theeya

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  287
 • Joined

 • Last visited

Everything posted by theeya

 1. சாந்தி, நிலாமதி இருவரின் கருத்துக்கும் நன்றி. இது ஒரு உண்மையில் நடந்த கதை. இது கதையல்ல நிஜம்.
 2. இப்பிடியெல்லாம் வெளிநாடுகளில் அலைய வேண்டியதுதான் தமிழனின் தலையெழுத்து. எலிவளையானாலும் தனிவளை வேணும்.
 3. நிலாமதி, சாந்தி உங்கள் இருவரின் கருத்துக்களுக்கும் நன்றி.
 4. தை பிறந்தால் வழி பிறக்கும் இது பழையமொழி(பழமொழி) புது மொழி தை பிறந்தால் வலி பிறக்கும். இதுதான் எனக்கு சரயெண்டு படுகிறது.
 5. நம்புங்கள்...இது தூரப்புள்ளியல்ல.. கண்ணை மறைக்கும் காட்டாறு... நாங்களும் அதையே நினைக்கிறோம்.
 6. அகதியாகி அல்லல் பட்டு அலைந்த போது அரை றாத்தல் பாணுக்கு அஞ்சு மணிநேரம் வரிசை கட்டி நின்ற சோகக்கதை சொல்லிடவா? இது தமிழனுக்கென்று எழுதப்பட்ட தலைவிதியோ என்னவோ இன்னமும் முடிந்தபாடில்லை. காலந்தான் பதில் சொல்ல வேண்டும். உங்கள் கருத்துக்கு நன்றி ஜீவராஜ்
 7. காலத்துயர் காலத்தைச் சபித்தபடி அதைக் கட்டித் தழுவினாலும் அது நகர்ந்து கொண்டேதானிருக்கும். ஏனோதான் அவன் பிரிந்த நேரம் அவனுக்குள் அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. தனிமை உணர்வைச் சதா புதுப்பித்துக்கொண்டே இருந்தது... உலகின் ஏதோ ஒரு மூலையில்... எங்கோ ஒரு நாட்டில்... தன்னுடைய வாழ்வு இப்படிப் போகுமென்று அவன் கனவு கூடக் கண்டதில்லை. ஒரு காகத்தின் கரைதல்... சேவலின் கூவல்... குருவிகளின் சங்கீத ஓசை... குயில்களின் இனிய பாடல் எதுவுமேயற்ற ஒரு பாலைவனச் சிறையில் அவனுடைய வாழ்வு... வெளிச்சமென்றால் என்னவென்று புரியாத யன்னலற்ற நான்கறைச் சுவரினுள் ஒவ்வொரு இரவுகளும் பேரிரைச்சலாக விரட்ட... மௌனப் பூதங்களுடன் அவனுடைய வாழ்வு... இனம்புரியாத ஒரு மரணப் பீதியுடன் வேற்று நாட்டுச் சூழலில் தனக்குத் தெரிந்த ஆங்கில பாசையில் பேசி... கொடுப்பதை உண்டு... குடித்து... உறங்கி... கண்ணீர் வடித்து காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தான். வாழ்க்கையைப் பல கோணங்களினூடாக பார்த்த அவனுக்கு இது ஒன்றும் புதிய விடயமில்லைத்தான் ஆனாலும் இதுவரை நிகழ்ந்த எல்லாத் துன்ப துயரங்களுக்கும் அருகிலிருந்து பங்கெடுத்த ... தோழ் கொடுத்த அவன் குடும்பம் இப்போது அவனுடன் இல்லை என்பதும் அவன் எந்தக் குடும்பத்துக்காக இத்தனை காலம் படாத துன்பமெல்லாம் பட்டானோ அவர்களை ஆளாக்க முடியவில்லையே என்ற கவலையும் அவன் மனதைக் கனமூட்டிக்கொண்டிருக்க இதய சுமை தாங்காது பாரம் தலைக்கேறியது. ----- ------ ------- இடம்பெயர்ந்து சிறு குடிசையில் வசித்த போதும் விறகு வெட்டி குடும்பத்தை பொன்போல் காத்து