Jump to content

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Posts

  13814
 • Joined

 • Days Won

  151

நிழலி last won the day on November 19 2021

நிழலி had the most liked content!

About நிழலி

 • Birthday 12/15/1974

Profile Information

 • Gender
  Male
 • Location
  பனி வனம்
 • Interests
  காமமும் கலவியும்

Recent Profile Visitors

27853 profile views

நிழலி's Achievements

Grand Master

Grand Master (14/14)

 • Reacting Well Rare
 • Dedicated Rare
 • Very Popular Rare
 • Week One Done
 • One Year In

Recent Badges

6.2k

Reputation

 1. இந்திய மீனவர்களின் பிரதிநிதிகளும் வடபகுதி மீனவர் சங்க பிரதிநிதிகளும் 2016 இல் சந்தித்தனர். அதில் இந்திய மீன்வர்கள் இழுவை படகு மீன்பிடி நடவடிக்கையை கைவிடுவதற்கு மூன்று வருட காலவகாசம் கோரி அதனை வடபகுதி மீன்வர்கள் வழங்கியிருந்தனர். இன்று 2022... 6 வருடங்கள் கடந்த பின்னரும் இந்திய கடற்கொள்ளையர்கள் சர்வதேச சட்டங்களால் தடை செய்யப்பட்ட அதே இழுவை படகுகளை கொண்டு எம் வடபகுதி மீன்வளத்தை கொள்ளையடிக்கின்றனர். கேரளாப் பக்கம் போனால் அடி வாங்கிக் கொண்டு வரவேண்டும் என்று அந்தப்பக்கம் எட்டியும் பார்க்காமல், போரால் சிதைவுற்ற எம் மீன்வர்களின் வளத்தை வந்து சூறையாடுகின்றனர்,
 2. இவருக்கு அதிகமாக உதவியது புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றால், புலம்பெயர் தமிழ் தேசிய போராளிகள் பலரால் திட்டித் தீர்க்கப்படும் முத்தையா முரளிதரனின் அமைப்பான foundation of goodness" அறக்கட்டளை. இவரது பேட்டியை இணைக்க முடியவில்லை இங்கு.
 3. நானும் ஒரு ஆன்ட்ராய்ட் பயனாளி. தற்போது Samsung s21 கைபேசியும் Samsung watch 4 வும் பயனபடுத்தி வருகின்றேன் (என்னை நான் ஒரு Anti Apple product person என்று சொல்வதுண்டு) ஆனால் மனைவியும் பிள்ளைகளும் எப்பவும் அப்பிள் போன் தான் பயன்படுத்துகின்றனர். எப்பவாவது அவர்களின் போனை நான் பயனபடுத்த வேண்டிய நிலை வரும் போது ஒவ்வொரு முறையும் வெறுத்து விடுவேன். என்னைப் பொறுத்தவரைக்கும் ஆன்ட்ராய்ட் எப்பவும் பாவனையாளர்களின் தேவைக்கு ஏற்ப தன் அம்சங்களை (Features) கொடுக்கும். அப்பிள் தன் அம்சங்களுக்கு ஏற்ப பயனாளரை மாறச் சொல்லும்.
 4. யுத்தம் நடந்து கொண்டு இருந்த காலத்தில், இந்த கடற்கொள்ளையர்கள் கரையில் இருந்து பார்த்தாலே தெரியும் அளவுக்கு எல்லாம் எங்கள் கடல் வலயத்தில் வந்து மீன் வளத்தைக் கொள்ளை அடிக்கவில்லை. . எம் மீனவர்களின் படகினை வேண்டும் என்றே முட்டி மோதியும், எம்மவர்களின் வலைகளை அறுத்தெறிந்தும் அட்டகாசம் செய்யும் துணிவும் அன்றிருக்கவில்லை. அந்த காலப்பகுதியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் கொண்டு தம் கடலில் உள்ள வளத்தை சூறையாடி ஈற்றில் வளமே அற்றதாக்கிக் கொண்டு இருந்தார்கள் இந்த கொள்ளையர்கள். இன்று கரைக்கு வந்து எம் மீனவர்களை தாக்கி படகுகளையும் வலைகளையும் சேதப்படுத்தும் அளவுக்கு வந்துவிட்டார்கள். நீங்கள் அவற்றைக் கண்டிக்காமல் அதற்கெதிராக போராடும் எம் மீனவர்களைப் பார்த்து அர்த்தமற்ற கேள்விகளை கேட்கின்றீர்கள்.
