• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  7,558
 • Joined

 • Last visited

 • Days Won

  9

Everything posted by பெருமாள்

 1. ர்மழைக்குப் பிறகான இளவெயில் மரக்கிளைகளினூடே மஞ்சளாய் பரவிக் கொண்டிருந்தது. வெயிலின் தயைமிகுந்த சிறுகதிர்கள் சன்னல்வழியே படுக்கையின்மீது ஒளிர்கின்றன. விரைவிலேயே இன்னொரு மழையைக் கிளப்பி கொண்டுவருகிற உக்கிரம் கூடுகிறது வெயிலுக்குள். மறுபடி மழை பிடித்துக் கொள்ளுமானால் மீண்டும் வெயிலின் முகம் பார்ப்பதெப்போ என்று பதறுகிறது மனம். போர்த்திக் கொண்டிருந்த கனத்தக் கம்பளியை உதறியெறிந்துவிட்டு ஓடிப்போய் வெயில் காயவேண்டும் என்று பரபரக்கிறது கால்கள். இன்னொருவர் துணையில்லாமல் எழுந்து உட்காரவும் ஏலாத ஒரு முதியவளுக்கு அது சாத்தியமல்லவே... சுருக்கம் பாய்ந்தத் தன் நடுங்கும் கைகளை மெதுவே ஒரு கொடி போலசைத்து படுக்கை மீதிருந்த வெயிலைத் தடவிக்கொடுக்கிறாள். ரஞ்சித்தும் இந்த வெயிலைப் போன்றவன்தான். யாவும் நமுத்து நைந்து ஈரத்தில் சொதசொதத்துக் கிடந்த சமூகத்திற்குள் சூடும் சுரணையும் பாய்ச்சுவதே அவனது திட்டமாயிருந்தது. அதன்பொருட்டே மூடிக்கிடந்த வீடுகளின் சன்னல்களுக்குள்ளும் தன் கிரணங்களை ஊடுருவவிட்டவன். முடங்களையும் ஜடங்களையும் கூட தன் கருணை பொங்கும் கதிர்க்கரங்ளால் தொட்டுத்தடவி சொஸ்தமாக்கத் துடித்தவன். இதோ இந்த கிழட்டுக்கரங்களின் ஆதூரமான ஸ்பரிசத்தில் குழைந்து நிற்கும் வெயிலைப் போலவே அவனும் தன்னருகில் இருந்த தருணங்களை நினைத்துக்கொள்கிறாள். ரஞ்சித்... என்று ஒருமுறை தனக்குள்ளேயே சொல்லிப் பார்க்கிறாள். பெண்களுடையதைப் போன்ற நீண்டு ஒயிலாகப் புரளும் கூந்தலை விலக்கிக் கொண்டு நான் எங்கும் போகவில்லை, இங்குதானிருக்கிறேன் என்கிறான் ரஞ்சித். இப்படியொரு வசீகரமான சிகையலங்காரம் வாய்க்க ரஞ்சித் எப்போதும் மெனக்கெட்டது கிடையாது1. வாரத்திற்கொரு முறை எண்ணெய் தேய்த்துக்கொள்வதே அபூர்வம்தான். அதுவும்கூட ராஜாராம் போன்றவர்களின் விடுதியறைக்குப் போகும்பாது பூசிக்கொண்டால் உண்டு. இல்லையானால் எண்ணெய் வாங்க ரஞ்சத்திடம் காசு ஏது? சீசா ஏது? டர்பன் கட்டிக் கொள்வதில்லை என்றாகிவிட்டப் பிறகு கிராப் வெட்டிக் கொள்ள வேண்டியதுதானே என்று யாரோ கேட்ட தற்கு, ஐரோப்பியனை காப்பியடிப்பதை விட எனது முன்னோர்களைப்போல மழித்துக் கொள்ளாதிருப்பதுதானே சரியானது என்று பதிலளித்ததை நினைத்துக் கொண்டாள். கோபப்படும்போது அழகாய்த் தெரியவேண்டும் என்று அலங்காரம் பண்ணக் கிளம்புகிறவனால் ஒருபோதும் கோபப்படவே முடியாது1 இந்தக்கோலத்தில் தான் அவன் கடைசிவரையிலும் இருந்தான். நூறுவகைகளில் அவனது புகைப்படங்கள் ªவிளியாகி யிருந்தபோதும் எடுப்பாகவும் பொருத்தமாகவும் முக விகாசங்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிற இந்தத் தோற்றம்தான் அவளது கண்ணுக்குள் நின்றிருக்கிறது. ஒரு முறை அவனே நேரடியாக ஈடுபட வேண்டிய ஆக்சன்* ஒன்றுக்காக வசீகரமான தன் கூந்தலை கிராப்பாக கத்தரித்துக் கொண்டான். கிராப்பும் அதற்கேற்ற முறுக்குமீசையும் வேட்டைக்கார ஐரோப்பியனைப் போன்ற தொப்பியும் நீண்ட அங்கியும் அணிந்துகொண்ட அந்த மாறுவேடத்தில் சென்று ஆக்ஷனை நிறைவேற்றிவிட்டு அவன் வீடு திரும்பிய அந்த இரவை மறக்கமுடியுமா? அவன் வந்துவிடக்கூடிய நேரம்தான், கண்ணயர்ந்துவிடாதே என்று லஜ்ஜாவதி பல்லியைப்போல் இவளை எச்சரித்துக் கொண்டேயிருந்தாள். முன்வாசல் பக்கம் அவளும் பின் வாசல் கதவண்டை இவளுமாக சுவற்றில் காதுபொருத்தி காத்திருந்தனர். அவன் வந்துவிடுவதாய் தூதுவர் மூலம் சொல்லியனுப்பியிருந்த நேரத்தை மீறி கடியாரம் நகர்ந்து கொண்டிருந்தது. சருகின் சிறுதுடிப்பும் சஞ்சலமூட்டியது லஜ்ஜாவதிக்கு. திடீர் திடீரென ஓடிவந்து, சிக்கிக் கொண்டி ருப்பானோ என்று பீதியோடு கேட்டுக் கொண்டேயிருந்தாள். நீ பதட்டமடைய ஒரு காரணமுமில்லை பெண்ணே. அமைதியாயிரு. அவன் எத்தனை ஆக்ஷன்களைக் கண்டவன்? என்று இவள் அவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாலும் நேரமாக ஆக இவளுக்கும் பயம் துளிர்த்தது. மாறுவேடமிட்டுச் சென்று நிறைவேற்றுகிற ஒவ்வொரு ஆக்சனுக்குப் பிறகும் போலிசின் யூகங்களுக்கு பிடிபடாத இடங்களைத் தேர்வு செய்து தலைமறைவாக தங்கிவிடுவது ரஞ்சித்தும் அவனது தோழர்களும் கையாளும் தந்திரம். ஒரேயிடத்தில் அனைவரும் தங்குவது தமக்குத்தாமே சூனியம் வைத்துக்கொள்வது போலாகும். எனவே தங்குவது ஆளுக்கொரு இடமாக இருக்கும். மொட்டைத்தலை அல்லது கோணல் வகிடெடுத்த கிராப்புடன், குஞ்சம் கட்டிய குடுமியுடன் என்று முடியை வைத்தே அவர்கள் நூதனமான பல அவதாரங்களை எடுத்து ஆக்சனில் ஈடுபட்டார்கள். ஆக்சனின்போது தென்பட்ட உருவத்தில் போலிஸ் தேடிக்கொண்டிருக்க இவர்கள் மீண்டும் தங்களது சுயஉருவில் தாடிமீசை வளர்த்துக்கொண்டு வெளியே சுதந்திரமாக நடமாடத் தொடங்குவார்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் சாகசம் போலத் தோன்றலாம். ஆனால் நம்மைப் பொருத்தவரை இந்தநேரத்தில் நம்மால் இப்படித் தான் செயல்பட முடியும் என்பதைத் தவிர வேறொன்று மில்லை தோழர்களே. எனவே ஆக்ஷன்களை வெற்றிகரமாய் நிகழ்த்துவதைப்போலவே மறைவிடத்துக்கு திரும்புவதும் அவசியம் என்று தன் சகாக்களுக்கு சொன்ன எச்சரிக்கை இவனுக்கும் பொருந்தும்தானே? முதல்கோழி கூவிவிட்டது. இன்னும் அவனைக் காணலியே என்று விசும்பத் தொடங்கிய லஜ்ஜாவதியை இவள் ஆறுதல் படுத்தினாள். அது தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும் உபாயமாகவும் பட்டது இவளுக்கு. விவசாயிகள் வயற்காடு களுக்கு கிளம்பிப் போகத் தொடங்கியிருந்தனர். தெருவில் மாடுகளின் கழுத்துமணி எழுப்பும் ஓசை அமைதியின் ஒரு பகுதியாக கரைந்து கொண்டிருந்தது. தெருமுக்கில் யாரோ டயர் கொளுத்தி குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். டயர் கருகும் நாற்றம் காற்றில் பரவி சுவாசத்தை திணறடிப்பதாயிருந்தது. குப்பைக்கூளங்களை அரித்துப்போட்டு காய வேண்டியது தானே... என்று முனகிக்கொண்டாள் இவள். தன் கிராமத்தைப் பற்றி பேசும் தருணங்களில் மாலைப் பொழுதுகளில் நெருப்புமூட்டி குளிர்காய்ந்த அனுபவங்களை மிகுந்த மனக்கிளர்ச்சியோடு நினைவுகூர்வான் ரஞ்சித். அதை விவரிக்கிறபோது அனலுக்கு முன்பாக காட்டுகிறதான நினைப்பில் கைகளை முன்னோக்கி நீட்டி விரித்துக் கொள்வான். குளிர்காய்வது தன் கிராமத்துக்கு பனிக்காலம் கொண்டுவந்து சேர்க்கிற சுகமென்பான். பிற்பகலில் லேசான சில்லிப்பாய் தொடங்கி மாலைவேளைகளில் கிராமத்தின் மீது கவிந்து கொள்ளும் பனிக்குள் நிழலைப்போல் நடமாடிய அந்தக்காலம் திரும்ப வராது என்பான். பகற்பொழுதில் பனியிறங்கும் முன்பாக உலர்ந்த செடிசெத்தைகளை சேகரித்து வைக்க இவனொத்த பொடியன்களுக்குள் பெரும் போட்டாப்போட்டியே நடக்குமாம். பெரியவர்களின் பேச்சில் சுவாரசியம் இழக்கிற சிறுவர்கள் சில கங்குகளை பகிர்ந்தெடுத்துப் போய் தனியே மூட்டி வட்டம் கட்டி உட்கார்ந்து பின்னிரவு வரை கதை பேசிக் கிடப்பார்களாம். ஆனால் பெரியாட்களின் வட்டத்தில் இருப்பதில்தான் ரஞ்சித்துக்கு ஈடுபாடாம். அங்கே குழுமிய விவசாயிகளின் உரையாடல்களில் பொதிந்து கிடந்த துயரமும் அதிலிருந்து விடுபட வேண்டுமென்ற அவர்களது தவிப்புமே தன்னை ஒரு அரசியல் ஊழியனாய் மாற்றியது என்பான். இன்றுபட்ட துயரமெல்லாம் இந்த நெருப்பிலாவது பொசுங்கி விடாதா என்ற ஏக்கத்திலேயே அவர்கள் இப்படி கூடிக் கலைவதாக இவனுக்குத் தோன்றுமாம்2. இன்னும் கொஞ்சநேரத்தில் விடிந்துவிடும். இரவுரோந்தில் பாரா பார்த்த போலிஸ்காரர்கள் ஸ்டேசனுக்குத் திரும்ப இந்த தெரு வழியாகத்தான் போவார்கள். ரஞ்சித் வந்தானென்றால் மாட்டிக் கொள்வானே. பிடிபட்டு விட்டானானால் விசா ரணையின் கடுமை தாளாமல் தன்பெயரையும் சொல்லிவிடு வானோ என்றெல்லாம் அவள் உளைச்சல் மிகக் கொண்டு அரற்றத் தொடங்கியபோது மாடோட்டிக் கொண்டு போன ஒரு விவசாயியின் நிழலுக்குள்ளிருந்து ஒருவன் வெளியேறி பின்வாசலை நெருங்குவதை சன்னல் வழியே கண்ட இவள் அவனது சமிக்ஞைக்காக கதவடியில் காத்திருந்தாள். ஆர்வ மிகுதியில் லஜ்ஜாவதிதான் ஓடிப்போய் கதவைத் திறந்தாள். மாலைநேரத்தில் நெருப்பு மூட்டி குளிர்காயும் விவசாயியுடன் வட்டமாய் அமர்ந்து அவ்விவசாயி என்ன நினைக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முயற்சித்திருக்கிறீர்களா?2 வந்தவனைப் பார்த்து இவர்களிருவருக்கும் மூச்சடைத்துவிட்டது. அவனை இவர்கள் முன்பின் பார்த்ததில்லை. ரஞ்சித் இங்கே வரக்கூடும் என்பதை எப்படியோ துப்பறிந்து விட்ட யாரோ ஒரு அதிகாரி வீட்டை சோதனையிட வந்துவிட்டானெனத் தோன்றியது. கதவைத் திறந்துவிட்டாலும் அவன் உள்ளே நுழையமுடியாதபடி வழியை அடைத்துக் கொண்டு மறிப்பாய் நின்று கொண்டனர். அவனோ எதுவும் பேசாமல் வழியை விடுங்கள் என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தான். முன்னெப்போதும் கேட்டிராத அக்குரலின் கடுமை நடுக்கத்தை உண்டுபண்ணுவதாய் இருந்தது. உங்களுக்கு யார் வேண்டும்? ஸ்திரிகள் மட்டுமே இருக்கும் ஒரு வீட்டுக்குள் இப்படி அகாலத்தில் நுழைவது அத்துமீறல் இல்லையா என்றாள் இவள். அப்படியானால் எனக்கும் ஒரு சேலையோ கமீஸோ கொடுங்கள் உடுத்திக்கொள்கிறேன், நாமெல்லோரும் ஸ்திரிகளாகிவிடுவோம் என்று அவன் கேலியாக சிரித்தபோதுதான் அவனை இவர்களுக்கு அடையாளம் தெரிந்தது. நின்ற மூச்சு திரும்ப வந்தது. ஆனால் இம்முறை அவன் பெரும் கெடுபிடிகளுக்கு மத்தியில்தான் ஆக்ஷனை முடித்துவிட்டு தப்பி வந்திருக்கிறான். மற்ற தோழர்கள் ஆளுக்கொரு திசையில் பிரிந்து அவரவர்க்கு தீர்மானிக்கப்பட்ட தலைமறைவு பகுதிகளை நோக்கி நகர்வதை ஊர்ஜிதம் செய்துகொண்ட பிறகே அவன் அவ்விடத்திலிருந்து கிளம்பியிருக்கிறான். நேரமற்ற நேரத் தில் பதுங்கிவருவதை விடவும், ஜனநடமாட்டம் தொடங்கி விடும் அதிகாலைப் பொழுதில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து தப்பிப்பது எளிதாயிருக்கிறதென கூறிக்கொண்டான். விடியவிடிய தூங்காமல் காத்திருந்த இவர்களைத் தூங்குமாறு வேண்டிக்கொண்டான். தூக்கத்தை விடவும் ஆக்ஷன் பற்றி அறிந்து கொள்வதிலேயே இவர்களுக்கு ஆர்வமிருந்தது. அவனும் களைப்பை உதறியவனாய் தனது வழக்கமான உற்சாகமூட்டும் குரலில் எல்லாவற்றையும் விவரிக்கத் தொடங்கினான். ஆனால் பார்த்துப் பழகிய உருவம் அல்லாத வேறொருத்தன் எல்லாவற்றையும் சொல்வதுபோலிருந்ததால் கண்களை மூடிக்கொண்டு, முன்நெற்றியில் வந்து புரளும் முடிக்கற்றறைகளை வெகு இயல்பாக காதோரம் ஒதுக்கிவிட்டபடி பேசும் ரஞ்சித் உருவத்தை இவள் அந்தக் குரலோடு இணைத்துக்கொண்டாள். சற்றே ஆசுவாசமாய் இருந்தது. ஆனால் போலிசும், பிற்காலத்தில் வந்த அவனது இயக்கத்தினரும் அந்த ஜவான் வேடத்தைத்தான் ரஞ்சித்தின் மெய்யான உருவம் என்று சித்தரித்ததை அவளால் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை. ரஞ்சித் இந்தமுறை கொஞ்சம் கூடுதலான காலம் இவர்களோடு தங்கியிருந்தான். லஜ்ஜாவதி மிகுந்த சந்தோஷத்தோடு அவனை கவனித்துக்கொண்டாள். இத்தனைக்கும் அவர்களுக்குள் நீண்டநாள் பழக்கமொன்றுமில்லை. கடந்த செப்டம்பர் மாதக் குளிர் இரவொன்றில் ஒரு கல்லூரியின் இருண்ட தாழ்வாரத்தில் தனது இயக்கத்தின் நோக்கங்கள் குறித்து ரஞ்சித் நிகழ்த்தவிருந்த விளக்கவுரையைக் கேட்க லஜ்ஜாவதியின் அண்ணன்தான் இவர்களிருவரையும் அழைத்துப் போயிருந்தான். அரசியலில் பெரிதும் ஆர்வமற்றி ருந்த இவ்விரு பெண்களும் அன்றிரவின் உரையில் தம்மை வேறொரு பிறப்பாய் உணர்ந்தனர். அசையும் ராந்தல் விளக்கொளியில் மங்கலாய் தெரிந்த அந்த முகம் அதன்பின் வாழ்நாளுக்கும் மறக்கமுடியாததாய் மாறப்போகிறது என்பதை இவள் அந்த கணமே அறிந்துகொண்டவளைப் போல் தெளிந்த பார்வை கொண்டாள். ஆனால் லஜ்ஜாவதி அந்தகணத்திலேயே ரஞ்சித்துடன் சேர்ந்து அவனது எல்லா இயக்க நடவடிக்கைகளிலும் பங்கேற்கும் தீவிரம் கொண்டாள். அவளுக்கு அது சாத்தியம்தான். அவளது அண்ணனும் இளைய சித்தப்பாவும்கூட ரஞ்சித் இயக்கத்தில் சேர்ந்து நாலைந்து ஆக்ஷன்களில் பங்கெடுத்தவர்கள்தான். போலிசோடு நடந்த ஒரு மோதலில் கால்களை இழந்த இந்த சித்தப்பாவை கவனித்துக் கொள்ளும் செவிலியாகத்தான் இவள் லஜ்ஜாவதி வீட்டுக்குள் தங்கியிருக்கிறாள். லஜ்ஜாவதியோடு ஒப்பிடும்போது தான் ஒன்றுமேயில்லை என்று இவள் நினைத்தாலும் அதற்காக தாழ்வுணர்ச்சி கொண்டதில்லை. புரட்சிகரமான பல்வேறு சஞ்சிகைகளில் இவள் கவிதை எழுதிக் கொண்டிருந்தாள். பின்னாளில் பெண் விடுதலைக் குறித்த கருத்துக்களை உருவாக்கிக்கொள்வதில் அக்கவிதைகளே தன்மீது செல்வாக்கு செலுத்தியதாக ரஞ்சித் தன் சுயசரிதையில் பதிவு செய்திருந்தான். ரஞ்சித்மீது தனக் கிருப்பது காதலோ என்று சிலநேரங்களில் தனக்குள்ளேயே கேள்வியெழுப்பி சிந்தனையடுக்கை கலைத்தும் புரட்டியும் பதில்தேடி அப்படியொன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்து சேர்வாள். லஜ்ஜாவதிக்கும்கூட இதே குழப்பங்கள் நேர்வதுண்டு. ஆனால் இதற்காக அவள் ஒருபோதும் தீவிரமாய் பொருட்படுத்தி சிந்தித்ததில்லை. தலைமறைவாய் இவர்களோடு தங்கியிருந்த இந்தநாட்களில் ரஞ்சித் ஓயாமல் படிப்பதும் குறிப்புகள் எடுப்பதுமாய் இருந்தான். படிப்பதில் கூடுதல் சுவராஸ்யம் உள்ள பகுதி களை இவர்களுக்கும் வாசித்துக்காட்டுவான். ஜனத்தொகையில் சரிபாதியாய் இருக்கும் நீங்கள் பங்கேற்காமல் எதை சாதிக்க முடியும் என்ற கேள்வியை அடிக்கடி எழுப்பிக் கொண்டேயிருந்தான். எல்லாப் பெண்களுக்காகவும் நாங்கள் பதிலளிக்க முடியுமா ரஞ்சித்? எங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து முடிக்க சித்தமாயிருக்கிறோம். ஆணையிடு என்றாள் லஜ்ஜாவதி. இதற்கும் ஆணையிடுமாறு ஒரு ஆணிடம் ஏன் கோரவேண்டும்? உனக்கு எது ஏலுமோ அதைச் செய் என்றான். ஆண்பெண் பேதமற்ற தோழர்கள் என்ற அர்த்தத்தில் கேட்கிறேன், ஆணையிடு என்றாள். உணர்ச்சிபொங்க பேசிவிட்டாலும் அவன் இட்ட ஆணையை நிறைவேற்ற முடியாதவளாய் நிலைகுலைந்து போய்விட்டாள் லஜ்ஜாவதி. அவனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போனது குறித்த உளைச்சலில் உணர்வுகளின் சமநிலை குலைந்து சாகும்வரை பெரிதும் அது குறித்தே புலம்பிக்கொண்டிருந்தாள். அந்த புத்தகங்கள்தான் எவ்வளவு மேதைமையானவை? அதில் எத்தனை புரட்சி கரமான கருத்துக்களையெல்லாம் தெரிவித்திருந்தான் என்பது ஞாபகமிருக்குது தானே என்பாள் அடிக்கடி இவளிடம். உண்மைதான். ஏப்ரல் 28 ஆக்ஷனுக்குப் பிறகு தப்பித்துப் போகாமல் கைதாகி சிறைக்கொட்டிலில் இருந்தகாலத்தில் அவன் எழுதியிருந்த நான்கு புத்தகளுக்கு இணையான ஒன்றை இவளும் இந்நாள்வரை கண்டதில்லை. அவன் பல்வேறு பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை விடவும், சிறு பிரசுரங்களை விடவும் தெளிவான அரசியல் பார்வையை இந்த நான்கு புத்தகங்களும் கொண்டிருந்தன. திருட்டுக்குற்றங்களுக்கான தண்டனைக்காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலையாகி வந்த மங்கத் என்ற கைதியின் மூலம்தான் ரஞ்சித் அந்த புத்தகங்களை கொடுத்தனுப்பி யிருந்தான். மங்கத் தன் இடுப்புப்பகுதிக்குள் மறைத்து கடத்தி கொண்டுவந்திருந்தான் நூலின் கையெழுத்துப் படிகளடங்கிய பையொன்றை. பைக்குள் என்ன இருக்கிறதென்று பார்ப்பதைவிடவும் ரஞ்சித்தைப் பற்றி விசாரிப்பதிலேயே அவர்கள் பரபரப்பு கொண்டிருந்தனர். ரஞ்சித்தும் அவனது தோழர்களும் சிறைக்குள்ளேயே 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால் தற்போது குறிப்பாக அரசியல் கைதிகளும் பொதுவாக கைதிகள் அனைவரும் ஓரளவுக்கு கண்ணியமாக நடத்தப்படுவதாக தெரிவிக்கும்போது மங்கத் சற்றே உணர்ச்சி மேலிட்டவனாய்த் தெரிந்தான். குற்றப் பின்னணியுள்ள தன்னைப் போன்றவர்களிடமும் தோழமையோடு பழகிய ரஞ்சித் பற்றி பேச மங்கத்திடம் நிறைய சேதிகளிருந்தன. ‘கள்ளம் கபடமற்று பிறக்கும் மனிதனை திருடனாகவும் கொலைகாரனாகவும் ஏமாற்றுப் பேர்வழியாகவும் மாற்றுகிற மோசடியை இந்த சமூக அமைப்பே செய்கிறது என்பதால் உங்களை குற்றவாளிகளாக பார்க்க முடியவில்லை. யாரோ யாருக்காகவோ எழுதி வைத்துக் கொண்டிருக்கும் சட்டத்திற்குதான் நீங்கள் குற்றவாளியே தவிர எனக்கல்ல...’ இப்படியாக காலைப் பொழுதுகளில் தண்ணீர்த் தொட்டியருகில் இவர்களோடு பிரியமாய் பேசிக் கொண்டிருப்பானாம் ரஞ்சித். ரஞ்சித் சிறையதிகாரிகளோடு வாதாடி ஜூலை 12ம் தேதி 404 பக்கங்களைக் கொண்ட குறிப்பேடு ஒன்றை பெற்றிருப்பதாகவும் அதில் தான் படிக்கும் புத்தகங்களின் முக்கியப்பகுதிகளை குறித்து வைப்பதாகவும் சொல்லியனுப்பி இருக்கிறான். உண்மை தான் சகோதரிகளே, அவன் தலைமாட்டில் அம்பாரமாய் குவிந்திருக்கின்றன புத்தகங்கள் என்றான் மங்கத். தூங்கத் தெரியாவன்போல் எப்போதும் விழித்துக்கொண்டேயிருக்கி றான். தனது கைதியாக முடங்கிக் கிடக்கட்டும் என்று சிறை யிலடைத்தவனின் நினைப்பு ஜெயித்துவிடக்கூடாது. இந்த பகலும் மாலையும் இரவும் காலையும் நம்முடையது. அதை வீணாக்குதல் எதற்கு என்பானாம். ஜலந்தரைச் சேர்ந்த அந்த மங்கத் குறித்து அதன்பின் தகவலொன்றுமில்லை. பைக்குள் வெவ்வேறு தலைப்புகளிலான நான்கு நோட்டுகள் இருந்தன. சிறையதிகாரி களின் கண்மயக்கி எழுதப்பட்டதால் சில இடங்களில் கையெழுத்து தெளிவற்று இருக்கக்கூடும் என்றும், படிகளை தேவையெனில் திருத்தம் செய்து அச்சுக்கு அனுப்பிவைக்குமாறும் குறிப்பெழுதப்பட்டிருந் தது. அச்சாகி வந்ததும் காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும், எம்.என்.ராய்க்கும் நூல்களை அனுப்பி வைக்குமாறும் அவர்களது கருத்துக்களை கேட்டு தனக்கு தெரிவிக்குமாறும் கேட்டிருந்தான். கடந்த வருடம் செப் 12, 14 தேதிகளில் மத்திய சட்டசபையில் தங்களை விடுவிப்பதற்காக குரலெ ழுப்பிய ஜின்னாவுக்கு நன்றி தெரிவித்து அவன் கைப்பட எழுதியிருந்த கடிதத்தை அவரிடம் எப்படியாவது புத்தகத்தோடு இணைத்து ஒப்படைக்குமாறும் தெரிவித்திருந்தான். திரும்பத்திரும்ப படிப்பதும் திருத்தங்கள் ஏதும் தேவையா என விவாதிப்பதுமாய் இருந்ததில் ஒருமாதம் கழிந்துவிட்டது. அதற்குள் அச்சுக்கு போய்விட்டதா என்று மூன்றுமுறை தகவல் கேட்டு அனுப்பியிருந்தான் ரஞ்சித். ஆனால் வெளியே நிலைமை சரியாய் இல்லை. மே-5ம் தேதி சிறப்பு நீதிமன்ற விசாரணை தொடங்கிவிட்டதையடுத்து கெடுபிடி அதிகரித்துவிட்டது. ரஞ்சித்துக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் ஒத்தாசையாய் இருந்தவர்களைத் தேடி வெறிகொண்டலைந்தது போலிஸ். தலைமறைவுக் காலங்களில் அடைக் கலம் கொடுத்த வீடுகளுக்குள் அகாலங்களில் சோதனையிடப் பட்டது. சந்தேகத்தின் பேரில் இழுத்துச் செல்லப்பட்ட பலரும் விசாரணையின்றி சட்டவிரோதமாய் காவலில் அடைத்துவைத்து சித்ரவதை செய்யப்பட்டனர். காந்தியின் ஆதரவாளர்கள் சிலரும்கூட ஆள்காட்டிகளாய் இருந்தனர். டிசம்பரில் வைஸ்ராயின் சிறப்பு ரயிலைத் தகர்க்க நடந்த முயற்சியைக் கண்டிக்கும் காந்தியின் தீர்மானம்- அவரது முழு செல்வாக்கையும் பயன்படுத்தியப் பின்னும்- 1713 பேர் கொண்ட காங்கிரஸ் அவையில் வெறும் 81 வாக்குகளை மட்டுமே அதிகம் பெற முடிந்ததால் கிலியுற்ற மிதவாதிகள், அமிதவாதிகளை காட்டிக் கொடுக்கும் வேலையில் வெட்கமற்று ஈடுபட்டனர். யங் இந்தியாவில் வெளியான கட்டுரைகள் வழியே புரட்சிகர நடவடிக்கைகளை ஒடுக்கும் அரசின் அத்துமீறல்களுக்கு தனது ஒப்புதலை காந்தி சூசகமாக பகிரங்கப்படுத்தியிருந்தார். அப்போதிருந்து போலிசின் அட்டூழியத்தில் நாடு திணறத் தொடங்கியது. ரஞ்சித் சிறைக்குப் போய்விட்ட இந்த பதினெட்டு மாதங்களில் தாங்கள் இன்னும் போலிசின் விசாரணை வளையத்திற்குள் இழுத்து வீசப்படாமல் இருப்பதற்கு யாருக்கு நன்றி சொல்வது? இந்த நிலையில் ஒரு அச்சகத்தைத் தேடி கண்டுபிடிக்க ஏலுமா? ரஞ்சித் தங்களிடம் ஒப்படைத்தக் கடமையை நிறைவேற்றுவது தான் எப்படி? நிலைமை முன்னிலும் மோசமாகிவிட்டிருந்தது. அக்டோபர் 7ம் தேதி தனது விசாரணையை முடித்துக்கொண்ட சிறப்பு நீதிமன்றம் ரஞ்சித்துக்கும் அவனது கூட்டாளிகள் இருவருக்கும் மரணதண்டனையை தீர்ப்பாக்கியிருந்தது. லஜ்ஜாவதியும் இவளும் எதிர்ப்பு முழக்கங்களடங்கிய சுவரொட்டிகளை தயாரித்து தமது கமீசுக்குள் மறைத்துக்கொண்டு போய் நகரெங்குமுள்ள சகாகக்களை சந்தித்து ரகசியமாய் விநியோ கித்தனர். நகரின் பிரதான சதுக்கங்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மக்கள் கூட்டங்கூட்டமாக திரண்டு வாசித்தனர். கண்டன ஹர்த்தால்கள் பலவிடங்களிலும் தன்னெ ழுச்சியாய் நடந்தன. மாணவர்கள் கலாசாலைகளைப் புறக் கணித்துவிட்டு தெருக்களில் கூடி கொடும்பாவி கொளுத்தி னர். வழக்கத்திற்கு மாறாக தி டிரிப்யூன் நாளிதழ் அன்றைக்கு விசேஷமாக மாலை பதிப்பை வெளியிட்டு தீர்ப்பின் விவரங்களை அம்பலப்படுத்தி கண்டித்திருந்தது. தீர்ப்பை எதிர்த்து நாடெங்கும் வெடித்தக் கிளர்ச்சிகள் வட்டமேசை மாநாட் டில் வாதாடி அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை காந்தி ரத்துசெய்ய வேண்டும் என்பதாயிருந் தது. 11லட்சம் வேண்டுதல் பிரேரணைகள் கடிதமாகவும் தந்தியாகவும் காந்திக்கும் அரசுக்கும் வந்த வண்ணமிருந்தன. ஆனால் மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலேயே மூன்றுமுறை வைஸ்ராயை காந்தி சந்தித்திருந்தபோதும் 19ம் தேதிதான் இந்த மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்தார். காந்தியின் காலந்தாழ்ந்த இம்முயற்சிக்கு உள்நோக்கம் இருக்கக்கூடுமென மக்களிடையே அரற்றம் பரவியது. தூக்கிலிடும் முன்பாக வெளியே எஞ்சியிருக்கும் புரட்சியாளர்களை நரவேட்டையாடக் கிளம்பியது அரசாங்கம். இம்முறை தப்பமுடியாதென்று தோன்றியது இவளுக்கு. லஜ்ஜாவதிக்கும் நிலைமை புரிந்திருந்தது. ஒருவேளை தங்களது ஜாகை சோதனையிடப்படுமானால் தாங்களாகவே துணிச்சலாக முன்வந்து அறிவித்துக்கொண் டாலென்ன என்று ரஞ்சித்திடம் ஆலோசனை கேட்க பல்தேவ் அண்ணாவை அனுப்பிவைத்திருந்தனர். ரஞ்சித் இதற்கு ஒப்பவில்லை. எல்லோரும் சிறைக்குள் வந்துவிட்டால் யார் இயக்கத்தைக் கட்டுவது? தடயங்களை அழித்துக் கொண்டு அல்லது மறைத்துக்கொண்டு சாதகமான தருணத்திற்காக காத்திருக்கும்படி சொல்லியனுப்பியிருந்தான். நூல் களை அச்சுக்கு கொடுக்க இது பொருத்தமான தருணம் அல்ல என்பதை தான் உணர்ந்தே இருப்பதாயும் எனவே பதட்டப் பட்டு எதிலும் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித் திருந்தான். எனினும், அவன் கொல்லப்படுவதற்கு முன்பாக அவற்றை அச்சு வடிவில் கொண்டுவந்து அவனுக்கு காட்ட வேண்டும் என்று இவர்கள் ரகசியமாக மேற்கொண்ட முயற்சிகள் பலிதமாகவில்லை. அரசுக்கும் காங்கிரசுக்கும் எதிரான முழக்கங்களைக் கொண்ட சுவரொட்டிகளைக் கண்டு பீதியடைந்திருந்த போலிசார் அச்சாபீஸ்கள் மீது கூடுதல் கண்காணிப்பு கொண்டிருந்தனர். குறிப்பாக நவ ஜவான் பாரத் சபாவுக்கு அனுசரனையாக லாகூரில் இயங்கி வந்த அரோர்பன்ஸ் அச்சகத்தை சுற்றி எப்போதும் ரகசிய போலிஸ் ஏஜெண்ட்டுகளின் நடமாட்டம் அதிகரித்திருந்தது. அரசுகெதிராக போர்தொடுத்திருக்கும் தங்களை போர்க்கைதி களாகவே கருதி சுட்டுக்கொல்ல வேண்டுமென்ற ரஞ்சித் மற்றும் அவனது தோழர்களின் இறுதிவிருப்பம்3 போலவே அவனது புத்தகங்களை அச்சில் கொண்டு வந்துவிட வேண்டு மென்ற இவர்களது முயற்சியும் நிறைவேறாமலே போனது. மார்ச் 23ம் தேதி அவர்களை தூக்கிலிட்டுவிட்ட பிறகு லஜ்ஜா வதியும் இவளும் அழுவதற்கும் தெம்பற்று தொய்ந்தார்கள். தூக்கிலிடப்பட்டதற்கு மறுநாள் காங்கிரஸ் நாடு தழுவிய பொது ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அப்படி யொரு அழைப்பை விடுக்காதிருந்தாலும் மக்கள் அந்த மகத் தான தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தித் தானிருப்பார்கள் என்றாள் இவள். கொலைக்கு துணைபோன குற்றவுணர்விலிருந்து தப்பிக்க இப்படியொரு பரிகாரம் போலும் என்று சாடினாள் லஜ்ஜாவதி. இவளுக்கும் அதே கருத்துதான். அவர்களை இறுதியாகப் பார்க்கும் வாய்ப்பும் தங்களுக்கு கிட்டாதது குறித்த வேதனை நெறிக்கட்டியாய் வலிக்கத் தொடங்கியது. தூக்கிலிடப்பட்டது பற்றி சஞ்சிகைகளிலும் ரேடியோவிலும் வெளியாகும் செய்திகள் இவர்களை மேலும் துவளச்செய்தன. தி டிரிபியூன் போன்ற ஒருசிலவற்றைத் தவிர பிற உள்ளூர் பத்திரிகைகள் இச்செய்தியை வெளியிட வும் தயக்கம் காட்டிய நிலையில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் கம்யூனிஸ்ட் ஆதரவு நாளிதழான டெய்லி ஒர்க்கர் 25ம் தேதியே தலைப்புச் செய்தியாக வெளியிட்டு அஞ்சலி செலுத்தியிருந்தது. மதராசில் குடியரசு பத்திரிகை யில் ஈ.வெ.ராமசாமி, வழக்கின் தன்மையை விஸ்தாரமாக விவரித்து அஞ்சலி தெரிவித்ததோடு காப்பாற்ற முன்வராத காங்கிரசை கடுமையாக விமர்சித்துமிருந்தார். கடவுளுக்கு முன்பே உலகமிருந்தது என்பதைப்போலவே எனக்குப் பின்னும் இருக்கும். ஆனால் என் காலடியும் மூச்சுக்காற்றும் பட்ட பிறகு அது பழைய மாதிரியே சுழன்றுகொண்டிருக்க முடியாது...3 தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து பெரும் போராட்டங்கள் வெடித்துப் பரவிக் கொண்டிருந்தன. சராசரியாக ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் இருவர் கைது செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக ஒரு நாளிதழ் தெரிவித்திருந்தது. கராச்சி காங்கிரசில் காந்திக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகளும் இடது சாரிகளும் ஆட்சேப கோஷங்களை எழுப்பினர். மகாநாடு நடைபெறும் மைதான வாயிலில் ஆயிரக்கணக்கில் திரண்ட பொதுமக்கள் நாட்டின் விடுதலைக்கு ரஞ்சித்தின் பாதையே தேவையென்று தொடர்ந்து கோஷமிட்டபடியே இருந்ததில் மகாநாட்டு நடவடிக்கைகள் முற்றாக சமன்குலைந்தது. வரவேற்புக்குழுத் தலைவர் சுவாமி கோவிந்தானந்தாவும் மகாநாட்டுத் தலைவர் சுபாஷ் சந்திரபோசும் செய்த சமாதானங்களும்கூட அங்கு அமைதியை கொண்டுவரவில்லை. இச்செய்திகளையெல்லாம் திரட்டிக் கொண்டுவந்து தெரிவிக்கிற பல்தேவ் அண்ணா நேற்றிரவு தெரிவித்த செய்தி இவர்களது மனவுறுதியை முற்றாக குலைக்கக் கூடியதாயிருந்தது: அவர்களை தூக்கிலிட்டு ஓரிரு நிமிடங்களில் கழுத்தை முறித்ததும் குற்றுயிரும் குலையுயிருமாக கீழேயிறக்கி மரக்கட்டை கள் அடுக்கிய லாரி ஒன்றில் மறைத்து லாகூர் கண்டோன் மென்ட்டுக்கு கொண்டு போனார்களாம். போகும் வழியி லேயே ரஞ்சித்துக்கு நினைவு திரும்பியதாம். கண்டோன் மென்டில் வெறியோடு காத்திருந்த சாண்டர்ஸ் குடும்பத்தினர் லாரியிலிருந்து இறக்கப்பட்ட மூவரையும் ஆத்திரம் தீருமட்டும் துப்பாக்கியால் சுட்டு பழி தீர்த்துக்கொண்டனராம். தூக்கிலிடப் பட்ட உடலில் குண்டுக்காயம் எப்படி வந்தது என்று யாரும் பிரச்னை எழுப்பிவிடக் கூடாது என்பதாலேயே ஜுன்ஜுன்வாலா பகுதியில் அடக்கம் செய்யவிருப்பதாய் மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு பியாஸ் சட்லெஜ் சங்குமுகத்தில் ரகசியமாய் எரியூட்டிவிட்டதாம் அரசு. பஞ்சாப் கவர்னரின் நேர்முக உதவியாளராய் இருந்த சாண்டர்சின் மாமனார்தான் இதையெல்லாம் பின்னிருந்து இயக்கியவன் என்றான் பல்தேவ் அண்ணா. அவ்வாறு சுடப்பட்டிருந்தால் அதையும் தீரத்தோடு எதிர்கொண்ட படியேதான் ரஞ்சித்தின் உயிர் பிரிந்திருக்கும் என்றாள் இவள். யாரும் யாருக்கும் தேறுதல் சொல்லிக்கொள்ள வழியற்று அவரவர் துயரத்தை அவரவரே கடந்து வர வேண்டியதாயிற்று. அதற்கான காலம் ஒரு மலைப்பாதையைப்போன்று முடிவற்றதாய் நீண்டு நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது. யாதொன்றின்மீதும் பிடிப்பற்று வெறுமைக்குள் துழாவிக் கழிந்த இக்காலகட்டத்தில் வெளி நடமாட்டத்தை சுருக்கிக் கொண்டு வீட்டிலேயே அடைந்துகிடந்தனர். அவன் கடைசியாய் வந்திருந்தபோது விட்டுச் சென்ற குர்தாவை எடுத்து ‘இந்த துணியில் தங்கியிருக்கும் அவனது வாசனை காலத்துக்கும் உடன்வருமா? என்று லஜ்ஜாவதி கேட்டபோது அது பிரிவின் நிமித்தமானதொரு கவிதையின் முடிப்பு வரியைப் போல் தோன்றியது இவளுக்கு. அதற்கப்புறம் அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடலும்கூட சுருங்கிப்போனது. எப்போதாவது அரிதாக சில வார்த்தை களை பேசிக்கொண்டனர். அதுவும் ரஞ்சித் அவர்களுடன் இருந்தது பற்றியதாகவே இருந்தது. இதுவன்றி பொது விவகாரங்கள் ஒன்றிலும் நாட்டம் கொண்டாரில்லை. அவ்வாண்டின் கோடையில் ரஞ்சித்தின் சொந்தகிராமமான பங்காவுக்கு சென்று அவனது குடும்பத்தாரை சந்தித்து திரும்புவதென்ற திட்டத்தை ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாமலே கைவிட்டனர். கட்கர்கலானிலிருக்கும் அவன் குடும்பத்தாரின் பூர்வீக வீட்டைக் கண்டுவரும் யோசனையும் கூட இருந்தது. ஊருக்குப்போகையில் தருவதற்காக அவனது தங்கை பர்காஷ்சுக்கு மிகப்பிரியமாய் வாங்கி வைத்திருந்த ஜடைபில்லைகளும் வண்ணக்குஞ்சமும் அலமாரியில் நிறம் மங்கி வெளிறிக் கொண்டிருந்தன. லஜ்ஜாவதி ரஞ்சித்தின் பெயரை பூத்தையல்களால் நிரப்பிக் கொண்டிருக்க, இவளோ அச்சு கோர்க்க ஏதுவாக அப்புத்தகங்களை தட்டச்சு செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். காலம் ஒரு உடைந்த சக்கரத்தைப்போல மெதுவே உருண்டது. எப்போதாவது வரும் பல்தேவ் அண்ணாவிடம் அச்சகம் பற்றி தொணதொணப்பது இவர்களது வாடிக்கையாயிருந்தது. ரஞ்சித் இல்லாவிட்டாலும் இயக்கம் தொய்வின்றி செயல்படும் என்பதை ருசுவாக்க நடந்து கொண்டிருந்த பல்வேறு ஆக்சன்கள் பற்றி உற்சாகம் பொங்க அவன் விவரிக்கும்போது இவர்கள் இருவரும் சுரத்தின்றி கேட்டுக் கொண்டிருப்பார்கள். உங்களது இந்த மனப் போக்கை ரஞ்சித் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்... நீங்கள் மீண்டும் வெளியே வரவேண்டும் என்று வேண்டுதல் வைப்பான். இவர்கள் பதிலாக எதையும் சொல்லிக் கொள்வதில்லை. ‘ஏகாதிபத்தியத்திற்கு சற்றும் குறையாமல் ஒவ்வொரு இந்துவும் தனக்குக் கீழிருக்கும் சாதிகளை ஒடுக்குகிறான். இழப்பதற்கு எதுவுமில்லை என்னும் மார்க்சின் பிரகடனத்தை மறுப்பவர்களாக இந்திய உழைப்பாளிகளை இந்துமதம் பிறப்பிலேயே வடிவமைத்துவிடுகிறது. சாதியல்லாத சமூக உறவுமுறை எதுவும் பரிந்துரைக்கப்படாத சமூகமாக இது கெட்டித்தட்டிக் கிடக்கிறது. பாட்டாளி வர்க்கத்திற்கு சாதி மதம் இனம் மொழி- இவை எல்லாம் இருக்கிறது என்ற உண்மையை ஒப்புக்கொள்வதன் மூலமே அவர்களை அணிதிரட்டுவதற்கான இந்திய வயப்பட்ட மார்க்சீயத்தைக் கண்டடைய முடியும்...4 ரஞ்சித் விட்டுப்போன பணிகளை நிறைவேற்றுவதா அல்லது உறைந்து கிடப்பதா என்ற குழப்பத்தை காந்திதான் முடிவுக்கு கொண்டுவந்தார். தீண்டத் தகாதவர்களுக்கு தனித்தொகுதி வழங்குவதை எதிர்த்து 20.9.32ல் அவர் சாகும்வரை உண்ணா நோன்பைத் தொடங்கிய செய்தியை ரேடியோவில் கேட்டு எரிச்சலுற்ற இவர்கள் இருவரும் நீண்டநாட்களுக்குப் பிறகு தெருவிறங்கி தபாலாபீசுக்குப் போய், ‘இந்த நாட்டுக்கு இன்னொரு காந்தி கிடைக்கக்கூடும். அல்லது தேவைப்படா மலும் போவதற்கு வாய்ப்புகளுண்டு. எனவே அவரது தந்திரத்தையும் நிர்ப்பந்தத்தையும் தாங்கள் ஆற்றலோடு எதிர்கொள்வீர்கள் என நம்புகிறோம். பின்வாங்கிவிட வேண்டாம். நாடு உங்களோடு’ என்று அம்பேத்கருக்கு தந்தி கொடுத்தனர். யார் இந்தப் பெண்களென அம்பேத்கர் குழம்பிவிடக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட கடிதத்தில் அவர்மீது ரஞ்சித் கொண்டிருந்த அபிமானம் பற்றி குறிப்பிட்டதோடு, விரைவில் அச்சுக்குப் போகவிருக்கும் அவனது நூலின் தெரிவு செய்யப்பட்ட சிறுபகுதியையும் இணைத்து அனுப்பியிருந்தார்கள்4. ஆனால் காந்தியின் பிடிவாதத்திற்கு எல்லாமே இரையாகிப் போயின. கஸ்தூரிபாயின் மாங்கல்யம் நீடிக்க தீண்டத்தகாதாரும் தேசத்தின் ஒப்பற்றத் தலைவருமாகிய அம்பேத்கரும்தான் காந்திக்கு உயிர்ப்பிச்சை வழங்க வேண்டியதாயிற்று. அடுத்துவந்த நாட்களின் பல்வேறு நிகழ்வுகளில் மனம் அலைக்கழிந்தாலும் இவர்களிருவரும் இயக்கத்தோடு பொருந்திக் கொள்வதற்கான சாத்தியங்கள் குறைந்தே காணப்பட்டன. நூல்களை அச்சுக்கு கொண்டு போய் ஆகப் போவதென்ன என்று அடிக்கடி விரக்தியில் புலம்பும் லஜ்ஜாவதி, புத்தகங்கள் வெளியாகிவிட்டால் மறுகணமே ரஞ்சித் இருக்கு மிடத்துக்குப் போய் விடுவேன் என்பாள். இதெல்லாம் சுத்த அபத்தம் என்று இவள் நினைத்துக் கொண்டாலும் மறுப்பேதும் சொல்லாது மௌனமாய் இருந்துவிடுவாள் அம்மாதிரியான பொழுதுகளில். உறைந்துவிட்ட இந்த மௌனத்தை உருகவைக்கும் வெப்பம் யாரிடமிருக்கிறதோ? போலிசின் கெடுபிடிகளுக்கு அஞ்சி ஏழாண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பூஞ்சை களான தங்களை ரஞ்சித் இந்தவேலைக்காக தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது என்று கூறிய லஜ்ஜாவதி நம்பிக்கையான ஒருவரிடம் புத்தக வேலையை ஒப்படைத்துவிடலாமா என்று நச்சரிக்கத் தொடங்கியிருந்தாள். ரஞ்சித்தின் கட்டுரை யொன்று பஞ்சாபியிலோ வேறெந்த இந்திய மொழியிலுமோ வெளியாகியிருக்காத நிலையில் தன் சகாவான ஜீவாவைக் கொண்டு அதை ‘நான் ஏன் நாத்திகனானேன்’ எனத் தமிழில் மொழிபெயர்க்க வைத்து 1934லியே வெளியிட்டிருந்த ஈவெராவிடம் வேண்டுமானால் நம்பிக் கொடுக்கலாம் என்பதே இவளது அபிப்ராயமாயிருந்தது. ஆனால் போலிசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மதராசுக்குப் போவதெப்படி? மிகுந்த கவனத்தோடு திட்டமிட்டாலும் ஒவ்வொரு முறையும் மதராஸ் பிரயாணம் தடைபட்டுக் கொண்டேயிருந்த நேரத்தில்தான் ஒருநள்ளிரவில் விஜயகுமார் சின்ஹா வந்து சேர்ந்தார். நேரடியாக பங்கெடுக்காவிட்டாலும் பல்வேறு ஆக்ஷன்களில் தொடர்புடைய சின்கா இதுவரையிலும் போலிசின் சந்தேகத்திற்கு ஆளாகாதவராய் இருந்தார். எனவே அச்சிடும்வேலையை அவர் மிகவும் பெருமிதத்தேடு ஏற்றுக் கொண்டார். அவரிடம் புத்தகங்களின் கையெழுத்துப் படிகளை ஒப்படைத்த அன்றிரவு, அச்சிடப்பட்ட புத்தகங் களின் உலராத மையின் வாசனை கிறக்கமூட்டியது இவர்களின் கனவில். டில்லியில் அல்லது கான்பூரில் இருக்கும் ஏதேனுமொரு பதுங்குமிடத்தில் தங்கிக்கொண்டு அச்சாக்க வேலையை முடித்துவிட்டு வருவதாக சொல்லிச் சென்றவர் குறித்து அதற்கப்புறம் ஒரு தகவலுமில்லை. போகும் வழியிலேயே போலிசிடம் சிக்கிக் கொண்டாரோ அல்லது வேறெங்கும் தலைமறைவாக பதுங்கியிருக்கிறாரா என்பதும் தெரிய வில்லை. ஆனால் தம்மை அழுத்திக் கொண்டிருந்த பெரும் பாரத்திலிருந்து விடுபட்ட உணர்ச்சி மேலிட்டவளைப் போல அன்று லஜ்ஜாவதி இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியிருந்தாள். இவளும்கூட நீண்டநாட்களுக்குப் பிறகு ஒரு கவிதையை எழுதியிருந்தாள்5. இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை உங்களுக்கானதொரு சூரியன் பால்வெளியில் தகதகத்து வந்துகொண்டிருக்கிறது அதிகாலையில் அதன் முதல் கிரணங்கள் உங்களைத் தீண்டக்கூடும் தூங்குகிறவர்களே விழித்துக் கொள்ளுங்கள் விகசிக்கும் அந்த ஒளியெடுத்து கண்களுக்குள் பாய்ச்சிக்கொள்வோம் நூறாண்டுகள் தடித்த இருட்சுவரை கடக்க வேண்டியவரன்றோ நாம்... 