Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  70585
 • Joined

 • Days Won

  668

Posts posted by தமிழ் சிறி

 1. 11 minutes ago, ஏராளன் said:

  இலங்கை அதிகாரிகளும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல்இவ்வாறு தப்பிய நிலையில், ஓமனிலுள்ள பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர், அந்த நாட்டுக்கான இலங்கை தூதரக அதிகாரி ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

   சிங்களவனுக்கும் பாலியல் விளையாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு.
  இராணுவம், விளையாட்டு வீரர், தூதரக அதிகாரிகள்… என்று எல்லா இடமும்
  காமம் தலைக்கேறி திரிகிறார்கள். 

 2. உக்ரைன் ஆயுதங்களை கீழே வைத்து, சரண் அடையும் மட்டும்…
  அதி உத்தமர், மாண்பு மிகு புட்டின் ஐயா அவர்கள் பேச்சு வார்த்தைக்கு போகக் கூடாது.

  அது மட்டும், இந்த வின்ரர் முழுக்க… ரஷ்யா, உக்ரைன் மீது…
  வாண வேடிக்கை காட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
   

  • Haha 2
 3. 11 minutes ago, Kandiah57 said:

  உங்களுக்கு எத்தனை புள்ளிகள்  ? எவ்வளவு புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னுக்கு நிக்கிறீர்கள். .....?பையன்...குமாரசாமி.   .....போன்றோர் உங்களை முன்ந்தக்கூடிய சந்தர்ப்பம் உண்டா ?.     🤣😛😂

  ஈழப்பிரியன்… ராக்கம்மாவின் துணையுடன் போட்டியில் குதித்த படியால்…
  இப்போதைக்கு… ஜக்கம்மா கோஸ்டி வெல்ல சான்சே இல்லை. 🤣

 4. 7 minutes ago, ஈழப்பிரியன் said:

  குற்றம் செய்யாதவர்கள் மீதும் தனிப்பட்ட கோபதாபங்களை தீர்த்துக் கொள்ள வில்லங்கமாக அவர்களது உடமைகளில் வைத்துவிட்டு எடுக்கலாம்.

  ஆம் நம் நாட்டில், எதுவும் சாத்தியமே.
  உண்மையான போதை வியாபாரி வெளியில் நடமாட,
  அப்பாவிகளை கைது செய்து, காவல்துறை நல்ல பெயர் எடுக்க முனையலாம்.

 5. ஒருவரே…. நகைத் திருட்டு, நகை அடைவு பிடிப்பு, ஹெரோயின் வியாபாரம் என்று…
  ஒய்வில்லாமல் பல தொழில்களை செய்வது ஆச்சரியமளிக்கின்றது. 🤣
  இவருக்கு… அரசு, சிறந்த உழைப்பாளி என்ற விருதை கொடுத்து கௌரவிக்க வேண்டும்.

 6. 5 hours ago, nunavilan said:

  மாணவர் விருந்தில் கருப்பு நிறத்தை பூசிய முகத்துடன் இருக்கும் பழைய புகைப்படமொன்று தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்து, இவ்வாறு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இங்கிலாந்தில்… மாணவப் பருவத்தில்,
  முகத்தில் கறுப்பு மை பூசி எடுத்த படத்துக்கே கண்டனம் தெரிவிக்கின்றார்கள்.
  சொறி லங்காவில்…. கிரிக்கெட் விளையாடப் போன இடத்தில்,
  பொம்பிளை சோக்கு பண்ணினவனை, பிணை எடுக்க… கோடிக் கணக்கில் காசு கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

  • Like 1
  • Haha 1
 7. 34 minutes ago, பெருமாள் said:

  ராஜிவ் காந்தியுடன் எந்த காங்கிரஸ் தலைவர்களும் இறக்கவில்லை. அன்று ராஜீவ் காந்தியுடன் ஜெயலலிதாவும் பொது மேடையில் பேசுவார்கள் என்று கூறினார்கள் ஆனால் அம்மணி ஏறவில்லை மொத்தத்தில் அநேக அரசியல்வாதிகளுக்கு நடக்க போவது தெரிந்து உள்ளது .

