Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    76765
  • Joined

  • Days Won

    768

Posts posted by தமிழ் சிறி

  1. sri-Lanka-2-750x375.jpg

    சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை!

    நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

    அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார்.

    நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

    அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன.
    இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார்.

    https://athavannews.com/2024/1378849

  2. annai-poopathi-750x375.jpg

    யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

    தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

    தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது.

    அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது.

    இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

    இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    https://athavannews.com/2024/1378867

  3. vadai.jpg

    வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது!

    வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

    மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    https://athavannews.com/2024/1378864

  4. அமெரிக்காவிற்கு புதிதாக கல்வி கற்க வந்த மாணவிகள் போலுள்ளது.
    சிறிய களவு செய்யப் போய்… பெரிதாக அவமானப்பட்டு நிற்கிறார்கள்.
    கையில் விலங்கு மாட்டியதை…. வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டார்கள்.

  5. 21 minutes ago, goshan_che said:

    20 ரூபாய்க்கு வடையில் எண்ணை ஒத்திய பேப்பரும் கிடைக்காது🤣

    300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது.
    வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற…  சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣

    • Haha 2
  6. 13 minutes ago, goshan_che said:

    சிறி அண்ணா 50% சரி.

    ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.

    ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂
    சிரித்து வயிறு நோகுது.  animiertes-gefuehl-smilies-bild-0119.gif

    • Haha 1
  7. 3 minutes ago, விசுகு said:

    ஏன் ராசா ஏன்?? 

    ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று.

    இல்லை இல்லை இல்லை 🤣

    @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன். 
    விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

    😂

  8. 15 minutes ago, goshan_che said:

    இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே…

    ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.

    vehicle_ad_standard_image_b656435c7b0d27

    ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣

    • Haha 1
  9. 1 minute ago, goshan_che said:

    இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே…

    ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.

    ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣
    நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள்.
    வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂

  10. 6 minutes ago, ஈழப்பிரியன் said:

    வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை.

    வழக்கு முடிந்தது.

    spacer.png

     

    @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣

    • Haha 2
  11. 3 hours ago, குமாரசாமி said:

    இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎

    @தமிழ் சிறி

    p2-1594896108.jpg

    photos_1661251538180.jpg

    குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே.
    மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂

     

    • Haha 3
  12. 1 minute ago, விசுகு said:

    மகிந்த படுத்த கட்டிலில் தம்பி படுத்து எழுந்து வந்திட்டார். மற்றவர்களுக்கும் அந்த ஆசை வரும் தானே? (நான் ஜனாதிபதிக்கட்டிலை சொன்னேன் ராசா😜)

    NINTCHDBPICT000746255892.jpg?strip=all&w

    spacer.png

    spacer.png

    10sri-lanka-briefing-colombo-scene4-arti

    images?q=tbn:ANd9GcT018MvPt7Gk70GMXH8Rz1 

    அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂

  13. 2 hours ago, விசுகு said:

    நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 

    %E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%

    விசுகர்... அவர்கள் பஞ்ச பாண்டவர்கள். 😂 🤣

    • Haha 1
  14. %E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%

    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை!

    முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

    இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த  மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென  அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக  எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

    https://athavannews.com/2024/1378726

  15. Sri-Lanka-1-600x375.jpg

    இராணுவ வீரர்களின் கவனத்திற்கு!

    முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

    அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

    மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

    https://athavannews.com/2024/1378764

  16. methode_times_prod_web_bin_47254a88-d670

    கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது!

    கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன

    ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

    இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
    அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    https://athavannews.com/2024/1378752

  17. images-3-10.jpg

    ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!

    உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

    சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

    இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது.

    மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்த நிலைப்பாட்டில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.

    மேலும் ரஷ்யா வங்கி அமைப்பை பெருமளவில் மீள்தன்மையுடன் வைத்திருக்க முடிந்ததுடன் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்க முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    https://athavannews.com/2024/1378768

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.