யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

tamil92

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    89
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About tamil92

  • Rank
    புதிய உறுப்பினர்
  • Birthday 11/09/1991

Contact Methods

  • MSN
    thileepeelam@hotmail.fr
  • Website URL
    http://
  • ICQ
    0
  • Yahoo
    thileepeelam@yahoo.fr

Profile Information

  • Gender
    Male
  • Location
    அகதி முகாம்
  1. Journée de Solidarité avec le peuple tamouls Contre le génocide contre cet peuple au Sri lanka Descendons dans la rue........ Rejoigenz le cortége libertaire. Samedi 28 à Bastille cortege vers Republique à 14h00 Organiser par le assosciation humanitaire étudiante Contact: th92110@gmail.com 06 11 72 59 78 uurputhinam.tk
  2. வணக்கம் abimanyu வருக வருக !!!!!!
  3. மழை எப்போது எங்கே விழவேண்டும் என்பதை தீர்மானிப்பது காற்று எதிரியே நீ எதுவரை வரவேண்டும் எங்கே விழவேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் விடுதலைப் புலிகள் புலிகள் முன் நகராது இருக்கும் வரைதான் வெற்றிக்களிப்பில் கர்ஜனை செய்வீர்கள் பொன்சேகா படைகளே ஒன்றன் பின் ஒன்றாய் ஏவுங்கள் எறிகணைகளை பறந்து வந்து போடுங்கள் குண்டுகளை பொறுத்துக் கொள்கின்றோம் எமது தேசத்தின் அமைதி குலைத்த சிங்களமே… எங்கள் தலைவனின் மௌனம் கலையும்போது வதைபடுவாய் பொறுத்துக்கொள்… எதிரியே உன் தளத்தில் வந்து நின்றவாறு புலிகள் ஏவும் உனது எறிகணைகள் உன் தலையில் வீழ்ந்து வெடிக்கும் என்பதைக் கருத்தில்க்1கொள் குதித்து விளையாடிக் குண்டு போட்ட விமானங்கள் துண்டு துண்டாய் சிதறித் தரையில் வீழ்ந்து கிடக்கும் முற்றà¯கையிட்ட டோறாக்கள் எல்லாம் ஓராக்களாய் கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் தமிழர் நிலத்தை அபகரிக்க வந்த பகையே… உனது உடல் பாகங்களை செஞ்சிலுவைச் சங்கம் அள்ளிச் சென்று கொழும்பில் கொடுக்கும் வீரராய்க் காட்டிய ஊடகங்களில் பிணங்களாய் உமைக் கண்டு சிங்களம் பரிதவிக்கும் பொய்யுரைத் தளபதி சரத்பொன்சேகாவை ஊடகங்கள் ஊரூராய்த் துரத்தும் தமிழ்த் தளபதிகளின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டதாய் கதை அளந்தவரின் இருப்பிடத்தை புலிகளின் வானூர்திகள் சென்று அழிக்கும் சந்திச் சண்டியர் மகிந்தாவுக்கும் நிரந்தரத் தூக்கம் வரும்…! தீபன் -(செவ்ரோன் பிரான்ஸ்)
  4. புன்னகைச் செல்வனை இழந்து நாமழும் கண்ணீர் ஓலமல்லயிது நெஞ்சில் விடுதலைக் கனவுகளோடு இலட்சியச் சிரிப்புடன் வாழ்ந்தமகன் கல்லான மனங்களையும் கனியவைக்கும் பிள்ளைனிலா வெளிச்சம் அவன்சிரிப்பு நடக்கும் பேச்சு வார்த்தைக்குள் இருக்கும் மனிதனேயக் கூட்டம் இயற்கும் விந்தையைக்காடடும் மாயவன் கனிவான வாயிதழ் திறந்ததும் சிந்தும்னகைத் தயக்கம் தீர்க்கும் எழிதான