  மேலே நாதமுனி இணைத்த காணொளியில், அந்தப் பொலிஸ் அதிகாரிக்கு…
  பின்னேரம் மூன்று மணிக்கே… ராஜீவ் காந்திக்கு போட இருக்கும் மாலையில்,
  குண்டு வைக்கப் போகிறார்கள் என்று மேலிடத்தில் இருந்து எச்சரிக்கை வந்ததாக சொல்கிறார்.

  ராஜீவ் இறந்த நேரம் இரவு 10:10.
  அதாவது 7 மணித்தியாலங்களுக்கு முன்பே எச்சரிக்கை வருகின்றது.

 8. 1 hour ago, Nathamuni said:

   

  ராஜீவ் கொலையின் போது,  சம்பவ இடத்தில் நின்ற, 
  இந்தக் காவல் அதிகாரியின் வாக்குமூலப் படி... விடுதலைப் புலிகள் அல்லாமல்,
  மூன்றாம் சக்தி கூட இந்தக் கொலையை செய்திருக்கலாம்.

  ராஜீவின் உடலை போஸ்ட்மாட்டம் செய்தததை பற்றி 
  உறுதியான தகவல் இல்லாமல் உடலை எரித்தமை.

  வேலை செய்யாத மெற்றல் டிடெக்ரர்,  தாணு குண்டு வெடிக்கச் செய்வதை 
  எவரும் காணவில்லை,  குண்டு வெடித்த இடத்தில் காங்கிரஸ் முக்கியஸ்தர் 
  எல்லோரும் அந்த நேரம் பார்த்து இல்லாமல் இருந்தது போன்ற சந்தேகங்கள் நிறைய உள்ளது.

  இந்தக் காணொளியை... உறவுகள், கட்டாயம் பார்க்கவும்.

 9. வவுனியாவில் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் கூட்டமைப்பினரும் பங்கேற்பு !

  வவுனியாவில் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் கூட்டமைப்பினரும் பங்கேற்பு !

  வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

  வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டிருந்தார்.

  இதனை அடுத்து ஜனாதிபதியின் இணைப்பு செயலக திறப்பு விழாவில் செல்வம் எம். ஏ சுமந்திரனும் அடைக்கலநாதனுடன் கலந்து கொண்டிருந்ததுடன் சி. வி. கே சிவஞானம் கலந்து கொண்டிருந்தார்.

  https://athavannews.com/2022/1311257

 10. 6 minutes ago, nedukkalapoovan said:

  வெறும் எச்சரிக்கைகளை விடாமல்.. உணவக சுகாதாரம் மற்றும் உணவு தயாரிப்பு உணவு மற்றும் மூலப்பொருட்கள்.. பேணிப்பாதுகாப்பது உட்பட்ட அடிப்படை அறிவூட்டல் மற்றும் அந்தப் பயிற்சியை நிறைவு செய்ததற்கான முத்திரை பதிக்கப்பட்ட பத்திரம்.. அனுமதிப்பத்திரம்.. உணவகத்தர நட்சத்திரங்கள் மற்றும் உணவக சுகாதாரம் தொடர்பான  A to Z கையேடு.. அடிப்படை உணவகப் பாதுகாப்பு.. மற்றும் தீ மற்றும் விபத்து தொடர்பான அறிவுறுத்தல்கள்.. உபகரணங்கள்.. இருக்கைகளின் தரம் என்பன உள்ளிட்ட எல்லமே பரிசோதிக்கப்படுவதும்.. தரம் பரிசோதிக்கப்படுவதும்..  அவசியமாக்கப்பட வேண்டும்.

  சுகாதார நடவடிக்கைகள்.. உணவக உள்ளக வெளிச் சூழல் அடிக்கடி கிருமி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பராமரிக்கப்படுவது அவசியம். 

  இவ்வாறான நடைமுறைகளுக்கு ஒத்துழைக்காத உணவகங்கள் இழுத்து மூடப்பட வேண்டும். 

  இதில் பிரித்தானியாவின் RSPH ஆலோசனைகளைப் பின்பற்றுதல் கூடுதல் பயனளிக்கும்.

  https://www.rsph.org.uk/

  நெடுக்ஸ்... நீங்கள் சொல்வது முழுக்க சரி. ✅
  சுகாதார விடயத்தில்... நெகிழ்வுப் போக்கு கடைப் பிடிக்கக் கூடாது.
  ஆனால்... ஒரு நாளைக்கு 12 மணித்தியாலம் மின் வெட்டு உள்ள நாட்டில், 
  உணவை பழுதாகாமல் வைத்திருக்கவும் அரசு வழி  சொல்லிக் கொடுக்க வேண்டும்.

