Jump to content

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    14905
  • Joined

  • Days Won

    166

Everything posted by நிழலி

  1. யாழ்ப்பாணம் போய் வந்தவரை அப்படியே கொஞ்சம் யாழ் பக்கமும் வரச் சொல்லுங்கள். யாழ்ப்பாணத்தை விட யாழ் கொஞ்சம் கிட்ட என்று சொல்லவும்.
  2. அண்மையில், தன் இறப்பு குறித்து, தான் இறக்கப் போவதாக அண்மையில் ஒரு YouTube காணொளியில் தெரிவித்து இருந்தார். தான் கனவு கண்டதாகவும், அந்தக் கனவில் தான் இறந்து போவதாகவும், அப்போது ஒரு பாடல் ஒலித்தது எனவும், அந்த பாடலை முடிந்தளவு ஞாபகப்படுத்தி பாடி இருந்தார். ஏழை எளிய மக்களுக்கு பல நல்ல உதவிகள் சேவைகள் செய்த ஒருவர் இவர். சிங்கள மக்கள் இவரையும் நிராகரித்து மகிந்த கட்சிக்கு வாக்களித்து இவரை தோற்கடித்து இருந்தனர்.
  3. நான் இவ்வாறான, வெளி நாட்டவர்களின் காணொளிகளுக்கு வழக்கமாக இடும் பின்னூட்டம், "ஒரு பெரும் இனப்படுகொலையை, தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பாவித்து போர் நடாத்திய ஒரு அரசிடம் இருந்து, சிங்கள இனத்திலும் இருந்தும், வேறு எதனை எதிர்பார்க்கப் போகின்றீர்கள்" என்றே. இதனால் என்ன பயன்? போர்க் குற்ற விசாரணை எல்லாம் நடக்குமா? எனக் கேட்டால், கண்டிப்பாக இல்லை. ஆனால், ஆகக் குறைந்தது ஒரு சிலருக்காவது, இலங்கை எனும் சொர்க்க புரியில், ஒரு இனப்படுகொலை யுத்தம் இடம்பெற்றதா என கேள்விகளாவது மனசில் எழும். நீங்கள் யாழ்ப்பாணம் போனால், வெளி நாட்டில் இருந்து வந்தவர் என்று அவர்கள் புரிந்து கொண்டால், முச்சக்கர சாரதியில் இருந்து தின்னவேலி சந்தையில் காய்கறி விற்பவர் வரைக்கும் நன்றாக ஏமாற்றுவார். கேள்வி கேட்டால், போருக்கு பயந்து ஓடிப் போனவர் தானே என்றும் சிலர் நக்கலடிப்பர்.
  4. அண்ணர் என்னைப் போன்று ஏகபத்தினி விரதன் என்பதால், கட்டாயம் கால்களைத் தான் நீண்ட நேரம் களைத்து போகாமல் இருக்க தயார் செய்து இருப்பார்.
  5. ஜேவிபி யின் அனுர கூட, இவ்வாறான ஒரு அரைகுறை புரிதலுடன் தான் தமிழர்களிடம் வாக்கு கேட்கின்றார். அவரை ஆதரிக்கும் தமிழ் இளையவர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கின்றது.
  6. நான் கூறியது அவதார் ஒரே மாதிரி என்று, இருவரும் ஒரே ஆள் என்றல்ல. நிர்வாகத்தில் இருப்பதால் இருவரும் பூகோளத்தில் வெவ்வேறு கண்டங்களில் வாழ்கின்றனர் என்பதை கண்டு பிடிக்க முடியும் என்பதை அறிந்திருந்துமா...? இப்படித்தான் ராஜவன்னியனின் அவதாரும் சசிவர்ணத்தாரின் அவதாரும் ஒரே மாதிரி எனக்கு தோன்றுகிறது. இது தான் 50 ஐ நெருங்கும் போது வரும் தோற்ற மயக்கம் போல.
  7. @goshan_che, இனதும் @வைரவன்னதும் அவதார் ஒரே மாதிரி எனக்கு மட்டுமா தோன்றுகிறது... ? ஒரே கன்பியூஷன்..50 இனை நெருங்குவாதால் இப்படி தோன்றுகிறது போல...
