Jump to content

theeya

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    525
  • Joined

  • Last visited

Posts posted by theeya

  1.  

    12 hours ago, குமாரசாமி said:

    இணைப்பிற்கு நன்றி தீயா. 👍🏼 🙏🏼

    நன்றி 

    10 hours ago, நிலாமதி said:

    பகிர்வுக்கு நன்றி தியா .ஒலியின் அளவு போதாமல் இருக்கிறது . உங்கள் ஒலிப்பேசி (Mic )வேலைசெய்யவில்லையா ?

    நன்றி, அடுத்த முறை சரி பார்க்கிறேன் 

    6 hours ago, தமிழ் சிறி said:

    காணொளி  பகிர்விற்கு நன்றி,  தியா.
    காணொளிகள்  தொடராக வரும் போலுள்ளது. கேட்க ஆவலாக உள்ளோம்.

    அப்படித்தான் நினைக்கிறேன், பார்க்கலாம், ஆதரவுக்கு நன்றி

  2. இச் சிறிய பறவை இப்போது,
    நீல வானத்தைப் பார்க்கிறது.
    முன்போல் அதனால் வானத்தை இன்னும்,
    முழுமையாகச் சொந்தம் கொண்டாட முடியவில்லை.

    இப்பறவையை இப்போது யாரும் பார்க்க மாட்டார்கள்.
    இப்போது இதனால் அரிதாகவே பறக்க முடிகிறது.
    அதன் உடைந்த சிறகுகளை சரிசெய்ய,
    அங்கு யாரும் வரமாட்டார்கள்.

    ஒரு காலத்தின் சுதந்திர பறவை இது!
    காற்றின் மிதப்பில்,
    வானத்தை உரிமை கொண்டாடியபடி,
    மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி மிதந்தது.

    -தியா-
    May be a drawing of bird

    • Like 8
  3. On 20/4/2022 at 08:58, நிலாமதி said:
    காலத்துயர் மறந்து,
    ‘தமிழா நீயும் போராட வா’ என்றால்,
    எதை நாம் மறப்போம்?
    எப்படி நாம் வருவோம், கொடிபிடிக்க உன்னுடன்?   
     
     அழகாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றியும் பாராட்டுக்களும். 

     

    On 20/4/2022 at 10:32, ஈழப்பிரியன் said:

    அதுவும் சிங்ககொடி பிடிக்க.

     

    On 20/4/2022 at 09:19, suvy said:

    நன்றாக உறைக்கும்படி சொல்லிய அருமையான கவிதை .....!  👍

    நன்றி theeya .....!

     

    On 20/4/2022 at 09:19, suvy said:

    நன்றாக உறைக்கும்படி சொல்லிய அருமையான கவிதை .....!  👍

    நன்றி theeya .....!

     

    On 20/4/2022 at 09:12, தமிழ் சிறி said:

    உச்சியில் சுடும் படியாக, நச்சென்று... நாலு கேள்வி கேட்ட, கவிதை. 

     

     

     

     

    மிக்க நன்றி 

  4. May be an image of one or more people, people standing, crowd and roadஎச்சரிக்கைக் காட்சிகளால்,
    சிறகுகள் வெட்டப்பட்டு,
    நசுக்கப்பட்டபோதும்,
     
    எங்களை அடக்கவென்று,
    வெறுப்பின் மேலாதிக்க விஷ வன்மங்கள்
    கொட்டி வரையப்பட்ட,
    சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்ட போதும்,
     
    நித மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய்,
    குற்றமேதுமின்றி இன்றுவரை பலர்,
    சிறைவாயிலை நிறைத்துக்கொண்ட போதும்,
    எங்களுக்கு எதிராக அவர்களின் கதவுகள்,
    இன்னும் மூடப்பட்டே இருக்கின்றன.
     
    தொலைந்துபோன தன் பிள்ளையை,
    கைதுசெய்யப்பட்ட தன் தந்தையை,
    கையளிக்கப்பட்ட தன் தமையனை,
    இன்னும் தேடியபடி,
    நீதிக்காக, அவர்தம் விடுதலை வேண்டி,
    எத்தனை நாட்கள் தவம் கிடக்கிறார்கள்?
     
    எங்களுக்கு வலித்தபோது,
    செத்துப்போன உங்களின் நீதிக்கான குரல்கள்,
    இன்று “நீதி” என்ற சொல்லை,
    அடிக்கடி உச்சரிக்கின்றன.
     
