Jump to content

கரும்பு

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    5077
  • Joined

  • Last visited

  • Days Won

    25

Everything posted by கரும்பு

  1. நிம்மதிக்கான இரண்டு வழிகள் விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள் பிடித்துள்ளது 😀
  2. எதிரியால ரொம்ப பாதிக்கப்பட்ட ஒருவர் பீல் பண்ணி உருவாக்கிய பொன்மொழி போல ?
  3. உள்ளேன் ஐயா உள்ளேன் ஐயா யாழுக்கு கிரமமாய் வராத ஆட்களை ஓரம் கட்டப்போகின்றார்களாம். அதனால் ஒருக்கால் இதுக்காலையும் வந்து முகத்தை காட்டிவிட்டு போகலாம் என்று... வேறொன்றும் இல்லை
  4. சூப்பர் பாஸ் சொந்த சரக்கோ? இரவலோ?? எப்படியோ சூப்பர்
  5. இறந்துவிட்டான் சேகர்..... ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்..... இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான். சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள் போகணும்னா நீங்க ஒரு வார்த்தைக்கு spelling சொல்லணும். சேகர் : சாமி... என்ன வார்த்தைங்க ? சித்ரகுப்தன் : லவ் சேகர் : L O V E சித்ரகுப்தன்: சரியான விடை உள்ளே வாங்க. சேகரையும் கூட்டிக்கொண்டு உள்ளே போகும்போது சித்ரகுப்தனின் போன் ரிங் அடித்தது?.. சித்ரகுப்தன் : கடவுள் என்ன ஏதோவொரு காரியத்திற்காக அர்ஜென்டா கூப்டுகிறார்....நான் திரும்பிவரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க வேண்டும் . . சேகர் : சரிங்க சாமி !! சித்ரகுப்தன் : நான் திரும்பி வருவதற்குள் யாராவது வந்தால் ந இதே கேள்வி அவங்ககிட்ட கேளு. கரெக்டா ஸ்பெல்லிங் சொல்லிட்டாங்கனா அவங்கள நீ சொர்க்கத்துக்குள்ள அனுப்பிவிடு. தவறாக கூறினால் நீ அவங்களுக்கு அடுத்த கேட் போகச்சொல்லு. அது நரகத்துக்கு போற கேட்.. நீ பயப்படாத அங்க போனவங்க மறுபடியும் திரும்பி வரமாட்டாங்க. கேட்கிட்ட போனதுமே அவங்க நரகத்துல விழுந்திருப்பாங்க. ... இதைக்கேட்டதும் சேகர் நடுங்கிப் போயிட்டான்.... சேகர் : சரிங்க சாமி !! சித்ரகுப்தன் போன கொஞ்ச நேரத்துல ஒரு பெண் அங்கு வருவதை சேகர் பார்த்தான்! சேகர் அதிர்ச்சி அடைந்தான்..... காரணம் அது சேகரின் மனைவி. சேகர்: நீ எப்படி இங்க வந்த ? ! மனைவி : அதாங்க... உங்க பிணத்த எரிச்சிட்டு வீட்டுக்கு வர்ற வழியில என்ன ஒரு பஸ் இடிச்சிட்டு. பின்ன நான் பார்க்கிறது இந்த இடந்தான். சொர்க்கத்திற்குள் ஓடிவந்து நுழையப்பார்த்த மனைவியை தடுத்து நிறுத்தி சேகர் சொன்னான்.. நில் நில் இங்கவுள்ள சட்டப்படி நீ சொர்க்கத்துக்கு போகணும்னா ஒரு வார்த்தைக்கு SPELLING சொல்லணும் . கரெக்டா spelling சொன்னாமட்டும்தான் சொர்க்கத்துக்குள்ள போக முடியும் . இல்லைனா அடுத்த கேட் வழியா நீ நரகத்துக்குத்தான் போகணும். மனைவி : என்ன வார்த்தை ? சேகர் : செக்கோஸ்லோவாகியா *** (Whatsapp இல் வந்தது)
