சுபேஸ்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  3,830
 • Joined

 • Last visited

 • Days Won

  34

சுபேஸ் last won the day on November 21 2014

சுபேஸ் had the most liked content!

Community Reputation

1,144 நட்சத்திரம்

About சுபேஸ்

 • Rank
  Advanced Member
 • Birthday September 17

Contact Methods

 • Website URL
  http://www.theeraanathi.blogspot.com/
 • ICQ
  0
 • Yahoo
  n.subesh@yahoo.com
 • Skype
  nsubesh

Profile Information

 • Gender
  Male
 • Interests
  மாறிக்கொண்டே இருக்கிறது...

Recent Profile Visitors

10,319 profile views
 1. கள்ளமாட்டுக்கு சாகிற அளவுக்கு தண்டனை என்றால் (அதையும் யாராவது ஒரு ரவுடிதான் செஞ்சிருக்கும்) கோடிக்கணக்கில் பணம் புரளும் கள்ளமட்டைக்கு இந்நேரம் வெளிநாட்டில் பாதி தமிழ்பெண்டுகள் வெள்ளை சீலையுடந்தான் இருக்கோணும்... மில்லியன் கணக்கில் கொள்ளை அடிக்கும் லைக்கா மற்றும் பல தமிழ்வர்த்தகர்களை கோட்சூட்டுடன் கூப்பிட்டு ஆலாத்தி எடுக்கிறார்கள்... ஏழைக்கு செல்லுபடியாகும் இந்த மக்கள் தண்டனை நியாயம் பணக்காரனுக்கு செல்லாதாக்கும்...
 2. மேலுள்ள படம் மக்கள் சட்டத்தை கையில் எடுத்தபோது... கீழ் உள்ள படம் ராணுவம் சட்டத்தை கையில் எடுத்தபோது... எனக்கு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.. இரண்டிலும் மனிதர்கள்தான் தெரிகிறார்கள்...
 3. 2011 இல இருட்டடி பற்றி ஒரு நகைச்சுவைக் கதை எழுதி இருந்தேன்... அதில் கிருபன் அண்ணா இப்படி எழுதி இருந்தார்.. "நானும் ஒரு இருட்டடி பற்றிய கதை ஒன்றைக் எழுதிக் குறையில் வைத்திருக்கின்றேன்.. ஆனால் அது அடிவாங்கியதைப் பற்றியதல்ல!" இப்பொழுது 2017... கிட்டத்தட்ட ஆறுவருசம் ஆகி இருக்கு எழுதி முடிக்க... தும்பளையான் பழையகதைக்கு இன்று லைக் போட்டிருந்ததால் என்ன ஏது என்று பார்க்க போன இடத்தில் சிக்கியது.. இணைப்பு இது... https://www.yarl.com/forum3/topic/95751-நான்-அவனில்லை/ பெட்டைக்குயிலனுக்கு செவிட்டப்பொத்தி அடிச்சதில அநேகமா அவனுக்கு காதுகேக்காமா போயிருக்குமோ தெரியல அடுத்த தொடரில... அப்பிடி நடந்திருந்தா அடுத்தமுறை வெட்டையால போகேக்க பொடியளின்ர வாய் அசையுறத வச்சுத்தான் என்ன கத்துறாங்கள் எண்டு மட்டுப்பிடிச்சு இந்தவாட்டி நலமெடுத்திருப்பான்... இல்லை எண்டா ஒண்டில் வெட்டைக்கு மறுக கிறுகி இருக்கமாட்டான்..
 4. ஜெயபாலனின் இந்த கவிதையை யாழ் இணையமாய் நினைத்து பார்க்கிறேன்... நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் * தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். * ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது நித்திய காதல். இளமை என்பது அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன். * தோழா உனக்கு எத்தனை வயசு? தோழி எனக்கு சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு. 2011
 5. ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்..
 6. மனவருத்தமாக இருக்கிறது அவர் மனதை புண்படுத்திவிட்டோமோ என்று இப்பொழுது நினைக்க. கருத்துகூறுகிறோம் என்று சில மனித மனங்களை கூறுபோட்டிருக்கிறோமே.. என்று...
 7. மிகவும் மனவருத்தமான செய்தி.. தீவிரமான கடவுள் பக்தர்... மதம் பற்றிய விமர்சனப்பதிவொன்றிற்காக என்னுடன் முரண்பட்டு முகநூலில் இருந்து நீக்குவதாக சொல்லிவிட்டு நீக்கி இருந்தார்.. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்...