 11. 11 hours ago, nunavilan said:

   

   
    · 
   
  May be an image of 5 people, tree and grass
   
   
   
  வட்டக்கச்சி விவசாய பண்ணையில் 394 ஏக்கர் நிலப்பரப்ப்பை இராணுவம் ஆக்கிரமித்து இருக்கின்றது
  ஜெயபுரத்தில் 120 ஏக்கர் பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது
  கிளிநொச்சி மலையாளபுரத்தில் 798 ஏக்கர் பொதுப்பண்ணை இராணுவத்தின் வசம் இருக்கின்றது
  கிளிநொச்சி சாந்தபுரத்தில் 680 ஏக்கர் பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது
  முழங்காவில் 1,800 ஏக்கர் மர முந்திரிகை தோட்டத்தின் பெரும்பகுதி இன்னும் இராணுவத்திடம் இருக்கின்றது
  முக்குப்பம் பகுதியில் உள்ள 100 ஏக்கர் தென்னம் தோட்டத்தை இன்றும் ஆக்கிரமித்து நிற்கின்றார்கள்
  முல்லைத்தீவு தேராவில் 1,200 ஏக்கர் விவசாய பண்ணை இன்றும் இராணுவத்தினர் வசம் இருக்கின்றது
  முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு பகுதியில் பல நூறு ஏக்கர் காடுகள் முழுமையாக அழிக்கப்பட்டு இராணுவ பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
  துணுக்காய் தேறாங்கண்டல் பண்ணையும் இராணுவம் ஆக்கிரமித்து இருக்கின்றது
  கொக்குத்தொடுவாயில் முந்திரிகை செய்கைக்கு என தலா 25 ஏக்கர் வீதம் வழங்கப்பட்டிருந்த பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளையும் இராணுவம் ஆக்கிரமித்து இருக்கின்றது
  மன்னார் வெள்ளாங்குளத்தின் 500 ஏக்கர் விவசாய பண்ணையும் இராணுவத்தினர் வசம் இருக்கின்றது
  இதே போல வவுனியா செட்டிகுளம் பகுதியில் தனியார் நிலத்தில் இராணுவத்தின் பெரும் பண்ணை உள்ளது.
  வவுனியா தமிழர் நிலம் பகுதியிலும் 25 ஏக்கர் பரப்பளவில் இராணுவ பண்ணை இருக்கின்றது
  இதில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மேற்குறித்த விவசாய பண்ணைகள் ஊடக மட்டும் ஆண்டு தோறும் 15 மில்லியன் வருமானத்தை இலங்கை இராணுவத்தினர் உழைத்து வருகின்றார்கள்
  அதே போன்று கிளிநொச்சி மாவட்ட பண்ணைகள் ஊடக 13 மில்லியன் ரூபா வருமானத்தை இராணுவத்தினர் சம்பாதித்து வருகின்றார்கள்..
  இது போதாதென்று பாதுகாப்பு சார் காரணங்களை நுண்ணிய வடிவில் வன்னியின் வாழ்வாதாரப் பிரச்சனை களோடு பிணைத்து விட்டிருக்கிறார்கள்
  குறிப்பாக பொருளாதாரம் சார்ந்து மாற்றுத் தெரிவில்லாமல் பண்ணைகளில் கூலி வேலை செய்தால் தான் பிழைக்கலாம் என்ற சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
  இந்த இராணுவ பண்ணைகளை மூடி விவசாய கூட்டுறவு அமைப்புக்களிடம் வழங்கி அபிவிருத்தி செய்தால் வன்னி மட்டுமின்றி வடக்கு மகாணமே இலங்கை தீவின் விவசாய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திற்கு கணிசமாக பங்களிக்க முடியும்
  குறிப்பாக இந்த பண்ணைகளில் சேமிப்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வடிகால் வெள்ளத்தடுப்பு அணைகளை மேம்படுத்தி உற்பத்தித்திறன் மேம்பாடு, பௌதிக வள மேம்பாடு, நிலத்தடி நீர் முகாமைத்துவம்,போன்ற அடிப்படை மாற்றங்களை செய்து விவசாய சமூகத்தை வலுவடைய செய்ய முடியும்
  உள்ளூர் விதை உற்பத்தி , சேவைகால பயிற்சிகள் , விவசாய தொழில்நுட்ப விரிவாக்கம் போன்ற பல்வேறு விடயஙக்ளுக்கு மேற்படி பண்ணைகளை பயன்படுத்த முடியும்
  அதே போன்று சரியான உள்ளூடுகள் , இயற்கை உரம் போன்ற அடிப்படை விடயங்களை விவசாயிகளுக்கு உரிய நேரங்களில் இந்த பண்ணைகளை மக்கள் மயப்படுத்துவதன் ஊடக பெற்று கொடுக்க முடியும்
