Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  60,917
 • Joined

 • Days Won

  548

Everything posted by தமிழ் சிறி

 1. கணவன் செய்த இந்த… கெட்ட வேலைக்கு, முட்டுக் கொடுக்கும் மனைவியை என்ன வகையில் சேர்ப்பது. முன்பெல்லாம்… இப்படிப் பட்டவர்களை, வீட்டை விட்டே துரத்தி விடுவார்கள்.
 2. ஜப்பான் கடற்கரையில்... கண்டம் பாயும், ஏவுகணையை... பரிசோதித்தது வடகொரியா ஜப்பான் கடற்கரையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பானின் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். வட கொரியாவின் கிழக்கில் உள்ள சின்போ துறைமுகத்தில் இருந்து ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் கூறியுள்ளனர். குறித்த ஏவுகணை ஜப்பான் கடல் என அழைக்கப்படும் கிழக்கு கடலில் தரையிறங்கியது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை மிகவும் வருந்தத்தக்கது என ஜப்பானின் பிரதமர் தெரிவித்துள்ளார். சமீபத்திய வாரங்களில், வடகொரியா ஹைப்பர்சொனிக் மற்றும் நீண்ட தூர கப்பல் ஏவுகணைகள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் என கூறிக்கொள்ளும் சோதனைகளில் தீவிரமாக ஈடுபட்டது. இந்த சோதனைகளில் சில கடுமையான சர்வதேச தடைகளை மீறுகின்ற நிலையில் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனையை நடத்துவதற்கு வடகொரியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் தடை விதிக்கப்பட்டது. https://athavannews.com/2021/1245659
 3. காரைநகரில்... கடற்படை படகு மோதியதில், இந்திய மீனவரின் படகு மூழ்கியது – ஒரு மீனவர் மாயம் எல்லை தாண்டி காரைநகர் கோவளம் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது, இலங்கை கடற்படையின் படகு மோதி இந்திய மீனவர்களின் படகு மூழ்கியதில் மீனவர் ஒருவர் காணாமற்போயுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள் இலங்கை காரைநகர் – கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை கைது செய்ய முயன்ற போது ரோந்து கப்பல் மோதியதில் விசைப் படகு கடலில் மூழ்கியது. இதில் படகில் இருந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கினர் அவர்களில் சுகந்திரன், சேவியர் ஆகிய இருவரை மீட்ட இலங்கை கடற்படையினர் படகு ஓட்டி ராஜ்கிரனை தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இருவரும் காரைநகருக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். https://athavannews.com/2021/1245642
 4. யாழ் மேயர்... திருமணபந்தத்தில் இணைந்து கொண்டார். வாழ்க வளமுடன்
 5. "திவி நெகும" மோசடி வழக்கு : சட்டமா அதிபருக்கு கடிதம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான திவி நெகும மோசடி குறித்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டமை தொடர்பாக தொழில் நிபுணர்கள் தேசிய முன்னணி சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. குற்றப்பத்திரிகைகள் மீளப்பெற்றுக்கொள்வதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்ட நிலையில் இதேபோன்ற மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறித்த கடிதத்தில்சுட்டிகாட்டப்பட்டுள்ளது. எனவே, அவரது அறிவுறுத்தலின் பேரில் திரும்பப் பெறப்பட்ட வழக்கின் எண்ணையும், திரும்பப் பெறுவதில் தாக்கத்தை ஏற்படுத்திய முந்தைய வழக்கு எண்ணையும் வழங்குமாறு சட்டமா அதிபரை தொழில்நிபுணர்கள் தேசிய முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது. https://athavannews.com/2021/1245637
 6. அமைச்சர்கள், வெளிநாடு செல்லத்தடை! எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஜனாதிபதி செயலாளரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 12 ஆம் திகதி நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அன்றைய தினம் நிதி அமைச்சரின் உரை இடம்பெறும். நவம்பர் 13 ஆம் திகதி முதல் 2ஆம்வாசிப்புமீதான விவாதம் ஆரம்பாகும். இரண்டாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 23ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகும். (அமைச்சுகளுக்கான நிதி ஓதுக்கீடு). டிசம்பர் 10 ஆம் திகதி வரவு – செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறும். எனவே, வரவு செலவுத்திட்ட கூட்டத்தொடரின்போது சிலவேளை அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிரணி வாக்கெடுப்பை கோரும், மேலும் சில தரப்புகள் யோசனைகளை முன்வைப்பார்கள். இவை தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கும், எந்தவொரு நிதி ஒதுக்கீட்டையும் தோற்கடிக்காமல் இருப்பதற்காகவுமே அமைச்சர்களுக்கு வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் உட்பட அத்தியாவசிய தேவைகள் இருப்பின் அது தொடர்பில் முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1245613
 7. கெரவலபிட்டிய மின் நிலைய ஒப்பந்தம் : இடைக்கால தடை உத்தரவு கோரி மனுதாக்கல் கெரவலபிட்டிய மின் நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இடைக்கால தடை உத்தரவு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோரால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உட்பட 54 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். செப்டம்பர் 6 ஆம் திகதி கூறப்பட்ட ஒப்பந்தத்தில் அமைச்சரவையில் எட்டப்பட்ட முடிவை இரத்து செய்து, விண்ணப்பம் மீதான விசாரணை முடியும் வரை ஒப்பந்தம் அமுல்படுத்தப்படுவதைத் தடுக்க கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1245571
 8. நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அனுமதி! நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். 9 இலட்சம் ஹெக்டேருக்கு தேவையான திரவு உரத்திற்கே இவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 3.1 மில்லியன் லீட்டர் விஷேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1245616