 5. இலங்கையர்கள் என்று குறிப்பிட்டது பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்களை; புலம்பெயர் தமிழர்களை அல்ல.
 6. இவ்வளவு நாளும் உங்களுக்கு இந்த நபரைப் பற்றி தெரியாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கு ரஞ்சித். இவ் நபர் பற்றி யாழிலும் சில செய்திகள் உள்ளன. மாவீரர் வாரம், தலைவரின் பிறந்த நாள், மே 18 போன்ற நாட்களில் இந் நபர் யாழ்ப்பாணத்தில் செய்யும் அட்டகாசங்கள் பல. 2009 இன் பின் நடந்த ஒரு பாராளுமன்ற தேர்தலிலோ அல்லது மாகாண சபைத் தேர்தலிலோ, தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சி சார்பாக போட்டியிட முயன்று, முதலில் பேச்சளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின் அவரது சாதி காரணமாக நிராகரிக்கப்பட்டவர் என சிலர் சொல்வதை கேட்டுள்ளேன். அதன் பின்னர் தான் அங்கஜனுடன் சேர்ந்தாராம். தன்னை ஒரு ஒதுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்று முதலில் காட்டி பின்னர் ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தி தமிழிலும் சிங்களத்திலும் பிரச்சாரம் செய்யும் நபர் இவர்.
 7. அவ்வாறு பொதுப்படையாக சொல்ல முடியாது வளவன். இங்கு கனடாவில் இன்னும் நூலகத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளது. வெறுமனே புத்தகங்களை வாசிக்கவும், தற்காலிகமாக இரவல் எடுப்பதுக்கும் என்று இல்லாமல், அமைதியாக இருந்து படிக்கவும், ஆசிரியருடன் வந்து மேலதிகமாக கற்கவும், கணணியில் இருந்து பிரதியெடுக்கவும், நல்ல விவரணங்களை பார்க்கவும் என்று ஒரு நூலகத்தின் பயன்பாடு விரிந்து செல்கின்றது. தாயகத்திலும் இவ்வாறு நூலகப் பாவனை விரிவடைந்து செல்லுமாயின் மாணவர்களுக்கும் கற்க நினைப்பவர்களுக்கும் பயனாக அமையும்.
 8. 1883 : கொட்டாஞ்சேனையில் இலங்கையின் முதல் மதக் கலவரம் ( கொழும்பின் கதை - 11) - என்.சரவணன் கொட்டாஞ்சேனையின் வரலாற்றைப் பேசும்போது “கொட்டாஞ்சேனை கலவரம்” பற்றி பேசாமல் இருக்க முடியாது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் அதாவது 1883இல் இலங்கையில் முதலாவது வகுப்புவாத கலவரம் நடந்தது. முதலாவது மதக் கலவரமாகவும் அதனைக் குறிப்பிடுவார்கள். “கொட்டாஞ்சேனை கலவரம்” ஆங்கிலேய ஆட்சி கால அரச பதிவுகளில் “Kotahena Riots” என்றே அழைக்கப்படுகிறது. இந்த கலவரம் நிகழ்ந்து முடிந்த பின்னர் இதனை விசாரிப்பதற்காக ஆங்கிலேய அரசினால் அமைக்கப்பட்ட குழு “The Kotahena Riots” என்கிற ஒரு அறிக்கையையும் வெளியிட்டது. 19 ஆம் நூற்றாண்டில் வடக்கில் சைவசமயத்தினரும் தெற்கில் பௌத்த சமயத்தினரும் தமக்கெதிரான கிறிஸ்தவ பிரச்சாரங்களை எதிர்த்து எதிர்ப்ப்ரச்சாரங்களிலும், பகிரங்க விவாதங்களிலும் ஈடுபட்டார்கள். அப்படி தென்னிலங்கையில் நடந்த பஞ்சமகா விவாதங்கள் மிகவும் பிரசித்தி வாய்ந்தவை. அவற்றில் ஒன்று 1873 இல் பாணந்துறை நகரத்தில் நடந்த விவாதம். . இந்த விவாதம் பிரபல பௌத்த பிக்கு மீகெட்டுவத்தே குணானந்த தேரரின் (மொஹட்டிவத்தே குணானந்த என்றும் அழைப்பார்கள்) தலைமையில் ஹிக்கடுவ சிறீ சுமங்கல தேரர் போன்றோரும் இணைந்து கிறிஸ்தவ மதப் போதகர்களுடன் நடந்தது. அந்த விவாதத்தின் உள்ளடக்கம் பல நூல்களாக வெளிவந்துள்ளன. மிசனரி மதமாற்ற நடவடிக்கையை முறியடிக்க பௌத்த பாடசாலை இல்லாததும் பெரிய குறைபாடாக பௌத்தர்கள் கருதினர். 