Jump to content

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Posts

  13824
 • Joined

 • Days Won

  151

Everything posted by நிழலி

 1. நல்ல வேளை நான் தப்பித்தேன். ஆயினும் வெறும் தவறான அழைப்பினூடாக தொடர்பை பேணி காதல் கொண்ட பெண் ஒருவர், ஒரு போதும் நேரில் சந்திக்காத ஒருவருக்காக, அவர் தன்னை கலியாணம் கட்டுவார் என்ற நம்பிக்கையுடன்,அப்பா அம்மாவுக்கும் தெரியாமல் நகை பணம் எல்லாவற்றையும் வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு போன ஒரு படு முட்டாள் என உங்கள் இரு பெண்களும் புரிந்து கொண்ட பின்பும் அந்தப் பெண் மீது கோபம் கொள்ள மாட்டார்கள் என்பதை நம்ப கடினமாகவே உள்ளது.
 2. பாலியல் வன்கொடுமை ஒரு மோசமான வன்முறை, அதுவும் கூட்டு பாலியல் வன்கொடுமை என்பது கொடூரமான வன்முறை. இதைச் செய்தவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆயினும் இதை வாசிக்கும் போது பாதிக்கப்பட்ட பெண் மேல் அனுதாபம் வருவதற்கு பதிலாக கோபம் தான் வருகின்றது.
 3. அப்பவும் அடுத்த தைமாதத்துக்குள் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுத்தருவோம் என்று தமிழ் தலைமைகள் சொல்லிக் கொண்டு இருக்கும். அநேகமாக சம்பந்தர் தான் தலைவராக இருப்பார்.
 4. இலங்கையின் வத்திக்கான் கொட்டாஞ்சேனை புனித லூசியா (கொழும்பின் கதை - 10) - என்.சரவணன் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள புனித லூசியா பேராலயம் (ST. LUCIA’S CATHEDRAL) மிகவும் பிரசித்தி பெற்றது. அது இலங்கையின் ரோமன் கத்தோலிக்கப் பேராயத்தின் பேராயரின் இருப்பிடம் ஆகும். இலங்கையின் மிகப் பழமையானதும், பிரமாண்டமானதுமான திருச்சபை (Parish) அது. இரு நூற்றாண்டு வரலாற்றை உள்ளூர அமைதியாக வைத்திருக்கும் தேவாலயம் அது. கொழும்பு நகரின் வடக்குப் பகுதியில் உள்ள கொட்டாஞ்சேனை அமைந்துள்ளது. 18,240 சதுர அடி பரப்பளவையும் மேலே கூரை வரை 151 அடிகள் உயரத்தையும் கொண்டது. இந்த தேவாலயத்தில் சுமார் ஆறாயிரம் பேர் வரை கூடக்கூடியது. இப் பேராலயம், புனித லூசிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் (டச்சு) காலத்தில் கத்தோலிக்கரின் வணக்கத்தலமாக சிறிய கட்டிடமாகவே இது இருந்தது. இந்த தேவாலயத்தின் முக்கியத்துவமே அது வத்திகானிலுள்ள உலக கிறிஸ்தவர்களின் தலைமைப் புனித தேவாலயமான புனித பேதுரு பேராலயத்தின் சாயலைக் கொண்டிருப்பது தான். அதுபோல பண்டைய கிரேக்க கட்டிட தூண்களை நினைபடுத்தும் வகையில் முகப்பின் தூண்கள் காணப்படுகிறது. கத்தோலிக்க மதத்தின் புனிதர்களில் ஒருவராக கருதப்படும் கன்னி புனித லூசியின் (Saint Lucia) பெயரில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் இலங்கையின் மிகப் பழமையான, மிகப்பெரிய திருச்சபை பேராலயமாக கருதப்படுகிறது. ஏழு சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட உயரமான குவிமாடத்திற்கு முடிசூட்டப்பட்டப பட்டது போல வளைந்த அரைப்பந்து கான்கிரீட் கூரையின் மீது வானத்தை நோக்கி பார்த்தபடி நிற்கின்ற சிலுவையும் இந்த தேவாலயத்தின் மீது ஒரு பிரமாண்ட உணர்வை ஏற்படுத்திவிடும். டச்சு காலத்தில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் ஆங்கிலேயர் காலத்தில் பெரிய அளவில் கட்டிமுடிக்கப்பட்டு புதுப்பொழிவு பெற்றது. இந்த தேவாலயத்தின் ஒரு பகுதி சேவையாக 1856இல் தொடங்கப்பட்டது தான் அருகில் உள்ள புனித பெனடிக் வித்தியாலயம் (இப்போது கல்லூரி). அதுபோல அருகில் உள்ள கன்னியாஸ்திரி மடமும் 1869 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். உள்ளே உள்ள சிலைகள் எல்லாமே மிகவும் கலைநுட்பத்துடன் அமைக்கப்பட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னைய சிலைகள். 1924 ஆம் ஆண்டு சிற்பக் கலை அறிந்த பாதிரியார் ஜே.மிலினர் (Fr. J Milliner) தான் இதனை முடித்தார். ஐரோப்பிய நாடுகளில் இருந்து கப்பல்களின் மூலம் எடுத்து வரப்பட்ட சிலைகள் உள்ளே வைக்கப்பட்டுள்ளன. வழமைக்கு மாறான விசித்திரமாக; இருண்ட நிறத்தினாலான கன்னி மேரியின் சிலை இங்கே உள்ளது. அதை கொட்டாஞ்சேனையின் புனிதப் பெண்மணியாக ("Our Lady of Kotahena") கொண்டாடப்படுகிறது. அந்தச் சிலையை ஆண்டுதோறும் மே மாதம் கொட்டாஞ்சேனை வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. 19ஆம் நூற்றாண்டில் புனித லூசிய தேவாலயத்தின் தோற்றம் இந்தத் தேவாலயத்தின் உயரத்தில் வைக்கப்பட்டுள்ள மணி சுமார் இரண்டு டன் எடையைக் கொண்டது. 1903 ஆம் ஆண்டு பிரான்சிலுள்ள மர்சீலஸ் (Marseilles) என்கிற தேவாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. கிறிஸ்தவ சின்னங்களால் ஆன வேலைப்பாடுகளுடன் மிகுந்த கலைநுணுக்கத்துடன் செய்யப்பட்ட மணி அது. ஒரு வகையில் கொட்டாஞ்சேனை ரோமன் கத்தோலிக்க நகரம் என்று கூறினால் அது மிகையாகாது. 18ஆம் நூற்றாண்டில் கொட்டாஞ்சேனை கொச்சிக்கடைப் பகுதிகளில் கத்தோலிக்கர்களின் செறிவை கருத்திற்கொண்டு ஒரு தேவாலயம் ஒன்றின் தேவையை டச்சு ஆட்சியாளர்களும், மிஷனரிமாரும் உணர்ந்தனர். அங்கே அதற்கு முன் ஒல்லாந்தர் காலத்தில் ஓரத்தோரியன் மிஷனரிகளால் (Orathorian Missionary) கட்டப்பட்டிருந்த ஒரு தேவாலயம் (St. Lucia’s chaple) 1760 அளவில் கட்டப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கொஸ்மோ அந்தோனியோ (Cosmo Antonio) (Miguel de Alburquerque) மிகேல் அல்புர்குவர்க் போன்ற ஓரத்தோரியன் பாதிரியார்கள் இங்கே பூஜைகள் நடத்தியுள்ளனர். டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினரின் நெருக்கடிகளின் காரணமாக அவர்கள் தென்னிந்தியாவில் கோவாவுக்கு திரும்பிவிட்டனர். அப்போது இங்கே தென்னை ஓலைகளால் முதன் முதலில் கட்டப்பட்டிருந்தது. அப்போதெல்லாம் கட்டிடங்கள் இல்லாமலும், பெரும்பாலும் காடுகளாலும் காணப்பட்டதால் கொட்டாஞ்சேனையில் இருந்த இந்த மேட்டுபகுதி உயரமான இடமாக இருந்ததால் தேவாலயத்தின் அமைவிடத்துக்குப் பொருத்தமாக இருந்தது. எனவே தான் ஒல்லாந்தர் இங்கே ஒரு ஒழுங்கான தேவாலயத்தை 1779 ஆம் ஆண்டு நிறுவினர். நிக்கலஸ் ரொட்ரிகோ என்கிற பாதிரியார் தான் இங்கே நிரந்தர தேவாலயத்தை நிறுவம் பணியை 1782இல் மேற்கொண்டார். 