Jump to content

theeya

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  401
 • Joined

 • Last visited

1 Follower

About theeya

 • Birthday April 10

Contact Methods

 • Website URL
  http://www.thiyaa.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  USA
 • Interests
  கவிதை, கதை, இன்னும் பல....

Recent Profile Visitors

1968 profile views

theeya's Achievements

Community Regular

Community Regular (8/14)

 • Dedicated Rare
 • Very Popular Rare
 • Reacting Well Rare
 • Conversation Starter
 • First Post

Recent Badges

133

Reputation

 1. மிக்க நன்றி மிக்க நன்றி, உங்கள் பாராட்டுக்களை அவர்களுக்கும் சொல்கிறேன் மிக்க நன்றி, உங்கள் பாராட்டுக்களை அவர்களுக்கும் சொல்கிறேன்
 2. எனது தலைமையில் நடந்த பொங்கல் தினச் சிறப்புக் கவியரங்கம் நன்றி -தியா-
 3. மிக்க நன்றி நன்றி , உங்களை எல்லாம் பார்க்க வேணும் போல இருந்துது வெறுங்கையுடன் வாறது சரியில்லை என்று கவிதையுடன் வந்தேன் நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நிலாமதி அக்கா பகிந்த வீடியோவைப் பாருங்கள். எண்கள் வீட்டின் பின் புறத்தில் அதிகம் உள்ளன. நன்றி! நிலாமதி அக்கா நன்றி!
 4. எனக்கு உள்ளே ஒரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது. மன அழுத்தம், சிதளூரும் காயங்கள், மற்றும் நெஞ்சு நிறைந்த வலிகள், எல்லாம் ஒன்றுகூடி ஒவ்வொரு நொடியும் என்னை விரட்டுகின்றன. இருள் ஆழமாக, அதிகமாக என்னைப் பின்தொடர்ந்து வருகிறது. மிகவும் சிக்கலான கோடுகள் என்னைச் சுற்றி வரையப்பட்டன. என் சுதந்திரம் சிறைபிடிக்கப்பட்டபோது யதார்த்தம் செத்துப்போனது. நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்த பின்னிரவில், நிலவு மறைந்து போனது, மீளா இருள் எங்கும் வியாபித்தது. மின்மினிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டிப் பறந்தன. நீரோடி வியாபித்த நீர்நிலைகள் வற்றி வறண்டன. பள்ளத்தாக்குகள் சுக்குநூறாகப் பிளவுபட்டன. கண்ணுக்கெட்டிய திசையெங்கும் கந்தகப் புகை வியாபித்தது. மின்னலுடன் இடி முழக்கம், வானதிர்ந்தது. மிருகங்களின் உறுமல் சத்தம் இதயத்தை ரணமாக்கியது. இரவின் கறுப்பில், இருண்ட வெற்றிப் பதாகைள் காற்றில் அசைந்தன. பேயின் நகம் பட்ட மோசமான கீறல்கள் பெருவலியெடுத்தன. போர் முடிவுக்கு வந்த பிறகு, பற்கள் மற்றும் நகங்களை நிமிர்த்தியபடி பேய்கள் அங்குமிங்கும் உலாவின. லூசிபரின் சொந்த நரகத்தில் சபித்து வளர்க்கப்பட்ட கோர்கன்களின் கொடுஞ் செயலால், எண்ணற்ற உடல்கள் அங்கே பரிதாபமாக சுருண்டு கிடந்தன. எங்கள் சொந்த நிலத்தை விட்டு வெளியேறும்படி அவர்கள் வானதிரக் கூவினர். ஒருவர் பின் ஒருவராகச் சிறைப்பட நடந்த மக்களின் கூக்குரல்கள், அவர்களின் காதுகளை சென்றடையமுன் செத்துச் செயலிழந்தன. எதிரிகளின் மூச்சு மக்களுக்கு விஷ நெருப்பை சுவாசிக்கத் தந்தது. எங்கள் இனிய வாழ்க்கையின் மீது நிலவொளியின் இருண்ட பக்கங்கள் நுழைந்தன. ஆனாலும், பிரபஞ்சத்தின் அனைத்தையும் பார்க்கும் உணர்வு மட்டும் இன்னும் இழக்கப்படவில்லை. நரக