1880 இல் பிரம்மஞான சங்கத்தைச் (Theosophical Society) சேர்ந்த கேர்ணல் ஒல்கொட் இலங்கைக்கு வரும் வரையில் இந்த நிலைமைகளில் அதிகம் மாற்றம் ஏற்படவில்லை. "1873 இல் பாணந்துறையில் நடைபெற்ற பிரபலமான பகிரங்க விவாதமே கேர்ணல் ஒல்கொட் இலங்கை வருவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. அவர் இலங்கை வந்ததும் நேராக கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமய விகாரை வந்து குணானந்த தேரரை சந்தித்தார். கூடவே அவர் பௌத்த மதத்தை தழுவவும் செய்தார். கிறிஸ்தவ சக்திகளை எதிர்கின்ற எதிர்ப்பியக்கங்கள் ஒருபுறம் பலமடையத் தொடங்கியது. ஆரம்பத்தில் காலனித்துவ எதிரிப்பின் சாயலைக் கொண்டிருந்தாலும் அதன் உள்ளடக்கம் பௌத்த மறுமலர்ச்சியும் கிறிஸ்தவ எதிர்ப்புமே என்று குமாரி ஜெயவர்த்தனா தனது நூலில் குறிப்பிடுகிறார். மேலும் தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்கள், மது ஒழிப்பு உட்பட பல்வேறு பொது பிரச்சினைகளையும் கையில் எடுத்தார்கள். சில இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளும் இடம்பெற்றன. இலங்கையின் போக்கை இனவாத திசையில் வழிநடத்தியதில் அநகாரிக தர்மபாலாவின் வகிபாகம் என்னவென்பது அனைவரும் அறிந்ததே. அந்த அநகாரிகவை உருவாக்கிய சம்பவம் இந்த கொட்டாஞ்சேனைக் கலவரமாகும். இத்தகைய பின்னணியில் வளர்ச்சியடைந்த பௌத்த மறுமலர்ச்சியின் உந்துதலால் பௌத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் விரிசல் அதிகரித்ததுடன், பரஸ்பர சந்தேக உணர்வும், ஆங்காங்கு முறுகல் நிலையும் வளரத் தொடங்கின. பௌத்த வணிகர்கள், அரச உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் பௌத்த எழுச்சியை ஆதரிக்கத் தொடங்கியதுடன் கிறிஸ்தவ மேலாதிக்கத்துக்கு எதிர்த்து செயல்பட்டனர். கொட்டாஞ்சேனை தீபதுத்தாமாறாமயவில் தலைமை மதகுருவாக இருந்த மீகெட்டுவத்தே குணானந்த தேரர் அந்த விகாரையில் உள்ள புத்தர் சிலைக்கு கண்களை வைப்பதற்கான வைபவத்தை 1883 பெப்ரவரி மாதம் நடத்த திட்டமிருந்தபோது பிரதான அரச வைத்திய அதிகாரி ஒரு அறிக்கையை அனுப்பி வைத்திருந்தார். அதன்படி கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பரவி வரும் நோயொன்றின் காரணமாக இந்த வைபவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்பதற்கு குணானந்த தேரர் ஒப்புக்கொண்டபோதும் இந்த செய்தியின் பின்னணியில் சதி இருப்பதாக சந்தேகித்தார். இதற்கு முன்னரும் 1872இல் கொச்சிக்கடையிலும் 1880இல் மாதம்பிட்டியிலும் பௌத்த பெரஹரவின் போது கல் எறிந்து குழப்ப முயற்சித்ததையும் முகத்துவாரத்தில் பாதையை மறித்த சம்பவத்தையும் அவர் நினைவுபடுத்தினார். சிலைகளுக்கு