Jump to content

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Posts

  14184
 • Joined

 • Days Won

  155

Everything posted by நிழலி

 1. காதல் திருவிழா சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க , “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா. கலியாணம் எண்டு பேசத் தொடங்கின உடனயே பேசிறதை குறைச்ச தம்பி , நான் எப்ப அம்மாவைக் கேட்டனான் எண்டு யோசிக்க , “ அதுக்கென்ன வெள்ளிக்கிழமை நல்லூரில காலமை பூசையில பாப்பம் ‘ எண்டு முடிவாகிச்சுது. ரெண்டு பெண்டாண்டிக் காரரா இருந்தாலும் நல்லூரான் நல்லது செய்வான் எண்டு பெண்பார்க்கும் படலம் பொதுவா இங்க தான் நடக்கும் . அப்ப கொழும்பில Majestic City மாதிரி யாழ்ப்பாணத்தில எல்லாப் பெடியளுக்கும் லேசியா பெட்டைகளை பாக்கிறதெண்டால் நல்லூர் தான். கொடியேத்தத்தில பாத்து மஞ்சத்தோட கேட்டு திருக்கலியாணத்தில ஒப்பேத்தின கதைகள் சில இருக்கு. பாக்காமல் காதல் , பாத்தவுடன் காதல் , படித்ததோட காதல், பழகிப் பாத்து காதல் , எண்ட மாதிரி நல்லூரில பாத்து ஆனால் பேசாமலே ஒப்பேறிற காதல் தான் கனக்க. காலமை கோயிலுக்கு வாற பிள்ளைகள் அநேமா அம்மாமாரோட தான் வருவினம். குறூப்பா வாறதுகள் பின்னேரம் தான் . குறூப்பா வாறதில ஒண்டைப் பாக்க வெளிக்கிட்டால் அதோட கூட வாறது எங்களைப் பத்தி ஏதாவது அள்ளி வைச்சு கவித்துப் போடும். இவளவை எல்லாம் சாணக்கியச் சகுனிகள், “ ஏற்கனவே இருக்காம் , இவன் எல்லாரையும் பாக்கிறவன் , போன நல்லூரில இன்னொண்டுக்குப் பின்னால திரிஞ்சவன்” எண்டு சொல்லி முளைக்காமலே கிள்ளிப் போடுங்கள். ஆனால் பெடியள் எல்லாம் ஆம்பிளை அன்னங்கள். “ மச்சான் உன்டை ஆளைக் கண்டனான் இண்டைக்கு சிவப்பு சாறியோட , சாமிக்குப் பின்னால தான் வாறா , அம்மாவைக் காணேல்லை ஆரோ ஒரு அக்கவோட தான் கண்டனான் “ எண்டு GPS location accurateஆ தருவாங்கள். இதை எல்லாம் சொல்லீட்டு வெளிக்கிட முதல் “ என்டை ஆளைக் கண்டனியே” எண்டு ஏக்கத்தோட கேக்கிறவனுக்கு இல்லை எண்டாம, “ மச்சான் எப்பிடியும் சங்கீதக் கச்சேரிக்கு வருவா கண்டு பிடிக்கலாம்” எண்டு நம்பிக்கையை குடுத்திட்டுப் போவான் மற்றவன். என்னைப் பொறுத்தவரை நல்லூர்க்கந்தன் காதல் கந்தன் . நீளமும் அகலமுமான வீதி, இடது பக்கம் ஆம்பிளைகள் வலது பக்கம் பொம்பிளைகள் எண்டு பாக்கிறதுக்கு சுகமான segregation, திரும்பிப் பாத்து யாரிட்டையும் மாட்டுப்படாம நேராவே பாக்க வசதியா சாமியைப் பாத்து நடக்கிற வழமை , அடிக்கடி சாமியை நிப்பாட்டி வைக்கிற மண்டபப்படி , சாமியே நிண்டு கேக்கிற பத்மநாதனின்டை நாதஸ்வரம் எண்டு கண்ணோடு கண்ணை நோக்க எல்லா வசதியும் முருகன் செய்து தருவான் . ஒரு பிள்ளையப் பாத்து ஒப்பேத்திறது எண்டால் அது கொஞ்சம் பெரிய வேலை . ஆளைப் பாத்து select பண்ணிறதே