1834 இல் தான் கோவாவிலிருந்த ஆயர்களின் அதிகாரத்திலிருந்து இலங்கை விடுபட்டபின் பாதிரியார் வின்சன்ட் ரொசாரியோ (Fr. Vincente Rozairo) அவர்கள் முதலாவது ஆயராக நியமிக்கப்பட்டதுடன் இலங்கையின் முதலாவது கதீட்ரல் தேவாலயமாக 1838 இல் ஆனது. இலங்கையில் ரோமன் கத்தோலிக்க, அங்கிலிக்கன் கதீட்ரல் தேவாலயங்கள் பிற்காலத்தில் பல கட்டப்பட்டபோதும். கொட்டாஞ்சேனை லூசியா தேவாலயம் தான் இலங்கையில் கட்டப்பட்ட முதலாவது கதீட்ரல் தேவாலயம். 1820இலும் 1834இலும் மேலும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல மாற்றங்களுக்கு உள்ளானது. 1852 இல் முதலாவது அடிக்கல் நாட்டப்பட்டு 1873 இல் எச்.டிசில்லானி (H D Sillani), எஸ்.தப்பரானி (Fr. S Tabarrani) ஆகிய திறமையான பாதிரிமார்களின் திட்டத்தின் பிரகாரம் அழகிய வடிவம் கண்டது. 1887 டிசம்பரில் சிறந்த முழுமையான வடிவமைப்பைப் பெற்றது இது. ஆகவே 1887 ஆம் ஆண்டைத் தான் இது உருவாகிய வருடமாக கணக்கிற் கொள்கிறார்கள். சில்லானியைத் தான் இதன் வடிவமைப்புக்கு உரியவராக கருதப்படுகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் அன்றைய ஆயர் கிறிஸ்தோப்பர் பொன்ஜீன் (Christopher Bonjean), பாதிரியார் தங்கநெல்லியிடம் (Tanganelli) ஒப்படைத்தார். ஆயர் கிறிஸ்தோப்பர் ஓராண்டுக்குள்ளேயே ரோமுக்கு அழைக்கப்பட்டுவிட்டார். ஆனால் திரும்பி வந்து இலங்கையில் பல முக்கியப் பணிகளை முன்னெடுத்தார். அன்றைய பாப்பரசர் லியோ (Pope Leo XIII) புனித லூசியா தேவாலயத்தை கொழும்பின் மறை மாவட்டமாக 1885 இல் அறிவித்தார். பேராயரான பொன்ஜீன் புனித லூசியாவின் சிறிய எலும்புப் பகுதியை அதிகாரபூர்வமாக கொண்டுவந்து தேவாலயத்தில் சேர்த்தார். அது இன்றும் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் அவரால் உருவாக்கப்பட்ட புனித ஜோசப் கல்லூரி. அவர் இலங்கைக்கு 1855 இல் முதன் முதலில் வந்ததே யாழ்ப்பாணத்திற்குத் தான். அங்கே செய்த பணிகள் தனியாக தொகுக்கப்படவேண்டியது. அங்கே சிறிய பாடசாலைகள் பலவற்றை கல்லூரிகளாக மாற்றியது அவர் தான். புனித பற்றிக் கல்லூரி அதற்கொரு உதாரணம். கொட்டாஞ்சேனை புனித லூசிய தேவாலயத்தை உருவாக்குவதில் அவர் காட்டிய அக்கறையின் காரணமாக அந்த தேவாலயம் அமைந்திருக்கும் வீதி (கொட்டாஞ்சேனை பஸ் நிலையம் வரையானது) பொன்ஜீன் வீதி என்று தான் இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. பாதிரியார் பொன்ஜீன் அவர்களின் காலத்தை இலங்கை கத்தோலிக்க தேவாலய வரலாற்றின் பொற்காலமென பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். தேவாலயத்தின் இன்றைய முழுமையான தோற்றம் 1902 இல் தான் பூர்த்தியானது. ஆரம்பத்தில் இதன் கட்டுமானப்பணிகள் முடிவடைந்தபோது அன்றே சுமார் 160,000 ரூபா செலவளிந்திருந்தது. இலங்கைவாழ் கத்தோலிக்க மக்களின் நிதிப் பங்களிப்பை செய்திருந்தனர். குறிப்பாக மீனவ சமூகத்தின் உதவியே அதிகளவு பங்களிப்பைத் தந்தது. 1956 ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய பாதிரிமார்களே தலைமை பாதிரிமார்களாக இருந்தனர். 1956 ஆம் ஆண்டு நெருவஸ் பெர்னாண்டோ (Fr. Nereus Fernando) இலங்கையின் முதலாவது கதீட்ரல் பாதிரியாராக தெரிவானார். 1987 ஆம் ஆண்டு முதலாவது நூற்றாண்டு பாதிரியார் ருபுஸ் பெனடிக் (Fr. Rufus Benedict) அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. இரண்டாம் உலகப் போர் நடத்து கொண்டிருந்த போது கொழும்பில் இலகுவாக தெரியக் கூடிய இடங்கள் பல ஜப்பானின் விமானத் தாக்குதலுக்கு உள்ளானது. அப்படியான தாக்குதலை தவிர்ப்பதற்காகவே கொழும்பு காலிமுகத்திடலில் முதலாம் உலக யுத்த நினைவுக்காக கட்டப்பட்டிருந்த மிகவும் உயரமான தூபியையே கழற்றி ஒளித்தனர். தேவாலயத்தைத் தான் அப்படி ஒளிக்க முடியுமா என்ன. 1942ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை தேவாலயம் ஜப்பானின் தாக்குதலுக்கு உள்ளானது. டோம் என்று கூறக்கூடிய பிரதான குவிமாடம் சேதமுற்றது. பின்னர் மக்களின் நிதிப் பங்களிப்புடன் அது சீர் செய்யப்பட்டது. புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் போது 1995 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி இங்கே வந்து பூசை செய்தார். கொழும்புவாழ் லட்சக்கணக்கான கத்தோலிக்கர்கள் இங்கே தமது திருமணச் சடங்குகளை செய்துள்ளனர். ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழி பூசைகளும், சேவைகளும் நீண்ட காலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகாலையில் தேவாலயத்தின் பின்னால் இருந்து சூரியன் உதித்தெழும் போது அந்த ஒளியில் தெரியும் தேவாலயம், பின்னேரத்தில் சூரியன் மறையும் போது அழகான வெளிச்சத்தில் எவரையும் கவரும் பிரமாண்டத் தோற்றத்தில் இந்த இந்த தேவாலயத்தை ஒரு முறையாவது கண்டு களியுங்கள். இலங்கையில் நிகழ்ந்த முதலாவது வகுப்புக் கலவரமும் இங்கிருந்து தான் தொடங்கியது. “1883 கொட்டாஞ்சேனை கலவரம்” என்று அது அழைக்கப்படுகிறது. அதில் ஒரு பௌத்தரும் ஒரு கத்தோலிக்கரும் கொல்லப்பட்டதுடன் முப்பது பேர் காயமடைந்தார்கள். இந்த தேவாலயத்தின் வரலாற்றிலும் இலங்கை, கொட்டாஞ்சேனை என்பவற்றின் வரலாற்றிலும் செலுத்திய தாக்கத்தை அடுத்த வாரம் பார்ப்போம். நன்றி - தினகரன் https://www.namathumalayagam.com/2022/01/KotahenaStLucia.html?fbclid=IwAR30dkHcRSdqfLnjKNZvVWDvM2ZmgFXo1i_S6hQ9fUZgJp8zY7sSkCQ7e3w
 5. உள்ளூர் செய்தித்தாள்கள் அச்சிடுவதற்கு தேவையான காகிதத்தைக் கூட வாழைச்சேனை காகித ஆலையால் உற்பத்தி செய்ய முடியாமல் உள்ளதா? அதையும் இறக்குமதி செய்ய வேண்டி இருக்கின்றதே.