 8. வாழ்க்கை ஒரு ஆறாக வழிந்தோடிக் கொண்டிருப்பது...காலப் பாத்திரத்தில் நினைவுகள் தேங்கிகொண்டேயிருக்கும்...பழைய முகங்களின் பிரிவில் வாடியும் புதிய முகங்களின் துளிர்ப்பில் பூத்தும் கிடக்கும் யாழ்...காட்சிகள் உதிர்ந்து காலச்சுழலில் அள்ளுண்டு போக புதியன துளிர்க்கும்... வெளியே இலைகளின் சலசலப்பிலும்,மழைத்துளிகளின் சலனங்களிலும் ஏதேதோ நினைவுகள்.. இழப்புகளில் துவண்டு கிடந்த நேரங்களில் தனிமையை தேடி பயணிக்கையில் அரட்டைகளில் என்று என் புலம்பெயர்வாழ்வின் ஆரம்பகால வாழ்வோடு யாழுடனா பயணமும்.. யாழைதவிர்த்துவிட்டு என் புலம்பெயர்வாழ்வை எழுதிவிட முடியாது.. புலம்பெயர் வாழ்வின் காலநீட்சியில் மண்ணுக்கும் எங்களுக்குமான உணர்வுச்சங்கிலியை இணைத்து உயிர்ப்புடன் வைத்திருக்கும் யாழிற்கு அதன் ஆயுட்கால வாசகனாய் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..
 9. கிருபன் அண்ணாவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
 10. கோடை விடுமுறையும் தாயகத்தின் ஏக்கங்களும் வணக்கம் சொந்தங்களே.! பனி தேசங்களில் கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது…இப்போதெல்லாம் தாயகத்தின் காலநிலை வருடம்பூராகவும் தகிப்பாகவும் வரட்சியாகவும் இருந்தாலும்சொந்தங்களின் வருகையால் பல மனங்களில் வசந்தம் தற்காலிகப்பூச்சொரியஆரம்பித்து விட்டது. திருமண வைபவங்கள் ,ஆலயத்தின் பெருந்திருவிழாக்கள் ,மஞ்சள் மணக்கும் புனித நீராட்டுதல்கள் ,புன்னகையோடு சேர்த்தே பொன்னகைக்கான முதலீடுகள் இன்னும் குளிருட்டிய வாகனங்கள் ,போத்தல் தண்ணீர்,சுற்றுலா மையங்கள்,நாகரீக அலைபேசிகள் .இவை தான் இப்போது இங்கு அதிகம் கலந்துரையாடப்படும் தலைப்புகள்.போர் தின்றது போக நெஞ்சில் மிஞ்சியிருக்கும் இனிப்புக்களை கிண்டியெடுத்து அசைபோட்டுக்கொள்கிறது தாயகத்தின் முதல் தலைமுறை.ஆரத்தழுவி அந்தநாள் கதைபேசி முற்றத்து பிலாமரத்தில் பழம் புடுங்கி இன்னும் நாச்சார வீட்டில் அந்த நிலவுகளை தரிசித்துக்கொண்டிருக்கிறது.இது நம்மவர் கதை. எனில் புலம்பெயர் தேசத்திலிருந்து வந்த இரண்டாம் தலைமுறை அதாவது இன்றையையும் முந்தையதைக்கும் இடைப்பட்டதான பொது தலைமுறை எப்படி???.குளிர்தேசத்தில; அடைகாத்த குஞ்சுகளை கொண்டு தாய்பறவையிடம் வரும் பிள்ளை பறவை போன்ற மனநிலை.ஆனால் .இருதலை கொள்ளி எறும்பு நிலை.முற்றிலும் நாகரிகமெனப்படும் அவசரங்களோடும் அதீத அறிவோடும் இருக்கும்தொழில்நுட்பக்குழந்தைகளுக்கும் அரைத்து வைத்த காரக்குழம்போடு ம் அதிகாலை குளியலிடும் நம் பாட்டிகளுக்கும் இடையில் இங்கு வந்தபின் சமரசம் உண்டாக்குவதில் சோர்ந்து போகின்றனர்.பல தடவைகளில் தோற்றும்போகின்றனர். பனிதேசத்து பிள்ளைகளுக்கு இந்த மிதமிஞ்சிய வெயில் ,இறுகஅணைக்கும் மனித சூடுகள்,மீண்டும் மீண்டும் கேட்கும் விசாரிப்புக்கள்,”குஞ்சு,ராசா,பிள்ள,ராசாத்தி”போன்றகொஞ்சல்கள்,சுக்குக்கோப்பி எல்லாம் பல சமயங்களில் எரிச்சல் மூட்டிவிடுகிறது இந்த வரண்ட பூமியின் வெயிலை போலவே. தாயகத்தின் நடைமுறைச்சந்நதியின் பிள்ளைகள் எது நிஐம் என்று புரியாத குழப்பத்தில்.ஈழத்தின் வளர்ப்பு முறை இங்கு வாய்த்த வசதிகள்,இங்கு பயன்பாட்டிலுள்ள நியாயங்கள் தரம்கெட்டதா என தலையைப்பிய்த்து பார்க்கிறார்கள்.வயதொத்த இரு தேசத்தின் பிள்ளைகளுக்கிடையான உரையாடல்கள் நாளாக நாளாக நெருக்கத்தை இளக்கிறது.ஏதோவொரு தாழ்வுச்சிக்கலையும் குற்ற உணர்வையும் நாசூக்காக விதைக்கிறது.நம்மவர் மனதில் தாயகக்கனவுகள் அமிழ்ந்து போக பனித்தேசம் பற்றியதான அதீத மோகம் மேலெழுகிறது.