Jump to content

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    14881
  • Joined

  • Days Won

    166

Everything posted by நிழலி

  1. 'யாழில் போதைப்பொருட்களுடன் கைதாகும் பெண்கள் – பெருமளவான பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் மீட்பு!' எனும் திரியில் எழுதப்பட்ட அரட்டைத்தனமான கருத்து ஒன்று நீக்கப்பட்டது. யாழ் ஒரு அரட்டைக் களம் அல்ல என்பதை மீண்டும் நினைவூட்டுகின்றோம்.
  2. இவர்கள் மகிந்தவை சந்தித்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வளவு காலமும் மகிந்தவுக்கும் மகிந்த அரசுக்கும் எதிராக போர்க் குற்றம், போர்க்குற்றவாளி என்றெல்லாம் குரல் எழுப்பி விட்டு, இன்று அவர்களுடன் சந்தித்து சேர்ந்து நின்று படம் எல்லாம் எடுத்து கனடிய தமிழ் சமூகத்தின் முகத்தில் காறி துப்பியுள்ளார்கள். அண்மையில் கனடாவில் உள்ள இலங்கை தூதுவரையும் சந்தித்தனர் என செய்தி வந்ததாக நினைவு,
  3. நீங்கள் இந்தக் நாவலை வாசிக்கும் போது, இவ் நிகழ்வு இடம்பெற்ற காலம், பிரதேசம், அதற்கு பொறுப்பாக இருந்தவர்(கள்) பற்றிய பிம்பங்கள் உங்களுக்குள் ஏற்படும். அவற்றினூடாக இந்த நிகழ்வு இடம்பெற்று இருப்பதற்கான வாய்ப்புகள் அங்கு இருந்திருக்கும் என நான் ஊகித்தது போன்று நீங்களும் ஊகிப்பீர்கள்.
  4. நகுலாத்தை ஒரு நாவலை வாசிக்க தொடங்கி, முதல் 200 பக்கங்கள் வாசிச்சு முடிச்ச பின், அது கொடுத்த லயிப்பிலும், அது உருவாக்கிய வாழ்வியலையும் மீண்டும் அனுபவிக்க, திருப்பி முதலாம் பக்கத்தில் இருந்து வாசிக்கத் தொடங்கி 300 பக்கங்களை கடந்து சென்று மீண்டும் 200 ஆவது பக்கத்திற்கு திரும்பி வந்து மீண்டும் வாசிச்சு.... இப்படியே திருப்பி திருப்பி வாசித்து முடித்த நாவல் இது. வட இலங்கையில், நகுலாத்தை எனும் பெண் தெய்வத்தை ஒட்டிய தொன்மங்களின் நம்பிக்கைகளில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் கீரிப்பிள்ளை எனும் கிராமத்தில் வாழும் மனிதர்களின் (இறுதிப்) போருக்கு முந்திய வாழ்வையும், போர் தீவிரமாகும் போது அரசாலும் புலிகளாலும் கிழித்தெறியப்படும் வாழ்வையும், காடும், காடு சார்ந்து வாழ்க்கையை வாழும் மாந்தர்களின் உணர்வுகளினூடாக நகர்த்தி செல்கின்றது நாவல். கீரிக்கும் பாம்புக்கும் நடக்கும் சண்டை, நாட்டார் தெய்வங்களின் தொன்ம