 6. அருந்தப்பு என்பது இதைத்தான்! காப்பாற்றிய பொலிசாருக்கு நன்றி. அமெரிக்க பொலிஸ் வழக்கமாக body camera வில் எடுக்கப்பட்ட video வை இலேசில் வெளியே விட மாட்டார்கள். ஆனால் இதில் தங்களுக்கு நல்ல பெயர் வரும் என்பதற்காக உடனடியாகவே வெளியிட்டுள்ளார்கள்.
 7. தகவல்களுக்கும், காணொளிக்கும், உங்கள் நேரத்துக்கும் மிக்க நன்றி சிவரதன்!
 8. வருடக் கடைசியில் பார்த்த விசர் படம் இது. முக்கோணக் காதல் கதை என்று ஆரம்பித்து bipolar போன்ற ஒரு பிரச்சினை யை செருகி .... முடியல
 9. கண்ட கண்ட நேரத்தில் கரண்டை கட் பண்ணி கடைசியில் இலங்கை அரசு சனத்தொகை பெருக்கத்தால் திணறப் போகுது.
 10. என் நண்பர் ஒருவரின் நண்பர் அவர். கடும் மதுப்பழக்கம். திடீர் என்று மது குடிப்பதை அறவே நிறுத்தி விட்டார். அப்படி நிறுத்தி சில நாட்கள் போன பின் மதுவுக்கு அடிமையான அவர் உடல் திடீரென மதுவும் போதையும் இல்லாமல் ஆனாதால் சமநிலை தவறி ஆடிக் கொண்டே இருந்தது. வீதியில் போகும் போது செருப்பு ஒன்று கழற, அவர் கழன்ற தன் செருப்பை அணிய முற்பட, மீண்டும் சமநிலை தவறி பிரடி அடி பட வீதியில் விழுந்தார். கொண்டு போய் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். இரவாகி விட்டதால் நாளை மதியம் வருவோம் என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் மாலை தான் போனோம். அதற்குள் ஆள் இறந்து மோர்ச்சரியிற்கு கொண்டு சென்று விட்டார்கள். ஆஸ்பத்திரியில் தெரிந்த சில மருத்துவ நண்பர்கள் இருந்ததால் அவர்களின் செல்வாக்குடன் உடனே மோர்ச்சரிக்குள் போனோம். வாங்கு ஒன்றில் நிர்வாணமாக அவர் உடல் கிடந்தது. உடலை உறவினர் பொறுப்பு எடுக்கும் வரைக்கும் வாங்குகளில் தான் வைத்திருப்பினம். அருகில் இன்னும் சில உடல்கள் வாங்குகள் மீது வளர்த்தப்பட்டு இருந்தன. ஒரு வயதான பெண்ணின் உடலுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு இளம் பெண்ணின் உடல். தற்கொலை என்று சொன்னார்கள். எந்த உடலிலும் ஆடை எதுவும் இருக்கவில்லை. பார்த்து விட்டு உடனே போய் விடுங்கள் ...இரவாகி விட்டது என்றார் அங்கிருந்த காவலாலிகளில் ஒருவர். ஏன் என்று கேட்டோம். மாலையானதும் வெளியார் எவரையும் விடுவதில்லையாம். ஏனென்றால் இவ்வாறு இறந்த உடல்கள் மீது தம் காம இச்சையை தீர்க்கவென்றே பலர் திருட்டுத்தனமாக உள்ளே வந்து விடுவார்களாம். காசு வாங்கிக் கொண்டு அனுமதிக்கும் காவலாளிகளும் உள்ளனர் என்றார். காமத்தால் உலகில் பிறந்த உயிர்களில் சில காம இச்சையை தீர்க்க எந்தளவுக்கு கீழே இறங்கி வருகின்றன என்று அறிந்து கொண்ட தருணங்களில் அதுவும் ஒன்று. ***************************** இந்தக் கதையை " ஒரு கை அவரது கழுத்தையும் மறு கை உடலையும் இறுக்கிக் கொள்ள தொடங்கின.." என்று முடித்து இருந்தால் இன்னும் கொஞ்சம் அமானுஷமாக இருந்திருக்குமோ என நினைக்கின்றேன். இணைப்புக்கு நன்றி கிருபன்.
 11. பிறவிக் கவிஞனால் மட்டுமே இப்படி குயில் ஒன்றின் சோகத்தை கசியும் ஆற்று வெள்ளத்துடன் ஒப்பிட முடியும்! அருமை கவிஞனே!
 12. ஊரில் கரண்ட் போனால் சுவிஸில் இருக்கும் உங்களுக்கு எப்படி திண்டாட்டமாக இருக்கும்? (Location: சுவிஸ் என்று தான் போட்டு இருக்கின்றீர்கள்)
 13. மோடியின் மலசலக் கூடத்து குப்பைத் தொட்டிக்குள் போகப் போகும் கடிதத்துக்கு எத்தை பேர் தான் கையொப்பம் இடுவது?
 14. புத்தன், மீண்டும் கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன். இப்ப பார்க்கவும் ஒரு வாரம் அல்ல, இறுதியாக கருத்து பதிந்தது டிசம்பர் 15 அன்று
 15. எனக்கு மிகப் பிடித்த ஆசிரியர்களில் ஒருவர். அளவையியல் ஆசிரியராக இருப்பினும் 10 ஆம் வகுப்பில் எமக்கு தமிழ் கற்பித்தார். இவரால் தான் எனக்கு தமிழ் எழுத ஆவல் ஏற்பட்டது. பாடசாலை ஆசிரியர்களில் கலாநிதிப் பட்டம் வாங்கிய ஆசிரியர்கள் குறைவு. ஆனால் யுகபாலசிங்கம் சேர் கலாநிதிப் பட்டம் வாங்கிய ஆசிரியர். தான் படிப்பிக்கும் துறையில் நூல்களையும் எழுதியுள்ளார். அவர் இரண்டு புதிய நூல்களை எழுதிக் கொண்டு இருக்கும் போது தான் விபத்தில் கொல்லப்பட்டுள்ளார். சேர், தன் 13 வயது பேத்தியுடன் செல்லும் போதுதான் விபத்து நடந்தது. இந்த பதில் நீதிமான், இரத்த வெள்ளத்தில் கிடந்த தாத்தாவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க அந்த 13 வயதேயான பேத்தியை சாரதியுடன் மட்டுமே அனுப்பி வைத்து "இரத்தம் காரில் படக் கூடாது" என்று எச்சரித்தும் உள்ளார். விபத்து நடந்தவுடனேயே அனுமதிக்க அனுப்பவும் இல்லை. பொலிஸ் நிலையத்தில் அவரது உறவுகள் அழுது முரண்படும் போது, பல தமிழ் சட்டத்தரணிகள் இந்த நீதிமானுக்காக சமாதானம் பேச முயன்றுள்ளனர். அத்துடன் அடுத்த நாள்தான் சாரதியை அழைத்துக் கொண்டு போய் நீதிமான் பொலிசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பேரூந்து சாரதியில் முழுப்பழியையும் போட முயல்கின்றனர் இப்ப.
 16. கடந்த வாரம் என் நண்பனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரனா (ஒமிக்ரோன் ஆகத்தான் இருக்க வேண்டும்) வந்து போயுள்ளது. உங்களுக்கு இருந்த அனைத்து அறிகுறிகளும் அவர்களுக்கும் இருந்தது. நண்பனது மகளுக்கு ஒரே ஒரு தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளனர். இரண்டாவது அடுத்த மாசம் போட உள்ளனர். அவர் மகளுக்கும் வந்து ஒரு நாளில் காச்சல் போய் விட்டது. ஒரு மாதிரி கடையில் உள்ளவர்களுக்கும், கடைக்கு சென்றவர்களுக்கும் பரப்பியாச்சு. நல்ல சமூக பொறுப்புணர்வு.