இங்கு பிறந்தது விதியின் சாபமென எண்ணிக்கொள்கிறார்கள். பெரும்பாலும் மேல்தட்டு வர்க்கத்தை விடவும’ அந்தரத்தில் இருந்து கொண்டு ஏதோ ஒரு மையம் பற்றி ஊசலாடுவது தாயகத்தின் நடுத்தட்டு இளையோரே.இவர்கள் தான் இருவகைப்பட்ட கண்ணியத்தின் இடைவெளிகளில் மாட்டிக்கொண்டு முளிக்கும் துர்ப்பாக்கியர்கள். மிச்சமிருக்கின்ற தாயகத்தின் சுவடுகளையேனும் காப்பாற்றி அதில் கரையேற வேண்டுமென்ற தீராவேசம் ஒருபுறம்.நாமென்ன நாகரிகத்திலும் அறிவிலும் சளைத்தவர்களா என்ற கோபம் மறுபுறம் இவர்களிடம்.எனில் என்ன செய்கிறார்கள்.?? உடனடிச் சமாதானங்களுக்கு வர இவர்களால் முடிவதில்லை.காத்திரமான பின்னணிகொண்ட குடும்பத்தின் இளையவாரிசுகளென கொஞ்சப்படும் குளிர்தேசத்து பிள்ளைகளின் ஆடைஅலங்காரங்கள் ..உணவுமுறை….இலகுவில் வரமறுக்கும் தாய்மொழி,பல்தேசியக்கம்பனி வாசல்களிலும் நாகரிக சந்தைத்தொகுதிகளிலும் என பிரத்தியேகமா அவர்கள் பேசிக்கொள்ளும் தமிழ் அல்லாத மாற்று மொழிகள் இவையெல்லாம் தாயகத்தின் இளையோரிடம் ஏதொவொரு வெறுப்புணர்வை கிளறிப்போவது தாயகத்தில் இன்னும் சாகாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் நான் கண்ட உண்மை. ஆக கோடைவிடுமுறை காலத்திலும் சரி எப்போதேனும் சரி தாயகம் வரும் நம் சொந்தங்களுக்கு இனிப்புக்களை மட்டுமே எப்போதும் பரிசளிக்க விரும்புகிறோம்.எத்தேசம் வாழ்ந்தாலும் பூர்வீகம் நம் ஈழம் தானே.நட்சத்திரங்களும் வான்பரப்பும் வேறுபட்டாலும் கூரையும் நிலவும் ஒன்று தானே. இத்தேசம் இப்போது காடும் கரம்பையுமாய் இருந்தாலும் நேசங்களை அணைக்கும் போதெல்லாம் நெஞ்சுருகி மாரி பொழிகிறது.தூரதேசத்தின் சொந்தங்களே இவ்விடமிருந்து உம் மகவுக்கு ஒப்பாகி நானும் ஓர் கோரிக்கை வைக்கிறேன்.நீ ங்கள் உழுத புழுதிக்காடுகளில் தான் எங்களை இளமையை இன்னும் விதைத்துக்கொண்டிருக்கிறோம்.எங்கள் பொழுதுபோக்கு விடுமுறை எல்லாமே இப்போது வரைக்கும் இந்த வெயில் தேசத்தின் எல்லைக்குள் தான்.இந்தக்கைகளுக்கு தட்டச்சு செய்யவும் தெரியும் தழும்புகள் தாங்கவும் அறியும்.பொருளாதாரம் நெருக்க நைந்து நைந்து நாகரீக ஒட்டத்தில் சரிநிகராய் ஓட முனைகிறோம் கண்ணியங்களோடு.இந்த வஞ்சனை அரசியலிலும் நீங்கள் வாழ முடியாது என்று உதறி ஓடிய தீவினுள் கௌரவமான வாழ்வொன்றிற்று உரிமை கோரவே சாகமல் போராடுகிறோம்,இன்னும் விருந்தாளிகளாய் மட்டுமே நீங்கள் வரத்துணியும் இக்காடுகளில் நேர்ந்துவிட்டதை போல் வாழ்கிறோம்கஞ்சியிட்டதை போன்ற டொலர் மடிப்புகளை விட நைந்து கசங்கிய ருபாக்கள் சிலதருயங்களில் எம்மை கௌரவமாய் நடத்துகின’’றன.இப்படியாய் தான் ஈழத்தின் இளையோரின் தன்னிலை விளக்கமிருக்கும். ஆக ஒருதாயின் இருமகவுகளுக்கிடையான ஈடேற்றத்தையும் புரிதலையும் பற்றியே இத்தருணத்தில் பேசுகிறேன்.இருபதுகளிலன் ஆரம்பத்தில் வாழும் ஒரு சராசரி அவதானியாய் கேட்டுக்கொள்வது யாதெனில் புலம்பெயர் தேசத்தின் பெற்றோரேஇங்கு வருவதாயினும் இல்லையெனினும் ஈழம் பற்றிய கண்ணியங்கள் இங்கிருக்கும் நடைமுறை நிஜங்கள்,நடந்தேறிய கொடுரக்கதைகள்.இதன் காலநிலை பாரம்பரியம் அனைத்தையும் செல்ல நாய்க்கு பிஸ்கட் வாங்கும் கடை ஓரங்களில் வைத்தேனும் சொல்லுங்கள்.அழகிய கற்பிதங்களை பெற்றுக்கொள்ளவும் உருகும் பாசங்களில் ஓட்டிக்கொள்ளவுமே வெள்ளை மனங்கள் விரும்பும்.எம் மொழிபெயர்ப்புகள் உம் தேசம் வருவது தாமதமாகும்.அதற்காயேனும் நீங்கள் சொல்லுங்கள். இன்னும் திண்ணை உடைக்காத வீடுகளிலும்,முற்றத்த மர நிழலிலும் பேராண்டிக்காய் பலகாரம் சுடும் அப்பத்தாக்களும் மச்சானின் வருகைக்காய் மருதாணி போட்டுக்கொண்ட முறைப்பெண்களும் மஞ்சள்பூவரசின் மங்கலங்களும் நாடித்துடிப்போடு இங்கே சீவித்துக்கொண்டேயிருக்கின்றன. ப்ரியங்களுடன் அ-தி-ச-யா http://athisaya.blogspot.fr/2014/08/blog-post.html?spref=fb&m=1