  ஆனால் இராணுவ நீக்க பிரச்சனை என்பதால் செய்ய மறுக்கின்றார்கள்
  இது போதாதெதென்று வடக்கு மாகாணத்தில் பெருமளவு வளமான விவசாய நிலப்பரப்பு இன்றும் இராணுவ ஆக்கிரமிப்பில் தான் இருக்கிறது
  யாழ்ப்பாணத்தில் ஏறத்தாழ 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவம் நிலை கொண்டு இருக்கிறது . அதே போல மேலும் 68 இடங்களை நிரந்தரமாக ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றார்கள்
  முல்லைத்தீவு வட்டுவாகலில் 680 நிலப்பரப்பில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதே போல கேப்பாபுலவில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் விமானப்படை ஆக்கிரமித்து இருக்கிறது
  மன்னார் சன்னர் பகுதியில் 1,00 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைத்து இருக்கிறது அதே போல முள்ளிக்குளத்தில் 600 ஏக்கர் நிலப்பகுதியை ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைக்கப்பட்டு இருக்கிறது
  வவுனியா புளியங்குளம் பகுதியில் தனியார் காணிகளை அபகரித்து சிறப்பு அதிரடிப் படை முகாம் உள்ளது.
  வவுனியா, மருதோடை சந்தியில் பல ஏக்கர் தனியார் நிலத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
  முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான்பகுதியில் 15 ஏக்கர் தனியார் நிலத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது .
  ஒட்டுசுட்டான் சந்தியில் 50 ஏக்கர் அபகரிக்கப்பட்டு (சுடலை உட்பட) இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
  முல்லைத்தீவு மாவட்ட செயலக 2019 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 679 ஏக்கர் தனியார் காணிகளும் 3,178 ஏக்கர் அரச காணிகளும் படையினர் வசம் இருந்தன
  ஆனால் மேலதிகமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இராணுவம் தனது முகாம்களுக்காகவும் குடியிருப்புக்களுக்காகவும் கைவசப்படுத்தி வைத்திருக்கிறது
  உதாரணத்திற்கு திருமுருகண்டி கோவிலின் முன்னிருக்கும் யு9 வீதியின் அடுத்த பக்கத்தில் 1702 ஏக்கர் காணி இராணுவத்தினரிடம் இருந்து வருகின்றது. அது பற்றி கணக்கில்லை.
  2017 ஆம் ஆண்டு “அடையாளம்”; ஆய்வு நிலையம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் 30,000 ஏக்கர் காணி மட்டில் இராணுவத்தினால் முல்லைத்தீவில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  இந்த ஆக்கிரமிப்புக்குள் வடக்கின் பொருளாதாரம் முடங்கி கிடக்கின்றது . வடக்கு மாகாணம் பொருளாதார குறித்தும் அபிவிருத்தி குறித்தும் பேசும் எவரும் இந்த விடயங்களை பேசுவதில்லை
  Foreign Remittance ஐ மட்டுமே நம்பி வடக்கு பொருளாதாரம் நீண்டகாலம் தாக்கு பிடிக்க முடியாது.
  எமது மக்கள் பிரதிதிகள் இதை உறுதியாக கையில் எடுக்க வேண்டும். இராணுவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் சமூக ஊடுருவலை முன்நிறுத்தி பேரம் பேச வேண்டும்.
  பொருளாதார ஆக்ரமிப்புகளுக்கு எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடம் இல்லை என்பதை உறுதியாக சொல்ல வேண்டும்
   

  https://www.facebook.com/photo/?fbid=588266679769615&set=a.350974220165530

  மேலே ... இராணுவம், கடற்படை, விமானப்படை பிடித்து வைத்துள்ள காணிகளின் 
  மொத்த ஏக்கர் பரப்பளவை பார்க்க தலையை சுற்றுகின்றது.