 17. சு.சூர்யா கோமதிக .தனசேகரன்ராகேஷ் பெ மணிகண்டன் இசைக்கும் ஒவ்வொரு இசைக்கருவியும் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டைக் காற்றில் கடத்துகிறது. பழங்கருவிகளில் இருந்து புறப்படும் தாளங்கள் அவ்வளவு உயிர்ப்பாக இருக்கின்றன; பறையின் இசையில் அத்தனை கம்பீரம்; கின்னாரத்தின் இசை காற்றை வருடி உடலைச் சிலிர்க்க வைக்கிறது. பழங்குடி இசைக் கருவிகளின் மீது பேரார்வம் கொண்ட மணிகண்டன், நாட்டார் கலைஞர்களைத் தேடித்தேடிப் பயின்றுவரும் கலைஞரும்கூட. பல கிராமங்களுக்குப் பயணம் செய்து, பழங்குடி மக்களுடன் வாழ்ந்து, அழிவு நிலையில் உள்ள பல இசைக்குறிப்புகளையும், இசைக்கருவிகளையும் மீட்டெடுத்துவருகிறார். 60 இசைக்கருவிகள், 20 ஆட்டக்கலைகள் என இசையோடும் ஆட்டத்தோடும் தன் வாழ்வைப் பிணைத்துக் கட்டமைத்துள்ளார். சவுண்ட் இன்ஜினீயரிங் இறுதியாண்டு மாணவரான மணிகண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, துபாய், ஓமன், கனடா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலம் பறை கற்றுத்தருகிறார். சமீபத்தில் இவர் இயக்கிய கின்னாரக் கலைஞர் அருணாசலம் ஐயா குறித்த ஆவணப்படம், பெரிதும் கவனம் பெற்றது. ‘சில்லுக்கருப்பட்டி’, ‘ஜிப்ஸி’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். மணிகண்டனுடன் மனதுக்கு நெருக்கமான ஓர் உரையாடல். “சொந்த ஊரு ஈரோடு. ரொம்ப சாதாரணக் குடும்பம். அம்மா வீட்டில் துணி தைக்கிறாங்க. அப்பா டிரைவர். சின்ன வயசில் இருந்து இசை மீது ஆர்வம்னு சொல்றதைவிட, பறை மீது ஈர்ப்பு அதிகம்னு சொல்லலாம். எங்க ஊரு கோயில் திருவிழாக்களில் பறை அடிப்பாங்க. ஒரு மணி நேர ஆட்டத்துக்குப் பிறகு, ஆடிக் களைச்ச கலைஞர்கள் தண்ணி கேட்டாக்கூட , குடுக்கத் தயங்கிட்டு ஊர்க்காரங்க வீட்டுக்குள்ள போயிருவாங்க. அப்போவெல்லாம் ‘சாதிதான் இதுக்குக் காரணம்’னு எனக்குப் புரியல. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, ஒரு நாள் வகுப்பு மேசையில் தாளம் தட்டிட்டிருந்தேன். அப்போ எங்க ஆசிரியர் குறிப்பிட்ட சாதிப் பெயரைச்சொல்லி, ‘அவன மாதிரி தாளம் தட்டிட்டு இருக்கே’ன்னு திட்டினாங்க. அந்த வார்த்தைகள் என் மனசுக்குள்ள ஆயிரம் கேள்விகளை விதைச்சுது. பறை மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமாச்சு. பறைங்கிறது தமிழர்களின் அடையாளம், அதை ஒரு சாதிப் பெயரைச் சொல்லி ஒதுக்குறது எப்படி நியாயம் ஆகும்? ஒதுக்குறவங்க எல்லாரையும், நான் இசைக்கும் பறைச் சத்தத்தால் ஆட வைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். பறைக் கலைஞர்கள் பறை வாசிச்சு முடிச்சு ஓய்வு எடுக்கும் நேரம், நான் போய் பறையை எடுத்து வாசிப்பேன். வீடு தொடங்கி, சொந்தம் வரை அத்தனை எதிர்ப்புகள். வீட்டில் அடியெல்லாம் கூட வாங்கியிருப்பேன். பறை கற்பது கர்வம்னு சொல்லிட்டு விமர்சனங்களைக் கடந்து போயிருவேன். பன்னிரண்டாம் வகுப்பு முடிஞ்சதும், பறை மீதும் பழங்குடி இசைக்கருவிகள் மீதும் இருந்த ஆர்வத்துக்காகவே சவுண்ட் இன்ஜினீயரிங் பிரிவைத் தேர்வு பண்ணினேன். இசைக்கருவிகள் பத்தித் தேடுறதுக்கு முழுச் சுதந்திரம் கிடைச்சுது. இருளர், சோளகர், ஊராளி மக்கள் இருக்கும் திம்பம் பகுதியிலிருந்து என் பயணத்தைத் தொடங்கினேன். அவங்ககிட்ட இருக்கும் பீனாச்சி, புகுரி, அரைத் தம்பட்டை எல்லாம் ரொம்பப் பழைமையான இசைக்கருவிகள். பழங்குடிகள் அடையாளம் இல்லாமல் இருப்பது போலவே, அவர்களுடைய இசைக்கருவிகளும் சாதிங்கிற திரை போட்டு, அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கு. அந்தக் கருவிகளை மீட்டெடுப்பதுதான் முதல் லட்சியமா இருந்துச்சு. ஆரம்பத்தில் அவங்க என்னை நம்பவே இல்ல. எத்தனையோ ஏமாற்றங்களையும், வலிகளையும் கடந்து வந்த மக்கள் இப்போதெல்லாம் மத்த மனுஷங்களைப் பார்த்தாலே பயப்படுறாங்க. அவங்களை சமுதாயம் ஒதுக்குன மாதிரி, அவங்களும் சமுதாயத்தை ஒதுக்கிப் பல வருஷம் ஆச்சுன்னு அப்போதான் புரிஞ்சுது. அவங்க மேல கோபம் வரல. எவ்வளவு காயப்பட்டுருக்காங்கன்னு தெரிஞ்சுது. ரெண்டு நாள் அவங்க இருப்பிடத்திலேயே இருந்தேன். என் நோக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டு எனக்காக அவங்களோட இசைக்கருவிகளை வாசிச்சுக் காண்பிச்சாங்க. சில கருவிகளையும் எனக்காகக் கொடுத்தாங்க. அவங்க வாசிச்சதை ரெக்கார்டு பண்ணிட்டு வந்து திரும்பத் திரும்பக் கேட்டு நானும் வாசிக்கக் கத்துக்கிட்டேன். அதன்பின் வெவ்வேறு கிராமங்களுக்குப் பயணம் பண்ணி, `பவுனி, கொக்கரை, மரக்காப்பு, நெடுந்தாரை, வட்டக்கிளி, இடிகுவளை, மலையொலி மூங்கில், நெடுமக்குடி, சிரட்டைக் குழல், குட்டைத்தாரை’ன்னு 60க்கும் மேற்பட்ட கருவிகளை மீட்டெடுத்திருக்கேன். கரகம், ஒயில், பெரிய கம்பாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம்னு 20க்கும் மேற்பட்ட ஆட்டக் கலைகள் ஆடுவேன். இதுபோன்ற ஒரு பயணத்தில் சந்திச்சவர்தான் கின்னாரக் கலைஞர்அருணாசலம் ஐயா. அவர்தான் தமிழ்நாட்டில் இருக்கும் கடைசிக் கின்னாரக் கலைஞர். அவரோடு அந்தக் கலையும் கருவியும் அழியும் நிலையில் இருந்துச்சு. அவரை நான் தேடிப்போகும்போது, சின்னக் குடிசையில் ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தார். அவர் கின்னாரம் வாசிச்சு, கோவலன், கண்ணகியைப் பற்றிச் சொல்லுவதைக் கேட்கும்போது ‘எந்த மேல்நாட்டு இசைக்கருவியும் எங்ககூட போட்டிபோட முடியாது’ன்னு கத்திச் சொல்லணும்போல இருந்துச்சு. ஆனா, அவருக்கு சொந்த