கவிதைவரிப் புயல் எதிரியின் முகத்தில் மோதும் மெதுவான வார்த்தை மின்னல் நாழுமவன் செய்தியாய்த் தெறிக்கும் நாடெங்கும் வாழும் தமிழரின் வீட்டிலும் குதுகலப்பாய் விரிக்கும்! எங்கள் இனத்தின் வலம்புரிச்சங்கை சாய்த்து விட்டானே தறுக்கன்! பாய்கின்ற புலிகள் வெற்றிக்குப் பகுப்பாய்வு விளக்கம் அளிப்பவன் மாற்ராரை மதித்தும் தலைவனின் ஆணைகேட்டு மதிப்பண்பு விதைப்பவன் தூற்றுகின்ற புல்லரையும் கடிந்திடாது சாற்றà¯கின்ற சிரிப்பாலே அணைப்பவன் போர்விழி வீச்சின் தொடுப்பாலே நரியுருவில் நடமாட்டத்தைச் சாய்ப்பவன் கூரான வீறுணர்ச்சிக் குறுனகையால் போ1னவாத போக்கைப் பொசுக்குபவன் மெதுவாக உலுக்கும் உலுக்கலில் பழுதான நடைனடப்பவரை பதறடிப்பவன்! இழிவான செயலுக்கு இரையாகினான் கல்லறை பிறந்தமண்ணின் சொத்தானான்! ஆவதும் அழிவதும் அறிந்து மானமும் ஞானமும் தலைவனின்னெறியாய் ஆய்ந்து தெழிந்து தேய்ந்தவன் மண்ணில் ஆழவேரூன்றி நிலைத்துவிட்டான் தலைவன் கைகோர்த்து நடந்தமகன் கனிபழுத்துத் தொங்கிய நல்லமரம் வான் கழுகுகளால் வீழ்ந்து விட்டது வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கிது இழப்பாகலாம் தமிழீழத்தில் வைரமாய் மின்னும்புன்னகை தமிழன் வாழும்காலம்வரை மின்னும்! கவிஞர் - மா கி. கிறிஸ்ரியன 1 (பிரான்1ஸ்)
  5. நமது தமிழ்ப் பெண்கள் சுதந்திரப் பறவைகளா? ஆண்களுக்கு உள்ள அனைத்துச் சுதந்திரங்களும் பெண்களுக்கும் இருக்கின்றனவா? இது தீர்க்கப்படாத ஒரு கேள்வியாகவே இன்றளவும் இருக்கின்றது. சுதந்திரம் என்றால் என்ன? தொடை தரிய மனிஸ்க்கேட் மாட்டிக்கொண்டு ‘அக்கடான்னு நாங் உடை போட்டா”வென்று பாடுவதா சுதந்திரம்!? பிற ஆண்களுடன் சேர்ந்து பீச்சிற்கோ அல்லது சினிமாவிற்கோ தனது விருப்பம்போல உலாத்தி வருவதா சுதந்திரம்!? இல்லை! சுதந்திரம் என்றால் மூடச் சடங்குகளில் இருந்து சுதந்திரம பெறுவது. மூட நம்பிக்கைகளில் இருந்து சுதந்திரம் பெறுவது. இவைகளைத்தான் பெண்களின் சுதந்திரம் என பகுத்தறிவாளர்கள் வலியுறுத்துகின்றார்கள். ஆட்டைத் தானமாகக் கொடுப்பது போல…. மாட்டைத் தானமாகக் கொடுப்பது போல….. கம்பியூட்டர் கற்ற விஞ்ஞானிகள் கூட காட்டுமிராண்டிகள் காலத்து கன்னிகாதானத்தை கைவிடாமல் காப்பாற்றி வருகின்றார்களே! அந்த மூடத்தனமான சடங்குகளை ஒழித்து சுதந்திரம் பெறவேண்டும்!. பொட்டழிப்பதும் பூவைப் பிய்ப்பதும் வளையல்களை உடைத்தெறிவதுமான மூடத்தனமான சடங்குகளை இல்லாதொழித்து அவைகளில் இருந்து பெண்கள் சுதந்திரம் பெறவேண்டும்!. ஆண்கள் பொட்டு வைப்பதில்லை. ஆண்கள் மலர்கள் சுடிக்கொள்வதில்லை. ஆண்கள் வளையல்கள் போட்டுக்கொள்வதில்லை. இவையெல்லாம் பெண்களுக்காகவே ஒதுக்கி வைத்துவிட்டார்கள்! ஏன்?. கணவன் என்னும் இன்னொரு உயிர் இறந்ததும் அவற்றை அழிப்பதற்கும்! பிய்த்தெறிவதற்கும்! உடைத்தெறிவதற்கும்தான் என்றால்? அவைகளைப் போடவும் வேண்டாம்! வீசவும் வேண்டாம் என்பதே பகுத்தறிவு காட்டும் பாதையாகும். நமது தமிழ்ப் பெண்களின் உடைகளில் ஒரு பண்பாடு இருக்கின்றது. சேலை என்பது