண்டது!

  தொடக்கத்தில் சீனமொழி அறிவியல் வளர்ச்சியில் பிற்பட்டு இருந்தாலும், இத்தாய்மொழி பண்பு காரணமாக, ஏனைய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, அறிவியல் தொழில்நுட்ப அறிவில், இன்று உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக சீனா விளங்குகிறது!

  உலகின் தலைசிறந்த முதல் ஐம்பது பல்கலைக்கழகங்களில் சீனப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன! ஓர் இந்தியப் பல்கலைக்கழகம்கூட முதல் 200-களின் இல்லை!

  கல்விவாய்ப்புகள் சீனாவில் பெரும்பான்மை மக்களிடம் சென்றடைந்துவிட்டது!

  சீனமொழியைப் போல, தமிழ், உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்றாக நின்று, தனித்தமிழ் வளர்த்ததால், வழக்கிறந்துபோன சமஸ்கிருதத்தைச் சாராமல், சீனமொழியைப்போல், உயிர்ப்புடன் விளங்கி வருகின்றது!

  தமிழ் உயர்தனிச் செம்மொழிகளில், Orthography-எழுத்துமுறை மற்றும் Phonetics-ஒலியியல் ஆகியவற்றில் தலைசிறந்த மொழி!

  தமிழ், அதேவேளை, உலகத்தாய்மொழிகளில், ஒரே உயர்தனிச் செம்மொழியாக இயங்கி வருகின்றது!

  சீன அறிஞர்கள், பண்டைய காலத்தில், தமிழே உலகப்பொதுமொழியாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். தமிழ் மொழியை ஆராய்வதன் மூலம், உலகப் பொதுமொழியாக வளர்வதன் கூறுகளை நுணுக்கமாக ஆய்வுசெய்து, சீனமொழியை வளப்படுத்தவே சீனர்கள் தமிழ் மொழியைக் கற்கிறார்கள்!

  main-qimg-7cfade71905f9663e71c478074988c07

  தமிழ்மொழியில், சீனர்களைக் கவர்ந்த மொழி அம்சம், வேர்ச்சொற்கள் அடிப்படையாக, சொற்குடும்பங்கள், சொற்குலங்கள் தமிழில் கொத்துக்கொத்தாய் இருக்கும் பண்பே!

  எடுத்துக்காட்டாக, பாறைத்துண்டைக் குறிக்கும் கல் என்னும் தமிழ் வேர்ச்சொல், கல்லுவது(தோண்டுதல்), கலித்தல், கணீரென ஒலித்தல், உணர்ச்சி மிகுதல், மிகுதல், கலி(சனி), கற்றல், கற்பித்தல், கற்பனை, கல்லூரி, கல்வி, கலை உள்ளிட்ட எண்ணற்ற சொற்களைக் கொண்டு, சொற்குடும்பமாக இயங்குகின்றது.

  வேர்ச்சொற்கள் சொல் திரிந்தும், பொருள் திரிந்தும் மாறுபடும்போது, இன வேர்ச்சொற்குடும்பங்கள் உருவாகின்றன. பல சொற்குடும்பங்கள் சேர்ந்து சொற்குலங்கள் உருவாகின்றன. இத்தகைய பண்புகளை ஆய்ந்து, சீன மொழியை மேம்படுத்துவது சீனர்களின் ஆய்வுத் திட்டங்களில் ஒன்று!

  சீன மொழியைப்போல, உலகில் உயிர்ப்புடன் வாழும் செம்மொழி தமிழ் என்பதும் அவர்களின் தமிழ்மொழி ஆர்வத்துக்குக் காரணம் என்றாலும், மேற்குறித்த ஆய்வுத் திட்டங்கள் சீனர்களிடம் உள்ளன.

  நாம் நம் தமிழுக்கும், நம் மக்களுக்கும் எவ்வாறு தொண்டுசெய்யப் போகிறோம்?

  ——————————————————————

  திருமிகு. பாலசுப்பிரமணியன் அவர்களின் கேள்வி : "தமிழின் சிறப்புகளை தங்கள் மூலம் அறிவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். என் ஒரே சந்தேகம்KA,Ga மற்றும்PA BA விற்கு தமிழில் ஏன் ஒரே ஒரு எழுத்து மட்டுமே இருக்கிறது கா மற்றும் பா."

  பலரும் கேட்க நினைப்பது; அறியாததால், தமிழ் மொழியின் குறைபாடு என ஏனைய இந்தியமொழி பேசுபவரால் குற்றம் சொல்லப்படும்போது, விடையில்லாமல் பலரும் விழிக்கக் காணலாம்.

  விடை: ஆங்கிலத்தில் KA, Ga என்னும் இரண்டு ககரங்கள்(சமஸ்கிருதத்தில் நான்கு ககரங்கள்- க-வர்க்கம் எனப்படும்), PA, BA என்னும் இரண்டு பகரங்கள் (சமஸ்கிருதத்தில் நான்கு பகரங்கள்- ப-வர்க்கம் எனப்படும்) இருப்பதுபோல், தமிழிலும் மூன்றிற்கும் மேற்பட்ட ககர, பகர ஒலிகள் உண்டு! ஆனால், மூன்றையும், ஓர் ஒலியின் திரிபாகக் கொண்டு, ஒரே ஒலிக் குழுக்குறி (Phonems) தமிழில் அமைத்துள்ளனர் பண்டைய தமிழர்கள்.