5 ரஞ்சித்தை சூரியனாய் உருவகித்து தான் எழுதிய அக்கவிதை எழுபதாண்டு களுக்குப் பின் வெயிலைத் தடவிக் கொடுக்கும் இந்தப்பொழுதில் நினைவுக்கு வந்தது குறித்த சந்தோஷத்தில் மெஹருன்னிசாவை அழைத்தாள். தீனமான தன் குரலில் இப்போது புதுத் தெம்பேறிவிட்டதை உணர்ந்தவளாய் ‘இந்த கவிதையை குறித்துக்கொள். மீதியையும் இன்றைக்கே எழுதிவிடலாம்’ என்றாள். 2. ரஞ்சித்தும் தோழர்களும் தூக்கிலிடப்பட்டதற்குப் பின்னான நாட்டின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கும் மெஹருன்னிசா, பைசலாபாத் ( முன்பு- லயல்பூர் ) மகளிர் கல்லூரியின் பட்ட மேற்படிப்பு மாணவி. சுதந்திர தினத்துக்கு முந்திய நாளிரவு கலவரத்தின்போது ஒரு கும்பலால் தூக்கிச் செல்லப்பட்டு ஆறுமாதங்களுக்குப்பின் எல்லையோர நிவாரண முகாம் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டவள் இவளது தாய். பலாத்காரங்களால் சுவாதீனம் கலங்கியவளாகவும் கர்ப்பமுற்றுமிருந்த அவள் மெஹருன்னிசாவை ஈன்றெடுத்த சிலநாட்களில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள். இவளது வாழ்வை மையமாக வைத்து சதத் ஹசன் மாண்டோ ஒரு சிறுகதையை எழுதியுள்ளார். பின்னாளில் அது படமாகவும் வெளியானது. ரஞ்சித்தின் சமகாலத்தவர்களை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தேடிப்பிடித்து அவர்களது ஞாபகங்களை தொகுப்பதில் ஈடுபாடு கொண்டிருக்கிறாள் மெஹருன்னிசா. லாகூர் ஜெயில் ரோட்டில் டிஏவி கல்லூரி விடுதிக்குப் பின்புறமிருந்த ஒருவீடும்கூட ரஞ்சித்தின் பதுங்கிடங்களில் ஒன்றெனக் கிடைத்த தகவலின்பேரில் மெஹருன்னிசா இவளைத் தேடிக் கண்டுபிடித்திருந்தாள். அந்திமத்திலுள்ள நந்தினியம்மாவின் நினைவிலிருப்பவற்றை மீட்டெடுத்து எழுத வந்தவள் அவளுடனேயே தங்கி பணிவிடை செய்தவாறே ஆய்வையும் தொடர்கிறாள் . 3. அதன்பின் நடந்தவை மின்னலெனப் பாய்ச்சல் வேகம் கொண்டவை. இரண்டாம் உலக மகாயுத்தம் தொடங்கிவிட்ட நிலையில் இங்கிலாந்துக்கு ஆதரவாக இந்தியாவை இறக்கிவிடும் முயற்சிக்கு எதிராக புரட்சியாளர்கள் கலகம் செய்யக்கூடும் என்ற அச்சத்தில் நிம்மதியற்றுப்போன அரசு தன் நரவேட்டையை முடுக்கிவிட்டது. சிறைச் சாலைகள் நிரம்பி வழிந்தன. சித்ரவதைகளுக்கு காரணமெதுவும் தேவையற்றிருந்தது. பின்வந்த நாட்களில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் அறிவித்து விட்டது. அரசியலானது தொடர்ந்து கொதிநிலையிலேயே இருந்ததால் தன்வீடும் சோதனையிடப்படலாம் என்ற அச்சத்தில் சின்ஹா, ரஞ்சித்தின் கையெழுத்துப்படிகளை நண்பர் ஒருவரிடம் கொடுத்து பத்திரமாக வைக்குமாறும் நிலைமை சரியானதும் வந்து பெற்றுக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார். வாங்கிக்கொண்டு போன அந்த தொடை நடுங்கி, தான் மாட்டிக்கொண்டால் என்னாவது என்ற அச்சத்தில் நான்கு புத்தகங்களையும் எரித்துவிட்டதாய் எனக்கு ஞாபகம்.... ஆமாம் அம்மா, சிவவர்மாகூட தன் புத்தகத்தோட முன்னுரையில் இந்த செய்தியை குறிப்பிட்டிருக்கிறார்... என்றாள் மெஹருன்னிசா. நான்தான் அவனுக்கு புத்தகங்களோட பெயர்களைச் சொன்னேன். பிரிவினைக்கப்புறம் ஓரிரு தடவைகள்தான் சிவவர்மாவை சந்தித்தேன். ரஞ்சித்துக்கும் எங்களுக்கும் ரொம்பவும் நெருக்கமான தோழன். லாகூர் சதிவழக்கில் தண்டனைக்கைதி. நிறைய ஆக்ஷன்களில் பங்கெடுத்தவன். ரஞ்சித் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு முழு தகுதியானவன்தான். கான்பூரிலோ லக்னோவிலோ இருந்து எப்போதாவது கடிதங்கள் எழுதுவான். கொஞ்சகாலமாய் அதுவும் நின்றுவிட்டது என்றாள். சிவவர்மா 97 ல் இறந்துவிட்ட செய்தியை இவள் இன்னும் அறியவில்லைபோலும். சொல்லி துயரத்தில் ஆழ்த்திவிடக்கூடாது என்று தன்னைத்தானே எச்சரிக்கை செய்து கொண்டாள் மெஹருன்னிசா. மெஹர், அந்த புத்தகத்தில் வேறென்ன குறிப்பிட்டிருந்தான் சிவவர்மா?. லஜ்ஜாவதி பற்றி ஒரே ஒரு வரி வருகிறது அம்மா. ஆனால் உங்களைப் பற்றி எதுவும் காணலியே? நானும் லஜ்ஜாவதியும் இதே வீட்டில்தான் இருந்தோம். இது அவளுடைய வீடுதான். பிரிவினைக்குப்பின் எங்களது குடும்பம் இந்தியாவுக்கு பெயர்ந்துவிட்ட போதும் பிடிவாத மாக இங்கேயே தான் இருந்தோம். திட்டமிட்டிருந்ததில் முடிக்கப்படாமலே இருந்த சில வேலைகளுக்காக நாங்கள் இங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அவள் சமாதிகூட இந்த வீட்டின் புழக்கடையில்தான் இருக்கிறது. எழுபதோ எழுபத்தொன்னோ சரியா ஞாபகம் வரல. நானும் அவளோடு செத்திருக்க வேண்டியவள்தான். கொஞ்சத்தில் தப்பிவிட்டேன். எதுவும் ஆக்சன்ல ஈடுபட்டீங்களோ? ஆமாம். நிலுவையிலிருந்த ஆக்ஷன். லாகூர் சதிவழக்கில் அரசுத்தரப்பு சாட்சியாயிருந்து ரஞ்சித்துக்கும் மற்றவங்களுக் கும் தண்டனை கிடைக்க காரணமாயிருந்த நவாப் முகம்மது அகமது கானைப் பற்றி நீ படித்திருக்கிறாயா? பிரிவினைக்குப் பிறகு அவன் இங்கே கௌரவ மாஜிஸ்திரேட்டாகி விட்டிருந்தான். எப்பவும் ஜம்பமாய் மெய்க்காப்பாளர்களோடே வந்து போய்க் கொண்டிருந்தான். நாங்களும் பின்தொடர்ந்து கொண்டுதானிருந்தோம். ஒருநாள் ராத்திரி கஜல் கச்சேரி ஒன்றுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது வகையாக சிக்கினான். அவர்களைத் தூக்கிலிட்ட அதே இடத்தில் அவனைக் கொன்றோம் நாங்களிருவரும். இவங்களை லாகூர் ஜெயில்லதானே தூக்கிலிட்டாங்க?. ஆமா. ஆனா அந்த ஜெயில் இப்ப இல்ல. 65வாக்கிலேயே அதை இடிச்சு தரைமட்டமாக்கிடுச்சு அரசாங்கம். சத்மான் சௌக்னு இப்ப சொல்ற இடம்தான் அது. அங்க வச்சுத்தான் கணக்கை நேர் செஞ்சோம். அவனது மெய்க்காப்பாளன் சுட்டதில் ஒரு ரவை அவளது அடிவயிற்றில் பாய்ந்து விட்டது. காயத்தோடேயே மதிலேறி குதித்து வீட்டுக்குள் வந்துவிட்டோம். பழகியத் தடம்கிறதாலயும் பலநாளா ஒத்திகைப் பார்த்திருந்ததாலயும் தப்பிச்சு வர்றது எளிதாகத் தான் இருந்துச்சு. ஆனா நிறைய ரத்தம் வெளியேறிட்டதால அவளை பிழைக்கவைக்க முடியல. ஒத்தையாளா குழி வெட்டி அவளைப் புதைச்சேன். நைந்து போயிருந்த ரஞ்சித்தின் குர்தாவைத்தான் அவள் அன்று அணிந்திருந்தாள். சுதேசிகளால் ஆளப்படும் ஒரு நாடு என்பதற்கும் அப்பால், விடுதலையடையும் நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதும் அவன் கனவாக இருந்தது. எனவேதான் அவனைக் கொல்வதில் மானசீக கூட்டாளிகளாய் சுதேசிகளும் இருந்தனர்.6 உங்களுக்கொன்னும் ஆகலியே? இதோ இந்த தழும்பைத் தொட்டுப்பார். அதுக்குள் ஒரு ரவை தங்கியிருக்கு. எப்பவாச்சும் எறும்பு கடிச்சாப்ல சுருக்குனு வலிக்கும். மத்தபடி எந்த தொந்தரவும் இல்லாததால இருக்கட்டும் சனியன்னு அப்படியே விட்டுட்டேன். அந்த ஜெயிலை பார்க்கமுடியாமப் போச்சே அம்மா... இங்க எஃப்.இ.சௌத்ரின்னு ஒரு போட்டோகிராபர் இருக்கார். என்னை மாதிரி நூறை நெருங்குற வயசுதான். ஜெயிலை இடிக்கிறப்ப தத்ரூபமா எல்லாத்தையும் படம் பிடிச்சு வச்சிருக்கார். ரஞ்சித்தையும் தோழர்களையும் எரியூட்டின பன்சிகாட் பகுதியைக் கூட படமெடுத்திருக்கிறார். நான் அனுப்பினேன்னு சொல்லு. பிரியமா தருவார்.... சரியம்மா, ரஞ்சித் தந்தனுப்பின புத்தகம் நாலும் என்னதான் ஆச்சு...?. அதான் சொன்னேனே, எரிச்சிட்டானுங்க. அதுகள்ல எழுதியிருந்த எதுவும் இந்த உலகத்துக்கு கிடைக்காமலே அழிஞ்சது பெரிய துயரம்தான் என்றாள் மெஹருன்னிசா. இவளுக்கு கோபத்தில் வார்த்தைகள் குழறத் தொடங்கியது. உடம்பெல்லாம் நடுங்கியது. என்ன பெரிய துயரத்தை இந்த ரெண்டு நாடுகளும் கண்டுவிட்டது? நேத்து வரைக்கும் இந்த புரட்சியாளர்களை கலகவாதிகள்னு தானே பாடப்புஸ்தகத்துலகூட எழுதி வச்சிருந்தாங்க. அவனோட புஸ்தகங்க அச்சாகி வந்திருந்தா அதையெல்லாம் படிச்சிட்டு அப்படியே நடந்திருப்பாங்களாக்கும்? பிரிவினைக்காலத்துல எத்தனை வன்முறை.... ரஞ்சித் இருந்திருந்தா இதையெல்லாம் சகிச்சிருக்கவேமாட்டான். ஒரே நாடா இருக்கவும் தெரியல. ஒத்துவரலன்னு அமைதியா பிரிச்சிக்கவும் தெரியல. பாகம் பிரிச்சுக்காத வீடு எது? பங்கு வைக்காத நாடு எது? ....த்தூ என்று துப்பினாள். வெளியிலிருந்து வந்த இஸ்லாமியர் இங்கிருந்தோரை மதம் மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டுகிறவர்களே, ஆரியர்களும் வெளியிலிருந்து வந்தவர்கள்தானே... அவர்கள் ஏன் இங்கிருந்தோரை ஆரியராக மாற்றி தம்மோடு சேர்த்துக்கொள்ளாமல் வர்ணமாக,சாதியாக பிரித்து வைத்தார்கள்?7 அவள் நாக்கு வறண்டு விட்டிருந்தது. குவளையிலிருந்த பழரசத்தை கொஞ்சம்போல் புகட்டினாள் மெஹருன்னிசா. இவளுக்கு சற்றே ஆசுவாசம் கிட்டியது. கண்களை மூடிக் கொண்டு திடீரென அமைதிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டாள். காத்திருந்தாள் மெஹர். ஆனால் இப்படி யெல்லாம் நடக்கும்னு ரஞ்சித் யூகிச்சிருந்தான்7 தெரியுமா மெஹர்... நாடுகள் பிரிவதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால் இரு சமூகங்களுக்குள்ளும் இணக்கம் காணமுடியாத பகைமை விதைக்கப்படுவது பற்றி அவன் கொண்டிருந்த அச்சம் உண்மையாகிவிட்டது பார்த்தாயா மகளே... நீங்களும் லஜ்ஜாவதியும் எப்படியும் நாலு புத்தகங்களையும் வாசித்திருப்பீங்கதானே அம்மா? அவள் வெறுமனே தலையை மட்டும் ஆட்டினாள். சிறிதுநேரம் கழித்து ஏழு வருஷமா அதை மட்டுந்தானே செஞ்சுக்கிட்டிருந்தோம்...? என்றாள் கண்களைத் திறக்காமலே. புத்தகங்கள் நாலும் பொதுவா எதைப்பத்தியெல்லாம் பேசினதுன்னு உங்களுக்கு ஞாபகத்துல இருக்குதா அம்மா...? எப்படி மறக்க முடியும்? சிவவர்மா குறிப்பிட்டிருந்த தலைப்புகளை வைத்து ஆளாளுக்கு யூகத்தில் ஏதேதோ உளறிக் கொட்டுறாங்க. ரஞ்சித் இவங்களுக்கு வெளியில நின்னு யோசிச்சி எழுதியிருக்கான்.... 4. சோசலிசத் தத்துவத்தை ஆங்கிலத்திலும், இந்திய புரட்சி இயக்கத்தின் வரலாறை இந்தியிலும், மரணத்தின் நுழைவாயிலில்- உருதிலும், சுயசரிதையை பஞ்சாபிமொழியின் குறுமுகி வரிவடிவத்திலும் ரஞ்சித் எழுதியிருந்தான். நான்கும் அச்சில் சுமார் ஆயிரம் பக்கங்கள் அளவிற்கு வரக் கூடும். அடித்தல் திருத்தலின்றி நேர்த்தியான எழுத்தமைவு. எழுதும் பொருள் குறித்த கருத்தமைவில் நம்பிக்கையும் தெளிவும் ஒருங்கு கூடிவிடுமானால் மட்டுமே வாய்க்கும் நேர்த்தி அது. வார்த்தைகளின் தெரிவும் வீச்சும் படிக்கிறவ னின் மூளையை சிதறடிக்கும் ஆற்றல் கொண்டவை. ரஞ்சித்தின் மொழிநடை அவனே எதிர்நின்று உரையாடுதலுக்கு நிகரானது. அவன் சிறைக்குள் இல்லை, இதோ நம்முன் இருக்கிறான் என்பதாக நினைத்துக்கொண்டபோது இவளுக்கு கண்கள் பனித்து எழுத்துக்கள் கலங்கியோடியதும் பதறியடித்து துப்பட்டாவால் துடைத்தபோதும் ஈரத்தால் அழிவதிலிருந்து சில எழுத்துக்களை காப்பாற்ற முடியாமல் போனதும் கிழவியின் ஞாபகத்தைப் புரட்டியெடுத்தது. கிர்த்தி, மகாராத்தி, பான்சி எண் ஆகிய இதழ்களில் எழுதியிருந்த கட்டுரைகளுக்கு முற்றிலும் தொடர்பற்ற வகையில் புதியத்தளங்களையும் களங்களையும் உள்ளடக்கியிருந்தன புத்தகங்கள். இதில் சுயசரிதையைத்தான் லஜ்ஜாவதிக்கும் இவளுக்கும் சமர்ப்பணம் செய்திருந்தான் ரஞ்சித். ‘மனிதர் களுக்கிடையிலான பிரியங்களே உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதன் சாட்சிகளாய் வாழும் தோழிகள் லஜ்ஜாவதிக்கும் நந்தினிக்கும்...’ என்று குறிப்பிட்டிருந்தான். சாமான்யர்களின் சுதந்திரவுணர்ச்சியும் எழுச்சியலையும் நேஷனல் கல்லூரி மாணவனாயிருந்த தன்னை எவ்வாறு சுருட்டி இழுத்துக்கொண்டது என்பதில் தொடங்கி தன் வாழ்வைத் தகவமைத்துக் கொள்ள நேர்ந்த சிறுநிகழ்வுகளையும் நேர்மையாக பதிவு செய்திருந்தான். மத்திய சட்டசபையில் குண்டு வீசியதற்காக கைது செய்யப்பட்ட ஒரு பஞ்சாபி இளைஞன் என்று பத்திரிகைச் செய்திகளில் அடிபடத் தொடங்கிய ரஞ்சித், விசாரணை முடியும் தருவாயில் உலகப் புரட்சி இயக்கங்களின் ஆதர்ஷநாயகனாய் வீறு கொண்டெழுந்தது எவ்வாறு என்பதை வாசிப்பினூடே கண்டனர் இப்பெண்கள். இயக்கத்தின் போக்கில் வளர்ந்தெழுந்த அவனது ஆளுமை, காலங்களைத் தாண்டி கொண்டாடப்படுவதற்கான முன்குறிப்புகளை உள்ளடக்கியிருந்தது சுயசரிதை. ஆனால் ரகசியம்போல் பொதித்துவைத்திருக்கும் அதை யெல்லாம் தன் நினைவுக்குள்ளிருந்து உருவியெடுத்து எதிரிலிருக்கும் இந்த சின்னப்பெண்ணிடம் தந்துவிடுகிற வலு தன் மனதுக்கில்லை என்பதை கிழவி உணர்ந்திருந்தாள். அதே நேரத்தில் ரஞ்சித்தின் நூற்றாண்டு தொடங்கும் இத்தருணத்தில் அவனை மிகுந்த அர்த்தத்தோடு முன் வைக்கத் துடிக்கும் மெஹர்மீது அவளுக்கு அனுதாபமும் பெருகியது. இளம்பிராயத்து நந்தினி தனக்குள்ளிருந்து எழுந்துவந்து எதிரில் நின்று வேண்டுவதைப் போலிருந்தது அவளுக்கு மெஹரைப் பார்க்க. உன்னை ஏமாற்ற மனமில்லையடிப் பெண்ணே, உனக்கு ஏதாவது செய்தாக வேண்டும்... என்னை எழுப்பி உட்கார வை.. என்றாள். 5. நடுங்கும் கரங்களால் புத்தகங்களை தடவிப் பார்த்த நந்தினியம்மாள் அவற்றை நெஞ்சின்மீது கிடத்தி கண்களை மூடிக்கொண்டாள். அவளுக்கு அழவேண்டும் போலிருந்தது. அவள் மனவோட்டத்தை மாற்றும் பதற்றத்தோடு ஒரு புத்தகத்தின் முன்னுரையை இவளுக்கு வாசித்துக் காட்டத் தொடங்கினாள்- ‘ரஞ்சித்தின் தோழியும் கவிதாயினியுமான நந்தினியம்மாள், அவனது கையெழுத்துப்படிவத்தை தட்டச்சு செய்ததின் ஒரு பிரதியை இத்தனைநாளும் தன் தலையணை உறைக்குள் பாதுகாத்து என்னிடம் தந்திருக்கா விட்டால் இந்நான்குப் புத்தகங்களும் உலகத்திற்கு கிடைத்திருக்காமல் போயிருக்கும்.... ’ இடைமறித்த நந்தினி, இதுவொன்றும் தன் இறுதி லட்சியமல்ல என்றும் அவன் ஆசைப் பட்டதுபோல ஒவ்வொரு தெருமுனையிலும் அடுப்படியிலும் கோதுமை வயல்களின் வரப்புகளிலும் மலையிலும் பள்ளத்தாக்குகளிலும் ஆலைச் சங்கைவிட உரத்தஒலியோடு இந்நூல்களின் ஒவ்வொரு வரியும் வாசிக்கப்பட வேண்டும். அவை ஒவ்வொருவர் உணர்விலும் கலக்கிறபோது ஆயிரங்கால் தேரேறி வரும் சூரியனைப்போல ரஞ்சித் மீண்டும் வந்துவிடுவான்தானே என்றாள். ஆம் என உறுதியளிக்கும் திடத்தை தனக்குள் தேடிக்கொண்டிருக்கிறாள் மெஹருன்னிசா. பெட்டிச்செய்திகள் பற்றிய குறிப்புகள்: 1. காங்கிரசாரை பகடி செய்து ரஞ்சித் எழுதிய, "உடல் பொருள் ஆவி மற்றும் அந்த ஆவியில் அவித்த புட்டு" என்கிற அங்கதக் கட்டுரையிலிருந்து 2. வெடிகுண்டின் வழிபாடு என்ற காந்தியின் கட்டுரைக்கு வோரா எழுதிய பதிலில் எடுத்தாளப்பட்ட ரஞ்சித்தின் வரிகள். லக்னோவின் அமினாபாத்தில் இருந்த பதுங்கிடமான சாலமன் கட்டிடத்திலிருந்து எழுதி பின் இயக்கத்தின் சார்பில் அச்சானது. 3.முழுநேரப் புரட்சியாளர்களின் (Professional Revolutionaries) குறுக்கீடுகள் என்ற ரஞ்சித்தின் கட்டுரை இந்த வரிகளோடுதான் முடிகிறது. 4. ‘இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் வரலாறு’- ரஞ்சித், பக்க இலக்கம் 16 முதல் 22 வரையானதிலிருந்து (கையெழுத்தில் உள்ளவாறு) 5. காலின் கீழ் தொடங்கும் உலகம், கவிதைத்தொகுதி, நந்தினி, நூதனா பதிப்பகம், லாகூர் 6. ஊனில் கலந்தவரை உருக்கிக் கொல்வாயோ, லாகூர் பல்கலைக்கழக மாணவர் வெளியீடு 7.சாதி மற்றும் வகுப்புவெறியர்களை அடையாளம் காண்பதில் உள்ள இடர்ப்பாடுகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பிரசுரத்திலிருந்து ஓவியம்: உமாபதி http://aadhavanvisai.blogspot.com/2011/12/blog-post_15.html
 2. ஆதரம் kpயின் nerdo அமைப்பின் uk முகவர் உதயன் (kpயின் மருமகன்) croydon ல் மேசை கதிரை போட்டு office என்ற பெயரில் அந்த உளறுவாய் பேய் குந்தியிருக்கு . அதுதான் எல்லாரிடமும் ஸ்கந்தாவின் உதவியை பற்றி விளக்கமாக 70mm ல் படம் காட்டி kpக்கு ஆள் பிடிக்குது.
