Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Posts

  13,698
 • Joined

 • Days Won

  151

Everything posted by நிழலி

 1. இணையவனுக்க் என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்
 2. தன் அறுபதாவது வயதைக் கொண்டாடும் தமிழச்சி பாட்டிக்கு என் பிறந்த தின வாழ்த்துகள்
 3. நண்பன் நெடுக்ஸ் இற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நெடுக்ஸ், இந்த வயது முடிவடைவதற்குள் ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்ய எல்லாம்வல்ல மன்மதனை வேண்டிக் கொள்கின்றேன்
 4. இனிய பிறந்த தின வாழ்த்துகள் சிறி (உண்மையில் இன்றுதானா பிறந்த நாள்?)
 5. யாழ்கள நண்பன் நுணாவுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்
 6. மச்சானுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்... அடுத்த வருடம் மனைவியுடனும், குழந்தையுடனும் கொண்டாடவேண்டும் என மேலதிகமாக வாழ்த்துகின்றேன் கேட்டு மகிழுங்கள் http://www.youtube.com/watch?v=Sy8idQ7MsLQ
 7. என்னை வாழ்த்திய அனைத்து கள உறவுகளுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இன்றுடன் 35 ஆவது வயது ஆரம்பிக்கின்றது. மகளின் வருகை பல புதிய வருகைகளை உருவாக்கும் என நம்புகின்றேன்
 8. பிரம்மச்சாரி என்று வைத்தால் என்ன?
 9. ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக இணைக்கப் பட இருக்கும் மூலக்கூற்றின் (Element) தற்காலிக பெயர் என்ன? அதை பற்றி ஒரு சிறு விபரம் தெரிவிக்கவும் (school பரீட்சை கேள்வி போல் கேள்வியின் தொனி வந்துவிட்டது)
 10. நண்டுக்கு மிக பிடித்த உணவு எது (விவாசாயிகள் இதனால் பயன் பெறுவதுண்டு)?
 11. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா அவர்களின் பதில்களில் இருந்து..
 12. தலைவர் இறந்து விட்டார் என்பது கவலைப் படவேண்டிய விடயமே ஒழிய சோர்வடைய வேண்டிய விடயம் அல்ல. தலைவர் மேல் உள்ள விசுவாசத்தினை அவரின் இலட்சியத்தை அடைவதற்கான வழிகளை கண்டு பிடிப்பதிலும், அவரினால் நேசிக்கப் பட்ட போராளிகளின் தியாயங்களை போற்றுவதிலும் காட்டுங்கள். அவரால் தொடரப் பட்ட மக்களின் விடுதலைகான பயணத்தினை மேலும் முன்னெடுங்கள். தலைவரின் சாவு, அடர் துயர் நிரம்பிய நிகழ்வாக இருக்க வேண்டிய விடயமே தவிர சோர்ந்து போகும் விடயம் அல்ல. அவ்வாறு சோர்வடைந்தால் அது அவரிற்கு காட்டப் படும் உச்ச கட்ட அவமானமாகவே இருக்கும். அத்துடன் அதனைத் தான் எதிரியும் விரும்புவார்கள் பிரபாகரன் எனும் சகாப்தம், அவரிற்கு பின்னாலும் சுடர் விட்டு பிரகாசிக்க வேண்டும். அது தான் அவரிற்காக, இறுதி வரைக்கும் அவருடன் இருந்த பானு அண்ணா, ஜெயம் அண்ணா போன்ற உன்னத தளபதிகளுக்கான குறைந்த பட்ச நன்றிக் கடன்.
 13. என்னைப் பொறுத்தவரைக்கும் தலைவர் அவர்கள் இறந்து விட்டதாய் மிக உறுதியாக, சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு நம்ப முயல்கின்றேன். இது என் உணர்வு நிலை சார்ந்தது. வாழ்வில் மிக மிக துயரமான, ஏற்றுக் கொள்ள முடியவே முடியாத நிகழ்வாக, என்னால் கடக்கவே முடியாது என்று நம்பிக் கொண்டிருந்த ஒரு அடர் துயர் கொண்ட ஒரு நிகழ்வு அது. நான் இறந்து போன பின் தான் தலைவரின் சாவு இடம் பெற வேண்டும் என்றே நான் விரும்பி இருந்தேன். அவரும் ஒரு மனிதன் (human), அவருக்கும் சாவு