  இவை எதுவுமே... தமிழ் அரசியல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாதா?
  அல்லது தெரிந்தும் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காமல்... 
  தமக்கு என்ன வந்தது என்று.. அசட்டையாக  இருக்கிறார்களா?

  இதன் விளைவு... நாளை முழுத் தமிழினமும்  தமது நிலத்தை இழக்க வேண்டி வரும் 
  என்ற எச்சரிக்கை உணர்வு கூட இல்லாத இவர்களுக்கு பாராளுமன்ற பதவி ஏன்?

  • Like 1
 12. May be an image of text
   
  314735504_168399675797486_7911537874135759929_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=egaXbdT0Tu0AX-kF-Rb&_nc_oc=AQnGc7tKjB9O0qm7XTFx631pyH3fPaQ7zfZ5AVYDRTlUDjS4sBxSOgQ8eBbf6CiEgnY&_nc_ht=scontent-frt3-1.xx&oh=00_AfAg8L-TkIg9n0F3-jJhAH6xa3I4MCsraWmD8Kf2_L_xeg&oe=637D1CE6
   
   
  இலங்கையின் வரவு செலவு திட்டம் என்பது ஒரு சம்பிரதாய சடங்கு. அதன் மூலம் நாடும் மக்களும் எந்த முன்னேற்றத்தையும் எந்த காலத்திலும் கண்டதில்லை என்பது தான் வரலாறு.
   
  இதுவரை இலங்கை 77 வரவு செலவு திட்டங்களை சமர்ப்பித்து விட்டது . அதில் எதுவும் வரவு திட்டம் அல்ல யாவும் செலவு திட்டம் தான். முதன் முதலாக 1949 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகையை ஈடு செய்ய வெளிநாட்டில் 60 ஆயிரம் டொலரை இலங்கை கடன் வாங்கியது.
   
  அன்றிலிருந்து இன்று வரை கடன் வாங்கியே தனது அரச செலவீன துண்டுவிழும் தொகையை ஈடு செய்து வருகின்றது. இப்போது 60 பில்லியன் டொலர் வரை நாடு கடன்.
   
  76 முறை தோற்றுபோன ஒருவன் 77 ஆவது தடவை வெற்றி பெறுவான் என நம்புவதற்கு மக்கள் அடி முட்டாள்கள் அல்ல.
   
  ஆம் கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்
  மொத்த அரச செலவீனம் 5.2 ரில்லியன், உத்தேச வருமானம் 2.2 ரில்லியன். துண்டு விழும் தொகை 03 ரில்லியன்.
   
  ஆம் இந்த 03 ரில்லியனும் கடன் தான் வாங்கவேண்டும். இதில் 05 பில்லியன் டொலர் வரை வெளிநாட்டு கடனுக்கான வட்டி வருகின்றது. 2022 இந்த வருடம் வெளிநாடுகளில் வாங்கிய கடன் 08 பில்லியன் டொலரை கடந்திருக்கும். இந்தியா மட்டும் இந்தவருடம் 04 பில்லியன் டொலரை கடனாக கொடுத்துள்ளது. சீனாவிடம் 03 பில்லியன் டொலரிற்கு மேல் இந்த வருடம் கடன் வாங்கப்பட்டுள்ளது.
   
  இந்த வருடம் அச்சடித்த பணம் 02 ரில்லியனுக்கு அண்மையாக இருக்கும். திரு ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக இருக்கும் போது 01 ரில்லியன் அதாவது ஒரு இலட்சம் கோடி ரூபா அச்சிட்டார் என்பது குறிப்பிடதக்கது.
   