 3. ஓம் நம்புறம் ஸ்கந்தா ஒரு யோக்கியவாதி என்று அடுத்த gtv வெளிச்சம் நிகழ்சியில் தான் ஒரு ஊத்தமபூத்திரன் என்பதை நிருபிப்பார். யாரங்கே கொன்(ண்)று வாருங்கள் gtv தினேஸ் சை போட்டு வாங்குவதற்க்கு
 4. உங்களுக்கு களைப்பாயிருக்கா? உங்களுக்கு மட்டுல்ல..... மருத்துவரிடம் வருபவர்களில் பலர் களைப்பாயிருக்கு என்று சொல்லுவார்கள்.டொனிக் குடித்தால், அல்லது ஒரு சேலைன் ஏற்றினால் அது குணமாகிவிடும் எனப் பலரும் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையா? காய்ச்சல் வயிற்றோட்டம், வாந்தி போன்ற நோய்களால் போஷாக்கு இழந்தவர்கள் களைப்பாக இருந்தால் அது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி மிகவும் ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்கள் அல்லது அவ்வாறு பார்வைக்குத் தென்படுபவர்கள் கூட களைப்பு எனச் சொல்லிக் கொண்டு வருவார்கள். 'சத்தெல்லாம் பிழிஞ்சு எடுத்த மாதிரிக் கிடக்கு', 'உடம்புக்கு ஏலாதாம்', 'ஒண்டுமே செய்ய முடியுதில்லை' இப்படி எத்தனையோ வாசகங்கள் உதிர்த்தப்படும். வழமைபோல இயங்க முடியாதிருத்தல், ஊக்கக் கேடு, உற்சாகமின்மை, சோம்பலாக இருத்தல் போன்ற யாவும் இந்தக் களைப்பிற்குள் அடங்கும். ஆங்கிலத்தில் Fatigue என்பார்கள். ஆனால் இது நித்திரை கொள்ள வேண்டும் என்ற நிலை எனப்படும் தியக்கம் (Drowsiness) அல்ல. பெரும்பாலும் இக் களைப்பு என்பது உடலின் ஒருவித தற்காப்பு முயற்சியாகும்.. கடுமையான உழைப்பு, உளநெருக்கீடு, போதிய ஓய்வின்மை, உற்சாகமற்ற சூழல் போன்ற வேண்டாத தொல்லையிலிருந்து மீள்வதற்கு எமது உடலும் உள்ளமும் எடுக்கும் எதிர்வினைதான். போதிய ஓய்வு எடுத்ததும், நன்கு தூங்கி எழுந்ததும் அல்லது மகிழ்ச்சியான சூழல் கிட்டியதும் அது தானே மறைந்துவிடும். பெரும்பாலும் களைப்பு என்பது கடுமையான நிலை அல்ல. ஆபத்தாக இருக்காது. பயப்பட வேண்டியதும் இல்லை. மருத்துவரிடம் தெளிவாகச் சொல்லுங்கள் ஆனால் அவ்வாறு செய்தும் (போதிய ஓய்வு, நிம்மதியாக தூக்கம், மகிழ்ச்சியான சூழல்) அது மாறவில்லை எனில் மருத்துவரை நாட வேண்டிய தேவை ஏற்படும். மருத்துவரிடம் செல்ல நேர்ந்தால் களைப்பு எத்தகைய வேலைகளின் போது ஏற்படுகிறது. வேலைகளுடன் தொடர்பில்லை எனின் எந்த நேரத்தில் ஏற்படுகிறது போன்றவற்றைக் கவனித்துச் சொல்லுங்கள். காலையில் படுக்கையிலிருந்து விழித்தெழும்போதே சோர்வாக இருந்து அது நாள் முழுவதும் தொடர்ந்தால் மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கக் கூடும். மாறாக காலையில் மிக உற்சாகமாக இருந்து நேரம் செல்லச்செல்ல களைப்பு அதிகரித்துச் சென்றால் அது தைரொயிட் சுரப்பி குறைவாக வேலை செய்வதாக இருக்கலாம். அல்லது காலையில் நலமாக இருந்து சற்று நேரம் செல்ல சோர்வும் தலைவலியும் சேர்ந்து வந்தால் அது சைனஸ் நோயாக இருக்கலாம். இவ்வாறு பல நோய்களை அறிகுறிகளிலிருந்தே மருத்துவர் ஓரளவு ஊகிக்க முடியும் என்பதால் உங்கள் அறிகுறிகளை இயன்றளவு தெளிவாகச் சொல்லப் பழகுங்கள். காரணங்கள் என்ன? இரத்தசோகை எமது நாட்டிலும் மேலும் பல கீழைத்தேச நாடுகளிலும் இரத்தசோகை பரவலாக இருக்கிறது. பொதுவாக ஹீமோகுளோபிலின் அளவு ஆண்களில் 13 கிராம் (Hb 13gm) ஆகவும் பெண்களில் 12கிராம் ;(Hb 12gm) ஆகவும் இருக்க வேண்டும். இது குறைவாக இருந்தால் மூளை உட்பட உடல் உறுப்புகளுக்கு போதிய ஒட்சிசன் கிடைக்காது. இதனால் சோர்வும் களைப்பும் மந்தநிலையும் ஏற்படலாம். பிள்ளைகள் மனமூன்றிப் படிக்க முடியாது சோர்வு தடுக்கும். சுறுசுறுப்பு குறையும். இது படிப்படியாக ஏற்படும் நிலை என்பதால் நோயாளியால் புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். உடல், முகம், கண், நாக்கு போன்றவை வெளிறலாக இருப்பதை வைத்து மருத்துவரால் அறிய முடியும். சுலபமான இரத்தப் பரிசோதனை மூலம் நிச்சயமாக அறிய முடியம். சளி, பீனிசம் தூசி, காலநிலை மாற்றங்கள். கடுமையான மணங்கள், மகரந்தம், போன்றவற்றிற்கு ஓவ்வாமை உள்வர்களுக்கு அடிக்கடி சளி, தும்மல், முக்கடைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு அது சைனஸ் தொல்லையாக மாறிவிடுவதும் உண்டு. சைனசைடிஸ் என்பது மண்டை ஒட்டில் நாசிக்கு அண்மையாக இருக்கும் காற்றறைகளில் அழற்சியும் கிருமித்தொற்றம் ஏற்படுவதாகும். இவை யாவும் தலைப்பாரம், களைப்பு, சோர்வுத்தன்மை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆஸ்த்மாவும் இத்தகைய ஒரு ஒவ்வாமைச் சளி நோயே. மேலைநாடுகளில் வசந்த காலங்களில் பெரும்பாலும் காணப்படும் Hay Fever இத்தகையதே. இங்கு காலவேறுபாடுகள் தெளிவாக இல்லாத நிலையில் பலருக்கும் நாளாந்தம் தொல்லை கொடுக்கிறது. நீடித்து தொல்லை கொடுக்கும் வலிகள் மனிதர்களுக்கு பலவிதமான உடல் வலிகள் ஏற்படுகின்றன. உதாரணமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வீழ்ந்துவிட்டால் அடிபட்ட வலி தாங்க முடியாததாக இருக்கும். ஆனால் இது தற்காலிகமானது.சில நாட்களில் குணமாகிவிடும். ஆனால் வேறுபல வலிகள் வாரக்கணக்கிலோ மாதக் கணக்கிலோ அன்றி வாழ்நாள் பூராவும் தொல்லை கொடுக்கலாம். மூட்டுவாதங்கள், முள்எலும்பு நோய்கள் புற்று நோய்களால் ஏற்படுவது போன்றவை அத்தகையவை. நீண்டநாள் நீடிக்கும்போது வலிகள் மனச்சோர்வையும் களைப்பையும் ஏற்படுத்தும். மது மற்றும் போதைப் பொருட்கள் இன்று எமது சமுதாயத்தில் மதுப்பாவனை அதிகரித்து வருகிறது. போதைப் பொருட்களும் பலரை வசீகரிக்கின்றன. சிகரட்டும் இதில் அடங்கும். இவை மன உற்சாகத்தைக் கொடுக்கின்றன. ஆனால் அது போலியானது. அதாவது அதை உபயோகிக்கும்போது மட்டுமே. உபயோகிக்காதபோது சோர்வும் களைப்பும் தோன்றும். உடனேயே மீள எடுக்கச் சொல்லும். ஆனால் நாட் செல்லச் செல்ல மேலும் அதிகளவு பாவித்தாலே பழைய உற்சாகம் கிடைக்கும். நீங்கள் அவ்வாறு உபயோகிப்பவராயின் அதனை உடனே நிறுத்துங்கள். குறைத்துக் குறைத்து நிறுத்தலாம் என எண்ணினால் நீங்கள் உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றுவதாகவே இருக்கும். நீங்களாக நிறுத்துவது கடினமாக இருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள். உங்களது கணவன் அல்லது மகனது நடத்தையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால் அவதானியுங்கள். சில நேரங்களில் சோர்வும் வேறு நேரங்களில் அதிக உற்சாகமும் காணப்பட்டால் இதுவும் மது அல்லது போதைப் பொருள் காரணமாக இருக்கலாம். இப்பொழுது பல பெண்களும் இதில் அடங்குகிறார்கள். தூக்கக் குறைபாடு பொதுவாக ஒருவருக்கு தினமும் 6-7 மணிநேரத் தூக்கம் தேவை. இல்லாவிடின் மூளையால் சமாளிக்க முடியாது. ஏனெனில் நீங்கள் தூங்கும் போதுதான் மூளையானது தனக்குக் கிடைத்த தகவல்களை ஒழுங்குபடுத்திச் சேமிக்கின்றது. போதிய தூக்கம் இல்லாவிடில் அதைச் செய்ய முடியாது சோர்வுறும். தூக்கக் குறைபாடு ஏற்படுவதற்கு உங்கள் வேலைப்பளுவும் காரணமாக இருக்கலாம். அல்லது நோய்களும் காரணமாக இருக்கலாம். உடல் நோய்கள் மட்டுமின்றி மன உளைச்சல்களும் தூக்கத்தைக் கெடுக்கும். போதிய தூக்கம் என்பது படுக்கையில் கிடக்கும் நேரமல்ல. அமைதியாகத் தூங்கும் நேரம் என்பதாகும். தூக்கத்தில் மூச்சுத் திணறல் (Sleep Apnea) சிலருக்கு ஏற்படுவதுண்டு. இதை நீங்கள் உணர மாட்டீர்கள். கூடத் தூங்குபவர் நீங்கள் அமைதியாகத் தூங்குவதையும் திடீரென திணறுவதையும் அவதானிக்கக் கூடும். அவ்வாறெனில் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். Delighful drowsiness Thanks:- http://www.paintinghere.com தைரொயிட் சுரப்பி நோய்கள். தைரொயிட் சுரப்பி என்பது எமது கழுத்தில் குரல்வளையை அண்டியிருக்கும் ஒரு சுரப்பியாகும். இது தைரொஸ்சின் என்ற ஹோர்மோனைச் சுரக்கிறது. இது குறைவாகவோ அன்றி அதீதமாகவோ சுரந்தால் களைப்புச் சோர்வு, வியர்வை, குளிர் தாங்க முடியாமை, படபடப்பு, எடை குறைதல் அல்லது அதிகரித்தல் போன்ற பல்வேறு அறிகுறிகள் நோயின் நிலைக்கு ஏற்பத் தோன்றும். TSH, FT4 போன்ற இரத்தப் பரிசோதனைகள் மூலம் இதனைக் கண்டறியலாம். இப்பிரச்சனை உள்ளவர்களுக்கு சுரப்பியில் வீக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை. அதே நேரம் கழுத்தில் களலை இருக்கும் அனைவருக்கும் இந்நோய் இருக்கிறது எனவும் கருத வேண்டாம். மனச்சோர்வு பெரும்பாலானவர்களுக்கு களைப்பு என்பது மனத்தோடு சேர்ந்தது. மனச்சோர்வு (Depression) உள நெருக்கீடு (Stress) மனப் பதகளிப்பு (Anxiety) போன்ற பல்வேறு உளம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்களில் முக்கிய அறிகுறி களைப்பாகத்தான் இருக்கிறது. இதை நோயுள்ளவர்கள் உணர்வதில்லை. உடலில் உள்ள பிரச்சனைக்கு மனம் காரணமாக இருக்கும் என்பதை மருத்துவர் கூறினாலும் பலரும் ஏற்றுக் கொள்வதில்லை. 'எனக்கு ஒரு கவலையும் இல்லை. யோசனையும் இல்லை' என மறுப்பவர்கள் ஏராளம். காரணம் மனநோய்கள் பற்றி எமது சமூகத்தில் இருக்கும் தப்பான அபிப்பிராயம்தான். விசர், பைத்தியம், அங்கொடை எனப் பல பிம்பங்கள் மனநோய்கள் பற்றி அவர்களுக்கு உண்டு. வேலைத் தளத்தில் உள்ள நெருக்கீடு, பரீட்சையில் உச்ச மார்க் பெற வேண்டும் என்ற துடிப்பு, வீட்டிலும் சமூகத்திலும் நிதம் சந்திக்கும் சாதாரண பிரச்சனைகள் கூட உளநெருக்கீட்டிற்கு காரணமாகலாம் என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. எனவே நெருக்கீடுகள் உங்கள் களைப்புக் காரணமாக இருக்கலாம் என்றால் அதை உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள். அல்லது மருத்துவர் அவை பற்றி தானாக விசாரித்தால் தயங்காமல் வெளிப்படையாகப் பேசி உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயலுங்கள். வேறு தீவிர காரணங்கள் அவை தவிர பல தீவிர நோய்களும் களைப்புக்கு காரணமாக இருக்கலாம். நீரிழிவு, இருதயச் செயலிழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, ஈரல் செயலிழப்பு, சயரோகம். புற்றுநோய்கள், எயிட்ஸ் கூட காரணமாகலாம். நீங்கள் செய்ய வேண்டியது எனவே போதியளவு தூக்கம், போஷாக்கான உணவு, தினசரி உடற்பயிச்சி, அளவான வேலை, போதிய ஓய்வு, மகிழ்ச்சியான சூழலுக்கு மாறுதல், மன அடக்கப் பயிற்சி (யோகா,தியானப் பயிற்சி), போதைப் பொருள் தவிர்ப்பு போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்துப் பாருங்கள். அவ்வாறு செய்தும் உங்கள் களைப்புக் குறையாவிட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும்அவசியம். டொக்டர்.எம்.கே.முருகானந்தன் http://hainallama.blogspot.com/2011/12/blog-post_11.html
 5. வியட்நாமிய விடுதலை வீரனொருவன் அமெரிக்கப் படையிடம் சிக்கிக் கொள்கிறான். உளவுப் பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் அவன். உண்மைகள் நிறையத் தெரிந்தவன். நய மாகப் பேசி அவனை தம் வயப்படுத்த முயல்கி றார்கள். விடுதலை, இன்ப வாழ்க்கை என விரும் பும் எதானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறார் கள். ஆனால் அந்த வீரனோ உறுதி யாக நிற்கிறான், விடு தலையை விற்க மறுக்கிறான். அவனை துப்பாக்கியால் அடிக்கிறார்கள். பற்கள் உடைந்து, உதடுகள் வீங்கி, இரத்தம் வழிகிறது. “”எப்படியிருக்கிறது உன் விடு தலை?” என ஏளனமாய் கேட்கிறார்கள். அதற்கு அந்த வீரன் பதில் சொல் வான்: “”வலிக்கிறது, ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை -வெல்லவும் முடியாது.” அமெரிக்க ராணுவத் தினரின் கோபம் கிறுகிறுக் கிறது. அவனது கை, கால் விரல்களின் நகங்களை இரும்புக் குறடி கொண்டு இரத்தம் பீறிடப் பிடுங்கி விட்டு முன்னிலும் வக்கிர மாய் கேட்பார்கள் – “”இப்போ எப்படியிருக் கிறது உன் விடுதலை இலட்சியம்…?” அப் போதும் அவன் பதில் சொல்வான்: “”வலி தாங்க முடியவில்லைதான்… ஆயி னும் இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை, வெல்லவும் முடியாது”. ஆத்திரம் தலைக் கேற அவன் கால்களை அடித்தும் கைகளை திருகியும் உடைக்கிறார் கள். முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள். துப்பாக்கியை அந்த வீரனின் தலைநோக்கி நீட்டியபடியே அமெரிக் கத் தளபதி பைத்தியம் தலைக் கேறியவனாய் கத்துவான் – “”நாயே… சாகப்போகிறாய்… இப் போதுகூட உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விருப்பமில் லையா?” உச்ச வேதனையினூடே யும் முகம்மலர சாந்தம் வருவித்துக் கொண்டு அந்த வீரன் தன் இறுதி வார்த்தைகளாகச் சொல்வான். “”ஐயா… உங்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சில நொடிகளில் நான் கொல்லப்படுவேனென்பதும், மரணம் என் அருகில் நிற்கிறதென்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் வெற்றி பெற்றவனாகவே நான் போகிறேன். என்னை நீங்கள் வெல்ல வில்லை. உயிர் பிரியும் வேளையிலும் என் இலட்சியத்தை நீங்கள் காட்டும் எச்சில் சுகங்களுக்காய் விற்பதாக இல்லை. என்னைச் சுடும் அக் கணத்தில் உங்கள் படுதோல்வி முழுமையாகும்” என கூறிக் கொண்டே “சுடுக’ என்கிறான். நன்றி http://actorvikram.blog.com/2010/06/
 6. மாத்தியோசி கலக்கல் கதைகள் -எந்த விடயத்தையும் வித்தியாசமாய் சிந்தியுங்கள் ஒரு அரசு கட்டிடத்தின் படிகளில் கண் பார்வை இழந்த சிறுவன் பிச்சைக்காக அமர்ந்திருந்தான்.அவன் காலடியில் இருந்த தொப்பியில் சில சில்லறை காசுகளே சேர்ந்திருந்தன.கூடவே ஒரு அறிவிப்பு பலகை " நான் பார்வையற்றவன்" தயவுசெய்து எனக்கு உதவுங்கள் என்கிறது. அவ்வழியாக கடந்து போன சான்றோர் ஒருவர்,தொப்பியில் கொஞ்சம் காசு போடுகிறார்.அந்த அட்டையை எடுத்து,திருப்பி அதில் ஏதோ எழுதுகிறார். இப்போது அதை கடந்து போகும் அனைவரும் காசு போடுகின்றனர். தொப்பியும் நிரம்பி வழிகிறது. சிறுவனுக்கோ மிகவும் சந்தோஷம். மதிய உணவு வேளையின் போது அந்த சான்றோர் அங்கு வர இவன் காலடி சத்தத்தை வைத்து அவரை கண்டுபிடிக்கிறான். அவரிடம் ஐயா ,இன்று காலை நீங்கள் தானே அந்த அட்டையில் ஏதோ எழுதியது? இவ்வளவு காசு சேரும் படி அதில் என்ன எழுதினீர்கள்?என வினவ. அவர்,தம்பி நான் அதில் உண்மையைத்தான் எழுதியிருந்தேன். என்ன ,அதை கொஞ்சம் புதுமையாக சொல்லியிருந்தேன். இது தான் அந்த வாசகம் "இன்று மிக அழகிய நாள்,ஆனால் என்னால் அதை காண முடியாது" முதல் வாசகத்திற்கும் இரண்டாம் வாசகத்திற்கும் என்ன வித்தியாசம்?என்கிறீர்களா? ஆம் இரண்டும் சிறுவன் பார்வையற்றவன் என்ற உண்மையை தான் சொல்கிறது.முதல் வாசகம் மக்களிடம் காசு போட்டு உதவுங்கள் என சொல்கிறது. ஆனால் இரண்டாம் வாசகம் இன்றைய நாளின் அழகை கடந்து செல்பவர்கள் அனுபவிக்க முடியும்,ஆனால் சிறுவனால் முடியாது என சொல்கிறது. முதல் வாசகம் சிறுவன் பார்வை அற்றவன் என்றும் இரண்டாம் வாசகம் கடந்து செல்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்,அவர்களால் பார்க்க முடியும் என்றும் . இந்த சிறு கதையின் மூலம் நாம் இரண்டு பாடங்களை கற்றுக் கொள்ளலாம். ஒன்று :-புதுமை செய்,எல்லா செயல்களுக்கும் சிறந்த மாற்று வழி ஒன்றிருக்கும்,அதில் முயற்சி செய்.மொத்தத்தில் மாத்தியோசி இரண்டு:-கிடைத்ததை மகிழ்ச்சியாக மதித்து ஏற்றுக்கொள். அது கூட இல்லாதார் எத்ததனை பேருண்டு உலகில்? இல்லாதாருக்கும்,தேவை உள்ளோருக்கும் உன்னால் முடிந்த உதவியை செய். என்பது தான் அது இந்த கதைக்கு மாத்தி யோசி என்று பெயர் சூட்டிய வடலூரார் கலையரசனுக்கு நன்றி.நண்பர்களே தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி. இது நகல். இது அசல். Stories that stir There is always a better way A blind boy sat on the steps of a building with a hat by his feet. He held up a sign which said: “I am blind, please help.” There were only a few coins in the hat. A man was walking by. He took a few coins from his pocket and dropped them into the hat. He then took the sign, turned it around, and wrote some words. He put the sign back so that everyone who walked by would see the new words. Soon the hat began to fill up. A lot more people were giving money to the blind boy. That afternoon the man who had changed the sign came to see how things were. The boy recognized his footsteps and asked, “Were you the one who changed my sign this morning? What did you write?” The man said, “I only wrote the truth. I said, what you said but in a different way.” What he had written was: “Today is a beautiful day and I cannot see it.” Do you think the first sign and the second sign were saying the same thing? Of course both signs told people the boy was blind. But the first sign simply told people to help by putting some money in the hat. The second sign told people that they were able to enjoy the beauty of the day, but the boy could not enjoy it because he was blind. The first sign simply said the boy was blind. The second sign told people they were so lucky that they were not blind. Should we be surprised that the second sign was more effective? There are at least two lessons we can learn from this simple story. Be innovative. Think differently. There is always a better way! The second is: Be thankful for what you have. Someone else has less. Help where you can make it great for the needful. Thanks http://geethappriyan.../blog-post.html