 11. வீடுகள் உறங்கிய தெருக்களின் இருக்கைகளில் மீதமாய் இருக்கிறது காதலர்கள் விட்டுச்சென்ற முத்தங்கள் இரவின் இசையை காதலுடன் மீட்டுகின்றன மரங்கள் வானத்தைக் காட்டிலும் பரிசுத்த நிர்வாணமாய் இருக்கிறது இந்த இரவு என் கனவை தொட்டுணரும் பட்டாம் பூச்சியே உன்னைக்கனவுற்றபடி அசையாத இரவின் போதையில் மிதக்கிறேன் உன் கனவுகளின் வண்ணங்களிலும் தோய்ந்துகிடப்பது பாதி ஒளிந்துள்ள நிலவைப்போல பரிதவிப்பது வசந்தமாய்ப் பூப்பது வாழ்வின் கணங்களை ரசிப்பது பின் அதனுள் உருகிக்கிடப்பது காதல் அல்லவா. ஓய்வற்ற வாழ்வென்பது சலிப்புற்று நீண்டுகிடக்கும் நெடு வானம் அதை நீந்திக் கடந்திட ஓடும் ஒற்றை மேகம் நான் வாழ்வை நிறுத்திவைத்து நனைக்கவரும் மழைமேகம் நீ என் பெருமூச்சின் தீப்பிழம்பை கண்ணாடியில் படியும் சுவாசத்தைப்போல நீ மூடி அணைக்கிறாய் என் தூக்கங்களுக்கெல்லாம் உன் பாடலை தலயணையாக்குகிறாய் துயரறியா வீட்டில் பரவும் நேசம் நான் காதல் நிரம்பிய காற்றை தழுவும் ரோஜாச்செடி நீ.. பறவைகளின் குரலிசைப்பொழிவில்தான் உனக்கான என் பாடலும் ஒளிந்திருக்கிறது தேடிக்கண்டடையும் தீராத்தாகத்தோடு நீ வருகிறாய் இறகிலும் இலேசான உன் விழிகளின் வருடலினால் எனை பரசவத்திற்குள் நகர்த்துகிறாய் இனி யுகத்துக்குமாய் நான் தனிமையுறமாட்டேன்.. ஓ..என் தோழியே.. நேசிப்பதென்பதும் நேசிக்கப்படுவதென்பதும் காதல் ததும்பும் ஓர் கவிதையைப்போல எத்துணை இனிமையானது..
 12. கோமா சக்தி - சிறுகதை அடிப்படைத் தர்மங்களில் இருந்து மாறுபட்டவனிடம் நியாயம் கேட்க முடியாது. கிரேக்க பழமொழி இலக்கியப் பத்திரிகையின் அட்டைப் படமாகவே புகைப்படம் போடப்பட்டு கோமா சக்தியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நேர்காணல் ஒன்று வெளி வந்திருப்பதாக திரு.முடுலிங்கவிடம் அவரது வேலைக்காரன் போய்ச் சொல்லிய போது அவர் குரல் வளைத் தாடி மயிரை சேவ் எடுத்துக் கொண்டிருந்தார். நல்ல காலம் முடுலிங்க கோபம் கொள்ளும் ஆள் கிடையாது என்பதால் தனது குரல் வளையை தன்னிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு கண்ணாடியில் தனது முகத்தைக் கழுவினார். முகம் எப்போதும் போல வடிவாயிருந்தது என்றாலும் முகத்தில் எடுபடாமல் தவறவிடப்பட்ட மயிர்கள் அவரெழுதும் சிறுகதைகளைப் போல தீவிரமற்று பயணச் சோம்பலில் கிடந்தது. ரோஸ் நிறத் துவாயால் முகத்தைத் துடைத்தபடி வேலைக்காரனைப் பார்த்து வாங்கி வந்தனியா அந்தப் புத்தகத்தை என்று கேட்டதும் வேலைக்காரன் என்னவோ முடுலிங்கத்திற்கு விருது கொடுப்பவன் போல புத்தகத்தை இரண்டு கைகளும் நிமிர்த்திப் பிடித்து கொடுத்தான். முடுலிங்கத்திற்கே விருதா என்று நீங்கள் கேட்கும் கேள்வி நியாயமானது என்றாலும் வேலைக்காரன் தோட்டத்தில் தானே வேலை செய்கிறான் அவனுக்கும் ஒரு தோட்ட விருதை வழங்கும் உரிமை இருக்குத்தானே. முடுலிங்கவின் முகத் தோற்றம், வயது உயரம் எல்லாம் உங்களுக்கு தேவை இல்லாதது. முடுலிங்கம் சிறுகதை எழுதும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர். நீங்கள் தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்கைக்கு எதிரானவர் என்றாலும் இவரின் கதைகளை படிக்கலாம். அவரின் கதைகளில் சொந்த நாடு பற்றி நாட்டம், ஏக்கம் கூட இருக்காது. அவர் கண்டதையும் வாழ்ந்ததையும் எழுதும் தார்மீக எழுத்து அறம் கொண்டவர். கதைகளுக்காக முடுலிங்கம் யதார்த்தத்தில் சிறு புனைவை கொண்டு வருவாரே