Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    76583
  • Joined

  • Days Won

    766

Everything posted by தமிழ் சிறி

  1. எங்கள் பிரதேசங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன! -கோவிந்தன் கருணாகரம். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தரன் தனிப்பட்ட ரீதியில் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்திற்கு சென்று இருக்கலாம் எனவே அவர் கூட்டத்திற்கு சென்றதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள நா. உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன், இந்த நாடு தற்போதும் பொருளாதார ரீதியில் உலகத்தில் இருந்து அந்நியப்பட்டிருக்கின்றது. எனவே இந்த நாட்டு நிலைமையை உணர்ந்து கொள்ளாமல் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என அவர் குறிப்பிட்டார். சிவராத்திரி தினம் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான தினம் சிவபெருமான் இந்துக்களின் முதல் முதல் கடவுள் இந்த நிலையில் சிவராத்திரிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட ஆலைய குரு மற்றும் பக்தர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளதுடன், சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொல்பொருள் திணைக்களம் என்ற ரீதியிலே எங்கள் பிரதேசங்கள் பல கபளீகரம் செய்ப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் வெடுக்குநாறி மலையும் கபளீகரம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த நேரத்தில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும், வடக்கு கிழக்கில் அமைதியை கொண்டு வரவேண்டும், 13 திருத்த சட்டத்தை அமுல்படுத்தவேண்டும், புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற தமிழ் தனவந்தவர்கள் இலங்கையில் வந்து முதலிடவேண்டும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் வாய்கிழிய கூறிக் கொண்டு, மறைமுக நிகழ்ச்சி நிரலில் வடக்கு கிழக்கில் தமிழினத்தின் கலை கலாச்சாரத்தை ஒழிக்கும் ஒரு வேலைத்திட்டமாக இந்த வெடுக்குநாறி சம்பவத்தை பார்ப்பதாகவும் கோவிந்தன் கருணாகரம் மேலும் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1373292
  2. வட்டுக்கோட்டை வாள் வெட்டுப் படுகொலை: 4 பேர் கைது! யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சிப் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை அராலி பகுதியைச் சேர்ந்த 37, 32,25, 22 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், சந்தேக நபர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போது நேற்று இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373271
  3. கடவுச்சீட்டுக்களை வழங்க முருகன் உள்ளிட்டோருக்கு இலங்கை துணைத் தூதரகம் அழைப்பு! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏனைய மூன்று பேருக்கான கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக இன்று இலங்கை துணை தூதரகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசாங்கம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார். அதன்படி கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணல் இன்று இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதியை பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று நேர்காணலுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று முருகனை நோகாணல் செய்வதற்கு அனுமதியும் பெறப்பட்டுள்ளது. அத்துடன் ரொபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்வதற்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1373297
  4. புங்கையூரானுக்கு உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
  5. மாணவன் மரணம்: வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம்! அம்பாறை மாவட்டம், திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை விளையாட்டு போட்டியின் போது மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் திடிரென மயக்கமுற்ற நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யபட்ட நிலையில் அங்கு அம்மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலை சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன் எனும் மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த பாடசாலை மாணவரகள் பொதுமக்கள் மரணமடைந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்க தவறிய திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி, மாணவனின் மரணத்திற்கு வைத்தியர்களின் அலட்சிய போக்கே காரணம் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்த மாணவன் எந்தவொரு சிகிச்சையுமின்றி மூன்று மணித்தியாலங்கள் இருந்ததாகத் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டமையால் அங்கு பதற்றமானதொரு சூழலும் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1373099
