• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கரும்பு

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  5,077
 • Joined

 • Last visited

 • Days Won

  25

Everything posted by கரும்பு

 1. பொய்கள் கூறி, ஒருவரை ஒருவர் ஏமாற்றி செய்யப்படும் திருமணங்களின் பிற்பாடு நேர்மை, நியாயம், தியாகம் இவற்றை எதிர்பார்க்க முடியுமா? உலக சனத்தொகை குத்து மதிப்பாக எட்டு பில்லியன்கள் அதாவது எட்டாயிரம் மில்லியன்கள். இங்கே சனத்தொகை பெருக்கத்தையும் கவனத்தில் கொள்ளலாம்? பழையவர்கள் போல் அடி, உதை, குத்து, தூஷணம் கேட்டு வாழ்க்கையை இழுக்க இப்போது இளம் சமுதாயம் தயாராக இல்லை பல இடங்களில். இது நல்லதொரு மாற்றமே.
 2. அன்பு, மகிழ்ச்சி, இல்லாத தம்பதி பிள்ளைகளுக்காக ஒன்றாக வாழவேண்டும் என்பது பிள்ளைகளுக்கே தவறான முன்னுதாரணமாக அமையலாம் தந்தை/தாய் அவலங்கள், தூசணங்கள், அடி உதை, குத்து. தாய்/தந்தை மன நோயாளிகளாக வாழ்ந்து ஆரோக்கியமாக பிள்ளைகளை வளர்க்க முடியாது. முன்னெச்சரிக்கை நல்லதுதானே. நம்ப நட நம்பி நடவாதே. இந்தக்காலத்தில் பழையகாலம்போல் கண்ணீர் வடித்து வாழ்க்கையை நாசமாக்கவேண்டிய அவசியம் இல்லை.
 3. தூசணம் சொல்லி மற்றைய உயிரை சிறுமை அடையச்செய்வது பாவத்திலும் பாவம். அடித்து துன்புறுத்துவது கொடுமை. இவற்றுக்கு கணவனின் தாழ்வு மனப்பான்மை, சந்தேக புத்தி, மனைவி தன்னைவிட மேலோங்கி விடுவாளோ என்கின்ற எண்ணங்கள் காரணமாக அமையலாம். வெளியாரின் தலையீடு இல்லாதபடி பார்த்துக்கொண்டு மனைவியை அடித்து, வெருட்டி, துன்புறுத்தும் கணவர்கள் இருக்கின்றார்களே. வெளியாரின் பார்வை இல்லாவிட்டால் வீட்டினுள் நடக்கின்ற கொடுமைகள் கட்டுப்பாடு இல்லாமல் போய்விடலாம்.
 4. இரண்டாவது திருமணம் பொருத்தமானதாக அமையலாம், பொருத்தம் இல்லாமலும் அமையலாம். திருமணம், விவாகரத்து இரண்டுமே நேரம், பணம், சக்தி இவற்றை உறிஞ்சி எடுக்கும். திருமணம் செய்யவேண்டிய கட்டாயம் இல்லை. திருமணம் செய்யாமலும் ஒன்றாக வாழலாம். அவரவர் நிலமையை பொறுத்தது. தனிநபரின் நிம்மதி, மகிழ்ச்சி முக்கியம். சமூகத்திற்கு வேடம் காட்டுவதற்கு தனிநபர் இவற்றை இழக்கவேண்டிய தேவை இல்லை.
 5. ஆண் பெண்ணை தினமும் தூசணங்களால் அர்ச்சிப்பதும், அடி உதை கொடுத்து துன்புறுத்துவதும், பயமுறுத்துவதும்.. பெண் ஆணை தினமும் தூசணங்களால் வசைபாடுவதும், பயமுறுத்துவதும், மன உளைச்சலை கொடுப்பதும்.. ஒருவருடன் இன்னொருவர் ஒரே வீட்டுக்குள் போட்டி போட்டு ஒருவரில் இன்னொருவர் குற்றம் காண்பதும்.. சமூகத்திற்கு ஒரு போலி வேடத்தை காட்டுவதற்காக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து பாசாங்கு செய்வதும்.. இன்னொருவரை மனதில் நினைத்துக்கொண்டு வேறொருவருடன் வாழ்வதும்.. ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் படுத்து எழும்புவதும்.. காவல்துறை வீட்டுக்குள் வருவதும்.. திருமணம் ஒருவரை இன்னொருவர் உத்தியோகபூர்வமாக துன்புறுத்துவதற்கும், தமது கீழ்த்தனங்களை காட்டுவதற்கும் அரசாங்கத்திடம் இருந்து கொடுக்கப்படும் லைசன்ஸ் இல்லை. திருமணம் முடித்தபின் ஒன்றாக வாழ்வது பிடிக்காவிட்டால் கேவலப்பட்டுக்கொண்டும், கஸ்டப்பட்டுக்கொண்டும் இராமல் கழற்றிவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான். திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம்/உடன்படிக்கை. இது நிரந்தரமாக முடிந்த முடிபு விதி இல்லை. வாழ்க்கை ஒன்றே ஒன்று. இந்த ஒரே ஒரு வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு திருமண ஒப்பந்தம் தடையாக இருக்குமானால் விவாகரத்து ஓர் சிறப்பான முடிவு.