  அடுத்த வருடம் 2023 இற்கான வரவு செலவு திட்டம் ஐனாதிபதி விக்கிரமசிங்காவால் 14.11.2022 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
   
  அதில் 2023 ஆம் ஆண்டிற்கான அரச செலவீனாம் 7.8 ரில்லியன். உத்தேச வருமானம் 3.4 ரில்லியன். துண்டு விழும் தொகை 4.4 ரில்லியன். 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு 1.4 ரில்லியன் வரை அதிகமான செலவீனம் ஏற்படுகிறது.
   
  இப்போது இந்த துண்டு விழும் தொகையை எப்பாடு பட்டாவது வெளிநாடுகளிடம் கடன் வாங்க வேண்டும். இல்லையேல் அரசிடம் பணம் இருக்காது. அப்படி ஆயின் அரச செலவீனங்களை செய்வதற்கு பணத்தை அச்சடிக்கவேண்டும். 4.9 ரில்லியன் ரூபா என்பது 4.9 இலட்சம் கோடி ரூபா.
   
  ஒரு மாதம் நாற்பது ஆயிரத்து எண்நூற்று முப்பத்து மூன்று கோடி ( 40, 833 கோடி ) ரூபா பற்றாக்குறை. அடுத்த வருடம் 2023 ஒரு நாளிற்கான அரச செலவீன பற்றாக்குறை ஆயிரத்தி முன்நூற்று அறுபத்து ஒரு கோடி ( 1361 கோடி ) ரூபா.
   
  இப்போது இரண்டு தெரிவுகள் தான் இருக்கிறது. ஒன்று வெளிநாடுகளிடம் கடன் வாங்குவது அல்லது பணத்தை அச்சிடுவது.
   
  இவ்வளவு தொகை பணத்தை அச்சிட்டால் பணவீக்கம் அதிகரிக்கும் பொருட்கள் விலை பலமடங்கு உயரும். மக்கள் வாழ வழியின்றி போராட்டம் செய்வார்கள் இந்த வருடம் இப்படி தான் ராஐபக்சா சாம்ராட்சியம் கவிழ்ந்தது.
   
  அடுத்த வருடம் இலங்கைக்கு கடன் கொடுக்க எந்த நாடும் இல்லை. 74 வருடங்களாக கடனில் மூழ்கி கொண்டிருக்கும் இலங்கை எனும் கப்பலை ஒரே நாளில் தூக்கி நிறுத்த கடவுளாலும் முடியாது.
   
  இப்போது தந்தை செல்வா எமக்கு ஞாபகத்திற்கு வருகிறார்.அவர் அன்று தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்றார். இன்றோ இலங்கை முழுவதையும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எனும் நிலை வந்துள்ளது.
   
  இங்கு இழப்பதற்கு தமிழ் மக்களிடம் எதுவும் இல்லை. தமிழ் மக்கள் இந்த நாட்டின் இறக்குமதியாளர்களோ , ஏற்றுமதியாளர்களோ அல்ல. சிங்கள மக்களே பெருமளவு இறக்குமதிகளையும் , ஏற்றுமதிகளையும் செய்கின்றனர். அன்று இலங்கைதீவில் ஒரு இனத்தை மோட்டுத்தனமாக பகைத்துக்கொண்டு அவர்களின் பொருளாதார கட்டமைப்புக்கள் மீது தொடர்ச்சியாக இனகலவரத்தை ( 1956, 1983 ) ஏவி விட்டு அவர்களின் பொருளாதாரத்தை அழித்ததன் பலனை இன்று சிங்கள தேசமே சுமக்கின்றது.
   
  அதற்கு பின் தொடர்ச்சியாக 40 வருடங்களாக தமிழ் மக்களின் அரச செலவீனத்தையும் சிங்கள மக்களே சுமக்கின்றனர். இந்த சுமையை தாங்கும் தகுதி நிலையின் இறுதி இடத்தில் நிற்கும் சிங்கள மக்களும் சிங்கள தேசமும் ஒரு நாள் சினம் கொண்டு எழும் அந்த நாள் தொலைவில் இல்லை. அந்த சினம் இலங்கைதீவை இதுவரை ஆண்ட சிஸ்ரத்தின் மீது சீறி பாயும் என்பது திண்ணம்.
   