கஸ்டம். இண்டைக்குப் பாத்து இதுதான் எண்டு முடிவெடுத்துட்டுப் போக அடுத்த நாள் என்னுமொண்டு நல்லதாத் தெரியும் இல்லாட்டி முதல் நாள் பாத்தது ஏற்கனவே book பண்ணீட்டாங்களாம் எண்டு ஏக்கங்கள் ஏமாற்றங்களாகும். இதை எல்லாம் தாண்டி சரியானதைக் கண்டுபிடிச்சு பிறகு எந்த barrierஆல உள்ள வாறது, எங்க சைக்கிள் விடிறது , எங்க செருப்பு விடிறது, எத்தினை மணிப்பூசைக்கு வாறது, ஆரோட வாறது , உள்வீதி மட்டும் சுத்துமா வெளிவீதியும் சுத்துமா திரும்பிப் போகேக்க எங்க கச்சான் வாங்கிறது , இசைக்கச்சேரி கேட்டிட்டுப் போகுமா கேக்காமப் போகுமா எண்டு நிறைய intelligence report எல்லாம் எடுத்திட்டுத் தான் வேலை தொடங்கிறது. முதல்ல கொஞ்சம் கொஞ்சமா பின்னால போய் , அதுகும் அவைக்குத் தெரியாமப் போய், அதுக்குப் பிறகு கொஞ்சம் தெரியிற மாதிரிப் போக வெளிக்கிட , பிள்ளைக்கு தெரியவர முதல் அம்மா கண்டுபிடிச்சு முறைச்சுப் பாக்க பல காதல் மொட்டுக்கள் கண்ணகி அம்மாக்களின் கண் பார்வையிலேயே கருகிப்போகும். அதோட நாங்கள் பாக்கிறதை கண்டுபிடிச்சு எங்களைத் திரும்பிப் பாக்காமல் அம்மாக்களிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு காணாமல் போன காதல்களும் உண்டு . இதையும் தாண்டி புனிதமாகிறது சில loveவுகள் தான். பின்னால வாறதைக் கண்டு பாத்தும் பாக்கமல் நிக்கிறது தான் முதலாவது சமிக்கை , இதுவே நம்பிக்கையை ஒளியைத் தரும் . அவளவை ஒரு நாளும் நிமிந்தோ திரும்பியோ பாக்கமாட்டினம் ஆனாலும் நாங்கள் பின்னால வாறது தெரிஞ்சு கச்சான் கடை, செருப்புக் கடையில கொஞ்சம் கூட நேரம் மினக்கிடிறது எங்களுக்காகவே இருக்கும், இது நம்பிக்கையை தும்பிக்கை ஆக்கும். முதல்ல அம்மவோட வந்தவை அம்மாவை விட்டிட்டு பக்கத்து வீட்டு அக்காவோட வாறது நல்ல சமிக்கை. ஏற்கனவே எங்களைப்பத்தி சொல்லப்பட்டிருக்கும் அக்காவுக்கு. வாற அக்கா வடிவா ஏற இறங்க எங்களைப் பாத்து குடுக்கிற report ல தான் முடிவு தங்கி இருக்கும். கடைசீல அக்காவும் வெட்டப்பட்டு ஒரு friend ஓட வருவினம் , இப்ப முக்கியம் அந்த friend க்கு நீங்கள் நல்லவராகத் தெரியிறது. அந்தப்பக்கம் அம்மா அக்காவாகி , அக்கா friend ஆகேக்க நாங்களும் அந்த பரிணாம வளரச்சிக்கு ஏத்த மாதிரி பலவாகத் தொடங்கி , அக்காவோட வரேக்க ரெண்டாகி , friend ஓட வரேக்க தனியா இருக்க வேண்டும் இல்லாட்டி சில “ நல்ல “ நண்பர்களினால் அவளவையின்டை friends reject பண்ணிப் போடுவினம் . ஆயிரம் பேர் இருந்தாலும் பாத்தோண்ணயே இது தான் எனக்கு எண்டு பெடியள் முடிவெடுத்திடுவாங்கள் ஆனால் , பெட்டைகள் அப்பிடி இல்லை . முக்கி முக்கி six pack வைச்சவனையும் , பொக்கற்றுக்க ஆயிரம் ரூபா வைச்சிருந்தவனையும் , வடக்கு வீதீல சாமி வரேக்க மடிச்ச சட்டைக்கையோட நான் medical student இல்லாட்டி கம்பஸ் காரன் எண்டு