• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  54,233
 • Joined

 • Days Won

  515

தமிழ் சிறி last won the day on August 7

தமிழ் சிறி had the most liked content!

Community Reputation

12,968 நட்சத்திரம்

About தமிழ் சிறி

 • Rank
  Advanced Member
 • Birthday வியாழன் 21 பிப்ரவரி 2008

Profile Information

 • Gender
  Male
 • Location
  தூணிலும்,துரும்பிலும்.
 • Interests
  இலையான் அடிப்பது.
 1. தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை அனைவருமாக இணைந்து வழங்கினால் ஏற்கத்தயார் என சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஏற்பது தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ஆசை ஏதும் கிடையாது. இன்னுமொரு தலைமையைத் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. தமிழரசுக் கட்சியில் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அது உடனடியாக ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை. தேர்தல் முடிவுகளை வைத்து தலைமைகளை மாற்ற வேண்டும் எனக்கூறுவது பொருத்தமற்றது. தமிழரசுக் கட்சியில் இளம் இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எனக்கு தலைமைப் பதவி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அனைத்து உறுப்பினர்களும், மக்களும் இணைந்து ஒருமித்து கோரினால் அந்த தலைமையை ஏற்க நான் தயாராகவே உள்ளேன். அனைவரினதும் சம்மதத்துடனேயே அன்றி, இன்னொருவரது பதவியைப் பறித்து அதில் அமர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை” என அவர் குறிப்பிட்டார். http://athavannews.com/தமிழரசுக்-கட்சியின்-தலைம/
 2. கடந்த பாராளுமன்றில் ஒரேயொரு முறை மட்டுமே.... பாராளுமன்ற அவையில் பேசிய, சித்தார்த்தன். மீண்டும், தெரிவு செய்யப் பட்டுள்ளார்.
 3. இவர் பிக்குகளிலேயே... வித்தியாசமானவர். படத்தில்... அரைக் கால் சட்டையுடன் ஆமாத்துறு. இவர் திருமணம் செய்தவர் என்றும்.. அவரின் மனைவியும் இரண்டு மகள்களும் பிரான்சில் வசிப்பதாக.. அவரின் வாகன சாரதி, முன்பு தெரிவித்து இருந்தார். இவர் காவி உடுத்தியவர்களுடன் இருந்ததை விட... காக்கி சட்டை உடுத்தியவர்களுடன் தான்... அதிகமாக இருந்துள்ளார்.
 4. கேரளா விமான விபத்தில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு கேரளாவில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று(வெள்ளிக்கிழமை) ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.1344 விமானம் வந்தடைந்தது. 184 பயணிகள் மற்றும் 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 190 பேர் பயணித்த விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்து 10ஆவது ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டது. இதன்போது ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து குறித்த விமானம் விபத்துக்குள்ளானது. குறித்த விமானம் இரண்டு பாகங்களாக உடைந்தது. இந்த பாரிய விபத்து தொடர்பாக தகவலறிந்து அருகில் இருந்த மக்கள் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மீட்பு படையினர் விரைந்து சென்று விமான இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்ட படையினர் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் 15 பேர் உயிரிழந்துவிட்டதாக முதல்கட்டமாக அறிவித்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 3பேர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானி, துணை விமானியும் உள்ளிட்ட 18பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏனைய 173 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கேரளா-விமான-விபத்தில்-உய/
 5. கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள சவுதியின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை கொல்ல இளவரசர் திட்டமா? கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள சவுதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கொல்ல திட்டமிட்டதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. துருக்கியில் சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே, சாத் அல் ஜாப்ரி என்பவரை கொல்வதற்கு திட்டமிடப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘என்னை கொள்வதற்காக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் கனடாவிற்கு ஒரு கொலை கும்பலை அனுப்பினார்’ என சாத் அல் ஜாப்ரி குற்றம்சாட்டியுள்ளார். ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையம் வாயிலாக சந்தேகத்திற்குரிய கும்பல் ஒன்று கனடாவிற்குள் நுழைய முயற்சித்தது என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாத் அல் ஜாப்ரியின் குடும்பத்தினர் அனைவரும் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பில் பிளேர், ‘கனடாவில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது, யார் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலும் சட்டபடி புகார் அளிக்கலாம்’ என கூறினார். 2018ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்த கும்பலை சேர்ந்த நபர்கள்தான் ஜாப்ரியை கொல்ல முயற்சித்ததாக வொஷிங்டனில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபிய அரசின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியான ஜாப்ரி, மூன்று ஆண்டுகளாக தனியார் பாதுகாப்பு படை ஒன்றின் பாதுகாப்புடன் கனடாவின் ரொறன்ரோ நகரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கனடாவில்-தஞ்சம்-புகுந்து/
 6. வடக்கு ஆர்ட்டிக் பகுதியில் இருந்த கடைசி பனிப்பாறை தானாகவே இடிந்துள்ளது: ஆராய்ச்சியாளர்கள் தகவல் வடக்கு ஆர்ட்டிக் பகுதியில் இருந்த கடைசி இராட்சத பனிப்பாறை அடுக்கு தானாகவே இடிந்து விழுந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 40 சதவீதம் பகுதி உருகி விட்டதாகவும், இடிந்து விழுந்த பனிப்பாறையின் அளவு 80 சதுர கிலோ மீட்டர் எனவும், நியூயோர்க்கில் உள்ள 60 சதுர கிலோ மீட்டர் கொண்ட மன்ஹாட்டன் தீவைவிட பெரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனி பாறை இடிந்த பகுதி, வடக்கு கனடாவுக்கு சொந்தமான மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள நுனாவட் எல்லீஸ்மீர் தீவில் உள்ளது. சாதாரண காற்று வெப்பநிலைக்கு மேல், கடல் காற்று மற்றும் பனி அடிக்கின் முன் திறந்த நீர் ஆகியவை பனிப்பாறையின் ஒரு பகுதியை உடைந்திருக்கலாம் என கனடாவின் பனி மையம் தெரிவித்துள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக பனி பாறைகள் தொடர்ந்து உருகி வருவதால், கடல் நீர் மட்டம் அதிகரித்து பேரழிவு ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். http://athavannews.com/வடக்கு-ஆர்ட்டிக்-பகுதியி/
 7. ஆகா... கருவாட்டு குழம்பு வாசம், இங்கை மட்டும் மணக்குது. நாங்களும் இதே முறையில், ஆனால் தக்காளிப் பழம் போடாமல் சமைப்போம்.
 8. அவுஸ்திரேயாவில் தானே... உங்கள், தோட்டத்தில் பயிரிடலாமே.
 9. நாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்? ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், அபுதாபியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் விசாரணைக்கு உட்பட்ட 82 வயதான ஜுவான் கார்லோஸ், எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து ஸ்பெயினின் ஊடகங்கள் பல ஊகங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது ஜுவான் கார்லோஸ் திங்களன்று அபுதாபிக்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பறந்ததாக ஏபிசி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. ஜுவான் கார்லோஸ் திங்களன்று ஸ்பெயினிலிருந்து வெளியேறுவதற்கான தனது முடிவை திடீரென அறிவித்ததிலிருந்து, அவர் இருக்கும் இடம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த விமானம் பரிஸிலிருந்து அபுதாபிக்கு செல்லும் வழியில் இருந்ததாகவும், ஜுவான் கார்லோஸ், நான்கு பாதுகாப்பு காவலர்கள் மற்றும் ஒரு நபரை அழைத்துச் செல்வதற்காக வடமேற்கு ஸ்பெயின் நகரமான வைகோவில் நிறுத்தப்பட்டதாகவும் ஏபிசி தெரிவித்துள்ளது. அதிவேக ரயில் ஒப்பந்தத்திற்காக சவுதி அரசரிடமிருந்து மன்னர் ஜூவான் கார்லோஸ், 100 மில்லியன் டொலர்கள் தொகை பெற்றதாக கடந்த மார்ச்சில் குற்றச்சாட்டு எழுந்தது, இதனையடுத்து தொடர்ந்து இவர் மீது லஞ்ச, ஊழல் புகார்கள் எழுந்தன, இதில் பெற்ற பணத்தை தன் முன்னாள் காதலிக்கு அனுப்பியதாக ஸ்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 1975ஆம் ஆண்டு ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோ மரணமடைந்த பிறகு ஆட்சியைப் பிடித்த கார்லோஸ், ஸ்பெயினை எதேச்சதிகாரப் பிடியிலிருந்து ஜனநாயகப் பாதைக்கு திருப்பியவர் என்ற அளவில் மிகவும் மதிக்கப்பட்டார். இவ்வாறு ஸ்பெயின் நாட்டு மன்னராக 35 ஆண்டுகளுக்கு மேல் இருந்த 82 வயதான ஜுவான் கார்லோஸ், தனது மகன் பிலிப்பை கடந்த 2014ஆம் ஆண்டு மன்னராக முடிசூட்டினார். http://athavannews.com/நாட்டை-விட்டு-வெளியேறிய-2/