  6. யாழ் பெரிய பள்ளிவாசல்: நிர்வாகத் தெரிவில் அதிருப்தி. யாழ் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம் தெரிவித்துள்ளார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எமது யாழ் பெரிய பள்ளிவாசல் 1967 ஆம் ஆண்டு சாதாரண ஒரு கொட்டகையாக அமைக்கப்பட்டு அதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினார்கள். 1990 ஆம் ஆண்டு வெளியற்றப்பட்டு மீண்டும் 2002இல் மீண்டும் மீள்குடியேறி வந்து பார்த்தபோது பள்ளிவாசலை உடைந்த நிலைமையில் கண்டோம். பின்னர் அதனை பெரிய கஷ்டத்தின் மத்தியில் ஒவ்வொரு தனவந்தர்களிடமும் பண உதவி பெற்று பள்ளிவாசலை நாங்கள் புனரமைத்து இன்று அல்லாவினுடைய கிருபையினால் ஒரு மர்க்கசாக இருந்து கொண்டிருக்கிறது. எனவே எங்கே பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களுடைய அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரே பள்ளியின் தலைவராக வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை. எமது மக்கள் பாதிக்கப்பட்டு தற்போது மீள்குடியேளி இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்த தெரிவுகளை நடத்துபவர்களும் சரி முஸ்லிம் கலாசார தினைக்களத்தில் இருப்பவர்களும் சரி யோசிக்க வேண்டும், அவர்களுடைய ஊர்களில் பள்ளிவாசல் நிர்வாக தெரிவு நடந்தால் ஒரு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை தலைவராக நியமிப்பார்களா ஏன் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் இந்த நிலைமை, அல்லாஹ்வுக்காக இந்த நிர்வாக தெரிவை உடனடியாக நிறுத்தி புனித ரமலான் நாளை ஆரம்பமாக உள்ளதால் ரமலான் முடிந்த பிறகு முஸ்லிம் கலாசார தினைக்கள அதிகாரிகள் முன்னிலையில் இந்த தெரிவை நடத்தி எதிர்காலத்தில் யாழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவி செய்வீர்களா என்று கேட்டுக்கொள்ளுகின்றேன் ” ,இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1373085
  7. மிகவும் கவலையான செய்தி. 😥 விதுர்ஷனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  8. ஏழு ஒஸ்கார் விருதுகளை வென்று குவித்த ‘ஓப்பன்ஹெய்மர்‘ அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 96 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் ஓப்பன்ஹெய்மர்” திரைப்படமானது ஏழு ஒஸ்கார் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. அந்தவகையில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், ,சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் ஆகிய பிரிவுகளில் குறித்த திரைப்படம் விருதை வென்றுள்ளது. இதன் அடிப்படையில் சிறந்த நடிகருக்கான விருதை சிலியான் முர்பியும் (Cillian Murphy), சிறந்த இயக்குனருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலனும், பெற்றுள்ளனர். இதேநேரம் புவர் திங்ஸ் திரைப்படமானது சிறந்த புரோடக்சன், சிறந்த ஆட வடிவமைப்பு, சிறந்த நடிகை ,சிறந்த ஒப்பனை மற்றும் ஹேர்ஸ்டைல் ஆகியவற்றுக்கான விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373027
  9. உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி.. பச்சை மலைப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க... 😂
  10. சிங்கள பௌத்த மேலாண்மைவாதக் கருத்தியலின் ஆகப் பிந்திய வன்முறை வடிவமே வெடுக்குநாறிமலையில் அரங்கேறியது ! வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டிலே ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயக் குருக்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறல்களினையும், கைது நடவடிக்கைகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறல்களைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் , “கடந்த மகா சிவராத்திரி தினத்தன்று இரவு வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் தலத்திலே வழிபாட்டிலே ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயக் குருக்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறல்களினையும், கைது நடவடிக்கைகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மகா சிவராத்திரி சைவ, இந்து மக்களுக்கு மிகவும் முக்கியமான தினங்களிலே ஒன்று. அந்தத் தினத்திலே உலகெங்கும் வாழும் சைவ, இந்து மக்கள் ஆலயங்களிலே இரவு முழுவதும் விழித்திருந்து சமய அனுட்டானங்களிலே ஈடுபடுவர். அவ்வாறான ஒரு வேளையிலே பொலிஸார் ஆதிலிங்கேஸ்வரர் தலத்தினுள் நுழைந்து அது தொல்பொருள் ஆய்வுக்குரிய பாதுகாக்கப்பட்ட‌ இடம் என்ற போர்வையிலே அங்கு அனுட்டானங்களிலே ஈடுபட்டிருந்த மக்களிற்கு பல இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர் கிடைப்பதனைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். பின்னர் பூஜைகளை குழப்பி உள்ளனர். வழிபாட்டில் ஈடுபட்டோரினை பலவந்தமாக வெளியேற்றியது மாத்திரமின்றி கைதும் செய்துள்ளனர். இவை யாவும் அந்த மக்களின் சமய ரீதியிலான உரிமைகளை மோசமாக மீறும் செயல்களாகும் என்பதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. வெடுக்குநாறி மலையில் இடம்பெற்றிருக்கும் இந்தச் சம்பவம் வெறும் வன்முறையும், அத்துமீறலும் மாத்திரம் அல்ல இது இலங்கையில் தொடரும் சிங்கள பௌத்த மேலாண்மைவாதக் கருத்தியலின் ஆகப் பிந்திய வன்முறை வடிவங்களிலே ஒன்று. சிறுபான்மையாக இருக்கும் மக்களின் மத உரிமைகளை பாதிக்கும் செயன்முறைகளினை இலங்கையினை ஆட்சி செய்யும் அரசாங்கங்கள் காலங்காலமாக மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இந்த செயன்முறைகளினால் இந்து சமயத்தவர் மாத்திரமல்லாது, கிறீஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் யாப்பினைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், சிறுபான்மை மக்களின் மத உரிமைகளை மீறும் போக்குக்கள் யாப்பின் கருத்தியலுக்குள்ளேயே பொதிந்து போய் இருக்கிறது என்பதனை நாம் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியம். வெடுக்குநாறி மலைச் சம்பவம் இலங்கை அரசின் மதவாதக் குணாம்சத்தினால் ஏற்பட்ட ஒரு கட்டமைப்பு சார் விடயமாகவே பார்க்கப்படல் வேண்டும். தமிழ் பேசும் மக்கள் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடக்குக் கிழக்கினைப் பௌத்த மயமாக்கம் செய்வதன் மூலமும், சிங்கள மயமாக்குவதன் மூலமும் இந்தப் பிராந்தியத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் வலுவிழக்கச் செய்யும் செயன்முறைகளிலே இலங்கை அரசாங்கங்கள் பல தசாப்தங்களாக ஈடுபட்டு வந்திருக்கின்றன. இந்தச் செயன்முறைகளின் ஒரு வடிவமாகத் தொல்பொருளியல் ஆய்வு என்ற போர்வையில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் தலத்தினையும் ஏனைய பல சைவ, இந்து மக்கள் வழிபடும் தலங்களையும் சிங்கள பௌத்தமயமாக்கும் நடவடிக்கைகள் அண்மைய சில வருடங்களாகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. கொழும்பில் இருந்து, மையப்படுத்தப்பட்ட முறையிலே, இராணுவக் கட்டமைப்புக்களின் துணையுடன், சிங்கள பௌத்தக் கருத்தியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்தத் தொல்பொருளியல் செயன்முறைகளின் போது வடக்குக் கிழக்கிலே பல சந்ததிகளாக இந்தத் தலங்களிலே தமது சமய அனுட்டானங்களில் ஈடுபடும் மக்களின் உரிமைகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த விதமான இடமும் வழங்கப்படுவதில்லை. மாறாக தொல்பொருளியல் ஆய்வு என்பது இந்த மக்களின் மீதும், அவர்களின் சமய நம்பிக்கைகள் மற்றும் செயன்முறைகளின் மீதும் ஒரு வன்முறையாகவே ஏவப்படுகிறது. இந்த வன்முறையின் ஒரு விளைவே கடந்த சிவராத்திரி தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களும் கைதுகளும். கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக வழக்குகள் எதுவுமின்றி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், வடக்குக் கிழக்கிலே தொல்பொருளியல் ஆய்வு என்ற பெயரிலும், வனப் பாதுகாப்பு என்ற பெயரிலும், மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் என்ற பெயரிலும் ஏனைய வடிவங்களிலும் இடம்பெறும் சிங்கள பௌத்த மயமாக்கற் செயன்முறைகள் யாவும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோருகிறது. இனவாதத்தினையும், மதவாத்தினையும் முன்னெடுக்கும் அரசியலமைப்பும், அரசுக் கட்டமைப்பும் மாற்றப்பட்டால் மாத்திரமே இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் இன, சமய ரீதியிலே சமத்துவம் மிக்கவர்களாக வாழ முடியும். வெடுக்குநாறி மலைப் பிரச்சினைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அனைவரும் இவ்வாறான அரசியல் மாற்றங்களினை வலியுறுத்துவதன் மூலமாக‌ இனவாதத்தினையும், மதவாதத்தினையும் முறியடிக்க முன்வர வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோருகின்றது” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1372939
