Jump to content

island

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    733
  • Joined

  • Days Won

    2

Everything posted by island

  1. பையன், இந்த 800 ரூபா வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற வருடம் மே மாதத்தில் பார்திருப்பீர்கள்? காலப்பயணம்(time travel) சென்றீர்களா?
  2. ஏற்கனவே எனது ஐடியாவை சொல்லி அந்த கருத்தை மறுதலித்த உறவை நோக்கி வைக்கப்பட்ட கேள்வி என்பதை வாசித்து கிரகித்து கொண்டு பின்னர் கேள்வி கேட்க வேண்டும். 😂
  3. துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது.
  4. எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய இள வட்டங்களின் funny life video
  5. @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான காணோளியை இணைக்கிறேன். பி. கு அனுமதி பெறாமலே😂
  6. அதாவது தேர்தல் புறக்கணிப்பு மூலம் தமிழரின் இருப்பை இலங்கையில் தக்க வைத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளீர்கள். அது எப்படி என்றும் அதன் நடைமுறைச்சாத்தியத்தையும் கூறுவீர்களா?
  7. பெல்ஜியத்தை சேர்ந்த Tim tense என்ற இந்த யூருப்பர் கடந்த வருடமும் இலங்கை சென்று பல வீடியோக்களை தனது யூருயூப்பில் வெளியிட்டிருந்தார். இவ்வருடமும் சென்றுருந்தார். பெரும்பாலான வீடியோக்களில் ஶ்ரீலங்காவையும் அந்நாட்டு மக்களின் hospitality யையும் புகழ்ந்தே உள்ளார். ஶ்ரீலங்கா சுற்றுலாவை மேற்குலகில் பிரபல்யப்படுத்தியே உள்ளார். இந்த வர்த்தகர் தொடர்பான விடியோவைக் கூட Avoid this man in Kaluthura என்ற தலைப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு பதிவாகவே வெளியிட்டுள்ளார்.
  8. சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள் அறிய ஆவலாக உள்ளேன். முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும் படங்களையும் இணைக்கலாம்.
  9. மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள். கடற்கரையோரம் காலாற நடப்பதற்காக கால்களை தயார் செய்தார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதை நினைத்தீர்கள்.
  10. எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது. இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே! அல்லது நீங்கள் கூறலாமே!
  11. நிச்சயமாக இவை இரண்டும் ஒன்றல்ல. திட்டமிட்ட குடியேற்றங்களும் கொழும்பு போன்ற Metropole city ஐ நோக்கிய தமிழரின் குடிப்பரம்பலும் ஒன்றல்ல. ஆனால், இவற்றை தடுத்திருக்க அல்லது தமிழரின் இனப்பரம்பலை வட கிழக்குப் பிரதேசங்களில் அதிகரித்திருத்து இதன் ஈடு செய்திருக்கக் கூடிய அரசியல் தீர்வை பெற கிடைத்த பல சந்தர்ப்பங்களை எமக்கே உரி ய பாணியில் தவறவிட்டதன் விளைவுகளில் இதுவும் ஒன்று. தற்போதைய எமது நிலையில் எமக்கு சாத்தியமானவற்றை பெற தாயக/ புலம் பெயர் அரசியலாளர்கள் ஒன்றாக இணைந்து முயற்சிப்பது ஒரு வழி (ஒருவருக்கொருவர் துரோகி பட்டங்களை வழங்குவதன் மூலம் தம்மை புனிதராக காட்ட விளையும் மூடத்தனமான அரசியல் செய்வதை விடுத்து) அல்லது, தாயகத்தில் தமிழரின் இருப்பை பாதுகாக்க வேண்டும் பொது எண்ணம் கொண்ட, துணிச்சல் கொண்ட இளைஞர்கள் வருங்காலத்தில் அமையும் அரசாங்கங்களுடன் (முஸ்லீம் மக்களைப் போல்) அமைச்சரவையில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வரும் அனுகூலங்களை