  8. லௌ(வ்)கீகம் இப்பவுமே “ லவ் மரீஜ்” எண்டு சொல்லிறதை செய்யக்கூடாத ஒரு பாவமாத்தான் ஊர் பாக்கிறது .சாதி, மதம் தாண்டி “ லவ்” எண்டாலே ஒரு தீண்டாமையான விசயமா இருந்திச்சுது . பள்ளிக்கூடத்தில படிக்கேக்க பெடியளுக்கு லவ் ஏன், எப்பிடி வாறதெண்டு தெரியாது, பிரண்ட் ஒருத்தன் “அநேமா மச்சான் அவள் உன்னைத்தான் பாக்கிறாள்”எண்டு உசுப்பேத்திவிட வாற காதல் தான் கூட. Friend உசுப்பேத்திறதோட மட்டுமில்லை ஊரெல்லாம் பரப்பியும் விடுவான். “ ஏன்டா எண்டு கேட்டா“ ஏற்கனவே ஒருத்தன் பாக்கிறான் எண்டு தெரிஞ்சா வேற ஒருத்தனும் பாக்க மாட்டான்டா” எண்டு விளக்கம் சொல்லுவான். பழகிப்பாத்து பாத்து வாறதில்லை பெடியளின்டை லவ். பாத்தோன்னயே வரும் , எதைப்பாத்து பிடிக்குது எண்டு தெரியாது. “மச்சான் ஏன்டா அவளை லவ் பண்ணிறாய்” எண்டு கேட்டா விளக்கம் சொல்லத் தெரியாது. பாக்கத் தொடங்கேக்க சிலவேளை தானாப் பாத்தாலும் இன்னொருத்தன்டை தயவில்லாமல் ஒப்பேத்த முடியாது. பாக்கிற மட்டும் தான் அவன்டை வேலை, மிச்சம் எல்லாத்தையும் பக்கத்தில இருக்குறவன் பாத்துக்கொள்ளுவான். தனக்கு ஏலாததை இன்னொருத்தன் செய்யிறான் எண்டோ, இல்லாட்டி இதோட இவன் அழிஞ்சு போகட்டும் எண்டோ தெரியேல்லை. என்னொருத்தன்டை “லவ்வுக்கு” உதவிறதெண்டால் பெடியள் எல்லாம் ஒற்றுமையாச் செய்வாங்கள். சில வேளை மற்றவன் எல்லாம் பாக்கிறான் எண்டு போட்டு ஒருத்தன் தானும் ஒண்டைப் பாப்பம் எண்டு போட்டு கோயில்லயோ, ரியூசனிலயோ கண்ட பெட்டையை சைக்கிளில விட்டுக்க கலைக்கிறாக்கள் கனபேர். அநேமா அது சைக்கிளில போகேக்க நாய் கலைக்கிற மாதிரி கொஞ்சத் தூரத்தில நிண்டிடும். சிலர் மட்டும் sincere love பண்ணிற எண்டு சொல்லித் திரிவினம். ஆனால் serous ஆ love பண்ணிற ஆக்கள் மட்டும பிள்ளைகளை விட்டுக் கலைச்சுப் பின்னால போய் எந்த ஊர், எங்க வீடு எண்டு கண்டு பிடிக்கிறது முதல் வேலை. அதுக்குப் பிறகு அந்நபர் பிள்ளை வீட்டால வெளிக்கிட்டு பள்ளிக்கூடம் இல்லாட்டி ரியூசன் போய்த் திருப்பி வாற வரை முன்னுக்கும் பின்னுக்குத் திரிய வேணும். இப்பிடித் திரியேக்க சந்தேகப்பட்டு ஆரும் மறிச்சுக்க கேட்டா சொல்லக்கூடிய மாதிரி அடுத்த வீடு, பக்கத்து ரோட்டில இருக்கிற ரெண்டு பேரின்டை பேரைத் தேடி அறிஞ்சு வைக்க வேணும். ஒருக்கா ஒருத்தன் சொன்னதைக் கேட்டு நட்புக்காக இப்பிடி ஒரு காதல் தூது போகேக்க மறிச்சுக் கேட்டவனுக்கு சேட்டை வெளீல இழுத்து விட்டிட்டு இயக்கம் மாதிரி காட்ட, அவன் கொஞ்சம் எங்களை முறைக்க பாத்தா மறிச்சவன் அந்தப் பெட்டையின்டை தமையன், அதோட உண்மையில இயக்கம். ஒரு மாதிரிக் காலில விழாக் குறையா கெஞ்சித் தப்பி ஓடினதோட அந்தக்காதல் முடிஞ்சு போனது. இதையும் எல்லாம் தாண்டிப் போய் love பண்ணிற எண்டால், கடைசி வரை பின்னால போய் எங்கடை லவ் strong எண்டு காட்ட வேணும்.