  11. சாந்தனுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி எது? நிலாந்தன்! சாந்தனின் உடல்... இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்களுக்கும்; தமிழகத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான கசப்புணர்வை அதிகப்படுத்தியிருக்கின்றது. அதை இலங்கை அரசாங்கம் விரும்பியிருந்திருக்கும். அந்த உடல் வடக்கிற்கு கொண்டு வரப்பட்ட அதே காலப்பகுதியில், இம்மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் மூன்று தீவுகளில் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை இந்தியக் கொம்பனிகளுக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்தாகியது. அவை முன்பு சீனக் கொம்பனிகளுக்கு வழங்கப்படவிருந்தன. இந்தியா அதை விரும்பவில்லை, அதைத் தடுக்கின்றது என்று சீனா மறைமுகமாகக் குற்றம் சாட்டியது. எனினும் நீண்ட இழுபறியின் பின் கடந்த முதலாம் தேதி தான் அதற்குரிய உடன்படிக்கை கைச்சாத்தாகியது. புதிய உடன்படிக்கையின்படி நெடுந்தீவு,அனலைதீவு, நைனா தீவு ஆகிய மூன்று தீவுகளிலும் இந்தியக் கொம்பனிகள் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி நிலையங்களை ஸ்தாபிக்கும். அவ்வாறு மூன்று தீவுகளில் இந்திய கொம்பனிகள் கால் பதிக்க உள்ள பின்னயில்,கடந்த வாரம் இந்திய மீனவர்களுக்கு எதிராக ஈழத்தமிழ் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றார்கள்.எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது? சாந்தனின் இறுதி ஊர்வலம் அண்மை ஆண்டுகளில் வடக்கில் நிகழ்ந்த ஒப்பீட்டளவில் அதிகம் சனம் சேர்ந்த ஓர் இறுதி ஊர்வலம் எனலாம். வவனியாவிலிருந்து எல்லங்குளம் வரையிலும் மக்கள் தன்னார்வமாக சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி ஊர்வலத்தை அரசியல் கைதிகளுக்கான அமைப்பாகிய “குறையற்றவர்களின் குரல்” என்ற அமைப்பும் “போராளிகள் நலன்புரிச் சங்கம்” என்ற அமைப்பும் பொறுப்பெடுத்தன.அந்த ஊர்வலம் வந்த வழிநெடுக பொதுமக்கள் அமைப்புகள் ஆங்காங்கே திரண்டு அஞ்சலி செலுத்தின. குறிப்பாக வடமராட்சியில் சாந்தனின் தாய்ப் பட்டினத்தில் சனசமூக நிலையங்கள் அதிகம் பங்களிப்பை நல்கின.சாந்தன் உயிரோடு நாடு திரும்பி இங்கே உயிர் நீத்து இருந்திருந்தால்,அவருக்கு இத்துணை அனுதாபம் கிடைத்திருக்குமோ தெரியாது.அவர் உயிரற்ற உடலாகத் திரும்பி வந்தமைதான் அவருக்கு கிடைத்த அதிகரித்த அனுதாபத்துக்கு ஒரு காரணம். 33 ஆண்டுகளாக சிறையில் இருந்தவர், தன் தாயைப் பார்ப்பதற்குத் தவித்திருந்த கடைசி நாளில் உயிர் நீத்தமை என்பது அவர் மீதான அனுதாபத்தை; அவரின் உடல் மீதான மதிப்பை அதிகப்படுத்தியது.அதுதான் வவனியாவில் இருந்து எல்லங்குளம் வரையிலும் அவருக்கு கிடைத்த மரியாதை. ஆனால் சாந்தனுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது அதோடு முடியவில்லை.அவரோடு ஒன்றாகச் சிறப்பு முகாம்களில் இருந்த மேலும் மூவர் இதுவரை விடுவிக்கப்படவில்லை. அவர்களைப் போல பல ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களில் இப்பொழுதும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். கிடைக்கும் புள்ளி விவரங்கள் சரியாக இருந்தால் மொத்தம் நூற்றுக்கும் குறையாத கைதிகளில் சுமார் 70-க்கும் குறையாதவர்கள் ஈழத் தமிழர்கள் என்று கூறப்படுகின்றது. இந்த 70-க்கும் குறையாத ஈழத் தமிழர்களில் பல்வேறு விதமான குற்றங்களை செய்தவர்களும் உண்டு.அரசியல் கைதிகளும் உண்டு. போதைப்பொருள் வியாபாரிகளும் உண்டு. தவிர சிறிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்களும் உண்டு. உதாரணமாக ஆதார் அட்டை இல்லாமல் வாகன அனுமதிப்பத்திரம் எடுத்தவர், வெளிநாடு போக முற்படும் ஈழத் தமிழர்களுக்கு பொய்யான ஆவணங்களைத் தயாரித்துக் கொடுப்பவர் போன்றவர்களும் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது. இந்தியாவில் சிறப்பு முகாம் என்று தோற்றப்பாடு மாநில அரசாங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஒரு மாநிலத்தில் உரிய பயண ஆவணம் இன்றித் தங்கியிருக்கும் வெளிநாட்டவரை அந்த மாநிலம் தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதற்கான ஏற்பாடு அது. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலை, பத்மநாபா படுகொலை போன்ற சம்பவங்களின் பின்னணியில் தமிழக சிறப்பு முகாம்கள் எனப்படுகின்றவை ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை கொடுமையான அனுபவங்களாகக் கருதப்படுகின்றன. சிறப்பு முகாம்களில் மட்டுமல்ல, வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் பெயரில் தமிழகத்தில் கைது செய்யப்படும் ஈழத் தமிழர்கள் கௌரவமாக நடத்தப்படுவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் உண்டு.அவர்கள் வெளிநாட்டவர்களுக்குரிய மரியாதையோடு நடத்தப்படுவதில்லை என்றும்,அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கூறுகிறார்கள். ராஜீவ் காந்தி படுகொலை, பத்மநாபா படுகொலை ஆகிய சம்பவங்களின் பின்னர் தமிழகத்தில் கைது செய்யப்படும் ஈழத்தமிழர்கள் கௌரவமாக நடத்தப்படுவதில்லை என்பது ஒரு பொதுவான அவதானிப்பு. தவிர புலம்பெயர்ந்த தமிழர்கள் காசை அள்ளி வீசி எல்லாவற்றையும் செய்யலாம் என்று நம்பும் ஒரு பின்னணியில், ஈழத் தமிழ் கைதிகளை வைத்து அதிகம் உழைக்கலாம் என்ற நம்பிக்கையும் அங்கே உண்டு. இவ்வாறானது ஒரு பின்னணியில்,சாந்தனின் மரணத்தை முன்வைத்து ஒரு அடிப்படையான விஷயத்தை இங்கே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. பொதுவாக ஒரு நபர் ஒரு வெளிநாட்டில் கைது செய்யப்படும் பொழுது, அவருடைய நலன்களை அவருடைய தாய் நாட்டின் தூதரகம்தான் பொறுப்பேற்கும். வடகடலில் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள உப தூதரகமும் கொழும்பில் உள்ள பிரதான தூதரகமும் பொறுப்பேற்கின்றன. அவர்களுடைய நலன்களை இந்தியத் தூதரகம்தான் கவனிக்கும். உலகம் முழுவதிலும் இதுதான் வழமை. தமிழகத்தில் இலங்கைக்கான உப தூதரகம் உண்டு. அங்கே தமிழ் அதிகாரிகளும் உண்டு. ஆனாலும் தமிழகத்தில் கைது செய்யப்படும் ஈழத் தமிழர்களின் விடயத்தில் மேற்படி உப தூதரகம் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அளவுக்குத் தலையிடுவது கிடையாது. அங்கே ஈழத் தமிழ் கைதிகள் நடத்தப்படும் விதத்தைத் தொகுத்துப் பார்த்தால், ஒரு விமர்சகர் கூறுவது போல, அவர்கள் அரசியல் அனாதைகளாகக் காணப்படுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.சாதாரண கைதிகளின் நிலைமையை இப்படி என்றால் அரசியல் கைதிகளின் நிலைமையைச் சொல்லத் தேவையில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில்,தமிழகத்தில் கைது செய்யப்படுகின்ற அல்லது சிறப்பு முகாமும் உட்பட வெவ்வேறு சிறைகளில் சிறை வைக்கப்பட்டிருக்கின்ற ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு ஒரு பலமான சட்ட உதவி மையத்தை தமிழகத்தில் திறக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் இருந்து ஒரு கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. ஈழத் தமிழர்களிடம் நிதிப்பலம் மிக்க ஒரு புலம்பெயர் சமூகம் உண்டு. புலம்பெயர் சமூகத்தின் நிதிப் பங்களிப்போடு தமிழகத்தில் அவ்வாறு ஒரு சட்ட உதவி மையத்தை உருவாக்கினால் என்ன? அச்சட்ட உதவி மையத்தில் வேலை செய்வதற்கு அங்கே பல சட்டத்தரணிகள் தயாராக இருக்கிறார்கள். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னரும், பத்மநாபாவும் அவருடைய தோழர்களும் கொல்லப்பட்ட பின்னரும், தமிழகத்தில் ஈழ உணர்வாளர்கள் தீக்குளித்திருக்கிறார்கள் .அது மட்டுமல்ல,சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை தமிழகத்தில் உள்ள சில உணர்வாளர்கள் சந்திப்பதுண்டு. மேலும் சாந்தனும் உட்பட ஈழத்து அரசியல் கைதிகளின் வழக்குகளில் தோன்றுவது தமிழகத்தில் உள்ள ஈழ உணர்வானர்களான வழக்கறிஞர்கள்தான். சாந்தனின் உடலை பொறுப்பெடுத்து நாட்டுக்கு கொண்டு வந்ததும் அப்படி ஒரு வழக்கறிஞர்தான். எனவே சாந்தனின் இழப்பை முன்வைத்து தமிழகத்தில் அவ்வாறு ஒரு பலமான சட்ட உதவி மையத்தை உருவாக்குவதைக் குறித்து ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். குறிப்பாக சிறப்பு முகாம்களில் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை வெளிப்பதிவு அகதிகளாக மாற்ற வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் வைக்கப்படுகிறது. சாந்தனும் உட்பட அரசியல் கைதிகளின் விடயத்தில் ஈழத்து தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு. அது மட்டுமல்ல, இவர்களில் பலர் தமிழகத்திற்கு செல்வதுண்டு அங்கே தமிழக பிரபல்யங்களை கண்டு அவர்களோடு படம் எடுத்துக் கொள்வதும் உண்டு.