ஊரில்கூட மரியாதை கிடைக்கல. கின்னாரத்தை மக்களிடம் கொண்டு போயி சேர்க்கணும்னு முடிவு பண்ணி ஆவணப்படமாக்கினேன். அது பெரிய அளவில் மாற்றத்தைக் கொடுத்துச்சு. அவருக்கு உதவிகளும் கிடைச்சுது’’ என்று சொல்லும்போதே மணியின் கண்களில் அத்தனை ஆனந்தம். “நம் பாரம்பரியக் கலைகளையெல்லாம் மீட்டெடுக்கிறது என்பது அந்தக் கருவிகளை இயக்கக் கத்துக்கிறது மட்டுமல்ல, உருவாக்கக் கத்துக்கிறதும்தான். அதற்கான பணிகளைத்தான் இப்போ தொடங்கியிருக்கேன். நிறைய இசைக்கருவிகளை அதன் அடிப்படை தெரிஞ்சு நானே வடிவமைச்சிருக்கேன். ஒவ்வொரு கருவிக்கும் ஒரு பாடத்திட்டத்தை வடிவமைச்சு, அதை மக்களுக்குச் சொல்லிக்கொடுக்கணும். இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கு. கலைஞர்களுக்கு போதிய வருமானம் இல்ல. அவங்களுக்கு அவங்களை எப்படி வெளிப்படுத்திக்கணும்னு தெரியல. அதான் ஒவ்வொரு கலையையும் நாம் இழந்துட்டு வர்றோம். பறையை ஒதுக்குறாங்கன்னு சொல்லிச் சொல்லி, இப்போ மக்கள் மத்தியில் பறை குறித்துப் போதிய விழிப்புணர்வு வந்திருக்கு. அதே மாதிரி மற்ற கருவிகளையும் மீட்டெடுக்கணும்’’ என்ற மணிகண்டன், வெளிநாடுகளில் தமிழ்க்கலையைக் கொண்டு சேர்த்த விதம் பற்றியும் பகிர்ந்துகொண்டார். “ஒருமுறை கல்லூரியில் சக நண்பர்களுக்குப் பறை வாசிக்கக் கத்துக்கொடுத்துட்டு இருந்தேன். ஒரு இலங்கைத் தமிழர் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் வெர்சாய் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு, ஒரு மாதம் பிரான்ஸில் பயிற்சி வழங்க என்னைக் கூட்டிப் போனாங்க. அங்க பயிற்சிகள் கொடுத்தேன். எந்தக் குடும்பம் நான் பறை அடிப்பதை இழிவாக நினைச்சாங்களோ, அவங்களே என்னைப் பெருமையா பார்த்தாங்க. எனக்குன்னு ஒரு அடையாளம் கிடைச்சுது. அதன் தொடர்ச்சியாக கொரோனா நேரத்தில் ஆன்லைன் மூலமாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்குப் பறைப் பயிற்சிகள் வழங்கினேன். சொன்னா நம்ப மாட்டீங்க. ஒரு ஐ.டி ஊழியர் சம்பளத்தைவிட ஆன்லைன் மூலமாகப் பறைப் பயிற்சி கொடுத்து நான் சம்பாதிச்ச காசு அதிகம். அந்தத் தொகையில் கொரோனா நேரத்தில் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் முடங்கிய கலைஞர் களைத் தேடிப் போய் உதவி பண்ணினேன். கலைஞர்கள் அவ்வளவு சந்தோஷப்பட்டாங்க. இங்க இருக்கும் கலைஞர்கள், தங்களுக்கு வசதியான வாழ்க்கை வேணும்னு நினைக்கிறது இல்ல. தங்கள் திறமைக்கு மரியாதையும், வாய்ப்பும்தான் எதிர்பார்க் கிறாங்க. சாதி அடையாளங் களைக் கடந்து நம் இசைக் கருவிகளையும் இசைப் பண்பாட்டையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். மேற்கத்திய இசையை அண்ணாந்து பார்ப்பதை விட்டுவிட்டு நம் பாரம்பரிய இசைக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவாய் நிற்போம்” என்கிறார் மணிகண்டன். பண்பாட்டின் பழம்வாசனை ஒவ்வொரு வார்த்தையிலும் வீசுகிறது! Ananda Vikatan - 15 December 2021 - வரலாற்றை இசைப்பவன்! | Musician manikandan interview
 18. (காசு) பிரிண்டிங் மெஷின் இருக்கும் வரைக்கும் ஏன் கவலை? கோடி கோடியாக பிரிண்ட் பண்ணி வண்டில் வண்டிலாக ஒவ்வொருவரின் வீட்டுக்கும் கூட கொடுத்து விடலாம். அடுத்த முறை ஊருக்கு போகும் போது ஒரு பிரிண்டிங் மெஷினுடன் தான் போகப் போகின்றேன்.
 19. பேட்டை – புறக்கோட்டையான கதை (கொழும்பின் கதை - 9) - என்.சரவணன் இலங்கையின் இதயம் கொழும்பு என்போம். கொழும்பின் இதயமாகத் திகழ்வது கோட்டையும், புறக்கோட்டையும் தான். ஆட்சித் தலைமையக மையமாகவும், இலங்கையின் பொருளாதார மையமாகவும் நிமிர்ந்து நிற்கும் இடங்கள் இவை. டச்சு காலத்தில் அவர்களின் மொழியில் புறக்கோட்டையை “oude stadt” என்றார்கள். ஆங்கில அர்த்தத்தில் “outside the fort” எனலாம். ஆங்கிலேயர்கள் அதன் பின்னர் “பெட்டா” (Pettah) என்று அழைத்தார்கள். பேட்டை என்று தமிழ் பேச்சு வழக்கு சொல்லில் இருந்து தான் ஆங்கில “பெட்டா” வந்தது. பேட்டை” என்பது “ஆங்கிலோ இந்திய” தமிழில் இருந்து மருவிய சொல்லாகும். ஆங்கிலேயர்கள் இந்தியத் துணைக்கண்டத்து பெண்களை மணமுடித்து உருவான கலப்பின மக்களின் வழிவந்தவர்களையே ஆங்கிலோ இந்தியர்கள் என்று நாம் அழைப்போம். பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை படத்தில் “ஜான் விஜய்” ஆங்கிலமும் அல்லாத தமிழும் அல்லாத ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவார் அல்லவா அது தான். ஆங்கிலேயர்கள் “பேட்” என்பார்கள் அதுவே காலபோக்கில் பேட்டை என்று ஆனது. இலங்கையில் பேட்டை என்பது பெட்டா என்று ஆனது. பேட்டை என்பது தொழில் மற்றும் தொழிற்சந்தைகள் நிறைந்திருந்த இடங்களைக் குறிப்பதாகும். சிறுவணிகர்களும், அதிகளவு நுகர்வோரும் ஒன்றுகூடித் தொழில் செய்யும் இடமென்றும் கூறலாம். அதே வேளை பெட்டா என்று டச்சுக் காரர்களும், ஆங்கிலேயர்களும் அழைத்த அந்த இடத்தை சிங்களத்தில் “பிட்டகொட்டுவ” (கோட்டைக்கு வெளியில்) என்றும் தமிழில் “புறக்கோட்டை” என்றும் அழைத்தார்கள். அதற்கான காரணம் அன்று கொழும்பு கோட்டை இருந்த மதிலுக்கு வெளியில் இருந்த பிரதேசம் இது. எனவே கோட்டைக்கு புறமாக (வெளியில்) இருந்ததால் அதை புறக்கோட்டை என்றே அழைத்ததில் அர்த்தம் இருக்கவே செய்கிறது. பால்தேயுஸ் (Philippus Baldaeus) 1600 களின் நடுப்பகுதியில் அவரின் நூலில் வெளியிட்டிருந்த ஓவியம் இது. இதில் வலது புறத்தில் கொழும்பு கோட்டைப் பகுதியையும் புறக்கோட்டயையும் பிரிக்கும் ஆறும், புறக்கோட்டையின் ஒரு