நிக்கிறவனையும் எல்லாம் பாக்காம, நல்லூர் பக்தனா வெறும் மேலோட வாற single pack காரனுக்கு எப்பிடி ஓம் எண்டு சொல்லுறாளவை எண்டிறது முருகனுக்குத் தான் வெளிச்சம். என்ன தான் தலைகீழா நிண்டாலும் பல காதல் பயணங்கள் சண்டேஸ்வரர் தேங்காயோட சிதறிப் போக , ஆனாலும் கந்தன் கைவிட மாட்டான் எண்டு அடுத்த முறையும் முருகன்டை வாறவை தான் கன பேர். இன்று ஆறாம் நாள் திருவிழா. Dr.T. கோபிசங்கர் யாழப்பாணம்
 2. பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம் எனும் திரியில் இணைக்கப்பட்ட அநாகரிகமான மீம்ஸ் சும் அதையொட்டிய கருத்தொன்றும் நீக்கப்பட்டன. அநாகரீகமான மீம்ஸ்கள் இணைக்கப்படுவது களவிதிகளை மீறும் செயல் என்பதை கருத்தில் கொள்க.
 3. இவர்களது முகனூல் பக்கம் இதுதான் என நினைக்கின்றேன். https://www.facebook.com/people/தமிழ்-தேசிய-பண்பாட்டுப்-பேரவை/100005787407140/ யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு சிறு பகுதியினரது அமைப்பு போல உள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக நிஷாந்தன் இருக்கின்றார். இவர் மீது அண்மையில் வாள் வெட்டும் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் சொல்கின்றன.
 4. நல்ல சிறு கட்டுரை. இணைப்புக்கு நன்றி கிருபன்
 5. நீங்கள் சொல்வது சரி, ஆனால் நாயை கொடூரமாகக் கொன்றவர்களை இதனைக் கூறி நியாயப்படுத்த முடியாது. கண்டிப்பாக தண்டனை கொடுத்து ஆக வேண்டும்.
 6. கடந்த சனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் / தமிழ் பேசும் மக்களின் தெரிவாக ரணில் தானே இருந்தார்.வடக்கு கிழக்கில் வாக்களித்தவர்களில் அனேகர் ரணிலுக்குத் தானே போட்டு இருந்தனர். கோத்தாவும் தான் சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரமே தெரிவானவர் என்று இதனால் தானே சொல்லிக் கொண்டு இருந்தார். அப்படியிருக்க சுமந்திரன் தமிழ் பேசும் மக்களின் தெரிவுக்கு எதிராக முயற்சிகள் எடுக்கின்றாரா?
 7. இதுவரைக்கும் பல சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என்பது சந்தேகத்தை வரவழைக்கின்றது. இச் சடலங்கள் காணாமல் போன தமிழ் இளைஞர்களின் சடலங்களாக இருக்க வாய்ப்புள்ளது. நிலவறைகளிலும் கடும் சிறைகளிலும் இன்னும் மிச்சமிருக்கும், முள்ளிவாய்க்காலில் இருந்து காணாமல் ஆக்கடிக்கப்பட்ட தமிழர்களில் சிலரை தெரிவு செய்து படுகொலை செய்து கடலில் போட்டு சிங்கள மக்கள் மத்தியில் அச்ச நிலையை உருவாக்கின்றனரோ என நினைக்கின்றென். ஈஸ்டர் தாக்குதலில் பெரும்பாலும் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் மற்றும் தமிழர்களாக இருந்தவர்கள் என்பதைப் போன்று இப்போதும் கொல்லப்படுவது தமிழர்கள்; லாபமடைவது சிங்கள பெளத்த அரசு என்ற சமன்பாடு மீண்டும் அரேங்கேற்றப்படுகின்றதா?