  6. குருஜி வீட்டில் குண்டுக்கரண்டியால் நல்ல வாங்கு வாங்கி இருப்பார் போல.
  7. கடந்த சில கிழமைகள் நல்ல ஜோக்குகளாய் இருந்தன. தற்போது உங்கள் தேடல் போதவில்லை தோழர்களே.
  8. இந்த தொழில்நுட்பத்தின் பின்னால் மறைந்துள்ள அறிஞர் கண்டறியப்பட்டு கெளரவிக்கப்படவேண்டும்.
  9. யாழை விட்டால் வேறு எங்கு எங்கள் இன்னிசை மழையை பொழிவது? இங்கு என்றால் ஒரு முகமனுக்காவது ஆஹா பிரமாதம் அற்புதம் என்று எல்லாம் சொல்லி பச்சையும் குத்துவார்கள். பேஸ்புக்கில் போடலாம்தான், என்றாலும்... எனக்கு பேஸ்புக்கில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. நான் கல்பனா அக்கா செய்யும் அளவுக்கு யாழ் உறவுகளை அவ்வளவு கொடுமைப்படுத்தமாட்டேன்.
  10. எம்.பி3 பாடல்களை இங்கே இலகுவாக இணைப்பது எப்படி? நான் பொழுதுபோக்காக பாடும்/செய்யும் எம்.பி3 பாடல்களை எப்படி தரவேற்றம் செய்து இங்கே இணைக்கலாம் என்று அறியத்தாருங்கள். நீண்டகாலம் பொழுதுபோக்கு இசையில் இருந்து விடுபட்டுப்போனதால் தற்போதைய முறைகள் பழக்கம் இல்லை.
  11. மோகன், ஓர் குறிப்பிட்ட கருத்துக்கு ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பச்சை சாத்தக்கூடிய வகையில் வசதியை ஏற்படுத்தி தந்தால் இன்னும் வரவேற்கத்தக்கது.
  12. உங்கள் அனைவரினதும் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நான் ஒருபோதும் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது கிடையாது. அப்படி நிலமை வரும்போல் தெரிந்தால் நைசாய் எஸ்கேப் ஆகிவிடுவேன். ஆனால், இம்முறை தற்செயலாக பிரித்தானியாவிற்கு வந்த இடத்தில் சொந்தக்காரர் வீட்டில் எக்கச்சக்கமாய் மாட்டுப்பட்டு விட்டேன். முதன் முதலாய் வாழ்க்கையில் கேக் வெட்டி நேற்று ஓர் சிறிய கொண்டாட்டம். பிறந்தநாள் பல நினைவுகளை கொண்டு வருகின்றது. We are in the process of dying என்பதையும் அது நினைவுபடுத்தி செல்கின்றது.
  13. கவிஞர் அவர்களே விடுதலையடைந்து தனது சொந்த இருப்பிடம் சேர்ந்தபின் தனக்கு நடந்த சம்பவம் பற்றி விபரிக்கவேண்டும். வெளிநாட்டு தமிழர் பலர் கைது பிரச்சனைகள் ஒன்றும் இல்லாமல் சிறீ லங்கா சென்று வருகின்றார்கள். கவிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இது அவராகத்தேடிக்கொண்ட கைதா அல்லது சிறீ லங்கா அரசின் திட்டமிட்ட கைதா என்பது கேள்விக்குறி. சிறீ லங்கா நாட்டுக்கு சென்று வருவது இன்றும் உயிராபத்தான பயணம். போர் நான்கு வருடங்களின்முன் நிறைவுக்கு வந்தாலும் மக்களின் சுதந்திரமான நடமாட்டம், அடிப்படை உரிமைகள் கிடைப்பதற்குரிய காலம் இப்போது கனியவில்லை என்பது தெரிகின்றது. த.வி.புவின் ஆயுதரீதியான தொல்லைகள் சிறீ லங்கா அரசிற்கு இப்போது இல்லை. இந்தவாய்ப்பை சிறீ லங்கா அரசு சரியாகப்பயன்படுத்தி நாட்டு மக்களிற்கு (உள்நாடு/வெளிநாடு) நம்பிக்கை கிடைக்கும்வகையில் செயற்பட்டால் நன்மைகள் உண்டு.