பாவித்து எமது மக்களின் குடிப்பரம்பலை வட கிழக்கில் மெதுவான வேகத்திலாவது அதிகரிக்க செய்ய முயற்சிக்க முடியும். எமது மக்களின் உற்பத்தி, கல்வி, பொருளதாரம் ஆகியவற்றில் எம்மை பலப்படுத்தி இலங்கைத் தீவில் நாமும் ஒரு சக்தி என்பதை காப்பாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லை எமது பழைய வழி முறைகளில் நாம் வீரர்கள் என்று நிருப்பிக்க கங்கணம் கட்டி உசுப்பேற்றிக் கொண்டிருந்தால், இப்படியே இணையங்களிலும் முகநூல்களிலும் மட்டும் தேசியம் பேசி காலத்தை வீண்டித்து மாயாஜால அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால் இலங்கையில் தமிழரின் அரசியல் பலம் இன்னும் இப்போதிருப்பதை விட இன்னும் மோசமாகும் ஆபத்து கண்முன்னே தெரிகிறது. ஒவ்வொன்றாக இழந்துவிட்டு எதிரி மோசமானவன் என்பதை உலகத்திற்கு காட்டுவதற்காகவே இந்த அரசியலை செய்தோம் என்று கூறிக்கொண்டிருப்பது எம்மை நாமே ஏமாற்றும் மடைத்தனமான அரசியல். அதையே கடந்த 70 வருடங்களாக செய்து வருகிறோம்.
  12. விசுகு, நான் உங்களை சொன்னதாக தவறாக விளங்கி விட்டார்கள். அவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டதற்கு எனது எழுத்தின் தெளிவின்மை காரணம் என்றால் மன்னித்தருள்க. நான் கூறியது எமது அரசியல்வாதிகளின் அரசியல் அவ்வாறு தான் உள்ளது என்பதையே.
  13. ஆசிய நாடுகளை பொறுத்தவரை படித்தவர்கள் தான் கூடுதலாக பகுத்தறிவுக்கு முரணாண பலவற்றை நம்புவர்களாக உள்ளனர். ஸ்ரிபன் ஹக்கின் தனது நூலில் எழுதியிருந்தார், தான் கீழ் திசை நடுகளுக்கு சொற்பொழிவாற்ற சென்ற போது அடுத்த 2000 கோடி வருடங்களில் பிரபஞ்ச சுருக்கம் ஏற்பட்டு கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதி அழியலாம் என்ற, “பிரபஞ்ச சுருக்க கோட்பாடு” என்பது பற்றி அங்கு குறிப்பிட வேண்டாம் என்றும் அது பங்கு சந்தையில் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டாராம். அந்த அளவுக்கு 2000 கோடி வருடங்களுக்கு பின்பு நடக்கும் என கூறப்படும்( அதுவும் இன்னமும் முழுமையாக நிரூபிக்கப்படாத ஆய்வில் இருக்கும் ஒரு கோட்பாடு) விடயங்களை பற்றி கூட கவலைப்படும் அளவுக்கு அங்கு படித்தவர்கள் கூட இருகிறார்கள்.
  14. @goshan_che @kandiah Thillaivinayagalingam இதில் குமாரசாமி இணைத்த முதலாவது பதிவும் முன்பு யாரோ ஒருவர் நையாண்டியாக பதிந்த பதிவாக இருக்கலாம். அது கோஷான் கூறிய முதலாவது வகையை ஒத்த சிலரால் உண்மை என நம்பி முக நூல்களில் பகிரப்பட்டதாக இருக்கும். அது போல் கோஷானின் நையாண்டிப்பதிவும் அவ்வாறு உண்மை என நம்பி பகிரப்படும் அளவுக்கும் அதை நம்பும் குறிப்பிட்ட தொகை ஆட்களும் உள்ளனர்.
  15. முடிஞ்சா அடுத்து என் தெருவுக்கு வாடா பாப்பம் என்று கூறிவிட்டு, அடுத்து எங்கே அரசியல் செய்யலாம் என்று தேடி அங்கே சென்றுவிடுவோம். 😂😂
  16. நான் கூறியது மக்களை பற்றியும் மத வேறுபாறு இன்றி போராடிய இளைஞர்களை பற்றியும் மட்டுமே. தனிப்பட எந்த இயக்கங்களை பற்றியும் அல்ல. மோடி அல்ல. ஆர். எஸ்.எஸ் என்பது எனது அவதானிப்பு.
  17. தமிழரது உரிமைப் போராட்டத்தில் மதங்களை கடந்து மக்கள் இணைந்து போராடியதும் மதங்களை கடந்து பல போராளிகள் இணைந்ததும் உயிர் நீர்த்ததும் முன்னேற்றங்கள் அற்ற வீண் வேலை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் போல.