வழிபாடு, கலை வந்து ஆடும் பெண்கள், குழுமாடு பிடித்தல், கூளைக்கிடா வேட்டை, சன்னாசி வைரவர், கண்ணி வெடிகளால் முகம் சிதைந்த குரங்கின் அகங்காரம், இரு பெண் நண்பிகளுக்கிடையிலான காதலும் உடல் சார்ந்த தகிப்புகளும், அம்மான் கண், கீரிக்குளத்தின் வனப்பும், பின் உடைப்பும், புலிகளுக்கு தெரியாமல் கசிப்பு காச்சும் பெண், மாவீரர் நாளின் புனிதத் தன்மை என பக்கம் பக்கமாக நீளும் நாவலின் ஒவ்வொரு பக்கமும் அதி உச்ச வாசிப்புக்குரிய அனுபவங்களை தருவன. புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான அன்பு நிறைந்த உறவு, அவர்களின் தியாகங்கள், பின் அதே புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பால் நிகழும் துயரங்கள், அவ்வாறு சென்ற பின் அப் பிள்ளைகளின் பெற்றோர்கள் படும் பாடுகள், பாலியல் வல்லுறவு செய்த முக்கிய தளபதியை மன்னித்து வல்லுறவுக்குள்ளான பெண்ணை நோக்கி அவனையே திருமணம் செய்ய சொல்லும் புலிகளின் தலைமை, முன்னால் பகையை வைத்து பழிவாங்கும் புலிகளின் பொறுப்பாளர், இறுதி நாட்களில் கூட மண்டையில் போடுதலை கை விடாத போராளிகள் என்று அன்று நடந்த, நாம் கேட்க விரும்பாத விடயங்களையும் அந்த மண்ணில் வாழ்ந்த யதார்த்தன் எழுதிச் செல்கின்றார். இலங்கை அரசின் கொடூர வான் வெளித்தாக்குதல்கள், அரச படையினர் பெண் போராளிகளின் உடலை கைப்பற்றி செய்யும் மிலேச்சதனங்கள், இறந்த ஆண் போராளிகளின் உடலை சுட்டு விளையாடும் இராணுவத்தினர், மருத்துவமனைகள் மீதான குண்டு வீச்சுகள், பாதுகாப்பு வலயங்களின் தாக்குதல்கள் என்று நாம் கேட்ட இறுதி யுத்தத்தின் அகோரங்களை மீண்டும் கண்ணுக்கு முன் கொண்டு வந்து விடுகின்றார் யதார்த்தன். இந்த நாவலில் வந்த தாமைரையையும், வெரோனிக்காவையும், சின்ராசையும்,ஆத்தையையும் வாசிக்கின்ற எவராலும் எக்காலத்திலும் மறந்து போக முடியாது. நான் இது வரை வாசித்த, ஈழ எழுத்தாளர்களின் எழுத்துகளில் மிகச் சிறந்த படைப்பாக நான் உண்ர்ந்த அற்புதமான நாவல்.
  5. இவர் ஒவ்வொரு பிள்ளை பிறந்த பின்னும் யாழ் வந்து போனவர் என நினைக்கின்றேன்.
  6. சில சிங்களப் பகுதிகளில் பத்தினி தெய்வோ என்று கண்ணகியை வழிபடுவது உண்டு என கேள்வி பட்டுள்ளேன்.
  7. பேசாமல், ஒட்டு மொத்த இலங்கை சனத்தொகையை மூன்றாகவோ அல்லது 10 ஆகவோ பிரித்து, ஒவ்வொடு நாட்டுக்கும் விலை பேசி விட்டால் நல்லது.
