Jump to content

theeya

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    525
  • Joined

  • Last visited

Everything posted by theeya

  1. பல தசாப்தங்களாக உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான அமெரிக்க இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நெருங்கிய கூட்டாளிக்கு இது ஒரு அசாதாரண செய்தியாகும். ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு காசாவில் இஸ்ரேல் தன்னிச்சையாகச் செயல்பட்டு -- அதன் இராணுவ நடவடிக்கைகள் வெகுதூரம் சென்றுவிட்டன என்று அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு - ஈரானுக்கு எதிரான தாக்குதல் இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா பங்கேற்காது என்று பிடென் நிர்வாகம் தெளிவுபடுத்தியது. மத்திய கிழக்கில் ஒரு பரந்த போருக்கு அஞ்சுகிறது. மேலும்: இஸ்ரேல்-காசா நேரடி அறிவிப்புகள்: இஸ்ரேலிய போர் அமைச்சரவை திங்கள்கிழமை மீண்டும் கூடவுள்ளது "இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கும் சுதந்திரம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்" என்று ஈரானின் தாக்குதல் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே ஒரு மூத்த நிர்வாக அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார். "இது ஒரு நீண்டகால கொள்கை, அது இன்னும் உள்ளது." தாக்குதல் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவுமா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, அந்த அதிகாரி இல்லை என்று கூறினார். "நாங்கள் அத்தகைய ஒரு காரியத்தில் பங்கேற்பதை கற்பனை செய்ய மாட்டோம்," என்று அந்த நபர் கூறினார். இரண்டாவது அமெரிக்க அதிகாரியின் கூற்றுப்படி, அந்த செய்தி இஸ்ரேலின் உயர் அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் ஆகியோருக்கு இடையே ஒரு தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் நேரடியாக வழங்கப்பட்டது. இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஆதரவை தெரிவிப்பதோடு, இஸ்ரேலின் சார்பாக ஒரு சாத்தியமான எதிர் தாக்குதலில் சேர அமெரிக்கா திட்டமிடவில்லை என்பதை ஆஸ்டின் மிகவும் "நேரடி" முறையில் தெளிவுபடுத்தியதாக அந்த அதிகாரி கூறினார். மூலம் : https://www.yahoo.com/news/us-israel-strike-back-iran-162024611.html
  2. நன்றி, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
  3. இன்றைய பனிப்பூக்கள் இதழில் வெளியான எனது கட்டுரை ======================================================= சூரியன் மேஷ இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். தமிழில் சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் வரும் “ஏப்ரல்” மாதம் 14 ஆம் நாள் முதல் “மே” மாதம் 14 ஆம் நாள் வரை தமிழில் “சித்திரை” மாதமாகும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும் என்ற நம்பிக்கை காலங்காலமாக எம்மவரிடம் நிலவி வருவதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக, சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். மேஷ ராசியின் ஊடாக சூரியன் நகர்ந்து வரும் மாதமான சித்திரை மாதமே வருடத்தின் முதல் மாதமாகப் பண்டையத் தமிழர்கள் கருதினர் என்பதற்குச் சங்க இலக்கியங்களிலேயே சான்று உள்ளது. சங்க இலக்கியங்களின் பதினென் மேல்கணக்கு நூல்களின் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநெல்வாடையின் வரிகள் (160–161) இதற்குச் சான்று. இதற்கு நச்சினார்க்கினியரின் உரை பின்வருமாறு அமைகின்றது. “திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேஷராசி முதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும் மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே…” இதிலிருந்து மேஷ ராசியே முதல் ராசியாகப் பண்டையத் தமிழர்களும் கருதினர் என்று நாம் அறியலாம். மேலும்: https://www.panippookkal.com/ithazh/archives/27134?fbclid=IwAR3jA-CjymvvsySFZShxQSKTbfnSLjlJPqMD2j4mNjSdqfYf54z_7JOSVrk
  4. இது எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. மேலும், இது இலங்கையில் எழுத்தாளர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்குகின்றது
  5. மின்னசோட்டா weather ஐ நம்ப முடியாது 😄
  6. இப்போ இல்லை... ஆனால் மே வரைக்கும் சொல்ல முடியாது. மின்னசோட்டா weather ஐ நம்ப முடியாது