  தமிழ்மொழியின் எழுத்தையும், ஒலி அமைப்பையும் பின்பற்றிய வடமொழி இலக்கணத்தில், பாணினி இதை விரித்து, 'க, ச, ட, த, ப' என்னும் ஐந்திற்கும், ஒவ்வொன்றிற்கும் நான்கு ஒலி எழுத்துக்களாகக் குறித்து, க-வர்க்கம், ச-வர்க்கம், ட-வர்க்கம், த-வர்க்கம், ப-வர்க்கம் என்பவை அவற்றின் இன மெல்லின எழுத்துக்களுடன் சேர்த்து, 25 ஒலி எழுத்துக்களை உருவாக்கினார்கள்!

  தங்கம் - என்ற சொல்லை THAnGam என்றுதான் உச்சரிக்க முடியுமே தவிர, THAnKAm - என்று உச்சரிக்கவே இயலாது. ஏனென்றால், இச்சொல்லின் பிறப்பியல் அப்படித்தான் அமைந்துள்ளது. இவ்விலக்கண விதிகளைத் தொல்காப்பியம் : பிறப்பியல் சூத்திரங்களை அறிந்து, படித்து, முறையாக,ஓர் ஆசிரியரிடம் கற்றுக்கொள்வதன் மூலம், தமிழ் ஒலி உச்சரிப்பில் தேர்ச்சிபெறலாம்.

  [தொல்காப்பியம் - பிறப்பியல்: மொழிமரபு இங்கு தரப்பட்டுள்ளது. இன்னும், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பவையும் கற்றுக் கொண்டால், மொழியை முறைப்படி பலுக்க(உச்சரிக்க) முடியும்.

  உந்தி முதலா முந்து வளி தோன்றி - தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ - பல்லும் இதழும் நாவும் மூக்கும் - அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான் - உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி - எல்லா எழுத்தும் சொல்லும் காலை - பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல - திறப்படத் தெரியும் காட்சியான. 1

  ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7 - சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8 - டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9 - அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின. 10

  அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில் - நா நுனி பரந்து மெய் உற ஒற்ற - தாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 11 - அணரி நுனி நா அண்ணம் ஒற்ற - றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12

  நுனி நா அணரி அண்ணம் வருட - ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13 - நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற - ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும் - லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14

  இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம். 15 - பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16 - அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை - கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 17 - மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் - சொல்லிய பள்ளி நிலையின ஆயினும் - மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18

  சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத் - தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் - தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி - ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும். 19

  எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து - சொல்லிய பள்ளி எழுதரு வளியின் - பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து - அகத்து எழு வளி இசை அரில் தப நாடி - அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 20 - அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும் - மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. 21 ]

  பள்ளியில், தமிழ்மொழி பயிற்றுவிக்கும் போது, இவையெல்லாம் , முறையாகக் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். தமிழ் பற்றில்லாதவர் ஆட்சியாளராய் இருப்பது, ஈராயிரம் ஆண்டுகளுக்கும்மேல் இன்னும் தொடர்கின்றது.

  சங்க காலத்தில், சராசரித் தமிழனுக்கு, அவரவர் வீட்டில், தந்தைமார்களால் கற்றுக்கொடுக்கப்பட்ட முறைப்படியான தமிழ் ஒலிப்புமுறைக் கல்வி, இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு, விடுதலை அடைந்த இந்திய நாட்டின் தமிழ் மாநிலத் தமிழ் மக்களுக்குப் பயிற்றுவிக்கப்படவில்லை. யாரிடம் சொல்லி அழ!

  எண்ணாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே, தமிழர்கள் Phonemes - தமிழ் ஒலிஎழுத்துக்களை உருவாக்கினார்கள். தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் அவை பதியப்பட்டு மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

  தமிழ் எழுத்து முறையைப் பின்பற்றியே, வேத, சம்ஸ்கிருத எழுத்துமுறைகள் Phonemes என்னும் ஒலியியல் முறைப்படி, ஆரியர்களால் அமைக்கப்பட்டன.

  ஐரோப்பியர்கள் சமஸ்கிருதம் கற்றது 17–18ம் நூற்றாண்டுகளில். 19ம் நூற்றாண்டில், Phonetics - ஒலியியல் என்னும் புதிய துறையை, சமஸ்கிருத ஒலியியல் முறையைப் பின்பற்றி,

  'க', 'ங' எழுத்துக்கள் தொண்டை ஒலிகள்(Guttural, கண்ட்யம்)

  'ச', 'ஞ' எழுத்துக்கள் அண்ண ஒலிகள் (Palatal, மூர்த்தன்யம்)

  'ட','ண' எழுத்துக்கள் நாவொலிகள் (Lingural, தாலவ்யம்)

  என்றும் வழங்கினர். இலத்தீன், கிரேக்கம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி இலக்கணங்களில் இம்முறையே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  ஒலிப்பு முறைகளை உற்று ஆராய்ந்த ஒலியியல் ஆய்வாளர்கள், பாணினி வகுத்த ஒலியியல் முறை தவறானது என்பதைக் கண்டார்கள்.