  8. இது தொடர்பாக அண்மையில் வந்த செய்தி / தீர்ப்பு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு மதுரை: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களை இந்தியா- இலங்கை ஒப்பந்தம் அடிப்படையில் இந்திய குடிமகன்களாக அங்கீகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் இரும்பூதிப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த டி.கணேசன். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், மனுதாரர் இந்திய குடியுரிமைக்காக தாக்கல் செய்துள்ள ஆவணங்கள், மனுதாரர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க போதுமானதாக இல்லை என மத்திய உள்துறை செயலாளர் 11.2.2022-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து தன்னையும், தனது குடும்பத்தினரையும் இந்திய குடிமகன்களாக அங்கீகரிக்கக்கோரி கணேசன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையினர். தமிழர்கள் சிறுபான்மையினர். அங்கு தமிழர்கள் ஒரே குழுவினராக இல்லை. தமிழர்களில் பெரு்ம்பாலானவர்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டனர். அவர்கள் இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ளனர். இலங்கையில் வாழும் தமிழர்களின் குறிப்பிட்ட சதவீதம் பேர் இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழகத்திலி்ருந்து 19வது நூற்றாண்டில் சென்றவர்கள். இவர்கள் இலங்கை எப்போது சுதந்திரம் பெற்றதோ, அப்போதிலிருந்து நாடற்றவர்களாக மாறிவிட்டனர். இலங்கையில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களின் நலன் தொடர்பாக இந்தியா, இலங்கை இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. 1964-ல் போடப்பட்ட முதல் ஒப்பந்தத்தில், இலங்கையிலிருந்து 5.25 லட்சம் தமிழர்களை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றும், 1974-ல் ஏற்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் 1.50 லட்சம் பேரில் 50 சதவீதம் பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்குவது, 75 ஆயிரம் பேரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி, இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் 16 வயதில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். அவருக்கு 1982-ல் தான் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதில் மனுதாரரின் சிறுவயது புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் மற்றும் விபரங்களை பாஸ்போர்ட் அதிகாரி சான்றொப்பம் அளித்துள்ளார். இந்திய அரசு மனுதாரின் பாஸ்போர்ட் மற்றும் அதிலுள்ள விபரங்கள் குறித்து கேள்வி எழுப்பவில்லை. அதில் உள்ள புகைப்படம் தான் தற்போது பிரச்சினையாக உள்ளது. சிறு வயது புகைப்படத்தை வைத்து ஒருவரை அடையாளம் காணும் யுகத்தில் இருக்கிறோம். பாஸ்போர்ட்டின் உண்மை தன்மையில் சந்தேகம் இல்லாத போது, அதிலுள்ள புகைப்படத்தை உரிமை கோருபவருடன் பொருத்தி சரிபார்ப்பதை அதிகாரிகள் தான் செய்ய வேண்டும். அந்த சுமையை மனுதாரர் மீது திணிக்கக்கூடாது. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பும் 6 லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுவரை 4,61,639 பேரின் இந்திய குடியுரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.10.1981 ஆகும். மனுதாரர் 1970-ல் விண்ணப்பித்துள்ளார். 33 வயதில் இந்தியா வந்த மனுதாரர் தற்போது பேரன், பேத்திகளுடன் உள்ளார். இலங்கையில் இருந்து தாயகம் திரும்புவோருக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பான கணக்கீடு 1974ல் எடுக்கப்பட்டுள்ளது. கணக்கீடு எடுக்கப்பட்டு அரை நூற்றாண்டு காலம் கடந்து விட்டது. இன்னும் 1.37 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். தற்போது இந்திய குடியுரிமை கேட்டு 5130 பேர் விண்ப்பித்துள்ளனர். மனுதாரரின் இந்திய குடியுரிமையை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடவில்லை. இலங்கை- இந்தியா ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருப்பதை நிறைவேற்ற வேண்டும் என்று தான் கூறுகிறோம். எனவே மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர், அவரது குடும்பத்தினரை இந்திய குடிமகன்களாக அங்கீகரிக்க வேண்டும். மனுதாரருக்கு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை மாநில அரசு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். https://www.hindutamil.in/news/tamilnadu/1161810-indian-citizenship-for-sri-lankan-returnees-hc-directs-union-govt-2.html
  9. காத்திரமும் ஆத்திரமும் கொண்ட கட்டுரை. இணைப்புக்கு நன்றி.
  10. இந்த 'மோட்டுச்' சிங்களவனுக்கு எதிராகத் தான் 30 வருடத்துக்கும் மேலாக ஆயுத ரீதியில் போராடி வெல்ல முடியாமல் தலைமையும் முற்றாக அழிந்து படு தோல்விக்குள்ளாகி, இன்று கல்வி, பொருளாதார, கலாச்சாரம் என பல்வேறு அம்சங்களில் சீரழிந்து, போதை நுகரும், வாள் வெட்டும் குழுக்களாக மாறி அவனை விட பல்லாயிரம் மடங்கு மோட்டுச் சமூகமாகி நிற்கின்றோம்.