  முன்னாள் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் கூறியது போல ரணில் விக்கிரமசிங்கா தோல்வியடைவாராக இருந்தால் அது இலங்கை தீவின் அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வி யாக இருக்காது. அது இலங்கை ஒரு தேசமாக இருத்தலின் தோல்வியாகவே அமையும்..
   
  ஆம் அதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம் இலங்கைதீவின் இன முரண்பாடு தீர்க்கப்பட்டு தமிழ் மக்கள் சமமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பவில்லையேல் இலங்கை தீவு இரு தேசங்களாகவோ ஏன் இரு நாடுகளாகவோ சிதறி போவதை யாராலும் தடுக்கமுடியாது.
   
  இது 74 வருட வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் ஆகும். அதனால் தான் என்னவோ திருவாளர் விக்கிரமசிங்கா 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன் தமிழ் மக்களின்
  இன பிரச்சினைக்கு தீர்வை வழங்குவேன் என பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
   
  திரு ரணில் விக்கிரமசிங்கா இலங்கை அரசியல் வாதிகளுடன் ஒப்பிடும்போது சிறந்த அரசியல் இராஐதந்திரி, சிறந்த பொருளாதார நிபுணர் என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை. ஆனாலும் அவர் பௌத்த சிங்கள பேரினவாத சகதிக்குள் இருந்து வெளியே எழுந்து வராதவரை இலங்கை தீவில் எந்த அதிசயமும் நிகழ்ந்து விடப் போவதில்லை.
 13. 1 hour ago, கிருபன் said:

  ஒரு தமிழ்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி, தமிழ் தேசியக்கூட்டமைப்பினை விபசார விடுதி என்று வர்ணித்திருக்கிறார்.

  அட.... ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர் தான்... 
  தமிழ் தேசிய கூட்டமைப்பை விபசார விடுதி என்று வர்ணித்திருக்கிறார். 

  அவர் சொன்னதில் தவறு இல்லை.

  அந்த அளவுக்கு... சம்பந்தனும், சுமந்திரனும் 
  தமிழ் தேசிய கூட்டமைப்பை கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றார்கள்.

  👇

   

 14. On 17/11/2022 at 18:06, ஏராளன் said:

  புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்களை குறைத்துக் காட்டுகிறதா கத்தார்?எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மரணமடைந்தனர்?

   

  On 17/11/2022 at 22:24, ஈழப்பிரியன் said:

  0849-B8-E5-37-D7-4041-BD4-A-7-FA92662-C8

  இத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்.

   

  May be an image of text that says 'FIFAWORLD WORLD CUP Qat ar2022 SHAHID 16.11.22'

 15. ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட 2 வயதான குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது – யாழ்.போதனா வைத்தியசாலை!

  ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட 2 வயதான குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது – யாழ்.போதனா வைத்தியசாலை!

  ஐஸ் போதைப்பொருள் பாவித்தமைக்கான அறிகுறியுடன் 2 வயதான குழந்தை யாழ். போதனா வைத்திய சாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியை சேர்ந்த இரண்டு வயதான குழந்தை திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டது.

  இந்நிலையில் குழந்தையின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, குழந்தை ஐஸ் போதைப்பொருளை உட்கொண்டு இருந்தமைக்கான அறிகுறிகள் உள்ளதன வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இதேவேளை குழந்தையின் தாயாரிடம் விசாரணை செய்த போது குழந்தையின் தந்தை முன்னர் போதைப்பொருள் பாவித்தார் எனவும் ,ஆனால் தற்போது அவர் பாவிப்பதனை கைவிட்டு விட்டார் எனவும் , குழந்தை எவ்வாறு போதைப்பொருளை உட்கொண்டது என தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

  மேலும் இது தொடர்பாக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் ஆரம்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

  https://athavannews.com/2022/1311217

 16.  

   

  ஜனாதிபதியின் வவுனியா விஜயம் : எதிர்ப்பு தெரிவித்து உறவுகள் போராட்டம்

  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியாவிற்கான இன்றைய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஓன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் மாவட்ட செயலகத்தை வந்தடைந்த நிலையில் இந்த போராட்டம் இடம் பெற்றுவருகின்றது.

  https://athavannews.com/2022/1311225

 17.  