ஆனால் இவர்களில் எத்தனை பேர் சிறைகளுக்கும் சிறப்பு முகாம்களுக்கும் அகதி முகாம்களுக்கும் சென்றிருக்கிறார்கள்? அகதிகளோடு படம் எடுத்திருக்கிறார்கள்? ஈழத் தமிழ் கைதிகளை அவர்களுடைய அரசியல் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை என்று சொன்னால், தமிழக அரசு அவர்களை எப்படி மதிக்கும்? எனவே இப்பொழுது தமிழகத்தில் மிஞ்சியிருக்கும் அரசியல் கைதிகளும் உட்பட ஏனைய ஈழத் தமிழ் கைதிகளின் விடயத்தில்,தமிழ் அரசியல் சமூகம் தெளிவான சில முடிவுகளை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று தமிழகத்துக்கு சென்று அங்குள்ள கைதிகளோடு உரையாட வேண்டும். மேலும் அங்கு உள்ள ஈழ உணர்வாளர்களின் உதவியோடு ஒரு சட்ட உதவி மையத்தை உருவாக்க வேண்டும்.அதுதான் நடைமுறைச் சாத்தியமான வழி.அதுதான் உடனடிக்குச் செய்ய வேண்டிய வேலையும். அதுதான் சாந்தனுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியும். https://athavannews.com/2024/1372928
  12. வெடுக்கு நாறிமலையில் இடம்பெற்ற பொலிசாரின் அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ! வெடுக்குநாறிமாலையில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய உணர்வாளர்களின் அழைப்பின் அடிப்படையில் இந்த போராட்டம் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி அருகில் நடைபெற்றது. சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின் போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ததுடன் மேலும், கடும் அடக்குமுறையினை பிரயோகித்திருந்தனர். இதனை கண்டிக்கும் முகமாகவே மட்டக்களப்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, “எங்கள் மண்ணில் எங்கள் மலையில் உங்களுக்கு உரிமையில்லை, சிவராத்திரி நாளிலும் சிங்கள அடக்குமுறை ” தமிழர்களின் வழிபடும் உரிமையினை தடுக்கும் அரசை கண்டிக்கின்றோம், ஆதிசிவன் கோயில் நிலத்தினை அழிக்காதே வெளியேறு, வெடுக்குநாறி ஆதிசிவன் சிவராத்திரி பூசையை தடுத்த படையினரின் அராஜகத்தை கண்டிக்கின்றோம் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை தாங்கிவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர், மதத்தலைவர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2024/1372927
  13. ரசோதரன்... இந்த ஏழு நாட்களில், உங்கள் எழுத்தின் ரசிகனாகி விட்டேன். 🥰 எனக்கு என்னவோ.... நீங்கள் முன்பு வேறு பெயரில் யாழ்.களத்தில் எழுதியமாதிரி, ஒரு சந்தேகம். 😂சந்தேகம் மட்டுமே... இன்னும் ஊர்ஜிதம் செய்யவில்லை. 🤣 (பகிடிக்கு சீரியஸாக எடுக்காதீர்கள்.) 🙂
  14. இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கஞ்சாவுடன் சென்ற பெண் கைது! யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான குறித்த யுவதியிடமிருந்து 2 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஜந்தாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது. இதன்போது, கண்காட்சி பிரதான நுழைவாயிலில் கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை சோதனையிட்டபோது அவரிடம் கஞ்சா இருந்தள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த பெண் விமானப்படையினரால் கைதுசெய்யப்பட்டு யாழ்;. பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளநிலையில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372903
  15. கோட்டாபயவின் சதி நூல் – உண்மையை திரிபு படுத்த வேண்டாமென மனோ காட்டம்! ‘சிங்கள பௌத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிக்கும் என்பதனாலேயே தனக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்று திரண்டு அரகலவை நடத்தினார்கள்’ என கோட்டாபய ராஜபக்ஷ தனது புத்தகத்தில் கூறியிருப்பதானது, வரலாற்று குற்றங்களில் இருந்து இன்னமும் கூட பாடம் படிக்காத ஒரு அறிவிலி என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள “சதி” என்ற நூல் தொடர்பில் தனது எக்ஸ் தளத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தள்ளதாவது, சிங்கள-பௌத்தர் பலமடைவது இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல. சிங்கள மொழி பேசுவதன் மூலமும், பௌத்த தரிசனத்தை கடை பிடிப்பதன் மூலமும் நானும்கூட சிங்கள பௌத்த சிந்தனையை பலப்படுத்தி வருகிறேனே! எமக்கு அதில் என்ன பிரச்சினை? இந்நாட்டில் சிங்கள- பௌத்தம், பேரினவாதமாக மாறி, பல இனங்கள், பல மதங்கள், பல மொழிகள் என்ற இலங்கை பன்மைத்துவத்தை இல்லாது ஒழிப்பதே எமது பிரச்சினை. அதுதான் எமது நீண்டகால போராட்டம். உங்கள் “அரகலய” வுக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. நாடு முழுவதும்; நடைபெற்ற அரகலவில் பங்கு பெற்ற மக்களில் நூற்றுக்கு 99 வீதமானவர்கள் 2019, 2020 தேர்தல்களில் மொட்டு சின்னத்துக்கு வாக்கு அளித்தவர்கள். அவர்களே, கோட்டாபயவின் முட்டாள்தனமான, பொருளாதார கொள்கைள் காரணமாக வயிற்றில் பாரிய அடி விழுந்தவுடன் தெருவுக்கு வந்து போராடியவர்கள். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கூட இவை பிரச்சினைகள்தான். ஆனால், அவற்றையும் மீறிய இன, மத ஒடுக்குமுறைகளால் அவர்கள் துன்பம் அடைந்தார்கள். ஆங்காங்கே ஒரு சில தமிழ், முஸ்லிம் மக்கள் இறுதி கால கட்டங்களில் அரகலவில் கலந்து கொண்டார்கள். சில அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் அதீத கற்பனையில் “இத்தோடு இந்நாட்டில் இனவாதத்தையும் ஒழித்து விடுவோம்” என முழங்கியதும் உண்மைதான். “நல்லது நடந்தால் சரி” என நாம் அவர்களை வாழ்த்தியதும் உண்மைதான். இன்று அரசியல் அரங்கில் அந்த அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்களை காணவில்லை. எது எப்படி இருந்தாலும், அரகலய முழுக்க முழுக்க, “வயிற்றில் பாரிய அடி விழுந்ததுடன், தெருவுக்கு வந்த சிங்கள பெருந்திரள் மக்களால்” நடத்தப்பட்ட ஒன்றாகும். அதுவும் 2019, 2020 தேர்தல்களில் மொட்டு சின்னத்துக்கு வாக்களித்த மக்களால் நடத்தப்பட்டது. இதுதான் உண்மை. சிங்கள-பௌத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு பிடிக்காததாலேயே, அவர்கள் அரகலவை நடத்தினார்கள் எனக் கூறி, உண்மையை திரிபு படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷவுக்கு கடுமையாக கூறி வைக்க விரும்புகிறேன் என தெரிவித்தார். https://athavannews.com/2024/1372872
  16. முப்பது வருசத்துக்கு முதல், இப்பிடி பாய்ந்தனான். 😂 அது எல்லாம்... ஒரு கனாக்காலம். 🤣
  17. தமிழ்நாட்டில் ஒருநாள் ஒரு ஊரில் பசு மாடு ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. இதை கவனித்த கோயில் யானை “ஏன் இந்தளவு வேகமாய் ஓடுகிறாய்?” என கேட்டது. அதற்கு அந்த பசு மாடு “ தெருவில் திரியும் நாய்களை பிடிக்க வண்டியுடன் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்” என்றது. இதைக் கேட்ட யானை ஆச்சரியத்துடன் “ நீதான் நாய் இல்லையே. நீ பசு மாடுதானே? நீ ஏன் ஓடுகிறாய்?” என கேட்டது. அதற்கு அந்த பசுமாடு “ நான் பசுமாடுதான். ஆனால் அவர்கள் என்னை பிடித்தால் நான் நாய் இல்லை பசு என்பதை நிரூபிக்க 33 வருடம் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் ” என்றது. இப்போது பசுவுடன் சேர்ந்து யானையும் ஓடியது. இது ஒரு நகைச்சுவை கதைதான். ஆனால் இதைவிட நகைச்சுவையானது தமிழ்நாடு பொலிசாரின் நிஜக்கதைகள். இப்போது சாந்தன் இறந்த பின்பு குண்டு சாந்தனுக்கு பதிலாக சின்ன சாந்தனை வழக்கில் இணைத்துவிட்டார்கள் என்ற கதை அடிபடுகிறது. இதைக் கேட்ட சிலர் இப்படியும் நடக்க முடியுமா என ஆச்சரியத்துடன் கேட்கின்றனர். இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை இங்கு தருகிறேன். தமிழ்நாட்டில் கிருபன் என்பவர் புலிகளின் பொறுப்பாளராக இருந்த காலம். அவர் மோட்டார் சயிக்கிளில் வருவதாகவும் அவரை கைது செய்யும்படி வயலர்ஸ்சில் பொலிஸ் கமிஷனர் அறிவித்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து பொலிசார் ஒருவர் வீதியால் அப்போது மோட்டார் சயிக்கிளில் வந்த ஒரு ஈழத் தமிழரை மறித்தார். அவரிடம் பெயர் என்ன என்று கேட்டபோது அவர் தன் பெயர் நிருபன் என கூறியிருக்கிறார். உடனே அந்த பொலிசார் இவர்தான் அந்த கிருபன் என நினைத்து கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்த நிருபன் புலி உறுப்பினர் இல்லை. இவர் ஒரு முன்னாள் ரெலோ இயக்க போராளி. அப்போது இவர் இயக்கத்தில் இருந்து விலகி சென்னை திருவொற்றியூரில் பெற்றோல் விற்பனை நிலையம் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். தான் கிருபன் இல்லை, நிருபன் என்று அவர் எவ்வளவோ முறை கூறியும் பொலிசார் அதை கேட்கவில்லை. வேடிக்கை என்னவென்றால் உண்மையான கிருபன் கைது செய்யப்பட்ட பின்பும்கூட இவரை பொலிசார் விடுதலை செய்யவில்லை. அதைவிடக் கொடுமை என்னவென்றால் ரெலோ இயக்க போராளியான இவரை புலி இயக்க போராளி என்றுகூறி பல வருடங்களாக சிறையில் அடைத்துவிட்டார்கள். பல வருட சிறை மற்றும் சிறப்புமுகாம் கொடுமைகளை அனுபவித்த அவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார். அவர் தற்போது ஜரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகிறார். குண்டு சாந்தனுக்கு பதிலாக சின்ன சாந்தனை அடைப்பது, கிருபனுக்கு பதிலா நிருபனை அடைப்பது தமிழக பொலிசாரின் வழமையே. தோழர் பாலன்