தவிர கதைகளையும் சம்பவங்களையும் மாற்றுவது கிடையாது. முடுலிங்கத்திடம் அயோக்கியத்தனம் கிடையாது. மகா பொய் சொல்லி தன்னையொரு இடதுசாரி புரட்சியாளனாகவும் புரட்சியாளர்களின் சிந்தனைகளை அப்படியே பின் பற்றி நடப்பவன் போலவும் கதைக்கத் தெரியாது. தானும் புலிகள் இயக்கத்தில் இருந்தவன் என்றோ அல்லது பிரபாகரனுக்கு ஆலோசாகராக இருந்தனான் என்றோ ஒரு பொய்யை சொல்லிக் கொண்டு அடையாளம் பெறவும் அவருக்கு விருப்புக் கிடையாது. அவருக்கு படிச்சதுக்கு ஏற்ற தொழில் இருக்கிறதால ஒரு பிரச்னையும் இல்லை. அவர் சிரிச்சு முடியத் தான் வேலைக்காரன் தேத்தண்ணியைக் கொடுத்தான், முடுலிங்கம் தேத்தண்ணியை வாங்கிக் குடிச்சுக் கொண்டு வேலைக்காரனுக்கு இரண்டு அப்பிள்களை துண்டு துண்டாய் வெட்டிக் கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டதோடு பக்கம் 30ல் தொடங்கும் கோமா சக்தியின் நேர்காணலை வேலைக்காரனுக்கு வாசிச்சுக் காட்டுவதாகவும் வேகமாய் வந்து கதிரையில் இருக்கும் படியும் முடுலிங்கம் சொன்னது தான் தாமதம் வேலைக்காரனுக்கு குண்டியில அடிச்ச புளுகம். இரண்டு அப்பிளையும் தோல் சீவி துண்டு துண்டாய் வெட்டிக் கொண்டு வந்து மேசையில் வைத்து விட்டு கதிரையில் இருந்து விட்டான். முடுலிங்கம் வீபூதியை பூச மறந்து இருக்கிறார் எண்டதையே வேலைக்காரன் சொல்லவே இல்லை. அவன் கள்ள மவுனத்தை பூசாத வீபூதியில் பழகிக்கொண்டான். சுங்கப்பனை விருது புலிகள் இல்லாமல் போனதினாலேயே சாத்தியமாகியது, முடுலிங்கம் வாசிக்கத் தொடங்கும் நேர்காணலின் தலைப்பு இப்படி இருந்தது. நேர்காணலை முடுலிங்கம் வாசிக்கும் தொனியை என்னால் உங்களுக்கு உணர்த்தமுடியாது. அவர் ஒரு அதியுச்ச கோபத்தோடு ஒருவனை தூசணத்தால் ஏசுவதைப் போன்று வாசித்தார். அந்த நேர்காணலே உங்களுக்காக. கே – ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக உலக அரங்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தமிழர்க்கு சாதகமானதாக அமையும் தருணங்களில் கீபன் படத்தையும் எடுத்துக்கொள்ளலாமா? கோ – புலிகள் இல்லாமல் போனதே ஈழத் தமிழர்களுக்கு சாதகமானது தானே. பாசிசத்தையும் அராஜகத்தையும் மக்கள் மீது நடாத்திக் கொண்டிருந்த புலிப் பாசிஸ்டுகள் மக்களுக்கு எதையும் செய்யமாட்டார்கள் என்பதை எமது தோழர்கள் கடந்த காலங்களில் சொன்னதை நான் நினைவு கூற வேண்டும். இன்றைக்கு உலகளவில் ஈழம் வல்லரசுகளின் பசியைப் போக்கவல்ல இரையாக மாறியிருக்கிறது. என்றாலும் பிரான்ஸ் மக்களிடம் ஈழத் தமிழர்கள் தொடர்பாக ஒரு இரக்கம் இருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் கீபன் திரைப்படம். அதற்கு உலகளவில் உயரிய விருதான கோண் விருது வழங்கப்பட்டிருப்பது சாதகமான சூழலைத் தான் காட்டுகிறது. சுங்கப்பனை விருது புலிகள் இல்லாமல் போனதினாலேயே சாத்தியமாகியது. கே – உண்மை தான், நீங்கள் ஒரு எழுத்தாளாராக உலகப் பெயர் பெற்றவர், புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி குறித்த இயக்கம் மீதே பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தவர். இப்பொழுது உலகப் புகழ் பெற்ற நடிகர், எதுவாக இருப்பது சுலபம்? கோ – எல்லாவற்றுக்கு தேவை இருப்பதாகவே நான் உணர்கிறேன். புலிகளை விமர்சனம் செய்வதின் ஊடாக நான் சத்தியத்தின் பக்கம் நிற்க ஆசைப்படுகிறேன், சாதியை ஒழிக்க அரும்பாடு படுகிறேன். எழுதுவதன் ஊடாயும் இதனையே நடிப்பதின் ஊடாகவும் இதனையே செய்ய விரும்புகிறேன். நடிப்பு என்பது இங்கு கமல்ஹாசன் செய்வதோ எம்.ஜி.