Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

theeya

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  339
 • Joined

 • Last visited

Posts posted by theeya

 1. இன்றுதான் தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடங்கியது முதல் முடியும்வரை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் கதை நகர்கிறது. நான் வாழ்ந்த மண்ணில், நான் நடந்த வீதியில், நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் தரிசிக்க முடிகின்றது. கதையின் பல இடங்களில் நான் பட்ட அனுபவங்கள் கண் முன்னே படமாக விரிகின்றன. போர் தின்ற பூமியில் வாழ்ந்த எல்லோருடைய அனுபவங்களும் இவையாகவே இருந்தன, இருக்கின்றன. 

  கிளிநொச்சியில் தொடங்கும் கதை விரிந்து பரந்து வன்னியின் பெரும்பாலான இடங்களுக்கு நகர்கிறபோது நானும் என்னை அறியாமல் அந்த இடங்களுக்கே சென்று விடும் உணர்வைத் தந்தது. ஒரு தாயின் பாசப் போராட்டமும் மகனின் தாய் மண் பற்றிய ஏக்கமும்  கதையெங்கும் இழையோடி நிற்கிறது. 

  அண்ணன் – தம்பி, அம்மா – மகன் உறவை இம்மியளவேனும் குறைவின்றிச் சொன்ன விதம் அழகு. சண்டை நடந்த காலத்துத் துயரங்களையும், சண்டைக்குப் பிந்திய இராணுவ அடக்குமுறை பற்றியும், தமிழர்களின் தியாகங்கள் பற்றியும் காலங்கடந்து வரும் எங்கள் சந்ததிகள் அறிந்து கொள்ள வேண்டிய பலதரப்பட்ட ஆவணங்களின் தொகுப்பாக இந்த நாவலைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

  எங்கள் பூர்வீக மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் எங்கள் இளஞ் சந்ததிகள் ஒருமுறையேனும் இந்த நாவலைப் படித்துப் பார்க்க வேண்டும். அதற்காகவேனும், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பன்மொழிப் புலமை உள்ள எழுத்தார்வம் உள்ளவர்கள் இந்த நாவலை வேற்று மொழிகளில் மொழி பெயர்க்க முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது. 

  போர் எவ்வளவு கொடுமையானது என்பது, பிறந்த நாளில் இருந்து போரோடு வாழ்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு நன்கு தெரியும். உலகில் யாரும் போரை விரும்புவதில்லை. உரிமைகள் மறுக்கப்படும் போது தவிர்க்க முடியாமல் போரே எங்கள் வாழ்வைத் தீர்மானித்தது. போர் எங்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட போது அதற்குள் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாய நிலை வந்தபோது போரும் எங்கள் வாழ்வின் அங்கமாகிப்போனது. 

  அன்றாடம் தினச் சாவுக் குறிப்புக்களால் எழுதப்பட்ட முற்றுப் பெறாத நினைவுகளை, அகதி வாழ்வின் அந்தர நிலைகளை, பெற்ற பிள்ளையைப் போரில் பறிகொடுத்த பெற்றோரின் நிலையை, கணவனை இழந்த மனைவியின் துயரை, தந்தையை இழந்த பிள்ளைகள் – சகோதரங்களைப் பறிகொடுத்த உறவுகளின் சொல்லொணாத் துயரங்களை முற்றுப் பெறாத தொடர் கதையாய் நீளும் போருக்குப் பின்னைய அடக்குமுறைகளை விரிந்த காட்சி அமைப்பில் கொண்டு வந்து ஒரு படம் போலக் கண் முன்னே விரிய வைக்கிறார். எல்லாவற்றையும் மீறி வெள்ளையன், கதை முழுவதையும் ஆக்கிரமிக்கிறார். 

  போருக்குள்ளும் ஒரு அழகியல் சார்ந்த வாழ்விருந்தது என்பதை இக்கதையில் ஆங்காங்கு தொட்டுச் செல்லும் எழுத்தாளர் போரினால் ஏற்பட்ட வலிகளை வரிசைப்படுத்திச் சொன்ன விதமும் கையாண்ட இயல்பான மொழிநடையும் வாசிப்போரைத் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு கடுகதித் தொடர்வண்டி போல இழுத்துச் செல்கிறது.

  போரும் அதனால் ஏற்பற்ற இழப்புகளும் எம் வாழ்வில் ஏற்படுத்திய சொல்லொண்ணாக் காயங்களை ஒரு உள்ளிருந்த பார்வையாக வெளிக் கொண்டு வருவதற்கு, தீபச்செல்வன் போன்ற ஒரு சிலரால் மட்டுமே இன்று முடிகிறது. இன்றைய காலகட்டத்தில் இது அவ்வளவு இலகுவான காரியமல்ல, கத்திமேல் நடப்பதிலும் கொடியது. தெரிந்தும் பேனாவைக் கையில் தூக்கிய தீபச்செல்வனைப் பாராட்டியே ஆகவேண்டும்.

  ஒன்று மட்டும் உறுதி இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்தக் கதை என்னைத் தூங்க விடாமல் ஏதோ செய்யப் போகிறது என்பது மட்டும் தெரிகிறது.

  நன்றி 

  தியா

  https://www.panippookkal.com/ithazh/archives/22081?fbclid=IwAR2D3Y_8EkzpnAnhOuHvQEl9vjKUuBOOJsjsAuO4Rw9zRk4Yx2ZLPbA16j8

 2. 17 hours ago, shanthy said:

  அனுபவப் பகிர்வு ஒரு பயண அனுபவத்தை கூடவே தந்திருக்கிறீங்கள். எண்டாலும் 😀 மனைவியின் ஆசையை நிறைவேற்றி தப்பி விட்டீர்கள். வாழ்த்துக்கள். 