 8. அவர் இறந்து விட்டார் என விகடன் செய்தியில் போட்டுள்ளார்கள். https://www.vikatan.com/news/accident/man-died-in-a-terrible-accident-during-the-temple-festival
 9. ஒரு அடிப்படைவாத பயங்கரவாதியை கொல்வதால் இன்னொரு அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பு சனனாயக முறையின்றி ஏற்படுத்திய ஆட்சியுடனான உறவு பாதிக்கபடுமா என கவலை கொண்டு இருக்கின்றார் வல்லரசு ஒன்றின் சனாதிபதி.
 10. கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 11. செய்திகளை கிளிக்கினால் இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. விளம்பரம் ஒன்றை கிளிக்கி உள்ளே சென்றாலோ அல்லது காணொளியில் இடையில் வரும் விளம்பரங்களை முழுமையாக பார்த்தாலோ மாத்திரமே வருமானம் வரும்.
 12. தெளிவான கருத்து. முதல் பச்சை என்னுடையது தான் என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப் போரில் மேற்கின் புரொக்சி யுத்தத்தை நடாத்தும் உக்ரைன் வெல்லக் கூடாது. அதே நேரம் ரஷ்சியாவும் வெல்லக் கூடாது.
 13. உடான்ஸ் சாமியாருக்கு நிழலியானந்தா எழுதிய பதிலை அவர் புரிந்து இருப்பார். மேற்கை ஆதரித்தால் என்ன எதிர்த்தால் என்ன, தமிழர்களுக்கு அதில் எந்த பிரதிபலனோ அல்லது அனுகூலங்களோ அறவே இல்லை என்பதைத் தான் சுவாமி நிழலியானந்தாஜி சொல்ல வந்தார். ஆக்கிரமிப்பு + அட்டூழிய போருக்கு எதிராக கதைப்பவர்கள் ஒரு போதுமே மேற்கை ஆதரிக்க முடியாது என்பது தான் யதார்த்தம், முக்கியமாக அமெரிக்காவின் முக்கிய பங்காற்றும் நேட்டோவை ஆதரிக்க முடியாது. அமெரிக்காவின் இரட்டை வேடம் மீண்டும் ஒரு முறை, கடல் தாண்டி, எல்லை தாண்டி, இன்னொரு தேசத்தில் வைத்து பத்திரிகையாளரை படுகொலை செய்ய உத்தரவு இட்ட, யேமனில் தினமும் பலரை கொன்று குவிக்கின்ற சவூதியின் இளவரசரை சந்தித்து கைலாகு (அல்லது கை முட்டி லாகு) கொடுத்ததன் மூலம் அம்பலமாகியது. தான் வாழ்கின்ற நாட்டுக்கு எல்லா விடயத்திலும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் அதன் தவறுகளை சுட்டிக் காட்டி எதிர்க்க கூடாது என்றும் நீங்கள் சொல்வதைத் தான் மிக மோசமான போர்க் குற்றங்களை புரிந்த இலங்கை இராணுவத்தினரை ஆதரிக்கும் சிங்களவர்களும் சொல்கின்றனர். இந்த விடயத்தில் நீங்கள் அவர்களுடன் ஒத்துப் போகின்றீர்கள்.
 14. சாதாரண மழையால் வீதிகளின் பள்ளங்களில் தேங்கி நிற்கும் நீரைக் கூட கடக்க பயந்த முதுகெலும்பற்ற தமிழ் தேசிய கூத்தமைப்ப்பையும் தமிழ் கட்சிகளையும் பார்த்து இப்படி எல்லாம் கேட்கக் கூடாது.