  உண்மையில், இம் மூன்று வகை ஒலிகளும், தொல்காப்பியத்தில் வகுத்ததுபோல, நாவின் முதல், இடை, கடை ஒலிகள் என்பதைக் கண்டுபிடித்தார்கள்!

  அதன் பிறகே,

  ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7

  சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8

  டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9

  என்னும் தொல்காப்பிய ஒலியியல் Phonetics சூத்திரம் எவ்வளவு நுட்பமான அறிவியல் பூர்வமானது என்பதை ஐரோப்பியர்கள் உணர்ந்தனர்.

  பாணினியின் சம்ஸ்கிருத ஒலி இலக்கணம் தொல்காப்பியத்துக்குப் பிற்பட்டது எனபதையும், தொல்காப்பியத்தை சரிவர உணராத பாணினி, ஒலி இலக்கணத்தைத் தவறாகக் குறித்துவிட்டார் என்பதையும் கண்டார்கள் ஐரோப்பியர்கள்.

  சீனர்கள் ஏன் தமிழ்மொழியைக் கற்கிறார்கள் என்பது இப்போது இன்னும் தெளிவாக விளங்கும்!

  இக்கேள்வியைக் கேட்ட திருமிகு. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி!

   
  • Like 1

 13. 1 hour ago, Rajesh said:

  32 நாடு சேர்த்து அதர்மம்மா யுத்தம் செய்த நாதாரிகளுக்கு பெருமையும் கேட்குதோ?

  மானம், ரோஷம் இல்லாததுகள்.

   

  இப்ப மட்டும் என்னவாம் புலி மவுனித்து 10 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் புலி தடை இருந்து கொண்டு இருக்கிறதே அவ்வளவு பயம் ஆக்கும் .


 14. 2 hours ago, நிழலி said:

  டிவிடியில் கூட பார்க்க லாயக்கில்லாத படம். முருகதாசுக்கு ரஜனி மீது என்ன வன்மமோ தெரியாது. வச்சு செய்துட்டார்.

  இந்த தோல்வி தொடரனும்  கன்னட பக்கமா கிளம்பிடுவான் அந்த கிழட்டு பயல் .


 15. அதிக வசூல் தமிழ் திரை வரலாற்றில் முக்கியப்படம் வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும்  கவுஸ் புல்  

  இப்படி முதலில் சேதிகள்  வரும் முதலாவது கிழமை 2019 வெளி வந்த தமிழ் படங்களின் வசூலை முந்தியது என்பார்கள் உண்மையில் திரையரங்குகளில்  இவரின் படம் ஊத்தி கொண்டு நிக்கும் இரண்டாவது கிழமை காதும் காதும் வைத்த்து போல் ரஜனி வீட்டு வாசலில் தர்ணா பண்ணுவார்கள் மேலதிக நட்டத்தை கிழவனை பொறுக்க சொல்லி இது வழமை யான ஒன்று .

  இந்த கன்னட மெண்டலின்  ரசிககுன்சுகள் திருந்த இடமில்லை .


 16. 3 hours ago, நிழலி said:

  கொல்லப்பட்ட கனேடியர்களில் பலர் மாணவர்கள். விடுமுறைக் காலம் முடிந்த பின் கனடா நோக்கி பயணமாணவர்கள் என பிபிசி சொல்கின்றது. இந்த வழியினூடான ரொரண்டோவுக்கான பயணம் செலவு குறைந்தது என்பதால் தான் கனேடியர்கள் பலர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

  நன்றி தகவலுக்கு .


 17.  

  காற்றாலைகள் போய்  காத்தாடி மூலம் அதிக மின்னை பெறும்  வழிமுறைகள் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டன எங்கடையல்  குண்டு சட்டிக்குள் கழுதை  மேய்க்குதுகள் .


 18. 3 hours ago, Paanch said:

  வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

  மே  18 இயக்கம் அழியனும் என்று ஒற்றைக்காலில் நிண்டவங்கள் எல்லாம் இப்ப தலைவர் பெயரையும் தமிழையும் தூக்கி பிடிக்கினம் இங்கு இயக்கம் பெயரை சொல்லி காசு அடித்தவர்களும் இவர்களும் ஒன்றே 2018 ல் தீர்வு என்று சொல்லிய சம்பந்தனும் நாளை  தமிழன் உலகை ஆள்வான் என்று சொல்லிவிட்டு எப்போவோ வாழ்ந் த  மணிவாசகரை  கொண்டுவந்து தலையில் மிளகாய் அரைக்கிற இவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை .


 19. On 1/2/2020 at 9:56 AM, Paanch said:

  தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்  பரவும் வகை செய்தல் வேண்டும்.! பாடினான் பாரதி.!! பரப்பினான் பிரபாகரன்.!!!

  தாங்க  முடியலை .