முதல்ல தனியப் போனவளவை நாங்கள் பின்னால போறது தெரிய வர ரெண்டு body guards friend எண்டு கூட்டிக்கொண்டு போவினம். அநேமா எரிச்சலில அந்த ரெண்டு friend இல ஒண்டாவது குட்டையைக் குளப்பும். அதை சமளிச்சு, வேறயாரும் போட்டியாப் பாத்தா அவனை ஒரு மாதிரிக் வெருட்டி பாக்கிறதை விடப் பண்ணி அப்பன் காரனிலும் மோசமான bodyguard வேலை பாக்கோணும். அதுக்குப் பிறகு வாயைத் துறந்து கதைக்காம அவை கண்ணால வாயால குடுக்கிற soft signalஐ கண்டு பிடிக்க வேணும். இதை எல்லாம் கவனிச்சுக் கடைசீல என்னைப் பாத்துச் சிரிக்கிறாள் எண்டு நம்பிப் போய்க் கேட்டா வாற பதில் இருக்குதே; “நான் இப்ப படிக்கோணும் , ஐயோ இங்க ஆரும் கண்டாப் பிரச்சனை, நான் டொக்டரா வரோணும், அப்பா அம்மாக்குப் பிடிக்காது, அதில வாறது தெரிஞ்ச ஆக்கள் “ , எண்டு அவளவை சொல்லிற மறுமொழி ஓமா இல்லையா எண்டு தெரியாம குழம்பித்திரிய, அடுத்த நாள் friends இல்லாமத் தனிய வரத்தான் விளங்கும் அது green signal தான் எண்டு. அவள் சொன்னது என்ன எண்டு விளங்காமல் இண்டைக்கும் தேவதாஸாக இருக்கிறாக்களும் இருக்கினம். இது பள்ளிக்கூட காலத்தில ஆனால் கம்பஸ் போற நேரத்தில எல்லாம் மாறீடும். “ கம்பஸுக்குப் போறாய் , படிப்பில மட்டும் கவனமாய் இரு அவன் இவனைப் பாத்து காதல் கீதல் எண்டு வந்தால் “ எண்டு அம்மா சொல்ல முதல் ,“ வந்தால் என்ன எண்டு “ மகள் கேக்க , “ வந்து பார் தெரியும் “ எண்டு அம்மா சொல்ல , அதுக்கு அம்மம்மா ஒத்து ஊத, அப்பர் ஒண்டும் கேக்காத மாதிரி இருக்க”, இந்தச் சம்பாசணை அநேமா எல்லா வீட்டையும் கம்பஸ்ஸுக்கு போற முதல் நாள் இருக்கும். அப்பாடா இயக்கத்திக்குப் போகாமல் பெடி ஒருமாதிரி கம்பஸ் போட்டான் எண்டு சந்தோசப்பட்ட அம்மாமாருக்கு கம்பஸுக்கு பிள்ளைய அனுப்பேக்க வாற அடுத்த கவலை பிள்ளை அங்க ஆரையும் பாத்திடுமோ எண்டு. அது பெடியனோ பெட்டையோ அம்மாமருக்கு படிப்பிலும் பாக்க இது தான் பெரும் கவலை. அம்மான்டை கதையால கம்பஸ் போறது ஏதோ love visa கிடைச்ச மாதிரி எண்டு நெச்சு உசுப்பேறிற பெடியள் கம்பஸு்ககுள்ள எப்பிடியும் ஒண்டு சரிவரும் எண்டு நம்பி வந்து கடைசிவரை கரைசேராமல் போன கதை கனக்க இருக்கு. கடுவன் பள்ளிக்கூடத்தில படிச்சவனுக்கு கம்பஸுக்க போன காஞ்ச மாடு கம்பில விழுந்த மாதிரி இருக்கும் , ஆனால் போனாப்பிறகு தான் தெரியும் அங்க இருக்கிற கஸ்டம். கல்வியே கண்ணாய் வாறதுகள் கண்ணெடுத்துப் பாக்காதுகள். அதுகும் medical faculty எண்டால் அது எட்டாக் கனி தான். அதால தான் கனபெடியள் stethoscope ஐ வெளீல விட்டபடி திரிஞ்சு பத்தாம் வகுப்பு படிக்கிறதில வெள்ளைப் பிள்ளையாப் பாத்துச் சுத்தித் திரிவாங்கள். பாக்கிற பெட்டை மட்டும் பாக்காது மாதிரி திரியப் பக்கத்தில போறது உதவிக்கு வரும் கேக்காமலே. “அவர் doctor ஆம்” எண்டு தூது செல்ல, செலவில்லாமல் கரைசேருது எண்டு அம்மாமார் ஓம் சொல்ல, படிச்சு முடிச்சுப் பட்டத்தோட போகேக்க கட்டிக்கொண்டு போயிடுவாங்கள். ஆனாலும் கம்பஸில வந்த நாள் முதல் கடைசீல