  11. பாதிப்பு 2005 இல் அதிகமா இப்ப அதிகமா என தெரியவில்லை. ஆனால் ஒரே நாளில் கொட்டுகின்ற 34 சென்டிமீட்டர் மழை நீரை தாங்கக்கூடிய அளவுக்கு சனம் நிறைந்த நகரங்களில் வாய்க்கால்கள் அமைக்க முடியாது என நம்புகிறேன். இதனால் தான் ஃப்ளோரிடா போன்ற தொடர்ந்து வெள்ளம் பாதிப்பு வருகின்ற அமெரிக்க மாகாணங்களில் கூட வெள்ளப்பெருக்கை தடுக்க முடிவதில்லை. எத்தனை குளங்களை ஆறுகளை தூர்வாரினாலும் சடுதியாக ஏற்படுகின்ற இத்தகைய அதிக நீர் வீழ்ச்சியில் உருவாகும் வெள்ளத்தை தாங்கும் கழிவு வாய்க்கால்களை அமைக்க முடியாது என்று நம்புகிறேன்.அதுவும் இந்தியா / தமிழ்நாடு போன்ற முறையற்ற அனுமதியற்ற விதத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்ட நகரத்தில் இது சாத்தியமா என தெரியவில்லை..
  12. ஒரே நாளில் 32 சென்டிமீட்டர் மழை சென்னையில் கொட்டியுள்ளது. அதாவது 320 மில்லி மீட்டர். இப்படி மழை கொட்டினால் உலகில் எந்த நாட்டிலும் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியாது. அது சென்னையாக இருந்தால் என்ன நியூயோர்க்காக் இருந்தால் என்ன...
  13. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும். மனசளவில் மார்க்கண்டேயன், உறவளவில் தாத்தா.
  14. இங்கு IPTV யில் Amazon Prime இல் இருக்காது என நினைக்கின்றேன், ஏனெனில் இது HotStar OTT இல் தான் வெளியானது,
  15. இந்த இரண்டை எழுதியவர் ஒருவர் தான். இவர் இவ்வாறு ஆடை அணிந்து மாவீரர் நாளுக்கு சென்றாரா? ஆகக் குறைந்தது மாவீரர் நாளுக்கு சென்ற தன் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளாரா? மற்றவன் பிள்ளை மாட்டுப்பட்டால் குரல் கொடுப்பவர், தான் முன்னுக்கு நின்று அவ்வாறு செய்து இருக்க வேண்டும். இல்லை எனில், கைதான அந்த பிள்ளைகளின் பெற்றோருக்கு ஏற்படுகின்ற சட்ட சிக்கல்களை தீர்க்க உதவி செய்ய வேண்டும். கடந்த மூன்று நாட்களாக விசைப்பலகையில் குத்தி முறிவது மட்டும்தான் அவர் செய்கின்றார். ஆகக் குறைந்தது மைந்தன் சிவா வந்து முகனூலில் கேட்கும் கேள்விகளுக்காவது நேர்மையாக பதில் சொல்ல வேண்டும். இப்பவெல்லாம் நீங்கள், யார் என்ன சொல்கின்றார் என்பதை விட, அவர் எந்த ஊரில் பிறந்தவர் என்பதைப் பார்த்து தான் நம்புகின்றீர்களோ என எனக்கு சந்தேகம் வருகின்றது.