    இப்போது அங்கே,
    தலைநகரின் வீதிகள் தோறும்,
    ஆட்சியாளர்களுக்கு எதிரான கோஷங்கள் மலிந்துள்ளன.
    “வீட்டிற்கு செல்” என்ற சொல் தவிர,
    எதுவும் காதில் விழுவதில்லை.
     
    காலத்துயர் மறந்து,
    ‘தமிழா நீயும் போராட வா’ என்றால்,
    எதை நாம் மறப்போம்?
    எப்படி நாம் வருவோம், கொடிபிடிக்க உன்னுடன்?
     
     
    -தியா-
    • Like 7
    • Thanks 2
  5. On 31/3/2022 at 21:33, நிழலி said:

    இன்று என் சொந்த பெயரில் உள்ள முகனூலில் கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தை பற்றி சிம்பிளாக சொல்ல எழுதிய இந்தக் கவிதையால் முகனூல் தற்காலிகமாக என்னை தடை செய்தது.

    ..................................

    இவ்வாறே அவர்கள் 

    அரசனின் மாளிகையை

    சுற்றி வளைத்தனர்

     

    அன்று தேவ சபையில்

    அரசன் பல்லாயிரம் ஆடுகளை

    கொன்று 

    தன் இந்திரியத்தால் குளிப்பாட்டி

    விருந்து கொடுத்து இருந்தான்.

    வண்ணாத்திப் பூச்சிகளின்

    இறைக்கைகளை வெட்டி

    படையல் போட்டு

    இருந்தான்

     

    அதை புசித்தவர்கள்

    இன்று அவன் மாளிகையை

    சுற்றி வளைத்தனர்

    தங்களின் நாவு

    வரண்டு எச்சில்

    வற்றி விட்டதாக

    கிளர்ந்து எழுந்தனர்

     

    தாளா பசியால்

    கதவுகளை

    நெட்டித் தள்ளுகின்றனர்

     

    அரசன் அவர்களை அறிவான்

     

    இன்னும் ஒருமுறை

    அவன் விருந்து கொடுத்து

    இந்தக் கணக்கையும்

    முடித்து வைக்கும் போது

    சுற்றி வளைத்தவர்கள்

    அரசனை

    ஆரத் தழுவுவர் 

     

    வண்ணத்துப் பூச்சிகளின்

    இறக்கைகளை அவன்

    மீண்டும் முறிக்கும் போது

    அவனை அவர்கள்

    மீண்டும் அரசனாக்குவர்

     

    டொட்.

    அருமையான கவிதை

  6. ஈழத்தைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ள "பயங்கரவாதி" நாவல் இன்னும் புத்தக வடிவில் எனக்குக் கிடைக்கவில்லை, ஆனாலும் அமேசான் கிண்டல் தளத்தில் வாங்கிப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
     
    ஈழ மண்ணிலிருந்து இப்படி ஒரு படைப்பை, உள்ளிருந்த படைப்பாக எழுதுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல, அது கத்தி முனையில் நடப்பதற்குச் சமமானது. இருந்தும், தான் கொண்ட கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல் 2005 - 2009 வரையான 4 ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியான முறையில் கதையாகச் சொல்லியுள்ளார்.
    தீபச்செல்வன் ஒரு சிறந்த கவிஞர் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த யதார்த்த எழுத்தாளர் என்பதை அவரின் "நடுகல்" நாவல் படித்தவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். அதை இந்த நாவலின் மூலம் இன்னும் ஒரு முறை உரத்துக் கூறியிருக்கிறார்.
     
    நான் 2000 - 2004 வரையான காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தவன் என்றவகையில், "பொங்குதமிழ்" நிகழ்வின் ஆரம்ப காலம் பற்றியும் அதன் பின்னரான விளைவுகள் பற்றியும் பட்டுணர்ந்தவன், நன்கறிந்தவன். அதற்குப் பின்னர், இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடனான சமாதான ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக முறித்துக்கொண்டு போரினை வலிந்து துவங்கிய 2006 இல் இருந்து போர் முடிவுற்ற 2009 வரையிலான காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள்ளும் வெளியிலும் நடந்த அத்தனை துன்பகரமான நிகழ்வுகளையும் உள்வாங்கிக்கொண்டு "பயங்கரவாதி" நாவல் நகர்கிறது.
     