  ஓமோம் ஆசை நிறைவேறிட்டுது. கொரோனாவின் புண்ணியத்துல இந்தவருடம் சிங்கப்பூர் பயணம் ரத்து. எல்லாம் சேத்து வைச்சு அடுத்து வாற வருடங்களில் என்ன நடக்குதோ தெரியேல்லை. நன்றி   

  9 hours ago, Maruthankerny said:

  உங்கள் அனுபவ பகிர்வுக்கு நன்றி 
  அமெரிக்காவிலேயே பெரிய மால் இருக்கும் ஊரில் (மின்னியப்பொலிஸ்) வாழ்வதாக 
  எழுதி இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி. அதிர்ஸ்ட்ட காரர் என்று நினைக்கிறன்.
  எதோ முன்பிறவியில் நீங்கள் செய்த பலனாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.  
  இன்று மினியாபொலிஸில் நல்ல வெக்கை என்று கேள்வி பட்டேன் உண்மையா? 

  ஒர்லாண்டோவில் இருந்து துபாய்க்கு 16 மணித்தியாலத்து மேலான 
  நேரத்தில் ஒன்றரை மணி நேரத்தை பிடிக்க முடியாத சோம்பேறிகளாக 
  எமிரேட்ஸ் பைலட்கள் இருந்து இருக்கிறார்கள். போகும்போது காற்று திசையில் போவதால் 
  ஐரோப்பவுக்கு போகும் விமானங்களே ஒரு மணி நேரத்தை இலகுவாக பிடித்துவிடுவார்கள்.

  துபாயில் எனக்கும் இப்படி ஒரு அனுபவம் கிடைத்து இருக்கிறது அது ஒரு நாள் மட்டும்.
  உனக்கு கோட்டலும் இல்லை ஒன்றும் இல்லை என்று கலைத்துவிடார்கள். அது அவர்கள் பிழையில்லை 
  டிக்கெட் புக் பண்ணியவரின் தவறு. நான் ஒரு காரை வாடகைக்கு எடுத்து சுத்திவிட்டு வருவோம் என்று எண்ணி காரை வாடகைக்கு எடுத்து வெளியில் போகும்போதுதான் .... அவனுக்குள் போவதுபோல வெக்கை வந்து முகத்தில் அடித்தது   அப்போது ஜிபிஸ் சிஸிடம் ஸ்மார்ட் போன்கள் இல்லாத காலம் மேப்பை பார்த்து ஓடிக்கொண்டு திரிந்தேன்  ஒரு வாறாக ஒரு கடற்கரையை சேர்ந்து மிக்க மகிழ்ச்சியுடன் உடுப்பு மாத்திக்கொண்டு  கடலுக்குள் இறங்கினால் ... கடல் தண்ணீர் சுடுகிறது என்ன ஊரடா இது வென்று விட்டு நானும் பொய் ஒரு மொலில் தான் நேரம் களித்தேன் அங்கு போனால் குளிர் புல் ஏசி போட்டு வைத்திருக்கிறார்கள் 

  U.S. Arena, Minneapolis skyline | NIST

  என்ர கதையை விட உங்கட கதை நல்லாய் இருக்குது. இந்தக் கிழமை மட்டும்தான் வெக்கை வாற கிழமையில் இருந்து குளிர் தொடங்குது. நன்றி 

 3. On 24/9/2020 at 05:55, முதல்வன் said:

  நன்றாக எழுதி இருக்கிறீங்கள். தேர்ந்த எழுத்து நடை. தொடர்ந்தும் பல ஆக்கங்களைத்தர வேண்டிநிற்கிறேன்.❤️

  ஓம், நிறைய எழுத வேணும் எண்டு ஆசைதான். வேலை இல்லாத நாட்களில் எழுத முயல்கிறேன். நன்றி 

  22 hours ago, pri said:

  நன்றாக இருக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள் .

  நன்றி! 

  21 hours ago, ஈழப்பிரியன் said:

  அதென்ன இப்ப புதிதாக இணைகிறவர்கள் மினியாபொலிசில் இருக்கிறீர்கள்?

  தொய்வில்லாமல் எழுதியதற்கு பாராட்டுக்கள்.

  2017 இல் எனக்கும் இப்படி ஒரு அனுபவம்.இருந்தும் ஓடி ஏறிவிட்டோம்.

  என்ன இப்பிடிச் சொல்லிடீங்கள். நான் எழுதுறது குறைவு ஆனால் 10 வருஷ உறுப்பினர். குளிர் நகரம் பிடிச்சிருக்கு 

  20 hours ago, நிலாமதி said:

  நல்ல தேர்ந்த எழுத்து நடை , நாங்களும் அறிந்து கொண்டோம் ..வாயை மூடி இராமல் வாய்திறந்து கேடடால் தான் எதுவும் கிடைக்கும் . துணிச்சலுக்கு ம் தன்னம்பிக்கைக்கும் பாராட்டுக்கள் .  அடிக்கடி ஆக்கங்களுடன் வாருங்கள் .

  நன்றி. என்ன செய்யிறது இந்தக் காலத்தில கேக்காம ஒன்றும் கிடைக்குதில்லையே!

  19 hours ago, suvy said:

  நல்ல அனுபவப் பகிர்வு தொடருங்கள்......!   😁

  நன்றி.