  7. ஆமாம் நானும் செய்தியில் பார்த்துத் தெரிந்து கொண்டேன். நியூயார்க் மாநிலத்தில் இருந்து 1200 மைல்கள் தொலைவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் நான் வசிக்கிறேன்🙂
  8. என் வீட்டின் சாளரங்களை விருப்பப்பட்ட நேரம் நான் திறக்க விரும்புகிறேன் பனி மூடிய வீதிகள் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் எப்போதாவது ஒரு வசந்த நாளை நான் எதிர்பார்த்திருக்கிறேன் குளிர் சலித்துப் போய்விட்டது இப்போது என் மனம் சூடான ஒன்றை விரும்புகிறது தியா - காண்டீபன்
  9. with Public ஏப்ரல் 2, உலக சிறுவர் புத்தக தினம் புத்தகங்கள் சிறார்களின் தனி உலகம் புத்தகங்கள் முடிவில்லா வசீகரம் எல்லையற்ற பேரானந்தம் புத்தகங்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷம் புத்தகங்கள் ஆர்வமுள்ள சிறாருக்கு அளவற்ற மகிழ்ச்சி தரும் புத்தகங்கள் புதியனவோ பழையனவோ அச்சிடப்பட்ட புத்தகங்கள் மனதுக்கு இனிமையானவை சிறுவர்கள் கையில் புத்தகங்களைக் கொடுங்கள் புத்தகம் விரும்பும் எந்தக் குழந்தையும் கைப்பேசி கேட்டு அடம் பிடிக்காது அவர்களைப் படிக்க வைக்க அவர்களின் கனவு மெய்ப்பட அவர்களைச் சிந்திக்க வைக்க அவர்களுக்கு ஒரு புத்தகம் கொடுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த புத்தகங்களை பரிசாகக் கொடுங்கள் புத்தகங்கள் சிறந்த பரிசுகளை உங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் ஏனென்றால் அவர்கள் தேடும் முழு உலகும் புத்தகத்துக்குள்தான் உள்ளன. தியா - காண்டீபன்
  10. இவ்வுலகில் யாரும் பசியோடு இல்லை உலகில் அமைதி நிலவுகிறது எங்கும் சண்டை இல்லை ஈழத் தமிழரின் இனப்படுகொலையை ஐ நா விசாரிக்கிறது யூதர்களும் பலஸ்தீனர்களும் ஒருவரை மற்ரொருவர் மிகவும் நேசிக்கிறார்கள் சமாதானம் ஒரே தீர்வென்று இரேலியர்கள் விரும்புகிறார்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள் நேற்றைய விருந்தொன்றில் ஈஸ்டர் முட்டையை பரிமாறிக் கொண்டார்கள் ஆம் நம்புங்கள் முட்டாள்கள் நிறைந்த இவ்வுலகில் அறிவாளிகள் அனைவரும் கோமாளிகளே! தியா காண்டீபன்
  11. மிக்க நன்றி - ஆம் பட்டவனுக்குத்தான் நோவு தெரியும்
  12. மிக்க நன்றி ஆம், அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து வந்து போகிறேன். மிக்க நன்றி 🙏
  13. முடி திருத்தகம் ஒன்றில் இன்று நான் அவளைச் சந்தித்தேன் அவள் அமெரிக்க நாட்டின் ஆப்கான் அகதி பல்கலை ஒன்றில் பட்டம் பயிலும் அவள் பகுதி நேரம் அங்கே பணி புரிகிறாளாம் இப் புனித மாதத்தில் தன் ஊரில் இல்லாமை பற்றி அதிவருத்தம் கொண்டாள் முன்னொரு நாளின் ரமலான் நோன்பில் தன் சுற்றம் கூடி உண்டது பற்றி அதிகம் அளவளாவினாள் அரை மணி நேரம் தான் முடி வெட்டி மீள்கையில் கூலிக்கும் மேல் ஒரு சிறு தொகை கொடுத்தேன் ஆம்… ஒரு ஈழ அகதியின் பெயரால் அவளின் இன்றைய நோன்பு துறக்கப்படட்டும் தியா - காண்டீபன்
  14. நீங்கள் எப்போதாவது பசித்திருந்திருக்கிறீர்களா ஆம் பசித்திருத்தலின் கொடுமையை நான் அனுபவித்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது வெறுங் காலுடன் நடந்துள்ளீர்களா ஆம் பாதணிகள் இன்றி நான் பல நாட்கள் நடந்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது உடுத்த உடையின்றித் தவித்திருக்கிறீர்களா ஆம் நான் மாற்றுத் துணியின்றிப் பல நாட்கள் இருந்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது உங்கள் வீடு பிரிந்ததுண்டா ஆம் அகதியாகிப் பலமுறை நான் அலைந்திருக்கிறேன் ஆம் வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல பல நேரம் சுமையாகிறது சில நேரம் சுகமாகிறது தியா - காண்டீபன்
  15. IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com தியா - காண்டீபன்
  16. மகிழ்ச்சி, பரிந்துரைக்கு நன்றி... ஆம், முடிந்தால் யாராவது யாழ் அகவை 26 க்கு மாற்றி விடுங்கள்
  17. அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள் போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள் அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது 'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள் கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார் அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர் தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  18. சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள்
  19. நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம். இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.