 6. நிம்மதிக்கான இரண்டு வழிகள் விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள் பிடித்துள்ளது
 7. ஆழ்ந்த இரங்கல்கள். சீபிசியில் அறிந்துகொண்டேன் காலையில்.
 8. எதிரியால ரொம்ப பாதிக்கப்பட்ட ஒருவர் பீல் பண்ணி உருவாக்கிய பொன்மொழி போல ?
 9. உள்ளேன் ஐயா உள்ளேன் ஐயா யாழுக்கு கிரமமாய் வராத ஆட்களை ஓரம் கட்டப்போகின்றார்களாம். அதனால் ஒருக்கால் இதுக்காலையும் வந்து முகத்தை காட்டிவிட்டு போகலாம் என்று... வேறொன்றும் இல்லை
 10. சூப்பர் பாஸ் சொந்த சரக்கோ? இரவலோ?? எப்படியோ சூப்பர்
 11. இறந்துவிட்டான் சேகர்..... ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்..... இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான். சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள் போகணும்னா நீங்க ஒரு வார்த்தைக்கு spelling சொல்லணும். சேகர் : சாமி... என்ன வார்த்தைங்க ? சித்ரகுப்தன் : லவ் சேகர் : L O V E சித்ரகுப்தன்: சரியான விடை உள்ளே வாங்க. சேகரையும் கூட்டிக்கொண்டு உள்ளே போகும்போது சித்ரகுப்தனின் போன் ரிங் அடித்தது?.. சித்ரகுப்தன் : கடவுள் என்ன ஏதோவொரு காரியத்திற்காக அர்ஜென்டா கூப்டுகிறார்....நான் திரும்பிவரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க வேண்டும் . . சேகர் : சரிங்க சாமி !! சித்ரகுப்தன் : நான் திரும்பி வருவதற்குள் யாராவது வந்தால் ந இதே கேள்வி அவங்ககிட்ட கேளு. கரெக்டா ஸ்பெல்லிங் சொல்லிட்டாங்கனா அவங்கள நீ சொர்க்கத்துக்குள்ள அனுப்பிவிடு. தவறாக கூறினால் நீ அவங்களுக்கு அடுத்த கேட் போகச்சொல்லு. அது நரகத்துக்கு போற கேட்.. நீ பயப்படாத அங்க போனவங்க மறுபடியும் திரும்பி வரமாட்டாங்க. கேட்கிட்ட போனதுமே அவங்க நரகத்துல விழுந்திருப்பாங்க. ... இதைக்கேட்டதும் சேகர் நடுங்கிப் போயிட்டான்.... சேகர் : சரிங்க சாமி !! சித்ரகுப்தன் போன கொஞ்ச நேரத்துல ஒரு பெண் அங்கு வருவதை சேகர் பார்த்தான்! சேகர் அதிர்ச்சி அடைந்தான்..... காரணம் அது சேகரின் மனைவி. சேகர்: நீ எப்படி இங்க வந்த ? ! மனைவி : அதாங்க... உங்க பிணத்த எரிச்சிட்டு வீட்டுக்கு வர்ற வழியில என்ன ஒரு பஸ் இடிச்சிட்டு. பின்ன நான் பார்க்கிறது இந்த இடந்தான். சொர்க்கத்திற்குள் ஓடிவந்து நுழையப்பார்த்த மனைவியை தடுத்து நிறுத்தி சேகர் சொன்னான்.. நில் நில் இங்கவுள்ள சட்டப்படி நீ சொர்க்கத்துக்கு போகணும்னா ஒரு வார்த்தைக்கு SPELLING சொல்லணும் . கரெக்டா spelling சொன்னாமட்டும்தான் சொர்க்கத்துக்குள்ள போக முடியும் . இல்லைனா அடுத்த கேட் வழியா நீ நரகத்துக்குத்தான் போகணும். மனைவி : என்ன வார்த்தை ? சேகர் : செக்கோஸ்லோவாகியா *** (Whatsapp இல் வந்தது)
 12. குருஜி வீட்டில் குண்டுக்கரண்டியால் நல்ல வாங்கு வாங்கி இருப்பார் போல.
 13. கடந்த சில கிழமைகள் நல்ல ஜோக்குகளாய் இருந்தன. தற்போது உங்கள் தேடல் போதவில்லை தோழர்களே.
 14. இந்த தொழில்நுட்பத்தின் பின்னால் மறைந்துள்ள அறிஞர் கண்டறியப்பட்டு கெளரவிக்கப்படவேண்டும்.
 15. யாழை விட்டால் வேறு எங்கு எங்கள் இன்னிசை மழையை பொழிவது? இங்கு என்றால் ஒரு முகமனுக்காவது ஆஹா பிரமாதம் அற்புதம் என்று எல்லாம் சொல்லி பச்சையும் குத்துவார்கள். பேஸ்புக்கில் போடலாம்தான், என்றாலும்... எனக்கு பேஸ்புக்கில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. நான் கல்பனா அக்கா செய்யும் அளவுக்கு யாழ் உறவுகளை அவ்வளவு கொடுமைப்படுத்தமாட்டேன்.