 9. பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் – மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், தனது அரசியல் வாழ்க்கையில் சோகமான நிகழ்வு இந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலே என்றும் குறிப்பிட்டார். இது மிகவும் சிக்கலான பிரச்சினை என சுட்டிக்காட்டிய மைத்திரிபால சிறிசேன இந்த சம்பவம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சுமார் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தன்னால் தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உட்பட அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். https://athavannews.com/2021/1245623
 10. யாழில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒளிப்படப்பிடிப்பாளர் விளக்கமறியலில்! 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளரினால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் சில ஒளிப்படங்களை வெளியிட முயற்சித்த சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவிலில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் ஒளிப்படப்பிடிப்பு (ஸ்ருடியோ) நடத்துபவர் கடந்தவாரம் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களாக உறவினரான சந்தேக நபர் பல தடவைகள் தன்னை வன்புணர்ந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார். பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரின் கீழ் பணியாற்றும் சிலர் சிறுமியின் ஒளிப்படங்களை வைத்திருந்தமை தொடர்பில் கண்டறிந்தனர். அந்த ஒளிப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடலாம் என்ற அடிப்படையில் அவற்றை வைத்திருந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், சந்தேக நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னேடுக்கப்படவேண்டும் என்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1245589
 11. கின்னஸில் இடம்பிடித்துள்ள, திருகோணமலை இளைஞன்! விபுலானந்தன் கௌரிதாசன் என்ற இளைஞனன் உலகசாதனைப் புத்தகமான “கின்னஸ்” இல் இடம்பிடித்துள்ளார். குறித்த சாதனையானது, உலக சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து சுமார் 150 000 ஓட்ட வீர, வீராங்கனைகள் கலந்து கொண்ட ஓட்டப் போட்டியில், சுமார் 115 000 பேர் தகுதிகாண் நிலையில் நிராகரிக்கப்பட்டு 35 570 பேர் கின்னஸ் சாதனையாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களது தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் தர வரிசையின்படி 35 570 ஓட்ட வீர, வீராங்கனைகளுள் இவர் 609வது இடம் பிடித்துள்ளார். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது சுவிட்ஸர்லாந்து இல் வசித்து வருகின்றார். https://athavannews.com/2021/1245609
 12. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை! தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இலஞ்ச் ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி அவருக்கு சொந்தமான 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இதற்கு முன் அதிமுக அமைச்சர்களான எம்.ஆர்.விஜய பாஸ்கர், எஸ்.பி வேலுமணி, வீரமணி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1245505
 13. காஷ்மீரில் இருந்து வெளிமாநிலத்தவர்கள், வெளியேறி வருவதாக... அறிவிப்பு! காஷ்மீரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் நீடித்து வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இந்த மாதத்தில் மாத்திரம் இதுவரை 11 பேர் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொல்லப்பட்ட 11 பேரில் 5 பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பதால், வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட காடுகளில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1245584
 14. காஷ்மீரில் நடைபெற்ற, பயங்கரவாத தாக்குதல்களுக்கு... பொறுப்பேற்றது, புதிய அமைப்பு! ஜம்மு காஷ்மீரில் 9 இராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்திற்கு புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாசிசத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள காணொலியில் ஒக்டோபர் 11 ஆம் திகதி இராணுவத்தினர் சென்ற வாகனத்தை கண்காணித்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காஷ்மீர் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத மேலும் பல படுகொலைகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தவும், தீவிரவாதிகளை ஒழிக்கவும் இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இராணுவ தளபதி நரவானே பாதுகாப்பு நிலவரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக எல்லையின் முன்களப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1245600
 15. பாக்தாத் முதல் கோராசான் வரை, தாக்குதல் தொடரும்: ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை! பாக்தாத் முதல் கோராசான் வரை தாக்குதல் தொடரும் என ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஷியா முஸ்லிம்கள் எங்கும் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். பாக்தாத் முதல் கோராசான் வரை இந்தத் தாக்குதல் தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்கள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய வாரங்களில் அங்கு நிகழ்த்தப்பட்ட இரு தற்கொலைப்படை தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1245504
 16. தமிழ்நாட்டுக்கு செல்லூர்ராஜூ போல்... நம்ம ஊர்... "விலேச் விஞ்ஞானி" சுமந்திரன். புதிய கண்டுபிடிப்புகள் எல்லாம் செய்கிறார். பா(ர்)ராட்டுக்கள்.
 17. ட்ரோன் ஒன்றின் மூலம், எண்ணை வளம் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாம்.
 18. இலங்கைக்கு... இந்தியா, கால அவகாசம் வழங்க வேண்டும்- சுப்ரமணிய சுவாமி! இலங்கை இந்தியாவிடம் வாங்கிய கடன் தொகையை திருப்பிச் செலுத்த, மேலும் கால அவகாசத்தை இந்திய அரசாங்கம் வழங்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இலங்கை தொடர்பான வெளிவிவகார கொள்கையை இந்தியா மாற்றியமைக்கவேண்டிய நேரம் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இந்திய – இலங்கை உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1245452
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.