    இந்தக் கதையைப் பற்றியோ கதையில் வரும் பாத்திரங்கள் பற்றியோ நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. கதையின் நாயகன் மாறன், மலரினி, துருவன், சுதர்சன், பாரதியம்மா, மகிழன், குமணன், மற்றும் சிறு சிறு பாத்திரங்களில் வரும் அனைவரும் கதையின் உயிரோட்டமாக நின்று தொய்வில்லாமல் கதையைத் தாங்கிச் செல்கின்றனர்.
     
    தமிழீழப் போராட்டம் வெறுமனே ஆயுதப்போராட்டம் மட்டுமல்ல அதையும் தாண்டிப் பேசப்படவேண்டிய பல விடயங்கள் உள்ளன என்பதை இந்த நாவல் நிச்சயம் உங்களுக்குச் சொல்லும். ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன என்பதையும் அன்றைய யுத்த காலத்தில் மாணவர்கள் கடந்து வந்த கடினமான நாட்களையும் தாங்கி நகர்கிறது நாவல்.
     
    இந்த நாவல் வாசிப்புக்கிடையில் பல இடங்களில் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. நட்பு, நம்பிக்கைத் துரோகம், குழிபறிப்பு, உற்ற சொந்தங்களின் இழப்பு, வலி மிகுந்த வாழ்க்கைக்கு இடையில் ஒரு மெல்லிய காதல், பல்கலைக் கழக மாணவர்களின் வழமையான குறும்புகள் என்று நகர்கிறது கதை.
     
    நாவலின் ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்கக் கண்களின் முன் காவியமாய், படக் காட்சிகளாய் விரிந்து உயிர்ப்பயம் கொள்ளச் செய்கின்றன. உண்மையைச் சொல்வதானால், “பயங்கரவாதி” நாவல் வாசித்து முடித்த பின்னரும் என்மனம் பல்கலைக்கழககத்தையும் விடுதியையும் சுற்றி அலைகிறது.
     
    அன்பான வாசகர்களே, நண்பர்களே, தயவுசெய்து ஒருமுறையாவது “பயங்கரவாதி” நாவலை வாங்கிப் படியுங்கள். என் அதிகபட்ச ஆசை என்னவென்றால், ஈழம் பற்றிய நல்ல படம் (சினிமா) எடுக்க முனையும் தென்னிந்திய சினிமா படத் தயாரிப்பாளர்கள் / இயக்குனர்களில் யாராவது ஒருவர் இக்கதையை படமாகக் கொண்டுவர முயலவேண்டும்.
     
    -தியா-
    15/03/2022
     
    May be an illustration of 1 person, book and text
    • Like 1
    • Thanks 2
  7. On 11/3/2022 at 10:35, suvy said:

    கடந்தகால நினைவுகளை நிழலோடு ஒப்பிட்டவிதம் சிறப்பு........!  👍

    நன்றி சகோதரி.......!

    மிக்க நன்றி 

    On 11/3/2022 at 11:22, யாயினி said:

    தியா பெண்ணல்ல ...ஆண் பிள்ளை.✍️.🤭

    மிக்க நன்றி 

    On 11/3/2022 at 12:20, suvy said:

    வெரிசொறி யாயினி.......கவிதை நிழலாக இருந்ததால் நிழலில் ஆண் பெண் தெரியவில்லை.......!   😂

    😄நன்றி 

  8. புல்வெளியில் தூங்கும் நிழல்கள்!
    நீண்ட பயணத்தின் இடையிடையே
    பாலங்களைக் கடப்பதுபோல,
    என் கடந்தகால நினைவுகளை மீட்டபடி
    என்னைக் கடந்து செல்கின்றன.
     
    ஒரு நிழலில் இருந்து இன்னொரு நிழலுக்கு,
    மாறிமாறி நான் பயணப்பட்டேன் .
    மகிழ்ந்து தூங்கும் மரங்களின் கீழ்
    கருமையின் ஒளியால் சூழப்பட்ட நிழல்கள்.
    ஆளுறக்கம் கொள்கின்றன.
     
    பயங்கர சூறாவளி வீசுகிறது
    மரங்கள் வேருடன் குடைசாய்ந்து
    நிழல்களுடன் சல்லாபித்தபடி,
    மண்ணில் புரண்டன.
     
    என் நினைவுகள் ஒரு நிழல்
    வெறுமையின் பாத்திரம்
    தூக்கி வீசப்பட்டது.
     
    -தியா-
    May be a black-and-white image
     
     
     
     
    • Like 10
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.