பகுதி மரங்கள் செறிந்த இடமாக இருப்பதையும், புதிய குடியிருப்புத் தொகுதியையும் பார்க்கலாம். (மேலதிக விபரத்துக்கு பிற்குரிப்பைப் பார்க்கவும்) ஒல்லாந்தர்கள் உலகில் பல நாடுகளைக் கைப்பற்றி கிழக்கிந்தியக் கம்பனி Dutch East Indian Company (VOC) மேற்கிந்தியக் கம்பனி Dutch West Indian Company (WIC) என்று நிர்வகித்து காலனித்துவ ஏகபோகத்தில் கோலோச்சிய காலத்தில் அவர்கள் நகரங்களையும், அங்கே குடியிருப்புகளையும் அழகுற வடிவமைத்தார்கள். அவர்கள் அந்த நாடுகளை விட்டுவிட்டுப் போவதற்காக அதனை செய்யவில்லை. மாறாக அவர்களின் நாடுகளாக ஆகிவிட்டதாக எண்ணி நிரந்தர டச்சு காலனித்துவ நாடுகளாகத் தான் பலப்படுத்தினார்கள். கொழும்பை ஒரு நகரமாக உருவாக்கிய டச்சுக்காரர்கள் (Dutch East India Company VOC) ஒரு காலத்தில் தென்னாசியாவின் தலைமையகமாக கொழும்பைப் பயன்படுத்தி வந்தார்கள். அன்றிலிருந்தே புறக்கோட்டையை ஒரு நகர மையமாக இயங்கத் தொடங்கிவிட்டது. போர்த்துக்கேயர்கள் 1518 இல் முதன் முதலாக கொழும்பில் முக்கோண வடிவத்தில் கோட்டையை வடிவமைத்த போது அதற்கு Senhora das Vutudes என்று பெயரிட்டார்கள். ஒல்லாந்தர் காலத்தில் கோட்டைப் பகுதியை காலப்போக்கில் அபிவிருத்தி செய்தபோது நடுவில் செல்லும் ஆறு பிரிக்கக் கூடிய வகையில் கோட்டையையும், புறக்கோட்டையையும் வடிவமைத்தார்கள். இன்றைய சுங்கத் திணைக்கள தலைமையகத்தோடு ஓட்டிச் சென்று துறைமுகத்தில் விழும் ஆறு தான் அது. குறிப்பாக அவர்களுக்கான குடியிருப்புகள் உள்ள வீதிக் கட்டமைப்பை கோட்டைக்கு வெளியில் அமைத்தார்கள். 1600 களில் கொழும்பு - புறக்கோட்டையும், கோட்டையும் 1600 களில் கொழும்பு - புறக்கோட்டையும், கோட்டையும் Baldaeus,-Philippus (பால்தேயுஸ் - 1632-1672.) எழுதிய Naauwkeurige-beschryvinge-van-Malabar-en-Choromandel நூலில் இருந்து... 1659 இல் கோட்டை அப்போதைய டச்சு ஆளுநர் ரிக்கோப் வான் கொயன்ஸ் (Ryckloff van Goens) வழிகாட்டலில் மறுகட்டுமானத்துக்கு உள்ளான போது டச்சு கிழக்கிந்திய கம்பனியினரின் குடியிருப்புகள் கோட்டைக்கு உள்ளேயும், ஏனைய ஐரோப்பியர்கள் மற்றும் வர்த்தகர் – வியாபாரிகளுக்கான குடியிருப்புகளை கோட்டைக்கு வெளியில் புறக்கோட்டையிலும் அமைத்தனர். புறக்கோட்டை குடியிருப்பு பகுதி 1658-1796 காலப்பகுதியில் டச்சு கட்டிடக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. போர்த்துகேய – ஒல்லாந்தர்களின் சந்ததியினர் அங்கே அங்கிலேயர் காலத்திலும் வாழ்ந்தார்கள். பல அழகான வீடுகள், அழகான தோட்டங்கள், நிழலான நடைபாதைகள் பல அங்கிருந்தன. ஒரே மாதிரியான பிரகாசமான மஞ்சள், சிவப்பு, ஒரஞ்சு நிற கோடுகள் உள்ள கதவுகளையும்ம் ஜன்னல்களையும் கொண்ட வீடமைப்பைக் கொண்டிருந்தன, பாதைகள் நேராகவும், கிடையாகவும், இருந்த அந்த வீதிகள் தான் இன்று முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் குறுக்குத் தெருக்களாகவும், அவை ஒல்கொட் மாவத்தையில் சேருவதாகவும் இருக்கிறது. கிடையில் மெயின் வீதி, கெய்சர் வீதி (டச்சு ஆளுநர் Kaiser என்பவரின் பெயர்), பிரின்ஸ் வீதி, மெலிபன் வீதி என இருக்கும் அமைப்பைக் கற்பனை செய்து பாருங்கள். இது தான் படிப்படியாக வியாபார, வர்த்தக, விற்பனை கடைகளாக அப்படியே பரிமாற்றமடைந்தது. இன்றும் பழைய கட்டிடங்களின் எச்சங்களை சில இடங்களில் காணலாம். இன்றைய கெய்சர் வீதியிலுள்ள புறக்கோட்டை பொலிஸ் இருந்த பகுதி இந்தக் குடியிருப்பில் இருந்தவர்களுக்கான மயானமாக இருந்தது. Pettah Cemetery என்றும், Pettah Burial Ground என்றும் அது அழைக்கப்பட்டது. அங்கே புதைக்கப்பட்ட டச்சு அதிகாரிகளின் விபரங்களை tombstones and monuments in Ceylon என்கிற நூலில் பென்ரி லூயிஸ் (J. Penry Lewis) விபரித்திருக்கிறார். அன்று இருந்த கொழும்பு கோட்டையை இணைக்கும் பாதையாக விளங்கிய இன்றைய மெயின் வீதி டச்சு காலத்தில் “King’s Street” (அரச வீதி) என்று அழைத்தார்கள். முதலில் இருப்பது கொழும்பு மையத்தின் புதிய தோற்றம். கீழே இருப்பது 1756 இன் தோற்றம். மேற்படி இரண்டு வரைபடங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மொத்தத்தில் இது சுதேசிகளின் குடியிருப்புகளாக இருக்கவில்லை. வுல்பெண்டல் பகுதி வரை புறக்கோட்டையை அபிவிருத்தி செய்திருந்தார்கள். 1796 இல் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பின்னர் தான் இது ஐரோப்பியர் அல்லாதவர்களும் வாழும் பகுதியாக ஆனது. கோட்டையும், புறக்கோட்டையும் (Fort, Pettah) இப்படித்தான் பின்னர் பெயரிடப்பட்டன. ஆங்கிலேயர்கள் தான் புறக்கோட்டையை ஒரு வர்த்தக – வியாபாரத் தளமாக மாற்றியெடுத்தார்கள். 1885 அளவில் கொழும்புத் துறைமுகச் சுற்றாடல் பெருந்தோட்டத்துறையின் வளர்ச்சியின் காரணமாக சந்தைக்கான இடமாகவும், ஏற்றுமதித் தளமாகவும் வளர்ச்சியுற்றது. 