என்பது வரும் என்ற யதார்த்த பூர்வமான சிந்தனையில் இருந்து விலகி, சாவே அற்ற ஒருவராக அவர் இருக்க வேண்டும் என்றே நான் நினைத்து இருந்தேன். அது அவரின் மீதான பற்றினால் மட்டும் அல்ல, அவரைத் தவிர எமக்கு யாரும் உண்மையாய் இல்லை என்ற திடமான கருத்தினாலும் நான் அவ்வாறு நினைத்து இருந்தேன். ஆனால், இன்று அவர் இறந்து விட்டார் என்று உறுதியாக நம்ப முனைகின்றேன். ஆயிரம் பேர் இல்லை என்று உரத்து சொன்னாலும், அவர் இறந்ததாகவே நம்ப முனைகின்றேன். ஏனெனில், இந்த அடர் துயரை தாண்ட வேண்டி உள்ளது. இந்த புள்ளியை கடக்க வேண்டி உள்ளது. இந்த துயரின் பின்னாலும் எமக்காக போராட்டம் மிக கனதியான வடிவில் காத்து இருக்கின்றது என்பதை உணர தேவை உள்ளது. தாங்க முடியவே முடியாது என்ற துயரை தாங்கித் தான் ஆகவேண்டும் என்ற நிலையில் தான் நான் இருக்கின்றேன். அவ்வாறு தாங்கினால் தான் என்னால் அடுத்த அடியை (step) எடுக்க முடியும் என்று நம்புகின்றேன். இருக்கின்றாரா இல்லையா என்ற 'உள்ளே வெளியே' விளையாட்டின் மூலம் என்னுடைய அனைத்து அசைவையும் நிறுத்தி, அவரின், அந்த ஒப்பற்ற தலைவனின், இறுதி வரைக்கும் தன் தேச மக்களின் விடுதலைக்காய் தன்னை உண்மையாய் அர்பணித்த தலைவனின் உயிரை வைத்து நடக்கும் அற்பத்தனமான விளையாட்டினால் என் அசைவியக்கத்தினை முற்றாக முடக்கி அடுத்த அடியை எடுக்காமல் இருக்க முடியாது காலமும், வரலாறும் எமக்கு மிக பாரிய கடமையை தந்துள்ளது. உடனடியாக அரசியல் ரீதியில் போராடி மீட்கப் பட வேண்டி, இறுதி வரைக்கும் தம் உயிரை பணயம் வைத்த மக்கள் இலட்சக் கணக்கான மக்கள் உள்ளனர். அவர்கள் பற்றிய போராட்டம் பற்றி சிந்திப்பதற்கு தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதமே முழுத் தடையாக இருக்கின்றது. அந்த விவாததின் என்னுடைய உணர்வு சார்ந்த பதிலாக அவர் இறந்து விட்டார் என்ற கடும் துயர் நிரம்பிய பதிலைத்தான் என்னுள் நிரப்ப விரும்புகின்றேன். ஏனெனில் இந்த புள்ளியை, அசையாது நின்ற நிலையில் இருக்கும் புள்ளியை கடக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது மீண்டும், இது என்னுடைய உணர்வு சார்ந்தது, :நிழலி
 14. சாத்திரியின் கருத்துடன் 100% உடன்படுகின்றேன் என்று சொன்னதை கூட மோகன் நீக்கிவிட்டார். வாழ்க தமிழ் தேசிய தொண்டு..... இப்படியான நேரத்தில் கூட குறும் தேசிய பார்வை கொண்டு இருப்பவர்களை என்ன என்று சொல்வது இதை எல்லாம் பார்க்கும் போது, வீணாக தமிழ் தேசியத்திற்காக மினக்கெடுவதை விட சும்ம இருக்கலலம் போல் இருக்கு
 15. *** இன்று தலைவரின் பெற்றோர்கள் வவுனியா தடுப்பு முகாமில் இருப்பதாக அரசே உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் தமிழினியையும் கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. வல்வை சாகரா அக்காவின் பதிலில் சொன்னது போல, எமக்கிருக்கும் வரலாற்றுக் கடமையில் இருந்து எம்மை விலக்கி வைக்கவே திடீர் படையணி, திடீர் புலனாய்வு பிரிவெல்லாம் முளைத்தெழும்புகின்றன.
 16. என்னை வாழ்த்திய, வாழ்த்தும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.
 17. என்னுடைய பெயரினை ஆங்கில எழுத்துகளில் இருந்து தமிழிற்கு மாற்ற முடியுமா? அதாவது Nizhali to நிழலி என்று
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.