 7. எப்போதோ படித்த நகைச்சுவை."எங்கப்பாவுக்கு முடி வெட்ட நூறு ரூபா வாங்கினாங்கடா!" " ஆமாம் ,ஒவ்வொரு முடியா தேடி வெட்டுறது கஷடமில்லையா? முடி கொட்டுவது அதிகரித்துவிட்டது என்பதை தோல் சிகிச்சை நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.முடி வெட்டுபவர் ஒருவர் சொன்னார்,''தலையில முடியே இருக்கமாட்டேங்குது சார்,கையில புடிச்சா நாலுமுடிதான் கிடைக்குது''. ஆனால் இது வழுக்கைத்தலை இல்லை. வழுக்கை என்பது பெரும்பாலும் பரம்பரையாக வரும் விஷயம்.முடியின் அடர்த்தி குறைந்து வருவதற்கான காரணங்களில் இன்றைய வாழ்க்கைமுறைக்கு பங்கு அதிகம்.தினமும் குறிப்பிட்ட அளவு முடி கொட்டி வளர்ந்து கொண்டிருப்பது அதன் இயல்பு.ஆனால் விளம்பரங்களில் வருவது போன்று சிலருக்கு சீப்பு முழுக்க ஒட்டிக்கொண்டு வரும்.முதல் காரணமாக மன நலத்தைச் சொல்லலாம். இன்று அதிகரித்து வரும் மன அழுத்தம் உடல் நலத்தை சிதைத்து வருகிறது.உடல் நலமும் மன நலமும் கெட்டால் தோலை அதிகம் பாதிப்பதால் முடி கொட்டுகிறது.அன்றாடம் நேரும் மனதுக்கு பிடிக்காத சூழ்நிலைகள் மனதிலும்,உடலிலும் பெரும் தாக்குதலை தொடுக்கிறது.ஹார்மோன்களில் பெரும் மாறுபாட்டை கொண்டு வருகிறது.ஏதேதோ நெருக்கடிகளால் சரியாகத் தூங்க முடியாத இரவுகளுக்கு அடுத்த நாள்களில் அதிகம் முடி கொட்டுவதை நீங்கள் பார்க்க முடியும். அடுத்ததாக அவரவர் முடிக்கு ஏற்ப ஷாம்புகளை உபயோகிப்பது.மருத்துவர் பரிந்துரையாக இருந்தால் நல்லது.அடிக்கடி ஷாம்புவை மாற்றுவதும்,நாம் பயன்படுத்துவது அப்போதைக்கு இல்லாவிட்டால் ஏதோவொன்றை வாங்கி பயன்படுத்துவதும் முடியின் ஆரோக்கியத்தை கெடுக்கும்.பொடுகுத்தொல்லை அதிகம் இருந்தாலும் முடி உதிரும்.இவற்றைப் போக்க நல்ல மருந்துகள் இருக்கின்றன.சில மருந்துகளும் முடியை பாதிக்கும். ஹார்மோன் கோளாறுகள் உள்ளவர்களுக்கு முடி கொட்டுவது இயல்பு.இதெல்லாம் மருத்துவக் காரணங்கள்.நம்முடைய தவறுகளால் முடியை இழப்பது என்பது போதுமான வைட்டமின்கள்,தாதுக்கள்,புரதங்கள் சேர்க்காத நிலையில் ஏற்படும்.உயிர்ச்சத்து அதிகமுடைய பழங்கள்,காய்கறிகளை சேர்ப்பது,போதுமான அளவு நீர் அருந்துவது,எட்டுமணி நேர தூக்கம் போன்றவை முடிக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை காக்கும். இரும்புச்சத்து பற்றாக்குறை முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லாவிட்டால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.பேரீச்சம்பழம்,அசைவ உணவுகள்,வெல்லம்,முருங்கைக்கீரை போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. இச்சத்து உடலில் சேர உணவு உண்ட ஒருமணி நேரத்திற்காவது காபி,தேநீர் தவிர்க்கலாம்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு போன்ற சி வைட்டமின் கொண்டவை இரும்புச்சத்து உடலில் கிரகிக்க அவசியம். http://counselforany.blogspot.com/2011/11/blog-post_27.html
 8. நீ இல்லை என்று தான் எனக்கு சொல்லிக் கொள் (ல்) கிறார்கள் நானும் இல்லை என்றே சொன்னேன் உன்னையல்ல அவர்கள் சொன்ன சொல்லை இன்று ஏனோ என் மனம் தவிக்கிறது இத்தனை நாளாய் தேடியும்...???? உள்மனம் சமூகச் சொல்லை ஏற்க விளைகிறது. இந்த மண் - உன்னை விழுங்கிய நாளை மறந்திருக்கும் ஏனென்றால் அது உன்னை மட்டும் விழுங்கலியே. ********************************* ஊரறிந்த ஒரு நாளில் ஒரு தீபமேற்ற வழியில்லை தெருவில் சிலர் உன்னை சூடு வைத்த எழுத்தாணியுடன் பார்த்து நிற்கிறார்கள். நான் பொதுவாய் ஒரு தீபமேற்றுவேன் “அம்மா பெரியறை விளக்கை நானே வைக்கிறேன்” யாரோ என்றோ கண்டதாய் சொன்ன கடவுளுக்கு என்றும் தீபம் வைக்கிறோம் நேரில் கண்ட கடவுளர்க்காய் ஒரு நாள் வைத்தாலென்ன...???? அம்மா வாயடைத்து நிற்கிறாள். குறிப்பு - தயவுசெய்து கருத்துக்களை நான் இருக்கும் இடம் அறிந்து பிரசவியுங்கள். Thanks http://www.mathisutha.com http://www.mathisutha.com
 9. தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு. அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா? Image credit: www.flickr.com அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டுமாம். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடுமாம். இதை நான் எத்தனையோ தரம் முயற்சி செஞ்சி பார்த்திருக்கேன். பலன் என்னவா இருக்கும்னு நினைக்கிறீங்க…..? வேற ஒன்னுமில்ல, குழப்பம்தான்! அட ஆமாங்க, சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்கள்ல 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக்கூட தூக்கமே வராது. இப்படியானா குழப்பம் வராம என்ன செய்யும் சொல்லுங்க….? சரி இப்படி வேற எதாவது யுக்திகள் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. அடுத்த முறை முயற்சி பண்ணி பார்க்குறேன். ஆனா, இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பத்தியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியல் பொருட்களையும் பத்தி விளக்கமா தெரிஞ்சிக்கலாம் வாங்க…… செர்ரி பழங்கள்! “இத பார்த்த உடனே, ரெண்டு எடுத்து சாப்பிடனும்போல இருக்கே” அப்படீங்கிற மாதிரி இருக்குற செர்ரி பழங்களுக்கும், உறக்கத்துக்கும் ஒரு ரகசிய உறவிருந்தது இதுவரைக்கும் எனக்கு தெரியாமப்போச்சு! என்ன….., உங்களுக்குமா? “என்னது செர்ரி பழத்துக்கும் உறக்கத்துக்கும் சம்பந்தம் இருக்கா?” அப்படீன்றீங்களா…..? அட ஆமாங்க! நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது, நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும்/தூண்டும் திறனுள்ள மெலடோனின் (melatonin) அப்படீங்கிற வேதியல் பொருளின் இயற்கை உறைவிடம்தான் நம்ம செர்ரி பழங்கள். செர்ரி பழங்களில் மிக அதிக அளவில் மெலெடோனின் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால, இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவும், பயணங்களின்போதும் கொஞ்சம் செர்ரி பழங்களைச் சாப்பிட்டீங்கன்னா, இந்த தூக்கமானது “எங்கே எங்கே” அப்படீன்னு உங்கள தேடிகிட்டு வந்துடும்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! சாப்பிட்டுதான் பாருங்களேன்….. வாழைப்பழம்! ஏன்னா, இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நெறைய இருக்குதாமாம். அதுமட்டுமில்லாம, எல்-ட்ரிப்டோபான் (L-tryptophan) அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குதாம். இந்த அமினோ அமிலமானது மூளைக்குள்ளே அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிடும். அதன்பிறகு இந்த 5-HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும். மெலடோனின் என்ன செய்யும்னுதான் உங்களுக்கு இப்போ நல்லாத்தெரியுமே! அதனால இனிமே தூங்க போறதுக்கு முன்னாடி மறக்காம ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க, சரியா? டோஸ்ட்! நாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! ஆனா எனக்குதான் இது நம்புற மாதிரி இல்ல….. என்ன உங்களுக்குமா? சரி விடுங்க, நம்ம சந்தேகத்தை நிவர்த்தி பண்றமாதிரியான விஞ்ஞானப்பூர்வ விளக்கங்களா இந்த விஞ்ஞானிங்க என்னதான் சொல்றாங்கன்னு பார்த்துடுவோம். அதாவது, மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டுகிறதாம். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாம். எப்படின்னா, இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோபான் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச்செய்யும் சமிக்ஞைகளை உருவாக்குகிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது! ஓட் மீல்! இந்த ஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்கா காரைங்க ஓட் மீல் அப்படீங்கிறாய்ங்க! ஆமா, உங்கள்ல (வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள்) எத்தன பேரு ஓட்ஸ் கஞ்சி அல்லது ஓட்ஸ்+பால் சாப்பிடுறீங்க? கண்டிப்பா, மிக குறைவான எண்ணிக்கையிலான இந்தியர்கள், குறிப்பா தமிழர்கள்தான் ஓட்ஸ் சாப்பிடுறாங்கன்னு நெனக்கிறேன்?! ஏன்னா, ஒரு நீயா நானா விவாதத்துல பார்த்தேன். சரி அத விடுங்க, நாம மேட்டருக்கு வருவோம்….. அதாவது, மேலே சொன்ன டோஸ்டு மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் ரத்தத்துல இருக்குற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி, அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட, அதன் விளைவாக உறக்கம் தூண்டும் மூளை ரசாயனங்கள் சுரந்து, கடைசியா….. “உறக்கம் உன் கண்களை தழுவட்டுமே…… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே……”அப்படீன்னு நாம தூங்கிடலாம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள். (முக்கியமா ஓட்ஸுலயும் மெலடோனின் அதிகமா இருக்குதாமாம்!) என்ன முயற்சி செஞ்சி பார்க்குறீங்களா? கதகதப்பான பால்! உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில நாம இன்னிக்கு பார்த்த, மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான். இல்லீங்களா? ஆனா, கதகதப்பான பால் மட்டும் பழசுன்னு நெனக்கிறேன். ஆமாங்க, சின்ன வயசுலேர்ந்து “ஒரு டம்லர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும்” அப்படீன்னு சொல்லிதான் நமக்கெல்லாம் அம்மா காய்ச்சின பாலை கொடுத்திருப்பாங்க, இல்லீங்களா? ஆனா, நம்ம அம்மாவுக்கு அந்த பால்ல இருக்குற எந்த வேதியல் மூலப்பொருள் காரணமா நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை! இப்போ அம்மாவா இருக்குற உங்கள்ல பலருக்கு அந்த வாய்ப்பு நம்ம விஞ்ஞானிகள் மூலமா கிடைச்சிருக்கு. ஆமாங்க, வாழைப்பழத்துல இருக்குற எல்-ட்ரிப்டோபான் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறதாம். அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமா உறக்கம் வரவைக்குதாம். அதுமட்டுமில்லாம, பாலில் அதிக கால்சியம் இருப்பது உங்களில் பலருக்கு தெரியும்னு நெனக்கிறேன். இந்த கால்சியமும் உறக்கத்தை தூண்டும் அப்படீங்கிறாங்க விஞ்ஞானிகள்! ஆக, உறக்கம் நல்லா வரனும்னா இனிமே யாரும் தூக்க மாத்திரைகள சாப்பிடாதீங்க. அதுக்கு பதிலா மேலே சொல்லியிருக்குற ஐந்து வகையான இயற்கை உணவுகளை சாப்பிட முயற்சி பண்ணுங்க, சரிங்களா? ஏன்னா, அவசியமில்லாம மாத்திரைகள சாப்பிடுறது உடலுக்கு கேடுதான்! என்னங்க, திடீர்னு எல்லாரும் காணாமப் போய்ட்டீங்க? ஓ……செர்ரி பழங்கள்ல ஆரம்பிச்சி பால் வரைக்கும் வீட்ல இருக்குதான்னு தேட ஆரம்பிச்சிட்டீங்களா? சரி சரி, இதையெல்லாம் சாப்பிட்டு நல்ல உறங்கி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்குங்க……! நான் போய்ட்டு வரேன்……. http://padmahari.wordpress.com/
 10. உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்: * தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும். * எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். * வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும். * இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும். * உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது. * மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும். * அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான். * புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள். பழங்கள் சாப்பிடும் முறை: * காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். * இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும். * சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். * உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும். * பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு. * பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும். http://puthiyavasantham.blogspot.com/2011/11/blog-post_23.html
 11. டாக்டர் K.M.முருகானந்தம், கொழும்பு (ஸ்ரீலங்கா) நகரைச் சேர்ந்தவர். எனக்கு முகநூல் நண்பர். டாக்டர் முருகானந்தம் அவர்கள் நிறைய நோய்கள் பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறார். எனது வேண்டுகோளுக்கிணங்க அவரது பதிவுகளை எனது பதிவில் வெளியிட அனுமதி கொடுத்திருக்கிறார். எனவே அவரது ஆஸ்த்மா பற்றிய கட்டுரையை வெளியிடுகிறேன். டாக்டர் முருகான்ந்தம் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி. அவரது நண்பர் திரு கண்ணன் சங்கரலிங்கம் மூலம் முதன்முதலில் தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆஸ்த்மா கலங்க வேண்டிய நோயல்ல 'கறுமவியாதி, எனக்கு வந்து கழுத்தறுக்கிறது" என பக்கத்துவீட்டு செல்லம்மா பாட்டி அங்கலாய்க்கிறாள். குளித்ததால் வந்ததா? முழுகியதால் வந்ததா எனக் காரணங்களைத் தேடி களைத்துப் போனார் எதிர்வீட்டு சலீம் நானா. வாழைப்பழம், மோர், தயிர், வெண்டிக்காய் என ஒவ்வொன்றாகத் தவிர்த்து கடைசியாக இப்பொழுது சுட்டு ஆறிய நீரைத் தவிர வேறெதுவூம் சாப்பிட முடியாத பத்தியத்தில் திணறுகிறாள் மேரி. சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து இவர்கள் எல்லோரையும் தொல்லைப்படுத்துவது இந்த ஆஸ்த்மா நோய்தான். இன்று பரவலாக உலகெங்கும் மனித இனத்தை தொல்லைக்கு உள்ளாக்கும் நோய்களில் முக்கியமானவற்றில் இதுவும் ஒன்று. இழுப்பு, முட்டு, வீஸிங், ஆஸ்த்மா, தொய்வு, எனப் பலரும் தமது நோயை வெவ்வேறு பெயர்கள் கொடுத்து அழைத்தாலும் அடிப்படை நோய் ஒன்றுதான். ஆஸ்த்மா என்பது ஒரு கிரேக்கச் சொல்லாகும். அது மூச்சு வாங்குவதைக் குறிக்கும். கைத்தொழில் நாடுகளில் 2 முதல் 6 வீதமான பெரியவர்களையும், 15 முதல் 20 வீதமான குழந்தைகளையும் இது அல்லற்படுத்துகிறதாம். அமெரிக்காவில் மாத்திரம் 14 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் இந் நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் குழந்தைகள் ஆவார். அதிலும் வெள்ளை இன மக்களை விட கறுப்பின மக்களை அதிகமாகத் தாக்குவதாக தரவுகள் கூறுகின்றன. அத்துடன் இந்நோயால் பீடிப்பவர்கள் தொகை வருடாவருடம் அதிகரித்து வருகிறது. அதிலும் முக்கியமாக குழந்தைகளை மேலும் அதிகமாக பீடிக்கிறது. உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 180,000 பேர் ஆஸ்த்மா நோயினால் மரணமுறுகிறார்கள் என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய செய்தியாகும். இலங்கையில் 2000ம் ஆண்டில் மட்டும் 1024 பேர் ஆஸ்த்மா நோயினால் இறந்திருப்பதாக அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் உண்மையில் இத்தொகை மேலும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஏனெனில் மேலைத்தேய வைத்திய முறையில் மட்டும் அல்லாது சித்த, ஆயுர்வேத. மற்றும் கைவைத்தியங்களும் செய்யப்படுவதால் ஆஸ்மாவிலான பல இறப்புகள் பதிவுக்கு ஆளாகாமல் தவறியிருக்கும். வாகனங்களின் புகையும் தொழிற்சாலைகளின் அழுக்குக் காற்றும் தூசியும் தங்குதடையின்றி காற்று மண்டலத்தில் கலக்கும் எம்மைப்போன்ற வளர்முக நாடுகளில் இந்நோயின் தாக்கம் மிகமிக அதிகம். இலங்கையில் பாடசாலை செல்லும் குழந்தைகளில் 10 முதல் 15 விகிதமான குழந்தைகள் ஆஸ்த்மா நோயினால் தொல்லைப்படுகிறார்கள். இங்கு ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் ஆஸ்த்மா நோயினால் துன்புறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆம் வழி மண்டலம் மாசடைதல் இந்நோய்க்கு ஒரு முக்கிய காரணம்தான். எமது வாழ்கை முறை மாற்றங்களும், நவீன வீடுகளின் அமைப்பும், துரித தொழில் மயமாக்கலும் இந்நோய் அதிகரிப்பதற்கு ஏனைய காரணங்களாகும். இந்நோய்க்கு சூழல் மாத்திரம் காரணம் என்று சொல்ல முடியாது. பரம்பரைக் காணங்களும் முக்கியமானவையே. உங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு இந்நோய் இருந்தால் அல்லது அவர்களுக்கு எக்ஸிமா, தும்மல், மூக்கடைப்பு, கண்கடி போன்ற அலர்ஜி சம்பந்தமான நோய்கள் இருந்தால் உங்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்பு ஏனையவர்களைவிட பத்து மடங்கு அதிகமாகும். ஆயினும் ஆஸ்த்மா எப்பொழுதும் பரம்பரையில் வரும் என்றும் சொல்ல முடியாது. நோயால் வரும் துன்பம் ஒருபுறமிருக்க