அதில் முக்கியமானதொன்றாகும். பருவ வயதினை அடையும் பெண்பிள்ளைகளுக்கு கூட துண்டுத் தாவணி போட்டுவிடுவார்கள். இது பண்பாடு மட்டுமல்ல பெண்களின் கவர்ச்சியான உடலுறுப்புக்கள் மற்றவர்களுக்கு விரசமாகத் தெரியக்கூடாது என்பதற்காக. ஆனால் இன்றோ நம் மண்ணில் வாழ்கின்ற இளம் பெண்களில் இருந்து ஜரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற நடுத்தரவயதுப் பெண்கள்வரை டெனிம்தான் அவர்களது ஆடைகளாக இருக்கின்றது! (ஜரோப்பிய நாடுகளில் இப்பொழுது சில வயதான தாய்மார்களும் இதற்குள் அடக்கம்!) திருமண வைபகங்களில் மட்டும் பட்டுச்சேலைகள் சரசரக்க மல்லிகைப்பூ வாசனைகள் கமகமக்க பெண்களைப் பார்க்க முடிகின்றது. பெண்களுக்கு அழகைக் கொடுப்பதில் இன்னொன்று அவர்களின் தலைமுடியும் அதில் போட்டுக்கொள்ளும் அழகான கொண்டையும்தான். இன்று ஜரோப்பாவில் வாழ்கின்ற ஜம்பது வீதமான இளம் பெண்கள் ஜரோப்பியப் பெண்களைப்போல சிலுப்பாவிற்கு மாறிவிட்டார்கள்! திருமண வைபவங்களுக்கு வரும்போது இவர்கள் சேலை கட்டிக்கொண்டு வந்தாலும்! மல்லிகைப்பூ வைக்கின்ற கொடுப்பனவு இவர்களுக்கு இல்லை! காரணம் பூவை வைப்பதற்கான கொண்டை இவர்களுக்கு இல்லை!. சேலை உடுத்துக்கொண்டோ கொண்டை போட்டுக்கொண்டோ நாங்கள் வேலை செய்ய முடியாது. அது மாத்திரமல்ல காலையில் எழுந்து வேலைக்குப் போவதற்கு முன்னர் சேலை உடுப்பதும் கொண்டை போடுவதும் முடியாத காரியம். என்று தன்னிலை விளக்கம் கொடுக்கின்றார்கள் வேலைக்கும் போகும் பெண்கள். இவை ஏற்கக் கூடியதே. ஆனால் வேலைக்குப் போகாத பெண்களும் இத்தகைய மேலைனாட்டு நாகரீக மோகத்தில் இருக்கின்றார்களே! அது ஏன்? இதுதான் பெண்களின் சுதந்திரமா? பிரான்சில் வாழ்கின்ற பாண்டிச்சேரி மற்றும் தமிழ்னாட்டைச் சேர்ந்த பெண்கள் வீட்டில்க்கூட சேலை உடுத்திருப்பதோடு தலையில் மல்லிகைப்பூ சுடிக்கொள்வதையும் தினமும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. அவர்களுக்கு மட்டும் இது எப்படிச் சாத்தியமாகின்றது? அவர்கள் வாழ்வது ஜரோப்பாவாக இருந்தாலும் தங்களின் பண்பாட்டை விட்டு விலகிவிட விரும்பாததே முக்கிய காரணமாகும். அதே நேரத்தில் அதிகூடிய மூட நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் இந்த தமிழ்னாடு பாண்டிச் சேரியைச் சேர்ந்தவர்கள்தான் என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாததாகும். விதவைகளுக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பதும்! பால்ய வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும்! இன்னமும் அந்த ஊர்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றது! ‘……. குலத்தில் பிறந்த முப்பது வயது இளம் விதவைக்கு மணமகன் தேவை. சாதி தடையில்லை. எம்மதமும் சம்மதம்” இவை பத்திரிகைகளில் நாம் அன்றாடம் படிக்கின்ற விளம்பரங்களில் ஒன்று. இது செய்தி. ஆனால் இந்தச் செய்திக்குப் பின்னால் இருக்கும் இன்னொரு செய்திதான் நமக்கு முக்கியம். சுமார் ஜம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியொரு விளம்பரம் கொடுப்பது சாத்தியம்தானா? ஒரே நாளில் நடந்ததா இத்தகைய மாற்றங்கள்? செவிடர்கள் கேட்கின்றார்கள்! குருடர்கள் பார்க்கின்றார்கள்! என்னும் வேத விளம்பரங்களைப் போன்ற அற்புத நிகழ்ச்சியா இது? இந்த மாற்றத்திற்குக் காரணம் யார்? இந்த மாற்றத்திற்காக எத்தனையோ போராட்டங்களைக் கடந்து வந்திருக்கின்றது தமிழ்னாடு! இன்று இதுதான் நம்மைச் சிந்திக்க வைக்கும் வினா. விதவைத் திருமணங்களுக்காக இப்படியான விளம்பரங்கள் வெளிவரத் தொடங்கிய காலங்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியானால் அதற்கு முன்னர்…? என்னும் கேள்வியும் நம் முன்னே வருகின்றது. ‘அதற்கு முன்னர் என்னும்போது நாம் சற்று பின்னோக்கி பிடரியைத் திருப்பித்தான் பார்க்க வேண்டும்! எந்த நாட்டிலாவது நடக்குமா ஒரு வயதுக் குழந்தை மணமகளாவது? எந்த நாட்டிலாவது நடக்குமா தாயின் மடியில் தவழும் குழந்தை விதவைக் கோலம் அடைவது? எங்காவது நடந்திருக்கின்றதா மண் சோறு சமைத்து விளையாடும் ஜந்து வயதுச் சிறுமிகள் ஜம்பது வயது வயோதிபர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர்கள் கைம் பெண்களாய் கிழித்து வீசப்பட்ட கோரம்? இவையெல்லாம் நடந்திருக்கின்றது தமிழ்னாட்டில்! இத்தகையதொரு காட்டுமிராண்டிச் செயல்களையெல்லாம் கேள்விப்படும்போது எம்முள் ஒரு கோபக் கனல் கொழுந்துவிட்டெரிவதைத் எம்மாலேயே தடுக்க முடியவில்லை. குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைத்து அவர்கள் விதவைகளானாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் விதவைகளுக்கு திருமணம் செய்துவைக்க யாரும் முன்வராத காலமது! இத்தகைய கொரூரங்களுக்கு எதிராக குமுறி எழுந்தவர்களில் முக்கியமானவர் தந்தை ஈ.வே.ரா. பெரியார். பத்து வயதில் விதவையாகி நின்ற தனது தங்கையின் மகளுக்கு ஊர் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மறுமணம் செய்து வைத்தவர் பெரியார் அவர்கள்!. ஒரு மனைவியை இழந்த ஆண் திருமணம் செய்யலாமா? வேண்டாமா? என்பது பற்றி எந்தப் பெண்களையாவது கருத்துச் சொல்ல விடுகின்னார்களா? இல்லை! அப்படியிருக்க கணவனை இழந்த பெண் திருமணம் செய்துகொள்ளலாமா? வேண்டாமா? எனக் கருத்துச்சொல்ல ஆண்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது! இப்படியாக கேள்வி கேட்கின்ற சுதந்திரம் பெண்களுக்கு வேண்டும் என்பதே பெரியார் போன்ற பகுத்தறிவாளர்களின் வாதம். அன் நாட்களில் பெண்கள் தம்மைத்தாமே ஒடுக்கிக்கொண்டு வாழ்ந்தார்கள். சமூகப் பொறுப்புக்களை செயற்படுத்தக்கூடிய திறமையும் வலுவும் ஆண்களுக்கு மட்டுமே உண்டு! தமக்கில்லையென தாமாகவே ஒதுங்கிக் கொண்டார்கள். அல்லது அப்படியான ஒரு மாயைத் தோற்றத்தை ஆண்கள் அவர்களுக்கு ஏற்படுத்திவிட்டார்கள்! இதுவே ஆணாதிக்கமாக இருந்தது. இவை மாத்திரமல்ல பருவமடைந்த பெண்கள் வீட்டிற்கு வெளியே செல்லக்கூடாது என்னும் கருத்தும் கடுமையாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனால் பெண்கள் சுதந்திரமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. தங்களது