 4. கடுங்குளிரில் விறைத்துப்போய் இருந்த மரங்கள் எல்லாம் இலை துளிர்க்கத் தொடங்கின. வெண் போர்வை நீக்கிப் பசுந்தரைகள் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தன. ஒபாமாவின் எட்டு வருட ஆட்சி முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்களே மீதம் இருந்தன. ஒரு புறம் ஜனாதிபதித் தேர்தலுக்குரிய ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் கிளாரியும் ரம்பும் ஒருவருக்கொருவர் சொல்லம்புகளால் மிகவும் தீவிரமாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள்.

  777.png

   

   

   

  கோடை விடுமுறை நெருங்க நெருங்க ரிக்கெற் விலை ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. ஜூலை மாதம் இலங்கை போவதற்காக மூன்று மாதங்களுக்கு முன்னரேயே ரிக்கெற் புக் பண்ணும் படலத்தைத் தொடங்கியிருந்தேன். 

   

  “இந்தமுறை இலங்கைக்குப் போகேக்கை துபாய்க்குப் போக வேணும். ஒரு ரெண்டு நாள் எண்டாலும் டுபாயிலை நிண்டு போறமாதிரி ரிக்கெட் போடுங்கோ” அடம் பிடித்தபடி இருந்தாள் மனைவி.

   

  “அடுத்தமுறை இலங்கைக்குப் போகும் போது துபாய் போகலாம். கொஞ்ச நாள் லீவுலதான் போறோம். இதில டுபாய் போனால் இலங்கையில நிக்க நாள் காணாது. அடுத்த முறை போகேக்கை பாப்போம்” 

   

  “அடுத்த முறையோ? அடுத்தமுறை இலங்கைக்குப் போகேக்கை சிங்கப்பூர் போகவேணும்” அவள் பெரியதொரு பிளானோடதான் இருக்கிறாள் என்பது அப்பதான் எனக்குப் புரிய ஆரம்பித்தது.

   

  “ஆ… அப்பிடியெண்டால் இதுதான் கடைசி இலங்கைப் பயணம் சொல்லிப் போட்டேன்” நானும் என் பிடியைத் தளர விடாமல் விடாப்பிடியாக இருந்தேன். 

   

  “ப்ளீஸ்…”

   

  “நான் சொன்னது சொன்னதுதான். நாலு கிழமை லீவுல பிளேனுக்குள்ள ஒரு கிழமை போயிடும் இதில துபாயில எல்லாம் நிக்கேலாது” காறாராய்ச் சொன்னதும் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விட்டாள். 

   

  ஜூலை மாதம் முதல் சனிக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கே மின்னியாபொலிஸ் ஏர்போர்ட்டுக்குப் போய் விட்டோம். ஆறு பெரிய லாகேச்சுகளிலும் MSP to CMB  நாடா ஒட்டி பெல்ட்டில் போட்டபின் போய் வெயிட்டிங் ஏரியாவில் இருந்தோம். குழந்தைகள் இருவரும் முதல் முறையாக இலங்கை போகும் ஆவலில் காத்திருந்தார்கள். மனைவியோ இன்னும் துபாய் நினைப்பிலேயே இருந்தாள்.

   

  கோடை காலத்துத் தெளிவான வானம். எந்தத் தாமதமும் இல்லாமல் சொல்லி வைத்ததுபோல ஐந்து மணிக்கே கிளம்பிய விமானம், சரியாக மூன்று மணித்தியாலப் பயணத்தின் பின் புளோரிடா நேரம் காலை ஒன்பது மணியளவில் ஒலண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. 

   

  காலைச் சாப்பாட்டை ஒலண்டோ விமான நிலையத்தில் முடித்துக் கொண்டு காலை பதினொன்றரைக்குத் துபாய் நோக்கிப் புறப்படும் எமிரேட்ஸ் போயிங் 777 நோக்கி விரைந்தோம். போடிங் முடிந்து பிளேன் வெளிக்கிடக் கொஞ்ச நேரம் இருக்கையில் மேகம் இருண்டு பேய் மழை கொட்டத் தொடங்கியது. 

   

  துபாயில் இருந்து மாலத்தீவின் ஊடாகக் கொழும்பு போகும் விமானத்தைப் பிடிக்க இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே இணைப்பு நேர அவகாசம் இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாக விமானம் கிளம்பியபோது, என்னுடைய புலனெல்லாம் மிச்சமிருக்கும் அரை மணித்தியாலத்தில் எப்பிடிக் கொழும்புபோற விமானத்தைப் பிடிப்பது என்பதிலேயே இருந்தது.

   

  “பிளேன் இறங்கியதும் நாங்கள் முதலில் வெளியே போக ஏதும் ஏற்பாடு உள்ளதா? நாங்கள் அடுத்ததாக கொழும்பு போகும் பிளேனுக்கு அவசரமாகப் போகவேணும் ஏற்கனவே தொண்ணூறு நிமிடங்கள் தாமதம்” பணிப் பெண்ணிடம் கேட்டேன். 

   

  “உங்களைப் போல நிறையப் பேர் இந்தப் பிளேனில இருக்கினம். எல்லாருக்கும் கனெக்ஷன் பிளைட்டுக்குத் தாமதம்தான். உங்கட கனெக்ஷன் பிளைட் வெய்ட் பண்ணும் பயப்பிடத் தேவையில்லை” 

   

  சொல்லியபடியே போனவள் சற்று நேரத்துக்குள் துபாயில் நிரப்ப வேண்டிய போட்டிங் பாஸை எல்லோரிடமும் தந்து நிரப்பச் சொன்னாள். 