வந்தார் கணேஸ். மூத்த மகன் நன்றாகப் படித்த போதும் இளையவன் சீலனும் மகள் செல்லாவும் நன்றாகப் படிக்கவேண்டுமென்று படாத பாடெல்லாம் பட்டு உழைத்து வந்தார். காலச்சுழற்சியில் மகள் செல்லாவும் போராட்டத்தில் இணைந்துவிட ஆடிப்போன கணேஸ் மூத்தமகன் சுயனை உடனடியாக வௌிநாடொன்றுக்கு அனுப்பும் விருப்பம் கொண்டவராய்... உறவுகளிடம் உதவி கேட்டு கூடவே தான் சேமித்த பணத்தையும் முதலிட்டு கொழும்புக்கு அனுப்பினார். நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. இன்று போகலாம் நாளை போகலாம் என ஏஜன்ஜி சொல்லி காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தான்... இரவு பத்தைத் தாண்டியிருந்தது... தாய் தொலைபேசி அழைப்பில் இருப்பதாக வந்த செய்தி கேட்டு ஓடியவன் திகைப்புடன் 'அம்மா... என்ன இந்த நேரத்திலை' என்றான். மகனின் குரலைக் கேட்டதும் மறுமுனையில் தாய் விமலா. 'ஐயோ மகனே...' அழத்தொடங்கினாள். அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. விக்கிப்போய் வாயடைத்து நின்றான். 'அப்பா விறகு வெட்ட போன இடத்தில...' 'இடத்தில... என்னம்மா சொல்லு...' 'மிதிவெடிலை கால் ஒண்டு...' 'கடவுளே........................' கண்கள் இருண்டு அவனுக்குள் ஏதோவெல்லாம் செய்யத் தொடங்கியது. இனம் புரியாத பீதி விரட்டியது. 'அம்மா அப்ப உடன நான் வாறன்...' 'இல்லையப்பன் நீ வரவேண்டாம் ... இனி எங்கடை வாழ்க்கை உன்ரை கையிலைதான்....' அவளால் எதுவுமே அதற்கு மேல் பேச முடியவில்லை. அவனுக்கு இரவு முழுவதும் நரகமாக விளங்கியது. அதிகாலையில் இருளுடன் இருளாக ஏஜன்ஜி வந்தான். எல்லோரும் அவனுடன் போகத் தொடங்கினர். அத்தனையும் இளைஞர்கள்... 'களவாக இத்தாலி போக கப்பல்தான் சிறந்தவழி' என்ற ஏஜன்ஜியின் பேச்சினை நம்பி வௌிக்கிட்டு விட்டனர். கப்பல் தள்ளாடித் தள்ளாடி பயணத்தைத் தொடர்ந்தது. ஒருநாள்... இரண்டாம் நாள்... இப்படி இடைநடுவில் பிடிபட்டு அந்நிய நாட்டுச் சிறையில் இப்படி தன்னுடைய வாழ்வு அடைபட்டு போகுமென்று அவன் எப்படி நினைத்திருப்பான். ----- ----- ----- இப்போது அவனுடைய கனவில் அடிக்கடி அம்மா வந்து போகிறாள். அப்பா ஊன்று கோலுடன் நடக்க... அம்மா விறகு வெட்டி குடும்பத்தைக் கொண்டு நடத்துகிறாள். தம்பி சீலன் படிப்பை இடைநடுவில் விட்டுவிட்டு அவளுடைய வலது கையாக... தங்கை செல்லாவும் எங்கே... எப்படி இருக்கிறாளோ... நீளிருள் பொழுதுகளில் கூட இதுவே சிந்தனையாகச் சோர்ந்திருப்பான். காலம் உருண்டோடியது தன்மீதே அவனுக்கு வெறுப்பாக... எல்லாவற்றையும் மறக்க படாத பாடெல்லாம் பட்டுக்கொண்டிருந்தான்...தனக்
 8. அது ஒரு சில வாரமாக ......... நாட்களாக......... இருக்க கூடாதா ? லட்சோப லட்சம் கோடானு கோடி மக்களின் இன்றைய ஆசையும இது தான்.