ஆர் செய்ததோ அல்ல, பிரான்சின் புகழ் பூத்த பெரிய நடிகரான சூர்ஜ் எனக்கு சொல்லிக் கொடுத்தது தான் நடிப்பு. கே – நீங்கள் கீபன் திரைப்படத்துக்கான கோண் விருதைப் பெற்ற அந்தத் தருணம் குறித்து சொல்ல முடியுமா? கோ - ஒரு கதாசிரியராக எனக்கு கோண் விருது முக்கியமானது. மாபெரும் மேடையில் கீபன் திரைப்படத்துக்கு தான் பத்து நிமிடங்களுக்கு மேலே கை தட்டினார்கள், இதைவிட என்ன வேண்டும் அந்தத் தருணத்துக்கு. கே – இந்தத் திரைப்படத்தில் நீங்கள் பல்வேறு ரீதியாக பங்களிப்பு செய்திருக்கிறீர்கள், உங்கள் இயக்குநர் ஜோக் போடியார் குறித்து சொல்லுங்களேன்? கோ - அவர்கள் பிரான்சின் பரம்பரை சினிமாக்காரர்கள் அவரது அம்மாவும் அப்பாவும் கூட இயக்குனர்கள் தான். படப்பிடிப்பில் ஒரு கோணத்தில் சரியான ஷாட்ஸ்களை ஓகே என்றாலும் அதே ஷாட்ஸ்சை பல தடவை வேற மாதிரி எடுப்பார். கே – எந்த மாதிரியான பாத்திரம் ஏற்று இந்த படத்தில் நடித்திருக்கிறீர்கள்? கோ - நான் கடல் வழியாக தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு புலிப் பாசிஸ்டாகவே நடித்திருக்கிறேன், அந்த இயக்கத்தில் நான் இருந்ததினால் எனக்கு அதனை நடிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஒரு புலிகள் இயக்கத்தவன் எப்படியான உடல் மொழிகளை கொண்டிருப்பான் என்றெல்லாம் எனக்குத் தெரியுமென்பதால பிரச்னை கிடையாது. முப்பதாவது பக்கத்தின் முடிவில் இந்தக் கேள்வி தான் இருந்தது. முடுலிங்கத்திற்கு நீண்ட நாட்களின் பின் தூசணத்தால் பேசவேண்டும் என்று தோன்றியதும் மனிசன் பிரஞ்சு தூசணம் ஒண்டை பேசினார். கோமா சக்தி ஆங்கில படமொன்றில் நடித்திருந்தால் Fuck என்று எல்லோருக்கும் தெரிந்த ஒரு தூசணத்தை தான் முடுலிங்கம் பேசியிருப்பார். நல்ல காலம் அது தமிழ்ப் படமாய் இருக்கவில்லை. பத்திரிக்கையை ஸ்டூலில் வைத்துவிட்டு தட்டில் இருந்த அப்பிள் துண்டொன்றை கடித்துக் கொண்டே வேலைக்காரனையும் சாப்பிடும் படி கையால் காட்டினார். அப்பிள் துண்டை கையில் எடுத்த வேலைக்காரனுக்கு முகப்பு அட்டையை மீண்டும் ஒரு தடவை பார்த்து விடவேண்டும் போல தோன்றியது. புத்தகம் வாசிக்கப்படவிருக்கும் 31வது பக்கத்தை மடித்து குப்புற வைக்கப்பட்டிருந்தது. தட்டில் அப்பிள்கள் முடிந்து போய்விட்டதையடுத்து போத்தலில் இருந்த தண்ணியை அட்டனக்கால் போட்ட படி குடித்த முடுலிங்கம் மீண்டும் ஒரு தடவை தூசணம் ஒன்றை பேசினார். அது எந்த மொழியிலானது என்று தெரியாவிட்டாலும் அது தூசணம் தான் என்பதை வேலைக்காரன் விளங்கிக் கொண்டான். உள்ளி கண்ட இடத்தில பிள்ளைப் பெறும் பழக்கத்தை உலகத்துக்கு சொல்லிக் கொடுக்க இவனை விட ஆள் இல்லையெண்டு முடுலிங்கம் சொன்னதை கையில் கிடந்த கடைசி அப்பிளைக் கடிச்சுக் கொண்டே வேலைக்காரன் கேட்டுக் கொண்டேயிருந்தான். உலக வல்லாதிக்கத்தையும் காலனி ஆதிக்கத்தையும் மார்க்ஸ்சுக்கு பிறகு தான் தான் எதிர்க்கிறவன் போல கதைச்சு எழுதின நடிப்பை விட இவன் இதில நடிக்க வாய்ப்பில்லை. மார்க்ஸ் என்றால் கா.மார்க்ஸ் என்று மீண்டும் முடுலிங்கம் அழுத்திச் சொன்னார். இரண்டு நாள் இயக்கப் பொடியளோட பேசிகுள்ள போய்ட்டு வந்திட்டு நானும் புலிகள் இயக்கத்தில இருந்தவன் எண்டு சொன்னால் நம்புறதுக்கு எல்லாரையும் என்ன குறுப்பு பரிதி ரசிகர்கள் என்று நினைச்சிட்டார் போல, வெளியில் அவ்வளவு கொடும்பனி பெய்து கொண்டிருந்தாலும் முடுலிங்கத்தின் முகத்தில் தீக்குழம்பு பெருகுவதை பார்த்து குட்டி ஆடு விறைத்திருப்பதைப் போல வேலைக்காரன் இருந்ததையும் அவர் பொருட்படுத்தவில்லை. குப்புற மடித்துக் கிடந்த முப்பத்தோராவது பக்கத்தை எடுத்து மீண்டும் வாசிக்கத் தொடங்கினார். கே – ஒரு நடிகராக ஆகிவிட்டீர்கள்? ஈழப் பிரச்னை குறித்த தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க கேட்டால் ஒப்புக்கொள்வீர்களா? கோ – தமிழ் நாட்டு சினிமாக்காரர்களுக்கு ஈழப் பிரச்னை குறித்து ஒரு மொட்டையான கருத்துத் தான் இருக்கிறது. அவர்கள் சீமான் மேடைகளில் பேசுவதையே குறிப்பாக எடுத்து ஈழத் திரைக்கதையை வடிவமைக்கிறார்கள். மாபெரும் பாசிச அமைப்பான புலிகள் அமைப்பை அவர்கள் கொண்டாடத் துடிக்கிறார்கள். என்னால் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க முடியுமெனில் அது குழந்தைப் போராளிகளை பாலத்காரமாக சேர்த்தது குறித்தோ புலிகள் வழங்கிய மரணதண்டனைகள் குறித்தோ எடுக்கப்படவேண்டும். கே - கீபன் திரைப்படத்தில் உங்கள் படைப்புகளில் வந்த பாத்திரங்கள் ஏதேனும் வந்திருக்கிறதா? கோ - நான் எனது படைப்புகளில் வந்தவன் தானே. அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு திரைக்கதையில் மாற்றங்களை செய்யும் அதிகாரம் எனக்கு வழங்கப் பட்டிருந்தது. கடைசிச் சண்டையின் போது என்னோட மட்டக்களப்பு கடைக்கு மேல ஷெல் விழுந்தது என்று ஒருவர் சொல்வதாக அந்த வசனம் இருக்கும். ஆனால் இறுதிச் சண்டை மட்டக்களப்பில் நடக்கவில்லை என்று நான் இயக்குனரிடம் சொன்னதன் பின்னர் அந்த வசனம் மாற்றப்பட்டது. அது போல யாழ்ப்பாணச் சண்டையில 2006ம் ஆண்டு காயப்பட்டனான் எண்டு ஒரு வசனம் இருக்கும் அதையும் மாத்தினான்.1996க்கு பிறகு யாழ்ப்பாணத்தில் யுத்தமே நடக்கவில்லை. இதைப் போல என்னால் இயன்றவற்றை செய்தேன். கே – அடுத்து உங்களின் படைப்புத் திட்டம் என்ன நீங்கள் ஏன் ஒரு திரைப்படத்தை இயக்கக் கூடாது ? கோ –. படைப்பு என்றால் அடுத்து என் நாவல் ஒன்று வெளிவரவிருக்கிறது. அதன் பெயர் Fox குதைப் புத்தகம். மிக விரைவில் நீங்கள் கேட்பது சாத்தியமாகலாம். அப்படி இயக்கும் பட்சத்தில் ஈழத்தில் 37 முட்டாள் இயக்கங்களும் செய்த மனிதப் படுகொலைகள் குறித்தும் இஸ்லாமியர்களை புலிகள் வெளியேற்றியமை குறித்தும் ஒரு நல்ல திரைக்கதையை படமாக்குவேன். முடுலிங்கம் புத்தகத்தை மூடி ஸ்டூலில் வைத்தார். வேலைக்காரன் முகப்பு அட்டைப் படத்தை இன்னொரு தடவை பார்க்கிறான். அந்தப் புகைப்படத்தில் உள்ள எழுத்தாளனின் ஜெல் பூசப்பட்டு மேவி இழுக்கப்பட்ட ஒவ்வொரு தலைமயிரிலும் பேன்களைப் போல பொய் ஓடிக்கொண்டேயிருந்தது. அது ஈர்களைப் போல குஞ்சுகளைப் பொரிக்காமல் கிபிர் குண்டுகளைப் போல பொய்களைப் வெடித்துக் கொண்டேயிருந்தது. பொய்கள் அவ்வளவு பெருத்துப் போய் தலையெங்கும் ஊர்ந்து கொண்டேயிருந்தது. இது வேலைக்காரனின் கண்கள் தான். இந்த மயிர்,பொய் எல்லாமே அவன் சொன்ன வார்த்தைகள் தான். அவன் ஒரு அல்ஜீரியன் என்றாலும் அவனுக்கு தமிழ் அத்துப்படி.முடுலிங்கத்தோடு பதினஞ்சு வருஷம் இருந்து அவன் ஆங்கிலத்தையும் தமிழையும் கரைச்சுக் குடிச்சிட்டான். ஈழப் பிரச்சனையில இருந்து பாலஸ்தீன பிரச்னை வரைக்கும் அரசியலில மிகத் தெளிவு. பிரபாகரன் குறித்து தமிழ்நாட்டில் எழுதப்படும் புத்தகங்களில இருக்கிற சம்பவ பிழைகளையே சொல்லிக் கவலைப்படுகிற ஆள் எண்டால் பாருங்கோ. தானொரு இஸ்லாமியன் என்பதில் அவன் பெருமைப்பட்டுக்கொள்கிறவன். மேற்குலக பார்வையில இஸ்லாமியர்கள் எவ்வாறு பார்க்கப்படுகின்றனர் என்பது குறித்த கவலையையும் கோபத்தையும் முடுலிங்கவோடு பகிர்ந்திருக்கிறான். அவனின் பெயரை வேண்டுமென்றால் உங்களுக்கு சொல்லலாம் முகமத் நூர். ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் மனிதப் படுகொலைகளை செய்து இன்றைக்கு வரைக்கும் மன்னிப்புக் கேட்காத பிரான்ஸின் செங்கம்பள விரிப்பில நிண்டு கொண்டு சனநாயகம் பற்றி கதைக்கிற இவன் எல்லாம் மனிசனே கிடையாது என்று முடுலிங்கம் காலை ஸ்டூலில் தூக்கி வைத்துக் கொண்டே சொன்னார். பாலஸ்தீனத்தில் இண்டைக்கும் மக்களை குண்டு போட்டுக் கொல்கிற யூதர்களின் தேர்வில விருது வாங்கிக் கொண்டு என்னெவெல்லாம் கதைக்கிறார் எண்டு பார்த்தீரே. உலகச் சந்தைகளுக்கு படம் பண்ணிக்கொண்டு உலகமயமாதல் பற்றிக் கதைக்கிறதெல்லாம் எவ்வளவு பெரிய அவமானம். முகமத் நூர் எதுவும் சொல்லவில்லை, அவன் முடுலிங்க பேசுவதை கைகளை கட்டிக் கொண்டு கேட்டபடியே இருக்கிறான். விடுதலையும் புரட்சியையும் உலகுக்கு சொல்லிக் கொடுத்த பிரான்ஸ் ஆசியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் விடுதலையை கொடுத்ததே கிடையாது நூர். எங்களுக்கு நடந்த இன ஒடுக்குமுறை குறித்து பிரான்ஸ் வாயே திறக்கவே இல்லை.இண்டைக்கு மைத்திரியை ஆதரிக்குது. மைத்திரி கீபன் விருது வாங்கியமைக்கு வாழ்த்து தெரிவிச்சு அறிக்கை விடுகிறான். அந்தப் படம் ஒரு குப்பை. மேற்குலகத்தின் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு தாளம் போடுது. அதில நடிச்சுப் போட்டு இஸ்லாமிய வெளியேற்றம் குறித்து படம் பண்ணப் போறேன் எண்டு சொலுறது தான் சிரிப்பாய்க் கிடக்கு. பிரான்ஸ்ஸில் வாழும் எல்லாம் இஸ்லாமியர்களையும் வேற்றின மக்களையும் மாபியாக்கள் எண்டு சொல்லும் படத்தில நடிச்சுப் போட்டு நாளைக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் மாவோ அம்பேத்கர் பெரியார் என்று எல்லா புரட்சியாளர்களையும் புகழ்ந்து ஒரு கட்டுரை எழுதக் கூடும். 37 ஈழ இயக்கங்கள் முட்டாள் தனமாய் இருந்தது என்றும் பிரபாகரன் பாசிஸ்ட் என்றும் கதை எழுதிக் குவிக்க இனி பிரபாகரனும் இல்லை புலியும் இல்லை. உண்மையா கொழும்பு ஆட்சியாளர்களுக்கு புலிகள் இல்லாதது அவங்கட அரசியலுக்கு எப்படி பின் அடைவா இருக்கோ அப்படி கோமா சக்திக்கும் பின் அடைவு தான். தமிழ்நாட்டில இவர் சொல்லுறது தான் சத்தியத்தின் தேவ வாக்காய் நம்புகிறதுக்கு இன்னும் ஆக்கள் இருக்கிறது தான் கவலையாய் இருக்கு என்று சொல்லி முடித்த முடுலிங்கவிடம் நூர் இப்படிச் சொல்லத் தொடங்கினான். 31வது பக்கத்தில வாற கேள்வியொன்றில கடைசிச் சண்டை மட்டக்களப்பில நடக்கவில்லை எண்டு சொல்லிச் சொல்லுவதும், யாழ்ப்பாணத்தில 96க்கு பிறகு சண்டை நடக்கவில்லை எண்டு சொல்லுவதும் சரியான பிழை. கடைசிச் சண்டை என்று இவர் நினைக்கிறது மே -18ம் திகதியைப் போலத் தான் கிடக்கு. கிழக்கு மாகாணத்தில இருந்து தானே கடைசிச் சண்டையை மகிந்த தொடங்கினவன். 96க்கு பிறகு யாழ்ப்பாணத்தில சண்டை நடக்கவில்லை எண்டு சொல்லுறார். உண்மையா இவர் சிறிலங்காவின் மூன்று மூன்று சனாதிபதிகளுக்கு ஒழுங்கே சந்திரிக்கா ,மகிந்த ,மைத்திரி என்று உலகளவில் சனநாயக சாயம் பூசுறார். அவருக்கு விருது வாங்கவேணுமெண்டு ஆசை உங்களுக்கு விருது குடுக்க வேணுமெண்டு ஆசை. நீங்கள் இந்த சம்பவத்தை வைச்சு ஒரு கதை எழுதுங்கோவன் என்றான் நூர். நூரின் வேண்டுகோளின் படி முடுலிங்கம் எழுதிய கதை இந்தக் கதை தான், ஆனால் தலைப்பு மட்டும் நான் வைத்துக் கொண்டது. அகரமுதல்வன் http://akaramuthalvan.blogspot.in/2015/07/blog-post_12.html
 13. அலட்டல் கேசொன்டு.. திரும்ப வராமல் இருக்கிறது விஜய் ரீவிக்கு நல்லது..
 14. இந்த மனுசன் ரசிகனைய்யா என்னயமாதிரியே சிலதுகளில, அப்பப்ப வந்தெழுதினாலும் மனசுக்குள்ள ஒட்டிவிடுகுது உங்களோட எழுத்துக்கள் றகு அண்ணா ரசனைகள் நிறைய இடங்களில் ஒத்தே இருப்பதால்..