கண் வைக்கும் வைபவத்துக்கு ஊர்வலமாக வந்து பூஜைகளை செய்யும்படி பெளத்தர்களைக் கேட்டுக்கொண்ட குணானந்த ஹிமி அதற்கான போலிஸ் ஒப்புதலையும் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து பலர் தீபதுத்தமாறாமய விகாரைக்கு சென்றார்கள். அந்த விகாரையின் ஒரு பகுதியில் கந்தசுவாமி கோவில் ஒன்று இருந்ததாகவும் அதற்கும் பௌத்த துறவிகள் திருவிழா நடத்தியதாகவும் 1887இல் வெளிவந்த ரிவிரெச பத்திரிகை கூறுகிறது. பெளத்தர்கள் இவ்வாறு அணிதிரள்வது தம்மை சீண்டும் நடவடிக்கையாக சந்தேகித்தனர். ஏற்கெனவே பாணந்துறை விவாதத்தில் குணானந்த தேரர் தலைமையிலான பௌத்த தரப்பே வென்றிருந்ததும் அதிருப்தி நிலையை உருவாக்கியிருந்தது. கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயம் கட்டப்பட்டுகொண்டிருந்த காலம் அது. தீபதுத்தமாறாமய விகாரைக்கும் புனித லூசியாஸ் தேவாலயத்திற்கும் ஏறத்தாழ ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரமே உள்ளது. அன்றைய மிசனரி திருத்தூதர் ஜே.மாசிலாமணி இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு 6ஆம் திகதியே சில எச்சரிக்கையை எழுத்து மூலம் செய்திருந்தார். ஈஸ்டர் பண்டிகைக் காலத்தில் பெரிய வெள்ளி மற்றும் குருத்து ஞாயிறு ஆகிய தினங்களில் பௌத்த பெரஹரவுக்கு அனுமதி வழங்குவது முறுகலை ஏற்படுத்தும் என்றும் சில அசம்பாவிதங்கள் நடக்கவிருப்பதாக கதைகள் உலவுவதாகவும், வழமைபோல ஈஸ்டர் காலத்து புனித ஊர்வலத்தை இடையூறு இல்லாமல் நடத்திமுடிக்க ஒத்துழைக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடித விபரங்கள் “The Kotahena Riots” அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறன. பெரிய வெள்ளிக்கு முன்னர் நடந்த பெரஹர நிகழ்வுகளுக்கு போலீசார் பந்தோபஸ்து வழங்கியிருக்கிறார்கள். சில கத்தோலிக்கர்கள் கல்லெறிந்தார்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைதும் செய்யப்பட்டிருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பெரிய வெள்ளியன்று நடத்தப்படவிருந்த புனித ஊர்வலத்துக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. மார்ச் 25 குருத்து ஞாயிறன்று மதியம் 12 வரை தேவாலய பூஜைகளுக்குப் பின்னர் பெரஹரவுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டிருந்தன. இலங்கையில் எந்த மூலையிலும் எந்த நேரத்திலும் பௌத்த பெரஹர நடத்துவதற்கான அனுமதியை பிரித்தானிய இராணியிடமிருந்து குணானந்த தேரர் பெற்று வந்திருப்பதாகவும் நாடு முழுதும் வதந்தி பரப்பப்பட்டதுடன் அது பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது. கலவரம் அன்று இரவு பொலிஸ் பந்தோபஸ்துடன் பெரஹர பொரல்லையிலிருந்தும் கொள்ளுப்பிட்டியிலிருந்தும் வந்த ஊர்வலம் மருதானையில் இணைந்துகொண்டு கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமய விகாரையை நோக்கி நகர்ந்தது. இதனை தடுத்து நிறுத்த கத்தோலிக்க தரப்பு மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஊர்வலத்தில் இருந்துள்ளனர். குணானந்த தேரர் இந்த