 9. நாட்டுக்குப் பாரமாக நடு வீட்டில் அலையான் மதிப்பற்ற பயலாக மதில் மேல் குந்தான் படத்தைப் பார்த்துப் படிப்பான் பவுடர்ப் பொடிக்கு மயங்கான் உலகம் போற்றும் சயன்ஸு தெரியாவிட்டாலும் உயிர்கள் கொல்லும் சைலன்ஸு அறியான் கவிதை நல்லாயிருக்குது
 10. யாழ்இணைய உறவுகளே என்னை வரவேற்று உபசரித்தமைக்கு பணிவான நன்றி. "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" நல்ல காலம் என்னை அனிச்சம் பூவாக வாட விடாமல் முகம் மலர வைத்தமைக்கு மீண்டும் நன்றி.
 11. வன்னியில் இருந்து ஒரு மடல் அன்புள்ள அப்பாவுக்கு உங்கள் பாசத்துக்குரிய பத்து வயது மகளின் கண்ணீர் கடிதம் இது… கனடாவில் இப்ப என்ன நேரமெண்டு எனக்குதெரியாதப்பா ஆனால் எங்களுக்கு இப்ப கெட்ட நேரந்தானப்பா… இடிமுழக்கம் கேட்டதுண்டு இப்படி வெடிமுழக்கம் கேட்டதில்லையப்பா… குண்டுச் சத்தம் காதைப் பிழக்கிறது அப்பா… சமாதான காலத்தில் உங்கள் பசுமையான நினைவுகளைத் தந்தீர்கள் அப்பா இனி நீங்கள் வரும்போது நாங்கள்… எங்கே… எப்படி..இருப்போமா... அல்லது… நெஞ்சு கனக்கிறது அப்பா… பள்ளிக்கூடமெல்லாம் சனத்திரளால் நிரம்பி வழிகிறது. காலைக்கடன் கழிக்கக்கூட இடமில்லையப்பா… நடந்து நடந்து என் பிஞ்சுக்கால்கள் மரத்துவிட்டன அப்பா. அடுத்த அடி எங்கு விழும் அடுத்து நாங்கள் எங்கு போவோம் தெரியாது விழி பிதுங்குகிறோமப்பா… அப்பா நீங்கள் முதல்முறை வந்தபோது நட்ட தென்னைமரம் குலை தள்ளியபோது நாங்களும் நடைப்பிணமாக… இனி இழப்பதற்கு எதுவுமில்லை அப்பா…. மரத்தடியின் தறப்பாளில்தான் இப்ப எங்கள் வீடப்பா அம்மாக்கு வந்த மலேரியா இப்ப பரவாயில்லையப்பா ஆஸ்பத்திரியிலை மருந்தில்லை போகவும் முடியலை செல்லடி அகோரம் ஆஸ்பத்திரியும் அகதியாகி அரும்பொட்டு காணிக்குள்ள… அப்பா நானிப்ப பழஞ்சோறு சாப்பிடவும் பழகிட்டனப்பா… குப்பைக் கீரையும் சோறும் சம்பலும் நல்லாய்தான் இருக்கிறதப்பா பசி வயித்தை குடையும்போது ருசி தேவையில்லை தானேயப்பா… அப்பா ஐ.நா என்டு ஒரு அமைப்பிருக்காம் உங்களுக்கு பக்கமெண்டால் ஒருக்கால் கதைச்சு பாருங்கோவன் போன வெள்ளைக்காரனையும் சிலுவைக் கொடியையும் வன்னிக்கு அனுப்பச்சொல்லி முடிஞ்சால் ஒரு மனுக் குடுங்கோவன் அப்பா… தவிச்சவாய்க்கு தண்ணி குடுக்கிறதும் பசிச்ச வயிறுக்கு பழஞ்சோறாவது போடுறதும் புண்ணியந்தானேயப்பா…
 12. மோகன் அண்ணா எனது பெயரை தமிழில் தியா என்று மாற்றி விடுவீர்களா?.
