புலிகள் எடுத்த ஒரு மிக தவறான முடிவென்றால் அது சீனாவின் பக்கம் சாராமல் மேற்கு அல்லது இந்தியாவின் பக்கம் சார்ந்தது. சீனாவின் ஆதரவை நாடியிருந்தால் 4ம் கட்ட ஈழப்போரில் புலிகள் தோற்று இருக்க மாட்டார்கள் ஏன் என்றால் 4ம் கட்ட ஈழப்போரே நடந்திராது ..அதே போல் சீனாவிடம் சிங்களவன் பெற்று நாசம் பண்ணும் நிதி உதவிகளை புலிகளின் நிர்வாகத்தில் இருக்கும் தேசத்துக்கு கொடுத்திருந்தால் அதை வைத்து எப்படியெல்லாம் எமது மண்ணை வளர்த்திருக்கலாம். மேற்கை/ இந்தியாவை நம்பி இறுதியில் விடுதலை போராட்டம் நிர்மூலமாகி இந்தியாவின் விமான நிலையம் என்ற பெயரில் கொட்டில் கிடைத்தது தான் மிச்சம். அங்கால அவர் ஒருத்தர் மத்திய கிழக்கை வன்னியில் நிறுவியது தான் எமது 30 வருட போராட்டம் கண்ட பயன்.