கோபத்தில் பிறந்த மின்மினிப் பூச்சிகள், அழிந்தவர்களின் கடந்தகால பாவங்களை அள்ளிக் கோபத்தில் வீசின. அடர் மிகு இருளில் அந்தி பேய்கள், நிழல் உலகின் தாதாக்கள் போல நிமிந்து நின்றன... நான் முன்போல் மிகவும் சுதந்திரமாக இயங்க விரும்புகிறேன். மிளிரும் நட்சத்திரங்களைக் கண் முன்னே காண விருப்பம் கொள்கிறேன். என்னை உறுதியாக வெளிச்சம் போட்டுக் காட்டும் கடவுளின் கடிகாரத்திற்கு நன்றி! எங்கள் வீட்டின் பின்புறத்தே அடர்ந்து பரந்துள்ள டான்டேலியன்களைப் பார்க்கிறேன். நாங்கள் டான்டேலியன்களைப் போன்றவர்கள்! எந்தத் தழும்புகளுக்கும் மருந்தளிக்கும் வல்லமை படைத்தவர்கள். பதற்றம் கலந்த பயங்கரமான பயத்தின் சுவட்டால், நான் தூங்குவதற்காக அழுதேன். ஆனால், நான் இப்போது கண்ணீர் விடமாட்டேன்! நான் நெரிசலான தொழிற்சாலைகளில் இருந்து வளர்க்கப்படாத கோழி! நிம்மதியாக பறக்கும் ஒரு பில்லியன் பறவைகளில் ஒருவன். எனக்கு நன்கு தெரிந்த என் நிலத்தில் என்னை விட்டு விடுங்கள்... என் அற்புதமான காடுகளில் மட்டுமே என் மகிழ்ச்சியைத் நான் தேடுவேன்! இறுதியாக ஒன்றை மட்டும் சொல்கிறேன், நாங்கள் டெய்ஸி மலர் போன்றவர்கள் என்றும் சாம்பியன்களாக இருப்பதையே விரும்புகிறோம்! -தியா- நன்றி; பனிப்பூக்கள் https://www.panippookkal.com/ithazh/archives/23477?fbclid=IwAR2zMbJnH7bmVliDmTAMu2rrqxCNLMcnrA0JaGotxW6p7KuLtXMHqjxDb7o
 5. அன்புக்கு நிகர் இவ்வுலகில் வேறேது? மிகச் சிறப்பான நடை.
 6. இந்த நாவலைப் பல நாட்களுக்கு முன் வாசித்திருந்தேன்.எனது கருத்தைப் பதிவு செய்யலாம் என்றிருந்த வேளையில் தான் அந்தக் கருத்துப் பகிர்வு முகநூலில் வெளிவந்தது. அதுதான் பிரதம எழுத்தாளரும்,எனக்கும் பிடித்தவரான "நிலக்கிளி"தந்த ஆசிரியர் திரு பாலமனோகரன் அவர்களது விமர்சனம். இதைவிட நான் என்னதான் எழுதப் போகிறேன் என்று தள்ளிப்போட்டேன். அவர் மிகவும் சிறப்பாகப் பதிவு செய்திருந்தார். அதன் பிறகும் எழுதலாம் என்றிருந்த வேளையில் மீண்டும் ஒரு விமர்சனம் வந்தது. மேலும் கொஞ்சம் தாமதமானது. அவர்கள் சொல்லாததை நான் என்ன சொல்லிவிடப் போகிறேன் . இனியும் தாமதமாக்கக் கூடாது என்பதை நினைத்தே இதனைப் பதிவு செய்கிறேன். இது ,நடந்து முடிந்த யுத்தத்திற்கான சாட்சி யென்றே சொல்லலாம். சொந்தப் பிரதேசத்திலிருந்து,அதுவும் சொந்த வீட்டிலிருந்து இடம்பெயர்வதான கொடுமை மிகவும் மோசமானது.யுத்தகாலத்தில் தமிழர் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் அவர்கள் பட்ட அவஸ்த்தைகள் சொல்லி மாளாது. அதனை இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது. குடும்பத் தலைவனை இழந்த ஒரு குடும்பம் படுகின்ற சோதனையும்,வேதனையும் இந்நாவலின் முக்கிய கருவாகும். கணவன் சிவா ,யுத்தத்தால் கொலை செய்யப்பட்ட பின். குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மனைவி ,புவனா,தனது பிள்ளைகளுடன் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ஆசிரியரால் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வயிற்றுக்கும்,வாழ்வுக்குமான சோதனை மிகுந்த இவர்களது வாழ்க்கை கத்திபோல் நடப்பது போல் சொல்லப்பட்டிருக்கிறது. இராணுவம் செல்லடிக்கும் நேரங்களில் அவர்கள் பாதுகாப்பைத் தேடி ஓடும் காட்சிகள்,ஐயோ அந்தக் குடும்பத்திற்கு எதுவுமே நடந்து விடக் கூடாது ,என வாசிப்பவர்களுக்கு ஒரு பரதவிப்பை ஏற்படுத்துகிறது. இது ஆசிரியரின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதலாம்.