 13. சொந்த மண்ணின் பெருமைகளை சுவையுடனே சொல்ல என் நா எப்போதும் தடுத்ததில்லை கிட்டிப் புள்ளடித்து கிளித்தட்டு மறித்து எட்டியெட்டி நின்று கெந்தித்தொட்டு விளையாடி -எம் செம்மண் பூமியிலே பட்டகதை சொல்லிடவா? கன்னியம்மன் கோயிலிலே காரிருள் பூசைவேளையிலே எம் சுட்டிப் பருவமதில் கள்ளன் பொலிஸ் விளையாடி விழுந்துடைபட்ட கதை சொல்லிடவா? அகதியாகி அல்லல் பட்டு அலைந்த போது அரை றாத்தல் பாணுக்கு அஞ்சு மணிநேரம் வரிசை கட்டி நின்ற சோகக்கதை சொல்லிடவா? புழுத்த பயற்றையும் உழுத்த உழுந்தையும் சோற்றுக் குதவாத அரிசியையும் அகதிக்கென்று தந்திடவே அதை கை கட்டி நின்று வாங்கியுண்ட கதை சொல்லிடவா? செம்மணி தாண்டி வந்து கிளாலிக் கரையினிலே மழை நீரை குடைபிடித்து மடிச்சீலை அதில் நனைத்து அடிநாக்கில் பிழிந்து விட்டு தாகம் தணித்த அந்த தவிப்புக் கதை சொல்லவா? தமிழனுக்கு தோழ் வலிமையுண்டு தோழமை உணர்வுண்டு விரைவில் மீண்டு புது யுகம் படைக்கும் வெறியுண்டு தமிழனாய் வாழ்வோம் தலை நிமிந்து நிற்போம்
 14. இவ்வளவு பேரும் என்னை வரவேற்று உபசரித்தமைக்கு எனது நன்றிகள்
 15. உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.இப்ப சகலரையும் பொதுவான பெரும் வலி சூழ்ந்து கொன்டதால் உங்கள் காதல் வலி க்கு கருத்து எழுதாமல் விட்டிருக்கலாம். சஜீவன் , உங்கள் கருத்து சரியானதுதான் இது எனது முதல் படைப்பு தொடர்ந்து தாயகம் பற்றிய படைப்புக்களை நான் தருவேன். நிலாமதி உங்கள் கருத்துக்கும் நன்றி
 16. அழுகின்ற பிள்ளைக்கு கொடுக்க உணவில்லை.. குளிரைத் தாங்கிட போதிய உடுப்பில்லை.. விழுகின்ற குண்டுகளின் வேகத்தை பொறுத்தேஇ அடுத்த நிமிடங்கள் உயிர்வாழ்கிற நிலை.. எங்கெல்லாம் குண்டுகள் விழுகின்றனவோ அங்கெல்லாம் அழுதபடி தமிழ்த் தாய்மார்கள்... இன்றைய நிலையை அப்படியே சொன்ன கவிதை வரிகள் தரமான, காலத்தின் தேவை அறிந்த படைப்பு இது....
 17. வாருங்கள் தீயா வந்து கலக்குங்கள் நன்றி புஸ்பவிஜி வருக தியா ..(.தீயா ) ...உங்கள் வரவு நல் வரவாகுக . தொடர்ந்து இணைந்திருங்கள். உங்கள் ஆக்கங்களை தருக. நிலாமதி உங்கள் ஆதரவுக்கு நன்றி
 18. வணக்கம் நான் தியா. இதுவரை காலமும் வெளியில் இருந்து யாழ் இணையத்தை பார்ப்பதுடன் சரி. இன்றிலிருந்து உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். இந்த நேரத்தில் என்னையும் உங்களில் ஒருவராக இணைத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்……
 19. காதலின் வலி நீண்டிருந்த கடற்கரை மணல் வந்து கரையை தொட்டு விட்டு மீளும் அலை கடலை அள்ளி தின்று ஏப்பம் விடத் துடிக்கும் வானம் கடலுடன் கைகோர்த்தபடி கட்டித் தழுவியது நடுக்கடலில் தவிக்குது துடுப்பிழந்த ஒரு படகு கரைசேரும் ஆவலுடன் காதலில் விழுந்த என் இதயம் போல - தியா -
 20. இடப்பெயர்வின் வலியை அப்படியே சொன்ன கவிதை வரிகள் சூப்பர் - தியா -