   

  துபாய் ஐக்கிய அமீரகத்தில் உள்ள அழகிய நகரம். 1971 களில் ஆங்கிலேயர்கள் வெளியேறும் வரை வெறும் துறைமுக நகராக இருந்த இந்த நகரம் வளைகுடாவில் பெற்றோலிய வளம் குறைந்த இடம். ரியல் எஸ்டேட் மூலம் தன்னையும் உலகின் மிகப்பெரும் சுற்றுலாத் தளமாக நிலைநிறுத்தத் தொடங்கி வெறும் முப்பது ஆண்டுகள்தான் ஆகின்றன.

   

  துபாயில் மன்னர் மட்டுமே எல்லாச் சொத்துக்கும் அதிபதி. மன்னருக்கு எதிராக யாரும் எதுவும் பேச முடியாது. கருத்துச் சுதந்திரம் நிறைய இருக்குதென்பர். ஆனால் அரசுக்கு எதிராக இங்கு யாரும் வாய் திறக்க முடியாது.

   

  நாற்பது வருடங்களுக்கு முன் கள்ளிச்  செடிகள் மட்டுமே அடையாளமாக இருந்த இந்த நகரத்தில் உலகின் உயரமான கட்டிடம், உலகின் பெரிய ஷாப்பிங் மால், களியாட்ட விடுதிகள் என்று வரியே இல்லாத நகரமாக உலகை துபாய் நோக்கி இழுக்க அப்போதைய மன்னர் காரணமாக இருந்தார். அவரின் மகன்தான் இப்போதைய துபாயின் மன்னர்.

   

  துபாய் விமான நிலையத்தில் விமானம் சென்று இறங்கியதும் கைப் பைகளைத் தூக்கிக் கொண்டு பிள்ளைகள் இருவரையும் கையில் பிடித்தபடி ஓட்டமும் நடையுமாக அடுத்த இணைப்பு விமானத்தை நோக்கிப் போனோம். எங்கள் கெட்ட காலம் நாங்கள் போய்ச் சேர்ந்தபோது 

   

  “விமானம் ஏற்கனவே கிளம்ப ரெடியாகி விட்டது இனி உள்ளே அனுமதி இல்லை” 

   

  என்று சொன்னதும் அடுத்து என்ன செய்வது எங்கு போவது எதுவுமே தெரியவில்லை.

   

  “இனி நாங்கள் என்ன செய்யிறது?” 

   

  போடிங் ஏரியாவில் நின்ற பெண்ணிடம் கேட்டேன். 

   

  “இன்னும் கொஞ்ச நேரத்தில மேனேஜர் வருவார் கதையுங்கள்” 

   

  சொல்லிவிட்டு அவள் நகர்ந்து போனாள். நேரம் கடந்து கொண்டே இருந்தது யாரும் வரவில்லை. ஒவ்வொரு இடமாகக் கேட்டு அலைந்து திரிந்து மூன்று மணித்தியாலங்களின் பின்னர் ஒருவாறாக மனேஜரைச் சந்தித்தேன். அவன் ஒரு பாகிஸ்தான் நாட்டவன். ஒரு நிமிடத்துக்குள் அவனுடன் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லி விட வேண்டும். அதற்கு மேல் அவனுக்குப் பொறுமையில்லை. கடகடவென்று நான் சொன்னதும், 

   

  “அடுத்த பிளைட்டில போக ஏற்பாடு செய்யிறேன்” 

   

  இன்னொரு பாகிஸ்தான் நாட்டவரைக் கூப்பிட்டு அரபியில் ஏதோ சொல்லி விட்டு அவனுடன் போகுமாறு எங்களைப் பணித்தான்.

   

  “உங்கள் லாகெட்ஸ் எல்லாம் கொழும்பு போட்டுது. அடுத்த பிளேன் நாளை இரவு பத்து மணிக்கு. அதில சீட் இருந்தால் அனுப்பிறோம். அதுவரைக்கும் நீங்கள் இஞ்சை ஏர்போட்டில நிக்க வேணும்” 

   

  அந்தப் பாகிஸ்தானி சொல்லி முடித்த போது எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. 

   

  “இதில எங்கட பிழை ஒண்டும் இல்லையே நாங்கள் ஏன் இந்த நுளம்புக் கடிக்குள்ள நிக்க வேணும்?” 

   

  “இப்பிடித்தான் எல்லாரும் வருகிறார்கள். போகிறார்கள். இதுதான் நடைமுறை” 

   

  சொல்லி விட்டு அவன் விலகிச் செல்ல முயன்றான். எனக்குக் கோபம் தலைக்கேறியது. 

   

  “அது மட்டும் முடியாது. ரண்டு இரவு அதுவும் சீட் இருந்தால்தான் என்றால்? அப்ப சீட் இல்லை என்றால்? இந்த ஏர் போட்டில என்னால பிள்ளையளை வைச்சுக் கொண்டு ஒரு நிமிஷம் கூட நிக்கேலாது. இந்தா எங்கட பாஸ்போர்ட் இப்பவே எனக்கு அமெரிக்கா திரும்பிப் போகவேணும்.” 

   

  கடகடவென்று ஆங்கிலத்தில் கத்தியபடி எங்கள் பாஸ்போட்டை நீட்டினேன். அதுவரை ஒரு வகையாக அதிகாரத் தொனியில் பேசியவன் எதிர்த்துப் பேசியதும் பாஸ்போட்டைக் கையில் வாங்கி ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினான், 

   

  “ஸாரி வெயிட் பண்ணுங்கோ” 

   

  சொல்லியபடி பாஸ்போர்ட்டைத் திருப்பித் தந்து விட்டு ஆபீஸ் உள்ளே சென்று ஐந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தான். 

