யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

பொன்னையா

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    474
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About பொன்னையா

  • Rank
    உறுப்பினர்
  1. ஏன் வடக்கினை விட்டுவிட்டீர்கள்?? இருந்தாலும் தமிழில் காரணப்பெயர் என்பது மிக முக்கியம். சீனர்களின் மூக்குச் சிறிதாக இருப்பதால் தான், சப்பை என்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுள்ளார்கள்
  2. என்ன நாட்டில் நடந்தாலும், நீங்கள் திருந்தமாட்டீயள். தமிழனின் புதைகுழிக்கான கல்லறையிலும், இதை எழுதி வைப்பியள் போல
  3. ம். உண்மை தான். கலைஞரின் செயற்பாட்டினைப் பார்க்கின்றபோது அவர் ஒரு கைப்பொம்மையாகவும், செயற்பாட்டைச் செய்யக் கூடிய பலம் உள்ளளவர் போலவும் தெரியவில்லை. எம்மைம விடுங்கள், மீனவர் பிர்சசனை, ஓக்கனல் திட்டத்தில் அவர் நடந்து கொாண்டது அவ்வாறே தோன்றுகின்றது.
  4. சமீபத்தில் ஒரு பாடல் கேட்டேன். பாடல் முழுக்க ஒரே சொல்லுத் தான் "நாக்கு முக்கா" என்று ஒரே வசனம் தான். சரி... அந்த வசனத்து ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா என்றால் அதுவும் கிடையாது. இசையை நம்பி தமிழைக் கொல்லலலாம் என்ற வியாபார சிந்தனை தான் இந்த விபச்சார திரைப்படங்களுக்க்க காரணம். நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், இப்படிான படங்களுக்கு வரவேற்புக் கொடுப்பதையோ, இப்படியான பாடல்களைத் தவிர்க்க வேண்டியதுமே தமிழுக்கு நாம் செய்யும் பணியாகவும் இருக்கும். ------------------ அழகிய தமிழ் மகன் பாடல்கள் கேட்டேன். கேளாமலே... கையிலே என்ற பாடல் கேட்டிருப்பீர்கள். அதில் ஒரு வசனம், பெண்: மேற்கு திசை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ இரவோ, பகலோ கிழக்குத் திசையில் இருந்து தான் வருமே தவிர, மேற்குத் திசையில் இருந்து வராது. மேற்குத் திசையில், அதன் முடிவு மட்டும் தான் இருக்கும். பணத்திற்காக எழுதுகின்ற கவிஞன்எப்படி கற்பனை வளத்தோடு எழுதுவான் என்ற கேள்விக்கு இதுவே பதிலாகவும் இருக்கும்.
  5. கடைசியில் 2 பேரும் காதலித்துப் பார் என்கின்றீர்கள்.... சரி.... உங்க ஆசைக்காக காதலித்துத் தொலைகின்றேன்
  6. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
  7. வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக வைத்து சிலர் அவர்களை வன்முறை பாதைக்கு திருப்புவதையும் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். அழகன், பரமன், காசி, சித்தன், தும்கான் ஆகிய 5 பேரும் நண்பர்கள். இவர்களில் 2 பேருக்கு, அரசியல்வாதி சோமுவின் மகள் துளசி மீது காதல். இதன் காரணமாக, அவருக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கும் நண்பர்கள், துளசியின் சித்தப்பாவின் தூண்டுதலால் சோமுவின் அரசியல் எதிரியை தீர்த்துக்கட்டி கொலையாளி ஆகின்றனர். சிறைக்கு செல்லும் இவர்களை துளசியின் சித்தப்பா ஜாமீனில் எடுக்காமல் கை கழுவுகிறார். இதனால், ஆத்திரமாகும் அவர்கள் சிறையிலிருந்து கொலை வெறியுடன் வெளியே வர, துளசியின் காதல் விவகாரம் தெரிந்து, அழகனை தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார் அரசியல்வாதி. முடிவு என்ன என்பது ரத்தம் தெறிக்கும் க்ளைமாக்ஸ். 