போற நாள் வரை போராடி விக்கிரமாதித்தன் மார் வேதாளத்தை பிடிக்கேலாமல் போன கதைகள் இருக்கு. அதே போல படிக்கேக்க தம்பதிகளாய் திரிஞ்சிட்டு தம் பாதைகளை பாத்துப் போன கதையும் இருக்கு . கடைசிவரை இவனுக்கு இந்தப் பெட்டை சரிவராதெண்டவன் கடைசிக்காலத்தில சேந்த கதை எண்டு நிறையக் கதை இருக்கு. வெளீல இருந்து பாக்கிறாக்களுக்கு சனம் வாகனம் ஓட license கிடைச்ச மாதிரித்தான் கம்பஸுக்கு வந்தால் love பண்ண license கிடைச்சிடும் எண்டு நெக்கிறது. ஆனால் அதுக்குள்ளயும் love பண்ணி ஒப்பேத்திறது arrears முடிக்கிறதலும் பாக்கக் கஸ்டம். ஒருத்தருக்கும் தெரியாமத்தான் love பண்ணிறம் எண்டு love பண்ணிறவை மட்டும் நெச்சுக் கொண்டிருக்க, FB profile, what’s app status எண்டு ஒண்டும் இல்லாத காலத்திலேம் love பண்ணினனாம் எண்ட கதை ஊரில பரவீடும். “ என்ன என்னமோ கேள்விப்பட்டன் , ஆர் பெட்டை” எண்ட விடுப்புக் கேள்விகளில இருந்து தப்பிறது பெரிய பிரச்சினை. பெட்டைகள் தாங்களாகவே friendsக்கு ஒருத்தருக்கும் சொல்லவேணாம் எண்டு சொல்லியே எல்லாருக்கும் சொல்லிப்போடுங்கள். வீட்டை தெரியாம love பண்ணேக்க முதல் தெரிய வாறது அநேமா பெட்டைகள் வீட்டில அம்மாவா இருக்கும். பொறாமை பிடிச்ச ஒருத்தனோ இல்லாட்டி ஒருத்தியா தெரியாம செய்யிற உதவி இது. பிறகு மெல்ல அம்மா அப்பாவுக்குச் சொல்ல எண்டு வட்டம் விரியும். ஆனால் பெடியள் வீட்டில அம்மாமார் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே இருப்பினம். என்னதான் இருந்தாலும் love பண்ண முடிவெடுத்து , அலைஞ்சு திரிஞ்சு, ஒமா எண்டு கேட்டு Visa apply பண்ணீட்டு முடிவுக்காக wait பண்ணிற மாதிரி பாத்துக் கொண்டிருந்து, முடிவு தெரியாம அலைஞ்சு, ஓம் எண்டு சொன்னாப் பிறகு ஒழுங்கை வழிய ஒளிஞ்சு கதைச்சுத் திரிஞ்சு , அப்பப்ப வாற சண்டைப் பிரச்சினைகளுக்கு எல்லாம் முகம் குடுத்து, பிறகு கட்டும் வரை வேற ஆரும் பா(தூ)க்காமப் பாத்து , கட்டிற நிலைமை வர வீட்டில விசயத்தை சொல்லி , அந்தப் பூகம்பத்தையும் ஒரு மாதிரி சமாளிச்சு கலியாணம் எண்டு முடிவாக கையில இருக்கிறதை வைச்சு ஒருமாதிரிக் கலியாணமும் கட்டீட்டு முதல் நாள் கட்டில படுத்துக் கொண்டு யோசிக்க … Dr .T. கோபிசங்கர் யாழப்பாணம்
  9. மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன். அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே விவசாயி சின்னத்தை கேட்டு கொடுத்து விட்டதாக தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆனால், இப்படியான எந்த காரணத்தையும் பிஜேபி கூட்டணியில் நிற்கும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கும் ஆணையம் கூறாமல், கேட்ட சின்னத்தை கொடுத்துள்ளது. பி.கு: இந்தியாவின் சனநயகம் என்பதே ஒரு கேலிக் கூத்து. வெறுமனே 4.3 வீதம் உள்ள பார்பனர்களால் 95.7 வீதமுள்ளவர்கள் ஆளப்படும் தேசம் அது. இதில் வேறு எதனை எதிர்பார்க்கலாம்?