தேவைகளை தாமே நிறைவேற்ற முடியாத நிலையிலும் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியாத நிலையிலும் பெண்கள் இருந்தார்கள்! இவை மாத்திரமல்ல பழைய புராண இதிகாசக் கதைகள். மதக் கருத்துக்கள் இவைகளோடு பெண்கள் மெல்லிய அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய நாற்படைகளைக் கொண்டவர்கள். என்பற்றையெல்லாம் சொல்லி அவர்களை பெருமைப் படுத்துவதாகக் கூறிக்கொண்டே அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். இத்தோடு பெண்களை ‘இல்லாள்” எனவும் சொல்வார்கள் அப்படியென்றால் இல்லத்தரசியாம்! இப்படியான வார்த்தைகளால் பெண்களும் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு ஆனால் எந்த ஆணையும் ‘இல்லான்’ எனச் சொல்வதில்லை ஏனெனில் இல்லான் எனும் சொல் பொருள் இல்லாதவனையே குறிக்கின்றது (இல்லானை இல்லாளும் வேண்டாள்) ஆதலால்த்தான். ஆனால் இன்று நிலமை மாறிவிட்டது. இன்று பல குடும்பங்களில் பெண்கள் வேலைக்கு செல்லவில்லையென்றால் அந்தக் குடும்பமே இயங்க முடியாத நிலைக்கு மாறிவிடும் நிலமை இருக்கின்றது. இன்னும் பல குடும்பங்களில் மட்டுமல்ல தொழில் நிறுவனங்களைக்கூட பெண்களே நிர்வாகிக்கின்றார்கள். இவைகளெல்லாம் பெண்கள் தங்கள்மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை உடைத்து கல்வியில் முன்னேறியதால்தான். பெண்கள் மீதான இது போன்ற கட்டுப்பாடுகளை உருவாக்கியவர்களும் ஆண் வர்க்கத்தினர்தான். அதே சமயம் பெண்கள் மீது திணிக்கப்பட்டிருந்த இதுபோன்ற கட்டுப்பாடுகளை உடைப்பதற்குப் போராடியவர்களும் ஆண்கள்தான் என்பதனையும் பெண்கள் மறந்துவிடக்கூடாது. ஆனால் இன்று பெண்கள் போராடும் பெண் விடுதலைக் கூச்சலெல்லாம் நாகரீக மோகத்தின் விளைவுதான்! கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிட்டதுபோல மிடி போட்டுக்கொண்டு ‘அக்கடாவெண்று நாங்கள் உடை போட்டால்” என்று பாடுவதும்! ஆண்களுடன் கைகோர்த்துக்கொண்டு சினிமாவிற்குப் போவதும் தமது சுதந்திரம்தான் என இவர்கள் சொன்னால் பண்பாட்டை நேசிக்கும் யாரும் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவைகள் மாத்திரமல்ல இன்று பெண்கள் சினிமா மோகத்தில் கவரப்பட்டு சிக்கித் தவிக்கின்றார்கள்! பல சினிமாக்கள் கலாச்சாரத்தை பண்பாட்டை பாழ் படுத்துவதாகத்தான் உள்ளது. சினிமாவைப் பார்த்துவிட்டு அதில் வரும் கவர்ச்சி நடிகைகளைப்போல இவர்களும் தங்கள் உடைகளில் சிக்கனம் காட்டுவது! இவையெல்லாம்! தங்களது சுதந்திரம் என இப் பெண்கள் கருதுகின்றார்கள். சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்று வந்த எனது நண்பர் ஒருவர் ஒரு அதிர்ச்சியான தகவலைச் எனக்குச் சொன்னார்! அது யாழ்ப்பாணத்தில் ‘போய்ஸ்” திரைப்படம் தடை செய்யப்பட்டிருந்த காலம். ஒரு இளவயதுப் பெண்பிள்ளை வேலை இன்ரவியூ விடயமாக கொழும்பு சென்று வருவதாகக் கூறிவிட்டு அந்தப் படத்தை பார்த்துவிட்டு வந்தாராம்! இப்படியானவர்களின் செயல்களால்த்தான் பெண்களின் சுதந்திரத்திற்குக் எதிராக குரல் கொடுப்பவர்களின் குரல்கள் இன்றும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இன்று பல நாடுகளில் நாட்டை நிர்வாகிக்கும் தலமைப் பொறுப்புகள் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றத