பெரஹரவில் பல வித ஆட்டங்களை சேர்த்துக்கொண்டார். தாள வாத்திய அணி, சாட்டையடி, புலியாட்டம், மரபான பேயாட்டம், தீ விளையாட்டு, வில் அம்பு தரித்தவர்கள், பெரிய உருவப்பொம்மை என பலதும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இதற்கிடையில் பெரிய உருவப்பொம்மை குறித்து மின்னல் வேகத்தில் ஒரு வதந்தி பரவியது. அதாவது ஒரு குரங்கொன்றை சிலுவையில் அறைந்து ஊர்வலமாக கொண்டு வருகிறார்கள் என்பதே அது. அன்னை மரியாளைக் கேலி செய்யும் பொம்மைகள் உள்ளன என்றும் பிழையான வதந்தி பரப்பட்டிருந்தது. அதுபோல மறுபக்கம் பெரஹரவைத் தாக்குவதற்காக கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கர்கள் தயாராக நிற்கிறார்கள் என்று ஊர்வலத்தில் ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டிருந்தது. பெரஹரவில் இருந்து பெண்களும் சிறுவர்களும் அகற்றப்பட்டார்கள். ஊர்வலத்தில் கற்களையும். பொல்லுகளையும் தாங்கியவர்கள் இடையில் இணைந்து கொண்டார்கள். பெரஹர கொட்டாஞ்சேனையை நெருங்கியபோது திடீரென்று புனித லூசியாஸ் ஆலயத்தின் மணிகள் பலமாக அடிக்கத் தொடங்கியதும் அனைவரும் குழம்பிப்போனார்கள். பலர் தேவாலயத்தை சூழ்ந்தனர். அந்த மணியை யார் எதற்காக அடித்தார்கள் என்பது பற்றி போலீசாரால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அனால் அந்த ஒலி ஒரு பெரிய கலவரத்தையே உண்டு பண்ணியிருந்தது. பரஸ்பர சந்தேகங்கள், ஊகங்கள், வதந்திகள், பய உணர்ச்சி, தூண்டுதல், எதிர்பாரா திடீர் சம்பவங்கள் எல்லாம் சேர்ந்து ஆளையால் கொலைவெறிகொண்டு தாக்கிக்கொண்டனர். கட்டுப்படுத்துவதர்க்காக அழைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் வந்து சேர்ந்தபோது அனைத்தும் ஓய்ந்திருந்தது. இந்த கலவரத்தில் பௌத்த தரப்பை சேர்ந்த ஜூவன் நைதே என்பவர் கொல்லப்பட்டார். 12 உட்பட 30 பேர் மோசமான காயத்துக்கு உள்ளானார்கள். அதே நாள் பலங்கொட, கண்டி போன்ற இடங்களிலும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன. அன்றைய தேசாதிபதி கொட்டாஞ்சேனை விகாரைக்கு விரைந்து குனானனந்த தேரருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக தொடர்ந்தும் 30ஆம் திகதி வரை பெரஹர நடத்த அனுமதி வழங்கினார். சம்பவம் நடந்து அடுத்தடுத்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்த சிறு தேவாலயங்கள் தீயிடப்பட்டன. அதுபோல பௌத்த பெரஹரக்களும் குழப்பப்பட்டன. தீபதுத்தமாறாமய விகாரையை கொளுத்தி குணானந்த தேரரை கொல்வதற்காக நீர்கொழும்பிலிருந்து 3000 பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற வதந்தியும் வேகமாக பரப்பபட்டிருந்தது. இந்த சம்பவத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கையை வெளியிட்டதோடு சரி. இந்த சம்பவத்துக்காக எவரும் கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. குணானந்த தேரர் பௌத்தர்களை மத ரீதியில் தூண்டுவதற்கு எப்படிப்பட்ட பிரசாரங்களை எல்லாம் மேற்கொண்டார் என்பதற்கு அதன் பின் வெளிவந்த அவரது வெளியீடுகள் சாட்சி. கொட்டாஞ்சேனை சந்தியில் சில வருடங்களுக்கு முன்னர் குணானந்த தேரருக்கு சிலை கட்டப்பட்டது. நன்றி - தினகரன் 16-012022 https://www.namathumalayagam.com/2022/01/Kotahens.html?fbclid=IwAR3akrHEjS1Rx1gzGuUsCEsPAnwKPK09Zddy3u8WPbhjjW7F5jl1tMWdveM