   

  வெளியார் தலையீடு தேவையில்லை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம்? – ஸ்ரீதரன்

  தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் மாத்திரம் வெளியார் தேவையில்லை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

  யுத்தத்தை நடத்த, தமிழர்களை அழிக்க, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மற்றும் நிதியுதவியை மட்டும் பெற்றுக்கொள்ள மட்டும் வெளியாரின் தலையீடு வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

  நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

  மேலும் நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாமல் சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி வழங்குமானால் அது உலகம் தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என்றும் குறிப்பிட்டார்.

  இதேவேளை தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு முன்பாக சிங்கள தலைவர்கள், சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்கு உடன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

  https://athavannews.com/2022/1311200

 18. On 13/11/2022 at 09:20, தமிழ் சிறி said:

  animiertes-militaer-flugzeug-bild-0018.gif

  இவர் நாட்டை விட்டுப் போக,  இந்தியாவிலிருந்தும் ஓடி வருவார்கள். 😎

   

  On 13/11/2022 at 16:01, குமாரசாமி said:

  அவரவர் வருவார்கள் போவார்கள். இவர் மட்டும் உன்னிப்பாய் கவனித்துக்கொண்டிருப்பார் 😂

   

  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்கு விஜயம்

  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்கு விஜயம்

  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (சனிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

  இதற்கமைய  இன்றும் நாளையம் இலங்கையில் தங்கியிக்கும் அவர்  ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளார்.

  இதேவேளை கடந்த காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை

  இவ்வாறான ஓர் பின்னணியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  https://athavannews.com/2022/1311161

 19. இலங்கை அகதிகள் இருவர் வியட்நாமில் தற்கொலை முயற்சி!

  இலங்கை அகதிகள் இருவர் வியட்நாமில் தற்கொலை முயற்சி!

  வியட்நாமில் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் இருவர் தற்கொலை முயற்சி மேற்கொள்ள முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இவர்கள் நேற்றிரவு தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

  இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்றுமொருவரின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மேலும் இந்த 306 இலங்கையர்கள் உரிய விஸா நடைமுறைகளின் பிரகாரம் மியன்மார் சென்று அங்கிருந்து கப்பல் ஒன்றின் மூலம் சட்டவிரோதமான முறையில் அகதிகளாக கனடா நோக்கி செல்ல முயற்சித்திருந்தனர்.

  இதேவேளை தங்களை இலங்கைக்கு மீள அனுப்பும்  முயற்சிகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தாம் அங்கு செல்ல தயார் இல்லை என தெரிவித்தே தற்கொலை முயற்சியை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.

  https://athavannews.com/2022/1311228

 20. ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகள் பறிமுதல்!

  ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகள் பறிமுதல்!

  ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி, கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகளை லண்டன் நகரப் படையில் உள்ள பொலிஸ்துறை அறிவுசார் சொத்து குற்றப் பிரிவு, பறிமுதல் செய்துள்ளது.

  வடமேற்கு பொலிஸ்துறை அறிவுசார் சொத்து பிரிவின் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

  லீட்ஸ், ஷெஃபீல்ட், பிரிஸ்டல் மற்றும் நார்தாம்ப்டன் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
  மொத்தம், நான்கு டன் இங்கிலாந்து ஜெர்சிகள் மற்றும் ஃபிஃபா உலகக் கிண்ண பேட்ஜ்கள், 12,000 பவுண்டுகள் பணத்துடன் கைப்பற்றப்பட்டன.

  உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக லாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்ட குற்றவாளிகளை குறிவைக்கும் சோதனை நடவடிக்கையாக இது அமைந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  கைப்பற்றப்பட்ட கிட்டில் தவறான இங்கிலாந்து ஹோம் மற்றும் அவே ஷர்ட்கள் அடங்கும், அதிகாரப்பூர்வ நைக் பதிப்புகள் ஒவ்வொன்றும் சுமார் 60 பவுண்டுக்கு ஆன்லைனில் விற்கப்படுகின்றன.

  ஆனால், சில ஆதரவாளர்கள் வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் போது பணத்தைச் சேமிக்க இதுபோன்ற ரீ-சட்டுகளை கொள்வனவு செய்ய சிலர் ஆசைப்படலாம் என தெரிவித்துள்ளனர்.

  https://athavannews.com/2022/1311190

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.