  18. பொதுவாகவே மேற்கு நாடுகளை வெறுக்கும் நீங்கள் மேற்கு நாடுகளில் ஒன்றான ஜேர்மனியை அங்கீகரித்து ஜேர்மனியில் உள்நாட்டு சட்டங்களை அங்கீகரித்து அங்கு வாழ்வதும் உங்கள் நலன்களின் அடிப்படையிலேயே.
  19. எமது இனத்துக்குள் மத பிளவுகள் நடந்து நமக்குள் நாம் அடிபட்டால எப்படி எமது இனம் வாழ முடியும்? கருத்தைப்பார்காமல் ஏதோ என்னிலை இருக்கிற கடுப்பிலை எழுதீற்றீங்க போல. இண்டைக்கு இன்றும் ரெண்டு பெக்கை எடுத்திட்டு படுத்திட்டு நாளைக்கு கருத்தை வாசிச்சுப் பாருங்க குமாரசாமி. 😂
  20. நான் காலிஸ்தானை உதாரணம் காட்டியது நீங்கள் கூறிய விடயத்துக்கக அல்ல. தமது நலன்களை முன்னிறுத்தி மற்றயவற்றை புறக்கணித்தல் என்பதை தமிழரும் செய்துள்ள நிலையில் மற்றயவர்களை அதற்காக குற்றம் சாட்டுவது அபத்தம்.
  21. நான் கூறவந்த விடயம், தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக சமரசம் செய்வதும், சில ராஜதந்திர உறவுகளை மேற்கொள்ளுவதும் உலக வழமை. அதற்காகவே காலிஸ்தானை உதாரணம் காட்டினேன். தமிழீழம் ஒன்று உருவாகி இருந்தாலும் அதன் பொருளாதார நலன்களை முன்னிறுத்தி, தனக்கு இலாபம் தரும் வர்த்தகத தொடர்பில் இருக்கும் ஒரு நாட்டினுள் நடக்கும் மனித உரிமை விவகாரங்களை தமிழீழமும் கருத்தில் எடுத்திருக்காது. இது இயல்பானது. நாட்டின் நலன் கருதி அவ்வாறு தான் நடந்து கொள்ளவேண்டும். ஆகவே இதல் மற்றய நாடுகளை குற்றம் சாட்டுவது எமக்குப் பயன்றறதுடன் எமக்கு பாதகமாகவும் அமையும். ஒரு நாடு என்ற அங்கீகாரத்துடன் உள்ள தனது எதிரிக்கு உலகில் இயல்பாக உள்ள அனுகூலங்கள் என்ன என்பதையும் உலக அங்கீகாரமற்ற இயக்கம் என்ற ரீதியில் உலகில் இயல்பாக எமக்கு உள்ள பிரதிகூலங்கள் என்ன என்பதையும் ஆழமாக சிந்தித்து தனது அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டியது போராட்டதை நடத்தும் விடுதலை இயக்களின் கடமையே தவிர உலக நாடுகளின் வேலையோ மக்களின் வேலையோ அல்ல. உதாரணத்திற்கு தன்னுடன் ராஜதந்திர உறவு இல்லாத நாட்டு ராஜதந்திரிகளை தமது நாட்டில் இருந்து வெளியேற்றுவது ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் நடைமுறை. உலக அங்கீகாரத்துக்காக போராடும் ஒரு விடுதலை அமைப்பு அதே நடைமுறையை பின்பற்றுவது ராஜதந்திரமல்ல. ஐரோப்பியயூனியன் தம்மை பயங்கரவாத பட்டியலில் இட்டது என்பதற்காக அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரஜைகள் யுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து அவர்களை வெளியேற்றிய செயலால் இலாபமடைந்தது ஶ்ரீலங்கா அரசே. வெறும் உணர்ச்சிவசப்பட்டு இதை சிலர் சிலாகிக்கலாம். ஆனால் உலக அளவில் எமது நிலையை உணர்ந்தே நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேனுல் அதனால் விளையும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். இது போல பல விடயங்களைக் கூறலாம். இவையெல்லாம் இனி யோசித்து என்ன பலன் என்றோ அல்லது இவை பேசாப்போருள்கள் அல்லது பேசாமல் மறைக்கப்பட வேண்டியவை என்று யாராவது நினைத்தால் அந்த அதே போன்ற தவறுகளையே இனியும் எதிர்காலத்திலும் செய்து எம்மை தாமே நாசப்படுத்திக்கொள்வோம்.
  22. மக்களிடையே மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி மக்களின் மகிழ்ச்சியான வாழ்வை சிதைத்த விட்டு வெடுக்குநாறி மலையைக் காப்பாற்றி அதை வைச்சு என்ன பண்ணுறது?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.