Dash

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,765
 • Joined

 • Last visited

Everything posted by Dash

 1. சிங்களவனை காப்பாற்ற எங்கு முயற்சித்தேன்; சிங்களவன் எந்த அளவுக்கு எதிரியோ அதை விட பெரிய எதிரி கறுப்பு சட்டைகாரர்கள். நான் பார்த்த வரையில் ஒரு நூலகத்தை எரிக்கும் அளவுக்கு சிங்களவனுக்கு அறிவு இல்லை ...சிங்களவன் ஸ்ட்டைல் 83ம் ஆண்டு கலவரமும் முள்ளிவாய்க்காலும் தான். நுட்பமாக சிந்தித்து நூலகத்தை எரிக்கும் அளவுக்கு அவர்களுக்கு அறிவில்லை, இருந்திருந்தால் ஆசியாவில் மிகவும் அபிவிருத்தி அடைந்திருந்த நாட்டை பிச்சைக்காரா நாடாக்கியிருக்க மாட்டார்கள். அதை விட அவர்களுக்கு நூலகத்தை எரிப்பதால் எதுவும் கிடைக்க போவதில்லை ஏன் என்றால் இலங்கை வரலாறு என்பது மகாவம்சம் மட்டுமே... அவ்வாறான மனோநிலையில் இருப்பவர்கள் யாழ் நூலகத்தில் இருந்த நூல்களை பற்றி கவலைப்பட போவதில்லை. எனக்கு உறுத்தலாக இருக்கும் விடயம் உலகின் மூத்த குடியின் தலை சிறப்பான சரித்திரத்தை யாழ் நூலகம் வத்திருந்தது என்றால் வெறும் சிங்களவனை மட்டும் நாம் சந்தேகிக்க முடியாது ஏன் என்றாக் தமிழ் இனம் அடையாளம் இழந்து போக வேண்டும் என சிங்களவன் நினைப்பதில்லை,இதன் முன்னோடிகளான கறுப்பு சட்டைகாரர்களையும் நாம் சந்தேக கண்ணுடன் தான் பார்க்க வேண்டும்.பலர் கருணாநிதி பதவிக்காகவும் பணத்துக்கவும் ஊழல் வழக்கில் இருந்து தப்பவும் தான் முள்ளிவாயிக்கால் அவலத்தை தடுத்து நிறுத்தவில்லை என்பார்கள் ஆனால் கருணாநிதியிடம் இல்லாத நிதியா ...அதே போல் கருணாநிதி பார்க்காத பதவியா? இல்லை கருணாநிதியால் வெல்ல முடியாத வழக்கா? இவர் ஏன் முள்ளிவாய்க்கால தடுக்கவில்லை என்றால் அதுக்கு காரணம் வேறு.
 2. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எழுத கல்கி கிருஷ்ணமூர்த்தி 3 தடவை யாழ்ப்பாணம் வந்தாராம். இதிலிருந்து தமிழ் நாட்டில் கூட இல்லாத சோழர் காலத்து வரலாற்றை தன்னகதே வைத்திருந்தது தான் யாழ் நூலகம். அதேபோல் தமிழ்நாட்டில் ஏன் சோழர் பற்றிய தகவல்கள் இல்லாமல் போயின? அதே போல் எனக்குள் இருக்கும் ஊகம்... சிங்களவன் தான் யாழ் நூலகத்தை எரித்தானா அல்லது சோழர் இராச்சியத்தை வீழ்த்திய விஜய நகர அரசின் வம்சவாளியினர் யாராவது ஊக்கம் கொடுத்திருப்பார்கள?
 3. இப்பொழுது இன ரீதியில் 44% மேல். நீங்கள் குறிப்பிட்டது பழைய 2012 கணக்கெடுப்பு. ஆனால் 2018ம் ஆண்டு உத்தியோக்ச்பூர்வற்ற கணக்கெடுப்பின்படி மத ரீதியாக முதலாமிடம் என்று நினைக்கிறேன். ஆதாரத்தை பிறகு இணைக்கிறன்.
 4. உங்கள் பதிவுகள் அணைத்தும் நீங்கள் ஒரு கோத்தா விசுவாசி என கோடிட்டு காட்டுகின்றது. குறிப்பாக தமிழருக்கிடையில் கத்தோலிக்கம் சைவம் என பிரிவினை ஏற்படுத்த முயன்ற விதம்; அதே போல் வேறு ஒரு பதிவில் கோத்தாவை “எங்கள் ஜனாதிபதி” என்று பாசத்துடன் அழைத்திதீர்கள்;அதே போல் கள்ளக்காணி பிடிக்க உதவிய கோத்தாவே அதை தடுப்பார் என்ற உங்களது பில்ட் அப்; என பல பதிவுகள் கோத்தா விசுவாசி என்பதை காட்டுன்றது.
 5. தவறான புள்ளிவிபரம். குறிப்பாக ஏழைகள் கூடிய மாநிலம் என்பது மிகவும் தவறு. இன்னமும் கூறினால் இந்தியாவில் அதிகம் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்று தான் தமிழ் நாடு.