   

  “ஸாரி நாளைக்கு இரவு வாற பிளைட்டில ரெண்டு பேர் அடுத்த நாள் காலையில வாற பிளைட்டில ரெண்டு பேர் எண்டுதான் நீங்கள் போகலாம். சீட் இல்லை. எல்லாச் சீட்டும் ஆல்ரெடி புக்ட்”

   

  “அதெப்பிடி? நாங்கள் குழந்தையலோட வந்தனாங்கள் பிரிஞ்சு போக ஏலாது. அதவிட ஏர்போட்டில நிக்கேலாது. சரியான நுளம்புக் கடி”

   

  “ஓகே, நீங்கள் எல்லோரும் ஒன்றாகப் போக வேணும் என்றால், ஒரே வழிதான் இருக்குது. நீங்கள் நாலு பேரும் ஐந்து நாள் துபாயில தங்க வேண்டி வரும். ஒரு வார விசா தந்து உங்களை துபாயில் தங்க அனுமதி தருவோம். உங்களுக்குரிய ஹோட்டல் சாப்பாட்டுச் செலவு எல்லாம் நாங்கள் ஏற்போம். வெளியே போவது ஷாப்பிங் செய்வது என்றால் அது உங்கள் செலவில்தான் செய்யவேணும். உங்கள் அசௌகரியத்துக்கு மன்னியுங்கள். இதை விட எங்களுக்கு வேறு வழி தெரியேல்லை” அவன் சொல்லி முடித்ததும் 

   

  “என்ன செய்யலாம்?” 

   

  என்பதுபோல் திரும்பி மனைவியைப் பார்த்தேன். அவள் முகம் முழுவதும் சோகமாக வைத்தபடி வேறு வழியே இல்லை என்பது போல 

   

  “ஆம்” 

   

  என்று தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள். அந்த நேரத்தில் அவள் மனதுக்குள் ஒரு பட்டாம் பூச்சி பறப்பது எனக்கு மட்டுமே தெரிந்தது.

   

   

  Dubai.jpg


   

   

   

  மிகவும் ஆடம்பரமான ஹோட்டல், மூன்று நேரமும் உயர்தர உணவு வகைகள்.

   

  “அமெரிக்காவில் இருந்து வந்த விருந்தினர்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும்” 

   

  என்று ஹோட்டலில் உள்ளவர்களிடம் சொல்லி வைத்திருந்தார்கள் போலும். என் வாழ்நாளில் அப்பிடி ஒரு ஹோட்டல் அனுபவத்தை கண்டதில்லை. கவனிப்பென்றால் அப்பிடி ஒரு கவனிப்பு. 

   

  எங்கள் வீட்டில் இருந்து ‘மால் ஆப் அமெரிக்கா’ வெறும் பத்து நிமிட தூரத்தில் உள்ளது. பொழுது போக்காகச் சில நேரங்களில் அங்கு போவது வழக்கம். அமெரிக்காவின் பெரிய ஷாப்பிங் மால் அது. இன்று உலகின் பெரிய ‘துபாய் ஷாப்பிங் மால்’ இல் ஒரு ‘காஃபீ’ வாங்கி மனைவிக்குக் கொடுத்தேன்.

   

  “நான் கேட்டது உங்கட காதில விழுந்துதோ இல்லையோ எமிரேட்ஸ் காரனின்ர காதில நல்லாய் விழுந்திருக்குது” காஃபியை உறிஞ்சியபடியே மனைவி புன்னகைத்தாள். 

   

  நான்கு நாட்களுக்குள் துபாயின் மூலை முடுக்கெல்லாம் சுற்றிப் பார்த்தாகி விட்டது. பிள்ளைகள் இருவரும் தங்கள் காமெராக்களில் குறைந்தது ஆயிரம் போட்டோவுக்கு மேல் எடுத்திருப்பார்கள். ‘மீனா பஜார்’, ‘சைனா மால்’ என்று எல்லா இடத்திலும் வாங்கிக் குவித்த உடைகள், பொருட்கள் என்று இரண்டு பெரிய லாகேட்சுகள் புதிதாகச் சேர்ந்திருந்தன.

   

  ஐந்தாவது நாள்க் காலையில் கொழும்புக்குப் போவதற்கு ஆயத்தமாகக் குளித்து வெளிக்கிட்டு நின்றோம். ஏர்போட்டில் இருந்து வந்த வானின் எல்லா லாகேச்சுகளையும் தூக்கி வைத்து விட்டுத் திரும்பியபோது,

   

  “அன்புள்ள அமெரிக்க விருந்தாளிகளே! அடுத்தமுறை வரும்போதும் எங்கள் ஹோட்டலுக்கே வாருங்கள்” 

   

  கையசைத்தபடி நின்றார் ஹோட்டல் மேனேஜர். ஹோட்டலில் வேலை செய்யும் அனைவருக்கும் நன்றி சொல்லி விடைபெற்றபோது, புதிதாக முளைத்திருந்த இரண்டு லாகேட்சுகளும் சீட்டுக்கு அடியில் இருந்து உருண்டு வந்து காலில் தட்டுப்பட்டன. 

   

  “துபாய்க்காரன் உண்மையிலயே கெட்டிக்காரன்தான். இலவசமாய்க் ஹோட்டல் தந்து, மூவாயிரம் டொலர் கிரெடிட் கார்ட் பில்லையும் ஏத்திட்டான்” வலுக்கட்டாயமாகச் சிரித்தபடி மனைவியைப் பார்த்துச் சொன்னேன். 