அந்நோய் நோயைப் பற்றிய தவறான கருத்துகளால் கலங்குபவர்கள்தான் இன்னும் அதிகம்தான். ஆஸ்த்மா எத்தகைய நோய் உண்மையில் ஆஸ்த்மா என்றால் என்ன? அது வருவதற்கான காரணங்கள் என்ன? காரணம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, அது வராமல் தடுக்கும் வழி என்ன? இவை தானே உங்கள் கேள்விகள்? ஆஸ்த்மா என்பது சுவாசக் குழாய்களை பீடிக்கும், நீண்டகாலம் தொடரும் (Chronic) ஒரு நோயாகும். இந் நோயுள்ளவர்களின் சுவாசப்பைக்கு காற்றை எடுத்துச் செல்லும் பாதையானது அழற்சியடைகின்றது. சுவாசப் பாதை என்பது மூச்சுக்குழாய் (Trachea), மூச்சுச்சிறுகுழாய்(Bronchi) போன்றவற்றை உள்ளடக்குவது. இதன்போது அவை சிவந்து, வீக்கமடைகின்றன. அத்துடன் அவற்றைச் சுற்றியிருக்கும் சிறுசதைகள் இறுக்கமடைகின்றன. இதனால் சுவாசப்பாதை சுருங்குகிறது, காற்று சென்று வருவதற்கான பாதை ஒடுங்கிவிடுகிறது. அத்துடன் மேற் கூறிய அழற்சி காரணமாக சுவாசப் பாதையில் உள்ள கலங்கள் வழமையை விட அதிக சளியைச் சுரக்கின்றன. இச்சளியானது தடிப்பும், விடுபடாது இழுபடும் தன்மையும் கொண்டது. இச் சளித்துளிகள் சுவாசப் பாதையை மேலும் அடைக்கின்றன. இவற்றால் மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இது இழுப்பு அல்லது இருமலாக வெளிப்படும். ஆஸ்த்மா என்பது மூச்செடுப்பதில் சிரமமாகும். இது இழுப்பாக, முட்டாக அல்லது தொடர்ந்த இருமலாக வெளிப்படலாம். இதற்குக் காரணம் சுவாசக் குழாயின் காற்று செல்லும் பாதை சுருக்கமடைவதாகும் என அறிந்தோம். சளி சுலபமாக வெளியேற முடியாவிட்டால் என்ன நடக்கும்? அதை வெளியேற்ற எமது சுவாசத் தொகுதி முயலும். அந்த முயற்சிதான் தொடர்ச்சியான இருமலாக வெளிப்படுகிறது. பலருக்கு இந்த தொடர்ச்சியான இருமல்தான் ஆஸ்த்மாவிற்கான முக்கிய அறிகுறியாகும். பல குழந்தைகளிலும் சில பெரியவர்களிலும் இரவு இருமல் பெரும் தொல்லை கொடுப்பதாக இருக்கிறது. தனியான இரவு இருமல் மாத்திரமே இவர்களுக்கு ஆஸ்த்மாவிற்கான முதல் அறிகுறியாக இருப்பதுண்டு. அதிலும் முக்கியமாக அந்த இருமலானது அதிகமாயிருந்து ஒருவரை நித்திரை விட்டு எழும்பச் செய்கிறது எனில் அது ஆஸ்த்மாவாக இருக்கலாம். எனவே உங்கள் குழந்தைக்கு அடிக்கடி, அல்லது குறிப்பட்ட ஒரு நேரத்தில் (உதா - காலை அல்லது இரவு), அல்லது தொடர்ச்சியாக இருமல் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். குழந்தைகளுக்கு மட்டுமின்னிறப் பெரியவர்களுக்கும் இது பொருந்தும். ஆஸ்த்மா நோயின் அறிகுறிகள் ஆஸ்த்மா நோயின் அறிகுறிகள் என்ன? இவை ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆயினும் முக்கிய அறிகுறிகளாக இவற்றைக் கூறலாம். 1. இருமல்- இது சுவாசத் தொகுதி நோய்கள் அனைவற்றுக்கும் பொதுவானது. ஆயினும் ஆஸ்த்மாவின் இருமல் தொடர்சியானது. அல்லது குறிப்பட்ட ஒரு நேரத்திலும் வரலாம். 2. இழுப்புச் சத்தம்- முச்சு விடும்போது விசிலடிப்பது போன்ற சத்தம் உண்டாவது. இது இந்நோய்க்கே பிரத்தியேகமான அறிகுறியாகும் 3. நெஞ்சில் இறுக்கம். உங்கள் மார்பு மேல் பாரம் ஏற்றியது போன்ற அல்லது உங்கள் மாh;பு மேல் யாரோ ஏறி இருப்பது போன்ற உணர்வு 4. இளைப்பு- மூச்சு விடுவதில் சிரமம் இருமலைத் தவிர நெஞ்சு இறுக்கமும், முச்சு விடுவதில் சிரமும் தொடரலாம். சுவாசிக்கும்போது நெஞ்சில் ஒரு சத்தமும் இசைக்க ஆரம்பிக்கக் கூடும். இதைதான் ஆஸ்த்மாவின் இராகம்| என ஒரு கவிஞர் பாடினார். சில தருணங்களில் இந்த அறிகுறிகள் கடுமையாக இருக்காது. தானாகவே குணமடையக் கூடும். அல்லது சில மருந்துகளுடன் குணமடையக் கூடும். மாறக வேறு தருணங்களில் அறிகுறிகள் தணியாது வர வர மோசமாகக் கூடும். அவ்வாறு அதிகரித்தால் அதனை கடுமையான நிலை(flareups or exacerbations) என்பார்கள். ஆஸ்த்மாவைத் தூண்டுபவை எவை? ஆஸ்த்மா என்பது சுவாசக் குழாயில் ஏற்படும் ஒருவித அழற்சி என்றோம். இந்த அழற்சி எதனால் ஏற்படுகிறது? ஆஸ்த்மா நோயளர்களின் சுவாசத் தொகுதியானது மிகவும் நொய்மையானது. மற்றவர்களுக்கு எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாத சூழலிலுள்ள சாதரண பொருட்களும், அசாதாரண நிலைகளும் இவர்களது சுவாசத் தொகுதியைத் தூண்டி மூச்சுத் திணற வைத்துவிடக் கூடும். நோயைத் தூண்டும் காரணிகளை மருத்துவத்தில் Trigger factors என்பார்கள். ஓவ்வாமையை ஏற்படுத்தும் பல பொருட்கள் இவ்வாறு தூண்டிகளாகவும் செயற்படும். பெனிசிலின் மருந்து பலருக்கு ஒத்துக் கொள்வதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதனால்தான் டெஸ்ட் ஊசி போட்டுப் பார்த்த பின்னரே முழுமையான ஊசியைப் போடுவதையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இந்த பெனிசிலின் மருந்துதானது ஊசியாக ஏற்றப்பட்டால் மாத்திரம் அன்றி மாத்திரைகளாக உட்கொள்ளப்பட்டாலும் பலரில் ஆஸ்த்மாவை தூண்டிவிடும். குழந்தைகளிலும் சில பெரியோர்களிலும் தடிமன் போன்ற வைரஸ் தொற்று நோய்கள் சிலவேளை இழுப்பைத் தூண்டிவிடும். வேறு சிலரில் சில்லென விசும் குளிர் காற்று ஆஸ்த்மாவைக் கிளப்பிவிடும். குளிரூட்டப்பட்ட அறைக்கு உள்ளும் வெளியேயும் ஓடித் திரியும் சிலருக்கு சூழலின் வெப்பமாற்றங்கள் ஆஸ்த்மா தூண்டப்படுவதற்குக் காரணமாகின்றன. பக்தி மணத்தைத்| தூண்டும் ஊது பத்தியின் வாசனையும், மிளகாய்ப் பொரியலும், உணவு தாளிக்கும் மணமும் கூடச் சிலருக்கு ஆஸ்த்மாவை வெடித்துக் கிளப்பி விடும். காதலியின் உடல் வாசனை இயற்கையானதா, செயற்கையானதா என நுனி மூக்கால் முகர்ந்து ஆராயப் புகுந்த சினிமாத்தனமான காதலன் அவளின் சென்ட் வாசனையால் ஆஸ்த்மா வெடித்துக்கிளம்ப ஆளைவிட்டால் போதும் என ஓடித் தப்பியது கட்டுக் கதையல்ல. ஆம்! கடுமையான எந்த மணமும் ஆஸ்த்மா தொடங்குவதற்குக் காரணமாகலாம். கனடாவிலிருந்து வந்த ஒருவர் தனது தம்பி வீட்டிலுள்ள பொமேரியனை மடியில் வைத்துக் கொஞ்சிய கையோடு மூச்செடுக்க முடியாமல் திணறிக்கொண்டு ஓடி வந்து நெபுலைசர்(Nebuliser) பிடித்தது அண்மையில் நடந்த இன்னுமொரு உதாரணமாகும். வீட்டு செல்லப் பிராணிகளான நாய் பூனை போன்றவற்றின் தோலிலுள்ள முடிகள் ஆஸ்த்மாவைத் தூண்டும் முக்கிய காரணமாக இனங் காணப்பட்டுள்ளன. மிருகங்களின் இயற்கை முடிகள் மாத்திரமின்றி குழந்தைகள் படுக்கையில் கட்டியணைத்துக் கொண்டு உறங்கும் கரடி நாய் போன்ற பொம்மைகளில் படிந்திருக்கும் தூசிகள் பல குழந்தைகளின் ஆஸ்த்மாவிற்கான தூண்டிகளாக இருக்கின்றன. புகை பிடிக்கும் பலரின் இருமலுக்கு காரணமாக இருப்பது புகையிலையின் புகைதான் என்பதை பலரும் சுலபமாக மறந்து விடுகிறார்கள். புகைப்பவருக்கு மாத்திரமின்றி புகைப்பவரின் குழந்தைக்கும் மனைவிக்கும் கூட அவர் பரப்பும் புகை இருமலையும் ஆஸ்த்மாவை கொண்டு வரலாம். புகைத்தலை நிறுத்த இருமலும் ஆஸ்த்மாவும் பலருக்கு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பஞ்சு மெத்தையின் சூட்டினால் இருமுகிறது எனப் பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். தலையிணையிலும், மெத்தையிலும், படுக்கை விரிப்பிலும் உள்ள பஞ்சில் டஸ்ட்மைட்| (Dust mite) என்ற கண்ணுக்குப் புலப்படாத நுண்கிருமி ஒளிந்திருக்கும். இது எமது உடலிலிருந்து தினமும் உதிரும் சிறு தோல் துணிக்கைகளை உண்டு உயிர் வாழும் கிருமியாகும். இதுவும் ஆஸ்த்மாவைத் தூண்டும் முக்கிய காரணியாக இனங் காணப்பட்டுள்ளது. கரப்பொத்தான் பூச்சியின் எச்சமும் இன்னுமொரு மிக முக்கிய தூண்டியாகும். தூசிக்கும் ஆஸ்த்மாவிற்குமுள்ள தொடர்பு நன்கு அறியப்பட்டதே. தூசி தட்டினால் அல்லது அடைத்துக் கிடந்த புத்தகங்களுக்கும் ஆடைகளுக்கும் கிட்டப் போனாலே சிலருக்கு தும்மலும், மூக்கால் நீர் வடிதலும் இருமலும் தொடங்கி ஆஸ்த்மாவாக மாறித் தொல்லை கொடுக்கும். மோட்டர் சைக்கிளிலும் ஸ்கூட்டரிலும் செல்லும் பலர் முகமூடித் திருடர்கள்போல மூக்கை கைக்குட்டையால் கட்டிக் கொண்டு விரைவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். திருடன் எனப் போலிசுக்குத் தகவல் கொடுக்க ஓடுகிறீர்களா? சற்றுப் பொறுங்கள். பாவம்! முகத்துணியைக் கழற்றினால் வாகனங்கள் கிளப்பும் தூசியால் நடுவழியில் ஆஸ்த்மாவால் அவர்கள் சிரமப்பட நேரிடும். மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற மனக் குழப்பங்களும் சிலருக்கு ஆஸ்த்மாவைத் தூண்டுவதுண்டு. இவற்றைத் தவிர கடுமையான உடற்பயிற்சிகளும் காரணமாகலாம். ஓடி ஆடி விளையாடினால் சில பிள்ளைகளுக்கு ஆஸ்த்மா தொடங்கிவிடுவதுண்டு. வியர்க்கக் களைக்க விளையாடினால் உங்கள் குழந்தைக்கு ஆஸ்த்மா வருகிறது என்பதற்காக குழந்தையின் விளையாட்டை நிறுத்திவிடாதீர்கள். விளையாட்டு அவர்களின் உடல் மற்றும் மனோ வளர்ச்சிகளுக்கு மிகவும் அவசியாமனது. ஆஸ்த்மாவைத் தடுப்பதற்கான மருந்தைக் வைத்திய ஆலோசனையுடன் மருந்துகளைக் கொடுத்துவிட்டு அவர்களை இயல்பாக விளையாட விடுங்கள். வேறுவேறு நோய்;களுக்காக உபயோகிக்கும் சில மருந்துகளும் சிலருக்கு அஸ்த்மாவைத் தூண்டிவிடுவதுண்டு. உதாரணமாக அஸ்பிரின், புரூபன், (Ibuprofen) இன்டோமெதசின்;(Indomethacine) போன்ற பல வலிநிவாரணி மாத்திரைகள் ஆஸ்த்மாவைத் தூண்டுகின்றன. இதேபோல உயர் இரத்த அழுத்தத்திற்கு உபயோகிக்கும் கண் அழுத்தத்pற்கும் உபயோகிக்கும்Beta blockers எனும் வகை மருந்துகளும் (உதா- புரபனலோல், டிமலோல்) தூண்டிகளாகும். சிலரது ஆஸ்த்மாவை பருவகால ஆஸத்மா (seasonal asthma) எனக் குறிப்பிடுவோம். மரங் கொள்ளாமல் பூத்துக் குலுங்கும் காலங்களில் பூக்களில் உள்ள மகரந்தம் காற்றில் பரவிச் சிலருக்கு ஆஸ்த்மாக்குக் காரணமாகிவிடும். பருவகால வேறுபாடுகள் துல்லியமாக உள்ள மேலை நாடுகளில்தான் இதனைக் காணலாம். வருடம் முழுவதும் பூத்துக் குலுங்கும் எமது நாடு போன்ற வெப்பமய நாடுகளில் ஆஸத்மாவிற்கு எந்த நாளும் ஆட்சிதான். சளி, ஆஸ்த்மா ஆகியவற்றைத் தூண்டுபவையாக பூக்களின் மகரந்தம், நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளின் ரோமம், தூசி, தூசிப்பூச்சி, கரப்பொத்தான் எச்சம் எனப் பலவாகும் என்பது உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் இலங்கையைப் பொறுத்தவரையில் வீட்டுத் தூசிப்பூச்சி, களஞ்சியத் தூசிப்பூச்சி, கரப்பொத்தான் ஆகிய மூன்றுமே ஆஸ்த்மாவைத் தூண்டுவதற்கான முக்கிய காரணமாகும். இதனை பேராசிரியர் அனுரா வீரசிங்க ((Prof.Anura Weerasinghe) தலைமையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு தெளிவாகக் குறிப்பிடுகிறது. எமது சூழலில் ஆஸ்த்மாவுக்கு பூக்களின் மகரந்தம், வளர்ப்புப் பிராணிகளின் ரோமம் ஆகியவை முக்கியமான காரணிகள் அல்லவாம். ஆஸ்த்மாவைத் தடுங்கள் ஓருவருக்கு ஆஸ்த்மாநோய் என வைத்துக் கொள்வோம். "இந்த வருத்தம் வராமல் தடுக்க முடியாதா?" என்பதுதான் அவர் வைத்தியரை கேட்கும் முதல் கேள்வியாக இருக்கும். முதல் கேட்கும் கேள்வி மட்டுமல்ல, அடிக்கடி கேட்கும் கேள்வியும் கூட. வைத்தியரால் கட்டுப்படுத்தத்தான் முடியும். உங்களால்தான் தடுக்க முடியும். எப்படி என்கிறீர்களா? ஆஸ்த்மா நோய்க்கு பல காரணங்கள் உள்ளன. தூண்டும் காரணிகள் பற்றி ஏற்கனவே பார்த்தோம். உங்களுக்கு நோயைத் தூண்டும் காரணிகளை உங்களால்தானே இனங்காண முடியும். சாம்பிராணிப் புகை உங்களுக்கு வரட்டு இருமலையும் இழுப்பையும் ஏற்படுத்துமாயின் அத்தகைய சூழலைத் தவிர்ப்பதின் மூலம் ஆஸ்த்மா தூண்டப்படுவதை நீங்கள் தடுக்கலாம் அல்லவா? நீங்கள் தவிர்க்கக் கூடிய ஏனைய விடயங்கள் என்ன? தவிர்க்க வேண்டிய 'தூண்டும் காரணிகள்' எவை? செய்ய வேண்டியது என்ன? உங்களது மெத்தை தலையணை போன்றவற்றை டஸ்ட் மைட் தங்கியிருக்க முடியாத பொலித்தீன் அல்லது பிளாஸ்டிக் துணியால் மூடுங்கள். உங்களது படுக்கையறையில் உள்ள மென்மையான துணிகளாலான திரைச்சீலை, தரைவிரிப்பு, கம்பளம் போன்றவற்றை அகற்றுங்கள். அல்லது அவற்றை அழுக்கு நீக்கி வெயிலில் போட்டு டஸ்ட் மைட்யை அழியுங்கள். டஸ்ட் மைட் மறைந்திருக்கக் கூடிய உங்கள் படுக்கை விரிப்பு, தலையணை, மெத்தை, அவற்றின் உறை ஆகியவற்றை அடிக்கடி நல்ல வெயிலில் காயப் போடுங்கள். அக் கிருமிகள் அழிந்து விடும். படுக்கை விரிப்பு, தலையணையுறை, மெத்தையுறை ஆகியவற்றை வாரம் ஒருமுறையாவது 550C சூடுள்ள நீரில் துவைக்க வேண்டும். உங்களது படுக்கை விரிப்பின் மேல் ஒரு வெயிலில் காய வைத்த பன்பாயை போடுங்கள். பஞ்சு, துணி போன்றவற்றாலான மென்மையான பொம்மைகளை உங்கள் குழந்தையின் படுக்கையறையிலிருந்து அகற்றுங்கள். வீடும் படுக்கையறையும், நல்ல காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நாய், பூனை, முயல் போன்ற திட்டமான ஒரு வெப்பநிலைக்குரிய பாலூட்டிச் செல்லப் பிராணிகளை உங்கள் படுக்கையறையில் நுழையவோ படுக்கவோ அனுமதிக்காதீர்கள். உங்களது படுக்கைத் துணிகளிலும் தரைவிரிப்பு போன்ற ஏனைய மென்துணிகளிலும் வசிக்கும் தூசிப்பூச்சிகளை அழிக்க அக்கிரிற்று கொல்லிகளை உபயோகியுங்கள். கரப்பொத்தான் பூச்சியின் கழிவுகள் ஆஸ்த்மாவை தூண்டும் ஒரு முக்கிய காரணியாகும். எனவே கரப்பொத்தான் பூச்சியை ஒழிக்க வீட்டை சுத்தமாக வைத்திருப்தடன், அவற்றை அழிக்க பூச்சி கொல்லிகளை உபயோகியுங்கள். திட்டமான ஒரு வெப்ப நிலைக்குரிய பாலூட்டிச் செல்லப் பிராணிகளை உங்கள் படுக்கையறையில் நுழையவோ படுக்கவோ அனுமதிக்காதது மாத்திரமின்றி வீட்டில் வளர்ப்பதையும் தவிருங்கள். அது முடியாவிட்டால் அச் செல்லப் பிராணிகளை வாரம் ஒரு முறையாவது நன்கு குளிப்பாட்டினால் ஆஸ்த்மாவை தவிர்க்கலாம். புகை ஆஸ்த்மாவைத் தூண்டும் ஒரு வலிமையான காரணியாகும். எனவே ஆஸ்த்மா நோயாளி புகை பிடித்தலை நிறுத்த வேண்டும். அது மாத்திரமின்றி அவ் வீட்டில் உள்ள ஏனையவர்கள் புகைப்பதையும் முற்றாகத் தடுக்க வேண்டும். சமையலறைப் புகையும், விறகுப் புகை, ஏனைய மரப்பொருட்கள் எரியும் புகை ஆகியவையும் தவிர்க்கப்பட வேண்டும். ஆஸ்த்மாவைத் தூண்டுகின்ற மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்;. உதாரணமாக அஸ்பிரின், புரபனலலோல், டிமலோல், இன்டமெதசீன் போன்றவை. உணவு பதனிடலில் பயன்படுத்தப்படும் சல்பைற்று (Sulfite) ஆகியவை ஆஸ்த்மாவை மோசமாக்கும் எனச் சொல்லப்படுகிறது. உலர்த்திய பழங்கள், பதனிடப்பட்ட உருளைக்கிழங்கு உணவுவகைகள், கோர்டியல், பியர், வைன் ஆகியவற்றில் இது கலந்திருப்பதால் அத்தகைய உணவுகளைத் தவிருங்கள். கடுமையான பல மணங்களும் விசிறித் தெளிப்புகளும் ( Sprays) சுவாசக் குழாய்களை உறுத்தி ஆஸ்த்மாவைத் தூண்டுகின்றன. உதாரணமாக அழகுசாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றைக் கூறலாம். வீட்டில் பயன்படுத்தும் தெளிகருவிகளில் உள்ள வாயுக்களும் காரணமாகலாம். நன்கு உலராத பெயின்ட் வகைகளின் மணமும் ஆஸத்மாவை தூண்டக் கூடும். அதிகாலையில் வீசும் குளிர் காற்று சிலருக்கு ஆஸ்த்மாவை தூண்டக் கூடும். அதே வேளை அதிகாலையின் நடுங்கும் மார்கழிக் குளிரில், குளிர் நீரினால் தலையில் குளித்தும் சுகமாக இருக்கும் நோயாளிகளும் இருக்கவே செய்கிறார்கள். இதுவரை சொல்லியவற்றிலிருந்து உங்களுக்கு ஆஸ்த்மாவை தூண்டும் காரணியைக் இனங்காண முடிந்ததா? அப்படியானால் நோயை இன்றோடு விரட்டிவிடலாம் அல்லவா? ஆஸ்த்மாவை தூண்டும் காரணியைக் இனங்காண முடியாவிட்டால் கூட கவலைப்பட வேண்டியதில்லை. நேயைத் தடுக்கக் கூடிய, நோயைத் தணிக்கக் கூடிய நல்ல சிகிச்சை முறைகள் இப்பொழுது கிடைக்கின்றன. ஆஸ்த்மாவிற்கு சிகிச்சை ஆஸ்த்மாவிற்கான சிகிச்சையின் அவசியமும் பலனும் அந்நோயை அனுபவித்தவர்களுக்குத் தான் புரியும். மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டு கைகளை மேசையில் ஊன்றியபடி, பேசவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கையில் திடீரெனச் சுகம் கிடைத்தவருக்;குத்தான் சிகிச்சையின் அருமை புரியும் ஆஸ்த்மாவிற்கு பல சிகிச்சை முறைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆங்கில வைத்தியம், சித்த ஆயுர்வேத வைத்தியங்கள், யூனானி, ஹோமியோபதி என எல்லா வைத்தியங்களிலும் சிகிச்சை முறைகள் இருக்கவே செய்கிறது. ஏன் பாட்டி வைத்தியத்திலும், உங்கள் வீட்டு வைத்தியத்திலும் கூட சிகிச்சை முறைகள் இருக்கிறனதானே? எந்தச் சிகிச்சை முறை சிறந்தது? உங்கள் தேவை என்ன? சிறந்த சிகிச்சையின் அம்சங்களாக எவற்றை நீங்கள் கருதுவீர்கள்? • விரைவில் சுகம் கிடைக்க வேண்டும். • சுகம் உடனடியாக் கிடைப்பது மாத்திமின்றி நோயற்ற நிலை நீடிக்கவும் வேண்டும் • நோயால் உங்கள் நாளாந்த வேலைகள் பாதிப்படையக்; கூடாது • மருந்துகள் பக்க விளைவுகளைக் கொடுக்கக் கூடாது. கைநடுக்கம், பதற்றம், போன்ற உடனடிப் பக்கவிளைவுகளை மாத்திரமின்றி பிரஸர், நீரிழிவு, எலும்புச் சிதைவு போன்ற எதிர்காலப் பின்விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடாது. • மருத்துவச் செலவு உங்கள் கைக்கு அடக்கமாக இருக்க வேண்டும். அவ்வளவுதானே? சிகிச்சை முறைகள் ஆஸ்த்மாவிற்கான சிகிச்சையைப் பொறுத்தவரையில் அண்மைக் காலத்தில் நம்பிக்கையூட்டும் நல்ல பலனளிக்கும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இருபது வருடங்களுக்கு முன்னர் ஆஸ்த்மாவிற்கான சிகிச்சையானது சுவாசக்குழாய் இறுகுவதைத் தடுப்பதும், இறுகிய சுவாசக்குழாயை விரிவடையச் செய்வதுமான (Bronchodilators) மருந்துகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இம்மருந்துகள் ஆஸ்த்மா நோயின் ஒரு விளைவான சுவாசக் குழாய் சுருங்குதல் மட்டுமே கவனத்தில் எடுத்திருந்ததை இப்பொழுது வைத்தியர்கள் உணர்கிறார்கள். அழற்சியே ஆஸ்த்மாவிற்கு முக்கிய காரணமாக இப்பொழுது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அழற்சியினால் சுவாசக்குழாய்களின் உட்பகுதியில் உள்ள மென்சவ்வுகள் வீக்கமடைந்து தடித்த சளியை சுரக்கச் செய்கின்றன. அழற்சியடைந்த மென்;சவ்வுகள், மகரந்தம், தூசி, புகை, குளிர்காற்று போன்ற காரணிகளால் தூண்டப்பட்டு சுவாசக்குழாய்களை சுருக்கமடையச் செய்கின்றன. இது ஆஸ்த்மாவாக வெளிப்படுகிறது. இதிலிருந்து அழற்ச்சியே ஆஸ்த்மாவிற்கு அடிப்படை என்பது தெளிவாகின்றது. எனவே முன்பு குறிப்பிட்ட சுவாசக்குழாயை விரிவடையச் செய்யும் மருந்துகள் போதுமானவையல்ல. அழற்சியைத் தணிக்கும் யுவெiiகெடயஅயவழசல னசரபள மருந்துகள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. அழற்சிக்கு எதிரான மருந்துகள் சுவாசக்குழாய்களின் அழற்சியைத் தணிப்பது மாத்திரமின்றி தடுக்கவும் செய்கின்றன. இது சுவாசக்குழாய் சுருக்கமடைவதையும் தடுக்கிறது. மருந்து வகைகள் எனவே ஆஸ்த்மாவிற்கான மருந்துகள் அடிப்படையில் இரண்டு வகையானவை. 1. சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்பவை. (bronchodilators) இவற்றை உடனடி நிவாரணம் (Quick-Relief Medicines) அளிக்கும் மருந்துகள் எனவும் கூறலாம். இவை ஆஸ்த்மாவின் போது சுருக்கமடையும் சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்து சுவாசத்தைச் சுலபமாக்கும். நீங்கள் பெரும்பாலும் உபயோகிக்கும் வென்டோலின் - சல்பியுடமோல், பிரிக்கானில் - ரெபியுடலன், அமைனோபிலின் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை. 2. அழற்சிக்கு எதிரானவை (Anti inflammatory agents) . இவை ஸ்டிரோயிட் என்ற வகையைச் சார்ந்தவை. இவை உடனடி நிவாரணம் அளிப்பதில்லை. ஆனால் சுவாசக் குழாய்களின் அழற்சியை நீண்ட கால அளவில் இவை தணிப்பதால் நோய் அடிக்கடி வருவதையும், நோய் மோசமடைவதையும் தடுக்கின்றன. இவற்றை நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் ; (Controller Medicines) என்கிறோம். இவற்றில் பல வகைகள் உள்ளன. 1) குளுக்கோ கோர்ட்டிக்கோ ஸ்டிரோயிட்ஸ் (Glucocorticosteroids) என்பது முதல் வகை. இவை அழற்சிக்கு எதிரான மருந்துகளாகும். இவை மாத்திரைகள், 2) சோடியம் குறோமோ கிளைக்கேட் ;(Sodium Cromoglycate) நீண்டகாலமாக பாவனையில் உள்ள மருந்து. மிக வீரியமான மருந்து எனக் கூறமுடியாது. இதன் முழுமையான பலனை அறிய 4-6 வாரங்கள் செல்லக் கூடும். இன்ஹேலராகக் கிடைக்கும். தினமும் 3-4 தடவைகள் உபயோகிக்க வேண்டியிருக்கும். 3) நீண்ட நேரத்திற்குச் செயற்படும் பீட்டா அகொனஸ்ட் (Long acting- Beta Agonist) இவை உடலில் நீண்ட நேரம் நின்று செயற்படக் கூடிய மாத்திரைகளாகவும் (Sustained Release tablets)இன்ஹேலராகவும் உபயோகிக்கப்படுகின்றன. இவை தினமும் ஒரு அல்லது இரண்டு தடவைகள் மட்டும் உபயோகித்தால் நோயைக் கட்டுப்படுத்தப் போதுமானது. 4) நீண்ட நேரம் நின்று செயற்படக் கூடிய தியோபிலின் Sustained Release Theophyline tablets).. இதுவும் தினமும் ஒரு அல்லது இரண்டு தடவைகள் மட்டும் உபயோகித்தால் நோயைக் கட்டுப்படுத்தப் போதுமானது. 5) அன்ரிலியுகரையின் (Antileukotrienes) என்பது சிலகாலத்திற்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்ட புதுவகை மருந்தாகும். ஆஸ்த்மாவை கட்டுப்படுத்துவது மாத்திரமின்றி, அந்நோயோடு இருக்கும் ஒவ்வாமையையும் கட்டுப்படுத்தக் கூடியது. ஆயினும் இது இன்ஹேலருடன் இணைந்து பாவிக்கக் கூடியதே ஒழிய, தனியாக உபயோகித்தால் வீரியமானச் செயற்படும் எனச் சொல்ல முடியாது.ஸ்டிரோயிட் மருந்துகள் ஹைட்ரோகோட்டிசோன், பிரட்னிசொலோன், மீதையில் பிரட்னிசொலோன், பீட்டாமெதசோன், டெக்ஸாமெத்தசோன் போன்ற ஸ்டிரோயிட் மருந்துகள் மாத்திரைகளாகக் கிடைக்கின்றன. இவை தொடர்ந்து உபயோகிக்கும் போது கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியன. நீண்ட காலம் உபயோகித்தால் எலும்புச்சிதைவு(Osteoporosis), உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கட்டறக்ட், எடை அதிகர்ப்பு, தோல் மென்மையடைதல், தசைப் பலவீனம் போன்ற பல நோய்களுக்கு இட்டுச் செல்லும். இதனால் இப்பொழுது மிக கடுமையான நோயாளர்களுக்கு மட்டுமே மாத்திரைகளாக உபயோகிக்கப்படுகின்றன. . ஆனால் இதே இனத்தைச் சேர்ந்த இன்ஹேலர் மூலம் கொடுக்கப்படும் இதே வகையைச் சேர்ந்த புதிய மருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே கொடுக்கப்படுவதால் ஆபத்தற்றது. இது புதுவகை மருந்து எங்களில்தான் பரீட்சித்துப் பார்க்கிறீகளோ என நீங்கள் பயப்படவேண்டியதில்லை கடந்த மூன்று தசாப்பதங்களுக்கு மேலாக உலகளாவிய ரீதியில் பாவனையில் இருப்பதால் இவற்றின் நல்ல விளைவுகளை மருத்துவ உலகம் தெளிவாகவே அறிந்துள்ளது. விலை அதிகம் என்பதால் முன்பு இலங்கையில் பெருமளவு பாவனையில் இருக்கவில்லை. இப்பொழுது கைக்கு அடக்கமான விலையில் கிடைக்கிறது. எனவே பரவலான பாவனைக்கு வந்துள்ளது. மருந்துகளின் வடிவங்கள் ஆங்கில வைத்தியத்தைப் பொறுத்த வகையில் மருந்துகள் கொடுக்கப்படும் முறைகளை மூன்றாக வகுக்கலாம். • வாய்வழி உட்கொள்ளும் மாத்திரைகள்,சிரப் மருந்துகள் • ஊசி ஊடாக நாளத்தில் நேரடியாகச் செலுத்தப்படும் மருந்துகள். • மூச்சுக் குழாய் வழியே செலுத்தப்படும் மருந்துகள் வாய்வழி உட்கொள்ளப்படும் மருந்துகளே எமது நாட்டில் பெரும்பாலானவர்களால் உபயோகிக்கப்படுகிறது. விலை குறைவாக இருப்பதும், வேறு நல்ல சிகிச்சை முறைகள் இருப்பது பற்றிய அறிவின்மையுமே இதனையே தொடர்ந்து பாவிப்பதற்கான காரணமாகும். ஊசி ஊடாக நாளத்தில் நேரடியாகச் செலுத்தப்படும் மருந்துகள் சில மிகக் கடுமையான வேளைகளில் மட்டுமே இப்பொழுது உபயோகிக்கப் படுகிறது. மூச்சுக் குழாய் ஊடாக உள்ளிழுக்கும் கருவிகளையே (Inhalers-இன்ஹேலர்) இப்பொழுது வைத்தியர்கள் பெரும்பாலும் ஆஸ்த்மா நோயாளிகளுக்கு சிபார்சு செய்கிறார்கள். இதற்குக் காரணம் அதன் துரித செயற்பாடும் பக்கவிளைவுகள் அற்ற தன்மையுமே ஆகும். இருந்தபோதிலும் எம்மைப் போன்ற வறிய நாடுகளில் பெரும்பாலான நோயாளிகள் இன்னமும் மாத்திரைகளையே உபயோகிக்கிறார்கள். மாத்திரைகளோடு ஒப்பிடும்போது இன்ஹேலர்களின் கூடிய விலைதான் தடைக்கல்லாக இருக்கிறது. போருக்குப் பணத்தைத் அள்ளிக்கொட்டும் பிச்சைக்கார அரசுகள் நோயாளிகளுக்கான இலவச மருத்துவச் செலவில் தானே கஞ்சத்தனம் காட்டமுடியும் இன்னுமொரு காரணத்தையும் சொல்லலாம். பெரும்பாலான நோயாளிகளுக்கு இன்ஹேலர் என்றாலே ஒருவித பயம் இன்னும் நிலவுகிறது. 'இது கடுமையான நோயாளர்களுக்கு மாத்திரம் தேவையான வைத்தியம், எனக்கு அவசியமில்லை' 'இன்ஹேலரைப் பழகினால் பிறகு கைவிடமுடியாது' 'இது ஆபத்தான முறை, உயிராபத்தையும் கொண்டு வரும்' என்பது போன்ற பலவிதமான தவறான கருத்துக்கள் நோயாளர் களிடையே நிலவுகிறது. இதனால் இன்ஹேலர் பாவிக்க அவர்கள் தயங்குகிறார்கள். ஆனால் இன்ஹேலர்கள் உண்மையில் ஆபத்தற்ற மிகவும் பாதுகாப்பான சிறந்த சிகிச்சை முறையாகும் என்பதே உண்மையாகும். ஆரம்ப நிலை ஆஸ்த்மா நோயாளிகளுக்குக் கூட மிகவும் உகந்தது. இன்ஹேலர்கள் ஏன் சிறந்தவை? மருந்துகளை மாத்திரைகளை உட்கொள்ளும் போது அவை உணவுக்குழாயினால் உறிஞ்சப்பட்டு, குருதிச் சுற்றோட்டத்தில் கலந்து, மிக நீண்ட நேரத்தின் பின்னர், அதுவும் உட்கொள்ளப்பட்டதின் மிகச் சிறிய அளவே சுவாசப்பையை அடைகிறது. எனவே போதிய நிவாரணம் கிடைக்கவேண்டுமாயின் அதிகளவு மருந்தை எடுக்க வேண்டும். இது பக்கவிளைவுகளுக்கு வழிவகுக்கும். 1. ஆனால் இன்ஹேலர்கள் நேரடியாக சுவாசப்பையினுள் மருந்தைச் செலுத்துவதால் மிகக் குறைந்த அளவு மருந்தே போதுமானது. மாத்திரைகள் மில்லி கிராம் அளவில் கொடுக்கப் படுகின்றன. ஆனால் இன்ஹேலர் மருந்துகள் அதில் ஆயிரம் மடங்கு குறைவான, மைக்கிரோ கிராம் அளவிலேயே கொடுக்கப்படுகின்றன. இதனால் உடலுக்கு ஏற்படும் பக்கவிiவுகள், இல்லையெனும் அளவிற்கு குறைந்துவிடுகிறது. 2. இன்ஹேலர் மருந்துகள் சுவாசப்பையினுள் நேரடியாகச் செலுத்தப்படுவதால் மிக விரைவாகவும் குணமாக்குகிறது. 3. அதேபோல குறைந்த அளவு மருந்தே பாவிக்கப்படுவதால் ஆபத்தற்ற பாதுகாப்பான சிகிச்சை முறையுமாகும். உங்களுக்கான மருந்து எது ? உங்களுக்கு உகந்த மருந்து எது? உங்களுக்கான மருந்து உங்கள் நோயின் நிலையில் தங்கியுள்ளது. ஆஸ்த்மா நோயில் பல நிலைகள் உள்ளன. அதற்கேற்ப சிகிச்சையில் மாற்றங்கள் தேவைப்படலாம். ஆயினும் சுருக்கம் கருதி இங்கு இரண்டாகப் பிரிக்கிறோம். இடையிடையே தலைகாட்டும் குறைந்த ஆஸ்த்மா உங்களுக்கு ஆஸ்த்மாவின் தாக்கம் இடையிடையேதான் வருகிறதெனில் அதாவது வாரத்திற்கு இரண்டு முறைக்கு குறைவாகவே வந்து அதற்கு இடைப்பட்ட காலத்தி;ல் நோய்கான எந்த அறிகுறியும் இருப்பதில்லை எனில் நீங்கள் நோயின் அறிகுறி தோன்றும் நேரங்களில் மட்டும் சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்யும் (bronchodilators) எனப்படும் முதலாவது வகை மருந்துகளில் ஒன்றை மட்டும் பாவித்தால் போதுமானதாகும். அதாவது வென்டோலின், பிரிக்கானில் போன்ற ஒரு மருந்தை இன்ஹேலராக உபயோகித்தால் போதுமானது. ஏனையவர்களுக்கு ஏனையவர்களுக்கு இரண்டு வகை மருந்துகளையும் அதாவது நோயின் வாதையை உடனடியாகத் தணிக்கும் மருந்துகளையும் நோய் வராமல் தடுக்கும் மருந்துகளையும் தினமும் பாவிக்க வேண்டியிருக்கும் அதாவது வென்டோலின் பிரிக்கானில் ஆகிய இரண்டில் ஒன்றையும், சைக்கிளசோன், பெகடைட், பல்மிகோர்ட், போன்றவற்றில் ஒன்றையும் நாளாந்தம் பாவிக்க வேண்டியிருக்கும் இப்பெழுது சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்யும் (bronchodilators), மற்றும் அழற்சியைத் தணிக்கும் ஸ்டிரோயிட் மருந்துகள் இரண்டும் இணைந்த இன்ஹேலர்களும் கிடைக்கின்றன.Serotide, Seroflo, Formoide, Foracort போன்ற பல பெயர்களில் இலங்கையில் கிடைக்கின்றன. தனித்தனியே இம் மருந்துகளை உபயோகிப்பதை விட இவ்வாறு இணைந்த முறையில் உபயோகிப்பது கூடிய பலனை நோயாளர்களுக்கு கொடுப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்னறன. எந்தெந்த மருந்துகளை எந்தெந்த அளவுகளில், எத்தனை தடவைகள் உபயோகிக்க வேண்டும் என்பதை உங்கள் வைத்தியர்தான் தீர்மானிக்க வேண்டும். இன்ஹேலர்களை உபயோகிக்கும் முறைகள் பற்றி அடுத்துப் பார்ப்போம். இன்ஹேலர்களை உபயோகிப்பது எப்படி? இன்ஹேலர்கள் மிகவும் சிறந்த சிகிச்சை முறையானாலும் அவற்றைச் சரியான முறையில் இயக்காவிட்டால் முழுமையான பலன் கிடைக்காது. எனவே அவற்றை சரியான முறையில் இயக்குவது எப்படி எனப் பார்க்கலாம். பல்வேறு பெயர்களில் கிடைத்தாலும் இன்ஹேலர்கள் அடிப்படையில் இரண்டு வகையானவை. 1. ஓவ்வொரு தடவையும் குறிப்பிட்ட அளவு மருந்தை வாய்வு வடிவில் வெளியேற்றுபவை (Metered Dose Inhaler- MDI) 2. கப்ஸியூலுக்குள் தூளாக வரும் (Dry Powder Inhaler) இன்ஹேலர்கள் இவைகளில் எதுசிறந்தது எனக் கேட்கிறீர்களா? ஓவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை நன்மை இருக்கிறது. உங்களுக்கு பொருத்தமானது எது என உங்கள் வைத்தியரின் ஆலோசனையுடன் தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தான். வாய்வு வகை இன்ஹேலர்கள் (MDI) இவற்றின் நன்மைகள் என்ன? ஒப்பிடும்போது இரண்டிலும் இதுவே விலை குறைவானது. பாரம் குறைந்தது. தூக்கிச் செல்ல வசதியானது. எந்தவித ஆயத்தங்களும் இன்றி உடனடியாகவே உபயோகிக்கக் கூடியது. ஆஸ்த்மாவிற்கு வாயினால் உட்கொள்ளப்படும் மாத்திரைகளாக உபயோகிப்படும் பெரும்பாலான மருந்துகள் இவ் வடிவிலும் கிடைக்கின்றன. மேற் கூறியவற்றை இம் முறையின் நன்மைகளாகக் கூறலாம். ஓஸோன் படலத்தை அழிக்கின்றது என்ற காரணத்தால் விரைவில் உலகளாவிய ரீதியில் தடைசெய்யப்படவுள்ள குளோரோபுளோரோ கார்பன் (CFC)சேர்ந்துள்ளமையைத் தீமை என்று கூறலாம். ஆயினும் இப்பொழுது குளோரோபுளோரோ கார்பன் (CFC) இல்லாத வாய்வு வகை இன்ஹேலர்கள் பாவனைக்கு வந்துவிட்டன. ஆனால் இம் முறையின் முக்கிய பிரதிகூலமானது அதைப் பாவிக்கும்போது பின்பற்ற வேண்டிய ஒழுகுமுறையாகும். அதாவது மூச்சை உள்ளெடுத்து வெளிவிடுவதற்கும், இவ்விசையை இயக்குவதற்கும் இடையே சரியான இசைவு இருக்கவேண்டும். அதாவது சுவாசத் தொழிற்பாட்டின் சரியான தருணத்தில் கருவியை இயக்க வேண்டும். இல்லையேல் வாயினுள் விசிறப்படும் மருந்து வீணாகிவிடும்.. எனவே சிறு குழந்தைகளும் வயதானவர்களும் இதைப் பாவிப்பதில் சிரமங்கள் இருக்கலாம். தூள் வகை இன்ஹேலர்கள் (DPI) முன்னையதைப் போலவே இதுவும் பாரம் குறைந்தது. தூக்கிச் செல்ல இலகுவானது. மாத்திரையை கருவியினுள் போட்டு இயக்குவதற்கான ஒருசில நிமிடநேரம் மட்டுமே தேவையானது என்பதால் விரைவாக இயக்கக் கூடியது. அத்துடன் இதில் CFCகிடையாது. இதிலுள்ள முக்கிய நன்மை என்னவெனில் தூள் மருந்தை நோயாளி வாயினால் உறிஞ்சியே உள்ளெடுப்பதால் மூச்சு எடுப்பதற்கும் கையினால் கருவியை இயக்குவதற்கும் எந்தவித விசேட இசைவும் தேவையில்லை. எனவே சிறு குழந்தைகள் கூட சுலபமாக உபயோகிக்கலாம். ஆயினும் மிகவும் வயதானவர்களுக்கும், கடுமையான ஆஸ்த்மா நோயாளருக்கும் மூச்சை வீச்சாக உள்ளெடுப்பதில் சிரமம் இருக்கக் கூடுமாதலால் பூரண பயன் கிடைப்பது குறையலாம். வாய்வுவகை இன்ஹேலர்களை எப்படி உபயோகிப்பது ? இன்ஹேலரின் வாய்க்குள் வைக்கும் பகுதியின் மூடியை அகற்றுங்கள். இன்ஹேலரை நன்கு குலுக்குங்கள். இன்ஹேலரை நேராக நிமிர்த்திப் பிடியுங்கள். தலையச் சற்று பின்புறமாகச் சரியுங்கள். சாதாரணமாகச் சுவாசிங்கள். பின்பு மெதுவாக மூச்சை வெளிவிடுங்கள். ஆனால் முழுமையாக வெளியேற்ற வேண்டாம். அதன் பின் உடனடியாக இன்ஹேலரின் வாய்ப்பகுதியை பற்களுக்கு இடையேஉங்கள் வாயில் வைத்து உதடுகளால் நன்றாக மூடுங்கள். மூச்சை மெதுவாகவும் அதே நேரம் ஆழமாகவும் உள்ளெடுக்;க ஆரம்பிக்கும்போது இன்ஹேலரின் விசையை நன்றாக அழுத்துங்கள். மருந்தானது வாய்வுபு புகையாக வெளியேறி வாய்குள் வர ஆரம்பிக்க மெதுவாக மூச்சை உள்ளெடுங்கள். உங்கள் நுரையீரல் முழுமையாக நிரம்பும் வரை முச்சைத் தொடர்ந்து உள்ளெடுங்கள். முடியுமானால் உள்ளெடுத்த மூச்சைத் தொடர்ந்து பத்து செகண்டுகளுக்கு வெளிவிடாது வைத்திருங்கள். வுhயை உடனடியாகத் திறக்க வேண்டாம். இன்ஹேலரை வாயிலிருந்து எடுத்தபின் மூச்சை வழமை போல் வெளிவிடுங்கள். நீங்கள் சரியான முறையில் கருவியை இயக்கியிருந்தால் வாயைத் திறக்கும்போது மருந்துப்புகை வெளிவராது. மீண்டுமொரு முறை மருந்தை எடுக்க வேண்டுமாயின் ஒரு நிமிடம் தாமதித்த பின்னரே ஒன்று முதல் நான்கு வரையான படிகளை மீளச் செய்ய வேண்டும். வாயில்வைத்து எச்சி;ற் படுத்திய இன்ஹேலரின் வாய்ப் பகுதியை ஈரத்துணியால் சுத்தப்படுத்திய பின் மூடியினால் மூடுங்கள். அவ்வளவுதான். நீங்கள் உபயோகித்தது வென்டொலின் போன்ற மருந்தாயின் ஓருசில நிமிடங்களில் சுகம் தெரியும். பெக்கரைட், சைக்களசோன் போன்ற நோய்த் தடுப்பு மருந்தாயின் உடனடியாக எந்த சுகம் தெரியாது. ஆனால் படிப்படியாக நோய் தணியும். எனினும் இவ்வகை மருந்துகள் தொடர்ந்து பாவிக்கப்பட வேண்டியவை. மூச்சை உள்ளெடுக்கும் அதே நேரத்தில் கருவியையும் இயக்குவதை சமப்படுத்தி செய்வது சிலருக்கு கடினமாக இருக்கலாம். முக்கியமாக குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் சிரமமாக இருக்கலாம். அவ்வாறு இயக்குவதில் சிரமம் இருப்பவர்களுக்காக அதிக பரிமாணமுள்ள ஸ்பேஸர் (ளுpயஉநச) என்ற உபகரணம் உதவுகிறது. இவ் உபகரணத்தை இன்ஹேலருடன் இணைத்துப் பாவித்தால் மூச்சை உள்ளெடுக்கும் அதே நேரத்தில் கருவியையும் இயக்கும் இணைந்த செயற்பாடு முக்கியமானதல்ல. ஏனெனில் இதனை இயக்கும்போது நேரடியாக வாய்க்குள் செல்வதில்லை. இன்ஹேலரிலிருந்து வெளியேறும்போது மருந்து வொலுயுமற்றிக் கருவியினூடாகவே உங்கள் வாயை அடைகிறது. இதனால் மருந்து வீணாக வெளியறாமல் முழுப் பலனைப் பெறலாம். இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். மிக்க நன்றி. http://rathnavel-natarajan.blogspot.com/2011/11/blog-post_23.html
 12. இவர் வாழ்ந்த காலத்தில் வாழும் வரம் கிடைத்தமை எனது பாக்கியம் உங்கள் இலட்சியக்கனவை வென்றிட தொடர்ந்தும் அயராது உழைப்போம் என உறுதியெடுத்து கூறும் என் வாழ்த்துக்கள்.