  16. நேற்று இந்த திரைப்படத்தை பார்த்தேன். மிக நல்ல படம். உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் கண்களில் கண்ணீரை சில கட்டங்கள் வரவழைக்காமல் விடாது. சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை தினம்தோறும் வரும் செய்திகளாக மாறிவிட்ட காலத்தில் இப்படியான காத்திரமான படங்கள் வருவது நல்ல விடயம். வாய்ப்புக் கிடைத்தால், பிள்ளைகளுடன் சேர்ந்து பாருங்கள் ------------------------------------- திரை விமர்சனம்: சித்தா பழநியில் துப்புரவு ஆய்வாளராக இருக்கும் ஈஸ்வரன் (சித்தார்த்), அண்ணி (அஞ்சலி நாயர்), அண்ணன் மகள் சுந்தரி (சஹஸ்ர ஸ்ரீ) ஆகியோருடன் வாழ்கிறார். சுந்தரி மீது உயிரையே வைத்திருக்கிறார். காவல்துறையில் பணியாற்றும் தன் நண்பன் வடிவேலுவின் அக்கா மகளும் சுந்தரியின் வகுப்புத் தோழியுமான பொன்னி (அபியா தஸ்நீம்) மீதும் பாசத்துடன் பழகுகிறார். ஆனால், பொன்னி பாலியல் வன்முறைக்கு உள்ளாக, பழி ஈஸ்வரன் மீது விழுகிறது. அதிலிருந்து ஈஸ்வரன் விடுபடும் தருணத்தில், சுந்தரியை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் செல்கிறார். சுந்தரி கிடைத்தாளா? பொன்னியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது யார்? இந்தத் தேடுதல் பயணத்தில் ஈஸ்வரனுக்கு நிகழ்வது என்ன? என்பது மீதிப் படம். சிறார் மீதான பாலியல் வன்முறை, அது குடும்பங்களிலும் சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதைக் கையாள்வதற்குத் தேவையான புரிதல் ஆகியவை தொடர்பான சமூக விழிப்புணர்வுப் படத்தைப் பிரச்சார நெடி இல்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். ஒரு த்ரில்லருக்கேற்ற பரபரப்பான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள், அபாரமான காட்சிமொழி, தெளிவான சமூக - அரசியல் புரிதல் ஆகியவற்றுடன் மேம்பட்ட படைப்பாகக் கொடுத்திருக்கிறார். பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிலிருந்து மீண்டுவந்து நிம்மதியாக வாழ்வதற்கானச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பதிலாகக் குற்றவாளிகளைப் பழிவாங்குவதில் சில ஆண்கள் முனைப்புக் காண்பிப்பதையும், குடும்ப கவுரவம், வீரம், மானப் பிரச்சினை என அதன் பின்னால் இயங்கும் ஆணாதிக்க விழுமியங்களை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பதும் வரவேற்புக்குரியது. பொன்னியும் சுந்தரியும் தனியாக ஓர் இடத்துக்குப் பயணிக்கும் இடத்தில் தொற்றிக்கொள்ளும் பரபரப்பு, இறுதிவரை தொய்வின்றித் தொடர்கிறது. குறிப்பாகச் சுந்தரி தொலைந்துபோகும் இடைவேளைக் காட்சியும் இரண்டாம் பாதியில் வரும் வாகனப் பரிசோதனைக் காட்சியும் பரபரப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடுகின்றன. இத்தகைய திரைக்கதையில் உணர்வுபூர்வமான உச்சங்களைத் தொடும் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பது மேம்பட்ட திரைக்கதைக்குச் சான்று. ஈஸ்வரன் மீது பழி விழுந்திருக்கும் நேரத்தில் அவன் ஏன் சுந்தரியை விட்டுவிட்டுப் பொன்னியைத் தனியாக அழைத்துச் சென்றான் என்னும் கேள்வியை இயல்பாக அவன் காதலி சக்தி (நிமிஷா சஜயன்) கேட்க, அதற்கு ஈஸ்வரனின் எதிர்வினை, பொன்னிக்கு நேர்ந்த கொடுமைக்குப் பிறகு சுந்தரியின் அம்மாவிடம் வெளிப்படும் மாற்றங்கள் எனப் பல நுட்பமானத் தருணங்கள் வியக்க வைக்கின்றன.