   

  “அடுத்தமுறை இலங்கைக்குப் போகேக்கை சிங்கப்பூரில ரெண்டு நாள் தங்கிப் போற மாதிரி ரிக்கெற் போடுங்கோ” என்றாள் பதிலுக்கு அவளும் புன்னகைத்தபடி. 

   

  http://www.thiyaa.com/2020/09/blog-post_23.html?fbclid=IwAR3Wvsxc1tnjXFsd-t_0_ndF43rj3WevnVYcuqssbCZWSd7MEQSpo4YNxnI

  • Like 4
  • Haha 2
 5. On 4/8/2020 at 05:02, அபராஜிதன் said:

  “பணம் தந்தத்துக்கு அழுவல தம்பி, காலைல ஒருத்தர்கிட்ட, சார் வேலைல இருந்து விரட்டிட்டாங்க சார்னேன், சில்லறை இல்லப்பானு சொல்லிட்டார். அப்பத்தான் புரிஞ்சது, இந்த ஊர்ல உதவினு கேட்டாலே பிச்சைக்காரனு நினைச்சுக்குவாங்கன்னு, ஆனா கேட்காமலியே புடிச்சு நிறுத்தி நீங்க காசு தந்தீங்களா, அதான் அடக்க முடியாம அழுதுட்டேன்,

  வாழ்க வளமுடன்! 

   

  நான் சென்னையில் இலக்கியப் போராளி எஸ்.பொ அவர்களிடம் வேலை பார்த்த நாட்களில் பெரம்பூருக்கும் நுங்கம் பாக்கத்துக்கும் இடையில் இரண்டு தொடர்வண்டி எடுக்க வேண்டி இருந்தது. அந்த நாட்களில் இதுபோல பலரை நான் சந்தித்திருக்கிறேன். அப்போது நானும் ஓர் அகதி.

 6. "பிலாக்கணம் பூக்கும்  தாழி" படிச்ச நாளில் இருந்து நான் அகரமுதல்வனின் தீவிர ரசிகனாகிவிட்டேன். இந்தக் கதை இன்னும் ஒரு படி மேலே! பகிர்வுக்கு நன்றி. 

 7. On 27/8/2020 at 02:23, புரட்சிகர தமிழ்தேசியன் said:

  குழல் மற்றும் யாழின் இசையை விட மழலைச்சொல் இனிமையானது என்ற நடப்பியல் எதார்த்த வாழ்வியல் கூறுகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

  படிக்கப் படிக்கத் தேன்சுவை. ஐங்குறுநூறு எங்கள் வாழ்வியல் தத்துவம் 

 8. On 3/9/2020 at 12:58, பசுவூர்க்கோபி said:

  நாங்கள் இங்கு வெறும்

  பேணியே

  தேடுவோம் வெளியே 

  இல்லை

  எம்முக்குள்ளவே 

  இறைவனை.. 

  "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்", "உள்ளம் பெருங் கோயில்" 

 9. On 18/9/2020 at 03:04, திரு said:

  ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்
  ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்
  அன்று நீ காணாமற் போனாய்..
  சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்
  சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்தது
  நீ இறந்திருக்கலாமென
  பலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்
  காலமும் ஓடிப்போயிற்று
  வழமை போலவே தியாகங்களும்
  நினைவுகளும் எமக்குள்
  மங்கிப்போயின..

  சுரணை அற்ற வாழ்வுக்காக
  தொலை தேசத்திற்கு நான்
  வந்திருந்தபோது
  பனிப் பொழிவினிடையே
  உன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!
  அது நிச்சயமாக நீதான்
  அதே கூர் மூக்கு,தெத்திப்பல்
  ஆயின்..
  நீ இறக்கவில்லை..!
  ஆனால் இறந்திருந்தாய்
  நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்
  காலைச் சவட்டியபடி,

  கல்லூரிக் காலங்களில்
  எப்படி எல்லாம் கலகலப்பாய்
  இருந்தாய்..! இப்போதோ
  பேச்சுக் கொடுத்தாலும்
  பெரும் மெளனம் காக்கின்றாய்..
  முட்கம்பிகள் உன் குதத்தைக்
  கிழித்த போதும்
  மின்சாரம் உன் குறியை
  எரித்த போதும்
  கேள்விகளாலும் கம்பிகளாலும் நீ
  துளையிடப்பட்ட போதும்
  நீ காட்டிய அதே மெளனம்
  இது கூட நல்லது தான் நண்பனே

  ஒருவேளை
  வதையின் போது நீ 
  வாய் திறந்திருந்தால்
  ஐம்பது குடும்பமாவது
  அலறி இருக்காதா..?
  தேவை அற்ற இடங்களில்
  நீ அதிகம் பேசி இருந்தாலும்
  தேவையான இடத்தில் நீ
  மெளனமாகத்தான் இருந்திருக்கிறாய்
  நல்லது 
  போய்வருகிறேன் என் அன்பு நண்பனே..!

  இனி நீ காணப்போகிற உலகும்
  கடக்கப்போகிற மனிதர்களும்
  ஒவ்வொரு தியாகங்களைப் பற்றியும்
  இப்போது 
  பேசத்தொடங்கி இருப்பதைப் போலவே
  உன்னைக் கடந்து செல்கின்ற போதும்
  அவர்கள் பேசிக்கொள்வார்கள்

  இவன்
  வேறு வேலை அற்றவன்
  வாழத் தெரியாதவன் 
  என்றும்..