 6. இல்லாத பொல்லாத பொய்கள் எல்லாம் சொல்லி ஆட்சியை பிடித்ததன் தண்டனையை அனுபவிக்கிறார்கள். ஜ தே கவும் ஆட்சியை இவர்களிடம் ஒப்படைத்ததனால் குற்றம் சுமத்த யாரும் இல்லை.
 7. இங்கு எங்கு மத வெறி இருக்கு ? அதை விட முக்கியம்... யார் வருவதென்று எங்கட கள்ள காணி களவானி தான் தீர்மானிப்பார்.. பொது தேர்தலில் ராஜபக்‌ஷ 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் அவர் மீண்டும் இணைவார் அதுக்கு பிறகு கள்ளமாக காணி பிடிக்க மாட்டார் நேரடியாவே புடுங்கி எடுப்பார். ரணிலின் காலத்தில் தமிழர்கள் பலர் ஆடிய ஆட்டம் கொஞ்சமா...அவர் ஒட்டிசுட்டானில் குடியேற்றம் அமைக்க முயன்ற பொழுது மட்டக்களப்பில் இருந்து பஸ் பிடித்து போய் அட்டகாசம் பண்ணியவார்கள் எல்லாம் இனி வாய் மூடிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.
 8. எதோ இவரை கேட்டு விட்டு தான் இராணுவம் ஆட்சியை பிடிக்குமாக்கும்;
 9. *** நான் நினைக்கிறன் யாராவது இந்து பஸ் ஏறி புத்தளம் போய் சிலை உடைத்திருப்பான் என்று ஒரு விளக்கம் வந்தாலும் வரலாம்.
 10. இப்படி பைத்தியகாரதனமான அறிக்கை விடுவதே இவங்கள் எல்லாருக்கும் வேலை, உலகத்தில் எவனாவதுப்பொருளாதாரம் விழ வேண்டும் என யோசிப்பானா?
 11. எப்பொழுது வழங்கினார்? அதற்கான தீர்ப்பின் ஆதாரங்களை முன் வைக்கவும். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத் அம்பேபிட்டிய. இவ்வாறான அப்பட்டமான பொய்யை கூறுவதன் உள் நோக்கம் என்ன ?
 12. முதலில் இந்த வெளி நாட்டுக்கு போகும் கலாச்சாரம் ஒழிய வேணும்; இலங்கை மண்ணில் தான் எமது வருங்காலம் என்ற சிந்தனை வர வேணும்; தாயகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, புலம்பெயர் நாட்டிலும் தான். ஒருவருக்கு £20,000. கொடுத்து இங்கு வந்ததை விட அதே பணத்தை தாயகத்தில் முதலிட்டு இருந்தால் .....??
 13. நான் முன்னரும் குறிப்பிட்டேன் நீங்கள் மீண்டும் மீண்டும் ஜ தே க அரசை ஏன் பழி போடிகிறியள். வடக்கு மாகாணத்தில் இஸ்லாமிய மயமாக்கல் அதிகம் நடந்தது ராஜபக்‌ஷ காலத்தில் தான். மக்களும் பயத்தில் வாய் மூடிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் நல்லாட்சி அரசாங்க் வந்த பின்னர் தான் மக்கள் இஸ்ல்லாமிய மயமாக்கலுக்கு எதிராக போராட தொடங்கினர்.
 14. தொடக்கத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட அரசு தேர்தலுக்கு ஆசைபட்டு இப்ப புலி வாலை பிடித்த கதையாக என்ன செய்வதென்று தடுமாறுகீனம். கோத்தாவின் ஆட்சிக்கு நற்சான்றிதழை வழங்கி இருக்க கூடிய கொரோனா இப்ப இவர்களது தோல்விக்கு வழி வகுக்க போகின்றது.
 15. எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றம் சுமத்துவார்; ஆனால் கேதீஸ்வரத்தில் ஆதரத்துடன் நடந்த அப்பட்டமான வன்செயலுக்கு அண்ணர் வாயே திறக்க மாட்டார். அதேபோல் அடாவடி மினிஸ்ட்டரின் ஆக்கள் மன்னார் முழுவதும் கிறிஸ்த்தவ மத சிலைகளை உடைத்த போது தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட போது அண்ணருக்கு வராத கோபம் இங்க மட்டும் வந்து விடும். சமய ரீதியாக தமிழ் மக்கள் மத்தியில் என்றும் இருந்ததில்லை, ஆனால் இதை ஊக்குவிக்க சில கும்பல்கள் முயல்கின்றன.