அதே நேரம், பாலியல் குற்றத்தின் தீவிரத்தை விரிவாக உணர்த்திவிட்ட பிறகு குற்றவாளியின் செயல்பாடுகளை இவ்வளவு விரிவாகக் காண்பித்திருக்க வேண்டுமா? என்னும் கேள்வி எழுகிறது. சித்தார்த், சிறுநகரத்து இளைஞனாக மாறியிருக்கிறார். அண்ணன் மகளிடம் அன்பு காண்பிப்பது, பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வது, தன் மீது காண்பிக்கும் கோபத்தைக் கடந்துசெல்வது எனக் கனிவும் முதிர்ச்சியும் மிக்கவராக மனதில் பதிகிறார். தனக்கென்று சமூகப் பார்வை உள்ளவராகவும் நாயகனை நல்வழிப்படுத்துபவராகவும் அமைக்கப்பட்டுள்ள சக்தி கதாபாத்திரத்தின் மூலம் நிமிஷா சஜயனுக்கு தமிழில் சிறப்பான அறிமுகம் அமைந்துள்ளது. குழந்தைகள் சஹஸ்ரா ஸ்ரீ, அபியா தஸ்நீம் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அஞ்சலி நாயர் உட்பட அனைவரும் நடிப்பைக் குறையின்றித் தந்துள்ளனர். திபு நிணன் தாமஸ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கிறது. பாலாஜி சுப்ரமணியனின் ஒளிப்பதிவும் சுரேஷ் ஏ.பிரசாத்தின் படத்தொகுப்பும் திரைக்கதைக்குத் தக்க துணை புரிந்திருக்கின்றன.சிறார் பாலியல் வன்முறையை எப்படித் தடுப்பது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவுவது என்பது குறித்த புரிதலை மேம்படுத்திக் கொள்ள அனைவரும் பார்க்க வேண்டிய படம் ‘சித்தா’. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1131521-siddharth-stsrrer-chithha-movie-review.html
  17. நானும் அந்த படங்களை பார்த்தேன், உண்மையிலேயே இது ஒரு தேவையில்லாத வேலை, அத்துடன் பின் விளைவுகள் பற்றி எதனையும் யோசிக்காமல் செய்த வேலை இது.
  18. இப்படியான நக்கல் நளினத்துக்கு, அதுவும் தலைவரின், அவர் குடும்பத்தின் ஒப்பற்ற தியாகத்தை கொச்சைப்படுத்தும் நக்கல் கேள்விகளுக்கு பதில் சொல்லி என் தரத்தை உங்கள் அளவுக்கு கீழிறக்க விரும்பவில்லை. நன்றி
  19. அவரை ஏன் துரோகி என்று சொல்கின்றீர்கள்? அவர் எந்த போராளியையும், போராட்டத்தையும் காட்டிக் கொடுக்கவில்லை. மண்டையன் குழு போன்ற அமைப்பில் இருந்து சக தமிழர்களை கொல்லவில்லை. தீவகம் போன்ற பகுதிகளில் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற செயல்களில் ஈடுபடும் குழுவிலும் அவர் இருந்ததில்லை. தமிழர்களின் இயற்கையை கொள்ளை அடிக்கும் மணல் மாபியா தலைவனின் ஆளும் அல்ல. மேலே சொல்லிய விதங்களில் செயல்பட்டவர்களையே தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தெரிவு செய்து அழகு பார்க்கும் போது, தன்னை தமிழராக காட்டிக் கொள்ள தயங்கியதால் மட்டும் முரளிதரனை துரோகி என்று சொல்லலாமா?