1900 களின் ஆரம்பத்தில் சிறு வணிகர்கள், சில்லறைக் கடைகள் இல்லாமல் போய் மொத்த விற்பனை வணிகஸ்தளமாக அது மாற்றம் கண்டது. டச்சுக் காலத்திலேயே தமிழ், முஸ்லிம்கள் இந்தப் பகுதியில் வியாபாரத்தில் ஆளுமை செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆங்கிலேயர் காலத்தில் இங்கே உள்ள சில வீதிகளின் பெயர்கள் அங்கே வாழ்ந்த சில சமூகக் குழுவினரின் பெயர்கள் சூட்டப்பட்டன. பார்பர் தெரு, செட்டியார் தெரு, சோனகர் தெரு, மலே வீதி, சைனா வீதி, போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். மெசேஞ்சர் வீதி என்பது அன்று தகவல்களை கொண்டு சென்று சேர்க்கும் பணி நிகழ்ந்த இடம். டச்சுக்காரர்கள் அவ்வீதியை “Rue de massang” என்று அழைத்தார்கள். அப்பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் வாழ்ந்த பகுதி அது. இன்னும் சொல்லபோனால் அவர்கள் அன்றைய தபால்கார்கள். புறக்கோட்டை கொழும்பின் வடகிழக்குப் பகுதியில் களனி நதி வந்து விழும் பகுதி தான் ஒரு வர்த்தக துறைமுகமாக பதினோராம் நூற்றாண்டில் தொற்றம்பெறத் தொடங்கியது. தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காகவே அந்த பகுதி தெரிவானது. அங்கே இந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் குடியிருப்புகள் அப்போது அமைந்தன. இலங்கையில் ஐரோப்பிய காலனித்துவம் காலூன்றுவதற்கு முன்னரே வெளிநாட்டு முஸ்லிம் வர்த்தகர்கள் கொழும்புக்கு பரீட்சயப்பட்டுவிட்டார்கள். 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் பின்னர் புறக்கோட்டையின் தோற்றம் பெரும் மாற்றம் கண்டது எனலாம். கொழும்பின் நகராக்க வளர்ச்சி, வர்த்தக – வியாபார வியாபகத்தின் காரணமாக நகரத்தில் தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டார்கள். நகரத்தை நோக்கி குடிபெயர்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. பல்லின, பன்மொழி, பன்மதங்களைச் சேர்ந்த சகல வர்க்கத்தினரும் புழங்கி வாழும் பகுதியாக இப்பகுதி மாற்றம் பெற்றதுடன் காலப்புக்கில் சனப்பெருக்கத்தோடு, சன நெரிசல்மிக்க பகுதியாக வளர்ச்சி கண்டது. அதனால் ஆங்கிலேயர் காலத்திலேயே இப்பகுதியில் சன நெரிசல் உள்ள குடியிருப்புகள், தோட்டங்கள் (வத்த), என்றும், முடுக்கு என்றும் அழைக்கப்படத் தொடங்கின. புறக்கோட்டையில் உள்ள காப்பிரி முடுக்கு (Kafari Muduku) 18 ஆம் ஆண்டிலிருந்தே அழைக்கப்படத் தொடங்கிவிட்டதாக பேராசிரியர் ஷுஜி பூனோ (Shuji FUNO) கூறுகிறார். டச்சு கால கட்டிடத்துக்கு சாட்சி கூறும் முழு உருவமாக “புறக்கோட்டை”யில் எஞ்சியிருக்கும் இரு கட்டிடங்களைக் கூறலாம். ஒன்று; 1600களில் கட்டப்பட்ட டச்சு கவர்னராக இருந்த தோமஸ் வான் ரீ(Thomas van Rhee 1692-1697) என்பவரின் வாசஸ்தலம். அது இன்று பிரின்ஸ் வீதியில் உள்ள டச்சு மியூசியமாக திகழ்கிறது. இரண்டாவது 1757 இல் கட்டப்பட்ட வுல்பெண்டால் சேர்ச் என்று அழைக்கப்படும் டச்சு சீர்திருத்த தேவாலயம். கொழும்புக்கு செல்பவர்களும், கொழும்பில் இருப்பவர்களும் பிரின்ஸ் வீதியில் உள்ள டச்சு மியூசியத்தை ஒரு தடவையாவது சென்று பாருங்கள். அது உருவான கதையை தனியாக எழுதுகிறேன். கொழும்பு கோட்டைக்கு என்ன ஆனதென பின்னர் விரிவாகப் பார்ப்போம். அடிக்குறிப்புகள் Brohier, RI., Changing Face of Colombo,(Covering the portuguese, Dutch and British Period) A Visidunu Publication, 2007 Kyouta YAMADA, Masahiro MAEDA, Shuji FUNO, "Considerations on Spatial Formation and Transformation in Pettah (Colombo, Sri Lanka)" Journal of Architecture and Planning (Transactions of AIJ) April 2007 தினகரன் - 26.12.2021 https://www.namathumalayagam.com/2021/12/PettahStory.html?fbclid=IwAR3feX-QpaRYdYuVEpYH2WdHmtIne4vO8khzBgkjYOJGf53V9d7WIoXU2FI
 20. அன்னபூரணி “ போனகிழமை தான் படம் பாத்தனி , திருப்பியும் என்ன சீலைக்கு…. “ எண்டு தொடங்க , ஓம் அப்பிடியே சீலையும் எடுத்துக் கொண்டு வருவம் வருசத்திக்கு எண்டு செல்லம்மாக்கா சண்முகத்தாருக்கு உறுதியா சொல்லிப்போட்டா. மனிசி சொல்லிறதை தட்டிக் கேக்ககிற ஆம்பிளை ஒருத்தரும் பிறக்கிறதில்லை எண்டதால சண்முகத்தாரும் சரண்டர் ஆனார். முந்தி சண்முகத்தாரும் லேசில விட மாட்டார் . மனிசியைப் பேசத் தொடங்கினா ஒழுங்கை முடக்கு வரை பேசிக்கொண்டே போவார் . ஆனால் போன மாசம் பொயிலையோட சேத்து மற்றச் சாமாங்கள் ஏத்த வந்த ஜெயசிங்கவோட கள்ளு அடிக்கேக்க , சண்முகத்தார் மனிசீட்டை ஏதோ கேக்கப்போய் ரெண்டு பானை உடைய , இவர் சங்கடப்பட அவன் “ ஹம கானிம எக்காய் நம வித்தறாய் வெனஸ் “ ( எல்லா மனிசியும் ஒண்டு தான் அவனவன்டை மனிசிமாருக்கு ஒவ்வொரு பேர்) எண்ட ஒரு உலக உண்மையச் சொன்னான். அதுக்குப் பிறகு இவர் யோகர் சுவாமி சிஸ்யன் மாதிரி சும்மா இருப்பதே சுகம் எண்ட முடிவுக்கு வந்தார். சண்டை தொடங்கி செல்லம்மாக்கா சன்னதம் ஆட வெளிக்கிட்டா புரக்கிராசியார் தோம்பு ஆராஞ்ச மாதிரி நாலு சந்ததியும் சந்திக்கு வரும் , ஆன படியால் சண்முகத்தார் ஒண்டும் பறையாம ஓம் எண்டார். போனமுறை போகேக்கை “திரைக்கு வருகிறது நிறம் மாறாத பூக்கள் “ எண்ட போர்டை பாத்தோண்ணையே மனிசி முடிவெடித்திட்டுது எண்டு நெச்சபடி சண்முகத்தாரும் படம் பாக்க ரெடி ஆனார். இனி என்ன நாலு குடும்பத்தைச் சேத்துப் போனாத்தான் சுகம் எண்டு போட்டு அக்கம் பக்கம் ஆள் சேத்தார் சண்முகத்தார். புதுப்படம் எண்ட படியால் 5 show போடுவாங்கள் வேளைக்கு வெளிக்கிட்டால் தான் வசதியா இருக்கும் , போனமுறை மூண்டாவது றோவில இருந்து நான் பட்ட பாடு ; ஒரே விசிலடியும் ,சிகரட் மணமும் , மூட்டைப்பூச்சி வேற, நிமிந்து இருந்து பாத்து கழுத்து நோ எண்டு செல்லம்மாக்கா புலம்ப சண்முகத்தார் சாரத்தை மாத்தி வேட்டியைக் கட்டினார். போட்டு வந்து விடிய செக்குக்கு எள்ளுக் குடுக்க வேணும் எண்ட யோசினையோட தியட்டருக்கு பக்கத்து பாரின்டை சந்தோசத்தில சண்முகத்தாரும் படம் பாக்கப் பத்துப் பேரும் வெளிக்கிட்டிச்சினம். நேத்துப் போட்டு வந்தவங்களிட்டை நிலமையை