உடையார்,துளசி,தமிழரசு,குமாரசாமி,புங்கையூரன்,ராசவன்னியன்,தமிழ் சிறி,நந்தன்,Paanch,இசைக்கலைஞன் அனைவருக்கும் நன்றிகள் .
அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
நாகர்கோவில் படுகொலை" நினைவு நாள் இன்று 22.09.1995
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்.........................
அண்ணெய் நீங்க மதுரை பக்கம் போயி கணகாலமோ? 2013 மதுரை சர்வதேசவிமாணநிலையமாகி srilankanair பறந்து கொண்டிருக்கு இரண்டொரு கிழக்காசிய விமாணங்கள் கூட இறங்கி ஏறுது அதுலாபமற்ற தடமாக கார்கோ மூவ்மென்ற் அற்று காணப்படுவதல் மற்றைய விமானகம்பெனிகள் மதுரையில் இறங்கி ஏற யோசிக்கினம் நந்திமாதிரி cargo கிளியரன்ஸ் பன்னும் கஸ்டம்ஸ் என்னும் ஒருத்தர் கூட இல்லை இதனால் அறுசுவை உணவை பார்க்கமுடியுமே தவிர உண்ணமுடியாது என்ற நிலை மதுரைக்கு. கஸ்டம்ஸ் டீமை உருவாக்கி மதுரைக்கு வழங்குவது மத்திய அரசின் வேலை என்கிறார்கள்??
இந்த மெட்ரோவை விட மதுரை சர்வதேச விமாணநிலையமாகியும் கார்கோ சுங்கவாடி அமையாததால் மதுரை சுத்துவட்டாரபகுதியில் விளையும் காய்கறிகளை மல்லுகளின் விமானநிலையங்களிலும் தவமிருக்கின்றன.அதே காய்கறி வடநாடு செல்ல இரண்டுநாள் மும்பாய் ஏர்போர்ட்டில் இரண்டுநாள் விமானத்தில் ஒன்றரைநாள் ரொரண்டோவை அடைந்து மார்க்கம் தமிழ்கடையை அடைய கிட்டத்தட்ட எட்டு நாட்களுக்குமேல் போகின்றது இதுவே மதுரை விமானநிலையமாய் இருந்தால் அன்று பறித்த காய்கறி மூன்றுநாட்களுக்கு முன்னமே மார்க்கத்தில் இருந்து விலைபட்டு வீட்டு குளிர்சாதனபெட்டிக்குள் இருக்கும்.
காங்கிரஸ் இருக்கிறமட்டும் மல்லுக்களின் மறைமுக சாம்ராச்சியம் அவர்களால் தான் மதுரை விமாடநிலைய சுங்கவாடிபிரச்சினை நீள்கிறது என்றவர்கள் இப்ப மோடி வந்தும் தொடர்கிறது.எங்கெங்கு தமிழன் முன்னேற வழியுண்டோ அதெல்லாம் மற்றைய இனத்தவர்களால் அடைக்கபடுது.
கடந்த வருடம் நண்பரிற்க்கு உதவியாக வந்த போது மார்த்தான்டம் யாழ்ப்பாணமாகவே எனக்கு தென்பட்டது பேச்சு வழக்கும் பெரிய வித்தியாசம் இல்லை கிணறு,கமுகு,தென்னை அட்சரம் பிசகாமல் யாழ்ப்பாண வீடாகவே இருந்தன மறு நாள் சென்னையை பார்த்து அதிர்ச்சிதான் 15அடி தள்ளி ஒண்டையுமே பார்க்க முடியல அவ்வளவு வாகன புழுதி புகை மனிதர்கள் என்னன்டு வாழ்கிறார்கள் என ஆச்சரியபடவேண்டிஇருந்தது திருவாணந்தபுர விமான நிலையத்தில் இறங்கி தமிழ் என தெரிந்தவுடன் மல்லுகள் தங்களுக்கு தெரிந்த தமிழில் கதைக்க முன்வந்தார்கள் நான்ங்கு நாள் பயனத்தில் என்ன குண்டு வைக்க வந்தியளா இருவரையும் மீனம்பாக்க தமிழ் அதிகாரி ஆங்கிலத்தில் வறுத்தெடுத்துவிட்டார் லஞ்சமாய் 50 பவுன் நோட்டை நீட்டுமட்டும் மனிசன் தமிழில் கதைக்கவேயில்லை.
இவ்வளவிற்க்கும் நண்பர் தென்மாநிலகாய்கறியை மொத்தமாக லண்டனிற்க்கு இறக்கி கனிசமான அந்நிய செலவாணியை தமிழ்நாட்டுக்கு அனுப்புபவர் அதற்க்குரியதுகளை காட்டியும் பலனில்லை மட்டுமட்டாக 10 நிமிட தாமதத்துடன் பயனிகளின் முறைப்புகளுக்கு நடுவில் கூனிகுறுகி எமது சீட்டில் தாவிஇருந்தோம்.