28 ஆண்டுகளுக்கு முந்தைய கதை களம் என்பதால், ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் சசிகுமார். நடிப்பிலும் இவர் தனி முத்திரை பதிக்கிறார். பழைய ஸ்டெப் கட்டிங், பெ‌ல்பாட்டம், கண்ணாடி, பெரிய காலர் சட்டை, தாடி என எல்லா விஷயங்களையும் அச்சு அசலாக அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார். நண்பர்களாக வரும் ஜெய், கஞ்சா கருப்பு, மோகன், மாரி அனைவரும் மிகப் பொருத்தமான தேர்வு. வில்லனாக வருபவர் சமுத்திரக்கனி. கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து மிக சரியாக செய்திருக்கிறார். ஓர் அழகான காதல் காவியம் என நம்பி சென்றால், அளவுக்கு அதிகமான ரத்தக்களறி காட்சிகள் சிறிது நெருட வைக்கின்றன. என்றாலும், விறுவிறுப்பான திரைக்கதையும், வேகமான காட்சியமைப்பும் அந்த குறையை மறக்கடிக்கின்றன. கஞ்சா கருப்பு, இதில் குணச் சித்திர நடிகராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். நாயகி ஸ்வாதி, பார்வையாலேயே மனதை கொள்ளை கொள்கிறார். கடைசி காட்சியில் காதலனை காட்டிக் கொடுத்துவிட்டு கதறும்போது பரிதாபத்தை அள்ளுகிறார். யதார்த்தமான வசனங்கள் படத்துக்கு கூடுதல் பலம். ஜேம்ஸ் வசந்தன் இசையில் ‘கண்களிரண்டில் பாடல்…’ மெலோடியை ரசிக்கலாம். கதிரின் கேமரா கண்களுக்கு குளுமை. மதுரை மண்ணை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெறும் என்பதை இந்த படமும் உறுதி செய்திருக்கிறது. http://www.viyapu.com/news/?p=1451 கஞ்சாக்கறுப்பு, தவிர மற்றவர்களில் பெரும்பாலனவர்கள் அறிமுகம் என்பதோடு, கதாநாயகன் ஜெய் கூட பெரியளவில் பிரபல்யமற்றவர். கருங்கல்லைச் சுனாமி பெயர்த்துக் கரையில் விட்டதாகக் காட்டும் அர்த்தமற்ற படமான தசாவாதாரம் ஓடிய திரையரங்குகள் பலவற்றில் இப்போது இப்படமே ஓடுகின்றது. கதைத்திருப்பம்(முழுமையானதல்?? ) : http://www.youtube.com/watch?v=g6NQP1Dymaw காதல் காட்சி: http://www.youtube.com/watch?v=duUytZ9lYLw
  8. அடிச்சது "சான்ஸ்'' கிடைச்சது ,அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல, கடும் விஷம் மொண்டு இது எல்லாம் ஒரு கவிதை. இவர் எல்லாம் தமிழ் அறிஞர். இப்படியானவர்களைத் தமிழரின் தலைவர் என்பதால் தான் தமிழ் சிதைந்துள்ளது. வடமொழியும், ஆங்கிலமும் கலந்து எழுதும் தமிழ் அறிஞர்??
  9. சில சொற்களைப் பார்க்க வடமொழி போன்று உள்ளதே. ஆனால் சமீபத்தில் படித்த ஒரு செய்தியில் வடமொழியில் உள்ள சொற்கள் பல தமிழுக்குச் சொந்தமானவை என்று இருந்தது.
  10. தூயா எவ்வளவு காலமாக வலைப்பூக்களில் எழுதுகின்றீர்களோ தெரியாது. ஆனால் முன்பு யாழ்வலையில் இருந்தவர்கள் பெரும்பாலும் வலைப்பூக்களிலும் இருந்தார்கள். சந்திரவதனா குடும்பப் பொறுப்புக் காரணமாக எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருந்தாலும், ஆரம்ப காலத்தில் அதிகமாக எழுதி வந்திருந்தார். பழைய யாழ்க்களத்தில் மேலுள்ளவர்கள் உள்ளனர்: http://www.yarl.com/kalam/
  11. நளாயினி, சுரதா தமிழ்வாணன், கவிதன், பரணி போன்றவர்களும் எழுதி வந்திருக்கின்றார்கள்
  12. நாம் 1 இலட்சம் பேர் செய்தாலே ஊடகங்களில் வராது. ஆனால் 100 பேர் தேறாத அவர்களின் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் வந்துள்ளது. http://in.youtube.com/watch?v=ElkoqdGFliQ
  13. நாங்கள் இதற்குப் பதிலாக என்ன செய்ய்ப போகின்றோம்.