சின்ன வாக்கியங்கள்,யதார்த்த மொழிநடை.கஸ்ரங்களைச் சந்தித்த ஒரு பிரதிநிதியாலேயே தான் இவ்வாறு பதிவு செய்ய முடிந்திருக்கிறது. இந்தக் கதையின் கதாநாயகி புவனா என்றே எடுத்துக் கொண்டேன்.எத்தனை இழப்புகளைச் சந்தித்த போதும்,அதனைச் சவாலாக எடுத்துக்கொண்டு ,பருந்திற்கு பயந்து,குஞ்சுகளை தனது இறகிற்குள் பாது காக்கும் தாய்க்கோழி போல் ,அந்தத் தாயை என்னால் நோக்க முடிந்தது. தாயின் சுமையைக் குறைப்பதற்காக படிக்கின்ற சின்னவயதில் பொறுப்போடு நடந்து கொள்கிற மூத்த மகன் செல்வனின் பாத்திரப் படைப்பு பெரு மரியாதையைத் தருகிறது. பாதிக்குமேல் அவனே கதாநாயகனாகி விடுகிறான்.இடம் விட்டு இடம் மாறும் போதெல்லாம் சைக்கிள் பிரயாணத்தில் அவர்கள் படும் பாடுகள் ,அதனை இயல்பாக எடுத்துக் கொள்ளும் போக்கு. கதாபாத்திரங்களோடு எங்களையும் பயணிக்க வைக்கிறது. ரேணு,நதி என்கிற சகோதரிகளை பாதுகாக்கும் பொறுப்புள்ள அண்ணனாக மாறும் செல்வன் .தாய்க்கும் நம்பிக்கைக்குரிய தனயனாக மாறிவருது கதைக்கு வலுச்சேர்க்கிறது. வன்னியப் பற்றிய காட்சிப் பகிர்வும்,வளங்கள் பற்றிய செய்திகளும் வாசிக்கும் போது. மகிழ்ச்சியைத் தருகிறது. கோழிய குளம்,கொம்பறுத்த மடு,விளக்குவைச்ச குளம்,மல்லாவி,கோட்டைகட்டிய குளம்,வன்னேரி,தென்னியன் குளம் போன்ற பகுதிகளில் எனக்குப் பரிச்சியம் வாய்ந்த படியால் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது. புலம்பெயர்ந்து சென்ற போதும்,அந்த குடும்பத்தை ஆதரித்து உதவிகள் புரியும் ஏனைய கதாபாத்திரங்களும் கதைக்கு வலுச்சேர்க்கின்றன. பருவப்பெண்கள் இல்லாமல் கதைக்குச் சுவையே இருக்காது என்பதை உணர்ந்த ஆசிரியர். அதனை இதற்குள் புகுத்தியிருப்பதும் அழகு. சந்திப்புகளும், திடீர் திருப்பங்களும் காதலின் மனமுறிவும்.சுகமாக முடிவதும் ஆரோக்கியம். உழைப்பால் உயரும் செல்வனின் பொறுப்பான படைப்பு .அடுத்தவர்க்கு உத்வேகத்தைத் தருகிறது. சுரபியின் காதலை நயமாகச் சொல்லி சுகமாக முடித்து விடுகிறார். தாய் புவனாவின் ஆசை.யுத்தத்தின் இறுதிநாள் கடுமையும்,உறவுகளைப் பிரித்துவிடும் சோகமும். கலங்க வைக்கிறது. வாசகர்கள் வாசிக்கவேண்டிய நாவலிது. ஆழிப்பேரலை சுனாமி என்ற யப்பான் சொல்லை உலகெங்கும் அறியத்தந்தது போல்.அப்பாவிகளாக கிராமங்களில் வாழ்ந்த நம் மக்களுக்கு இந்த யுத்தம் நவீன கொடிய ஆயதங்களை அறியவைத்துச் சென்றிருக்கிறது . "எறிகணை" இதுவும் ஒரு ஆயுதம் என்பதை நாம் அறிவோம். தியாவுக்கு எமது வாழ்த்துகள். இனியும் அவரிடமிருந்து நல்ல ஆக்கங்களை எதிர் பார்க்கிறோம். நன்றி, பொன்.புத்திசிகாமணி, யேர்மனி. "எறிகணை" நாவல் பற்றி பொன். புத்திசிகாமணி ஐயா அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட மதிப்பாய்வு- நன்றி
 7. நன்றி, நீங்கள் எல்லோரும் தரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.