  10. அதனால்தான் சொன்னேன், தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்துள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பிஜேபி யின் கூட்டணியில் இல்லாவிடின், பாரபட்சமாக நடந்து கொள்கிறது. இவ்வளவுக்கும் அரசியல் செல்வாக்கற்ற சுயாதீன அமைப்பு முறையில் இயங்கும் ஆணையம் அது. அதாவது குறிப்பிட்ட அமைச்சர்களாலோ, பாராளுமன்ற அதிகாரத்தினாலோ செல்வாக்கு செலுத்த முடியாத ஆணையம் என்று பெயர்.
  11. நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்ல, வட இந்தியாவில் பல மாநிலக் கட்சிகளுக்கும் இதே நிலைதான். தமிழகத்தில் அநேகமான சிறு கட்சிகள் கூட்டணிகளில் இருப்பதால், அந்த கூட்டணியில் உள்ள அதிக செல்வாக்குள்ள கட்சியின் சின்னத்தில் தேர்தலில் நிற்கின்றன. எனவே அவற்றுக்கு இந்த பிரச்சினை இருக்கவில்லை. ஆனால், வட இந்தியாவில் பல கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கு. 10 வீதத்துக்கும் குறைவான வாக்குகளை முன்னைய தேர்தல்களில் பெற்ற கட்சிகளுக்கே இந்த பாரபட்சம் என்று கூறுகின்றனர். // சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.// https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo சத்தியமாக, உங்களுக்கு இதை எழுதும் போது சிரிப்பு வரவில்லையா?😀
  12. இப்புத்தகத்தை வாங்கி வைத்துள்ளேன்... விரைவில் வாசிக்க வேண்டும்
  13. இந்த சம்பவம் நடக்கும் முன்னர், இந்த பெண்மணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் படித்த பாடசாலைகளின் வகுப்பு நண்பர்களின் வட்ஸ் அப் குழுமங்களிலும் எவரும் இவர் பற்றி எந்தவொரு காணொளியையும் இணைத்தது இல்லை. பொதுவாக ஆரோக்கியமான உரையாடல்கள் இடம்பெறும் குழுமங்களாக இவை இருந்தன. ஆனால், இந்த முட்டாள்களின் உணர்ச்சிவசப்பட்ட செயலால், இச் சம்பவம் பற்றி வெளியானதில் இருந்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இப் பெண்ணின் காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர். யார் என்றே தெரியாமல் இருந்த ஒருவருக்கு, சின்ன வேலை வெட்டி இல்லாமல், இணையத்தில் குப்பைகளை மட்டும் மேய்கின்றவர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பெண் இன்று எம் சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் உள்ளவர்களுக்கு தெரிந்த பிரபலமான ஒருவராக மாறிவிட்டார். என்று @கிருபன்எழுதியிருந்தார் இந்த திரியில். இன்று இந்த மலத்தை எல்லாரும், சமூகத்தில் உள்ள எல்லா மட்டத்தினரும் முகர்ந்து பார்த்து விட்டு, தாம் மட்டும் நாற்றத்தை ரசிக்காமல், மற்றவர்களுக்கும் பகிர்கின்றனர். இதனால் இங்கு வெற்றியடைந்தது அந்த மலம் தான்.
  14. இந்த நிலமை பெருந்தொற்றலின் காலத்துக்கு பிறகு அதிகரித்து உள்ளது. அத்துடன் பொருளாதார மந்த நிலையால், விலைவாசி உயர்வால், தொழில் வாய்ப்புகள் குறைவால் மேலும் கூடிக் கொண்டு போகின்றது. அண்மையில் bus இற்காக காத்திருந்த ஒருவரை random ஆக தெரிவு செய்து முகத்தில் சுட்டுக் கொன்றார்கள். கொல்லப்பட்டவர் ஹெயிட்டியில் இருந்து கனடாவுக்கு வாழ்வை தேடி குடிபெயர்ந்த இளம் குடும்பஸ்தர்.
  15. தன் குழந்தைகள் பற்றி கேவலமாக கதைத்தவரை கேள்வி கேட்ட தாயை தாக்கியை பொறுக்கியை நியாயப்படுத்த உடனே போலித் தமிழ் தேசிய முகமூடியை அவருக்கு அணிவித்து விட்டீர்கள்.