 9. என்றாவது ஒரு நாள் இலங்கையை தமிழர்களுடன் சேர்ந்து இந்தியா கைப்பற்றி விடும் என்பது தான் சிங்கள மக்களின் இரத்தத்துடன் கலந்து இருக்கும் அச்சம். சில சிங்கள பேராசிரியர்கள் சொல்லியுள்ளார்கள், இந்தியா மட்டும் அருகில் இருந்திராவிடின் இலங்கையில் சிங்கள மேலாதிக்கத்தை பேணுவதற்கான காரணமே சிங்களவர்களுக்கு கிடைத்து இருக்காது என்று. ஆனால் இன்று இந்தியா எந்த முயற்சியும் எடுக்காமல் இலங்கையே தன்னை இந்தியாவுக்கு தாரை வார்க்கும் போல தெரிகின்றது. சீனா மட்டும் இல்லையெனில் இந்தியா இலங்கையை கடன் கொடுத்தே வாங்கி விடும்.
 10. ஐயா சம்பந்தரின் வெருட்டலில் கோத்தா பயந்து போய் அநேகமாக அமெரிக்காவுக்கு திரும்ப போய் ஒழிந்து கொண்டலும் ஆச்சரியம் இல்லை. ஆரு கண்டது, தமிழ் ஈழம் தரக் கூட வாய்ப்புள்ளது.
 11. இந்த வியத்கமவை நம்பித்தான் 69 இலட்சம் வாக்கு போட்டு, இலங்கையின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொருளாதார மற்றும் வாழ்வியல் நெருக்கடியை கொண்டு வந்து இருக்கின்றனர்.
 12. ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலைக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்பாட்டங்களில் நேரடியாக கலந்துகொண்டவன் நான் ரஞ்சித். என்னால் ஒரு போதுமே இவரை மட்டுமல்ல இவர் போன்ற எவரையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் தாயக மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். முப்பது வருடம் போரினால் இழுபட்டு சிதையுற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். படுகொலைகளை நேரில் அனுபவித்தவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். நான் இன்னும் விட்டுட்டு வந்த மண்ணின் நினைவுகளுடன் இருக்கின்றேன. அவர்கள் அதில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் என்னால் / புலம்பெயர்ந்த எம்மால் அவர்களை போன்று சிந்திக்க கூட முடியாமல், அவர்களின் தெரிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்நியப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
 13. இங்கு தொற்று வராத குடும்பங்களை தனிமைப்படுத்தினால் நல்லது என்ற நிலையில் இருக்கின்றது நிலமை. எல்லா இடத்திலும் அந்தளவுக்கு பரவுகின்றது. என் நண்பர்கள், உறவினர்கள் என்று பலருக்கும் வந்து போயுள்ளது. எனக்கோ என் குடும்பத்துக்கோ ஏற்கனவே வந்து சத்தமில்லாமல் போய்விட்டதா அல்லது இனித்தான் வர போகின்றதா என தெரியவில்லை. வரும் திங்கள் பாடசாலைகளை திறக்கின்றனர். இரட்டை சுனாமி நிலை இனி ஏற்படப் போகுது. வீட்டில் இருந்து படிப்பதை விட பாடசாலைக்கு போய் படிப்பது அவர்களின் உளவளத்துக்கு நல்லது என்பதால் அனேகமானோர் இணையவழி கற்பித்தலுக்கு விடாமல் பாடசாலைக்கு அனுப்புகின்றனர்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.