 16. கோத்தாவின் ஆட்சி நீண்ட நாள் நிலைக்கும் என நான் நினைக்கவில்லை; இந்த கொரோனா பிரச்சனை மத்தியிலும் இவர் தேர்தல் நடாத்த அல்லல்படுவது அதுக்காக தான்; அதே போல் அமேரிக்காவில் ஆட்சி மாற்றம் வந்தால் கோத்தாவின் பாடு திண்டாட்டம் தான். அதனால் தான் எப்படியாவது நிலைமை தனக்கு சாதகமாக இருக்கும் போது அரசியலமபை மாற்றலாம் என படாத பாடுபடுகிறார். இங்க யாழ் களத்தில கோத்தாவின் முகவர் ஒருவர் சைவ கத்தோலிக்க மோதலை உருவாக்க இரவு பகலாக பாடுபடுவதை பார்த்தால் புரியவில்லையா?
 17. இப்படி தான் அடாவடி மினிஸ்ட்டர் பாராளுமன்றம் சென்றார், அதே போல் 2010 தேர்தலில் 3 ஆசனங்களையும் பெற்றார்கள். வழக்கமாக 1 ஆசனம் தான் வன்னியில் கிடைக்கும்.
 18. மன்னார் கூட தமிழர்களால் அல்ல. அதே போல் வீழச்சிக்குரிய காரணிகள் எல்லாருக்கும் தெரியும் ஆனால் அதைப்பற்றி பேச மாட்டர்கள்.
 19. அப்ப யாழ்ப்பாணத்தின் கல்வி தரம் வீழ்ந்து போச்சு என்ற கட்டுரைகளை நாம் எப்ப எதிர்பார்க்கலாம்.
 20. இதற்கு காரணம் சிங்களவரும் முஸ்லீமும் தமது பிரதி நிதிகளை மாற்ற தயங்கமாட்டார்கள். எங்கட அரசியல்வாதிகளுக்கு தமிழ் தேசியம் காணும் எல்லாத்துக்கும். கூட்டமைப்பு விக்கியை கண்டு அஞ்ச அது தான் காரணம் இவர்களது தமிழ் தேசிய தனி உரிமைக்கு போட்டி வந்து விட்டது.
 21. ஆப்பு வைப்பார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை; எல்லாம் கூட்டு களவாணிகள். அதே போல் இவரது ஷொப்பிங் பாக் கதை கூட பொய் என்கிறார்கள். இன்னமும் சொல்ல போனால் இவரது சொந்த இடம் மன்னார் இல்லையாம். இவர் புத்தளத்தை சேர்ந்தவர் என்றும் இவர் 1990ம் ஆண்டு பாதிக்கப்படவில்லையாம், நடந்தது என்னவென்றால் பெரும்பாலாலக வெளியேறியவர்கள் புத்தளத்தில் தான் இருந்தார்கள், அதை வைத்து அரசியல் செய்ய தான் இந்த ஷொப்பிங் பாக் கதை. அது மட்டுமல்ல 2017இல் தமிழர் ஒதுவருக்கு சொந்தமான காணியை சின்ன கரிசலில் கைப்பற்ற, நீதிமன்றம் தலையிட்டு காணி தமிழருக்கு சொந்தம் என தீர்ப்பளிக்க இவரது ஆதரவாளர் அதை விட்டு வெளியேற மறுக்க நீதிமன்றம் தனது உத்தியோகத்தர்களை வைத்து காணியை கைப்பற்ற இவரது ஆதரவாளர்கள் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்தியது ஊர் அறிந்த விடயம். நடத்தியவரை கைது செய்ய இவர் நேரில் சென்று அவரை எந்த சட்ட அனுமதியும் இல்லாமல் போலீஸ் நிலையத்தில் இருந்து விடுவித்தார். ஆனால் மீண்டும் நீதி மன்றம் எச்சரிக்கை விட்டதை அடுத்து பின்னர் அந்த சந்தேக நபர் சரணடைந்தார். இதெல்லாம் ராஜபக்‌ஷ காலத்தில் நடந்து இருக்குமா என்பது சந்த்தேகமே ..??
 22. ரிஷாட்டை வளர்த்து விட்டதே இந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தான்; அப்படியிருக்கும் போது எப்படி கோத்தா அவரை அடக்குவாத் என்று எதிர்பார்க்கிறியல்? அதே நேரம் 2015ம் ஆண்டுக்கு பின்னர் ரிஷாட் ரணிலுடன் சங்கமமாகிய பின்னர் இரண்டு தரப்பும் ஒற்றுமயில்லை எனவும் கேள்விப்படேன். அதேபோல் பொது தேர்தலில் மொட்டு 2/3 பெரும்பான்மை பெற்றால் மீண்டும் எல்லாம் நட்பாகும்;
 23. மன்னாரிலும் இப்ப அதே நிலை தான் ...அம்பாறைக்கு என்ன நடந்ததோ அது அசுர வேகத்தில் மன்னாரில் நடக்கிறது, இது இத்தோடு நிற்க போவதில்லை வடக்கு முழுவதும் தொடரும்
 24. இந்த கள்ள காணி திருடர்களை பற்றி இவர் வாய் திறக்க மாட்டர்.... ஏன் .. இவர்கள் இருவரையும் இயக்குபவர்கள் ஒருவரே. ஆனா தமிழ் கிறிஸ்த்தவர்களுடன் மல்லுக்கட்ட நிப்பார்.