  16. பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே இங்கு கனடாவில் இந்த நடைமுறை உள்ளது. மகள் பிறக்கும் போது நானும் உடனிருந்தேன். வாழ்வில் சந்தித்த அற்புதமான தருணங்களில் ஒன்று அது!
  17. என்று கூறி, இந்தக் கட்டுரை சொல்ல வந்ததுக்கு எந்த சம்பந்தமும் இல்லாம. தமது வழக்கமான புலி எதிர்ப்பு / தலைவர் மீதான காழ்ப்புணர்வு அரிப்பை சொறிந்து சுய இன்பம் கண்டார் இதை எழுதிய ராகவன். சம்பந்தப்பட்டவர்கள் ஒருவரும் இன்று இல்லையே என்பதால் அவர் எனக்கு (மட்டும்) சொன்னார், காதில் குசுகுசுத்தார், என்று இப்படி இன்னும் எத்தனையும் எழுதலாம். இந்த வருடாந்திர இலக்கிய கூட்டம் என்பதே புலி எதிர்ப்பு காச்சலாம் நன்கு பீடிக்கப்பட்டு புலிகள் இல்லாமல் போய் 15 ஆண்டுகள் போன பின்னும் கூட, இன்னும் அந்த காச்சலின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை அதிகம் கொண்ட கூட்டத்தால் நிகழ்த்தப்படும் நிகழ்வு.
  18. எனக்கு New York பற்றி தெரியாது ஆனால் பிரம்டன் பற்றி சொல்வதில் அநேகமானவை உண்மை தானே? நானே அனுபவப் பட்டுள்ளேன். Walmart போன்ற இடங்களில் வாகனத்தை வாகன பதிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வெளியே எடுப்பது என்பதே கடும் சிரமம். அத்துடன் மிக மோசமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அங்கு தவிர வேறு எங்கும் நான் காணவில்லை. இங்கு அநேகமாகன வீடுகளிலும் ஆக குறைந்தது 10 பேராவது வாடகைக்கு இருப்பர். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பெரும் திருட்டு அல்லது சூட்டுச் சம்பவம் நிகழ்கிறது. ஒப்பீட்டளவில் அங்குள்ள பஞ்சாபி இனத்தவர்களே இவற்றில் ஈடுபடுகின்றனர். Common sense என்பது என்னவென்று தெரியாதவர்கள் பெருமளவு அங்குள்ளனர். என் நான்கு நண்பர்கள் குடும்பம் தொடர்ந்து அங்கிருக்க பயத்தில் விற்பி யிற்கு நகர்ந்துள்ளனர்.
  19. வாசித்ததும் எப்படி தமிழ் சிறியால் இப்படி நகைச்சுவையாக யோசிக்க முடிந்தது என ஆச்சரியப்பட்டேன். யார் கண்டது, உண்மையியே இந்த இரு பனை மரங்களையும் ஆரும் வெட்டினாலும் வெட்டுவர் இனி..
  20. சாண் ஏற பப்பா சறுக்கும் நேற்றைக்கு விட்டதை எப்பிடியாவது இண்டைக்குப் பிடிக்கோணும் எண்ட எண்ணம் இரவு நித்திரையைக் குழப்பிச்சுது. நித்திரையால காலமை எழும்பி வீட்டில ஒருத்தரும் பாக்காத நேரம் அலுமாரிப் பெட்டீக்க பயந்து பயந்து வைச்ச கைக்கு அம்பிட்டதோட போனன் , “ எப்பிடியும் விட்டதை இண்டைக்கு பிடிக்கிறதெண்டு “ . காலமை முழுக்க கவனம் சிதறினபடி இருக்க மத்தியானம் சாப்பாட்டு மணி அடிச்ச உடனயே ஓடிப்போய் ரகசியமா விக்கிறவனைக் கண்டு பிடிச்சு கையில இருக்கிற காசை குடுத்தா மூண்டு தந்தான். புளியமரத்தடீல போய் நிண்ட ஆக்களோட சேர மூண்டு இருந்தால் சேக்கேலாது , குறைஞ்சது நாலாவது வேணும் எண்டு சொல்லி திருப்பி அனுப்பினாங்கள். என்னை மாதிரி மூண்டோட நிண்ட ஒருத்தனைக் கண்டு பிடிச்சுக் “ வெற்றிக்கு