  20. தனிப்பட்ட ரீதியில் எனக்கு முரளிதரனைப் பிடிப்பதில்லை. அதன் காரணம் அவர் இலங்கை அணிக்காக விளையாடிமை ஆகும். ஆனால் முரளி சொல்லும் இந்த விடயம் நியாயமானது. மனதள்வில் புலிகள் மீது ஆதரவு மலையகத் தமிழர்களுக்கும் அதன் சில தலைவர்களுக்கும் (உதாரணம் சந்திரசேகரன்) இருந்தாலும், ஒரு வேளை போராட்டம் வெற்றி பெற்று தனி நாடு கிடைக்குமாயின் தாம் எங்கு போவது, தமக்கு என்ன நடக்கும் போன்ற நியாயமான கவலைகள் அவர்களிடம் இருந்தது. 70 களில் மலையக மக்கள் இனக்கலவரத்தால் அடித்து விரட்டப்பட்டு வன்னிக்கு வந்து குடியேறிய நிலை போன்று வருமோ என்ற அச்சம் அவர்களிடம் காணப்பட்டது. உண்மையில் அவர்களின் கேள்விகளுக்கு எம் தரப்பில் நம்பிக்கையளிக்க கூடிய பதில்கள் இருக்கவில்லை. பொதுவாகவே யாழ்ப்பாண மையவாதம், மலையகத்தமிழர்களை இரண்டாம் தரமாக பார்த்து பழக்கப்பட்டது. புலம்பெயர்ந்து வந்த பின்னும் கூட, மலையக தமிழர்களை ஏளனமாக கதைக்கும் ஆட்களை எம்மில் மிக இலகுவாக காண முடியும். நிலைமை இவ்வாறு இருக்க, அவர்களின் பயம் நியாயமானது.
  21. துவாரகா வருவா என நம்பியவர்கள், நம்பி அதனை வெளியே காவித்திரிந்தவர்கள் அனைவரும் கபட நோக்கில்தான் செய்தனர் என்று கூற முடியாது. பலர், உண்மை என நம்பி இருந்தனர். விடுதலைப் புலிகள் மீதும், தலைவர் மீதும் கட்டமைக்கப்பட்டு இருக்கும் அதீத நம்பிக்கை அவர்கள் ஒரு போதும் இறந்து போக மாட்டார்கள் என்று நம்பும் அளவுக்கு சிலருக்கு இருந்ததை அவதானித்துள்ளேன். அந்த அதீத நம்பிக்கை, சரி பிழைகளை சீர் தூக்கிப் பார்க்கும் அறிவை மேவி இருந்தது. ஆனால், இந்த காணோளி வந்த பின்பும், அப்பட்டமாக அது துவாரகா இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிந்த பின்னும் கூட, தம் தவறை ஒத்துக்கொள்ள மறுத்தும், சாக்கு போக்கு சொல்லி தம் நம்பிக்கையை நியாயப்படுத்தியும், நேரடியாக மன்னிப்பு கேட்காமல் சமாளிக்கின்றவர்களையும், "இல்லை அது துவாரகா தான்" என்று இன்னும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களையும் இனி ஒரு போதும் தமிழ் இனம் நம்பக் கூடாது. இப்படியானவர்களுக்கு தலைவர் பெயர் சொல்வதற்கும், புலிகளின், மக்களின் தியாயங்களைப் பற்றி கதைப்பதற்கும் கூட அருகதை அற்றவர்கள். இவர்களுக்கு தமிழ் தேசியம் பற்றி இனி வாயைத் திறப்பதற்கு கூட தார்மீக உரிமை இல்லை. இந்த போலி நாடகம், பலரை எமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எனவே இந்த நாடகத்தை நடாத்தியவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டு, எம்மைச் சுற்றி இருந்த போலித் தமிழ் தேசிய வியாதிகளுக்கு ஒரே அடியாக நன்றி வணக்கம் சொல்வோம்.
  22. Tiktok இல் பரவலாக கிடக்கின்றது. தமிழக உறவுகள் பலர் நம்பி தொடர்ச்சியாக repost பண்ணுகின்றனர்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.