கேட்டுப் போட்டுத்தான் வந்தனான் எண்டு கனகலிங்கம் சொல்ல எல்லாரும் வெளிக்கிட்டம் சன்னதியானைக் கும்பிட்ட படி. சண்முகத்தார் இந்த முறை செலவைப் பாக்காம ODC ரிக்கற் எடுத்தார். அபிசேக ஆராதனையோட படம் தொடங்கி முடியும் வரை செல்லம்மாக்கா கதைக்கேல்லை ஆனபடியால் இது நல்ல படமாத் தான் இருக்கும் என சண்முகத்தார் முடிவுக்கு வந்தார். படத்தின்டை பாதிப்போட கதைக்காம அமைதியா வந்த மனிசியைப் பாத்திட்டு யோசிச்சார்,உந்த ரீலை வாங்கி்க் கொண்டு போய் ஒவ்வொரு நாளும் போட்டுக் காட்டினா எப்பிடி இருக்கும் வீடு எண்டு. அழுதும் அழாமலும் வந்த செல்லம்மாக்கா கடையை மறத்திட்டா எண்ட சண்முகத்தார் முடிவெடுக்க, திடீரெண்டு தொடங்கினா “ எப்பிடியும நல்லதா ஒரு பத்துச் சீலை எடுப்பம் “ எண்டு. என்னெண்டு தான் உந்தப் பெண்டுகள் டக்டக்கெண்டு மாறுறாளவையோ எண்டு யோசிச்சுக் கொண்டு சண்முகத்தார் கடைப்பக்கம போக, கடைக்காரன் கண்டோன்னயே கதிரையைப்போட்டு வெளீல இருத்தி வைச்சான் போன ஆம்பிளைகளை. நித்திரை வரத் தொடங்க நேரத்தைப் பாத்திட்டு சண்முகத்தார் அந்தரப்பட, தனக்கும் சண்முகத்தாருக்கும் சம்மந்தம் இல்லை எண்ட மாதிரி செல்லம்மாக்கா சீலைய மட்டும் பாத்துக்கொண்டு இருந்தா. சீலை எண்டு தொடங்கி, வேட்டி சாரம் எல்லாம் வாங்கீட்டு லக்கேஜைப் பற்றிக் கவலைப் படாமல் செல்லமாக்கா வயித்தைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கினா. வெளீல வந்து இட்டலியும் வடையும் சாப்பிட்டிட்டு கோப்பியும் குடிச்சிட்டு வெளிக்கிட்டிச்சினம் எல்லாரும். ஓவர் speed ஆப் போனாத்தான் பிடி படாமல் போகலாம் எண்டு ஆரோ சொல்ல வேகம் கொஞ்சம் கூடிச்சிது ….அணியத்தில நிண்ட படி யாரும் வாறானோ எண்டு சண்முகத்தார் உத்துப்பாத்த படி வந்தார். சண்முகத்தார் தண்டயல் தம்பிப்பிள்ளைக்கு சொந்தக்காரர் , அதால தான் தன்டை38 அடி கொட்டுக்கு ( வள்ளத்துக்கு ) அம்மான்டையோ மனிசீன்டையோ பேரை வைக்காமல் அன்னபூரணி எண்டு வைச்சவர். வாங்கின சாமாங்களை தண்ணி படாம படங்கு போட்டு சுத்தி காத்துக்கு பறக்காம பாரத்துக்கு துடுப்பையும் மேல வைச்சா செல்லம்மாக்கா. விட்ட சுருட்டுப் புகையின்டை திசையையும் காத்தில கரைஞ்ச நேரத்தையும் பாத்து வேகத்தை கூட்டிக்குறைச்சு விடிவெள்ளி பாத்து வீட்டை வந்து சேர விடியச் சாமம் ஆகீட்டிது. ஆறு மணிக்கு வெளி்க்கிட்டு காரைக்காலுக்குப் போய் ஒம்பது மணிக்கு second show பாத்திட்டு கொண்டு போன சவுக்காரம் , தேங்காய் எண்ணை ,கறுவா, கராம்பு , ஏலக்காய் எல்லாம் குடுத்திட்டு சீலை ,சாரம் , சம்பா அரிசி, பட்டும் அலுமினியமும் ஏத்திக்கொண்டு வாறது வழமை . திரும்பி ஐஞ்சு மணிக்கெல்லாம் வீட்டை வந்திடலாம். இந்த ஏற்றுமதி இறக்குமதி விளையாட்டில போட்டி பொறமை கூட , போட்டுக் குடுக்கிறதும் கூடிச்சிது. Dummy ஆ ஒரு போட்டை அனுப்பி நிலமையைப் பாத்துத் தான் உண்மையா வெளிக்கிடிறது . பனை மரத்தில ஏறி நிண்டு star toffee கவரால torch ஐ மறைச்சு பச்சை , சிவப்பு எண்டு காட்டிற சிக்னலைப் பாத்துத் தான் போய் வாறது . வாற boat ஐ விட்டுக்கலைச்சுக் கொண்டு வந்த சேர முதல் சாமாங்களை இறக்கிக் கொண்டு போயிடிவினம் , இறங்கின சாமாங்கள் எந்த வீட்டை போனது எண்டு ஆராலேம் பிடிக்கேலாது ஏனெண்டால் எல்லா வீடும் ஒரே மாதிரித் தான் கட்டி இருந்தது. கடல்லை வாற boat க்கு கால்வாய் மாரி வெட்டி நேர வீட்டுக்குள்ளேயே விடீற மாதிரி ஒரு set up முந்தி இருந்தது எண்டு கதை இருந்தது. ஆழக்கடலில் இப்பிடி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்திட்டு , இப்பவும் நம்பிக்கையோடு ஆளுகின்ற நாளை எண்ணி சண்முகத்தாரும் செல்ம்மாக்காவும் காத்து இருக்கினம். Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம் பி.கு அன்னபூரணி அம்மாள் என்ற பாயக்கப்பல் 1938 இல் வல்வெட்டித் துறையிலிருந்து வெற்றிகரமாக அமெரிக்காவில் பொஸ்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது . அதன் தலைமை மாலுமியாக இருந்தவர் தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிபிள்ளை என்பவர் ஆவார்.
 21. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு அதிகார மாற்றம் ஏற்படின் அதை முறியடிக்க ஒரு இராணுவப் புரட்சி வந்து பாராளுமன்றத்தினை முடக்கி கோத்தா + சவேந்திர சில்வா ஆட்சி ஏற்படக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
 22. கடந்த வியாழன் மூன்றாவது தடுப்பூசியை நானும் மனைவியும் எடுத்துக் கொண்டோம். ஊசி குத்திய இடத்தில் தடவினால் சிறு வலி இருந்ததை தவிர வேறு எந்த பக்க விளைவுகளோ அல்லது உடற் சோர்வோ ஏற்படவில்லை. மனைவிக்கு கையை தூக்கும் போது இலேசான வலியும், தலையிடியும், உடல் அலுப்பும் அடுத்த நாள் முழுதும் இருந்தது. அதன் பின் எதுவும் இல்லை.
 23. தாயக தமிழ் அரசியல்வாதியின் குடும்ப உறுப்பினர் ஒருவரது தனிப்பட்ட வாழ்வில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு தொடர்பான திரி நீக்கப்பட்டது. இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது எனும் ஒரு காரணமே யாழ் களத்தின் அடிப்படையை அதன் பண்பை மீறுவதற்கான காரணமாக அமையாது என்பதை நினைவில் கொள்ளவும்.
 24. அனைவரது பதில்கள் கொடுத்த தைரியத்தில் இன்று மாலை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மூன்றாம் தடுப்பூசியையும் (Moderna) நானும் மனைவியும் போட்டு விட்டு வந்தோம். இது வரைக்கும் பக்க விளைவுகள் ஒன்றும் இல்லை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.