விளையாடவாறியா” எண்டு கேக்க அவன் சொன்னான் “ ஓம் ஆனால் குறட்ஸ்க்குத்தான் விளையாடலாம்” எண்டு. வாங்கி குறட்ஸின்டை தரம் பாத்து , சாண் விளையாடக் கூப்பிட்டுக் கொண்டு போனன். முதல் கட்டுக் கட்டினவன்டை மாபிளைஅடிச்சிட்டு சாண் கட்ட அது வெளீல போட்டுது. பிறகு அவன் கட்ட ரெண்டு மாபிளும் முட்டிக்கொண்டு நிக்க பெரு விரலில எச்சிலைத் துப்பி சுட்டு விரலோட சேத்து பிசுக்க மற்ற மாபிள் அசையாமல் நிக்க பிதுக்கினது தள்ளிப் போய் விழ ஒரு மாதிரி அவனை வெண்டு போய் கடைசீல main குறூப்போட சேந்தன். கண்ணாடி மாபிளில உள்ளுக்க மூண்டு நிறங்களில பூப் போல design ல தான் முதலில மாபிள் வந்தது அதில பாத்து விருப்பமான கலரைத் தேடித் தேடி வாங்கிறது. பிறகு அதில ஐஞ்சு கலர் உள்ள மாபிளும் வந்திச்சுது. பிறகு ஒரே கலரில உள்ளுக்க bubbles இருக்கிற மாதிரி வந்திச்சுது. ஆறாம் வகுப்பில ஒருத்தன் தனி வெள்ளைக் கலரில வெளீல கலர்க் கோடு அடிச்ச மாபிள் கொண்டர , அதுக்கு கிக்கிரி போளை எண்டு பேர் வைச்சம். போளை எண்டு பேர் ஏன் வந்தது எண்டு தெரியாது , ஊரில போளையடி எண்டு தான் சொல்லிறது. காற்சட்டையின்ட ஒரு பொக்கற்றுக்க நியூசும் மற்றப் பக்கம் குறட்ஸ்ஸுமாய்த்தான் பள்ளிக்கூடம் போறது. இது அநேமா சோட்ஸ் போட்டவன்டை விளையாட்டாத் தான் இருந்தது. ஊருக்குள்ள விளையாடிற மாதிரி குழி வெட்டிக் குழிக்குள்ள உருட்டி விட்டிட்டு விழுந்ததை எடுக்கிற விளையாட்டு பள்ளிக்கூடத்தில விளையாடிறேல்லை. இந்தக் குழி விளையாட்டுத்தான் இப்பத்தை “ bowling“ விளையாட்டுக்கு முன்னோடியோ தெரியல்லை. பள்ளிக்கூடத்தில புளியமரத்தடீல பப்பா கீறீட்டு யார் முதல் விடிறதெண்ட சண்டை முடிவுக்கு வர ஒவ்வொருத்தரா கட்டத் தொடங்கினாங்கள். விளையாட்டு Expert காரர் விழுந்திருக்கிற புளியமிலையைத் தள்ளிவிட்டிட்டு பப்பா கீறின இடம் மண் எப்பிடி இறுக்கமா எண்டு பாத்து, மேடு பள்ளம் பாத்து, காத்துப் பாத்திட்டு பெருவிரலாலேம் சுண்டு விரலாலேம் பிடிச்ச மாபிளை விரலின்டை கீழ்ப்பக்கமா சுருட்டி விட கோட்டைத்தாண்டிப் போன மாபிள் திரும்பி வந்து பக்கத்தில நிண்டதை தட்டிப் போட்டு கோட்டோட நிண்டிச்சுது. நான் கட்டினது side கோடுக்கு வெளீல போய் கடலுக்க போச்சுது. சரி எண்டு திருப்பிக்கட்டினது கோட்டுக்கு கிட்டப் போனாலும் கடைசி தான் எண்டாங்கள். முதல் round ல ஒருத்தன் அடிச்சது ரெண்டு மாபிளில படக் குட்டி எண்டு சொல்ல பரவாயில்லை அடிச்ச மாபிளையும் கட்டில விடுறன் எண்டு சொல்லீட்டு திருப்பி அடிச்சவனுக்குப் படாமப் போக கடைசீல என்டை turn வந்திச்சுது. கை நீட்டுத் தானே எட்டி அடி எண்டு ஒராள் சொல்ல, இல்லை நீ சுருட்டி spin பண்ணுவாதானே அப்பிடி அடி எண்டு இன்னொருத்தன் சொல்ல , இங்க பார் நேரா அடி, இது தான் கோடு எண்டு கீறி ஒண்டில்லாட்டி மற்றதிலயாவது படும் எண்டு சொல்லி அங்கால நிண்டு காட்டின விரலுக்கு உருட்டி விட்ட மாபிள் ஒண்டிலேம் அடி படாமலே போச்சுது. ரெண்டு ரவுண்டில