  14. தகவலுக்கு நன்றி. நான் யாரோ புதியவர் என்று நினைத்தேன்.
  15. காவாலியின் பெயர் யாழ்வாலி என மாற்றப்பட்டதல்லவா? இப்போது மீண்டும் காவாலி எனும் பெயரில் ஒருவரின் கருத்துகளை அண்மையில் இங்கு பார்த்தேனே. யாழ்வாலியின் காவாலி எனும் பழைய பெயரை புதியவர் ஒருவர் இப்போது பாவிக்கின்றாரா அல்லது எனக்கு மாலைக்கண் ஏதுமோ??
  16. 'ஈழத்து' என்பது 'சகாறா' என்பதுடன் ஒட்டவில்லை. இரண்டு சொற்களும் ஒன்றை ஒன்று முழுசிப்பார்ப்பதுபோல் எனக்குத்தெரிகின்றது. டங்குவார் கூறியதுபோல் (அல்லது சற்று மரியாதையுடன்... இசைக்கலைஞன் கூறியதுபோல்) அடைமொழிகளை நீக்கிவிட்டு தனியாக சகாறா என்று மாற்றினால் இளமை பொங்கி வழியும், சும்மா அந்தமாதிரி யாழில் யெளவனத்துடன் வலம் வரலாம். கிழவியிலிருந்து குமரியாகிய பேறும் கிடைக்கும். மேலும், 'ஈழத்து சகாறா' என்று கூறும்போது உயிர்காத்து வாழ்வு தரும் கனடா நாட்டை புறக்கணிப்பதாகவும் பார்க்கலாம். தவிர, ஈழம் என்பது தமிழ்ச்சொல் அல்ல, அது சிங்களமொழிச்சொல் என்றும் இங்கு யாழிலேயே எங்கோ வாசித்ததாக ஞாபகம். ஒரு சிங்களத்தியாக உங்களை மாற்றவேண்டும் என்று யாரோ திட்டம் தீட்டியுள்ளார்கள் போல் உள்ளது. இது சிறீ லங்கா புலனாய்வுத்துறையினதும் சிங்கள அரசினதும் சதியாகவும் இருக்கலாம். எனவே, பெயர் மாற்றம் செய்யமுன்னர் எச்சரிக்கை தேவை. மற்றையது, பெயர் பிரதேசவாதத்தை போதிக்கின்றது என்றால்.. யாழில் உள்ள ஏனைவர்கள் உதாரணமாக... புங்கையூரான் துன்னையூரான் மல்லையூரான் நுணாவிலான் வல்வை லிங்கம் இவர்கள் எல்லாம் தலையைக்கொண்டுபோய் எங்கே முட்டுவது? எல்லாவற்றுக்கும் மேலாக 'யாழ்' எனும் சொல்லே பிரதேசவாதத்தை பறை சாற்றுகின்றது. இதற்கு என்ன செய்வது?
  17. ஐபி சம்மந்தமாய் அச்சம் காணப்பட்டால் அதை மறைக்கின்ற, மாற்றுகின்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம். நீங்கள் பேஸ்புக்கோ, ஹாட்மெயிலோ, ஜீமெயிலோ எங்கு போனாலும் உங்கள் சகல விடயங்களையும் அதை கண்காணிக்கும் நிருவாகத்தில் உள்ளவர்களினால் தேவை ஏற்பட்டால் பார்க்க முடியும். இணைய உலகில் இப்படியான விடயங்கள் தவிர்க்கப்படமுடியாதவை. உங்கள் தனிப்பட்ட விடயங்களை வெளி ஆட்கள் கண்டுகொள்வது விருப்பம் இல்லை என்றால் முற்றிலுமாக விலகி நிற்பதே நல்லது. யாழிலாவது பரவாயில்லை, கடந்த காலங்களில் நிருவாகத்தில் இருந்தவர்களின் தொகையை கூட்டினால் ஒரு பதினைந்திற்கு உள்ளேயே வரும். ஆனால், பேஸ்புக், ஹாட்மெயில், ஜீமெயில் என்று போனால் எந்தப்பற்றையுக்க இருந்து யார் வாறான் போறான் என்று ஒன்றுமே தெரியாது. உங்கள் தகவல்களை யார் பார்க்கின்றார்கள், சேகரிக்கின்றார்கள் என்பது பற்றி எதுவித விடயங்களையுமே அங்கு அறியமுடியாது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.