  6. சினிமாவின் வயது நூறையும் தாண்டிவிட்டது! இன்று உலகின் பொழுதுபோக்கு சாதனங்களில் முதல் இடத்தில் இருப்பதும் சினிமாதான்! இந்தச் சினிமாதான் இன்று தமிழ் கலாச்சாரங்களை அழிக்கும் புதிய நோயாக உருமாறியிருக்கின்றது!. இப்பொழுது உருவாகின்ற சினிமாக்கள் எல்லாம் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு தமிழர் சமுதாயத்தை அழித்தே தீருவோம் என சபதமெடுத்து செயல்படுவதைப்போலவே வெளிவருகின்றன!. இந்தக் குற்றச்சாட்டு எங்கோ ஒரு மூலையில் இருந்து எழுந்தது அல்ல? தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வின்மீது அக்கறையுள்ளவர்களால் நாலா பக்கங்களில் இருந்தும் குவிந்தவண்ணமே இருக்கின்றது. முன்னர் வந்த திரைப்படங்களில் இப்படியான கலாச்சாரச் சீரழிவுகள் இருக்கவே இல்லை. இப்பொழுதுதான் மேலை நாட்டு நாகரீகங்களைப் பின்பற்றி ஆடைக் குறைப்புகளுடன் முத்தக்காட்சிகள் மட்டுமல்ல கொஞ்சம் கொஞ்சமாக படுக்கையறைக் காட்சிகளையும் காட்ட ஆரம்பித்திருக்கின்றார்கள். சின்னப்பா தியாக‌ராஜபாகவதர் காலத்துப் படங்களில் கதைகளிலோ அல்லது காட்சி அமைப்புக்களிலோ கலாச்சாரச் சீரழிவுகள் இருந்ததாக யாரும் குற்றம் சாட்ட முடியாது. ஏனெனில் இவர்கள் நடித்த படங்களெல்லாம் புராணக் கதைகளையும் பக்திக் கதைகளையுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டவை. சொல்லப்போனால் அவை மக்களுக்கு பக்தியையும் நல்லொழுக்கத்தையும் ஊட்டுவதாகவே இருந்திருக்கின்றன. இதற்கு அடுத்த காலப்பகுதியான சிவாஜி எம்.ஜி.ஆர். காலத்துப் படங்களைப் பார்த்தால் சிவாஜிகணேசன் நடித்த அனேகமான படங்கள் குடும்பக் கதைகளை மையமாகக் கொண்டவையே. அப்படங்களைப் பார்ப்பவர்கள் வெறும் பொழுது போக்காக அதை நோக்காது தங்கள் குடும்பத்தில் நடப்பதாகவே பார்த்தார்கள்!. நல்ல குடும்பம் எப்படி இருக்கவேண்டும்? காதல் என்பது எப்படி இருக்கவேண்டும்? எப்படியானவர்களையெல்லாம் நம் குடும்பத்தில் நுளையவிடக்கூடாது? என்பதையெல்லாம் அத்திரைப்படங்கள் சித்தரித்துக் காட்டியிருந்தன. எம்.ஜி. ஆர் அவர்களின் படங்கள் இதற்கும் ஒருபடி மேலே சென்று மக்களுக்கு நல்ல கருத்துக்க‌ளைக் கூறுவார். தீய செயல்கள் செய்யக்கூடாது என வலியுறுத்துவார். உழைப்பின் மகத்துவத்தை உணர்த்துவார். இதற்கும் மேலாக புகைப் பிடிக்கக்கூடாது மது அருந்தக்கூடாது என்பதுடன் பாசத்தின் வலிமையையும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என்னும் கருத்தையும் குழந்தைகள் மனங்களிலும் பதியவைத்தார்! இவர்களின் படங்களிலும்சரி இவர்களது காலத்தில் வந்த ஏனையவர்களது படங்களிலும்சரி காதலர்கள் எந்த அளவு