 13. ஞாயிறு வந்தால் மட்டன் பிரியர்கள் ஆசையாக, இறைச்சிக் கடையின் கூட்டத்தில் காத்திருந்து வாங்கிவரும் இறைச்சிக்கு மனைவிமார்களிடம் விதவிதமான கமெண்டஸ்கள்! நானும் எவ்வளவு நேரம் தான் வேக வைக்கிறது? வேகவே இல்லை! உங்களை போலவே கிழட்டு ஆடா பார்த்து கரி வாங்கி வந்தீர்களா? என்று ஒரு நக்கல்! உங்கள் முகத்தை பார்த்தாலே இளிச்சவாயன் என்று அறிந்து இந்த பசையில்லா மட்டனை உங்கள் தலையில் கட்டிவிட்டானா? என மடையன் பட்டம் கொடுத்து மட்டம் தட்டும் மனைவி! கரி கடைகாரன் பொண்டாட்டியை பார்த்து ஜொல்லு விட்டு இருந்த சமயத்தில் வெறும் எலும்பாக உங்கள் தலையில் கட்டிட்டாங்களா பார்த்து வாங்கமாட்டீர்களா? என்று ‘ அக்கரையுடன்’ ஆலோசனைகளும் மனைவிகளால் வழங்கப்படும். மனைவியிடம் மட்டன் வாங்கி நல்ல பேர் வாங்கவும்(கொஞ்சம் சிரமம் தான்), உண்மையில் நல்ல மட்டன் வாங்க இதோ டிப்ஸ்கள்! செம்மறி ஆடு இறைச்சி வேண்டுமா? வெள்ளாடு இறைச்சி வேண்டுமா? மட்டன் (Mutton) என்று சொல்லப்படுவது செம்மறி ஆடு இறைச்சிதான். சவான் (Chevon) என்றால்தான் வெள்ளாட்டு இறைச்சி. நமக்கு செம்மறி ஆடு இறைச்சி வேண்டுமா? வெள்ளாடு இறைச்சி வேண்டுமா? என்று முடிவு செய்யுங்கள்? நிறைய பேர் வெள்ளாடு இறைச்சியைதான் விரும்புகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை! ஆனால் செம்மறி ஆடு இறைச்சிதான் மிகவும் ருசியானது என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை! எல்லோரும் வெள்ளாடு இறைச்சி வேண்டும் எனக் கேட்பதால் கசாப்புக்கடைகாரர் செம்மறி ஆட்டின் வாலில் கருப்பு மை தடவியும், அல்லது வேறு வெள்ளாடு வாலை செம்மறி ஆட்டின் வாலிற்கு பதிலாக சொருகி பாவலாகாட்டும் கசாப்புகடையும் உண்டு. வெள்ளாடு இறைச்சிதான் வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் காசாப்பு கடையில் தொங்கும் இறைச்சியின் வாலை தொட்டு மை தடவி உள்ளதா என பாருங்கள், அல்லது ஒட்டு வாலா என அறிய இழுத்து பாருங்கள். ஒரு சில கில்லாடி கடைகாரர் கருப்பு நிறம் ஆக்க ஹேர் டை அடித்துவிடுகிறார்கள் தொட்டாலும் கண்டுபிடிக்கமுடியாது! மேலும் ஒட்டல் வால் பகுதியை உள்பக்கமாக தைத்துவிடுவார்கள் அதுவும் எளிதா கண்டுபிடிக்கமுடியாது! எனவே செம்மறி ஆடு இறைச்சியை கண்டு பிடிக்க ஒரே டிப்ஸ் இறைச்சியில் கடைகாரர் எவ்வளவுதான் கழுவினாலும் லேசாக அதன் ரோமங்கள் ஒட்டிகொண்டிருக்கும் அதை உன்னிப்பாக கவனித்து இது செம்மறி ஆடு இறைச்சி எனக் கண்டு பிடிக்கலாம்! அது இல்லாதது வெள்ளாடு! மேலும் செம்மறி ஆடா, வெள்ளாடா, அல்லது மாட்டிறைச்சியா என கண்டுபிடிக்க என்சைம் பரிசோதனை, பைபர் எண்ணிக்கை பரிசோதனை,அனட்டாமிக்கல் பரிசோதனை பல பரிசோதனைகள் இருந்தாலும் அவைகள் கால்நடை மருத்துவர்களால் மட்டும் முடிந்தவைகளாக உள்ளது. ஒரு அதிர்ச்சி கொசுறு செய்தி, ஒரு நாயின் தலையை,கால்களை துண்டித்துவிட்டு தோலை உரித்துவிட்டு தொங்கவிட்டால் அசல் வெள்ளாட்டு இறைச்சி போன்றே இருக்கும்.இதை கண்டுபிடிக்க நிச்சயம் கால்நடை மருத்துவரின் உதவி தேவை! முனிசிபல் மற்றும் கார்ப்பரேஷன் பகுதியில் கால்நடை மருத்துவர் இறைச்சியை பரிசோதித்து அதன் தொடை பகுதியில் அவர் பணிபுரியும் நிலையத்தின் முத்திரையை பதித்திருப்பார், தலையில் நெற்றி பகுதியில் அரக்கு சீல் இருக்கும் இவைகளை கவனித்து வாங்கலாம். தலையில் இருக்கும் முத்திரை அந்த ஆட்டை உயிருடன் இருக்கும் பரிசோதனை செய்ததற்கான அடையாளம்.இந்த அடையாளம் இருந்தால் தான் இறைச்சி கூடத்திற்குள் ஊழியர்கள் அனுமதிப்பார்கள். அறுக்கப்பட்டு உறித்து வெளியே வரும் போது கால்நடை மருத்துவரால் மீண்டும் இறைச்சியை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டதன் அடையாளம் தான் தொடையில் வைக்கப்பட்டுள்ள முத்திரை! இளம் இறைச்சியா? கிழட்டு ஆட்டு இறைச்சியா? தொங்கி கொண்டிருக்கும் இறைச்சியின் கழுத்து பகுதியை உன்னிப்பாக கவனியுங்கள். 1)கழுத்து பகுதி தடிமனாக பெரிதாக இருந்தால் அது வயதானதாக இருக்கலாம். இந்த இறைச்சி வேகவைக்க சிரம்ம படவேண்டும் 2) கழுத்து பகுதி மிகவும் சிறிதாக இருந்தால் இது குட்டியா இருக்கலாம் அல்லது சரியான வளர்ச்சியில்லா சவலை ஆடாக இருக்கலாம். இந்தவகை வளவளப்பாக பசை இல்லாமல் இருக்கும். இதுவும் நமது சமையலுக்கு ருசிசேர்க்காது. 3)மிதமான கழுத்து உள்ள இறைச்சி நமது சமையலுக்கு உகந்தது. நமக்கு மனைவியிடமிருந்து வசைகளையும் குறைக்கும். 4)கழுத்தின் வெட்டு பட்ட பகுதி ஐஸ் கிரீமை வெட்டியது போல் (Smooth cuting) இருந்தால் முன்பே இறந்த ஆட்டினை வாங்கி கசாப்பு செய்திருக்கிறார்கள் என அனுமானிக்கலாம். இதையும் நமது ஆரோக்கியத்தை எண்ணி தவிர்க்கலாம். 5) கழுத்தின் வெட்டு பகுதி பிசிறுகளுடன் மேலும் இறைச்சி இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் நல்லது. 6) கிட்னியை சுற்றி கொழுப்பு சூழ்ந்துள்ளதா எனப் பார்க்கவேண்டும். இது போஷாக்காக வளர்க்கப்பட்டுள்ளதற்கான் அடையாளம். 7) பொதுவாக ஆண் கிடாதான் கசாப்புக்கு விற்பனைக்கு வரும். அதனால் சிறிதாக இருந்தால் இளம் குட்டி! பெரிதாக கெட்டியாக இருந்தால் வயதானதாக இருக்கலாம். இதை வாங்கி சமைத்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என நினைக்கவேண்டாம். அப்படியெல்லாம் இல்லை. 8) தொங்கப்பட்டுள்ள ஆட்டில் விரை (Testis) இல்லையென்றால் அது பெண் ஆடாக இருக்கலாம். பொதுவாக இளம் பெட்டை ஆடுகள் இனப் பெருக்கத்திற்கு பட்டியில் வைத்துக்கொள்வதால் இந்த வயது பெட்டை ஆடுகள் கசாப்புக்கு வருவதில்லை. வயதான, நோயுற்ற, குட்டி போடமுடியால் இறந்துவிட்ட பெட்டை ஆடுகள்தான் விற்பனைக்கு வருகிறது. இதையும் கருத்தில் கொள்ளவேண்டும். எந்த பகுதி இறைச்சியை வாங்கலாம்? சிலர் தொடை கறியை மட்டும் கொடுங்கள் என்று வாங்குவார்கள் அந்த பகுதி கொஞ்சம் வேகுவதற்கு நேரம் அதிகம் ஆகும். ஒரு ஆட்டின் கழுத்து, நெஞ்சு பகுதி, முன்னங்கால் பகுதி, தொடை பகுதி,சிறிது ஈரல் என எல்லாம் பகுதியிலிருந்தும் சீராக இருக்கும்மாறு வாங்குவது நல்லது. இளம் சிகப்பு ( ரோஜா) நிறம் இறைச்சியாக இருந்தால் நன்று. கொஞ்சம் டார்க்காக இருந்தால் அது கிழடாக இருக்கலாம் இதை வேகவைக்க சோடா உப்பு, பப்பாளி காய் என பல டிப்ஸ்கள் தேவைபடும். மேலும் சாப்பிட்டுமுடித்துவிட்டு பல் இடுக்கில் மாட்டிக்கொள்ளும் இறைச்சி துகள்களை அகற்றும் வேலை பிரதானமாக இருக்கும். ஆடு அறுக்கும்போதே அருகில் காத்திருந்து சுடசுட அந்த இறைச்சியை வாங்கிவந்து வேகவைத்தால் அது இளம் ஆடாக இருந்தாலுமே வேகவைக்க சிரமப்படவேண்டும். ஆடுகள் அறுக்கப்ட்டு சில மணிநேரங்கள் தோங்கவிடும் போதுதான் தசைபகுதியில் உள்ள மையோகுளோபின் மாறுதல்கள் நடந்து விரைப்புத் தன்மை விலகி சமைக்க தயாராகிறது.எனவே அப்படி வாங்கி வந்த இறைச்சியை நல்ல காற்றோட்டமான பாத்திரத்தில் சில மணி நேரம் வைத்திருந்து பிறகு சமைக்கலாம். இரத்தம், குடல் வறுவல் அபிமானிகளுக்கு ஒருவேண்டுகோள் இதில் சத்துக்களும் குறைவு, ஆரோக்கியத்திற்கும் அவ்வளவு நல்லது இல்லை. ஆசையாக இருந்தால் சில நாட்கள் சாப்பிடலாம். ஆனால் நன்றா சமைத்து! இந்த ஞாயிறு இந்த டிப்ஸ்களுடன் கசாப்புகடைக்கு வீறுகொண்டு செல்லுங்கள். நல்ல தரமான மட்டன் வாங்குங்கள் மனைவியிடம் நல்ல பேர் வாங்குங்கள்! டிப்ஸ்கள் வழங்குவது எளிது! கசாப்புகடைகாரரின் மீசையை கவனத்தில் கொள்ளுங்கள், மேலும் அவரின் கசாப்பு வெட்டு கத்தியின் மேல் ஒரு கண் இருக்கட்டும். பயத்தை வெளியே காட்டிகொள்ளாமல் நீங்கள் குறிப்பிடும் இறைச்சியை தைரியமாக கேட்டு வாங்குங்கள்! இல்லை என்றால் கடையை மாற்றுங்கள்!! என்னுடைய டிப்ஸ்களை நீங்கள் நடை முறைப்படுத்தி வாங்க முயற்சித்து கடைகாரர் மூலம் இலவசமாக கிடைக்கும் திட்டுகளோ, இரத்தக் காயங்களுக்கு ஆசிரியர் குழு பொறுப்பு இல்லை!! http://kaalnadaidoct...og-post_29.html
 14. அவன் சங்கீதன்.அல்லது தயாபரன். ஜேம்ஸ். தும்பன்(புலவர் எனும் பெயர்) .கரிகாலன். தமிழரசன்.சுரேஸ். சீர்மாறன் ஆகியோர் அம்புகள் வில்லு parice ல் இருக்கும் விநாயகம் எல்லாரும் சேர்ந்து BTF, அனைத்துலக செயலகம் தமிழர், தேசியம் எல்லாருக்கும் பெரிய ஆப்பு விழப்போது பின்பு நாங்கள் நினைச்சாலும் எழும்பி நிற்க முடியாது மகிந்தா LONDON ல் நின்று பைலா ஆடுவான் பார்த்துகொன்டு நிற்க வேன்டியதுதான்
 15. ஊருக்குதான் உபதேசம் ஒருபேப்பருக்கு அல்ல முதலில் தங்கட முதுகில் ஏறியிருக்கும் கறைகளை கழுவுங்கள்
 16. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ஒரு ஓய்வான பொழுதில் சகோதர (சிங்கள) மொழி கன்சல்டன்ட் சொன்னார். பழைய காலத்தில் மக்களிடம் (சிங்களவர்) ஒரு வழக்கம் இருந்ததாம்! ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி இருவரும் ஒரே பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதுதான் அது! சும்மா கதை விடுதா பயபுள்ள? -அதிர்ச்சியுடன் சந்தேகமாகப் பார்க்க, புரிந்து கொண்டு சொன்னார். காட்டுப் புறங்களில் விவசாயம் செய்யும் போது வீடும், விவசாய நிலமும் அதிக தூரத்தில் இருக்கும். இரவில் காட்டு விலங்குகள் காரணமாக பயிர் நிலத்தைக் கண்காணிக்க வேண்டும். அதே நேரத்தில் வீட்டில் மனைவி தனியாக! அப்போ வேறு ஆண்கள் இடையில் வந்துவிடாமல் மனைவியை ஒருத்தரும், பயிர்நிலத்தை ஒருத்தரும் மாறி,மாறி!? ஏன் இரண்டு பேரும் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யலாமே? - நான். ஒருத்தன் ரெண்டு பெண்களைப் பார்த்துக் கொள்றதா?- சிரித்தார்! இல்ல! ரெண்டுபேரும் வீட்ல இருந்திட்டா..? ஹா ஹா ஹா? - இதுதான் அவருக்கு சிரிப்பா இருக்காமாம்! அவர் சீரியசாதான் சொன்னார்! என்னாலதான் நம்ப முடியல! http://umajee.blogspot.com/2011/05/blog-post_11.html
 17. பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் இழப்பு தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரின் இழப்பினால் துயரில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.ஆனாலும் இவரது கடைசிக் கால நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை
 18. பெயர் : (அன்னை) சோனியா இயற்பெயர் : எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ தலைவர் : அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் : ராகுல், மன்மோகன் மேலும் துணைத்தலைவர்கள் : வின்செண்ட் ஜார்ஜ், சிவசங்கர் மேனன், எம்.கே நாராயண் உள்ளிட்ட மலையாளிகள் மட்டும் வயது : வெள்ளையனை வெளியேற்றுவதற்காய் நடந்த கப்பற்படைப் புரட்சி நடந்த ஆண்டு பிறந்தவராம்!!!(1946) தொழில் : "இந்தியா விற்பனைக்கு" என்று விளம்பரபோர்டு எழுதுவது பலம் : நேரு குடும்ப மருமகள் , காந்தி என்ற குடும்பப் பெய்ர் பலவீனம் : இத்தாலிப் பெண்மணி நீண்டகால சாதனைகள் : போஃபர்ஸ் வழக்கிலிருந்து குவாத்ரோச்சியையும், ராஜீவ் கொலைவழக்கிலிருந்து சந்திராசாமியையும் பாதுகாத்தது சமீபத்திய சாதனைகள் : ஈழத்தில் சொக்கப்பனை கொளுத்தியது நீண்டகால எரிச்சல் : மேனகா & வருண்(காந்தி) சமீபத்திய எரிச்சல் : ஆனானப்பட்ட கருணாநிதிக்கே ஆப்பு வைத்த தனக்கு, மம்தா அல்வா கிண்டியது மக்கள் : தலைமையைக் கேள்வி கேட்காதவர்கள் சொத்துமதிப்பு : சொந்தக்கார் கூட இல்லையாம் (சு.சாமி கவனிக்க!) நண்பர்கள் : இப்போது ஒபாமா, ராஜபட்சே, இடையில் கருணாநிதி, எப்போதும் குவாத்ரோச்சி எதிரிகள் : தமிழர்கள் அனைவரும் புலிகளே ஆசை : பிரதமர் பதவி நிராசை : தியாகதீபம் ஆக்கிவிட்டார்கள் பாராட்டுக்குரியது : நைந்து, கிழிந்துபோன காங்கிரஸ் துணியை ஒட்டுப்போட்டது பயம் : ராகுலுக்கு பிரதமர் பதவி வர்ற வரைக்கும் கட்சி இருக்குமா? கோபம் : ஈழப்படுகொலைக்கும், தமிழ்மீனவர் கொலைகளுக்கும் நியாயம் கேட்பவர்கள்மீது காணாமல் போனவை : மனிதநேயம் புதியவை : மே 13 தெரியும் கருத்து : மன்மோகன் வாயால் சொல்ல வைக்கப்படுவது டிஸ்கி : 1968-ல் திருமணமாகி வந்தவர், பதினாறாண்டுகள் கழித்து 1984-ல் தான் இந்தியக்குடியுரிமை பெறுகிறார் என்றால்,என்னே அவரது இந்தியப்பற்று?! http://krpsenthil.blogspot.com/2011/05/blog-post_12.html http://krpsenthil.blogspot.com/2011/05/blog-post_12.html