  18. கனவில் சவப்பெட்டிகளை கண்டேன் – கனடாவில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் உருக்கம். ஏதோ நடக்கப் போகிறது என உணர்ந்தேன். சவப்பெட்டிகளை கனவில் பார்த்தேன். ஏதாவது பெரிய பிரச்சனையாக இருக்குமோ என நினைத்தேன் என கனடாவில்; படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்கவின் தாயாரே இவ்வாறு தெரிவித்துள்ளார். கனடாவின் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயாரான இவர் இலங்கையில் பொல்கஹவெல பிரதேசத்தில் வசிப்பதாக தெரியவந்துள்ளது. கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில், கடந்த புதன்கிழமை கனடா நேரப்படி இரவு 11 மணியளவில் இலங்கை குடும்பம் ஒன்று வாழ்ந்த வீட்டில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவதினமன்று 35 வயதுடைய இளம் தாய், அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களுடன் வசித்த மேலும் இரு இலங்கையர்களும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது குழந்தைகளின் தந்தையான 38 வயதுடைய தனுஷ்க விக்கிரமசிங்க வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் விளக்குகள் வழமைபோல் எரியவில்லை. இவர் வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே அவரைத் யாரோ தாக்கியதால், இருள் சூழ்ந்திருந்த நிலையில், அவரை தாக்கிய தாக்கிய நபரை அவரால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. எவ்வாறாயினும், தம்மைத் தாக்கியவர் இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் கண்ட தனுஷ்க, அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து கேட்டுள்ளார். சிறிது நேரம் கழித்துதான் தனுஷ்கவின் கைகள் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதையும் உணர்ந்தார். இதனையடுத்து, தனுஷ்க ஃபேப்ரியோவின் கையில் இருந்த கத்தியை பறித்துக் கொண்டு, தனக்கு உதவுமாறு கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். இந்நிலையில், 911 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு இரவு 10:52 மணிக்கு அவசர நிலை குறித்து அழைப்பொன்று வந்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர். அழைப்பினை ஏற்படுத்திய நபர் 911 என்ற இலக்கத்திற்கு அழைத்து உதவி கோருமாறு கத்தியபடி உள்ளதாக தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து சாந்தி ரமேஷ் (அயல் வீட்டுப் பெண்) என்பவர் தெரிவிக்கையில், வீட்டுக்கு வரும் வழியில் ஒருவர் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவரை இரு பொலிஸார் அழைத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். அப்போது இப்படியொரு சோகம் நடந்ததாகத் தெரியவில்லை. இது மிகவும் சோகமானதும், துயரமானதும் சம்பவம் என தெரிவித்துள்ளார். கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஒட்டாவா பொலிஸார் முதலில் காயமடைந்த தனுஷ்கவை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்பிறகு, அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் கொல்லப்பட்டதை பொலிஸார் கண்டுபிடித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் பிரதானி – எரிக் ஸ்டப்ஸ் கூறுகையில், எங்கள் குழு உடனடியாக அனுப்பப்பட்டது. அதிகாரிகள் சந்தேகநபரை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர். அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர். இதன்போதே இந்த சம்பவத்தில் இறந்த நிலையில் 6 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த குடும்பங்கள் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள். அவர்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள். உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்துள்ளார். வைத்தியசாலைக்குக் கொண்டுச்செல்லும் போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராகி உள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு கூரிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது என தெரிவித்தார். https://athavannews.com/2024/1372810
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.