நெருங்கவெண்டும் என்பதற்கு ஒரு எல்லை வகுத்து வைத்திருந்தார்கள்! பெண்கள் இப்படித்தான் ஆடைகள் உடுக்கவேண்டும் என எழுதாத சட்டத்தையே நிர்ணயித்திருந்தார்கள்!. இவைகள் எல்லாம் மீறப்பட்டது எப்போது? இவர்களுக்கு அடுத்ததாக திரைத்துறைக்கு வந்த இன்றைய கலைஞர் கூட்டத்தால்த்தான் என்று அடித்துச் சொல்ல முடியும். இன்றைய தலைமுறையினரின் திரைப்படங்களைப் பாத்தால் சண்டியர்களும் பொறுக்கிகளும்தான் கதாநாயகர்களாகச் சித்தரிக்கப்படுகின்றார்கள். பொலிஸ் இன்ஸ்பெக்ற்றராக வருபவர் சொல்வார் நான் பொலிஸ் இல்லை பொறுக்கியடா” என்பார். அது மாத்திரமல்ல சமூகத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கலெக்டர் மந்திரி போன்றவர்களும் இப்படியான வார்த்தைகளைப் பாவித்திருக்கும் படங்களும் உண்டு! சொல்லப்போனால் இப்படியான பாத்திரப் படைப்புகளும் இதுபோன்ற வசனங்களும் மிகக் கண்ணியமானவையென இன்றைய சினிமாக்காறர்கள் கண்டுபிடித்திருக்கின்ரார்க
  7. நீதிமன்றம் கூடுகின்றது. குற்றவாழிக் கூண்டில் கடவுள் நிறுத்தப்படுகின்றார்!. நீதிபதி:- உமது பெயர் என்ன? கடவுள்:- கடவுள் நீதிபதி:- மனிதர்களைப் படைத்தது நீர்தானே? கடவுள்:- ஆமாம்! நீதிபதி:- மனிதர்களில் பணக்காரர்கள் என்றும் ஏழைகள் என்றும் ஏன் ஏற்றத்தாழ்வுகளோடு படைத்தீர்? கடவுள்:- நான் படைக்கும்போது அனைவரையும் சமமாகத்தான் படைத்தேன். அவர்கள்தான் தமக்குள் ஆசைகளையும் பொறாமைகளையும் வளர்த்துக்கொண்டு ஒருவரைக் கீளே தள்ளி இன்னொருவர். முன்னுக்கு வரும் வழிமுறைகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். நீதிபதி- ஒருவருக்கு ஆசையையும் மற்றவருக்கு ஆசையுடன் சேர்த்து அதை அடையும் திறமையையும் படைத்தது நீர்தானே? கடவுள்:- இல்லை! ஆசை என்னால் படைக்கப்பட்டது அல்ல? அவர்களே உருவாக்கிக்கொண்டது. நீதிபதி:- மனிதன் தனக்குத் துன்பம் வரும் போதெல்லாம் கடவுளே என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றாய்” என்று புலம்புகின்றானே! அப்படியானால் மனிதனின் துன்பத்திற்கெல்லாம் நீர்தான் காரணமா? கடவுள்:- கனம் நீதிபதி அவர்களே பொன்னைச் சுத்தப்படுத்த நெருப்பில் எரித்துக் காச்சுவதில்லையா? அதுபோலத்தான் மனிதனைச் சுத்தப்படுத்த சோதனைகள்!. நீதிபதி:- அப்படியானால் மனிதனை அழுக்காக்கியவன் யார்? கடவுள்:- ஓடிக்கொண்டிருக்கின்ற நீர் சுத்தமானதாகவும் தேங்கி நிற்கின்ற நீர் அழுக்காகவும் இருப்பதைப்போல அறிவும் ஆசையும் உள்ள மனிதன் சுத்தமானவனாகவும் ஆசை மட்டும் உள்ள மனிதன் அழுக்கானவனாகவும் இருக்கின்றான். இது மனிதர்களே உருவாக்கிக்கொள்வது!. நீதிபதி:- பொன்னைச் சுத்தப்படுத்தி புதிய நகைகளை உருவாக்குகின்றார்கள். மனிதன் சுத்தப்படுத்தப்பட்டால் கடவுள்:- துறவியாகுகின்றான். எனது உண்மையான பிள்ளைகளாகின்றான! நீதிபதி:- அப்படியானால் மனிதர்கள் உமது அடிமைகளா? அல்லது பிள்ளைகளா? கடவுள்:- இரண்டும் இல்லை! கடவுள் அரசன்! மனிதர்கள் குடிமக்கள்!. நீதிபதி:- அப்படியானால் நீர் அரசாள்வதற்காக மனிதர்களை குடிமக்களாகப் படைத்தீரா? கடவுள்:…….