   

  - திரு.திருக்குமரன் 

  மனது கனக்கிறது 

 10. 2 hours ago, shanthy said:
  விரைவில் நாம் சந்திப்போம் ஒன்றாக வாழும் நாளை எமக்கு காலம் தருகிறதோ இல்லையோ நாங்கள் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வோம். 
   
  அன்பே இனிமையான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
   
  அன்புடன் அம்மா சாந்தி நேசக்கரம் 
  15.07.2020.

  வாழ்த்துகள்!

 11. அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பவன் மகாத்மா ஆகிவிடலாம். ஆனால் ஒரு போதும் திலீபன் ஆக முடியாது.

  2 minutes ago, பையன்26 said:

  சிங்க‌ள‌வ‌ன் எலும்பு துண்டு ந‌க்கி பிழைக்கும் எச்சைக‌ள் வாயை அட‌க்கி வாசிப்ப‌து தான் அவ‌ருக்கு ந‌ல்ல‌ம் ,

   

 12. On 15/9/2020 at 11:53, ரஞ்சித் said:

  ராசா அண்ணையின் திருமணமோ அல்லது திருமண முறிவோ அல்லது வன்னிக்கு அவர் திரும்பிச் சென்றதோ நான் அங்கிருக்கும் வரையில் அறியாதது.

  நான் சிட்னிக்கு வந்து 5 வருடங்களின் பின்னர் எனது நண்பனின் சகோதரியை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதுதான் எனது நண்பன் பற்றியும், ராசா அண்ணை பற்றியும் அறிந்துகொண்டேன். சில நாட்களிலேயே எனது நண்பனுடன் தொலைபேசியில் நீண்டநேரம் உரையாடினேன், ராசா அண்ணைபற்றிக் கேட்டபோது, "அவர் வன்னியில மச்சான், பொடியளோட இருக்கிறார் எண்டு நினைக்கிறன்" என்று சொன்னான். 

  வன்னியில் இறுதியுத்தக் காலத்தில் ராசா அண்ணை தமிழீழ தொல்பொருள் அமைப்பில் இருந்திருந்தார். அவர் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதைக் கண்ணுற்றவர்கள் அவரது பெற்றோருக்கு அறியத் தந்திருந்தார்கள். அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே நண்பனின் வீட்டார் நம்பிக்கொண்டிருந்தார்கள். 

  ஆனால், தெய்வாதீனமாக, தடுப்பு முகாமிலிருந்து வெளியேற அவருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. தான் வெளியேறிவிட்டதை நண்பனுக்கு அறிவித்துவிட்டு மீண்டும் அக்கராயனுக்கே சென்றுவிட்டார். அவர் தப்பிவிட்ட செய்தி அவரது தங்கைமூலம் எனக்கு அறியக் கிடைத்தது. அவரது உடல்நலம் பற்றிப் பேசிவிட்டு, "தலைவர் பற்றித் தெரியுமா" என்று கேட்டபோது, "அதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை" என்று சொல்லிவிட்டு அமைதியானார்.

  சுமார் 16 வருடங்களுக்குப் பின்னர் தாயகம் திரும்ப எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அங்குசென்று சந்திக்கப்போகும் மனிதர்களில் ராசா அண்ணை முக்கியமானவர் என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆரியகுளத்திற்கு அருகிலிருக்கும் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்றினை நடத்திக்கொண்டிருந்த ராசா அண்ணையை இரவு 8 மணிக்குச் சந்தித்தேன். அதே புன்முறுவல், அதே உபசரிப்பு, அதே கனிவு, ஆனால் உடல்மெலிந்து, வயதானவர் போன்று தெரிந்தார். "எப்படி இருக்கிறியள் அண்ணை" என்று கேட்டபோது, "ஏதோ இருக்கிறம், வாழ்க்கை எனக்கெண்டு என்ன வைச்சிருக்கிதோ, அதைச் செய்துகொண்டிருக்கிறன்" என்று சொன்னார். அவருடன் பேசிக்கொண்டே அவரின் மோட்டார் சைக்கிள் நிலையத்தைப் பார்வையிட்டேன். பல இளைஞர்கள், படித்துவிட்டு வேலையில்லாமல்த் திண்டாடியவர்களை தன்னுடன் சேர்த்து தன்னால் முடிந்த வேலைகளைக் கொடுத்திருந்தார். குறைந்தது 8 அல்லது 10 பேர் வரையில் இருக்கும், சுறுசுறுப்பாக  , மகிழ்வுடன் வேலைசெய்துகொண்டிருந்தார்கள். கட்டைக்கை சேர்ட்டும், வேட்டியும் அணிந்து, மிகச் சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த  அவரைப் பார்க்கும்போது அனுதாபமும், கூடவே கவலையும் ஏற்பட்டது. ஆனால், அதுதான் அவரது வாழ்க்கை. வாழ்வைத் தொலைத்து, பிள்ளைகளைப் பிரிந்து, மனைவியாலும் உறவுகளாலும் ஒதுக்கப்பட்டு, ஊரில் உதவி தேவைப்பட்டவர்களை அரவணைத்து இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார். 

  எனக்குக் கிடைத்த அந்த 30 நிமிட நேரத்தில் அவருடனான எனது பழைய நினைவுகளில் சிலவற்றைப் பகிர்ந்துவிட்டு மனமில்லாமல் பிரிந்து வந்தேன்.