எல்லா மாபிளும் குறைய , கணக்குக்கு நாலு வேணும் எண்டு போட்டு , இனி அடிச்சு வெல்லேலாது எண்டு போட்டு , வேறொருத்தன் அடிச்ச மாபிளை கால் விரலுக்க அமத்தி வைச்சு நைசா எடுத்துப் பொக்கற்றுக்க கவனமா வைச்சன் நாளைக்கு விளையாட எண்டு . ரெண்டு நேரப் பள்ளிக்கூடக் காலத்தில வீட்டை போகாம நிக்கிறாக்களுக்கு ஏதாவது ஒரு விளையாட்டு set ஆகும். கிரிக்கட் எப்பவுமே இருந்தாலும் மற்றவிளையாட்டும் மாறி மாறி வரும். கொஞ்ச நாள் பறக்கும் தட்டு எண்டு விளையாடினம் , பிறகு கிளிபூர், இல்லாட்டி போளையடி எண்டு ஏதாவது இருக்கும். என்ன மாபிளில spin பண்ணினவன் சிலர் கிரிக்கட்டிலேம் spin bowler ஆக, வழமை போல நாங்கள் கொஞ்சப் பேர் வெளீல நிண்டு பந்து பொறுக்கிக் குடுத்தம் மாபிளைப் போல. ஒரு நாள் விளையாடிக்கொண்டு நிண்ட ஒருத்தனை கூடப் படிச்ச prefects எண்ட உளவுப்படை காட்டிக் குடுக்க , அடி வாங்க முதலே அவன் எல்லார்டை பேரையும் சொல்ல, முழுப்பேரையும் office க்கு கொண்டு போய் வைச்சு சாத்தீட்டூ மாபிள்களையும் பறிச்சு வைச்சார் துரைச்சாமி சேர். பூசை குடுத்திட்டுப் Primary school காரரை மட்டும் நிப்பாட்டி “எங்கால மாபிள் எண்டு” கேட்டிட்டு , “அம்மா/ அப்பாவைக் கூட்டிக் கொண்டா” எண்டு சொல்லி அனுப்பினார். “உதுகும் சூது மாதிரித்தான் சும்மா விளையாடாமல் போட்டி எண்டு விளையாடினால் விட்ட மாபிளைப் பிடிக்க வீட்டை களவெடுக்கிறதில தொடங்கி , மற்றவனை ஏமாத்தி மாபிளைப் புடுங்கிறதெண்டு எல்லாக் கெட்ட பழக்கமும் வரும் எண்டு சொல்லித் துரைச்சாமியரும் சொல்ல “ , வந்த அம்மாவும் இவன் குளப்படி தான் எண்டு என்னை இன்னும் போட்டுக் குடுக்க எனக்கெண்டே ஒரு பிரம்பு வாங்கி வைச்சுது அந்தாள். அதுக்குப் பிறகு காலமை பள்ளிக்கூடத்தில துரைச்சாமியரும் பின்னேரம் வீட்டை வரேக்க அம்மாவும் பொக்கற்றையும் bagஐயும் check பண்ணித் தான் உள்ள விட்டிச்சினம். காச்சட்டை போட்ட பள்ளிக்கூட காலம் எப்பவுமே ஏதாவது ஒண்டு பொக்கற்றுக்க இருக்கும்; ஒண்டு சாப்பிட இல்லாட்டி விளையாட. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
  21. 2019 இல் கர் நாடகாவில் ஆட்சியைப் பிடித்த பிஜேபி, 2023 இல் அங்கு காங்கிரஸிடம் படுதோல்வி அடைந்தது. அதாவது பிஜேபி ஆட்சியில் இருக்கும் போது இடம்பெற்ற தேர்தலில் கூட, பிஜேபி தோற்றது என் ஞாபகம்.
  22. இதே போல், இந்தி எதிர்ப்பு என்று முழங்கி விட்டு, கருணா நிதி குடும்பம்/ உறவுகள் நடாத்தும் கல்லூரிகளில் இந்தி ஒரு கட்டாய பாடமாக வைத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.
  23. என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், இவ்வாறு தமிழில் பாடசாலையில் படித்து பெற்ற தகுதிகளைக் கொண்டு இரசாயனவியலில் இந்த வருடம் தான் MSc முடிக்கின்றார்.
  24. வைகோ வின் கேடுகெட்ட அரசியலால் உயிரிழந்த இன்னுமொரு உயிர். அஞ்சலிகள்!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.