 15. நிழலியானந்தா எலிபரப்புச் சேவையின் காலை செய்தி: மேற்கை ஆதரித்து, உக்ரைன் போரில் ரஸ்யாவை எதிர்த்து, ஆக்கிரமிப்புக்கு எதிராக கடுமையாக தட்டச்சில் போரை நிகழத்தியதற்காக மேற்கு ரணிலுக்கு தொலைபேசி எடுத்து உடனடியாக வடக்கு கிழக்கை தமிழர்களின் தாயகமாக அங்கீகரித்து சுய நிர்ணய உரிமையுள்ள தீர்வை கொடுக்குமாறு உத்தரவு! டொட்டடாங்க்
 16. தாயக அரசியலில், புலம்பெயர்ந்த தமிழர்களின் வினையாற்றலுக்கு இனி இடமில்லை, அவர்கள் அதற்கான வெளியை இனி தரப்போவதும் இல்லை. 2009 இன் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்ந்த தலைமைகள் இங்கு புலம்பெயர் தேசங்களில் இல்லை.
 17. ஆனால் இந்த பச்சை இனவாதி, மற்றும் விமல் வீரவன்ச, உதய கம்மனபில மற்றும் ஆனந்த வீரசேகர ஆகிய வெளிப்படையாகவே தம்மை இனவாதிகளாக வெளிக்காட்டுகின்றவர்களின் ஆதரவினைப் பெற்ற சீன ஆதரவாளர் டலசு சனாதிபதியாக வராமல் போனது நாட்டுக்கு நன்மையே.
 18. இவர்கள் எப்படியோ எவரது கையை காலை பிடித்தாவது அதிகாரம்மிக்க ஒரு பதவியை பெற்றுக் கொண்டு தாமும் முன்னேறி, தம் சமூகத்தையும் முன்னேற்றி, தம் அதிகாரத்துக்குட்பட்ட பதவிகளில் தம் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு (மட்டும்) வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்வர். ஆனால் எம்மவர்களோ தோற்றுப் போகும் தரப்புக்கு வாலாட்டிக் கொண்டு, இனவாத சாக்கடையில் ஊறிக் கிடப்பவர்களுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, தம்மால் ஒரு போதுமே செய்ய முடியாத விடயங்களை முடித்துக் கொடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டு நிமிரவும் முடியாத வயது வந்தும் அட்டையைப் போல நாற்காலியில் ஒட்டிக் கொண்டு காலம் கழிப்பர்.
 19. கட்டுரைக்கு நன்றி ரஞ்சித், இக் கட்டுரை தமிழ் கார்டியனில் வந்த இந்தக் கட்டுரையின் தமிழாக்கமா? Dullas Alahapperuma - Another racist throws his hat in the ring to be Sri Lanka’s next president | Tamil Guardian
 20. இப்படி அறிவித்துப் போட்டு, ரகசிய வாக்கெடுப்பில் ரணிலுக்கு வாக்களித்து இருப்பினம்.
 21. ஆனால் ஜேர்மனிக்கு கொடுக்கப் போவதாக கனடிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு உக்ரைன் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. அத்துடன் நேற்று உக்ரைன் வம்சாவளிகள் கனடாவில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர் என அறிய முடிகின்றது. எரிபொருட்களின் விலையேற்றத்தால் ரஷ்சியா நட்டமடையும் என மேற்குலகு எதிர்பார்த்த விடயம், பிழைத்துப் போயுள்ளது. உக்ரைன் போர் தொடங்கியதன் பின்னர் ரசியா எரிபொருள் விற்பனையில் முன்னரை விட அதிகமாக சம்பாதித்துள்ளது. ஆனால் கனடா போன்ற நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே போவதால், ஒரு கட்டத்தில் மேற்கு ரசியாவுக்கு எதிராக விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மெல்ல மெல்ல கைவிடக் கூடிய நிலை தோன்றும். வழக்கம் போல மேற்கை நம்பிய நாடு ஒன்று நாசமாகப் போகும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.