(மௌனம்) நீதிபதி:- மனிதர்கள் பிறப்பதற்கு காரணம் நீரே ஆகும்போது மனிதர்கள் செய்யும் பாவத்திற்கும் நீர்தானே காரணமாக முடியும்? கடவுள்:- ……(மௌனம்) நீதிபதி:- சில மனிதர்களை அறிவாளிகளாகவும் சில மனிதர்களை அறிவு குறைந்தவர்களாகவும் படைத்தது உமது குற்றம்தானே? கடவுள்:- ….(மௌனம்) நீதிபதி:- ஏன் மௌனமாக இருக்கின்றீர்? எனது கேள்விகள் உமக்குப் புரிகின்றதா? கடவுள்:- கொஞ்சம் புரிகின்றது! கொஞ்சம் புரியவில்லை!? கனம் நீதிபதி அவர்களே நீங்கள் கேட்ட கேள்விகள் உங்களுக்குப் புரிகின்றதா? (கடவுள் மயங்கி விழுகின்றார்) பார்வையாளர்களாக இருந்த மனிதர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள் ‘வழக்கு சுவையாக இருந்தது!” பொது நீதி:- விடைகள் இல்லாதவரை வினாக்கள் சுவாரசியமாகவே இருக்கும்! வண்ணை தெய்வம்
  8. உரையாட இது நேரமா-தமிழ் உணர்வாலே உளமார கொடுக்கின்ற நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட) கணநேரப் பொழுதோடு கடல் வந்து கரையேறி இன்பத்தை இரை கொண்டு இதயத்தில் சுமை ஏற்றிய நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட) யார் செய்த சதியோ? விதி போட்ட புதிரோ ? மதி கெட்ட அலை வந்து பதில் தருமோ? விடிவொன்று வருமென்று விழியோரம் ஒளி தோன்ற கனவாகி சிதைகின்ற நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட) புலத்தோடு வாழ்கின்ற உறவெல்லாம் ஒன்றாகி பலத்தோடு நிலம் பற்றுவோம். நலத்தோடு அவர் வாழ நிறைவோடு தினம் நல்கி இனம் காக்கும் நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட)
  9. உன்னத நிலைகள் இப்படித்தான் உதயமாகும்,பாலை வனம் என்ற போதும் நம் நாடு,பாறை மலை கூட நம் எல்லைக் கோடு.

  10. சென்று வா இரண்டாயிரத்து எட்டே வென்று விட்டதாய் நினைத்தால் வெற்றி உனக்கல்ல என்பேன் பற்றி எரிவது தமிழ் ஈழக் கனவே! பொறுமையை இழந்தோம் தனிமையாய் தொடர்ந்தோம் இனிமையான வாழ்வுக்காய் தனி நாட்டைக் கேட்டோம்! பொறுக்காத நாடுகள் வெறுக்கவே செய்தனர் விடை தர மறுத்து தடையினைப் போட்டனர்! குனிந்ததும் குட்டு வாங்கியதும் வலி பட்டவர்க்கே வலிக்கும் எலி வளையானாலும் எமக்கு தனி வளை வேண்டும் என்றோம்! சிங்களம் வெங்களம் விரும்பியது கங்கணம் கட்டி தமிழினம் அழிக்க விரைந்து படை திரட்டியது உலகிடம் இரைந்து ஆயுத பிச்சை கேட்டது! சர்வமும் மயங்கி சர்வதேசமும் சோரம்போனது ஐ.நா.வும் அசந்து தூங்கி வழியுது. அடக்கு முறை தலை தூக்கி தாண்டவமாடுது! வன்முறை மலிந்த ஆண்டாய் உன் ஆண்டின் அளப்ப‌ரிய சேவை கண்கூடு.பன்னிரண்டு ஒண்டு நள்ளிரவு இரண்டாயிரத்து ஒன்பது வாழ்த்தி வரவேற்கிறோம். வா. வளம் தர வா! நம்பிக்கையே எங்கள் மூச்சு நம்புகிறோம் தமிழ் ஈழம் நாளை மலரும்…!
  11. வணக்கம்! வாங்க நொச்சியான். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
  12. வணக்கம்!!!! வாருங்கள் புதியவரே. உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.