  நான் எனது வாழ்நாளில் சந்தித்த அற்புதமான மனிதர்களில் ராசா அண்ணைக்கு என்றும் ஓரிடம் இருக்கும். புத்தகப் படிப்பே அறிவெனும் மாயையினைக் களைந்து, மனிதனின் அனுபவங்களும், அவனது சிறப்பான குணாதிசயங்களும் உயரிய மனிதர்களைத் தோற்றுவிக்கும் என்பதற்கு ராசா அண்ணை ஒரு உதாரணம். 

  அனுபவங்கள் நல்ல பாடங்கள். நல்ல கதைகளுக்கும் மூலமாக அமைகின்றன.

  • Like 1
 13. 7 hours ago, ragaa said:

  சென்ற் leader Mitch McConnell ஒபமாவின் பதவிக்காலம் முடிவதற்கு 8 மாதங்களுக்குமுன் நீதிபதி அன்டனின் ஸகாலியாவினிடத்துக்கு நியமிக்க முறபட்டபோது எதிர்த்தவர் எப்படி இப்ப ஆதரவு தெரிவிப்ப்பார். அது எந்த அளவுக்கு moderate GOP சென்ற்றர்களின் ( ரொம்னி ...) அதரவைப்பெறும். 

  இவரது இழப்பு ரம்புக்குத்தான் சாதகம். தனக்குப் பிடித்த ஒருவரை அமர்த்த வாய்ப்பிருக்கு 

 14. அவரது பேச்சுக்களும், நடவடிக்கைகளும் அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் முக்காடு போட வைத்தாலும் உலகம் அதனால் ஏகப்பட்ட நன்மைகளை அனுபவித்து வருகிறது😃

 15. ஆமந்துறு என்னதான் உலக அறிவில்லாமல் கதைச்சாலும் சீனாவின் காலனியாக மாறும் என்றான் பார் அங்கதான் நிக்கிறான். 😀 உண்மை 

  • Haha 1
 16. 11 minutes ago, Nathamuni said:

  இதென்ன கரைசல் தீயா....

  உது சாப்பிட்டு திரி... இப்படி தான் அடிபட்டு சாப்பிடுவம்...

  நீங்கள் தனித்திரி தொடங்கி பதிய வேண்டியதை சம்பலுக்க பதியக்கூடாது....😁😁😁

   

  பழக்கதோஷத்தில் பேசி விட்டேன். நீங்கள் தொடருங்கள்!😀

  பழக்கதோஷம் - எங்கே போனாலும் இலக்கியம் பற்றியே பேச சொல்லுது.

   

   

  save.jpg

   

 17. சிங்களத் தலைமைகள் ஆழ ஊடுருவி வேலை செய்கிறது. காலங்காலமாய்த் தமிழனைக் கொண்டே தமிழனுக்கு ஆப்பு வைக்கும் வேலைகளில் கச்சிதமாக ஒன்று கூடிச் செயற்படுகிறார்கள். இந்தத் தீர்ப்பு ஒன்றை வைத்தே வருங்காலத்தில் வரும் எல்லா நிகழ்வுகளுக்கும் தடை வைக்கப் போகிறார்கள்.   

 18. உங்கட தொல்லை தாங்க முடியேல்லை. சாப்பாட்டை தந்தால் அனுபவிச்சுச் சாப்பிட வேணும் ஆராயக் கூடாது. எனக்குச் சமைக்க அவ்வளவுக்கு வராது. ஆனால் நிறைய வாசிப்பேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர் அ.முத்ததுலிங்கத்தின் "பார்வதி" சிறுகதையில் இருந்து ஒரு பகுதி, படித்துப் பாருங்கள். 

   

  save.jpg

 19. 6 hours ago, Kapithan said:

  கெதியில இலங்கையில் அரசியல் கொலை ஒன்று நடப்பதற்கான பிள்ளையார் சுழியை சிறிதரன் போடுகிறார் போல தோன்றுகிறது.. ☹️

  இராசபக்சேக்களின் அடிமடியில கை வைத்தால் பார்த்துக்கொண்டா இருப்பார்கள் 🤔

  உண்மை. Royal Lamborghini Aventador White Car PNG Image - PurePNG | Free transparent CC0 PNG Image Library

 20. இஞ்சை அமெரிக்காவில போற போக்கைப் பாத்தால் இப்பவும் எங்கட வாயால வட சுடுறவருக்குத்தான் திருப்பியும் வாய்ப்புப் இருக்குது போலத் தெரியுது. இவாவை கனபேருக்கு இந்தியன் எண்டு தெரியாது. கரீபியன் கறுப்பினத்தவர் என்றே வெள்ளை இனத்தவர் பலருக்குத் தெரியும். கிழக்காசிய குடியேற்றவாதிகள் மற்றும் வடநாட்டு இந்தியர்கள் இங்கு ஒருவகையான எதிர்ப்பரசியல் மனோ நிலையிலேயே உள்ளனர். இவர்கள் ஜனநாயகக் கட்சியை விரும்பக் காரணம் என்னவென்று விளங்கவில்லை. தாங்களும் பழுப்பு நிறம் என்ற மனோநிலையோ? 

  போன எலெக்சனில எனக்குத் தெரிஞ்ச எங்கட சனம் கனபேர் வாக்குப் போட வரேல்லை. உண்மையில போன எலெக்சனில இந்த அடி முட்டாள் வெண்டதுக்கு ஒருவகையில் கறுப்பினத்தவர்களின் மற்றும் குடியேற்றவாசிகளின் அயண்டையீனமும் காரணம் எனலாம்.

  • Like 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.